Tuesday, October 14, 2008

ரஜினியின் அறிக்கையும் இன்னபிற மேட்டர்களும்

Photobucket

அண்ணன் ரஜினிகாந்த் மறுபடியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவரைச் சொல்லி குற்றமில்லை. அவர் பாட்டுக்கு (அதாவது ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு) ஐஸ்வர்யாவுடன் சமர்த்தாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் "விஜயகாந்த் வந்திருக்காக, சிரஞ்சீவி வந்திருக்காக, நீங்களும் மின்னலா வாங்க" என்று வற்புறுத்தி தாங்களே கொடியையும் கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டனர். அடையாளம் தெரியாமலிருக்க தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு சனி, ஞாயிறு லாட்ஜ்களில் தங்கியிருக்கும் 'காளிமுத்து' வகையறா வைத்தியர்களை சந்தித்து விட்டு திரும்பும் நபரைப் பிடித்து அழகான பெண்ணுடன் கல்யாணம் செய்து சாந்தி முகூர்த்த அறைக்குள் தள்ளிய கதையைப் போலிருக்கிறது இவர்கள் கதை. தமிழ்நாட்டில்தான் இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்கும். விட்டால் கட்சி அலுவலகம் அமைத்து வேட்புமனு தாக்கல் செய்து விடுவார்கள் என்று பயந்தோ என்னமோ ரஜினியே வெளிவந்து 'தனது பெயரை, புகைப்படத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏதோ அவரின் பிம்பத்திற்கு மக்களிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்றொரு மாயத்தோற்றத்தை இதன் மூலம் நிறுவ முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

வடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வது போல 'இன்னமுமாடா இந்த ஊரு நம்பள நம்புது"?. "அது அவங்க விதி". என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

குசேலன் பட விவகாரம் தொடர்பாக அவர் அடித்த பல்டியின் மூலம் மக்களிடம் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச இமேஜூம் சரிந்துவிட்டது. தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார். 'தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று விமர்சித்த அதே ஜெயலலிதா அவர் கண்ணுக்கு அஷ்டலட்சுமியாகவும் காட்சியளித்திருக்கும் அதிசயம் ஆன்மீக தரிசனத்தின் ஒரு புதிய பரிமாணம். காவிரி பிரச்சினையில் நெய்வேலிக்குச் சென்ற திரையுலகத்தை புறக்கணித்து 'என் வழி தனிவழி' என்று தனிஆவர்த்தனம் நடத்தி சாத்தியமில்லாத நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக 'ஸ்டன்ட்' அடித்தார். ஒக்கேனக்கல் விவகாரத்திலும் உணர்ச்சிகரமாக பேசி கைத்தட்டல் வாங்கிவிட்டு தன்னுடைய பட வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்தவுடன் 'மாப்பு. இனிமேல் செய்ய மாட்டேன்' என்று கன்னடத்தில் தோப்புக்கரணம் போட்டார். இனிமேலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியல் அவருக்கு ஒத்துவராது என்பதை அவரே உணர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் ரசிகர்களின் போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முயன்றிருப்பது நல்ல விஷயம்தான்.


ஆனால் அதோடு அவர் நின்றிருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம். 'தான் அரசியலுக்கு வர விரும்பினால் யாராலும் அதைத் தடுக்க முடியாது' என்று வழக்கம் போல் ஒரு குழப்ப 'பிட்டைப்' போட்டிருப்பதுதான் காமெடி. அவரைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கு கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் போரடித்துவிட்டது. ரஜினியின் புதுப்படங்கள் வரும்போது டிக்கெட்டுகள் மூலம் சம்பாதிப்பதை இன்னும் விஸ்தரிக்க விரும்புகிறார்கள். எனவேதான் ரஜினிக்கே விருப்பமில்லையென்றாலும் அவர் அரசியலில் வரவேண்டுமென்று நீண்ட வருடங்களாக விரும்புகின்றனர். இதன் மூலம் குறைந்தபட்சம் தனக்கொரு எம்.எல்.ஏ. பதவியாவது வந்துவிடாதா என்பது அவர்களின் கணக்கு. இதனால்தான் இன்னமும் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழாமலிருப்பது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் ரஜினிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எனவேதான் 'அரசியலுக்கு வரமாட்டேன்' என்பதை தெளிவுபடுத்த விரும்பாமல் குட்டையைக் குழப்புகிறார். அவ்வாறு அவர் தெளிவாக அறிவித்துவிட்டால் பதவி மோகத்துடன் திரியும் பல பேர் விஜய்காந்த் கட்சிக்கோ வேறு எங்காவதோ தாவிவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். பின்பு அவர் படங்களுக்கு தோரணங்களும் கட்அவுட்டும் அமைப்பதற்கும் 'தலைவா' என்று கூச்சலிடுவதற்கும் ஆட்கள் வேண்டாமா? இன்றைய இளைய தலைமுறையினர் அஜீத்திற்கும் விஜய்க்கும் மாறி நீண்ட நாட்களாகிறது.


