Tuesday, June 21, 2011

ஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்





தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கான உதாரணக் காட்சி ஒன்று.

தனது நம்பிக்கையான அடியாட்களில் ஒருவனான முள்ளு, தங்களுக்குத் தெரியாமல் எதிரணி நபரான பசுபதியிடம் எதையோ பேரம் பேசப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ரவுடித் தலைவன் கஜேந்திரனும் வலது கை கஜபதியும் காவல் நிலைய வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் எதற்கும் அசராத கஜேந்திரன் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க, கஜபதியோ பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் ஜோஸ்யம் கூறும் ஒருவன் இருவரிடமும் தொணதொணவென்று அரற்றிக் கொண்டேயிருக்கிறான். " பாருங்க சார்..நீங்க ரெண்டு பூவ மனசுல நினைச்சுக்கங்க. அதை நான் சரியா சொல்லிட்டன்னா.. என் கிட்ட ஜோசியம் பாருங்க... இல்லாட்டி வேண்டாம் சார். ..நீங்க நினைச்சது வெள்ளைல மல்லிகையும் சிவப்புல ரோஜாவும்.சரியா"  ஜோஸய்க்காரனின் தொணதொணப்பை சகிக்க முடியாமல் கஜபதி தவிக்க, கஜேந்திரன் அதற்கும் அசராமல் உட்கார்ந்திருக்கிறான். ஒருநிலையில் ஜோஸ்யக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விலகி விடுகிறான். இருந்தாலும் இடிசசபுளி போல அமர்ந்திருக்கும் கஜேந்திரனிடம் தழுதழுத்த குரலில் கேட்கிறான். "அப்படி என்ன பூவத்தான் நினைச்சீங்க?'

சற்று நேரம் மவுனம். கஜேந்திரன் கரகரத்த குரலில் சொல்கிறான்.

பிரபு - குஷ்பு.

இந்த பெயர்களின் பின்னாலுள்ள trivia-வினால் திரையரங்கமே வெடிச்சிரிப்பில் அலறுகிறது.

சப்பையும் சுப்புவும் உடலுறவிற்குப் பின் சாவகாசமாக அமர்நது பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட, சிங்கப் பெருமாள்தான் வந்து விட்டார் என்று சப்பை அழ ஆரம்பிக்க... அந்தக் காட்சி இன்னொரு உதாரணம்.

நகைச்சுவையில் துவங்கி தீவிரத்தில் முடிவதற்கு உதாரணம் .. ஸ்பீக்கர் போன் காட்சி. 'பசுபதிய போட்டுத் தள்ளிடு"

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்... மிக யதார்த்தமான உரையாடல்கள். வடசென்னை ரவுடிகள் என்ன ஆக்ஸ்போர்டு ஆங்கிலத்திலா பேசி்க் கொள்வார்களா? 'யாருண்ணே.. அண்ணியா, என்ற கேள்விக்கு... மனைவி தந்த தொணதொணப்பு எரிச்சலில் இருக்கும் பசுபதி  "இல்ல. சுண்ணி" என்கிறான். ஆனால் விவஸ்தையே இல்லாத சென்சார் போர்டு இந்த மாதிரி வார்த்தைகளை வெட்டி அதன் மூலமே இந்தக் காட்சிகளை  ஆபாசப்படுத்தியிருக்கிறது. பொதுச் சமூகத்துடன் புழங்கும் போது இம்மாதிரியான வார்த்தைகளை நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம்; உபயோகித்திருப்போம். ஆனால் திரையில் இதை கேட்கும் போது மாத்திரம் பாசாங்குடன் கோபம் கொள்கிறோம் என்பது மாத்திரம் எனக்கு புரியவில்லை. மேலும் இது 'வயது வந்தவர்களுக்கான படம்' என்ற சான்றிதழுடன்தான் வெளியாகிறது. அதிலும் குறிப்பாக ஆ.கா. போன்ற படங்கள் Matured Audience எனப்படும் முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு மாத்திரமான படைப்பு. தயாரிப்பாளரான, எஸ்.பி.சரண், குழந்தைகளும் படத்தின் தொனியோடு உடன்பாடில்லாத பார்வையாளர்களும் தவிர்க்க வேண்டிய படம் என்று தெளிவுப்படுத்துகிறார்.

வசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத  பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது.

"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா"


"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே"


"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...


"என்னா நீங்க டொக்காயிட்டீங்களா?"


"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி."  - " ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா?"


"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்".


"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு"


"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு".


"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....

குறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது  போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வினோத்தின் ஒளிப்பதிவு. படத்தின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இயக்குநரின் மனச்சாட்சி போல் செயல்பட்டிருக்கிறார். Source of lighting எனப்படும் அந்தச் சூழலில் இருக்கும் இயற்கையான ஒளியைக் கொண்டே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பெருமாள் வீட்டின் இருளும் வெளிச்சமும் இன்டீரியரும், பாவா லாட்ஜின் கோணங்களும் பசுபதி சேஸிங் காட்சிகளும் தமிழ் சினிமாவிற்குப் புதியது. ஒரே நாளின் நிகழ்வுகளின் தொகுப்பு என்பதால் எடிட்டிங்கின் பங்களிப்பு இதில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் இப்படியானதொரு கால எல்லைக்குள் திரைக்கதையை அமைத்துக் கொள்ளும் போது காலத்தின் தொடர்ச்சி கறாராகவும் சீராகவும் வருவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இதில் நழுவியிருப்பது போல் தோன்றுவது நெருடலாக இருக்கிறது.

இளையராஜா தன்னுடைய இத்தனை வருட அசுர உழைப்பால் கிடைத்த பின்னணியிசை புகழை, யுவன் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார் என்று சொன்னால் சற்று மிகையாகத் தோன்றலாம். இசையை நவீன யுகத்திற்கு பொருத்தமாகவும் கிளிஷேக்களை உதறியும் உபயோகிப்பதில் ராஜாவையும் யுவன் தாண்டிச் சென்றிருக்கிறார் என்பது நிச்சயம் மிகையாக இருக்காது. பசுபதிக்கும் கஜேந்திரன் குழுவினருக்கும் இடையில் நிகழும் தீவிரமான சண்டைக்கு (ஆனால் எனக்கு காமெடியாகத்தான் தோன்றியது) வழக்கமாக உபயோகிக்கும் பரபரப்பான இசைக்குப் பதிலாக  துள்ளலான இசையையும், சிறுவன் கொடுக்காப்புளி கோகெய்ன் பையை ஒளித்து விட்டு வர ஓடிச் செல்லும் காட்சியில் தந்திருக்கும் இசையும் சப்பையும் சுப்புவும் உரையாடும் காட்சிகளில் தந்திருக்கும் இசையும் பிரமிக்க வைக்கிறது. என்றாலும் பீத்தோவனின் இசைத் துணுக்குகளும், IN THE MOOD FOR LOVE திரைப்படத்தின் பின்னணி இசையும் சில இடங்களை நினைவு கூர வைக்கின்றன.

தமிழ் சினிமாவை சர்வதேச தளத்திற்கு நகர்த்திச் செல்வதை இந்தப் படத்தின் மூலம் சாத்தியப்படுத்தியதில் யுவனின் பங்கும் அபாரமாக அமைந்திருக்கிறது எனலாம்.
 மறுபடியும் மறுபடியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னும் நவீன திரைக் கதைச் சொல்லியை வியக்க வேண்டியிருக்கிறது. சில உதாரணங்கள் தருகிறேன்.

