Tuesday, April 04, 2006

தொலைக்காட்சி சீரியலில் நான்

"சன்" தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் "கோலங்கள்" தொடரில் நான் நடிக்கும் சில காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி வந்தது இந்த வாய்ப்பு. கொஞ்சம் பிளாஷ்பேக்.

ஆனந்த் ராகவ்வின் 'சுருதி பேதம்' நாடகத்தை காண நாரத கான சபாவிற்கு சென்ற போது பா.ராகவனின் மூலம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஆனந்த விகடனில் எழுதிய பழைய கட்டுரைகளான 'பஸ்ரூட்' முதற்கொண்டு அவரின் பல சிறுகதைகளை நினைவுகூர்ந்தேன். இதனால் மகிழ்ந்த அவர் எனக்கு மிகவும் நெருக்கமாகிப் போனார். மின்னஞ்சல் மூலம் தொடர்ந்த இந்த நட்பு பின்னர் தொலைபேசியின் மூலமாகவும், நேரிலுமாக தொடர்ந்தது. இதன் நடுவில் சினிமா மீதான என் ஆர்வத்தையும் அவ்வப்போது அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புத் தளத்திலும் சந்திப்புகள் நீடித்த ஒரு கணத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் வரவேண்டிய நடிகர் வராத காரணத்தினால் (அது ஒரு சின்ன காட்சிதான்) இயக்குநர் திருச்செல்வத்திடம் என்னைப் பற்றி கூறி அந்தக் காட்சியில் நடிக்கச் சொன்னார்.

எனக்கு சினிமாவில் பின்புலத்தில்தான் பணிபுரிய ஆர்வம் இருந்ததே ஒழிய, திரைக்கு முன்னால் தோன்றும் ஆர்வம் இருந்ததே இல்லை. இதனால் முடியவே முடியாதென்று மறுத்துவிட்டேன். சினிமாவில் சந்தர்ப்பம் எப்படி கதவை தட்டும் என்பது தெரியாது என்றும் வந்த சந்தர்ப்பத்தை விட்டு விடாதீர்கள் என்றும் சொன்ன பாஸ்கர் சக்தி, இயக்குநர் ஆர்வம் கொண்டு சினிமாவில் நுழைந்து சிறந்த நடிகர்களாகிப் போனவர்களின் பட்டியலையும் சொல்லி எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்.

அதன்படி நான் நடித்த சிறு காட்சி இன்று ஒளிபரப்பாகிற பகுதியில் வெளியாகிறது. ஒளிபரப்பாகிற வரை யாருக்கும் தெரிய வேண்டாமென்கிற வேண்டுகோளும் வைக்கப்பட்டதால் யாருக்கும் சொல்லவும் இயலவில்லை. நண்பர்கள் பார்த்து என்னுடைய பங்களிப்பைப் பற்றின கருத்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். (அடையாளம் கண்டுபிடிக்க என்னுடைய புகைப்படத்தை reference-ஆக வைத்துக் கொள்ளலாம்) :-)

30 comments:

சம்மட்டி said...

WHICH EPISODE ?

பிச்சைப்பாத்திரம் said...

In Today's episode, sammatti.

சம்மட்டி said...

ஆசிய நாடுகளில் காட்டப்படும் சன் டீவி, செய்தியைதவிர்த்து மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரம் பின் தங்கியது. அதற்காகத்தான் கேட்டேன்

Muthu said...

இன்று மாலைக்குள் இது அத்தனை வலைப்பதிவாளர்களின் கவனத்தை கவர வேண்டும். பிடிங்க + குத்து,,..

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

ROSAVASANTH said...

வாழ்துக்கள்!

//அடையாளம் கண்டுபிடிக்க என்னுடைய புகைப்படத்தை reference-ஆக வைத்துக் கொள்ளலாம்) :-)//

ஆனால் நீர் போட்டோவில் இருப்பதைவிட வேறு மாதிரியாய் நேரில் தெரிவதாக நாங்கள் எல்லாம் சொன்னோமே! ஒருவேளை கேமரா முன்னால் எப்போதுமே, புகைப்படத்தில் இருப்பது போலவே, இருப்பீரோ?

Sudhakar Kasturi said...