அவர் கைவிட்ட பொன்னான சூழலான '1996' மறுபடியும் அமையும் என்பது அசாத்தியமான ஒன்று.

முன்பெழுதிய பதிவின் காரணமாக 'அவள் அப்படித்தான்' படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த நடிகன்.. நடிப்புலகிலும் சிறந்த பெயரெடுக்காமல் அரசியலிலும் ஸ்தாபிக்க முடியால்.. இன்னமும் விக்கை மாட்டிக் கொண்டு ஒரு ஜோக்கர் போல... வேதனையாக இருக்கிறது. அவரின் உண்மையான ரசிகர்கள் இவ்வாறுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

()

உயிர்மை அக்08 இதழின் தலையங்கத்தில் ரசித்த மனுஷ்யபுத்திரனின் வரி: பெரியார் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவது குறித்து இவ்வாறு எழுதுகிறார்: 'அண்ணா நூற்றாண்டில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வருபவர்களையெல்லாம் கருணையின் அடிப்படையில் விடுவித்து வரும் தமிழக முதல்வர் அவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவரும் மாபெரும் தமிழின் சிந்தனையாளருமான பெரியாரையும் கி.வீரமணியிடமிருந்து விடுதலை செய்யக் கருணை காட்ட வேண்டும்.'

()

சுப்ரமணியபுரத்தின் 'கண்கள் இரண்டால்' பாடலை பல பேர் சிலாகித்து தாண்டிப் போய் அடுத்தப் பாடலை மகிழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னால் இன்னமும் அந்தப் பாடலில் இருந்து வெளிவர முடியவில்லை. அந்தப்பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் சானலை மாற்ற முடியவில்லை. மனம் பதின்ம வயதுகளின் எண்ணங்களுக்குள் புகுந்து கொண்டு கொண்டாட்டம் போடுகிறது.ஏதோவொரு புகைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு தேவாங்கு போல தோற்றமளிக்கும் ஸ்வாதி இந்தப் படத்தின் பாடல்காட்சியில் தேவதை போல் தோற்றமளிப்பது ஆச்சரியமளிக்கிறது. வெட்கம் என்றால் என்னவென்று மறந்து போய் "சீக்கிரம் வாடா, அணைச்சுக்கடா" என்று முனகும் இன்றைய நாயகிகளுக்கு மத்தியில் பதின்ம வயதுப் பெண்களின் வெட்கம் கலந்த சிரிப்பை அழகியல் உணர்வுடன் திரையில் சாத்தியப்படுத்தியிருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. குறிப்பாக அந்தப்பாடல் காட்சியில் நாயகன் கோயிலில் நடக்கும் ஏதொவொரு சடங்கில் சாப்பிட்டுவிட்டு கைகழுவ வரும் போது தன்மீது மோதுவதைப் போல வருவதைக் கண்டு படபடப்புடன் நடுங்குவதும் அவன் திரும்ப செல்லும் போது தான் பயந்ததற்காக வெட்கத்தோடு ஒரு சிரிப்பை அவனை நோக்கி அளிப்பதும்... divine.