இந்தப் படத்தில் பெரும்பாலும்  80-களின் திரைப்படங்களின் பாடல்கள் எங்காவது ஒலி்த்துக் கொண்டேயிருக்கின்றன. (இது சற்று அசெளகரியத்தை தருகிறது என்பதையும் சொல்ல வேண்டும்). தொலைக்காட்சி வீடியோவில் ஒளிபரப்பாகும் பாடல்களை பார்வையாளனுக்கு எந்தவொரு இடத்தில் இயக்குநர் காட்டுவதில்லை. ரவுடிகளுக்கு இடையே இடைத்தரகராக செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்வினாயகம், டீக்கடையில் பொன்மேனி உருகுதே... வீடியாவில் சிலுக்குவை பார்த்து சிலாகிக்கிறார். ''இந்தப் பொண்ணை எனக்கும் பிடிக்கும்யா".. அதே போல் சிங்கப் பெருமாளின் வீட்டிலும் தொலைக்காட்சி இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எல்லா இடத்திலும் அவைகளின் ஒலியை மாத்திரமே பார்வையாளனால் கேட்க முடிகிறது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் தொலைக்காட்சியின் பிம்பத்தை இயக்குநர் காட்டுகிறார். அது அணைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் சப்பையும் சுப்புவும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பிம்பங்கள். போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை விட அன்றாட வாழ்வின் நிஜ பிம்பங்களையே இயக்குநர் பார்வையாளனுக்கு காட்ட விரும்புகிறார் என்று யூகிக்க முடிகிறது. (எப்பூடி).

பசுபதியின் மனைவி நைச்சியமாக கடத்தப்படும் போது வீட்டின் முன் வடை சுட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிழவி பிரேமின் ஓரத்தில் போகிற போக்கில் தெரிகிறார். இயக்குநர் நினைத்திருந்தால், அவருக்கு ஒரு குளோசப்பை போட்டு, சிங்கப்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியை அழைத்துச் செல்வதை பார்ப்பது போல் காட்டி, பார்வையாளனின் மனதில் நிறுவி, அடுத்தக் காட்சியின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தியிருக்கலாம். சிறிது நேரம் கழித்து பசுபதி வந்து அந்த கிழவியிடம் விசாரிக்கும் போதுதான்.. அவர் குளோசப்பில் காட்டப்படுகிறார்.

நாயகன், சென்னையிலிருந்து சிங்கப்பூர் வருவதை இன்னமும் விமானத்தைக் காட்டி, பார்வையாளனை அவமானப்படுத்த வேண்டாம் என்பதற்காக இதை உதாரணமாகச் சொல்கிறேன்.

அதே போல் சிறு கதாபாரத்திரத்தை கூட எப்படி நுட்பமாக வடிவமைப்பது என்பதற்கான பாடம் இதில் இருக்கிறது. சில காட்சிகளில் மாத்திரமே தோன்றும் சப்-.இன்ஸ் மயில்வினாயகம். குருவி மூலம் கடத்தி வரப்படும் கஜேந்திரனின் சரக்கை குருவி விற்று விட நினைக்கிறான். அது எங்கே கிடைக்கும் என்கிற விவரத்தை மயில்விநாயகம்தான் பசுபதிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு தெரிவிக்கிறான். கூடவே அது கஜேந்திரனின் சரக்கு, ஜாக்கிரதை என்று எச்சரிக்கவும் செய்கிறான்.

உரையாடலின் இறுதியில் பசுபதி 'இதை வெளியில் சொல்ல மாட்டீங்களே" என்று கேட்பதற்கு மயில்விநாயகம் சொல்கிறான். "தெரியலையே".

இன்னொரு முறை இன்னொரு தகவலைப் பரப்புவதற்கு தொலைபேசுவதற்காக பசுபதியின் மொபைல் போனைக் கேட்கிறான். தகவல் தெரிவிப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டாலும் போன் காசை மிச்சப்படுத்தும் அல்பத்தனம் காரணமாக இதைச் செய்கிறான். பசுபதி அதற்கும் தான் காசு தருவதாக சொல்வதும் அசடு வழிந்து கொண்டே தன்னுடைய மொபைலை உபயோகிக்கிறான். இடைத்தரகனுக்கு, அல்பத்தனமாக இருந்தாலும் பணம்தான் முக்கியம் என்பதற்கான கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.

அதே போல் கொலைவெறியுடன் துரத்தும் கஜேந்திரனின் ஆட்களிடம் தப்பிப்பதற்காக உயிர்பயத்துடன் ஓடும் பசுபதியின் கூடவே அவனது மனவோட்டமும் ஒலியாக பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. "என் கூட என் சாவும் ஓடிவர்றது எனக்குத் தெரியுது". படத்தின் கவித்துவமான தருணங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.

