சமீபத்தில் இறந்து போன சாய்பாபாவின் மரணத்தை முன்னிட்டு கோர்வையற்று சில எண்ணங்களை எழுத உத்தேசம்.
'96 வயது வரை வாழ்வேன்' என்று தீர்க்க தரிசனத்துடன் சொல்லியிருந்த சாய்பாபா அதை பொய்யாக்கி விட்டு 'தானும் ரத்தமும் சதையும் நோயும் கொண்ட மனிதனே' என்ற பெளதீக உண்மையை வேறுவழியில்லாமல் தனது மரணத்தின் மூலம் அவரது பக்தர்களுக்கு தெரிவித்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் உலகமெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் இந்த 'திடீர் மறைவை' ஏற்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். பலருக்கு அற்புதங்களை வழங்கின பாபாவால் 'சுயசேவையாக' தனக்கே அந்த அற்புதத்தை வழங்கிக் கொள்ள இயலாதது ஒரு துரதிர்ஷ்டம்தான்.
தான் விஷேமானவன் என்பதை நிலைநிறுத்திக் கொள்ள பாபா செய்து வந்த 'மேஜிக்' தந்திரங்களின் மீது அறிவியலாளர்கள், பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய பல சந்தேகங்களுக்குப் பிறகு கூட எப்படி பல்லாயிரக்கணக்கானோரால் இவரை நம்ப முடிந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். இதே பணியை இன்னும் பிரம்மாண்டமாக செய்யும் பி.சி.சர்க்கார் போன்றவர்கள் நகரம் நகரமாகச் சென்று விளம்பரப்படுத்தியும் பல நாட்கள் உழைத்தும் கூட சில ஆயிரங்களைத்தான் சம்பாதிக்க முடிகிறது எனும் போது அந்த உழைப்பு கூட இல்லாமல் எளிய தந்திரங்களின் மூலம் இருந்த இடத்திலேயே ஒருவரால் பல லட்சம் கோடிகளைச் சம்பாதிக்க முடிகிறது என்பதை யோசிக்க வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரே காரியத்தைச் செய்பவர்களில், ஒருவரை 'மேஜிக்மேனாகவும்' இன்னொருவரை உலகம் போற்றும் 'ஆன்மீக குருவாகவும்' இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் முரணை எவ்வாறு அணுகுவது என்று புரியவில்லை.
எவ்வாறு ஒரு தனிநபரை பல்லாயிரக்கணக்கான மக்கள் குருட்டுத்தனமாக தீவிரமாக நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. இம்மாதிரியான கூட்டம் காந்திக்குப் பின்னாலும் நிற்கிறது், ஹிட்லருக்கு பின்னாலும் நிற்கிறது. தங்களின் லெளகீக வாழ்வில் பல வாழ்வியல் பிரச்சினைகளையும் விடைகாணா இருத்தலியல் கேள்விகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து அபத்திரமான சூழலிலேயே வாழும் பொதுஜனம், ஆதார நம்பிக்கையாக எதையாவது பற்றிக் கொண்டுதான் முன்னகர வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல மேய்ப்பன் கிடைக்க மாட்டானா என்கிற ஆவலில் அலைந்து கொண்டிருக்கும் இந்த மந்தை, லேசான தலைமைப் பண்புகளுடன் கூடிய ஒருவரைக் கண்டு விட்டாலே அது பாவனையா, உண்மையா என்றெல்லாம் ஆராயாமல் அதற்காகவே காத்திருந்தது போல் அவர் பின் செல்ல ஆரம்பித்து விடுகிறது.
என்னுடைய சுய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு இதை யோசித்துப் பார்க்க முயல்கிறேன்.