அப்படி போடுங்க!
இதுவரை சீரியல் ஒன்றுமே பார்க்காத என்னையும் இன்னிக்கு பார்க்க வைச்சுட்டீங்க!
பார்த்துவிட்டு எழுதுகிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
க.சுதாகர்

துளசி கோபால் said...

அப்படியா? வாழ்த்து(க்)கள்.

இங்கே கோலமெல்லாம் இல்லை. முடிஞ்சா வலை ஏத்தி விடுங்களேன்.

ஆமாம், 'சார் போஸ்ட்' சீன் இல்லைதானே?

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் சுரேஷ்,

எனக்கு பிடிக்காத தொடரில் கோலங்களும் ஒன்று, உங்களுக்காக இன்று பார்க்கிறேன்.

முத்துகுமரன் said...

+Ve:-)

டிபிஆர்.ஜோசப் said...

ஆமாம், 'சார் போஸ்ட்' சீன் இல்லைதானே?//

இருந்தாலும் துளசி, உங்களுக்கு குறும்பு கொஞ்சம் ஜாஸ்திதான்.

சு.கண்ணன் கொஞ்ச நாளாவே கோலங்கள் எப்பிசோடுகள் நல்லா போயிக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல நீங்க வர்றது சந்தோஷம். இன்னைக்கி மறக்காம பாக்கறேன்.

Haranprasanna said...

எங்கள் தானைத் தலைவன், சூப்பர் ஸ்டார் சுரேஷ் கண்ணனை நடிப்பில் யாரும் விஞ்சிவிடமுடியாது என்பதைத் தெரிவித்துக் கொல்கிறேன்!

அபுல் கலாம் ஆசாத் said...

Best wishes Suresh!

anbudan
Azad

Anonymous said...

*வருங்கால முதல்வர்* சுரேஷ் கண்ணனார் அவர்களுக்கு வாழ்த்துகள்
:-)))

குழலி / Kuzhali said...

காலங்களில் கோலம் படைக்கும், கோலங்களில் காலம் படைக்கும் *வருங்கால முதல்வர்* சுரேஷ் கண்ணனார் அவர்களுக்கு வாழ்த்துகள்

காலம் கோலம் எல்லாம் ஒரு அடுக்கு மொழிக்கு தான், எனக்கு ஒரு எம்.எல்.ஏ. தொகுதி ஒதுக்கிடுங்க....

நன்றி

மயிலாடுதுறை சிவா said...

அன்னை தெரசாவிற்கு பிறகு உலகிலேயே மிக சிறந்த பெண்ணாக
காண்பிக்க படும் தேவயாணி நடிக்கும் "கோலங்கள்" நான் பார்ப்பது இல்லை, உங்களை நேரில்தான் பார்க்க முடியவில்லை, இன்று தொலை காட்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

PKS said...

Kalakunga. Aduthu ungaluku Hero role nu pechchu adipaduthey industryla. Athu teriyumaa? :-)

Anbudan, PK Sivakumar

Blogeswari said...

ஹலோ டாக்டர்! ஸ்க்ரீன் ல போட்டோவ-விட டிஃப்பரண்டா இருக்கீங்க... good job! good luck on your future assignments. ஆக்டிங்க விட்ராதீங்க!

ps : why did / do they take cu shots of a 'pregnant' devayani? could have been avoided.

பினாத்தல் சுரேஷ் said...

நான் ரொம்பவே கோவமா இருக்கேன் - இந்த ப்ளடி சீரியல என்னை ஏமாத்தி பாக்கவச்சதுக்கு!

Anonymous said...

சூப்பர் ஸ்டார் நாற்காலி போட்டிக்கு அடுத்த ஆள் ரெடி.

ஒரு பட்ட பெயரும் வெச்சுக்கோங்க

'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் நடிக்கும் 'கோலங்கள்' காணத்தவறாதீர்கள்.

Anonymous said...

I dont see SUN TV or any serial for that matter, still my best wishes for your career dreams come true thru this small window of opportunity.

Anbudan
Sa.Thirumalai

ஸ்ருசல் said...

சுரேஷ் கண்ணன்,

தேவயானி கடைசியில், 'அந்த செக்கை எடுத்து வையுங்கள் வருகிறேன்', என்று சொல்வாரே. அவரா நீங்கள்?