இந்தப் படத்தின் அசலான லொக்கேஷன்கள் பிரமிக்க வைக்கிறது. ஒரு மளிகைக்கடை காட்டப்படுகிறதென்றால் அது உண்மையான மளிகைக்கடையாக இருக்கிறது. செளகார்பேட்டை, மின்ட் தெருவில் நுழையும் காமிரா அற்புதமாக அதை படம்பிடித்திருக்கிறது. (ஆனால் இது வடசென்னையின் நிலப்பகுதியை காட்சிப்படுத்தவில்லை. அந்த அடையாளம் தேவையில்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம்).

இப்படி பல நுட்பமான காட்சிகளை உதாரணமாக சொல்ல முடியும். அதே சமயத்தில் சிறு சிறு குறைகளும் இல்லாமல் இல்லை. தனது தந்தையை, கடத்திச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தருவதாக உறுதியளிக்கும் பசுபதியிடம், சிறுவன் கொடுக்காப்புளி கேட்கிறான். "உன் பொண்டாட்டியையே பத்திரமா வெச்சுக்கத் துப்பு இல்ல. எப்படிய்யா எங்க அப்பாவை கொண்டாருவே?" அதிகப்பிரசங்கித்தனமாக பேசும் குழந்தைகள், தமிழ் சினிமாவிற்குப் புதிதில்லை என்றாலும் இத்தனை விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் இந்தப் பிசிறுகளையும் கவனித்திருக்கலாம். சிக்கலான ஒரு சூழ்நிலையில், அதுவும் முகம் பார்த்திராத ஓர் அந்நியனிடம் ஒரு சிறுவனால் இப்படிப் பேசு முடியுமா? மற்றபடி அந்தச் சிறுவனின் நடிப்பு பல இடங்களில் அட்டகாசம்.

இயக்குநர் தியாகராஜன் குமாராஜா லயோலாவில் விஸ்.காம் படித்து விட்டு, சில விளம்பரப் படங்களை இயக்கி விட்டு, ஆட்டோ (ஓரம் போ) -விற்கு வசனம் எழுதி விட்ட அனுபவங்களில் இந்தப் படத்தை இயக்க முன்வந்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, அவர் யாரிடமும் இதுவரை உதவி இயக்குநராக இருந்தததில்லை என்பது. தனித்தன்மையோடு ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு இது ஒரு முக்கியமான தகுதி என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் இன்னமும் கூட குருகுல வாசமே கல்வியாக அமைகிறது. இது ஒரு வகையில் பலம்தான் என்றாலும் இன்னொரு வகையில் குருக்களின் அபத்தங்களின் வழியிலேயே சிஷ்யர்களும் பின்பற்றிச் செல்லும் அவலமே பெரும்பாலும் நிகழ்கிறது. தமிழ் சினிமாவின் பாதையில் முக்கியமான மைல்கல் திரைப்படமான 'நாயகன்' இயக்கிய மணிரத்னமும் யாரிடமும் உதவியாக இருந்திராதவர் என்பதையும் இங்கு நினைவு கூறலாம்.

ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்திருக்கிறது எனலாம். கதைச் சொல்லாடலில் ஓர் அதிநவீன பாதையை இட்டுச் சென்றிருக்கிறார் குமாரராஜா. இனி வரும் இளம் இயக்குநர்கள் அதை இன்னமும் முன்னெடுத்துச் செல்வார்களா, அல்லது வணிகப்பட மாய்மாலங்களின் உத்திகளின் மூலம் அந்தப் பாதையை குப்பைகளினாலும் மலத்தினாலும் மூடி விடுவார்களா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் காணுங்கள். நிச்சயம் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அத்தகையது. மொக்கை பிரிண்டில் கண்டிப்பாக பார்க்காதீர்கள்..அரங்கில் காண முடியாவிட்டால் ஒரிஜினல் டிவிடி வரும் காத்திருந்தாவது பாருங்கள். எவ்வித அரசியலும் இல்லாவிட்டால், ஆரண்ய காண்டத்திற்கு நிச்சயம் நான்கைந்து தேசிய விருதுகள் நிச்சயம். சோமசுந்தரத்திற்கு துணை நடிகருக்கான விருது நிச்சயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங்..பின்னணி யிசை, சிறந்த திரைக்கதை.. இத்தனைக்கும்.