பொதுவாக எல்லோரையும் போலவே 'உம்மாச்சி கண்ணைக் குத்திடும்' என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன் நான். சிறுவயதுகளில் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது அங்கு கடவுளை வழிபட வந்தவர்கள், மாமிசமலை போன்ற பூசாரிகளின், குருக்களின் கால்களிலும் 'சாமி சாமி' என்று விழுந்து வணங்கியது தன்னிச்சையாக எரிச்சலை ஏற்படுத்தியது. பத்து ரூ-வை தட்டில் போடும் கனவான்களுக்கு கண்ணில் கனிவுடன் விபூதியையும் பூவையும் பிரசாதத்தையும் வழங்கும் அந்த மாமிச மலைகள், எளியவர்களுக்கு மிக அலட்சியத்துடன் விபூதியை தூக்கியெறியும் அலட்சியத்தைப் பார்க்க கொதிப்பும் இந்த ஆன்மீக (?!) இடைத்தரகர்களின் மீது அவநம்பிக்கையும் தோன்றின. எந்த கடவுளை தேடி மக்கள் வருகிறார்களோ, அதை பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்கள் இந்த பூசாரிகள். பங்காரு அடிகளார் என்றொரு ஆசாமி இருக்கிறார். முன்பு அவரின் ஆன்மீக நிறுவனம் வெளியிடும் படங்களில் அம்மன் படம் பெரிதாகவும் இவர் கீழே அமர்ந்திருக்கும் உருவம் சிறியதாகவும் இருக்கும். நாளடைவில் கீழே வளர்ந்திருப்பவர் பிரம்மாண்டமாக வளர்ந்து அவரே 'அம்மா'வாகி விட்டார். என்ன கொடுமை சரவணன் இது.

அதைத்தவிர இந்து மதத்திலுள்ள சில அர்த்தமில்லாத சடங்குகளும் சம்பிதாயங்களும் அவற்றை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மந்தைத்தனமும் இறைநம்பிக்கை உள்ள காரணத்தினாலேயே தன்னை ஆச்சார அனுபூதியாய் நினைத்துக் கொண்டு அது குறைந்துள்ள அல்லது இல்லாதவர்களை இகழ்ச்சியாய் நோக்கும் ஆனால் தனிமனித வாழ்க்கையில் கடைந்தெடுத்த அயோக்கியர்களாக இருக்கும் இரட்டைத்தனமும் ஆகிய பல விஷயங்கள் என்னை இறைமறுப்பு கொள்கையை நோக்கி நகர்த்தின.
இடையில் விடலைப்பருவத்திற்கே உரிய சில மனச்சிக்கல்கள் காரணமாக மூன்று முறை தற்கொலைக்கு முயன்றேன். என்னளவில் அவை மூன்றுமே முழு உறுதியுடன் எடுக்கப்பட்ட தீவிரமான முயற்சிகள்தான். ஆனால் அவை மூன்றிலுமே எப்படியோ நான் காப்பாற்றப்பட்டேன் அல்லது பிழைத்துக் கொண்டேன். ஒருமுறை என்னை காப்பாற்ற முன்வந்தவரை நோக்கி "என்னை எப்படியாவது பிழைக்க வெச்சுடுங்க' என்று அதீத போதையிலும் புலம்பியது எப்படியோ மங்கலாக நினைவிருக்கிறது. உயிர் வாழ்வதையே தீவிரமாக என் ஆழ்மனது விரும்பியிருக்கிறது என்பது அதற்குப் பிறகே எனக்குப் புரிந்தது.
மூன்று விபத்துக்களிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டிருப்பது குறித்து யோசிக்கும் போது 'எதற்காகவோ நான் கட்டாயமாக உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்' என்கிற அசட்டுத்தனமான தத்துவ எண்ணங்கள் தோன்றின. ஒரு தற்கொலையைக் கூட உருப்படியாக நிகழ்த்த முடியாதவனால் பிற்காலத்தில் எதைத்தான் சாதிக்க முடியும் என்று இன்னொரு மனமே என்னை நக்கலடித்தது. இந்த சிக்கலான சூழலில் ஏற்கெனவே இறைநம்பிக்கையை விட்டொழித்த மனது வேறு எதையாவது பற்றிக் கொள்ளத் துடித்தது. அந்தச் சமயத்தில் ஆறுதலான பற்றுக்கோலாக அமைந்தது. இயற்கை. ஆம். இயற்கையின் மூலம்தான் என் ஆன்மீக தேடுதல் பாதையை அமைத்துக் கொண்டேன். இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் துளியையும் குழந்தைக்குரிய ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் பார்க்க கற்றுக் கொண்டேன். 'ஆதியிலே எல்லாமும் இருந்தது' 'பெருவெடிப்பின் மூலம்தான் இந்த பூமி தோன்றியது' என்று யூகங்களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு பல தியரிகள் அமைந்திருந்தாலும், இதுவரை கண்டிராத கடவுளைவிட கண்ணெதிரேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கருணையான இயற்கையைப் போற்றுவது மேல் என்று தோன்றியது.
