Tuesday, June 02, 2009

சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி

கடந்த பாராளுமன்ற தமிழக தேர்தல் முடிவுகள் எல்லோரையும் போலவே எனக்கும் சற்று ஆச்சரியத்தைத்தான் தந்தது. திமுக கூட்டணி இத்தனை இடங்களில் வெல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினையைத்தான் மக்கள் பிரதானமாக எடுத்துக் கொள்வார்கள் என்று பல அரசியல் மேதாவி பதிவர்கள் தேர்தலுக்கு முன்னர் 'அருள்வாக்கு' கூறியிருந்தனர். சிலர் இன்னும் ஒருபடி மேலேயே போய் 'திமுக கூட்டணியை தோற்கடிப்பதே பிரதான அஜெண்டா என்றும் ஜெ. ஈழத்துக்கு ஆதரவாக தம் போக்கை மாற்றிக் கொண்டதனால் அதிமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்' என்றும் காமெடி செய்து கொண்டிருந்தனர். ஆனால் 'ஈழத்தை' வாங்கிக் கொடுக்க ஜெ. இப்போது கொடநாடு போயிருக்கும் சூழ்நிலையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தத் தேர்தலில் மக்கள் ஈழப்பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்று நான் யூகித்திருந்தேன். பொருளாதார பின்னடைவு, பெரும்பாலான பணியிழப்பு, விலைவாசியேற்றம்.. என்று உள்ளுர் பிரச்சினைகளே அதிகமிருப்பது ஒரு காரணம். ஈழப்பிரச்சினையை உணர்ச்சிரீதியாகயன்றி எந்தவொரு அரசியல்வாதியும் தமிழ் அமைப்பும் மக்கள் முன் சரியான முறையில் கொண்டு செல்லவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினையை அரசியல்வாதிகள் தங்களின் வாக்கு பெறுவதற்கான வாய்ப்பாக மாத்திரமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இங்குள்ள 'வாய்ப்பேச்சு' அரசியல்வாதிகளால் இந்தப் பிரச்சினையை எந்நாளும் தீர்க்க முடியாது அல்லது தீர்க்க விரும்பவில்லை என்பதையும் அவர்கள் தெளிவாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக மக்கள் பெரும்பாலோனோரிடம் அனுதாபம் இருக்கிறது. அன்றாட உரையாடலில் இதை நான் எங்கும் காண முடிகிறது. கூடவே புலிகள் குறித்தான எதிரான மனவோட்டமே அதிகம் இருக்கிறது. ஆதரவு கொஞ்சம்தான். அரசியல்ரீதியிலான ஒவ்வொரு தீர்வையும் புலிகள் முர்க்கமாக மறுத்தது குறித்தும் ஆயுத ரீதியிலான போராட்டம் ஒன்றையே பிரதானமாக நம்புவது குறித்தும் பொதுவான அதிருப்தி நிலவுகிறது. ஈழப்பிரச்சினை பற்றிய முற்றிலும் சரியானதொரு பார்வையை இலங்கையிலுள்ள நடுநிலை மனப்பான்மை உள்ள தமிழர்கள்தான் தரமுடியும் என்று நான் நம்புகிறேன். (தருவதற்கான சூழல் இருக்கிறதா என்பது இன்னொன்று). மாறாக தமிழகத்தில் அதைப்பற்றி யார் என்ன பேசினாலும் அது யானையும் குருடர்கள் கதையைப் போலத்தான்.

()

