Friday, January 21, 2011

மசாலா (MIRCH) சினிமா

உலகத்தின் பெரும்பாலான ஆண்மக்களுக்கு தங்கள் மனைவியின் கற்பு குறித்து ஒரு துளி ஐயமாவது இருக்கும்.(உடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் வம்பு பேச்சைக் கேட்டு ராமன் சீதையை தீக்குளிக்கச் சொன்னதாக புராணக் கதை சொன்னாலும் ராமனுக்கே உள்ளூற அந்தச் சந்தேகம் இருந்திருக்கும்). உள்ளார்ந்த நெருப்பு போல் இருக்கும் இந்த அவநம்பிக்கையை சமயங்களில் விளையாட்டாகவும் சண்டைகளின் போது எதிராளியைத் தாக்கும் ஆயுதமாகவும் சிலர் இதை தீவிரமாக நம்பி எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்கள் அநேகம். மனித குலத்தின் ஏதோ ஒரு பரிணாமக்கட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த கற்பு எனும் கற்பிதம் கணவன்-மனைவி சச்சரவுகளுக்கு (இரு சார்பிலும்) ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து காரணமாக இருந்து வருகிறது. 'ஒரு குழந்தையின் தகப்பனை அதன் தாயால்தான் சொல்ல முடியும்' என்பதை விருப்பமில்லாவிட்டாலும் நாம் நம்புகிறோம். ஆனால் அவ்வாறு தாயால் கூட சொல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். இதை மறுக்க விருக்க விரும்பவர்கள், தாராளமாக தங்களின் பாசாங்கைத் தொடர்வதில் எனக்கொன்றும் ஆட்சேபமில்லை.

நான் என் மனைவியிடம் விளையாட்டுத்தனமாக ஒரு முறை  'யார் குழந்தைக்கோ நான் எதுக்கு ஸ்கூல் ஃபீஸ்' கட்டணும்' என்றேன். 'இப்படில்லாம் சந்தேகப்படுவீங்கன்னுதான் ரெண்டுமே உங்களையே உரிச்சு பொறந்திருக்கு' என்றாள் பொய்க் கோபத்துடன். 'யாருக்குத் தெரியும்? என் அண்ணன் கூட என்னை மாதிரித்தான் இருக்கான்" என்றேன் சீண்டலாக. 'சீ.. உங்க ஆம்பளைப் புத்தியில தீய வெக்க' என்றாள் சீற்றத்துடன். 'என்ன பேசணும்னு வெவஸ்தையே கிடையாதா?'. நல்ல வேளையாக அது விளையாட்டாகவே முடிந்து விட்டது.

ஒரு பெண் கற்பு எனும் மாய வளையத்தை தாண்ட முடிவு செய்து விட்டால், எந்த ஆணாலும் அவளைத் தடுத்து நிறுத்தி விட முடியாது. மிகத்தந்திரமாக அவள் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தமக்கு போதிக்கப்பட்ட  ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் பல பெண்கள் இதைத் தாண்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஆணோ தான் மந்திரித்துக் கட்டின ஒரு கயிற்றினால்தான் அவள் தன்னிடமே இருக்கிறாள் என்று அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறான். 
                                       

 MIRCH (2010) என்கிற இந்தி திரைப்படம், இந்த உளவியல் உண்மையை நகைச்சுவையாக முன் வைக்கிறது. 'அது எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்தலாம்?' என்று பெண்ணியவாதிகள் கோபமும், 'இவளும் இப்படி இருப்பாளோ?' என்று ஆணியவாதிகள் மேலதிக சந்தேகமும் கொள்ளக்கூடிய சாத்தியங்களை இந்தப்படம் ஏற்படுத்துகிறது. கணவனின் கண்முன்னேயே உறவு கொண்டு அவனை தந்திரமாக ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டு நான்கு குறும்படங்களினால் இத்திரைப்படம் கட்டப்பட்டிருக்கிறது.

