இணையத்தில் இயங்குவதென்பது மனஉளைச்சல்களாலும் கசப்புகளாலும் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்ட சமகால சூழலில் அதைச் சகித்துக் கொண்டு தொடர்வது இனியும் என்னால் சாத்தியப்படவில்லை. இனி இணையத்தில், பதிவோ, பஸ்ஸோ... இன்ன பிற எந்தவொரு வடிவத்திலும் என் எழுத்து வராது.
இதுவரை என் வலைப்பதிவை வாசித்து பின்னூட்டமிட்டு ஆதரவு தந்த நண்பர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.
(இது நாள் வரை பழகிய நட்புகளிடம் சொல்லி விட்டு செல்வதே நன்று என்று தோன்றியதால் இந்த அறிவிப்பு. தயவு செய்து அனுதாப / திரும்ப வா - பின்னூட்டங்களையோ இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவற்றிற்கு பதிலளிக்கும் மனநிலையிலும் நான் இல்லை. புரிதலுக்கு நன்றி).
(POST SCRIPT: இந்த அறிவிப்பை நேற்று கூகுள் buzz-ல் வெளியிட்ட போது இது ஏப்ரல் 1-க்கான விளையாட்டு என்று சில நண்பர்கள் கருதி விட்டனர். இந்த முடிவை நான் எடுத்ததும் ஏப்ரல் 1 நெருங்கியதும் மிக தற்செயலே. அவர்களின் பின்னூட்டங்களைக் கண்ட பிறகுதான் எனக்கே அது உறைத்தது. இது அவ்வாறு அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக பதிவிலும் மீண்டும் வெளியிடுகிறேன்.)
suresh kannan
51 comments:
I dont know whether i have the right to advice you on this, so please do not take it that way, but i am just writing a opinion, which came to my mind. As you said, i am not asking you to come back to the blog,(though that is my intention) its your decision. But, wherever you go, you do find all these points which you have posted as the reasons that you are not going to write anymore...this is India...we are the kings of adjustment....one last point..even if you do not want to share your experiences through blogging, please do not stop writing...waiting for your book one day....
Ram
finally !
ரொம்ப நல்லது. சும்மா இப்படி போட்டுட்டு திரும்பி வந்தீங்க அப்புறம் ரொம்ப அசிங்கமாக இருக்கும்.
இது வருத்தம் தரக்கூடிய முடிவுதான் நண்பரே..
2004ல் நீங்கள் பதிவெழுத ஆரம்பிக்கும் போது எத்தனை பேர் அப்போது பதிவுகளை எழுதினார்கள், எத்தனை பேர் பதிவுகளை படித்தனர் என எனக்கு தெரியவில்லை,.. இருந்தாலும் உங்களைப்போல ஒரு சிலர் எழுதிய பதிவுகளை படித்து நம்பிக்கை கொண்டு இன்று நிறைய பேர் பதிவுலகத்தில் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் உங்களைப்போன்ற மூத்த பதிவர்களின் பங்கு மகத்தானது. மூத்த பதிவர்கள் நிறைய பேர் இப்படி விலகிக்கொண்டு இருக்கிறார்கள். அது துரதிர்ஷ்டமானதுதான்.
உங்கள் தனிப்பட்ட முடிவைப்பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எங்கிருந்தாலும் வாழ்க சுரேஷ்.
பாஸ், ஆறு மாசம் முன்னாடி, நாளைய இயக்குனர் (I) நிகழ்ச்சியை பற்றி ஒரு பதிவு போடறதா எழுதி இருந்திங்களே? நியாபகம் இருக்கா? தயவு செய்து அதை முடிச்சிட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும் :) On a serious note, I have to say that we will miss you as a writer and a critic. All the best :)
dear mr.suresh,
i read ur blog to know the real content of certain movies when there is mixed opinions in the blogsphere.i will definetly miss u.
somnath
somu.eee@gmail.com
தங்கள் எழுத்துக்களுக்கு நன்றி...
நல்லது சு.க..