மஞ்சள் கட்டம் போட்ட சட்டை?

முதல் முதலாக கோலங்கள் பார்த்தேன். தாங்க முடியவில்லை. அதுவும் நளினி. அவர் புலம்பும் போது நீங்கள்(அது நீங்களாக இருக்கும் பட்சத்தில்) மிரண்டு தான் போனீர்கள்.

பின்னணியில் ஒலித்த பாடல் வரிகளும், இசையும், 'முத்து' படத்தின் 'விடுகதையா', பாடலை ஞாபகப்படுத்தியது.

Muthu said...

சத்தயமா சொல்றேன்..நேத்து சீரியல்ல நீங்க வந்தீங்களான்னு எனக்கு தெரியலை...நான் முழு சீரியலும் பார்த்தேன்..அதுல யாரு நீங்க?

Narain Rajagopalan said...

Great. I may not see it. But capture and put it in your blog, will see that.

Karthikeyan said...

April fool ?

Karthikeyan said...

April Fool ?

Boston Bala said...

கொஞ்சம் தாமதமான ஏப்ரல் 1 பதிவு? நீங்க ரசிக்கும் நெடுந்தொடரை இப்படியா பார்க்க வைப்பது :-) (கோலங்களை விட செல்வி சுவாரசியமாகவாவது இருந்திருக்கும். அடுத்த முறை செல்வி ரீல் டாக் விடவும் :-D)

Anonymous said...

Dear readers and mr suresh kannan,
I am bhaskarsakthi, i am a writer,journalist.now working in tv serials(metti oli,kolangal)now working in a movie under production directed by mr. m. Thirumurugan.
i read thestory written by mr.sureshkannan in his blog `pitchaipathiram'.he made as a character without my knowledge or consent.so it is my duty to tell what happened really.

i meet this gentleman in a book release function and have some friendly words with him and i went off.after that day i never meet him till date.i never speak with him in phone,we have no mail contacts and what he said in his trash are totally false not a single word is true.
still i couldnt understand his idea of telling such silly lies.his statments about me are irritating.
one of my friend send me this blog, so that i am able to notice this.otherwise it left being unnoticed and people who read this have wrong ideas.
i request my sureshkannan to use his imagination in a right way and dont think the readers are fools.

Bhaskarsakthi

துளசி கோபால் said...

ஓ மை காட்!!!!

என்ன நடக்குது இங்கே?

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு...


இந்தப் பதிவிற்கு பாஸ்கர் சக்தி மிக்க வருத்தத்துடனும் கோபத்துடனும் பின்னூட்டமிட்டுள்ளார். (அது அவர் இட்ட பின்னூட்டம்தான் என்று நம்புகிறேன்) அவர் பெயரை அவரின் அனுமதியின்றி விளையாட்டாய் பயன்படுத்தியதற்காக அவரிடம் மனப்பூர்வமான மன்னிப்பையும் வருத்தத்தையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டு எந்தவித நோக்கமுமில்லாமல் நிகழ்த்தப்பட்டாலும், சம்பந்தப்பட்டவரை இது மிகவும் புண்படுத்தியிருக்கிறது என்பதை அறிய மிகவும் வருத்தமாயிருக்கிறது.

மேலும், பாஸ்கர் சக்தியே குறிப்பிட்டது போல் நான் அவரை ஒரு விழாவில் சந்தித்துப் பேசியதோடு மறுமுறை அவரை சந்திக்கவேயில்லை என்பதையும், மின்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ எவ்வித தொடர்பும் வைத்துக் கொண்டது கிடையாது என்பதையும், தொடரில் நடிக்க எந்த சிபாரிசையும் அவர் செய்யவில்லை என்பதையும், இந்த செய்திகள் எல்லாம் விளையாட்டுக்காய், அதன் பின்விளைவுகள் அறியாது எழுதப்பட்டது என்பதையும் இதன் மூலம் தெளிவாக்குகிறேன்.

Anonymous said...

நீங்கள் நிஜத்தில் எழுதுவதை நிறுத்தி விட்டீர்கள் என்று நம்பி விட்டேன். இப்போது இந்த பாஸ்கர் சக்தி அவர்களின் கமென்ட்டையும் பார்த்தேன்...d...