நல்லதொரு சினிமாக்கதையை வைத்துக் கொண்டு பலவருடங்களாக வாய்ப்புக்காக போராடி வரும் ஒர் இளைஞன், அது தொடர்ந்து நிராகரிக்கப்படுவதினால் நொந்து போகிறான். திரைத்துறையில் எடிட்டராக பணிபுரியும் அவனுடைய தோழி அவ்வப்போது இவனைத் தேற்றி வருகிறாள். தனது செல்வாக்கினைக் கொண்டு ஒரு தயாரிப்பாளரிடம் அழைத்துச் செல்கிறாள். இவனுடைய கதை நன்றாக இருந்தாலும், அது விற்பனைக்கு உகந்ததாக இல்லாததால் மழுப்பலாக நிராகரிக்கிறார் தயாரிப்பாளர். வெறுப்புறும் இவன், திடீரென தீர்மானித்து காமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புராதனக் கதையை சொல்கிறான். ஈர்ப்புறும் தயாரிப்பாளர், இன்னும் விவரிக்கச் சொல்கிறார். பஞ்சதந்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட புராதனச் சூழலில் இரண்டு கதைகளையும் சமகால நாகரிக உலகத்தில் இரண்டு கதைகளையும் இயக்குநன் விவரிப்பதாக படம் நீள்கிறது. நான்கு கதைகளும்.

இந்த நான்கு கதைகளுக்கும் இயக்குநருக்கும் அவனுடைய தோழிக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு முடிச்சை இட்டு படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் வினய் சுக்லா. சிறப்பான திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான திரைப்படம் என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். பஞ்சதந்திரக் கதைகளின் அடிப்படையில் அமைந்த படத்துண்டுகள், இயற்கையான பின்னணியில் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. சமகால கதைகளில், கணவன் வேடமிட்டு வரும் கதையின் நகைச்சுவையான முடிவு எனக்குப் பிடித்திருந்தது. கொன்கனா சென் சர்மாவும் ரெய்மா சென்னும் தலா இரு குறும்படங்களில் நடித்திருக்கிறார்கள். ரெய்மா சென் சில பிரேம்களில் தேவதை போன்ற பேரழகுடன் பிரமிக்க வைத்திருக்கிறார்.

பெண்களின் புத்திசாலித்தனமும் ஆண்களின் அசட்டுத்தனமும் மீண்டுமொரு முறை இத்திரைப்படத்தினால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புள்ள பதிவு:


 
suresh kannan

11 comments:

ஜோதிஜி said...

ரொம்ப வெள்ளந்தியாக எழுதியிருக்கீங்க.

Kaarthik said...

//தமக்கு போதிக்கப்பட்ட ஒரு தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் பல பெண்கள் இதைத் தாண்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஆணோ தான் மந்திரித்துக் கட்டின ஒரு கயிற்றினால்தான் அவள் தன்னிடமே இருக்கிறாள் என்று அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறான்// - Well said :-)

Anonymous said...

The question which you asked to your wife is giving me creeps?I dont know how your wife tolerated that? how can you say that everyone would be having some suspicion about their spouse? If anyone suspects his wife,then immediately he should come out of the relationship. Right now I am a bachelor,In the future I assure that I wont suspect my wife even a bit. This post is very bad and just driving me crazy.The biggest gift a husband can give to his wife is the trust.please change your attitude. Dont take it in a advising note,Take it in a lighter and friendly note...

Anonymous said...

Even if you want to make yr mark perfect on the point you are making ,how can you drag your wife into this.

absolutely pointless.

Ashok D said...

//ரெய்மா சென் சில பிரேம்களில் தேவதை போன்ற பேரழகுடன் பிரமிக்க வைத்திருக்கிறார்//
ம்ம்ம்ம்ம்....ஹு....

H@RRY said...

There are two ways you can write a social oriented theme. One, you observe something, see the same pattern all around you and then come to a conclusion (external). Other one is come to a conclusion based on your own internal thinking process and feeling. Its very clear that you have used the latter, to make some points about men in general and their attitude towards women. Nothing wrong with that per se, but when somebody is so perverted and abnormal from the society itself, its possible that he/she foists his perverted/psychotic ideas on the whole world. Just like how a murderer justifies a killing.