ஜனநாயகம் என்பதின் அடிப்படையே சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள மனிதனும் அதிகாரப் போட்டியில் நுழையும் வாய்ப்பை பெறமுடியும் என்பதுதான் என்றாலும் தமிழகத்தின் சார்பில் அமைச்சர்களாகியிருப்பவர்களை குறித்து யோசிக்கிறேன். குடும்பத் தகராறில் எதிராளியின் பத்திரிகை அலுவலகத்தை சூறையாடி மூன்று பேரின் மரணத்திற்கு காரணமான 'தீயசக்தி' ஒரு அமைச்சர் என்றால், தலைமைப்பீடத்திடம் தாம் கொண்டிருக்கும் உறவிற்கு ஏற்ப தம்மிடமுள்ள ஊடக சக்தியை துஷ்பிரயோகம் செய்யும் இன்னொரு 'தீயசக்தி' இன்னொரு அமைச்சர். திமுகவில் அமைச்சராகும் தகுதியோடு இருப்பவர்கள் வேறு எவருமே இல்லையா என்ற கேள்வி எழுவதோடு அப்படி அமைச்சராக வேண்டுமென்றால் தலைமைப்பீடத்தின் ஏதாவது ஒரு துணைக்கு உறவினராக இருக்கும் முக்கிய தகுதியும் வேண்டுமென்றும் தெளிவாகவே தெரிகிறது. இனி 'தமிழ்நாட்டு நலன்' என்பதை "கோபாலபுரத்து நலன்' என்று பொருள் கொள்ளலாம். போரை நிறுத்த வேண்டுமென்றால் பக்கத்திலிருக்கும் கடற்கரையில் ஏர்கூலருடன் உண்ணாவிரதமிருப்பதும், சொந்தபந்தங்களுக்கு அமைச்சர் பதவியென்றால் விந்தி விந்திக் கொண்டாவது டெல்லிக்கு தவழ்ந்து செல்வதும்.. இப்படிப்பட்டவர்களை இன்னும் தமிழின தலைவர் என்று சிலர் நம்பிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

()

இந்தத் தேர்தலின் போது வழக்கமான இன்னொரு காமெடியும் நடந்தது. தமிழ்நாட்டின் ஒரே "சூப்பர் ஸ்டார்" வாக்களித்து விட்டு வெளியே வந்தவுடன் பொழப்பில்லாத நிருபர்கள் "நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க" என்று அந்த பிரகஸ்பதியிடம் கேட்க அந்த ஆன்மீகச் சூரியன் வானத்தை நோக்கி விரலை சுட்டியதாம். எந்தக் கண்றாவி நின்றாலும் இந்தக் கண்றாவி நிற்காது போலிருக்கிறது.

suresh kannan

29 comments:

இராம்/Raam said...

//"சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி"//

ஹி ஹி... சூடான இடுகைகளுக்கு வர்ற அளவுக்கு தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டிங்க போல.. :)

சென்ஷி said...

இதுக்குப்பேருதான் அரசியல் மொக்கையா :-))

லைட்டா சூடு கிளப்புறீங்கன்னு நினைக்குறேன்!

Unknown said...

//பொழப்பில்லாத நிருபர்கள் "நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க" என்று அந்த பிரகஸ்பதியிடம் கேட்க அந்த ஆன்மீகச் சூரியன் வானத்தை நோக்கி விரலை சுட்டியதாம். எந்தக் கண்றாவி நின்றாலும் இந்தக் கண்றாவி நிற்காது போலிருக்கிறது//

நெத்தியடி............

கிரி said...

//இராம்/Raam said...
//"சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி"//

ஹி ஹி... சூடான இடுகைகளுக்கு வர்ற அளவுக்கு தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டிங்க போல.. :)//

ஹா ஹா ஹா சுரேஷ் ஆரம்பித்த நேரம் சூடான இடுகையையே தூக்கிட்டாங்க போல

இருந்தாலும் உங்க பதிவில் கூறியபடி ஆரம்பித்துட்டீங்க போல..நடத்துங்க நடத்துங்க ;-)

Thamira said...

போரை நிறுத்த வேண்டுமென்றால் பக்கத்திலிருக்கும் கடற்கரையில் ஏர்கூலருடன் உண்ணாவிரதமிருப்பதும், சொந்தபந்தங்களுக்கு அமைச்சர் பதவியென்றால் விந்தி விந்திக் கொண்டாவது டெல்லிக்கு தவழ்ந்து செல்வதும்.. இப்படிப்பட்டவர்களை இன்னும் தமிழின தலைவர்//

எவ்வளவு வக்கிரமான எழுத்துகள்..
வருந்துகிறேன்.