()

செப்08 உயிர் எழுத்துவில் பெருமாள் முருகனின் 'இருள் திசை' என்றொரு சிறுகதை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. குடித்துவிட்டு வழக்கம் போல் எங்கோ விழுந்திருக்கும் குடும்பத்தலைவனை தேடி அழைத்துவர அம்மாவும் பிள்ளையும் நடுஇரவில் கிளம்புகிறார்கள். வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னதம்பி எழுந்து தேடி அழக்கூடாதே என்கிற பதைபதைப்புடனே அம்மா வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். இவ்வாறான பயணம் அவர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். பனிபூத்த இரவில் நடப்பது அந்தச்சிறுவனுக்கு பிடித்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ரத்த காயங்களுடன் விழுந்து கிடக்கும் அப்பனை வெறுப்புடன் அவனும் அழுகையுடன் அம்மாவும் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்கிறார்கள். சின்ன தம்பி எழுந்து அழாமல் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருந்தானா? அறிய இதழைப் படியுங்கள்.

பெருமாள் முருகன் எளிய வார்த்தைகளின் மூலம் மிக உயிர்ப்புடன் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார். கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரும் குடிகார தந்தையின் மகன்களின் வெறுப்பும் இக்கதையில் அழுத்தமாக உறைந்திருக்கின்றன. அதற்காக தந்தை பாத்திரத்தை ஏதோ ஒரு கொடூரனாக பெருமாள் முருகன் படைக்கவில்லை. இவ்வாறு குடித்து விழுவதைத் தவிர ஒரு நல்ல தந்தையாகவே அவர் இருக்கிறார். மிகச்சிறிய கதைதான். இதைப்படித்துக் கொண்டிருக்கும் போதே வார்த்தைகளும் புத்தகமும் மறைந்து போய் ஒரு குறும்படமாகவே அந்தச் சித்திரம் என் முன் நிகழ்ந்து கொண்டிருந்ததை காணும் அதிசய அனுபவத்தைப் பெற்றேன்.

()

எனது மீடியா பிளேயரின் play list-ல் நிரந்தரமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்' திரைப்பாடல்கள். 'சத்யம்'-ல் இழந்த தனது பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் consistency. 'மின்னலே' வந்த புதிதில் 'ஏ.ஆர். ரகுமானை பிரதியெடுப்பவர்' என்றும் பின்பு 'கிறித்துவ தேவாலயங்களின் இசைப்பாடல்களை நகலெடுப்பவர்' என்றும் விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தன்னுடைய demand-ஐ உபயோகித்து நிறைய படங்களை ஒத்துக் கொண்டு நீர்த்துப் போகாமல் நிதானமாக தொடர்ந்து தரமான படைப்புகளையே தருகிறார் என்பது என் அவதானிப்பு. அதிசயமாக 'வாரணம் ஆயிரத்தில்' ஒரு கானா டைப் பாடலை போட்டிருக்கிறார். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' போன்ற கேட்பதற்குச் சுகமான தாமரையின் தமிழ் வார்த்தைகள், இன்றைய மற்ற திரைப்பாடல்கள் எவ்வளவு தூரம் மாசடைந்திருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

'சாமுராயில்' 'மூங்கில் காடுகளே'வை விடவும் எனக்குப் பிடித்தது 'ஒருநதி' என்ற பாடல். திரைப்பாடல் அல்லாது தனியிசைப்பாடல்களுக்கு (private albums) மிகச்சிறந்த உதாரணமது. வைரமுத்துவின் வரிகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். கேட்டுப்பாருங்கள்.

()

தமிழ்நாட்டுத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர்களுக்கு எவ்வளவு சம்பளமிருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். சில ஆயிரங்கள்? ஒரு லட்சம்? தெரியவில்லை. ஆனால் விஜய்காந்தின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது கருணாநிதி கூறியது. 'கண்ணம்மா' படத்திற்கு வசனம் எழுதியதற்கு கிடைத்த 15 லட்சம், 'உளியின் ஓசை' படத்தில் கிடைத்த 25 லட்சம்... போன்றவைகளை பொதுமக்களுக்கே செலவழித்து விட்டதாக ஒரு பட்டியலை கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு முன்னதாக சூப்பர் ஸ்டாராக விளங்கிய இளங்கோவன் ('கண்ணகி'க்கு வசனம் எழுதியவர்) தன்னுடைய இறுதிக்காலத்தில் வறுமையில் செத்துப் போனார். பாகவதருக்கு வசனம் எழுதப் போன புதுமைப்பித்தன் காசநோய்க்கு மருந்தில்லாமல் இளமையிலேயே செத்துப் போனார். வசனம் எழுதுபவர்களுக்கு இவ்வளவு அதிக பணம் கிடைக்கும் போது ஏன் இவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

suresh kannan

15 comments:

Rajaraman said...

