Tuesday, June 02, 2009

வாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்

மசாலாத் திரைப்படங்கள், கில்மா திரைப்படங்கள் என்று அடிக்கடி பலர் ரகசியமாக உரையாடுகிறார்களே.. அதென்ன மசாலாத் திரைப்படம்? அதில் அப்படியென்ன கிளுகிளுப்பு இருக்கிறது? அதை ஏன் நாம் பார்க்கக்கூடாது? அதில் அப்படியென்ன 'மேட்டர் இருக்கிறது' சரி பார்க்கும் ஆவல் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் எங்கு சென்று பார்ப்பது? அந்தப் பிட்டுகளின் டிவிடி எங்கு கிடைக்கும்?

இப்படியான பல கேள்விகள் கசக்கிப் போட்ட காண்டத்தைப் போல பதிவர்களாகிய நம் மனதில் முடங்கிக் கிடக்கிறது அல்லவா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சிதான் 'எதிர்உரையாடல் கலை இலக்கிய அமைப்பின் சார்பாக நமக்கு நாமே ஆரம்பித்துள்ள 'கில்மா குறும்பட இயக்கம்'.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று ஒரு குறும்படம் 'முக்கியமான காட்சிகளுடன்' திரையிடப்படும். படம் முடிந்ததும் அதில் 'தெரிந்த' நுணுக்கமான விஷயங்களைப் பற்றி சுவாரசியமாக பதிவர்கள் உரையாடலாம்.

பதிவர்கள் குடும்பத்திற்குத் தெரியாமல் கலந்து கொள்ளலாம். ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.

இது முற்றிலும் பதிவர்களாகிய நம் சுய இன்பத்திற்காக... மன்னிக்கவும் சுய மகிழ்ச்சிக்காக நாம் ரசிப்பதற்காக 'கில்மா அறிவு' குறித்த நமது போதாமையை களைவதற்காக நமக்கு நாமே எடுக்கும் சிறு முயற்சி.

புரொக்ஜக்ஷன் மற்றும் திரையரங்க ஹாலுக்கான கட்டணத்தை 'அமீரகச் சிங்கம்' பிரபல பதிவர் ஆசிப் மீரான் ஏற்கிறார். பார்வையாளர்களுக்கு இடைவேளையில் மசாலா பாப்கார்னும் முட்டை பஜ்ஜியும் வாங்கித் தருவதற்கும் அவர் பெருமனதுடன் இசைந்திருக்கிறார். திரையிடல் முடிந்ததும் ஆசிப் மீரான் எழுதிய 'சாத்தான்குளம்' பஞ்சாயத்து விருது பெற்ற 'எங்கேயும் ஒரு மங்கை' (படங்களுடன் மற்றும் ஸ்டேப்ளர் பின் அடிக்கப்பட்டது) என்கிற புதினம் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவசமாக தரப்படும்.

ஆசிப் கவிதைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மாத்திரமே அனுமதி. ஆர்வமிருந்தால் ஆசிப்பிடமிருந்து விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து உறுப்பினராக பிறகுதான் அனுமதியளிக்கப்படும்.

முதல்படியாக ஜூன் 6ந்தேதி அன்று ஒரு மலையாள க்ளாசிக் திரைப்படம் திரையிடப்படயிருக்கிறது.

படத்தின் பெயர்: 'அஞ்சரைக்குள்ள வண்டி'
நாடு: கேரளம் மற்றும் தமிழ்நாடு
இயக்குநர்: யாரோ
நாள்: ஜூன் 6ந்தேதி சனிக்கிழமை
நேரம்: சரியாக மாலை அஞ்சரை மணி
இடம்: பரங்கிமலை 'ஒளி' ஹால். ஜி.எஸ்.டி.ரோடு, சென்னை
(நமீதா ஒயின்ஸ் எதிரே)

இந்த 'க்ளாசிக்கை' ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசித்த சகபதிவர் 'பீர்பார்வை', இந்தப் படத்தை பற்றின முறையான அறிமுகத்தை தமது பதிவில் எழுதுவார். அதே போல் பதிவர்கள் அனைவரும் படத்தைப் பார்த்தபின் தங்களின் கருத்துக்களை பதிவாக வெளிப்படையாக எழுதினால் 'தமிழ்மணம்' போன்ற திரட்டிகள் உங்களை வெளியேற்ற ஏதுவாக இருக்கும்.

