Friday, November 21, 2008

முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்

ஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்றும் என்ன செய்தும் தம்மை ஒரு முற்போக்குவாதி என்று யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்களே என்றும் கவலைப்படுகிறீர்களா?

கவலையை விடுங்கள். மனச்சாட்சியையும், சூடு சொரணைகளையும் சற்று ஒத்தி வைத்து விட்டு உங்களை முற்போக்குச் சாயத்தில் முக்கியெடுத்த செவ்வாய் கிரகவாசியான பிரகஸ்பதி போன்றதொரு வடிவில் கட்டமைத்துக் கொண்டு அதன் மூலம் இணையப்பரப்பில் பரவலான கவனத்தைப் பெற கீழ்கண்ட வழிகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.

(1)

முதலில் உங்கள் வலைப்பூவின் பெயரே கலகத்தன்மையுடன் இருத்தல் அடிப்படையானது. பூங்குருவி, தென்றல் காற்று என்றெல்லாம் அழகியல் உணர்ச்சியுடன் பெயர் வைத்திருந்தால் உங்களை ஏதோ வாரமலரின் பின்பக்கத்தில் கவிதை எழுதுகிற தயிர்வடை ஆசாமி என்று புறக்கணித்து விடுவார்கள். இந்த வலைப்பூவின் தலைப்பையே உதாரணத்திற்கு பாருங்கள். பிச்சைப்பாத்திரத்தில் என்ன இருக்கும்? மனிதர்கள் தங்களின் ஜாதிய கற்பிதங்களை கழற்றி வைத்து விட்டு கூடும் ஒரே இடமான பாலியல் தொழிலாளியின் யோனி மாதிரியானது அது. ஜாதிமதமில்லாத ஜீவத்துளிகள் நிறைந்திருப்பது போல பிச்சைப் பாத்திரத்திலும் எல்லோர் வீட்டு மிச்ச, சொச்ச உணவு அடங்கியிருக்கும். அந்த மாதிரியான ஒரு கலேஜியான பிரதேசத்தை குறியீடாகக் கொண்ட வார்த்தையை உங்கள் வலைப்பூவின் பெயர் எதிரொலிக்க வேண்டும். ஆனால் வாசகர்களின் கவனத்தைக் கவர இந்த மிதவாதம் கூட உதவாது. இன்னும் கூட காத்திரமாக கூடவே சற்று இலக்கியச் சாயலுடன் இருப்பது உத்தமம். 'விந்துத்துளியின் பிரபஞ்ச வெளி' என்பது போலவோ 'பெருங்கதையாடலில் விரியுமென் யோனி' என்பது போலவோ அமைந்திருத்தல் நன்று. 'தீப்பொறி ஆறுமுகம்" "வெற்றிகொண்டான்" போன்ற திராவிடப் பேச்சாளர்களின் காத்திரமான உரையாடல்களை தொடர்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது இதற்கு உதவக்கூடும். சிற்றிதழ் வட்டாரத்தில் கலகவாதிகளாக அறியப்படுகிறவர்கள் தலைமையேற்கும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் அதற்கு ஒப்பானது.

(2)

பதிவு ஆரம்பித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது முற்போக்காளர்களுக்குள் நிலவும் பல முகாம்களில் ஏதாவது ஒரு முகாமிற்கு அடைக்கலம் தேடிச் செல்வது. வணிக இதழ்கள் முதற்கொண்டு சிற்றிதழ்கள் வரை இந்த முகாம்களின் எண்ணிக்கை அதிகம். ஏதாவதொரு முகாமோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் காத்திரமாக செயல்படுவது என்பது பெண்கள் நடிக்காத சீரியல் வெற்றி பெறுவது போல சாத்தியமேயில்லாத ஒரு காரியம். முற்போக்கு எழுத்தாளர்களை எப்படி அடையாளம் கொள்வது என்று குழப்பமா? எந்த பதிவிலாவது ஙோத்தா... லவ்டேகோபால்... என்ற வார்த்தைகள் தென்பட்டால் அவரை தயக்கமின்றி உடனே முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஏதாவது ஒரு முகாமை தேர்வு செய்தவுடன் அந்த முகாமில் இருப்பவர்களின் பதிவிற்குச் சென்று 'சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' என்றோ ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்' என்றோ ஆவேசமான வசவு வார்த்தைகளுடன் இணைத்து பின்னூட்டமிட்டு பதிவெழுதுவர்களையே அசத்தி அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இம்மாதிரியான செயல்களின் மூலம் அவர்களும் உங்களின் பதிவிற்கு வந்து அதே மாதிரியான மொழியில் பின்னூட்டமிட்டு உங்களின் புகழைப் பரப்ப வலிகோலுவார்கள். பிற்காலத்தில் அவர்கள் உங்களை அவர்களின் வாரிசாக அறிவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பின்நவீனத்தின் கோமணத்தையே அவிழ்த்து ஆராய்வதாக சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள், பழமைவாதிகள் தங்கள் சமூகத்தை தொடர்ச்சியாக கட்டமைக்க ஏற்படுத்திய வாரிசு முறையை மாத்திரம் ஏன் பின்பற்றுகிறார்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.


(3)

உங்கள் பதிவின் உள்ளடக்கம் என்பது எப்போதும் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகள் பொதுப்புத்தி கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு பொதுப்புத்தி (common sense) என்பதே இருக்கக்கூடாது. புரிகிறாற் போலவும் நேர்க்கோட்டிலமைந்த வாக்கியங்களாகவும் எழுதினால் உங்களுக்கு முற்போக்கு எழுத்தாளராக இருக்க அடிப்படைத்தகுதி கூட இல்லையென்று பொருள். ஓசியில் கிடைக்கிறதே என்று பத்து கட்டிங்கை தொடர்ச்சியாக அடித்து விட்டு டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனின் உளறலோடு ஒத்திசைவான ஒரு தாளகதியான மொழியில் எழுதத் தெரிந்திருத்தல் நன்று. புரியும்படி சொன்னால் அல்லது புரியாதபடி சொன்னால் உங்கள் ஆழ்மனதின் ஒப்பனை செய்யப்படாத எண்ணங்களை இலக்கிய மொழியின் சாயலோடு வடிவமைத்து கலக வார்த்தைகளில் பதிவு செய்வதே முற்போக்கு எழுத்தின் பாலபாடம். தமிழில் இருக்கும் அத்தனை வசவு வார்த்தைகளையும் பதிவின் இடையில் உபயோகிப்பது மிக முக்கியம். வாசிக்கிறவர்கள் யாரும் முகஞ்சுளிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்குள் ஒருவேளை எழலாம். இப்படியான வசவு வார்த்தைகளை படிப்பதிலும் சொல்லிப் பார்ப்பதிலும் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு ரகசிய கிளர்ச்சி இருக்கிறது என்பது அடிப்படை உளவியல் உண்மை. எனவே மேலுக்குள் அதை அருவருத்தாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பார்கள் என்பது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே நிறுவப்பட்ட ஒரு வரலாற்று ரகசியம்.

(4)

செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் தொடர்ந்து கவனித்து சிறுபான்மையினர்கள் சம்பந்தப்பட்ட அவர்கள் மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளை (அதற்குத்தான் இந்தியாவில் பஞ்சம் கிடையாதே) சிவப்பு மையால் குறித்து வைத்துக் கொள்வது முக்கியம். பின்பு புலனாய்வுப் பத்திரிகைளும் சிறப்பு செய்தியாளர்களும் மத அடிப்படையாளர்கள் நடத்தும் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கும் தரவுகளை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றை உங்களின் பார்வை போல கலந்து கட்டி ஆவேசமான தொனியில் மறுபிரசுரம் செய்வது உங்களை முற்போக்காளர்களின் வரிசையின் முன்னணியில் நிற்க வைப்பதற்கு நிச்சயம் உதவும். இதில் தலித்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட சம்பவத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த மலம் உலராமல் பார்த்துக் கொள்வது முற்போக்காளராகிய உங்களின் முக்கியமான கடமை. வருங்காலத்தில் தலித்களே இதை மறக்க முயற்சித்தாலும் இதை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்து அவர்களின் தாழ்வுணர்ச்சியையும் பதட்டத்தையும் இழக்காமல் வைத்திருக்க வேண்டியது நீங்கள் முற்போக்காளராக தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான அடிப்படை என்பதை மறக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் நீங்கள் முற்போக்காளர் தகுதியை நீட்டித்துக் கொண்டே இருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்சினையை உணர்ச்சிகரமாக எழுதி உங்கள் முற்போக்காளர் இமேஜை நீங்கள் பஸ் பாஸ் போல் renewal செய்து கொண்டே இருக்க முடியும்.

இன்னொரு அடிப்படையையும் மறக்கக்கூடாது. 'ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அனைவருமே கொடூரமானவர்கள், வன்முறையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை தொடுத்து கொண்டிருப்பவர்கள். அவர்களில் சிலர் தங்களின் ஜாதிய கற்பிதங்களை உணர்ந்து அதைக் கடந்து வெளியே வரமுயற்சித்தாலும் அவர்களின் சட்டைக்குள் கயிற்றைத் தேடிப்பார்த்து அடையாளத்தை உணர்ந்து அவர்களை மறுபடியும் ஜாதியக் கூண்டுக்குள் திருப்பித்தள்ளி விடுவது முற்போக்காளனின் கடமை.

