Monday, October 13, 2008

குரு என் ஆளு கொரியன் படமா?

Photobucket

மாதவன் நடிக்கும் இந்த ஸ்டில்லைப் பார்த்தவுடன் வித்தியாசமாக இருக்கிறதே என்று ரசித்தேன். ஆனால் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஸ்டில் முதற்கொண்டு வெளிநாட்டுப் படங்களிலிருந்துதான் சுடுவார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது. கடந்த வெள்ளியன்று World Movies Channel-ல் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பரிந்துரையின் பேரில் பிரபல கொரியப் பட இயக்குநர் Kim-ki-duk-ன் Iron 3 என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது மேற்சொன்ன ஸ்டில்லை நினைவுப்படுத்தும் விதமான ஒரு காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. படமும் இதிலிருந்துதான் நகலெடுக்கப்பட்டிருக்குமா அல்லது அறிவித்தபடி yes boss இந்திப்படத்தின் மறுஉருவாக்கமா என்று தெரியவில்லை. சரி அந்த கருமத்தை விட்டு விடுவோம்.

Photobucket

Kim-ki-duk-ன் Bad Guy, Spring Summer, Autumn, Winter and Spring... போன்ற திரைப்படங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அதைப் போலவே Iron-3-யும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இதில் பிரதான பாத்திரங்களான ஆணும் பெண்ணும் முழுப்படத்திலும் ஒரு வரி.... என்றால் ஒரு வரி கூட பேசிக் கொள்வதில்லை. பார்வைகள், தொடுகைகள் மூலம் மாத்திரமே முழுத்திரைப்படத்திலும் அவர்கள் இயங்குகிறார்கள். வைரமுத்து சொன்ன மாதிரி 'இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையேயில்லை'. பெண்ணாவது படத்தின் இறுதிப்பகுதியில் மாத்திரம் தன் கணவனுடன் உரையாடுகிறாள்; அவனோ படம் முழுவதும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இதுவே பார்வையாளனுக்கோர் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

()

மனிதர்கள் யாருமில்லாத வீடுகளில்தான் அவனின் வாசமே. பூட்டை திறந்து சாவகாசமாய் வீட்டினுள் இயங்குவான். சமைத்து சாப்பிடுவான், துணிகளை துவைத்துக் கொள்வான், அங்குள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்திருந்தால் சரி செய்து வைப்பான், உறங்குவான், மறுநாள் இன்னொரு வீடு, இன்னொரு சாப்பாடு. அங்குள்ள பின்னணயில் புகைப்படம் எடுத்துக் கொள்வான். இதுதான் அவன் வாழ்க்கை முறை.

ஒரு முறை வீட்டினுள் ஒரு பெண் இருப்பதை உணராமலேயே உள்ளே புகுந்து உண்டு, உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒளிந்திருந்து தன்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அவளைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறான். உடனே வீட்டை விட்டு வெளியேறுகிறான். இருந்தாலும் மெளனமான அவளின் அடிபட்ட பார்வையில் உள்ள செய்தியை உணர முயல மறுபடியும் அங்கே செல்கிறான். கணவனிடம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டிருக்கும் அவளை மீட்டு தன்னுடன் அழைத்துச் செல்கிறான். யாருமில்லாத வீடுகளில் புகுந்த தங்கும் அவனின் வாழ்க்கை முறையை அவளும் பின்பற்றுகிறாள்.

ஒரு முறை குத்துச் சண்டை வீரனின் வீட்டில் தங்கும் போது திடீரென்று எதிர்பாராமல் அவர்கள் திரும்பிவர அவனுக்கு அடி விழுகிறது. இன்னொரு வீட்டில் புகும் போது ஒரு கிழவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான். முதலில் அதிர்ந்து போகும் இவர்கள் கிழவரின் உடலை முறைப்படி வீட்டின் பின்புறம் புதைத்து விட்டு வழக்கம் போல சாவகாசமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொலைக்குற்றத்திற்காக காவல்துறை இவர்களை கைது செய்கிறது. காணாமல் போனவர்களின் பட்டியலில் இருக்கும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு அவளின் கணவனிடம் ஒப்படைக்கிறது. கிழவர் நுரையீரல் கான்சரினால்தான் இறந்து போனார் என்று பிரேதபரிசோதனை அறிக்கை கூறுவதால் காவல்துறை அவனை விடுவிக்க முன்வருகிறது. என்றாலும் அந்தப் பெண்ணின் கணவன் அவன் மேல் உள்ள வன்மத்தால் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து தான் அடிபட்டது மாதிரியே கோல்ப் பந்தினால் அடிக்கிறான்.

கோபமுறும் அவன் காவல்துறை அதிகாரியை தாக்க முயல சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே கண்காணிக்கும் அதிகாரியிடமிருந்து ஒளிந்து அவனை வெறுப்பேற்றுகிறான். சிறையறைக்குள் எடுக்கும் பிரத்யேக பயிற்சி காரணமாக 180 டிகிரி சுழற்சியில் பின்பக்கம் மறைந்து ஆட்களின் கண்களுக்கு தெரியாமல் போகிறான். மறுபுறம் அவள் தன் கணவன் மீதுள்ள வெறுப்பு அகலாமல் இருக்கிறாள். அவனிடம் கொண்ட பழக்கம் காரணமாக பிறரின் வீட்டில் சென்று உறங்குகிறாள்.