மறுபடியும் எப்போ எழுதணும்னு தோணுதோ அப்போ மீண்டு(ம்) வந்து விட்டேன்னு ஒரு பதிவு போட்டு ஆரம்பியுங்க, அதுவரை ஓய்வெடுங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நீங்கள் எதுக்ககாக விடைபெறுகிறிர்கள் என்று தெரியாது ஆனால்... மனிதர்காளுக்கு மனதில் மன உளைச்சல் வருவது இயல்பு தான்... சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.. உங்களை போன்ற மூத்த பதிவாளர்கள் தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் நேரம் கிடடக்கும் பொழுது எழுதுங்கள்...
.
எனது தமிழ் இணைய வாழ்க்கையில் (சைபர் அறிமுகங்கள்) அறிமுகமான பலரில் நீங்களும் ஒருவர். ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் இளைப்பாறிச் செல்லும் நல்ல இடமாக இருந்தது உங்கள் பதிவுகள். பல நல்ல படங்களை அறிமுகம் செய்தும் உள்ளீர்கள்.
***
சம்பந்தமில்லாதது....
தமிழக தெருக்களில் இருப்பதுதான் தமிழ் இணையத்திலும் கிடைக்கும். சாமியார்,ஜோசியர்,குடிகாரன்,பிக்பாக்கெட்காரன்,அடியாள்,பிரியாணிக்குஞ்சுகள்,கதைபுக் ரைட்டர்ஸ்,டீக்கடை அரசியல், ஒபாமாவை ஒண்டிக்குஒண்டி சவால்விடும் தெருமுனை தீப்பொறி ஆறுமுகங்கள்,அட்டைக்கத்தி பயில்வான்கள்,அறிவுரை சொல்லும் பெருசுகள்,பாத்து சிரிக்கிறான் என்று அலறும் பெண்கள், கிள்ளிட்டான் என்று கோள்மூட்டும் பையன்கள்........
எல்லாம் தமிழக தெருவில் இருப்பது.
சட்டியில் (தமிழக தெருவில் ) இருப்பதுதான் அகப்பையில்(இணையத்திலும்) வரும்.
.
அன்புள்ள சுரேஸ்க்கு எழுதுவதும் இல்லாமல்இருப்பதும் உங்களுடைய விருப்பம் ஆனால் நல்ல திரை விமர்சனம் பண்ணுவரை இழப்பது மனதுக்கு கஸ்டமாக உள்ளது. கடைசியக இஸ்ரேல் சினிமாவான லெமன் ட்ரீயை விமர்சனம் எழுதிவிட்டு செல்லுங்கள் மீண்டும் எதிர்பார்க்கும்
விடை பெறுவது மனசுக்கு கஸ்டமாக உள்ளது . ஆனால் அது உங்களுடைய விருப்பம் ஆனால் உங்களுடைய எழுத்தை தொடர்ச்சியாக படித்து வரும் எங்களை போன்றவர்களை மனதில் வைக்காமல் முடிவெடுத்தது என்னவென்று சொல்வது தெரியவில்லை.
ஓவ்வொரு மூத்த பதிவரும் இப்படி நின்றுகொள்வது ஏன் என்று புரியவில்லை. சில வருடங்களுக்குபிறகு எல்லோருக்குமே இந்த அலுப்பும் சலிப்பும் வந்துவிடும் போலும்.இருந்தாலும் நீங்கள் இப்படி விலகுவது கடினமாக உள்ளது.
I learnt many aspects of life from your posts.you are one of the few bloggers I respect.It's a loss for people like me but I understand...all the best suresh..
என்ன சொல்லுவதேண்டு தெரியவில்லை. விமர்சனங்கள், அவதூறுகளை சகித்து கொள்ள தெரியாதவை தேர்ந்த எழுத்தாளன் ஆகா முடியாது.
பக்குவப்படுங்கள்.
உங்களை போன்றவர்கள் எல்லாம் இப்படி முடிவு எடுப்பது வருத்தத்துக்குரியது!
நல்லாத்தானே எழுதிகிட்டிருந்தீங்க!நான் தொடர்ந்து தொடர்வதில்லையாதலால் பின்புலம் அறியேன்.
it is your own decision to stop writing. I wont interfere on it. Any how i will advice that please keep the blog alive. why i am saying this is some people who stop writing in blog delete or block the blog. That is not fair. what ever you have share with us so far let that be public and few more new people also will read your blog.
