Tuesday, January 25, 2011

உறங்கும் துயரம்


  இன்று காலையில் மின்ரயிலில் வந்து கொண்டிருந்த போது அந்தக் குழந்தையைப் பார்த்தேன். அமர இடமில்லாமல் நின்று கொண்டிருந்த அந்த வடஇந்திய தம்பதியரின் முகங்கள், செளகார்பேட்டையில் சகஜமாய் தெரியுமென்றாலும் தமிழக முகங்களுக்கு இடையில் வித்தியாசமாய் தெரிந்தன.
தகப்பனின் (என்றுதான் நினைக்கிறேன்) தோளில் சாய்ந்து நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. நிச்சயம் பெண்தான். ஒன்றரை வயது இருக்கலாம். சலவைத்துணி மாதிரி புத்தம்புதிதாய் சிவப்பாக அழகான தங்க விக்கிரகம் போலிருந்தது. தூக்கத்தின் இடையே அவ்வப்போது தனது ரத்தநிற சிவப்பு உதடுகளை லேசாக சுழித்துக் கொண்டது, அத்தனை பேரழகாய் இருந்தது. எதற்காகவோ புன்னகைத்துக் கொண்டும், சிணுங்கிக் கொண்டும் ஆழ்ந்த தூக்கம். (ஒழுகும் சளியுடன் கருப்பு நிறக் குழந்தையை இத்தனை நேரம் ரசித்திருப்பேனா என்று பின்னர் கேட்டது அகம்)
அது தன்னை முழுமையான நம்பிக்கையுடன் தன்னைச் சுமந்திருக்கும் தகப்பனிடம் ஒப்புவித்தது போல் இருந்தது. எங்கே போகிறோம், எத்தனை மணிக்கு சென்று அடைவோம், அங்கு உணவு கிடைக்குமா, அங்கு நண்பர்கள் இருப்பார்களா, எதிரிகளா, எப்போது திரும்புவோம், .. இப்படி எந்தக்கவலைகளும் அதற்கு இல்லாதது போல் தோன்றியது. துயரம் என்கிற ஒன்றை அந்தக் குழுந்தை அதுவரை உணர்ந்திருக்குமா? விவிலியமும் இதையே சொல்கிறது. கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் தன்னைக் ஒப்புக்கொடுத்தவர்களை எந்தத் துயரமும் அணுகுவதில்லை.
ஆனால் வளர்ந்த பிறகு எத்தனை மாறிப் போகிறோம்? போயிருக்கிறேன்? எத்தனை நெருக்கமான நட்பாக, உறவாக இருந்தாலும் ஒரு துளி பகையாவது, துரோகமாகவது, வன்மமாவது, வெறுப்பாவது, சங்கடமாவது, அவநம்பிக்கையாவது இல்லாமலில்லை. யாரிடமாவது நம்மை  என்னை முழு நம்பிக்கையுடன் ஒப்புவித்துக் கொள்கிறோமா னா? ஒரு துளி ரகசியத்தையாவது நம்முடைய  என்னுடைய அந்தரங்கத்தின் ஆழத்தில் வெளிப்படுத்த முடியாமல்/விரும்பாமல் பத்திரப்படுத்திதானே வைக்கிறோம்? வைக்கிறேன்? நம்மால்  என்னால் அந்தக் குழந்தையின் துயரற்ற மனநிலையை மீண்டும் பெறவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.  * சிலவற்றை பொதுமைப்படுத்தி எழுதும் போது அது பலரைச் சங்கடப்படுத்துவதாக பின்னூட்டங்களின் மூலம் உணர்வதால் பிறகு தன்னிலை சார்ந்து மாற்றியிருக்கிறேன்.  
suresh kannan

16 comments:

Yaathoramani.blogspot.com said...

இதை பொதுமைப்படுத்தியே சொல்லி இருக்கலாம்
ஏன் எனில் எல்லோருமே அப்படித்தான்.நல்ல படைப்பு
வாழ்த்துக்கள்

Nagasubramanian said...

ஞானியின் மோன நிலையும் பச்சிளங் குழந்தையின் இயல்பு நிலையும் ஒன்று தான்!

குரங்குபெடல் said...

என்னாச்சு . . .
ஏழாவது வரியும் நல்லாப்போகுதேன்னு நெனச்சேன் . . .


"(ஒழுகும் சளியுடன் கருப்பு நிறக் குழந்தையை இத்தனை நேரம் ரசித்திருப்பேனா என்று பின்னர் கேட்டது அகம்)"


. . . நன்றி

Mahesh said...

என்னாச்சு . . .
ஏழாவது வரியும் நல்லாப்போகுதேன்னு நெனச்சேன் . . .


"(ஒழுகும் சளியுடன் கருப்பு நிறக் குழந்தையை இத்தனை நேரம் ரசித்திருப்பேனா என்று பின்னர் கேட்டது அகம்)"


. . . நன்றி


:-) Same Pinch.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பகிர்வு.

தமிழன் வீதி said...

கருப்பை சிவப்பாக்க 'பேரன்லவ்லி' விற்கும் உலகில், நமது மனோ நிலையும் மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

மாற்றப்பட்ட உலகில் நாம் மாறாதிருக்க இதைப் போல சின்ன சின்ன பதிவுகள் வேண்டும். அவசியமானதும் கூட...

பின்னோக்கி said...

கருப்பு என்ற நிறம் அழகில்லை என்று எப்படி நம்முள் வந்தது என்று தெரியவில்லை. வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த முறை கருப்பான குழந்தையைப் பார்க்கும் போது இந்தப் பதிவின் நியாபகம் வரவேண்டும்

ராம்ஜி_யாஹூ said...

Yet ah! why should they know their fate?
Since sorrow never comes too late,
And happiness too swiftly flies.
Thought would destroy their paradise.
No more; where ignorance is bliss

THOMAS GREY

Prathap Kumar S. said...

குற்ற உணர்ச்சியா ?? :)))

மாரிமுத்து said...

சங்கடங்களுக்காக சங்கடப்படுவதும் குழந்தை மனநிலைதானே!

apala said...

>>கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் தன்னைக் ஒப்புக்கொடுத்தவர்களை எந்தத் துயரமும் அணுகுவதில்லை.

Completely disagree! Even after watching so many "ananda"'s getting into so much trouble, how can you say that?!!! And also, how can you surrender to somebody who is non-existent?!! Believe in somebody / something which is real. There itself you have reduced the chances of "being sorrow" by more than 80%!!!

For the rest, here is the solution:
That is believing the follwoing universal truth: தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Anonymous said...

'Pitchaipathram' becoming 'Mokaippathiram', watch out.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ

http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

yathavan64@gmail.com said...

23 January 2015 at 05:55

yathavan nambi said...
வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.

நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

yathavan64@gmail.com said...வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.

நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)