இத்தனை எழுதி வி்ட்டாலும். ஆரண்ய காண்டத்தின் முக்கியத்துவத்தை சரியாகச் சொல்ல வில்லையோ என்கிற தயக்கம் ஏற்படுகிறது. அத்தனை வலுவான படத்தை இன்னமும் வலுவாக உங்களுக்கு பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். DO NOT MISS IT.  முன்னமே சொல்லியிருந்த படி இந்தத் திரைப்படம் முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களுக்கானது. இன்னமும் லாலிபாப் சுவைக்கும் வாலிப வயோதிகர்கள், இந்தப்படத்தின் அருகில் கூட வந்து தொலைக்காதீர்கள். நன்றி.

suresh kannan

28 comments:

மணிஜி said...

சுரேஷ்...நான் மிகவும் எதிர்பார்த்த படம்..ஏமாற்றவில்லை..உங்கள் விமர்சனமும் அப்படியே.....பழைய பாடல்கள்...செல்போன்...2011ல் நியூவேவ் சினிமா ..ஆனால் ???

Anonymous said...

கிளாசிக் பிலிம் ,அண்ட் கிளாசிக் ரிவீவ்

bandhu said...

பிரமாதமான படம்! அசந்து போய் நின்று விட்டேன், படம் பார்த்து! இதன் இந்தி பட உரிமைக்காக எஸ் பி சரண் வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள் என்று நம்புகிறேன்!

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...
அசத்திவிட்டீர்கள்...
உங்கள் விமர்சனத்தில் ஆகச்சிறந்த பதிவு.
இப்படத்துக்கு நானும் பதிவு எழுதி எழுதினேன்...குமுதம் தரத்தில்...
உங்களுடையது கணையாழி தரம்.

இயக்குனர் தியாகராஜன் குமார ராஜாவிடம் உங்கள் பதிவைப்பெருமையாகக்குறிப்பிட்டேன்.[முதல் பாகம்]

naren said...

நண்பரே நன்றி. ஒரு படம் பார்த்தால் அந்த படம் பார்க்கும் ரசிகனின் எண்ணம் பலவிதம். ஆரண்ய காண்டத்தை பார்த்த பொழுது எனக்கு ஏற்பட்ட எண்ணம் உணர்ச்சிகள், நீங்கள் பார்த்த எண்ணம் உணர்ச்சிகள் ஆகியவை வேறுப்பட்டவை. இதுதான் அந்தப் படத்தின் வெற்றி.

geethappriyan said...

நல்ல விமரசனம்,அருமை

தமிழ் திரு said...

தெளிவான, நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி !!!

Anonymous said...

நல்ல விமர்ச்சனம். 80களின் பாடல்களை உபயோகித்தது நன்றாக இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால், இம்மாதிரியான படங்களுக்கு அவ்வகையான பாடல்கள் தான் கவித்துவத்தை கூட்டும். டாரான்டினோ போன்றோர் படங்களிலும் பழைய பாடல்களையோ இசையையோ கேட்கலாம். நீங்கள் சில குறைகளை சுட்டிக் காட்டத் தவறிவிட்டீர்கள்.
சில காட்சிகளும், இசையும் அப்படியே ஹாலிவுட் படத்தின் அப்பட்ட காப்பி.

டீக்கடையில் போலீஸ் 'விசயம் நெஞ்சுவரை வந்துவிட்டது, ஆனால் வாயால் சொல்ல முடியவில்லை என்பதைப் போல் கூறுவார். உடனே பசுபதி பணத்தை கொடுத்ததும், விசயத்தை சொல்லுவார்' இது 'தி குட் தி பேட் அண்ட் தி அக்லி'யில் வரும் காட்சி. கஜேந்திரனுடன் பசுபதி மோதும் சண்டையில் '300' படத்தின் சாயல்.