அழகான எழுத்துக்கள் உங்களுடையது.. சில சமயம் புரியாது.. இப்பொழுது நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை போலவே...
இதுவரையிலான தங்கள் தனித்த,நேர்மையான, சமரசமற்ற விமர்சனப் பார்வைக்கு நன்றி!
உங்கள் சில பதிவுகள் எனக்கு உடன்பாடாக இல்லாமல் இருந்தும் தங்கள் தமிழ் நடையில் பரவசப்பட்டிருக்கிறேன்.தங்கள் முடிவில் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.ஒரு குறிப்பிட்ட ஜாதியில் சிலர் எழுத்தாளர் சுஜாதாவை மிகவும் கேவலப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.அப்பிரச்சனையில் அவர் மீண்டு வந்து எழுதவில்லையா?அந்த மகாபுருஷரை மனதில் நிறுத்தி எல்லாம் கடந்து வாருங்கள்.
கல்வெட்டு சொன்னாற் போல நம்ம தெருவில் இருப்பது தான் வலையிலும்.
பதிவு எழுதுபவர்களை அத்தனை பேரையும் சீரியஸாக நான் எடுத்துக் கொள்வது இல்லை. அதனால் மன உளைச்சலும் இல்லை.
வலைப் பதிவை நான் டைரி போலவே பாவிக்கிறேன்.
THANKS
THANKS
Suresh,
You have very good style of writing.
Few years back I came across your blog and from then on became regular reader of your blog.
Thanks for the cinema reviews you wrote, they were different from others.
Thanks,
Venu
you should have removed the comments section and continue to write. Writing is your hobby/passion/whatever, you shouldn't stop because you didn't like the critics. any way good luck
513 ஃபாலோவர்சும்,அதற்க்குமேல் வாசகர்களும், இரண்டரை லட்சத்துக்கு மேலான பார்வைகளும் இருக்கும்போது எங்கோ,எதனாலேயோ( ) விடைபெறுவது மறுபரிசீலினைக்குறிய ஒன்று.
பிளீஸ்!
Kelambu.. kelambu...
ஏன் தலைவா இப்படி. இத படிச்சிட்டு கருனாநிதி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போறாராம்.
தங்களின் தமிழ் சினிமா மற்றும் அயல் சினிமா விமர்சனம் நன்றாக இருக்கும். i was checking out for update at ur site for past 7 days! its bit unfortunate to read such end-note. i've been reading ur blog since sujatha's sad demise. it was real good journey. even i felt so happy when u came out of twitter!, thinking u will write more! any way all d best 4 ur new venture.
KKPSK
What to do? When u do the nasty way of using some name for ur hits and a very very nasty word, u were proud to be a writer, right? What we sow we reap?
உங்கள் தற்போதைய முடிவை மதிக்கிறேன்
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...
இந்த தளத்தை வெறும் பொழுதுபோக்குக்காக செய்திருப்பீர்கள் என்று நம்பமுடியவில்லை. இதற்காக(வும்) எவ்வளவு மணி நேரங்கள் ஒதுக்கியிருப்பீர்கள் என்பதை (டிவிடி, வாங்க, பார்க்க, தரவிறக்கம் செய்ய, எழுத, பயணப்பட, யோசிக்க) நன்றியுடன் நினைவுகூற வேண்டியிருக்கிறது.
அண்ணே ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது. அதனால மறுபடியும் எழுத அரிப்பு எடுக்கும்போது நீங்க் வருவீங்கண்ணு நிச்சயமா நம்புறேன். அதுவரைக்க்கும் எங்களிடமிருந்து விடைபெறுகிற உங்களுக்காக காத்திருக்கிறேன்.
அஸ்குபிஸ்கு
இதெல்லாம் சும்மா பூச்சாண்டி... பத்து நாள் சும்மா இருப்பாரு... அப்புறம் பழைய குருடி கதவை திறடி கேஸ் தான்...