எல்லா கருமாந்திர ஜாதிகளிலும் நல்லவர்களும் அயோக்கியர்களும் வன்முறையாளர்களும் மனிதாபிமானம் கொண்டவர்களும் கலந்தேதான் இருப்பார்கள் என்பது கடைந்தெடுக்கப்பட்ட பொய் என்பதை முற்போக்காளர்கள் உணர வேண்டும். ஒரு வன்முறை நிகழ்வை "எவ்வாறு புரிந்து கொள்வது" என்பதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகிறது. எங்காவது ஒரு வன்முறைச்சம்பவம் நிகழ்ந்தால் அது ஆதிக்கச் சாதியினராலேயாதான் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று முன்கூட்டிய தீர்மானத்துடன் நம்புவதுதான் சிறந்த புரிதல்.

(5)

சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை. உலக சினிமா என்பது இந்திய துணைக்கண்டத்தின் வெளியில் உருவாக்கப்படுவது என்பதை மறந்து விடக்கூடாது. புகழ்பெற்ற, பொதுவாக பரவலாக அறியப்பட்ட உலகத் திரைப்படங்களை பற்றி எழுதுவது உங்களின் தனித்தன்மைக்கு வேட்டு வைக்கும் செயல். பழங்குடிகளின் தொன்மையான மொழியில் வெளிவந்து திரைப்பட விழாக்களில் மொத்தமே பத்து நபர்கள் மாத்திரமே பார்த்திருக்கும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே உன்னதம். இந்தத் திரைப்படங்களின் போக்கு மக்களின் புரட்சி, எழுச்சி ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இம்மாதிரியான விமர்சனங்களின் போது சம்பந்தப்பட்ட படத்தை மாத்திரம் ஒற்றைப் பரிமாண பார்வையோடு எழுதுவது அறிவீனம். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பல்வேறு திரைப்பட இயக்குநர்களின் பெயர்களையும் படத்தலைப்புகளையும் (வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்திருத்தால் போதும்) ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டே செல்வது கூடுதல் தகுதி. படிக்கும் வாசகன் உங்களை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வாயைப் பிளந்து பிரமிக்க இது உதவும்.

உலக சினிமாக்களை காண ஆங்கில மொழியின் போதாமை குறித்து கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, இதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டாம். உள்ளுர்ப் படங்களுக்கு வருவோம். நமது உள்ளுர் சினிமா நாயகர்கள் அரிவாள்களை தலைக்கு உயரே தூக்கும் வணிகப்படங்களை வெளிவந்த முதல் நாளே முண்டியத்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்தாலும் அந்தப் பிரியத்தை உள்ளுக்குள் ஒளித்து அவர்களையும் அந்தப்படங்களையும் கன்னாபின்னாவென்று திட்டி எழுதுதலின் மூலம் முற்போக்குச் சாயத்தை அழுத்தமாக பூசிக் கொள்ளலாம். விமர்சனப் பதிவின் தலைப்பை மிக அழுத்தமாக வைப்பது அதிக வாசகர்களைப் பெறுவதற்கு மிகுதியாக உதவும். "பார்ப்பனிய மலத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட தூமைத் துணி' 'சீழ்பிடித்த ஆண்குறியில் வழித்தெழிக்கப்பட்ட நாற்றமடிக்கும் விந்துக்குருதி' என்று கலகத்தன்மையுடனோ அல்லது 'பெருங்கதையாடலின் குறுநகை' என்று இலக்கிய வாசனையுடனோ இருத்தல் முக்கியம். பதிவின் உள்ளடக்கத்தில் பட இயக்குநரையோ பிரதான நடிகரையோ "தேவடியாப் பையன்" என்றோ அவர்களின் "ஆண்குறிகளை வெட்டுதல்" குறித்தோ கொண்ட வரிகளை மறக்காமல் சேர்ப்பது வாசகர்கள் கிளர்ச்சியடைந்து "இவ்வாறெல்லாம் கூட பொதுப்பரப்பில் கலக்ததன்மையோடு செயல்பட முடியுமா" என்று உங்களை பிரமிப்புடன் காண உதவும்.

தமிழ்ப்படங்கள்தான் குப்பை என்று தெரிகிறதே, அப்புறம் ஏன் அதை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து இப்படி இணையப் பரப்பை நீங்கள் எடுக்கும் வாந்தியாலும் அபான வாயுவாலும் நிரப்புகிறீர்கள் என்று யாரும் உங்களை கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள்தான் கோமியம் தெளிக்கப்பட்டு புனிதமாக்கப்பட்ட உங்களின் கலகவார்த்தைகளில் பிரமிப்படைந்து வாயடைத்து நிற்கிறார்களே.

(6)

திரையரங்கில் படம் வெளிவந்த முதல்காட்சி அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்து முன்னால் நிற்கிற இருபது பேரின் கவனத்தை திசைமாற்றி தாண்டிப் போய் சீட்டை வாங்கியதுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரே புரட்சியாக இருந்திருக்கும். பரவாயில்லை. ஆனால் உங்களின் பதிவுகளில் இம்மாதிரியான சில்லறைத்தனமான செயல்களின் தடங்கள் பதியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மார்க்ஸ், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற ஆவேசமான புரட்சி சம்பந்தப்பட்ட பெயர்களும் மேற்கோள்களும் உங்கள் பதிவின் இடையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலையில் தவறாமல் வாக்கிங் சென்று காய்கறி வாங்கித் திரும்பும் மிடில்கிளாஸ் கேணையனாக உங்களை சித்தரித்துக் கொள்வது உங்களின் முற்போக்கு பிம்பத்தை கட்டமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். டாஸ்மாக்கில் ஓசியில் குடித்து வாந்தியெடுத்ததைப் பற்றியோ போதையில் எதிரே இருப்பவனுடன் நடந்த கைகலப்பு பற்றியோ புளகாங்கிதத்துடன் அதை விவரித்து எழுதுதல் நலன் பயக்கும். திரையில் தங்கள் நாயகர்களை ஆராதிக்கும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகள் அதே முறையில் உங்களின் இந்த புரட்சிச் செயல்களில் கிளர்ச்சியடைந்து உங்களை ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு உங்களின் அல்லக்கைகளாக மாற வாய்ப்புண்டு.

(7)

சர்வதேச அறிவுஜீவிகளின் கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கண்டெடுத்து சமீபத்தில் அதை வாசித்ததாக போகிற போக்கில் அலட்சியமாக தெரிவிப்பது உடனடி பலனை ஏற்படுத்தக் கூடியது. குருட்டாம் போக்கில் கட்டுரையின் சில வரிகளை அடிக்கோடிட்டு காண்பித்து இந்த வரிகளுடன் தாம் மிகவும் உடன்படுவதாகவோ அல்லது கட்டுரையாளரின் மேதாவித்தனத்தை மறுதலிப்பதாகவோ தெரிவிப்பது 'நம்மாளு இண்டர்நேஷனல் லெவல்ல பைட் பண்றாரே' என்று வாசகனின் மனத்தில் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடும்.

வேற்று மொழி அறிவுஜீவிகளின் கட்டுரைகளை நேர்காணல்களை சற்று சிரமம் மேற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் உதவக்கூடியதுதான். பதிவின் கீழே சிறியதாக தமிழில் ...... என்று உங்கள் பெயரை விரும்பினால் நிரப்பிக் கொள்ளலாம். சாளேஸ்வர வாசகர்கள் இதைக் கவனிக்காமல் முழுக் கட்டுரையும் உங்களாலேயே எழுதப்பட்டது என்று தவறாக (உங்களைப் பொறுத்தவரை சரியாக) புரிந்து கொள்வதற்கு அது உதவக்கூடும். மொழிபெயர்க்கும் கட்டுரையின் தொனி அசல்கட்டுரையின் படியேதான் வரவேண்டுமென்கிற கட்டாயமெல்லாம் ஒன்றில்லை. இடையே உங்களின் கைச்சரக்கையும் கலந்து அடிக்கலாம். இம்மாதிரி பதிவையெல்லாம் யாரும் பிரக்ஞையுடன் வாசிப்பதில்லை என்பதால் யாரும் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அரவாணிகள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி நிஜ வாழ்க்கையில் நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கலாம். அவர்களுக்காக உங்கள் பிருஷ்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் எழுத்து, பொதுவாழ்க்கை என்று வரும் போது அவர்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது, பேசுவது, கவலைப்படுவது போன்ற செயல்கள் உங்களின் முற்போக்கு இமேஜ் வளர்வதற்கு பெரிதும் உதவக்கூடியது.

(8)

பிடித்த எழுத்தாளர்களாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை யாரும் சீந்த மாட்டார்கள். சிறுபத்திரிகைகளில் மாத்திரமே ரகசியமாக உலவும் எழுத்தாளர்களை (குறைந்தபட்சம் பெயர்களையாவது) அறிந்து கொள்வது நல்லது. அவர்களின் படைப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்து அதில் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய சங்கதி இருந்தால் (இல்லையென்றால் நாமே செயற்கையாகவும் அதைக் கட்டமைக்கலாம்) கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்து 'இது சிறுபான்மையினரை அவமதிக்கும் நோக்கில் எழுதப்பட்டது' என்ற ஆவேசமான தொனியில் பரபரப்பான கட்டுரை ஒன்றை எழுதலாம். (காதலான திரைப்படத்தில் பெரியாரின் சிலைக்கோணத்தை அரசியலாக்கிய கட்டுரையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது). பொதுப்புத்திக்கு தெரியாத / உறைக்காத கோணத்தை இந்த முற்போக்காளர் விழிப்புடன் கூர்மையாக அவதானித்து கண்டுபிடித்து விட்டாரே என்று உங்களுக்கு பாராட்டு மழை பொழியும். சாணக்குகியா, அசிங்கபெரியவன் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே வெற்றிமோகன், பாரு போன்ற முன்னணி சிற்றிதழ் படைப்பாளிகளை அவ்வப்போது சீண்டிக் கொண்டோ அல்லது அவர்கள் தங்களுக்குள் சீண்டிக் கொள்வதை கண்டித்து காறித்துப்பியோ தொடர்ந்து பதிவெழுதுதலும் நன்று.