சுரேஷ்கண்ணன் கலக்கிட்டிங்க. நல்ல கண்ணோட்டத்தோடு ஒவ்வொன்றையும் அலசி உள்ளீர்கள். கடைசி இரண்டு பாராவை பதிவுலகில் ஜல்லியடித்து கொண்டிருக்கும் ஒரு நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு forward செய்யுங்கள். புண்ணியமாக போகும் உங்களுக்கு.

Rajaraman said...

சுரேஷ்கண்ணன் கலக்கிட்டிங்க. நல்ல கண்ணோட்டத்தோடு ஒவ்வொன்றையும் அலசி உள்ளீர்கள். கடைசி இரண்டு பாராவை பதிவுலகில் ஜல்லியடித்து கொண்டிருக்கும் ஒரு நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு forward செய்யுங்கள். புண்ணியமாக போகும் உங்களுக்கு.

anujanya said...

சுரேஷ் கண்ணன்,

நீண்ட பதிவு. ரஜினியை ரொம்பக் கலாய்ப்பதாகத் தோன்றவில்லையா உங்களுக்கு? வியாபார நோக்கம் இல்லாத சினிமா கலைஞனோ அல்லது அரசியல்வாதியோ இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். ஹோகனேக்கல் பிரச்சனையில் அவர் வார்த்தைகள் அத்துமீறல். தன்மானத் தமிழர்கள் நாம் அனைவரும் சப்புக் கொட்டி, கன்னடர்களை அவர் திட்டுவதை ரசித்தோம். வியாபார நிமித்தமாகவே இருக்கட்டும். அவர் பொதுவாக எல்லாக் கன்னடர்களையும் உதைப்பேன் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டது தான் சரி; மேலும் மன்னிப்பு கேட்கவும் பெருந்தன்மை வேண்டும். என்னவோ அவர் திட்டி, பின்பு வாழ்த்திய அம்மாவோ, கலைஞரோ துருவ நட்சத்திரம் போல ஆடாமால், அசையாமல் கொள்கைப்பிடிப்புடன் உறுதியாக இருக்கிறார்களா? அரசியல் dynamic ஆகத்தான் இருக்கும். நீ அன்று அப்படி சொன்னாய்; இப்போது பல்டி அடிக்கிறாய் என்று சொல்வது சுலபம். என்ன, இப்போது ரஜினியை அவர் என்ன செய்தாலும் விமர்சனம் செய்வது flavour of the season. நடத்துங்கள்.

இப்போதுதான் அய்யனார் பதிவில் வாரணம் ஆயிரம் பற்றி படித்து குறுந்தகடு வாங்கவேண்டும் என்று எண்ணினேன். நீங்களும் சொல்லிவிட்டீர்கள். 'கண்கள் இரண்டால்' இல் உங்களுடன் முழுதும் ஒத்துப் போகிறேன். நீங்கள் சொன்ன அந்தக் காட்சி அற்புதம். Divine என்பதைவிட நல்ல வார்த்தை இல்லை

கலைஞரை நீங்கள் பரிகசிப்பது புரிகிறது. ரஜினி சம்பளமும், சத்யராஜ் சம்பளமும் வெவ்வேறு தளத்தில்தான் இருக்கும். 'உளியின் ஓசை' எல்லாம் இப்போது வந்த படங்கள். இப்போதைய 25 லட்சமும் அப்போதைய 10 ஆயிரமும் ஒன்று என்று உங்களுக்கும் தெரியும். ஆனால் உங்கள் நோக்கம் வேறு என்பது புரிவதால்...இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அனுஜன்யா

களப்பிரர் - jp said...

கலக்கல் பதிவு. ரஜினி ரெம்ப தெளிவானவரு .... கட்சி ஆரம்பிச்சா மொதல்ல அவரோட பணத்த தான் செலவழிக்க வேண்டி இருக்கும் ...எம்புட்டு செலவளிச்சாலும் வரப்போவது பூஜியமோ இல்ல கோழி முட்டையோ தான் ...அதுக்கு அவரு பாட்டுன்க்க இமயமலைக்கு போய் ஓய்வெடுத்துட்டு பத்து லெட்சம் செலவழிச்சு நயந்தாராவோட டான்ஸ் ஆடி ஒரு படம் எடுத்து போட்டா அவரோட விசிலடிச்சான் குஞ்சுகள் கோடி கோடி யா திருப்பி கொடுக்க போறனுங்க ...