(நான் யாருக்குமே இவ்வளவு வருத்தத்தில் பின்னூட்டமிட்டதில்லை. நான் திமுகவைச்சார்ந்தவனா? அல்லவா? என்பதையெல்லாம் தாண்டியும் இதை என்னால் கூறமுடியும். நீங்கள் கூறியது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் சிறிய குழுவாகவே இருப்பினும் கொஞ்சம் மக்களாவது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு மனிதரை அவரின் தள்ளாமையை கேலி செய்யும் இந்த வரிகள் உங்களின் உள்மன ஆசையின் வெளிப்பாடு என்றே நான் கருதுகிறேன். மாற்றுக்கருத்துகளுக்கான இடம் எப்போதுமே தவிர்க்கமுடியாதது. யாராலும் அதை இல்லாது செய்துவிடவும் முடியாது. ஆயினும் ஒருவரை கருத்துகளில் ஜெயித்துவிடமுடியாத போது அவரை நோக்கி வன்சொல் கூறி மகிழ்ந்திருக்கிறேன். இதுவும் அதைப்போலத்தான் இருக்கிறது.)

Thamira said...

--

பிச்சைப்பாத்திரம் said...

ஆதிமூலகிருஷ்ணன்:

அவரின் தள்ளாமையை எள்ளி நகையாடுவது என் நோக்கமல்ல. அது கீழ்தரமானது என்பதையும் நான் அறிவேன். அதிகாரத்தைப் பெற எடுக்கும் தீவிர முயற்சியில் சிறிதளவைக் கூட 'உலகில் வாழும் அத்தனை தமிழர்களுக்கும் தலைவர்' என்று கருதப்படுபவர் எடுக்கவில்லையே என்பதுதான் என் வேதனை. ஒரு காலத்தில் எவ்வளவு ஆவேசமாக இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னெடுத்துச் சென்றார். அவ்வளவும் தமிழக அரசியலில் தம்மை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளச் செய்த நாடகமோ என்று இப்போது தோன்றுவதால் எழுந்த கொதிப்பு அது.

என்றாலும் உங்களின் பார்வையில் இது வக்கிரமான எழுத்தாக தெரிந்தால் அதற்காக வருத்தத்தைத்தான் தெரிவிக்க முடியும்.

ஜோ/Joe said...

உம்மைப் போன்றோரின் கேவலமான இழிசொற்கள் தான் அந்த 86 வயது கிழவரின் மேல் கோபம் இருந்தாலும் எதிர்த்து நிற்பவர்களின் யோக்கியதைக்கு இவரே பரவாயில்லை என அவர் பக்கம் பலரை சாய வைக்கிறது.

Anonymous said...

இங்கு கலைஞர் குறித்தி உணர்ச்சிவசப்படுபவர்கள் அவர் வயது பற்றி அதிகம் யோசிக்கும் அளவிற்கு இலங்கையில் குண்டு மழையில் சதைத்துணுக்குளாக தெறிக்கும் ஒரு சிறுவன் பற்றி யொசிப்பதில்லை. தன் வயது பற்றித்தான் அவர் ஒவ்வொரு தேர்தலிலும் 'இதுதான் கடைசி' என்று சாதகமாக யபன்படுத்திக் கொள்கிறார். பாவம் தமிழர்கள்.

ஜோ/Joe said...

//இங்கு கலைஞர் குறித்தி உணர்ச்சிவசப்படுபவர்கள் அவர் வயது பற்றி அதிகம் யோசிக்கும் அளவிற்கு இலங்கையில் குண்டு மழையில் சதைத்துணுக்குளாக தெறிக்கும் ஒரு சிறுவன் பற்றி யொசிப்பதில்லை.//
ஆமய்யா ..யோசிப்பதில்லை .கருணாநிதியை சதா திட்டுறவங்களுக்கு மட்டும் தான் எப்போதும் ஈழத்தமிழர்கள் பற்றி தான் சதா சிந்தனை..அப்படியா?