()

மேற்கண்ட வழிகளை கவனமாகப் பின்பற்றுவதின் மூலம் 'நீங்களும் ஒரு முற்போக்காளர்' என்ற தகுதியையும் ஆளுமையையும் இணையப் பரப்பில் நீங்கள் உடனடியாகவும் சிறப்பாகவும் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். "நீங்களும் இதைப் பின்பற்றுகிறீர்களா?" என்று என்னை நோக்கி அபத்தமாக யாரும் கேள்வியெழுப்பக் கூடாது. இது ஒரு சுயவாக்குமூலமோ என்று சந்தேகப்படுபவர்கள் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வார்கள்.

முப்பது வழிகள் என்று குறிப்பிட்டு விட்டு எட்டு வழிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே என்று முணுமுணுப்பவர்கள் முற்போக்கு முகாமிற்குள் நுழைய அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள். சொல்லப்பட்டதின் ஒழுங்கை பின்பற்றாததே கலகத்தின் குறியீடு என்று இதற்குள் யூகித்திருந்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புண்டு. (நியுமராலஜிப் படி எட்டாம் எண்தான் எனக்கு ராசியானது என்பதால்தான் எட்டு விதிகளுடன் இந்தப் பதிவு முடிக்கப்பட்டிருக்கிறது என்று காற்றுவாக்கில் வரும் உறுதியில்லாத தகவல்களை நம்பாதீர்கள்).

வாழ்க முற்போக்கு! வளர்க கலகவாதிகள்! ஒழிக பொதுப்புத்தி!


(முக்கியமான பின்குறிப்பு: விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் நிஜமான அக்கறையுடன் சாய்வில்லாத மனப்பாங்குடன் இயங்கும் படைப்பாளிகள், களப்பணியாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவ்வாறான பாவனையில் போலித்தனமாக இயங்கி மற்றவர்களின் கவனத்தில் தம்மை எப்போதும் வைத்துக் கொள்ள நினைக்கும் அற்பர்களை கிண்டலடிக்க முயல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.)

பதிவு நீண்டுவிட்டதால் பின்னதொரு சாவகாசமான நேரத்தில் இன்னும் சில வழிமுறைகளும் விதிமுறைகளுமாக இந்தப் பதிவு update செய்யப்படலாம்.

தொடர்புடைய பதிவு

புகழ் பெற்ற சாமியாராக சில குறுக்கு வழிகள்

suresh kannan

95 comments:

Anonymous said...

சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்

Anonymous said...

//தலித்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட சம்பவத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த மலம் உலராமல் பார்த்துக் கொள்வது முற்போக்காளராகிய உங்களின் முக்கியமான கடமை. வருங்காலத்தில் தலித்களே இதை மறக்க முயற்சித்தாலும் இதை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்து அவர்களின் தாழ்வுணர்ச்சியையும் பதட்டத்தையும் இழக்காமல் வைத்திருக்க வேண்டியது நீங்கள் முற்போக்காளராக தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான அடிப்படை என்பதை மறக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் நீங்கள் முற்போக்காளர் தகுதியை நீட்டித்துக் கொண்டே இருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்சினையை உணர்ச்சிகரமாக எழுதி உங்கள் முற்போக்காளர் இமேஜை நீங்கள் பஸ் பாஸ் போல் renewal செய்து கொண்டே இருக்க முடியும்//

எனக்கென்று எந்த பதிவும் இல்லை. ஒரு பொது வாசகனின் கண்ணோட்டத்தை இந்த பதிவில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்

Maniz said...

யாரை நினைத்து எந்த பதிவு என்பதை பற்றி யோசிப்பதை மறந்து பதிவு முழுவதையும் படித்தேன்....சிரித்தேன் :)

Anonymous said...

ஆஹா.... இது யாரையோ கசக்கி பிழிஞ்சு "சாறு" எடுத்த மாதிரி இருக்கே?

Anonymous said...

ultimate

Anonymous said...

இது சுரேஷ்கண்ணன் பதிவுதானா? :)))))) பாத்து இருங்க உங்க ஜாதியைக் கண்டு பிடிச்சு மிருகம், நாய், நரின்னு செருப்பால் அடிக்கக் கிளம்பிறப் போறாய்ங்க. அதுனாச்சும் பரவாயில்லை, குஞ்சை வேற இப்ப நீங்க பத்திரமா பாதுகாக்க வேணும். குஞ்சை அறுக்குறத்துக்கும் கொட்டயக் கசக்குறதுக்கும்னே பி எச் டி பண்ணி விட்டு நிறைய முற்போக்காளர்கள் கிளம்பியிருக்காய்ங்க. ஜாக்கிரதையா இருந்துக்குங்க சாமி.

நல்லாதானா இருந்தீங்க எப்படி இப்படி? :))

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

அண்ணே ஒரு மேட்டர உட்டுடீங்களே....

"முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்"

அப்படீன்னு ஒரு பதிவ போட்டு நான் 'அவன்' இல்லன்னு காட்டிக்கறது....பிச்சையிலும் பிச்ச மகா பிச்ச!

Anonymous said...

ஹாஹாஹா!

Anonymous said...

சூப்பர் முற்போக்காளர்களின் முகமூடிகளைக் கிழித்து விட்டீர்கள், கோமணத்தினை அறுத்து எரிந்து விட்டீர்கள். பொதுப்புத்தி என்னும் குஞ்சை அறுத்து எரிந்து விட்டீர்கள். முற்போக்கு நாய்களை மொத்தத்தில் காயடித்து விட்டீர்கள் என்ற என் பாராடுதல்களைச் சொல்ல மறந்து விட்டேன்:))

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

இங்கே ஒரு முற்போக்கு வாதியின் பதிவை பாருங்கள்... இந்தியாவை அவமான படுத்தி விட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறாராம்

http://arivili.blogspot.com/2008/11/blog-post_19.html

அப்பதிவின் கீழே ஒருவர் பின்னூட்டம் இட்டுள்ளார்

//ஜாலிஜம்பர் சொன்னது…

குவார்ட்டர் அடித்தால் ஏற்படும் போதையைப் போல் பெருமைப்போதை ஏற்பட்டது உண்மை.இப்படங்களைப் பார்த்தவுடன் போதை இறங்கிவிட்டது.இந்தியாவின் மீது காறித்துப்புகிறேன்.
//

அதையும் வெளியிட்டு உள்ளார். அதை எதிர்த்து பின்னூட்டம் இட்டால் அந்த முற்போக்குவாதி வெளியிடுவது இல்லை.

இங்கிருந்து சோறு தின்னு கொண்டு , இந்தியாவின் மீது காறி துப்பும் இவர்களை உள்ளே தூக்கி போட்டு காயடித்தால் என்ன ?

Athisha said...

நல்ல நகைச்சுவை அண்ணாத்த...

இப்படிக்கு..

வலைப்பூ வைத்திருக்கும் பன்றிக்குட்டிகளில் ஒன்று அல்லது ஒரு கண்ட கழிசடை

vall paiyen said...

கன்னா பின்ன வென்று கண்ட பதிவையும் படித்து மண்டை காய்ந்து போய் இருக்கும் நடு நிலை வாசகனின் மன நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது இந்த பதிவு. நீங்கள் கூறிய அத்தனி வழிகளையும் சந்தடி சாக்கில் இந்த பதிவிலேயே உபயோகித்திருப்பது தன் இந்த பதிவின் பெரும் சிறப்பு .

Joe said...

ஹாஹாஹா, செம கலாட்டா!

Rajaraman said...

சுரேஷ் கண்ணன் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதை விட மிக அருமையாக ஒரு தேர்ந்த எழுத்தாளரால் கூட இங்கே உலவிக்கொண்டிருக்கும் போலி அறிவுஜீவி / போலி முர்ப்போக்குவாதிகளின் முகமூடியை கிழிக்க முடியாது. Hats off. Welldone sir. மேலும் நீங்கள் இதற்க்கு எடுத்துக்கொண்ட நகைச்சுவை இழையோடும் நடை மிக்க நன்றாக உள்ளது. இது போன்ற மேலும் பல கிழித்தல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

நந்தா said...

சரவெடின்னு சொல்லுவாங்களே... அது இதுதானா?

அடிச்சு நொறுக்ககீருக்கீங்க.

Anonymous said...

கலக்கல் !!!!!!!

வெகுநாளைக்கப்புறம் வயிற்றுவலி வரவைத்த பதிவு...!!!

சிரிச்சு சிரிச்சு :)))

முரளிகண்ணன் said...

பின்னி பெடல் எடுத்திட்டீங்க

நாமக்கல் சிபி said...

சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்

Anonymous said...

பெயர்களைச் சொல்லியே திட்டியிருக்கலாம்.முற்போக்கு என்பது ஒல்டு பாஷன்.புது பாஷன் பின்நவீனத்துவ,இந்த்துவ எதிர்ப்பு,எதிர்கலாச்சசார,போலிஸ் எதிர்ப்பு வாதி :).

Rajaraman said...