சில காட்சிகளில் யுவன் அப்பட்டமாக பிரெஞ்ச் படமான அமிலியிலிருந்து (அல்லது 'மிக்மேக்'- இரண்டு படத்தை எடுத்ததும் ஒரே இயக்குனர், இசையமைத்ததும் ஒரே இசையமைப்பாளர்)இசையை களவாடி கோர்த்திருப்பார். அது தந்தை மகன் காட்சிகள் என்று நினைக்கின்றேன்.
தவிர, சில டென்சனான இடங்களில் கில் பில் இசையை கோர்த்திருப்பார். ஆனால் அதை பின்னணியில் விட்டு விட்டு மேலும் சில இசைக் கருவிகளை வாசித்திருப்பார்.

நீங்கள் தந்தை-மகன் காட்சிகளைப் பற்றி உங்கள் விமர்ச்சனத்தில் பெரிதாக ஒன்றும் கூறவில்லை. அவை லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல், பைசக்கிள் தீஃப் போன்று அட்டகாசமாக இருந்தது.


வாசக அன்பர்கள் ஏன் இவன் குறையாக கூறுகிறான் என்று எண்ணிவிடக்கூடாது. ஏனெனில், இம்மாதிரியான படங்கள் வெளிநாட்டு விழாக்களில் திரையிடும் போது, ஆங்கிலப் படத்தை பார்த்து காப்பயடித்துள்ளார்கள் என்று கண்டுகொண்டால் நமக்கு தான் கேவலம்.

இது ஒரு நேர்த்தியான மனமுதிர்ச்சி உள்ளவர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படம். குடும்பத்தோடு பார்ப்பதற்கான படமல்ல. வழக்கம் போல திருட்டு விசிடியை வாங்கி போய் உங்க குழந்தைகளிடம் கொடுத்து பார்க்க சொல்லிவிடாதீர்கள்.

அன்பேசிவம் said...

அட்டகாசம், அந்த மாமுல் போலிஸ் மயில்வாகனம்ன்னு நினைக்கிறேன். சூப்பர் பாஸ். அருமையான ரிவ்யூ.

ஆதவா said...

அனானி சார்,
விட்டா நீங்க 1931ல இங்க்லிஸ் படத்தில சொல்றமாதிரியே ஐ லவ் யூ சொல்றானுங்கன்னு சொல்லுவீங்க போல...
நீங்க சொன்ன எல்லா படங்களையும் பலத்டவை பார்த்திருக்கிறேன். எந்த படத்தின் சாயலும் ஆ.கா வில் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்பறம் அமிலி, கில்பில்.... சார்... எதுக்கும் இந்த படங்களை ஒருமுறை பாருங்க!
-----------------
நல்ல விமர்சனம் சுரேஷ் கண்ணன் !!!

manjoorraja said...

மிகவும் விலாவாரியாக விமர்சித்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

விரைவில் காண முயற்சிக்கிறேன்.

Jeyakumar said...

:-))

Ini oru 10 to 20 thamizh padaththai naar naaraa kizhikkalaam..

GOBY said...

Miga chirantha noonakkamana pathivu. Nandri Suresh.

Ashok D said...

:)

Anonymous said...

உங்களின் இந்த பதிவை படித்தேன். இதை படிக்கும் முன்னரே ஆகாவை பார்த்தேன். உங்கள் அளவிற்கு நான் எதையுமே நுணுக்கமாய் பார்க்கவில்லை.(உதாரணம்:க்ளோசப்பில் காட்டப்படாத கிழவி ஷாட்) ஒரு படத்தை முழுமையாக உள்வாங்க 4விஷயங்கள் தேவை போலிருக்கிறது.

1. மூளை
2. படம் முடியும் வரை நம்முடைய எதிர்பார்ப்புகளை விளக்கி வைத்து விட்டு படத்தை காணும் மனநிலை
3. வெறுமனே நம் பொழுது போக்கிற்காக அல்லாமல் படத்தை எடுத்தவன் மேல் அக்கரையோடு படத்தை காண்பது
4. அல்லது விமர்சனம் எழுதுவதற்காகவும் தன் புத்திசாலித்தனத்தை காட்டிக் கொள்வதற்காகவும் படத்தை மிகவும் கவனத்தோடு ஊன்றிக் காண்பது.

...d...

