
காலை 08.00 மணி. வடசென்னைப் பகுதி. ஆண்களை விட பெண்களே நீளமாக இருந்த அந்த வரிசையில் இருந்த ஒவ்வொருவரையும் வணங்கத்தோன்றியது. நான் பொதுவாக சற்று சாவகாசமாகத்தான் ஒட்டளிக்கச் செல்வது வழக்கம். இதுவரை எந்த குழப்பமும் நேர்ந்ததில்லை. ஆனால் இந்த முறை ரிஸ்க் எடுக்க வேண்டாமென்று சீக்கிரமாகவே சென்றுவிட்டேன். வடசென்னைப் பகுதிதான் என்றாலும் அங்குள்ளவர்களில் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே மிக ஆர்வமுடன் வாக்களிக்க காலையிலேயே வந்திருந்தார்கள். நடப்பதற்கே தள்ளாடும் முதியவர்களும் அவ்வளவு காலையில் வாக்களிக்க வந்திருப்பதைக் காண நெகிழ்வாக இருந்தது.
வாக்குச் சாவடியில், தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர், முகவரி, சின்னம் உட்பட அனைத்தும் பெரிதான எழுத்துக்களில் ஒட்டப்பட்டிருந்தது. எவ்வாறு வாக்களிக்கும் கருவியைப் பயன்படுத்துவது என்பது குறித்த போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்படிருந்தன. காவல்துறையினர் மிக கனிவாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டனர். 'அடையாள அட்டையில் இருக்கிற முகத்திற்கும் தனக்கும் வித்தியாசம் இருக்கிற காரணத்தினால் வாக்களிக்க தன்னை அனுமதிக்கவில்லை' யென்று ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார். நான் எனக்கான வாக்கை எந்தவித குழப்பமுமில்லாமல் அளித்து விட்டு வந்தேன்.
அரசியல் கட்சிகள், கூட்டணி என்றல்லாமல் என்னுடைய தொகுதியில் உள்ள வேட்பாளர்களில் சிறந்தவர் என்று நான் கருதக்கூடியவருக்கே ஓட்டளித்தேன். யாருக்கு வாக்களிப்பது என்பதை முன்பே முடிவு செய்துவிட்டதால் எவ்வித குழப்பமுமில்லை.
ஒட்டளித்துவிட்டு வெளியே வரும் பிரபலங்கள் தங்கள் ஆட்காட்டிவிரலை உயர்த்தி காண்பிக்கிற புகைப்படங்களை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்த பிறகு தங்களிடம் கோரிக்கைக்காக வரும் மக்களிடம், அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி.
image courtesy: original uploader
suresh kannan
7 comments:
//அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி. //
:)))
வாழ்த்துகள்.
பணம் விளையாடுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நடுவிரலை உயர்த்திக் காட்டுவார்கள் போலத்ததான் தோன்றுகிறது.
கோவி.கண்ணன் said...
//அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி. //
:)))//
:))):))):)))
உதயசூரியனுக்கு வாக்களித்ததற்காக நன்றி! :-)))))
ஓட்டுப் போட்ட அனைவருக்கும் ஓட்டுப் போடாத என்னைப் போன்றோரின் சார்பாக வாழ்த்துக்கள்.
(லக்கி என்னமோ கிசு கிசுக்கிறாரே!சரக்கு,சைடு டிஷ்க்கு தேறுமா:)))
//அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி. //
:)))//
hahaha super..
Post a Comment