சுரேஷ் கண்ணன் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதை விட மிக அருமையாக ஒரு தேர்ந்த எழுத்தாளரால் கூட இங்கே உலவிக்கொண்டிருக்கும் போலி அறிவுஜீவி / போலி முர்ப்போக்குவாதிகளின் முகமூடியை கிழிக்க முடியாது. Hats off. Welldone sir. மேலும் நீங்கள் இதற்க்கு எடுத்துக்கொண்ட நகைச்சுவை இழையோடும் நடை மிக்க நன்றாக உள்ளது. இது போன்ற மேலும் பல கிழித்தல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

கிரி said...

//உங்களை ஏதோ வாரமலரின் பின்பக்கத்தில் கவிதை எழுதுகிற தயிர்வடை ஆசாமி என்று புறக்கணித்து விடுவார்கள்//

ஹா ஹா ஹா ஹா

//பதிவு ஆரம்பித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது முற்போக்காளர்களுக்குள் நிலவும் பல முகாம்களில் ஏதாவது ஒரு முகாமிற்கு அடைக்கலம் தேடிச் செல்வது//

:-))))

//என்ற வார்த்தைகள் தென்பட்டால் அவரை தயக்கமின்றி உடனே முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் கண்டு கொள்ளலாம். //

ஒ! இது தான் முற்போக்கா :-)))

//புரிகிறாற் போலவும் நேர்க்கோட்டிலமைந்த வாக்கியங்களாகவும் எழுதினால் உங்களுக்கு முற்போக்கு எழுத்தாளராக இருக்க அடிப்படைத்தகுதி கூட இல்லையென்று பொருள்//

ஹி ஹி ஹி ஹி

//மேலுக்குள் அதை அருவருத்தாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பார்கள் //

:-)))

//சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை//

சுரேஷ் கண்ணன் இதை நான் யாருக்கு சொன்னீர்களோ தெரியவில்லை. இது முற்றிலும் உண்மை..எந்த ஒரு படத்தையும் குப்பை மொக்கை இலவசமாக கூட பார்க்க கூடாது என்று கூறி தான் பதிவு எழுதுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் இனி தனியாக படம் எடுத்தால் தான் உண்டு. பதிவுலகில் மட்டும் விமர்சனம் படித்து படத்தை எடை போடவே கூடாது. நீங்கள் கூறியது மிக சரி.

//தமிழ்ப்படங்கள்தான் குப்பை என்று தெரிகிறதே, அப்புறம் ஏன் அதை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து இப்படி இணையப் பரப்பை நீங்கள் எடுக்கும் வாந்தியாலும் அபான வாயுவாலும் நிரப்புகிறீர்கள் என்று யாரும் உங்களை கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாதீர்கள்//

நல்லா கேட்டீங்க கேள்விய :-)

பதிவு பட்டாசா இருக்கு

Anonymous said...

அட்ப்பாவி.. இவ்ளோ செய்யணுமா?.. வேணாங்க அவ்ளோ திறம கெடையாது.. பேசாம பிற்போக்கு பதிவராவே இருந்துடலாம்...

//போலித்தனமாக இயங்கி மற்றவர்களின் கவனத்தில் தம்மை எப்போதும் வைத்துக் கொள்ள நினைக்கும் அற்பர்களை //

யார்ங்க இவ்ளோ திறம உள்ள அந்த மனுஷங்க? சொல்லிடுங்க ப்ளீஸ்...

enRenRum-anbudan.BALA said...

உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல நடை, இழையோடும் நகைச்சுவை, சொல்லும் விதம் எல்லாமே அருமையாக இருக்கும். இந்தக் கட்டுரை ரியலி சூப்பர் என்பது என் எண்ணம் (best of the best!) :-))))))))))))))))

ஏன் இந்த திடீர் ஆவேசமும், பிரித்து மேய்தலும் ??? ;-)

எ.அ.பாலா

Unknown said...

தாறுமாறு தல!!!
நல்லா ரசிச்சு சிரிச்சேன் :)))))))))))))))))

Unknown said...

உங்களின் இதே கருததைதான் ரஷ்யாவின் போதாச்கொவ்வ் தோஸ்தோஸ்கே சொன்னார்

Anonymous said...

அடுத்து ‘முற்போக்கு சாமியாராவது எப்படி' என்று எழுதுங்கள் :).

Anonymous said...

//கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள்//
நீங்களும் அந்த கழிசடை பன்னிக்குட்டிகளுள் ஒருவர் தான் என்பதை மறந்து விட வேண்டாம்....

வளர்மதி said...

என்ன ஆச்சு உங்களுக்கு :))))

இப்படி பிரிச்சு மேஞ்சிருக்கீங்க !

Anonymous said...

முப்பட்தோராவது வழி இதுமாதிரியா நான் அவனில்லை என்கிறாப்பல ஒரு போஸ்ட் வுடுறது.

Anonymous said...

சுரேஷ்கண்ணன்,

பல பேர் back க்குள்ள தீ பத்திகிச்சி போல இருக்கு.

உங்கள் புகைப்படத்தை பார்க்கும் போது..., உங்களை பார்ப்பனர் என்று சாட முடியாது... :(

வெகு விரைவில் உங்களை ஆதிக்க சாதி வெறியர் என்று சாடும் பதிவுகளை எதிர் பாருங்கள்

Anonymous said...

இத விட்டுடீங்களே சார்...

"இலங்கை தமிழர் பற்றி ஒரு பதிவாவது எழுதவேண்டும். 'தொப்புள் கொடி உறவுகள் ...' என்ற வார்த்தையை மறந்து விட கூடாது.

வாழவந்தான் said...

///// "நீங்களும் இதைப் பின்பற்றுகிறீர்களா?" என்று என்னை நோக்கி அபத்தமாக யாரும் கேள்வியெழுப்பக் கூடாது. இது ஒரு சுயவாக்குமூலமோ //////
அப்ப நீங்க முற்போக்குவா(வியா)தியா இல்லியா??!!

Anonymous said...

/உங்கள் புகைப்படத்தை பார்க்கும் போது..., உங்களை பார்ப்பனர் என்று சாட முடியாது/

அட மொகத்த பாத்து அல்ஷேசனா பாமரேனியனான்னு கண்டு புடிச்சுடலாமா? இதே சுரேஷ் கண்ணன் சாடின திசையை 180 டிகிரில திருப்பியிருந்தா திருமலையை கண்டிருப்போமா? தென்கைலையைக் கண்டிருப்போமா?

சுரேஷ் கண்ணன் பதிவை தொடர்ந்து வாசிச்சவங்களுக்கு அவரோட ரூட்டு நல்லாவே தெரியும். அவர் எழுதினதுல பாதிக்குமேலே அவருக்கே பொருந்தும். அவரு ஜ்யோவ்ராம் சுந்தர்ல கொஞ்சம் கடுப்பா இருக்காருக்குன்னு நெனைக்குறேன். சூடு ஆறட்டும். அவரையும் பிரிச்சு மேஞ்சிடலாம்.

பரிசல்காரன் said...

கிண்டலான தொனியில் எழுதப்பட்டாலும் சில, பல உண்மைகள் முகத்தில் அறைகிறது..

(எப்படி.. நான் தேறுவேனா...)

சாலிசம்பர் said...

//இங்கிருந்து சோறு தின்னு கொண்டு , இந்தியாவின் மீது காறி துப்பும் இவர்களை உள்ளே தூக்கி போட்டு காயடித்தால் என்ன ?//

ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் குமுறி வெடித்தவுடன் குப்பைத்தொட்டி வைத்து காறித்துப்பச் சொன்னார் இட்லிவடை.அதைக் கண்டிச்சீங்களா அனானி?அதுக்கு எதிர்வினை தான் என்னுடைய பின்னூட்டம்.

இந்தியா ராக்கெட் விட்டதுக்கு மூனு பழமொழி இருக்கு.
1.கும்பி கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுததாம்.
2.பெருமைக்கு எருமை மேய்க்கிறது.
3.ஒய்யாரக்கொண்டையில தாழம்பூவாம்
உள்ளுக்குள் இருக்குமாம் ஈறும்,பேனும்.

Anonymous said...

பிச்சைப்பாத்திரம் என்று வைக்காமல் அமுதசுரபி என்று கலகம் களைந்து கலயமாக வைத்திருக்கலாமே?

ramachandranusha(உஷா) said...

அடிப்பொளி :-)

பழமைபேசி said...

யாதார்த்தமா இருக்கு.... நெசமாவும் இருக்கு.... சிரிப்பாவும் இருக்கு...

இலவசக்கொத்தனார் said...

:)))

ஜூப்பரு.

உண்மைத்தமிழன் said...

சுரேஸ் ஸார்..

பல நாள் கோபம் போலிருக்கிறது.

என்னுடைய ஒரேயொரு ஆலோசனை இனிமேல் தாங்கள் சுகுணாதிவகாரின் பதிவிற்குள் போக வேண்டாம்.

பின்னவீனத்துவம் மீதான உங்களது கோபத்தைச் சாக்காக வைத்து 'பிச்சைப்பாத்திரம்' தளத்தில் வரக்கூடாத வார்த்தைகளெல்லாம் இப்பதிவில் இடம் பெற்றுவிட்டது. கொட்டியதை இனிமேல் அள்ளவும் முடியாது.

போதுமான கவனிப்பும், ஆதரவும், பாராட்டும் இப்பதிவிற்குக் கிடைத்துவிட்டதால் இனி தாங்கள் மிடில் கிளாஸ் கலகக்காரர் என்று அழைக்கப்பட வாய்ப்புண்டு.

பதிவில் சொல்லப்பட்டவைகள் அனைத்தும் உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை என்பதையும் சொல்லி வெளியிலிருந்து எனது ஆதரவை உங்களுக்கு அளிக்கிறேன்..

வாழ்க வளமுடன்

Anonymous said...