அவன் யார் யார் வீட்டுக்கெல்லாம் முன்பு சென்றானோ அங்கிருப்பவர்கள் எல்லாம் தங்கள் வீட்டில் ஒரு அந்நியன் இருப்பதை உணர்கிறார்கள். ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதே போல் அந்தப் பெண்ணும் அவன் தன் வீட்டில் இருப்பதை உணர்கிறாள். அவளின் மனநிலை உற்சாகமடைகிறது. புரியாத கணவன் அவள் தன் மீதுதான் அன்பு கொள்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்கிறான்.

()

வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இந்தப்படம் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மெளனமாகப் பேசுகிறது. தன்னை உடலாக மாத்திரமே பார்க்கும் கணவனை விட தன்னுடைய ஆன்மாவை நேசிக்கும் ஒரு மெளனியோடு இருப்பதையே அந்தப் பெண் விரும்புகிறாள். புரிந்து கொள்ள முடியாததாக கருதப்படும் பெண்ணின் ஆழ்உணர்வுகளின் ஒரு துளி இந்தப்படத்தில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.

suresh kannan

11 comments:

Anonymous said...

http://upload.wikimedia.org/wikipedia/en/e/ec/Aashiq_Banaya_Aapne.jpg

idndha poster copy dhan guru en aalu. selva innum korean padam paarkkara alavukku valaralannu naan ninaikkiren.

அக்னி பார்வை said...

அதன் பெயர் சுடுவது அல்ல ..இன்ப்ரெசன்( Inspiration)..

சுஜதா சொன்னதுதான்,’தமிழ் சினிமா ஒரு ஸ்டெச்ச்ர் கேஸ்’

பகிர்தலுக்கு நன்றி கண்ணன்

Anonymous said...

ஸ்டில்ல கூடவா சுடுவாங்க. அடப்பாவிங்களா. இந்த டிவிடின்னு ஒண்ணு இல்லைன்னா இவன்க படமே எடுக்க முடியாதுன்னு பிரகாஷ்ராஜ் 'வெள்ளித்திரை' படத்துல சொல்வாரு. சரிதான்.

Anonymous said...

ஐயா இந்தக் கதையை எடுக்க தேவையான நுண்ணுர்வு எந்த தமிழ்த்
திரைப்பட இயக்குனரிடம் இருக்கிறது?

லேகா said...

//கடந்த வெள்ளியன்று World Movies Channel-ல் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பரிந்துரையின் பேரில் பிரபல கொரியப் பட இயக்குநர் Kim-ki-duk-ன் Iron 3 என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது மேற்சொன்ன ஸ்டில்லை நினைவுப்படுத்தும் விதமான ஒரு காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.//

World Movies தொலை காட்சியில் இப்படத்தின் காட்சியை பார்த்ததும் எனக்கும் இதே அதிர்ச்சி தான் சுரேஷ்!! நம்ம தமிழ் சினிமா ஆளுங்க கப்சா அடிக்குறத விட்டு எப்பொழுதும் திருந்த மாட்டுங்க..

Anonymous said...

எங்க இருந்து சார் இந்த மாதிரி தகவல்களை தேடி பிடிகறீங்க

சுரேகா.. said...

உங்களுக்கு ஒரு சின்ன நன்றி

http://blogintamil.blogspot.com/2008/10/blog-post_2913.html

இங்க போய் பாருங்க!

யூர்கன் க்ருகியர் said...

World Movies Channel-ல் சொல்ற "watch 50 movies before you die" அப்படின்னு அடிக்கடி ஒரு பொண்ணு சொல்லிகிட்டே இருக்குது. உங்களிடம் அந்த ஐம்பது பட பட்டியல் இருந்தால் கொஞ்சம் லிங்க் கொடுங்க சார்.
நன்றி

rapp said...

இது தொன்னூறுகளில் வெளிவந்த எஸ் பாஸ் படத்தோட தழுவல்னு சொல்றாங்க, எஸ் பாஸ் படமே ஒரு தழுவல்னாலும் அது நம்ம ஊருக்கு ஒரு க்யூட் படம்தான்

anujanya said...

சுரேஷ்,

படம் நான் பார்க்கவில்லை என்றாலும், பார்த்த உணர்வைத் தருகிறீர்கள். கொரியர்கள், ஈரானியர்கள் வேறு எதோ தளத்தில் படம் எடுக்க, நாம் இன்னும் குத்துப் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஊர்களில் இந்தப் படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறுகின்றனவா?

அனுஜன்யா

Unknown said...

வணக்கங்க சுரேஷ்

நல்ல அருமையான விமர்சனங்க

அவன் யார்கண்ணுக்கும் தெரியாமல் இருப்பதற்கு காரணம் சிறையில் அவன் பெற்ற பயிற்சியா,இல்லை அது ஒரு கனவு மாதிரியான காட்சியா.இயக்குனரின் முந்தைய(Spring,summer..) படத்தில் குருவுக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் இருக்கும்.இதிலும் அதுபோல்தானா.

It's hard to tell that the world we live is either in a reality or a dream.
படத்தின் முடிவில் வரும் இவ்வரி கொஞ்சம் குழப்புகிறது.

நன்றி.