//அடையாளம் தெரியாமலிருக்க தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு//

வாவ் ... நான் ரெம்ப நாலா யோசிச்சேன் ... ஏன் இவனுங்க எல்லாம் முண்டாசு கட்டிகிரானுங்கனு ...இப்ப தான் தெரியுது ..

Anonymous said...

ivlo pesareengale nee ethavuthu katchi arambike vendiyathuthane. chumma evanayavuthu thoonda vendiaythu aparama avana venchu kasu paka vendiyathu ethe polapuda ungaluku. vanthama rajiniyo kamalo padatha pathama ponama illama avana pudichu thonga vendiyathu katchi arambey naan sootha pudichute varen sollevendiyathu. poi velaya paruda. vera yar padathalayum dailogue varrathe illaye ennavo rajin mattum than dialogue pesra mathiri pesaranuga. apadiye vechukitalum "katchi ellam eppo namaku ethuku kalathin kayil athu irukunu" sonnarla appa time vantha varuvan, athu varaikum neenga moodikitu unga velaye parunga.

Anonymous said...

ivlo pesareengale nee ethavuthu katchi arambike vendiyathuthane. chumma evanayavuthu thoonda vendiaythu aparama avana venchu kasu paka vendiyathu ethe polapuda ungaluku. vanthama rajiniyo kamalo padatha pathama ponama illama avana pudichu thonga vendiyathu katchi arambey naan sootha pudichute varen sollevendiyathu. poi velaya paruda. vera yar padathalayum dailogue varrathe illaye ennavo rajin mattum than dialogue pesra mathiri pesaranuga. apadiye vechukitalum "katchi ellam eppo namaku ethuku kalathin kayil athu irukunu" sonnarla appa time vantha varuvan, athu varaikum neenga moodikitu unga velaye parunga.

Anonymous said...

//எனவேதான் ரஜினிக்கே விருப்பமில்லையென்றாலும் அவர் அரசியலில் வரவேண்டுமென்று நீண்ட வருடங்களாக விரும்புகின்றனர். இதன் மூலம் குறைந்தபட்சம் தனக்கொரு எம்.எல்.ஏ. பதவியாவது வந்துவிடாதா என்பது அவர்களின் கணக்கு.//

பச்சப் புள்ளைக, பால்டிக்ஸ் வெள்ளாட்டு வெளயாட ஆசப்படுதுக. அம்புடுதேன்!

Anonymous said...

//என்னவோ அவர் திட்டி, பின்பு வாழ்த்திய அம்மாவோ, கலைஞரோ துருவ நட்சத்திரம் போல ஆடாமால், அசையாமல் கொள்கைப்பிடிப்புடன் உறுதியாக இருக்கிறார்களா?//

They are not!
But, why Rajini is projected as the savior for everyone?
Obviously, he'll be questioned!

//அரசியல் dynamic ஆகத்தான் இருக்கும். நீ அன்று அப்படி சொன்னாய்; இப்போது பல்டி அடிக்கிறாய் என்று சொல்வது சுலபம்.//

Your words only. If he or his fans cannot tolerate these questions, how is he going to survive in politics?

Further more, if he is no different from Karunandhi or Jayalalitha, then why do I need a Rajini? I'm happy with either one of them.

Anonymous said...

Suresh Kannan,

Fantastic article. There is no worst insult to his fans than the last sentence of his statement.

Your example is a laugh riot!

Anonymous said...

யோக்கியவான் வந்துட்டான் சொம்பை எடுத்து வை !! ரஜினியை வைத்து நீ எழுதிய இந்த குப்பையை பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. பொத்திகிட்டு போடா கேண.. பு..ரஜினிக்கு இமேஜ் போச்சுன்னு சொல்றதுக்கு நீ என்ன இமேஜ அப்சர்வரா? போடா டுபுக்கு

Anonymous said...

ரஜினியை பத்தி எழுதிறியே நீ என்ன ஒழுங்கா? பெருசா பேச வந்துட்டான் போடா

Anonymous said...