Not only stopping with that, you have gone one step further by stressing on the traditional 'virginity is for women' concept. This can be seen all over this essay.

As a strong believer in tolerance and free speech, I will not say do not write like this or that. But I would say only one thing - You are not this society. If you are mentally perverted, everybody need not be like the same.

Anonymous said...

இரண்டு வருடங்கள் ப்ளாக் படித்து வருகிறேன் . இதுதான் என் முதல் பின்னூட்டம் .
சாரி., எழுத வைத்து விட்டீர்கள் . உங்கள் மனைவியிடம் நீங்கள் பேசியது ,
போதும் சார் .. இனி உங்கள் ப்ளாக் பக்கமே வர மாட்டேன் . இனி காருண்யத்தை பற்றி நீங்கள் பேச கூடாது .

குரங்குபெடல் said...

வழக்கத்திற்கு மாறாய் . . .
படத்தைபற்றி குறைவாகவும்
வேறு சில விஷயங்கள் பற்றி அதிகமாகவும்
குறிப்பிட்டுள்ளீர்கள் என்று தோன்றுகிறது . . .

தவிர்த்திருக்கலாம் . . .

ஆனால் . . . நீங்கள் எழுதக்கூடிய விஷயங்களை
நான் தீர்மானிக்கமுடியாதே . . .! ?

நன்றி

bandhu said...

உங்கள் எழுத்துக்களில் இது தான் லோ பாயிண்ட்! H@ARRY கருத்தை முழுமையாக ஒத்து கொள்கிறேன்!

Anonymous said...

Completely nonsense....

N.Parthiban said...

அன்புள்ள சுரேஷ்கண்ணன்,



இதுவரை உங்கள் தளத்தில் நான் எதுவும் எழுதியதில்லை( ஆனால் உங்களை தொடர்ந்து படித்து வருபவன்) உங்கள் தளத்தில் என்று இல்லை எங்குமே என்றும் வைத்துக்கொள்ளலாம்...ஆனால் இன்று இங்கு எழுத வேண்டியது என் கடமையாகிவாது...இங்கே கருத்து தெரிவித்துள்ள பலரும் என்னவோ தாங்கள் தான் உலகத்திலேயே நல்லவர்கள் போலவும் நீங்கள் தான் மோசமானவர் போலவும் எழுதியுள்ளனர்...இதில் உங்கள் மனைவி மேல் உங்களை விட அதிக அக்கறை, கருணை, பாசம் வேறு காட்டியுள்ளனர் சிலர்...அவர்கள் அனைவரும் ஒன்று பொய் சொல்பவர்களாக இருக்க வேண்டும் இல்லை வாழ்கையை வாழ ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும்...நண்பர்களே, சுரேஷ் நீங்கள் சொல்வது போன்றவராய் இருப்பின் இங்கே அந்த விஷயத்தை பற்றி எழுதி இருக்க மாட்டார் அல்லது அவரை பற்றிய உங்களின் எதிர்வினையை வெளியிட்டிருக்க மாட்டார்...மனம் ஒரு குரங்கு அது ஒரு நிலையாக இருப்பதில்லை...அதனால் தான் நிரந்தர நல்லவனும் இல்லை நிரந்தர கெட்டவனும் இருப்பது இல்லை...எல்லாருமே ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு நிலை எடுக்கிறோம்...காமெடி என்று சிரிக்கும் ஒரு கமெண்ட் வேறொரு மனநிலையில் நம்மை கோபமடைய செய்வதை பார்த்திருக்கிறோம்...மனைவியை சந்தேகபடாத கணவனும், கணவனை சந்தேகபடாத மனைவியும் இருப்பதே இல்லை...அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று பொருள். அதற்காக அவர்கள் நிரந்தரமாக சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றல்ல இட்ஸ் ஜஸ்ட் எ பாசிங் கிளௌட்....சுரேஷ், இது சம்பந்தமாக நான் எழுதியுள்ள ஒரு பதிவை இங்கே வெளியிட உங்களின் அனுமதியை விழைகிறேன் http://www.parthichezhian.com/2010/08/blog-post_26.html



என்றும் அன்புடன்,

நெ. பார்த்திபன்