Have a look on who appreciated your post. Any coincidence? Don't you see a pattern?

விலெகா said...

சூப்பரப்பூ

Anonymous said...

நகைச்சுவையா இருந்தாலும், உண்மைங்கிறதால வருத்தமாவும் இருக்கு

Anonymous said...

//Have a look on who appreciated your post. Any coincidence? Don't you see a pattern?//

ஆமாம் ஒரே பார்ப்பனர்கள்

ஹரன்பிரசன்னா said...

உயர்சாதி மனப்பான்மை வெளிவந்துவிட்டது. பூனைக்குட்டி வெளியே வரும், இப்போது யானைக்குட்டியே வெளியே வந்துவிட்டது. முற்போக்காளர்களைக் கிண்டலடிப்ப்பதாக நினைத்துக்கொண்டு தன்னை வெளிப்படுத்திவிட்ட, பிராமணிய மனப்பான்மை கொண்ட, வந்தேறிகளுக்கு சாமரம் வீசும்... முடியலை. எதுக்கும் தயாரா இருங்க. அவ்வளவுதான் சொல்லமுடியும். :)) பதிவு கலக்கலுங்கண்ணாச்சி.

Anonymous said...

அண்ணே சிங்கத்தை இப்படி அசிங்கம் செய்து விட்டீர்களே !! பாவம் சுகுணாவும் அவரின் பின் நவீன இலக்கியவாதிகளும்.

Unknown said...

ஹாஹ்ஹ்ஹாஹா!!! பயங்க்க்க்க்க்க்க்க்கர கோவத்துல இருக்கீங்கன்னு தெரியுது. சில பல பின்னூட்டங்களையும் வழிமொழிகிறேன்.
குறிப்பாக: //கன்னா பின்ன வென்று கண்ட பதிவையும் படித்து மண்டை காய்ந்து போய் இருக்கும் நடு நிலை வாசகனின் மன நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது இந்த பதிவு. நீங்கள் கூறிய அத்தனி வழிகளையும் சந்தடி சாக்கில் இந்த பதிவிலேயே உபயோகித்திருப்பது தன் இந்த பதிவின் பெரும் சிறப்பு .// (வால்பையனுடையதாயில்லாமலிருக்கலாம்)

Anonymous said...

//சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை. உலக சினிமா என்பது இந்திய துணைக்கண்டத்தின் வெளியில் உருவாக்கப்படுவது என்பதை மறந்து விடக்கூடாது. //

இது நீங்க, அரண் பிரசன்னா மாதிரியான நவீன இலக்கிய, கலா ரசிகமணிகள் குத்தகைக்கு எடுத்திருக்கிற சமாச்சாரமாச்சே. இதுல முற்போக்குவாதிகள் கைவைக்க ஆரம்பிச்சிட்டாங்களா? கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

//உலக சினிமாக்களை காண ஆங்கில மொழியின் போதாமை குறித்து கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, இதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டாம். உள்ளுர்ப் படங்களுக்கு வருவோம்.//

அதானே பாத்தேன். இங்க்லீசே தெரியாத இவிங்களுக்கு, உங்களை மாதிரி இத்தாலிய, கொரிய, அல்பேனியப் படங்கள் எல்லாம் எங்க புரியப்போவுது. வுட்டுத்தள்ளுங்க. சமீபத்தில் ரிலீசாகாத செக் படம் அல்லது அந்த காலத்து இத்தாலிய 'சைக்கிள் திருடன்' படம் ஏதாவது ஒன்னை விமர்சனம் பண்ணுங்க பாஸ்.

பின்குறிப்பு: "ஏம்பா இவ்ளோ நேரம் செலவு பண்ணி மொக்கை பதிவு எழுதறீங்களே. எங்கூட கொஞ்ச நேரம் விளையாடலாம் இல்லையா" ன்னு உங்க மகள் கேட்காதது ஏமாற்றமாக உள்ளது. அதனால எவ்வளோ உணர்ச்சிகர பின்னூட்டங்கள் மிஸ்ஸிங் பாருங்க. :-(

சரவணகுமரன் said...

செருப்படி!!!

சரவணகுமரன் said...

//வலைப்பூ வைத்திருக்கும் பன்றிக்குட்டிகளில் ஒன்று //

:-))

We The People said...

ஆக ஜிகினா பேப்பரை திறந்துவிட்டீர்கள்! பார்ப்பணிய மலம் வெளிவர துடங்கிவிட்டது :))))))))))

வருண் said...

சில கேள்விகள்!

* நீங்கள் எப்படி? பாவனை செய்பவரா இல்லை, உண்மையிலேயே முற்போக்குவாதியா? இல்லை பழமை விரும்பியா?

* உங்களை இந்த 30 (10) கேள்விகளுக்குள் அடக்கி, உங்களையும் சேர்த்துதான் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று நான் சொன்னால், எப்படி "ரியாக்ட்" பண்ணுவீங்க?

*நீங்கள் சொல்வதில் ஒரு சில பாப்புளர் ப்ளாகர் அடங்குவது உண்மைதான். ஆனால் ஒரு சில உண்மையான முற்போக்குவாதிகளை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளீர்கள் என்று நான் சொல்ல லாமா?

Veera said...

பதிவரசியலைத் தவிர்த்து, நல்ல நகைச்சுவையான பதிவு!

PKS said...

அய்யா, எல்லாமே நல்லா இருக்கு. (5) மட்டும் சொந்த செலவில் சூன்யம் வெச்சிக்கறீங்களோ என்ற கேள்வியை எழுப்பியது. :-) மற்றபடி, ஏன் இப்படி திடீரென்று கொலைவெறியுடன் முற்போக்காளர்கள்மீது இறங்கிவிட்டீர்கள். பொதுவாக இப்படி எழுதுகிறவர் இல்லையே நீங்கள். முற்போக்காளர்களுடன் ஏதும் பிரச்னையா? யாருடன் எப்போது :-) அந்தக் கதையைச் சொல்லுங்கள். :-))

//பிடித்த எழுத்தாளர்களாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை யாரும் சீந்த மாட்டார்கள். //

சில பதிவுகளுக்கு முன்னால் (டைம்ஸ் இலக்கியச் சிறப்பிதழ் பதிவா? )அனுராதாரமனண் எழுதியிருக்கிறார், அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் என்று தாங்கள்கூட கிண்டலாக எழுதிய ஞாபகம். இப்போது என்ன ஆயிற்று? :-)

என் பின்னூட்டத்தில் ஏதும் பிரச்னை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எனக்கு முற்போக்குவாதி பட்டம் கொடுத்துவிட வேண்டாம். :-)

- பி.கே. சிவகுமார்

முகமூடி said...

இப்பதிவில் விடுபட்டவை - முற்போக்கு பின்னவீனத்து வாதிகளின் சுபாவங்கள் - என என் காத்திர அவதானிப்பில் ::

1. எதாவது சல்லி ப்ரச்னை என்றால் அந்த ப்ரச்னையை மட்டும் மறுதலிக்ககூடாது. மறுப்புக்கு முன்பு அதிர்ச்சி மதிப்பீடு கூடிய இன்னொரு பேரதிர்ச்சி பாம் போட்டு சல்லியை மறுதலிக்க வேண்டும். உதாரணத்துக்கு “நீ ஜிப்பு போட மறந்துவிட்டாய்” என்று யாராவது உங்களை பற்றி சொன்னால் அதற்காக “நான் ஜிப்பு போடாதவன்னு சொல்லிட்டாங்கய்யா, நான் ரொம்ப நல்லவன்யா” என்று அழுதால் நீங்கள் சாதா ரண வாந்தி... ”என்ன பெத்த அம்மாவ தேவடியான்னு சொல்லிப்பாருங்க, நான் சந்தோசமா எரும மாட்டு மேல ஒண்ணுக்கு போன மாதிரி சொரணயே இல்லாம இருப்பேன, ஆனா நான் ஜிப்பு போடாதவன்னு சொல்லிட்டாங்கய்யா, நான் ரொம்ப நல்லவன்யா” என்று தெரு தெருவாக அந்த கோடிக்கும் இந்த கோடிக்குமாக அழுதால் அதுதான் முற்போக்க்கு பின்னவீனம்.

2. நானு கலியாணம் கட்டிக்க போறேன். எனக்கு ஆரோக்கியமான ஒரு பொண்ணோ இல்ல ஆணோ பார்ட்னர் (தோழர்?) பாத்து கொடுங்கன்னு ஓலை விட்டா நீங்க சாதாரணவாந்தி... ஆனா சாதி மறுப்பாளன்னு அழுத்தமா பதிய வைக்கணும்னா ”இந்தா பாருங்கய்யா, நானு இந்த சாதி. அதனால எனக்கு பாக்கிற பொண்ணு கண்டிப்பா வேற சாதியில இருக்கணும். பார்ட்னரோட அம்மாவும் அப்பாவும் வேற வேற சாதியில இருந்தா உத்தமம். பொண்ணோட சித்தப்பா அவங்க எல்லாரியும் விட மத்த சாதியா இருந்தே ஆகணும் அது கட்டாயம்” என்று பார்த்து பார்த்து - கவனிக்கவும் நீங்கள் சாதியை மறக்ககூடாது, மறுதலிக்க மட்டுமே வேண்டும் - கல்யாணம் செய்தால் நீங்கள் முற்போக்கு பின்னவீனம்.