இந்த திரையிடல் இன்னும் சிறப்பாக அமைய, உங்களின் 'கீழான' ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இது 'நமக்கு நாமே' திட்டம். வாருங்கள்! கொண்டாடி மகிழ்வோம்.

தோழமையுடன்
காரியக்காரன்.

(இது முற்றிலும் நகைச்சுவை நோக்கத்திற்காக மாத்திரமே எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தும், அவமதிக்கும், விமர்சிக்கும் நோக்கமல்ல. ஆசிப்மீரானின் பெயர் அவரின் அனுமதியில்லாமலேயே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு மொக்கை பதிவு என்பதை தனியே குறிப்பிட்டுச் சொல்ல அவசியமில்லை).

suresh kannan

19 comments:

சரவணகுமரன் said...

என்னய்யா? இப்படி ஆயிட்டீங்க?

பரிசல்காரன் said...

இனி யாராவது என்னைப் பார்த்து மொக்கையா ஏண்டா எழுதறன்னு கேட்கட்டும்.. அப்ப வெச்சுக்கறேன்!

கே.என்.சிவராமன் said...

நல்லா வாறியிருக்கீங்க சுரேஷ் :-)

சரியா அஞ்சரை மணிக்கு 'அஞ்சரைக்குள்ள வண்டி'ல சந்திப்போம்.

தோழமையுடன்
6ம் தேதி 18 வயது பூர்த்தியாகப்போகும்
பைத்தியக்காரன்

பிச்சைப்பாத்திரம் said...

சரவணகுமரன்,பரிசல்: சும்மா விளையாட்டுக்கு. கொஞ்ச நாளைக்குத்தான். பின்ன திருந்திடுவேன். :-)

சிவராமன்: நீங்க ஸ்போர்டிவ்வா எடுத்துப்பீங்கன்னு நிச்சயமா தெரியும். ஆனா இது துளிக்கூட உங்களை காயப்படுத்தக்கூடாதுன்றதுதான் என் கவலை.

கே.என்.சிவராமன் said...

//இது துளிக்கூட உங்களை காயப்படுத்தக்கூடாதுன்றதுதான் என் கவலை.//

என்ன இது சிறுபிள்ளத்தனமா இருக்கு... ரிலாக்ஸ் சுரேஷ்... 'அஞ்சரைல' சந்திப்போம்.

அப்புறம், ஆசிப் புதினம் 500 காப்பி வேண்டும், இலவசமாக பதிவர்களுக்கு அனுப்ப :-)

வாழவந்தான் said...

//
'எதிர்உரையாடல் கலை இலக்கிய அமைப்பின் சார்பாக நமக்கு நாமே ஆரம்பித்துள்ள 'கில்மா குறும்பட இயக்கம்'
//
அடுத்து பிட்டு கதைகளுக்கான போட்டியா?

எதாவது செய்வினை/செயப்பாட்டுவினைனு 'நக்கு நாமே' திட்டத்துல வெச்சுகிட்டீங்களா? வெறித்தனமான மொக்கை ஏனோ?

SIT PLACEMENT CELL said...

Anjaraikulla vandi director sankaran nair

சென்ஷி said...

//இது ஒரு மொக்கை பதிவு என்பதை தனியே குறிப்பிட்டுச் சொல்ல அவசியமில்லை//

ஆமாம். இப்ப புடுங்கிட்டு இருக்குறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான் :-))

வினோத்குமார் said...

இப்படி ஆசை காட்டி கடைசில மோசம் பண்ணிட்டிங்களே அண்ணே!

Athisha said...

அண்ணே மன்னிக்கவும் அஞ்சரைக்குள்ள வண்டி திரைப்படத்தில் சொல்லிக்கொள்ளும் படி பிட்டுகள் கிடையாது. மொத்தமாய் இரண்டே இரண்டு அதிலும் ஒன்றை காக்கா தூக்கிட்டு போய்விட்டதாக சென்சார் அறிக்கை.