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது நாடகம் என்று சொல்லட்டும் .அதில் கூட எனக்கு ஒன்றும் மறுப்பு இல்லை ..ஆனால்

//கடற்கரையில் ஏர்கூலருடன் // என்றால் என்ன அர்த்தம் ? பின்ன அவர் ஊட்டுக்குள்ள இருந்தா இவர் ஒத்துக்குவாரா என்ன ? மக்கள் மத்தியில் தெருவிறங்கி போராடினாரா என கேட்பார் இவர் .. 86 வயது முதியவர் முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்தவுடன் வந்து உக்காரும் போது ஏர்கூலர் வைத்தார்கள் ..அதற்கு என்ன இப்போ ? ஏர்கூலர் வைக்காவிட்டால் மட்டும் அவர் உண்ணாவிரதத்தை இவர் ஏற்றுக்கொள்ள போகிறாரா என்ன?

Anonymous said...

/"சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி"//
இதை சொல்லவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கு

Athisha said...

இப்படிலாம் நீங்க நல்ல நல்ல பதிவுலாம் போடற நேரம் பாத்துதான் தமிழ்மணத்தில சூடான இடுகைய தூக்கணுமா

ஹரன்பிரசன்னா said...

//இந்தத் தேர்தலில் மக்கள் ஈழப்பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்று நான் யூகித்திருந்தேன். பொருளாதார பின்னடைவு, பெரும்பாலான பணியிழப்பு, விலைவாசியேற்றம்.. என்று உள்ளுர் பிரச்சினைகளே அதிகமிருப்பது ஒரு காரணம்.//

நீங்கள் யூகித்ததும் தவறு என்றாகிவிட்டது போலிருக்கிறதே! மக்கள் ஈழப்பிரச்சினையையும், சொந்தப் பிரச்சினையையும் கண்டுகொள்ளவில்லை என்றாகிறது! கடைசியில் என்னத்தைத்தான் கண்டுகொண்டார்கள்?

Anonymous said...

மக்களாவது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு மனிதரை அவரின் தள்ளாமையை கேலி செய்யும் .........

கேவலமான இழிசொற்கள் ......

அந்த 86 வயது கிழவரின் .....


Hope all its coming back....Karunanidhi did for Kamaraj, Kakkan, Rajaji and so many....Even recent when Duraimurugan immitated he didnot condemn.....So all the words are not bad for Karunanidhi .

This is my opinion

Kural:- Mutpagal seyyin pitpagal thane varum

குப்பன்.யாஹூ said...

u too started saying like cnnibn and ndtv that I only predicted correct, rest all in the world predicted wrong.

in this election no one predicted correct (including me).

the predictions by cnn ibn, ndtv, malan, nakkeeran, dinamalar, vikatan, myself, senthalil ravi, lakkilook, sudhangan all went wrong,. all predicted 3rd front will get 100 seats.

dont change yr words now. The entire tamil blog world has propogated that cong to be defeated etc.

but nothing has happened.

In fact 1 blogger (i forgot his name) has only written (3 days b4 elections)that after the election no one bother about eelam or solam.

I didn't expect this from u.

with regrets
kuppan_yahoo

பாலகுமார் said...

//அந்த ஆன்மீகச் சூரியன் வானத்தை நோக்கி விரலை சுட்டியதாம். எந்தக் கண்றாவி நின்றாலும் இந்தக் கண்றாவி நிற்காது போலிருக்கிறது. //

நல்லா சொன்னீங்க சுரேஷ்...

கடைசி வரை அவர் இதை தான் சொல்வார்..நம் மக்களும் இதை தான்...

Venkat said...

Suresh,

I absolutely second your comments on MK and Rajnikanth. Leave alone Srilankan Issue – on what issues did he take a firm stand and worked to the people’s benefit?

When it comes to sharing/tasting power, he ensures that he flies/rolls to Delhi with the “family” and stays there – ensures that he gets what he wants and hands over to all those “power centers” at home.

If a person is in public life – he must be ready to take on such criticisms. I do not understand why we should not criticize MK. As long as we stay away from his personal life, anything else should be questioned.