எந்தவொரு நம்பிக்கையையும் பின்பற்றாமல் உலகிலேயே மிக அதிக சுமையான இருத்தலியல் குறித்தான கேள்விக்குறிகளை சுமப்பது அசாத்தியம். சுயத்தைத் தவிர எதுவொன்றையும் நம்பாமலிருக்க எவ்வித பாசாங்குகளும் அற்ற அசாத்திய மனோபலம் தேவை. அவ்வாறானவனே உண்மையான நாத்திகனாக இருக்க முடியும். என் வாழ்க்கையில் இதுவரை அப்படியொரு நபரைச் சந்தித்ததேயில்லை.
ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் ஒவ்வொருவரும் முன்னகர வேண்டியிருக்கிறது என்பதற்காகவே என் சுயபுராணத்தை சற்று விஸ்தாரமாக சொல்ல வேண்டியிருந்தது. தனிமனிதனின் இந்த பலவீனத்தையே சாய்பாபாவைப் போன்ற ஆன்மீக வியாபாரிகள் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களிடமுள்ள கடவுள்தன்மையை (?!) புறவயமாக பாமரனுக்கு புரியவைக்க வாயிலிருந்து லிங்கம், மோதிரம் வரவழைப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது போன்ற எளிய தந்திரங்களை மேற்கொண்டு 'இவரால் எதையும் செய்ய முடியும்' என்கிற நம்பிக்கையை பிரம்மாண்டமான நம்பிக்கையை விதைக்க முயன்று சிலர் அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். இந்த வியாபாரத்தில் மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல கடைகள். எளியவனுக்கு பீர்சாமியார் என்றால் கார்ப்பரேட்வாதிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு சாய்பாபா வகையறாக்கள். அரசியல், வணிக பேரங்கள் முதற்கொண்டு தனிமனித வக்கிரங்களை சாதித்துக் கொள்வது வரை பல அட்டூழியங்கள் இந்த ஆன்மீக போர்வைகளுக்குள் நிகழ்கின்றன.
அப்படி ஏமாற்றினால்தான் என்ன? குடிநீர் திட்டம், மருத்துவமனை முதற்கொண்டு எத்தனை நல்ல காரியம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? என்பது சில அப்பாவிகளின் கேள்வியாக இருக்கிறது. சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அப்படிச் செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே, குடிநீர் திட்டத்திற்கு இந்த சாமியார்களின் காலில் விழுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். உருப்படியில்லாத இலவச தொலைக்காட்சி திட்டத்திற்காக பல கோடி ரூபாய்களை வீணடிக்கும் அரசினால், அந்தப் பணத்தைக் கொண்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாதா?
அறக்கட்டளைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய்களை, சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசு எந்த தலையீடும் செய்யக்கூடாது என்று ஒரு அமைச்சரே பகிரங்கமாக அறிவிக்கிறார். யார் இனி இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கப் போகிறார்கள் என்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் போர்டிற்கு நிகராக அதிகாரப் போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள், இன்னொரு பாபாவை நோக்கி ஓடுவார்கள், அல்லது இறந்து போன பாபாவை இன்னும் அழுத்தம் திருத்தமான திருவுருவாக ஆக்கி பல நூற்றாண்டுகளுக்கும் நீடிக்கப் போகிற கடவுளாக மாற்றி விடுவார்கள்.
ஆன்மீகம் என்ற சொல்லே அர்த்தமிழந்திருக்கும் சமகால சூழலில் ஆன்மீக் வியாபாரிகளின் மீதுள்ள மயக்கம் மக்களுக்கு தீரும்வரை இம்மாதிரியான பாபாக்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டுதானிருப்பார்கள்.

Image Courtesy: http://cartoonistsatish.blogspot.com/
suresh kannan