3. என் கடன் யாருக்காவது விசிலடிச்சி கிடப்பதே என்று பிறப்பெடுத்த விசிலடிச்சான் குஞ்சுகள் சில தானாக அமையும் என்றாலும், அன்பு முத்தங்கள் சில பல கொடுத்து உங்களுக்கு என சில தனிப்பட்ட குஞ்சுகளை உருவாக்க வேண்டுவது அவசியம். அப்பொழுதுதான் உங்கள் அபத்த வாந்திகளை யாராவது வெளிச்சம் போட்டு காட்டினால் கூட விவஸ்தையே இல்லாமல் உங்கள் சார்பாக முத்த குஞ்சு அங்கே சென்று “பின்னவீனம் என் நண்பன், என் உயிர், என் தளபதி... என்னதான் வீரமா அட்டை கத்தி சுத்தி ஆடினாலும் அடிப்படையில அவன் ஒரு கோழை.. உங்க கருத்து அவன சாகடிச்சா அப்புறம் முத்தத்துக்கு எங்க போவேன்” என்று ஒரு காட்டு காட்டும். அதை பிச்சையெடுத்த ஓசி பிராந்தி குடித்துக்கொண்டே நீங்கள் எஞ்சாய் செய்யலாம்.

முகமூடி said...

இப்பதிவில் விடுபட்டவை - முற்போக்கு பின்னவீனத்து வாதிகளின் சுபாவங்கள் - என என் காத்திர அவதானிப்பில் ::

1. எதாவது சல்லி ப்ரச்னை என்றால் அந்த ப்ரச்னையை மட்டும் மறுதலிக்ககூடாது. மறுப்புக்கு முன்பு அதிர்ச்சி மதிப்பீடு கூடிய இன்னொரு பேரதிர்ச்சி பாம் போட்டு சல்லியை மறுதலிக்க வேண்டும். உதாரணத்துக்கு “நீ ஜிப்பு போட மறந்துவிட்டாய்” என்று யாராவது உங்களை பற்றி சொன்னால் அதற்காக “நான் ஜிப்பு போடாதவன்னு சொல்லிட்டாங்கய்யா, நான் ரொம்ப நல்லவன்யா” என்று அழுதால் நீங்கள் சாதா ரண வாந்தி... ”என்ன பெத்த அம்மாவ தேவடியான்னு சொல்லிப்பாருங்க, நான் சந்தோசமா எரும மாட்டு மேல ஒண்ணுக்கு போன மாதிரி சொரணயே இல்லாம இருப்பேன, ஆனா நான் ஜிப்பு போடாதவன்னு சொல்லிட்டாங்கய்யா, நான் ரொம்ப நல்லவன்யா” என்று தெரு தெருவாக அந்த கோடிக்கும் இந்த கோடிக்குமாக அழுதால் அதுதான் முற்போக்க்கு பின்னவீனம்.

2. நானு கலியாணம் கட்டிக்க போறேன். எனக்கு ஆரோக்கியமான ஒரு பொண்ணோ இல்ல ஆணோ பார்ட்னர் (தோழர்?) பாத்து கொடுங்கன்னு ஓலை விட்டா நீங்க சாதாரணவாந்தி... ஆனா சாதி மறுப்பாளன்னு அழுத்தமா பதிய வைக்கணும்னா ”இந்தா பாருங்கய்யா, நானு இந்த சாதி. அதனால எனக்கு பாக்கிற பொண்ணு கண்டிப்பா வேற சாதியில இருக்கணும். பார்ட்னரோட அம்மாவும் அப்பாவும் வேற வேற சாதியில இருந்தா உத்தமம். பொண்ணோட சித்தப்பா அவங்க எல்லாரியும் விட மத்த சாதியா இருந்தே ஆகணும் அது கட்டாயம்” என்று பார்த்து பார்த்து - கவனிக்கவும் நீங்கள் சாதியை மறக்ககூடாது, மறுதலிக்க மட்டுமே வேண்டும் - கல்யாணம் செய்தால் நீங்கள் முற்போக்கு பின்னவீனம்.

3. என் கடன் யாருக்காவது விசிலடிச்சி கிடப்பதே என்று பிறப்பெடுத்த விசிலடிச்சான் குஞ்சுகள் சில தானாக அமையும் என்றாலும், அன்பு முத்தங்கள் சில பல கொடுத்து உங்களுக்கு என சில தனிப்பட்ட குஞ்சுகளை உருவாக்க வேண்டுவது அவசியம். அப்பொழுதுதான் உங்கள் அபத்த வாந்திகளை யாராவது வெளிச்சம் போட்டு காட்டினால் கூட விவஸ்தையே இல்லாமல் உங்கள் சார்பாக முத்த குஞ்சு அங்கே சென்று “பின்னவீனம் என் நண்பன், என் உயிர், என் தளபதி... என்னதான் வீரமா அட்டை கத்தி சுத்தி ஆடினாலும் அடிப்படையில அவன் ஒரு கோழை.. உங்க கருத்து அவன சாகடிச்சா அப்புறம் முத்தத்துக்கு எங்க போவேன்” என்று ஒரு காட்டு காட்டும். அதை பிச்சையெடுத்த ஓசி பிராந்தி குடித்துக்கொண்டே நீங்கள் எஞ்சாய் செய்யலாம்.

யு.எஸ்.தமிழன் said...

”வருத்ததுடன் கண்டிக்கிறேன்! புரட்சிக்காகவும் மக்கள் எழுச்சிக்காகவும் பாடுபடும், விளிம்பு நிலை மக்களுக்காக எழும்பும் ஈன முனங்கலையும் குரல்வளையை நெரித்து ஒடுக்க முயற்சி செய்யும் மகா பாசிசச் செயலை இத்தனை கூவம் நதிக்கரையோரத்து பார்த்தசாரதிகள் பாராட்டி எழுதியிருக்கும் ஆள்மன மலவிகாரங்களின் துர்நாற்றம் குமட்டிக் கொண்டுவருகிறது! கேடுகெட்டு சீழ்பிடித்து மேட்டுக்குடிகளின் கைம்பாவைகளாகிப் போன சுதந்திர இந்தியாவின் கரையான் அரித்த நான்கு தூண்களும் நம்மை அழுத்திக்கொண்டிருப்பதை அறியாமல் சமுத்துவத்தை சாதிய ஒடுக்குமுறையை உபயோகித்து அழிக்கத்துடிக்கும் வன்முறையாளர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு ஊக்க மருந்தாக மாறி மேலும் பல வன்முறைகள் கட்டவிழ்ப்பு செய்யப்படும் ஆபத்தை எளிதாக உருவாக்க வழிகோணும் என்ற எளிய உண்மையை விளக்கிக்கொள்ளமறுக்கும் உங்கள் அறிவுசீவி மனதை மனோபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்! சுதந்திரத்தை எததனை போதித்தாலும் சமத்துவத்தை எத்தனைதான் கற்பித்தாலும் ஓராயிரம் மார்க்ஸ்களும் பத்தாயிரம் சே குவெராகள் மீண்டு பிறந்து வந்தாலும் சில ஆயிரமாண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்ததால் மரபணுவும் கூட தன்னியல்பைத் துறந்து மற்றவர்கு கீழ்படிந்துவாழ்வதையே விரும்புகிறதோ என்ற அச்சத்தை உங்கள் இந்த கட்டுரை எனக்கு ஏற்படுத்திவிட்டது. ஹிட்லரின் வன்முறைக்கு கொஞ்சமும் குறையாத இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு இல்லையாகிலும், ஒரு சிறு முனங்கலையாவது வெளிப்படுத்துவார்கள் என்று நான் கருதியவர்கள் கூட இளிப்பான்களையும், ஆஹா ஓஹோகளையும் மறுமொழித்துப் போயிருப்பது, சமுதாய வன்முறை எப்படி மாற்று சிந்தனைகளை சீர்குலைந்து மரத்துப்போகச் செய்திருக்கிறது என்பதை கண்கூடாக்கியிருக்கிறது!”
.
.
.
.
.
.
.

;)

-டைனோ

ஆட்காட்டி said...

என்னத்த சொல்லுறது?

Anonymous said...

//
ஆஹா.... இது யாரையோ கசக்கி பிழிஞ்சு "சாறு" எடுத்த மாதிரி இருக்கே?
//

வசந்த காலத்து ரோசா தான் நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

http://sankarmanicka.blogspot.com/2006/06/blog-post_24.html

மதிபாலா said...

சூப்பர் அண்ணே. முற்போக்கு முகாமின் சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்

பின்குறிப்பு -
இது உங்கள் முகாமில் நாம் இடம் பிடிப்பதற்கு சொல்லப்பட்ட பின்னூட்டமாக நீங்கள் எடுத்துகொண்டால் அதற்கு நாம் பொறுப்பில்லை!!!

ரசித்தேன் , சிரித்தேன் , நல்ல நகைச்சுவை உணர்வு திரு.சுரேஷ் கண்ணன் சார்!!! வாழ்த்துக்கள் ,

Anonymous said...

ச. திருமலை, உஷா, ஹரன்பிரசன்னா.. என்னையா இது ஒங்க பதிவா திருவிழாவிலே காணாமே போன ஆத்துக்கொழந்தைகளை கண்டு புடிச்சு மாமா கைல பத்திரமா கொடுக்கிற டெம்பவரி பூத்தா?

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள நண்பர்களுக்கு,

பதிவை பார்வையிட்டு ரசித்த, பாராட்டிய, விமர்சித்த, கண்டித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. சமீபத்தில் சில பதிவுகள் ஏற்படுத்திய கடுப்பில் (இதை ஒரு நண்பர் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார்)எழுதப்பட்ட இந்தப் பதிவு வேறொரு திசையை நோக்கி பயணிப்பதை கவலையுடன் கவனிக்கிறேன்.