The same MK, when state was burning on Hogenakkal issue – what was he doing? Did he travel down to Delhi and explained to Central authorities that the project is imperative to that district?
Things he did at that time made everyone a joker. People in that Dharmapuri/Krishnagiri district are having skin problems because the water available in that area is bad. Does anyone care here?

When TN people were suffering from Chikungunya, his administration consistently lied to the public that the disease condition does not exist in the state. Power Cuts is rampant and as usual Arcot Veerasami consistently lied to the public that there is no power cut and accepted it finally when magazines started writing about it…
Of course the Madurai “Dinakaran” issue – you had mentioned it very well… Both the families are enjoying the power… so the problem is solved. The same folks who cried for justice for Dharmapuri Bus burning incident – why are they not crying for justice in this case? Why there is a deafening silence?

For construction of Rama Sethu bridge – did MK or Baalu or anyone in favor of the project – ever come up a white paper on how that will benefit the state, leave alone Tuticorin people? All they claimed was nonsense, insinuations on religion etc. How can you achieve what you want by defaming religion? Does his experience not teach him that messing with religion makes the issue more complicated than otherwise?
Questions like – the benefits are not great for the ships taking this route compared to the conventional roundabout route was never addressed and no journalist in this country dared to ask these politicians.

Finally, I am not an AIADMK supporter. But in my opinion, we need to alternate between AIADMK and DMK till we get a credible alternative. Otherwise – continuously giving power to AIADMK or DMK will only give the ruling party a feeling that they can perpetrate what they can and people will keep re-electing them.
No matter what – both the parties WILL LOOT the state and its coffers.

As long as we as people vote on caste based, religion based, region based, and party based rather than governance based – these curses will continue. We get what we deserve – nothing more and nothing less.

For me it does not matter whether JJ or MK rules the state – it is important that these party leaders understand that if they do not deliver – they will be thrown out by people.

thanks

Venkat

மோகன் கந்தசாமி said...

////கடைசியில் என்னத்தைத்தான் கண்டுகொண்டார்கள்?////

அது அவருக்கு தெரியாது நண்பரே! அவர் என்ன பதிவுலக மேதாவியா? பதிவின் தலைப்பை பார்த்தாலே தெரியவில்லையா, இது ஒரு மிகை உணர்ச்சியற்ற மொன்னையான பதிவென்று! இங்கு வந்து சூட்டைக் கிளப்புகிறீர்களே! பிறகு பற்றிக்கொண்டுவிட்டால் மக்கள் என்னத்தை கண்டு கொண்டார்கள் என்று கண்டு பிடித்து சொல்லிவிடுவார். ஊடகங்களுக்கு தலைப்புச்செய்தியை கொடுத்துவிடாதீர்கள். வீண் பரபப்பை தவிர்ப்போம்!. மொன்னைப் பதிவுகளை வளர்ப்போம்!

Mouthayen Mathivoli said...

இந்தத் தேர்தலின் போது வழக்கமான இன்னொரு காமெடியும் நடந்தது. தமிழ்நாட்டின் ஒரே "சூப்பர் ஸ்டார்" வாக்களித்து விட்டு வெளியே வந்தவுடன் பொழப்பில்லாத நிருபர்கள் "நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க" என்று அந்த பிரகஸ்பதியிடம் கேட்க அந்த ஆன்மீகச் சூரியன் வானத்தை நோக்கி விரலை சுட்டியதாம். எந்தக் கண்றாவி நின்றாலும் இந்தக் கண்றாவி நிற்காது போலிருக்கிறது.
"உண்மையிலேயே இது தான் அல்டிமேட்" இவன்களுக்கு உரைக்கவே உரைக்காது !
முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்

வினோத்குமார் said...

இந்த சூப்பர் ஸ்டார் பேட்டிய உட மாட்டானுங்களே.....

அவரு பாவம் எப்ப பார்த்தாலும் ஒரு விரல தூக்கறாரு.....

பேசாம அவருக்கு ஒரு விரல் ரஜினிகாந்த்னு தலைப்பு வைக்கலாம்...

Anonymous said...

/"சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி"//
இதை சொல்லவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கு

Ravindran said...

அப்பாடா...