அதனால் நவகன்னிகள் என்கிற மற்றொரு படத்தை இங்கே பரிந்துரைக்கிறேன்.

பேருக்கேற்றாற்போல படத்தில் ஒன்பது பிட்டுகள் அனைத்தும் லட்டுகள். ஷகிலாவின் பிட்டு ஒன்றும் இலவசமாய் வருகிறது. ஒன்பது பிட்டுகள் பார்த்தால் ஒன்று இலவசம்.

மற்றபடி உங்கள் சமீபத்திய பதிவுகள் ஏன் இப்படி ஆகிவிட்டது. நீங்க நீங்களாக இருக்கறதுதான் அழகா இருக்கு..

பினாத்தல் சுரேஷ் said...

//ஆசிப்மீரானின் பெயர் அவரின் அனுமதியில்லாமலேயே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது //

இந்தப்பெயரை அனுமதியில்லாமல் உபயோகப்படுத்திய மாபெரும் குற்றம், அன்னாரின் வாழ்நாள் லட்சியமான மொக்கைப்பதிவுக்காக உதவியதால் மன்னிக்கப்படுகிறது.

ஹரன்பிரசன்னா said...

ஆசிஃப்மீரானுடன் நீங்கள் கைக்கோர்த்திருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மொக்கை என்றாலே ஆசிஃப்தான் என்று நீங்களும் அவருடன் சேருவதைத் தவிர்க்கவேண்டும். சிறுகதைக்கான நடுவரா, ஆசிஃப்தான். மொக்கைப் படமா ஆசிஃப்தான். இப்படி எல்லாவற்றிலும் தன் பாசிசக் கையை ஆசிஃப்மீரான் செலுத்திவருவதை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகிறேன். எவ்வளவு செலவாகிறது - படத்துக்குமட்டும் - என்பதை எல்லாரும் பகிர்ந்துகொண்டு, ஆசிஃப்மீரானின் பிடியிலிருந்து விலக யோசிக்கவேண்டுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

ஹரன் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். மொக்கை ஆசிப்புடன் கூட்டு சேர்வதால் நம் மொக்கை மழுங்கிவிடும் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஷகீலா படம் பார்ப்பதால் நமீதாவை மறந்துவிடுவோம் என்பதுபோன்ற ஒரு பரப்புரை உங்களுடையது.

ILA (a) இளா said...

nallaathaane iruntheenga?

கோபிநாத் said...

அய்யா எங்க அண்ணாச்சியை எங்களுக்கு திருப்பி அனுப்பிடுவிங்களா! ;)))

இப்படிக்கு
துபாய் கில்மா குறும்பட இயக்கம்

சென்ஷி said...

ஆனாலும் அண்ணாச்சியின் பெயரை இங்கு இழுத்திருப்பது தனி மனிதக்கீறல் வகை தாண்டி மொக்கை பிறாண்டலாக படுகிறது.

அண்ணாச்சி துபாய் திரும்பியதும் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டியிருக்கும் என்று கவிமடத்தின் சார்பாய் எச்சரிக்கை விடுத்துக்கொள்கின்றேன் :)

லக்கிலுக் said...

நீங்கள் சும்மானாக்காச்சும் சொன்னாலும் கூட ‘புதினம்’ எழுதக்கூடிய தெறமை ஆசிப் அண்ணாச்சிக்கு உண்டு :-)

இதுபோன்ற பதிவுகளையும் அதிகமாக எழுதவும். அசத்தல் சகா :-)))))

லக்கிலுக் said...

//அதனால் நவகன்னிகள் என்கிற மற்றொரு படத்தை இங்கே பரிந்துரைக்கிறேன்.
//

மது மங்கை மயக்கம் படத்தில் நவகன்னிகளை விட மேட்டர் தூக்கலாக இருக்கும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தயவுசெய்து மதன மர்ம மாளிகை மட்டும் யாரும் பார்த்துவிட வேண்டாம். அதற்குப் பதிலாக இதயக்கனியையே நாலுவாட்டி பார்க்கலாம்!

Anonymous said...

என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களேம்மா?