நகைச்சுவை நோக்கத்திற்காக எழுதப்பட்ட பதிவின் ஆரம்ப வரிகள் சில பதிவர்களை புண்படுத்தியிருப்பதையும் காண முடிகிறது. எனவே எல்லாவற்றிற்குமாக சேர்த்து இன்னொரு விளக்கப் பதிவை (அடப்பாவி இன்னொரு பதிவா) எழுதலாமென்றிருக்கிறேன். எனவே அதுவரை சற்று பொறுமை காக்கவும்.

ஒத்துழைப்பிற்கு நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திரு சுரேஷ் கண்ணன்,
தங்கள் எழுதியிருப்பதில் பெரும்பாலான விடயங்கள் அப்பட்டமான உண்மை!
நகைச்சுவையாக இருந்தது. சிலருக்குக் கொஞ்சம் நெருடலாக இருந்திருக்கலாம்.

Anonymous said...

இன்னும் கொஞ்சம் டிப்ஸ் நானும் முகமூடி அண்ணாச்சி போல இலவசமாத் தரலாமுங்களா/

1. நீங்கள் பிராமண ஜாதியில் பிறக்க நேர்ந்து விட்ட பதிவராக இருந்து முற்போக்காளராகவும் இருந்து விட்டால் அந்தோ பரிதாபம். உங்கள் முற்போக்கை காட்ட முதலில் ஒரு முகமூடி (பதிவர் முகமூடி அல்ல) போட்டுக் கொள்ள வேண்டும். அதுக்கு ந்ல்ல பேரா சிலவற்றைப் பரிந்துரை செய்கிறேன் கேட்டுக்குங்க

முல்லை கசந்த்
மல்லிகை பசந்த்
சால சாரதி
ராட்சசன்
கொடூரன்
போணி
காலன்

என்று லட்சணமான பேரா பார்த்து வைச்சுக்கிடணும்

2. உங்கள் ஜாதி வெளியே தெரியாம பத்திரமா பாதுகாக்கணும். அதுக்காக ஈ வெ ரா வை விடவும், கீரமணியை விடவும், மஞ்சத் துண்டு மைனரை விடவும் ஒரு படி மேலாக போய் உச்ச கட்ட டெசிபலில் பாப்பானைத் திட்டி போஸ்ட் போடணும். பாப்பான் எல்லாம் தே பையன் என்று எழுதணும்

3. அதையும் மீறி நாலு வேலையத்த பயலுக உங்க ஜாதியைக் கண்டு பிடிச்சு மல்லிகை மசந்த் ஒரு ஐயங்கார், காலா காரதி ஒரு ஐயங்கார், மூர்க்கன் ஒரு ஐயர் என்று எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள். உடனே அது வரை உங்களுக்கு விசிலடிச்ச கும்பல் எல்லாம் செருப்பால் அடிக்கக் கிளம்பி வரும். உடனே ஐயோ ஐயோ கொல்றாங்களே ஸ்டைலில் இன்னும் உச்சஸ்தாயியில் பார்ப்பானைத்
திட்டணும். முன்பை விட தீவீரமா பாப்பானைத் திட்டினாத்தான் முற்போக்கு சர்ட்டிஃபிக்கேட்டை சந்தேக கேசாக ரினியுவ் பண்ணுவானுங்க இல்லாட்டி கஷ்டம்தான்

4. இருந்தாலும் கிழிஞ்ச முகமூடி கிழிஞ்சதுதான். இருந்தாலும் முற்போக்கைத் தக்க வைத்துக் கொள்ள அவனுங்க விரட்டுனாலும் ஓடாத சொறி நாயைப் போல காலுக்கடியிலேயே வாலாட்டிக் கிட்டுக் கிடந்தா ஆட்டைக்குச் சேத்துக்குவானுங்க. அப்புறமா பாப்பார நாயைச் செருப்பாலடி, குஞ்சை அறு, என்று சாமியாட்டம் ஆடினா கொஞ்சம் சேத்துக்கிட சான்ஸ் இருக்கு

எதுக்கும் டிரை பண்ணிப் பாருங்க

சுரேஷ் அடுத்து உங்க நடுநிலையை நிரூபிக்க இந்துத் தீவீரவாதிகளை கண்டிச்சு வழக்கம் போல ஒரு மொக்கை போடுங்க. உங்களுக்குச் சொல்லியா தரணும்? :) உங்களையும் மன்னிச்சு விட்டுடுவானுங்க :)

Anonymous said...

இன்னும் கொஞ்சம் டிப்ஸ் நானும் முகமூடி அண்ணாச்சி போல இலவசமாத் தரலாமுங்களா/

1. நீங்கள் பிராமண ஜாதியில் பிறக்க நேர்ந்து விட்ட பதிவராக இருந்து முற்போக்காளராகவும் இருந்து விட்டால் அந்தோ பரிதாபம். உங்கள் முற்போக்கை காட்ட முதலில் ஒரு முகமூடி (பதிவர் முகமூடி அல்ல) போட்டுக் கொள்ள வேண்டும். அதுக்கு ந்ல்ல பேரா சிலவற்றைப் பரிந்துரை செய்கிறேன் கேட்டுக்குங்க

முல்லை கசந்த்
மல்லிகை பசந்த்
சால சாரதி
ராட்சசன்
கொடூரன்
போணி
காலன்

என்று லட்சணமான பேரா பார்த்து வைச்சுக்கிடணும்

2. உங்கள் ஜாதி வெளியே தெரியாம பத்திரமா பாதுகாக்கணும். அதுக்காக ஈ வெ ரா வை விடவும், கீரமணியை விடவும், மஞ்சத் துண்டு மைனரை விடவும் ஒரு படி மேலாக போய் உச்ச கட்ட டெசிபலில் பாப்பானைத் திட்டி போஸ்ட் போடணும். பாப்பான் எல்லாம் தே பையன் என்று எழுதணும்

3. அதையும் மீறி நாலு வேலையத்த பயலுக உங்க ஜாதியைக் கண்டு பிடிச்சு மல்லிகை மசந்த் ஒரு ஐயங்கார், காலா காரதி ஒரு ஐயங்கார், மூர்க்கன் ஒரு ஐயர் என்று எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள். உடனே அது வரை உங்களுக்கு விசிலடிச்ச கும்பல் எல்லாம் செருப்பால் அடிக்கக் கிளம்பி வரும். உடனே ஐயோ ஐயோ கொல்றாங்களே ஸ்டைலில் இன்னும் உச்சஸ்தாயியில் பார்ப்பானைத்
திட்டணும். முன்பை விட தீவீரமா பாப்பானைத் திட்டினாத்தான் முற்போக்கு சர்ட்டிஃபிக்கேட்டை சந்தேக கேசாக ரினியுவ் பண்ணுவானுங்க இல்லாட்டி கஷ்டம்தான்

4. இருந்தாலும் கிழிஞ்ச முகமூடி கிழிஞ்சதுதான். இருந்தாலும் முற்போக்கைத் தக்க வைத்துக் கொள்ள அவனுங்க விரட்டுனாலும் ஓடாத சொறி நாயைப் போல காலுக்கடியிலேயே வாலாட்டிக் கிட்டுக் கிடந்தா ஆட்டைக்குச் சேத்துக்குவானுங்க. அப்புறமா பாப்பார நாயைச் செருப்பாலடி, குஞ்சை அறு, என்று சாமியாட்டம் ஆடினா கொஞ்சம் சேத்துக்கிட சான்ஸ் இருக்கு

எதுக்கும் டிரை பண்ணிப் பாருங்க

சுரேஷ் அடுத்து உங்க நடுநிலையை நிரூபிக்க இந்துத் தீவீரவாதிகளை கண்டிச்சு வழக்கம் போல ஒரு மொக்கை போடுங்க. உங்களுக்குச் சொல்லியா தரணும்? :) உங்களையும் மன்னிச்சு விட்டுடுவானுங்க :)

Anonymous said...

/சமீபத்தில் சில பதிவுகள் ஏற்படுத்திய கடுப்பில் (இதை ஒரு நண்பர் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார்)/

அடப்பாவி மக்கா! அப்போ இது எனக்கு வச்ச ஆப்பா. தெரியாம நான் வேற சிரிச்சுத் தொலைச்சிட்டனே :))

சீனு said...

ஓ! இதுக்கு பேரு தான் முற்போக்குத்தனமா?

இப்பொழுது தான் முதல் முறையாக உங்கள் எழுத்துக்களை படிக்கிறேன். நல்லா எழுதறீங்க.

Unknown said...

\\இன்னும் கொஞ்சம் டிப்ஸ் நானும் முகமூடி அண்ணாச்சி போல இலவசமாத் தரலாமுங்களா.