எலக்ஷன் முடிஞ்சவுடனே நாம அப்படி கணிச்சோம் இப்படி கணிச்சோம்னு ஒரு பதிவு போட்டுக்கிட்டாச்சு..

Anonymous said...

"
இந்தத் தேர்தலின் போது வழக்கமான இன்னொரு காமெடியும் நடந்தது. தமிழ்நாட்டின் ஒரே "சூப்பர் ஸ்டார்" வாக்களித்து விட்டு வெளியே வந்தவுடன் பொழப்பில்லாத நிருபர்கள் "நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க" என்று அந்த பிரகஸ்பதியிடம் கேட்க அந்த ஆன்மீகச் சூரியன் வானத்தை நோக்கி விரலை சுட்டியதாம். எந்தக் கண்றாவி நின்றாலும் இந்தக் கண்றாவி நிற்காது போலிருக்கிறது "

You stupid man, do not tell any thing about our thalaivar SS.

He never cheat peoples.

What you peoles are thinking about our SS ?

Anonymous said...

/"சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி"//
இதை சொல்லவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கு

Anonymous said...

"
இந்தத் தேர்தலின் போது வழக்கமான இன்னொரு காமெடியும் நடந்தது. தமிழ்நாட்டின் ஒரே "சூப்பர் ஸ்டார்" வாக்களித்து விட்டு வெளியே வந்தவுடன் பொழப்பில்லாத நிருபர்கள் "நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க" என்று அந்த பிரகஸ்பதியிடம் கேட்க அந்த ஆன்மீகச் சூரியன் வானத்தை நோக்கி விரலை சுட்டியதாம். எந்தக் கண்றாவி நின்றாலும் இந்தக் கண்றாவி நிற்காது போலிருக்கிறது "

உன் ப்லோக் பெயர் என்னவோ அது தான் நீயும் டுபுக்கு, தலைவர் பற்றி சொல்வதற்கு உனக்கு என்ன அருகதையும் கிடையாது .

malar said...

கருணாநிதியை ஏளனம் செய்தது ரசிக்கும் படியாக இல்லை.

malar said...

//////'உலகில் வாழும் அத்தனை தமிழர்களுக்கும் தலைவர்' என்று கருதப்படுபவர் எடுக்கவில்லையே என்பதுதான் என் வேதனை. ஒரு காலத்தில் எவ்வளவு ஆவேசமாக இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னெடுத்துச் சென்றார். அவ்வளவும் தமிழக அரசியலில் தம்மை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளச் செய்த நாடகமோ என்று இப்போது தோன்றுவதால் எழுந்த கொதிப்பு ////


ஈழப்பிரச்சனை ஒரு ஆள் மட்டும் முயற்சி செய்தால் மட்டும் நடவாது.கருணாநிதி பதவி போனாலும் ஆட்சியை விட்டு வெளியில் வந்தாலும் ஈழப்பிரச்னை முடயுக்கு வராது .
25 வருடமாக நடக்கும் பிரச்சனைக்கு தேர்தல் சமயத்தில் மட்டும் போர்கொடிதுக்கியவ்ர்களை உங்கள் பதிவில் ஒன்றும் சொல்ல வில்லை .தற்போது அவர்களை காணவும் இல்லை.அப்போ இதில் யார் செய்தது நாடகம் ?

மயிலாடுதுறை சிவா said...

கலைஞரை விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்கள் எழுத்தின் தோரணை நன்கு இல்லை!

என்னால் நம்பவே முடியவில்லை நீங்கள்தானா என்று!

வருத்ததுடன்
மயிலாடுதுறை சிவா...

வருண் said...

***இராம்/Raam said...
//"சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி"//

ஹி ஹி... சூடான இடுகைகளுக்கு வர்ற அளவுக்கு தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டிங்க போல.. :)***

Yeah, suresh kannan stinks to get into hot trash topics!

What is the difference between the media and "suresh கண்றாவி"'s trash can?

Both are using super star for running their lowlife!

Your trash can stinks as bad as the media!

I am glad the hot trash topics has been removed so that he cant make the TM to stink like his trashcan!