Friday, May 29, 2009

உலகத் திரைப்படங்களை காண.....

தமிழ்ப் பதிவுலகம் பொதுவாக அவதூறுகளாலும் குடுமிப்பிடி சண்டைகளாலும் கற்பிதங்கள் குறித்த சச்சரவாலும் தமக்கு முன் இருக்கும் நுட்ப வளர்ச்சியை, சக்தியை வீணடித்துக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து மாறுதலாக வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் முன்னுதாரணமாக திகழும் சில பதிவர்கள் குறித்து பெருமையடையவே தோன்றுகிறது. சக பதிவரான பைத்தியக்காரன் சமீபத்திய உதாரணம். பரவலாக அறியப்படாத எழுத்தாளரான கோபி கிருஷ்ணனின் நூற்களை கவனப்படுத்தியும் சிறுகதை போட்டியை அறிவித்தும் ... என அதன் தொடர்ச்சியாக உலக திரைப்படங்கள் குறித்து தன்னுடைய செயலை தொடர்கிறார்.

Photobucket

வணிகச் சினிமாவின் நச்சுச் சூழலில் திணறி அதிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும் உலக சினிமா குறித்து கேள்விப்பட்டும் வாசித்தும் அதனைக் காண ஆவலிருந்தும் சூழல் அமையாத வலைப்பதிவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை இலவசமாக நண்பர் பைத்தியக்காரன் ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டும் நன்றியும். இதன் மூலம் சிறந்த திரைப்படங்களை காணவும் அது குறித்து உரையாடவும் நம்மால் இயலக்கூடிய வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு பைத்தியக்காரனின் பதிவு:
வாங்க இலவசமாக உலகத் திரைப்படங்களைப் பார்க்கலாம்


suresh kannan

9 comments:

shabi said...

என்ன எல்லாரும் ஒரே ஒலக சினிமா பதிவா போடுறீங்க இதுல ஏதும் உள்குத்து இல்லியே

shabi said...

ME THE FIRST

shabi said...

ME THE FIRST

பைத்தியக்காரன் said...

மிக்க நன்றி சுரேஷ்.

நெகிழ்ச்சியாக இருக்கிறது...

இப்படி செய்யலாமா என பேச்சுவாக்கில் சொன்னதுமே பத்ரி ஒப்புக் கொண்டு தானே செலவை ஏற்பதாகவும் உறுதியளித்தார்.

கோபி கிருஷ்ணனின் நூல்களை பரவலாக கொண்டு போய் சேர்க்க பிரியத்துக்குரிய சுந்தர் தோள் கொடுத்தார். 'தமிழினி' வசந்தகுமார் 'தன்னையே' கொடுத்துவிட்டார்.
சிறுகதைப் போட்டியிலும், உலக திரைப்பட இயக்க முயற்சியிலும் சுந்தரின் பங்கு கணிசமானது.

சிறுகதை போட்டிக்கான லோகோவை லக்கிலுக் தயாரித்தார் என்றால், பாலபாரதியும், அவருமாக அனைத்து திரட்டிகளுக்கும் மெயில் அனுப்பி அறிவிக்க செய்தார்கள்.

அனைத்து திரட்டிகளும் இதற்கு அளிக்கும் ஆதரவு கணிசமானது.

நர்சிம் உட்பட பல நண்பர்கள் தொடர்ந்து தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு என்ன உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

நிர்வாக ரீதியாக போட்டிக்கான கதைகளை ஒழுங்குப்படுத்தி தரட்டுமா என 'வடிகால்' கிருத்திகா கேட்டிருக்கிறார். மு. வி. நந்தினி, நான் வேண்டுமானால் ஸ்பான்சர் பிடித்து தரவா என்று அன்புடன் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

எத்தனை நண்பர்கள் போட்டி குறித்த அறிவிப்பை கேட்காமலேயே தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு, லோகோவையும் இணைத்திருக்கிறார்கள் தெரியுமா?

நெகிழ்ச்சியாக இருக்கிறது சுரேஷ்...

இப்படி நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது.

நெகிழ்ச்சியாக இருக்கிறது சுரேஷ்.

மொத்தத்தில் அனைத்துமே கூட்டு முயற்சிகள்தான்.. நமக்காக நாமே செய்து கொள்வதுதான்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வண்ணத்துபூச்சியார் said...

பகிர்விற்கு நன்றி முரளிகண்ணன்.

உலக சினிமா பதிவுகளை மட்டுமே எழுதி வரும் என் வலையும் ஒரு முறையாவது பாருங்கள்..

வாழ்த்துகள்.

கார்க்கி said...

/வணிகச் சினிமாவின் நச்சுச் சூழலில் திணறி அதிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும்//

சிரிப்பு வருகிறது. அதை விரும்பாதவ்ர்களால் எளிதில் அதை புறந்தள்ள முடியாதா?அந்த அளவிற்கு கூட பக்குவமில்லாமல், பார்த்துவிட்டு துரை வாயில் நுரை என்று பதிவு போடும் மேதாவிகள் தான் அவர்கள். உலக சினிமா பார்க்கும் அறிவு பெற்றவர்கள் தமிழ் வணிக சினிமாவை அடையாளங்கண்டு ஒதுக்குவதில் என்ன சிரமம் இருக்க முடியும்?

Anonymous said...

கதை போட்டி நல்ல விசயம்தான்.
பாராட்டலாம்.

ஆனால் பூயுகோ....உரையாடல் என்று
அடிவயிற்றில் கிலி ஏற்படுத்து-
கிறார்களே.

எதற்கோ மாஸ்டர் பிளானோ?

"அகநாழிகை" said...

ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்ட நகர்வுகள் அவசியம், அதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டு வரும் பைத்தியக்காரன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Dr.Rudhran said...

பதிவர் கூட்டம் நடக்கும் அதே இடத்தில், தமிழ்நாட்டின் சிறந்த ஓவியர்களின் ( இதில் பிரபலமான மணியம்செல்வன் மற்றும் மருதுவும் உண்டு) கண்காட்சியும் நடக்கிறது, சீக்கிரமே வந்தால் ஒவியங்களையும் ரசிக்க நேரம் இருக்கும். இதை உங்கள் நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பார்வதி கூடத்தின் உரிமையாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.