1. நீங்கள் பிராமண ஜாதியில் பிறக்க நேர்ந்து விட்ட பதிவராக இருந்து முற்போக்காளராகவும் இருந்து விட்டால் அந்தோ பரிதாபம். உங்கள் முற்போக்கை காட்ட முதலில் ஒரு முகமூடி (பதிவர் முகமூடி அல்ல) போட்டுக் கொள்ள வேண்டும். அதுக்கு ந்ல்ல பேரா சிலவற்றைப் பரிந்துரை செய்கிறேன் கேட்டுக்குங்க

முல்லை கசந்த்
மல்லிகை பசந்த்
சால சாரதி
ராட்சசன்
கொடூரன்
போணி
காலன்

என்று லட்சணமான பேரா பார்த்து வைச்சுக்கிடணும்

2. உங்கள் ஜாதி வெளியே தெரியாம பத்திரமா பாதுகாக்கணும். அதுக்காக ஈ வெ ரா வை விடவும், கீரமணியை விடவும், மஞ்சத் துண்டு மைனரை விடவும் ஒரு படி மேலாக போய் உச்ச கட்ட டெசிபலில் பாப்பானைத் திட்டி போஸ்ட் போடணும். பாப்பான் எல்லாம் தே பையன் என்று எழுதணும்

3. அதையும் மீறி நாலு வேலையத்த பயலுக உங்க ஜாதியைக் கண்டு பிடிச்சு மல்லிகை மசந்த் ஒரு ஐயங்கார், காலா காரதி ஒரு ஐயங்கார், மூர்க்கன் ஒரு ஐயர் என்று எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள். உடனே அது வரை உங்களுக்கு விசிலடிச்ச கும்பல் எல்லாம் செருப்பால் அடிக்கக் கிளம்பி வரும். உடனே ஐயோ ஐயோ கொல்றாங்களே ஸ்டைலில் இன்னும் உச்சஸ்தாயியில் பார்ப்பானைத்
திட்டணும். முன்பை விட தீவீரமா பாப்பானைத் திட்டினாத்தான் முற்போக்கு சர்ட்டிஃபிக்கேட்டை சந்தேக கேசாக ரினியுவ் பண்ணுவானுங்க இல்லாட்டி கஷ்டம்தான்

4. இருந்தாலும் கிழிஞ்ச முகமூடி கிழிஞ்சதுதான். இருந்தாலும் முற்போக்கைத் தக்க வைத்துக் கொள்ள அவனுங்க விரட்டுனாலும் ஓடாத சொறி நாயைப் போல காலுக்கடியிலேயே வாலாட்டிக் கிட்டுக் கிடந்தா ஆட்டைக்குச் சேத்துக்குவானுங்க. அப்புறமா பாப்பார நாயைச் செருப்பாலடி, குஞ்சை அறு, என்று சாமியாட்டம் ஆடினா கொஞ்சம் சேத்துக்கிட சான்ஸ் இருக்கு

எதுக்கும் டிரை பண்ணிப் பாருங்க

சுரேஷ் அடுத்து உங்க நடுநிலையை நிரூபிக்க இந்துத் தீவீரவாதிகளை கண்டிச்சு வழக்கம் போல ஒரு மொக்கை போடுங்க. உங்களுக்குச் சொல்லியா தரணும்? :) உங்களையும் மன்னிச்சு விட்டுடுவானுங்க :)//

Bleaching Powder அண்ணாச்சி, மேலே உள்ள உங்க டிப்சும் சூப்பரோ சூப்பர். அசத்திட்டிங்க போங்கோ.

manjoorraja said...

என்ன பின்னூட்டம் எழுதுவது என்றே தெரியலெ.

ஏற்கனவே சிலர் இதைப்பற்றி எழுதியிருந்தாலும் நீங்கள் பளிச் என எழுதியிருக்கிறீர்கள்.

We The People said...

தலைவா!

கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடற மேட்டரை விட்டுப்புட்டேளே!!!

:))))))))))))))

Anonymous said...

பெரும்பாலான பதிவுகளில் இருக்கும் ஆபாசத்தையும் வன்முறையைத் தூண்டும் வார்த்தைகளையும் கண்டு வெறுத்துப் போயிருக்கும் பெரும்பாலான பதிவர்களின் மனநிலையைத்தான் இந்தப்பதிவு எதிரொலிக்கிறது. நகைச்சுவை கலந்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...

//இது ஒரு சுயவாக்குமூலமோ //

ஹாஹாஹா,

இதுதான் உண்மை போலிருக்கிறது. :-)))

Anonymous said...

//நகைச்சுவை நோக்கத்திற்காக எழுதப்பட்ட பதிவின் ஆரம்ப வரிகள் சில பதிவர்களை புண்படுத்தியிருப்பதையும் காண முடிகிறது.//

பின்னூட்டங்களைப் பார்த்தால் பல பேரை குஷிபடுத்தியிருப்பது மாதிரியில்ல தெரியுது. இன்னொரு அனானி சொன்ன மாதிரி காணாம போன சூதுவாது தெரியாத குழந்தைகளையெல்லாம் கண்டுபிடிக்க உதவியிருக்கும் இந்த பதிவு பாராட்டப்பட வேண்டியது.

//எனவே எல்லாவற்றிற்குமாக சேர்த்து இன்னொரு விளக்கப் பதிவை (அடப்பாவி இன்னொரு பதிவா) எழுதலாமென்றிருக்கிறேன். எனவே அதுவரை சற்று பொறுமை காக்கவும்.//

இந்த மொக்கைக்கு இன்னொரு விளக்க மொக்கையா. வேணாம் வுட்ருங்க. அதுக்கு பதில் "நவீன இலக்கியவாதியாக பரிணமிக்க நாற்பது வழிகள்" என்று ஒரு ஆட்டோபயோக்ராபி பதிவு போட்டால் வலறும் எளுத்தாலர்களுக்கும், எலுத்தாளிணிகளுக்கும் பேருதவியாக இருக்கும்.

கோவி.கண்ணன் said...

முகமூடி பதிவை படிச்சது போல் இருக்கு :)

சீனு said...

முற்போக்குவாதிகளை கிண்டல் செய்ததால் இனி நீ 'ஆதிக்க சாதி வெறியர்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.

//இந்தியா ராக்கெட் விட்டதுக்கு மூனு பழமொழி இருக்கு.
1.கும்பி கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுததாம்.
2.பெருமைக்கு எருமை மேய்க்கிறது.
3.ஒய்யாரக்கொண்டையில தாழம்பூவாம்
உள்ளுக்குள் இருக்குமாம் ஈறும்,பேனும்.//

ம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க? 350 கோடிய சுருட்டிட்டு 5 கோடியில பேருக்கு நலத்திட்ட உதவிங்கிற பேருல அதுலயும் கொள்ளை அடிச்சிருப்பீங்க.

Anonymous said...

////இங்கிருந்து சோறு தின்னு கொண்டு , இந்தியாவின் மீது காறி துப்பும் இவர்களை உள்ளே தூக்கி போட்டு காயடித்தால் என்ன ?//

காயடித்தால் மட்டும் போதாது. வீதியில் கட்டி வைத்து சாகும் வரை சவுக்கால் அடிக்க வேண்டும்.

தறுதலை said...

சமசுகிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசுபவர்களும் அவர்களது கொட்டைதாங்கிகளும் வந்து இந்த நகைச்சுவை கட்டுரையை சீரீய கட்டுரையாக மாற்ற முயற்சிப்பது இன்னும் பல முற்போக்கு எழுத்தாளர்கள் வரவேண்டும் என்பதையே காட்டுகிறது.

----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

அத்திரி said...

நகைச்சுவை ஆங்காங்கே தெரிந்தாலும் யாரையோ மனதில் வைத்து சொல்லியிருக்கீங்க.

ரொம்ப கோபபடுறீங்க.. உடம்பு என்னாகும்.

ச.சங்கர் said...

:)))))

ILA (a) இளா said...

கலக்கல் பதிவுங்கண்ணா!

புதுகை.அப்துல்லா said...

அய்யய்யோ நா ஒடியே போயிடுறேன். நம்ப மாதிரி மொக்கச்சாமி இங்குட்டெல்லாம் வரவேகூடாது :))))

வால்பையன் said...

கலக்கலா இருக்கு
நானும் முற்போக்கு சிந்தனைவாதியாக முயற்சி பண்றேன்.

Anonymous said...

நல்ல பதிவு. நல்ல நடை. இன்னும் தமிழ் இன உணர்வு கொள் ( இந்த மாதிரி கருத்துக்களை பேசுகிறவர்கள் "கொல்" என்று தன் உச்சரிப்பார்கள்) எல்லாம் விட்டு விட்டீர்களே! வலையில் வந்தும் இழவைக்கூட்டும் இவர்களை என்ன செய்ய, -குப்புக் குட்டி

சாணக்கியன் said...

/*உங்கள் ஆழ்மனதின் ஒப்பனை செய்யப்படாத எண்ணங்களை இலக்கிய மொழியின் சாயலோடு வடிவமைத்து கலக வார்த்தைகளில் பதிவு செய்வதே முற்போக்கு எழுத்தின் பாலபாடம்.*/

இந்த கோபம்+காமடி பதிவிலும் இப்படி ஒரு நடையா. சூப்பர்.

Anonymous said...

:-))))

ரசித்தேன். சிரித்தேன்.

Anonymous said...

:-))))

இப்பத்தான் படிச்சென். நல்ல நகைச்சுவை.

Anonymous said...

பதிவு நல்லா இருந்தது. மி்ச்சப் பாயிண்டுகளையும் எப்போ எழுதப் போறீங்க?

Anonymous said...

கொன்னூட்டிங்க. :-))

என்ன இல்ல. போலி முற்போக்குவாதிகளை.

Anonymous said...

its reaminds me a person called "Tamil vananan" ( MASTER OF ALL SUBJECTS )

Your friend
பிச்சை

deesuresh said...

:))

deesuresh said...

:))அருமை..!!

deesuresh said...

:))

Anbuselvan said...

வணக்கம் சுரேஷ் கண்ணன்,

தமிழ் ஓர்குட் குழுமத்தில் நண்பர் ஒருவர் உங்கள் தளத்தை அறிமுக படித்தினார்.

சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

கொஞ்சம் நீண்ட கட்டுரை தொடர்ந்து படிக்கும் படி எழுதி இருந்தீர்கள்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழுத்தாணியை 'yow'ணி வரைக்கும் பாய்ச்சும் திறைமை வயிற்றுபோக்கு!!

தக்காளி சூப்பர்!!!!