//எல்லாக் கன்னடர்களையும் உதைப்பேன் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டது தான் // அவர் கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இவர் பேசுவதற்கு முன் பேசிய சத்யராஜின் மீது இருந்த கடுப்பில் "உதைக்க வேண்டாமா அவரை" என்ற அர்த்தத்தில்தான் பேசியிருக்க வேண்டும்.

Anonymous said...

//கலைஞரை நீங்கள் பரிகசிப்பது புரிகிறது. ரஜினி சம்பளமும், சத்யராஜ் சம்பளமும் வெவ்வேறு தளத்தில்தான் இருக்கும். 'உளியின் ஓசை' எல்லாம் இப்போது வந்த படங்கள். இப்போதைய 25 லட்சமும் அப்போதைய 10 ஆயிரமும் ஒன்று என்று உங்களுக்கும் தெரியும். ஆனால் உங்கள் நோக்கம் வேறு என்பது புரிவதால்...இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்//

அனுஜன்யா,
I appreciate your 'common man' attitude. :)

--Nokia Fan

ISR Selvakumar said...

ரஜினி விஷயத்துல நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?

குசேலன் விவகாரத்திலிருந்தே ரஜினி வாயை திறக்கவில்லை. ஆனால் குமுதத்திலிருந்து, பிளாகர் வரைக்கும் ரஜினி 9ம் தேதி என்னமோ பண்ணப்போகிறார். சீட்டு எழுதி வைத்துவிட்டார் என்று 'மக்கு இரசிகர்களை' உசுப்பேத்தி கொண்டே இருந்தன. அதை நம்பி சில ஆர்வக் கோளறுகள் 'கட்சி கொடி' வரைக்கும் அறிவித்ததுகள். இதற்கு சில பத்திரிகைகள் கவர் ஸ்டோரி வேறு.

ஒருத்தன் சும்மா இருக்கிறான் என்பதற்க்காக, அவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாமா?

நீங்களே எழுதியுள்ளபடி அவர் பாட்டுக்கு (அதாவது ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு) ஐஸ்வர்யாவுடன் சமர்த்தாக நடனம் ஆடிக் கொண்டிருந்த ரஜினியையும், உங்கள் கூற்றுப்படி ரஜினிக்கு இல்லாத ரசிகர்களையும் தங்கள் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளும் உங்களைப் போன்றோர்கள்தான் துளியும் பொறுப்பற்ற குசும்பர்கள்.

இதற்கு மேலும் ரஜினி சும்மாயிருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் கற்பனையாக எழுதியிருப்பீர்களோ?

இனி கொஞ்ச நாளைக்கு அவருடைய அறிக்கையை மென்று கொண்டிருங்கள். இடையில் அவர் எந்திரனின் அடுத்த ஷெட்யுலை முடித்துவிட்டு வந்துவிடட்டும்.

குமுதம் மற்றும் உங்களைப் போன்றோர்களின் கற்பனை பிதற்றலுக்கு பதிலடிதான் ரஜினியின் அந்த அறிக்கை.

Sridhar V said...

// 'மாப்பு. இனிமேல் செய்ய மாட்டேன்' //

I am sorry if that hurted you -ன்னு சொன்னா மன்னிப்பு கேட்கறதுன்னு ஆயிடுமா என்ன?

ரஜினி சொன்னது - "நான் பேசியது உங்களை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்". இது ஒரு etiquette. ஆளாளுக்கு பிரிச்சு மேயறீங்களே இப்படி... கொஞ்சம் யோசிச்சு எழுதலாமே :(

அவர் ரசிகர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார் என்று குற்றசாட்டிற்கு சற்றும் குறையாமல்தான் அவருடைய ரசிகர்கள் (என்று சொல்லிக் கொள்ளும்) அவரை வைத்து சம்பாதிக்க நினைக்கிறார்கள்.

அட... நான் எப்படி வேணா இருப்பேன்னு சொல்றதுக்கு கூடவா ஒருவருக்கு உரிமையில்லை? அவர் கட்டாயமா அரசியலுக்கு வந்தே ஆகனுமா என்ன? இல்லை நான் வரவே மாட்டேன்னு வாக்குறுதி கொடுக்கனுமா? ஆளை விடுங்கப்பா...

உப்பு பெறாத விசயத்தை ஆளாளுக்கு ஊதி பெருசாக்கும்போது என்னத்த சொல்ல :(