Anonymous said...

u can place a separate color for links appearing in blog post(u have set black as link color everywhere...in blog posts u can place a separate link color)

https://docs.google.com/document/d/1w37qSF6Y-BJr8nfCu_blP0Kcptc21BEl-mRimB9BEKM/edit?hl=en_US

Anonymous said...

http://cliched-monologues.blogspot.com/


see this blog...it has cinema reviews of world cinema..all r written very shortly without testing our patience...

add it to google reader... i'm reading only essays on world cinema only in blogs...i dont like to read lenghty essays...the essays in above blogs r very short..

Dinesh Ramakrishnan said...

Master class post for deserving movie...

Anonymous said...

http://idroos.blogspot.com/2011/05/blog-post.html

see this...

குழந்தைகளை கடத்திக் கொண்டு போகின்றவனையெல்லாம் என்ன செய்வது.

Anonymous said...

http://vandhemadharam.blogspot.com/feeds/posts/default/-/பிளாக்கர்?max-results=500


add above url in ur google reader...u will get posts only from the category called blogger fom the blog vandhematharam..there r 104 posts in the above label feed.....

Anonymous said...

http://ramasamywritings.blogspot.com/2011/07/blog-post_10.html

in the above essay by ramasamy i like d following line...I too behaved in this way only...


பத்திரிகைகளிலும் இணைய தளங் களிலும் சொந்த வலைப்பூக்களிலும் சினிமாவை விமரிசித்துக் கருத்துக் கூறுபவர்களைச் சினிமாவின் ”பார்வையாளர்கள்” என்ற அடக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பார்வையாளர்கள் மட்டுமல்ல; பார்த்து விட்டுத் தன்னுடைய கருத்தைத் தனக்குரியதாக மட்டும் உருவாக்கிக் கொள்ளாமல் தான் உருவாக்கிக் கொண்ட கருத்தின் வழியாக அல்லது கோணத்தின் வழியாக மற்றவர்கள் பார்க்க வேண்டும் அல்லது பார்க்காமல் ஒதுங்கிவிட வேண்டும் என்று விரும்புபவர்கள்.

read that essay by professor ramasamy...

காதர் அலி said...

தெளிவான, நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி !!!

viki said...

உங்களை தளத்தை நான் கண்டுபிடித்தது எனது அதிர்ஷ்டமே.அவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள்(உணர்ச்சி வயப்படாமல் அறிவு பூர்வமாக எழுதுவதே உங்கள் சிறப்பு என்பேன்.)என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை.இது பகட்டான விமர்சனம் இல்லை.மனசார சொல்லுகிறேன்.

அம்பாளடியாள் said...

வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......

கோஹினூர் காண்டம் said...

சரியான மொக்க படம் தலைவலிதான் மிச்சம் சும்மா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர் வளைகாப்பு பிரசவம்னு பில்டப் எலாம வாணாம்!!சரியான வாந்தி !!தூ

சுமன் said...

பார்க்கவே முடியலை..அப்படியொரு குப்பைப் படம்..எப்படித்தான் பொறுமையாப் பார்த்தீங்களோ தெரியாது..அதில் வேற சிலுக்குவைப் பிடிக்கும்னு வேறு சொல்றா..அவரை யாருக்காவது பிடிக்குமா?

நல்லவேளை இந்தப் படத்துல நடிக்க த்ரிஷா ஒத்துக்கல.. நடிச்சிருந்தா அவா இமேஜே போயிருக்கும். இந்தப் படத்துக் கதாநாயகி ஒரு ஒம்போது ஜாடையில இருக்கா..எங்கிருந்துதான் தேடிப் பிடிச்சாங்களோ?

சார்..நல்ல பட விமர்சனங்களா எழுதுங்க.. நீங்க எழுதப் போற மங்காத்தா விமர்சனத்துக்காக காத்திருக்கேன்.

Anonymous said...

I have read several just right stuff here. Certainly worth bookmarking for revisiting.
I wonder how much attempt you place to make the sort of wonderful informative website.


Also visit my webpage: http://www.amazon.com/gp/product/B00BCN1CF6

Anonymous said...

Hi there, I enjoy reading through your post. I wanted to write a little comment to support you.


Feel free to visit my site: is turmeric curcumin (B111888S.Wordpress.com)