Dear Mr.Suresh,
You are one of the bloggers I followed on a regular basis. I always looked forward to your movie reviews. You have a wonderful perspective on life.
Even if you stopped this blog for whatever reason, continue writing. You have a gift and please don't throw it away.
Gopal
Toronto, Canada
அப்பாடா. இனிமே எங்கேயும் எழுதுவதில்லைன்னு சீக்கிரம் முடிவு எடுங்க.
தமிழ் ப்ளாக்கல இன்ரஸ்டா எழுதறவங்க மிகவும் குறைவு... (ஒரு பத்து பேரு கூட தேறுவது கடினம்தான்..)
இதில் ஆராய்ந்து என்றாவது வந்து படிக்கும் என்னை போன்ற வாசகனுக்கு எவ்வளவு மனம் கஷ்டப்படும் என்பது தெரிந்துக்கொள்ளுங்கள்.
(முதல்ல நானும் இந்த அட்டக் கத்தி ராஜாக்களையும் அல்லக்கை கூட்டங்களையும் பார்த்து அரண்டுதான் போனேன்... அப்புறம் மெல்ல தெளிந்துவிட்டேன் :)
கல்வெட்டு சொல்லிவிட்டார் மீதியை..
என்னை போன்ற சாதரணனுக்காகவும் எழுதலாம்...
Titanic கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் உயிர்பிழைக்க ஓடிக்கொண்டிருப்பார்கள்... ஒரு கட்டத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் அந்த இசைகுழுவும் பிரியும்... ஆனாலும் ஒருவர் மட்டும் தொடர்ந்து வயலினை வாசிக்க தொடங்குவார்... விலகி சென்ற இசைகுழுவினரும் திரும்ப வந்து அவருடன் இனைந்து வாசிக்க ஆரம்பிக்க... வயலினின் இசையினில் மெல்ல கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் அந்த பெருங்கப்பல்... இந்தக் காட்சியினை சுரேஷ்கண்ணனுக்கு இங்கு நினைவுகூறுகிறேன் :)
Nalla arumayaana ezhuthu nadai.sirappana vimarsanangal. unga thanithuvam enakku romba pidikkum.Thank u . Idhuvum kadandhu pogum.
Surya.
I really enjoyed your writing. Your leaving, in that sense, is a personal loss!
As someone said, do keep writing even if you dont want to make it public. It could take the form of a book in the future!
anbudan
BALA
ஒருத்தருக்கு தன் செயல்கள் மூலமா மகிழ்ச்சி வரணும் ,, நிம்மதி கிடைக்கணும் ,, பேரு, புகழ் எல்லாத்தையும் வுட அதான் முக்கியம். என்ன டா " ச்சே" ன்னு ஒரு நொடி நெனப்பு வந்தாலும் போச்சு ,, இப்டி தான் சிலுக்கு வும் பாதிலே உட்டுட்டு போனாங்க ,, இப்ப நீங்க... நல்லது அண்ணே போய் அண்ணி , புள்ளைங்க கூட சந்தோசமா இருங்க ,, பின்னூட்டத்தையும் நிப்பாட்டிருங்க ,, சரியா?
Dear Mr.Suresh,
Naan ithu varaiyil unga pathivugaluku pinnoottam ittathilla. Ipo ennavo unga iruthi pathivai padicha vudane ennaiyum ariyama pinnoottam tharen. Ana..... ithu varutham tharakoodiya seithiya iruku thozhare. Miss You.
Chocolate Vaazhthukal!....
-Thamizhachi Siva
Dar Suresh, as reader of your blog over the past few years, I will really miss your posts. As many commentators felt, please do continue writing in whatever form you like and I know you cannot resist it. Looking forward to your book some day soon. Best Regards.
You are a critic !, now you say you can't stand the criticisms on you !!?
What an irony ?
That is unfair!!! But I respect your decision, atleast keep the blog alive. surely going to miss one of the quality writtings.
sad ...
அன்பு சு.க,
தொடர்ந்து உங்கள் வலைப்பூவை படித்து வந்தவன் என்ற வகையில் உங்களின் இந்த முடிவு வருத்தத்தையே தருகிறது...
சற்று அலட்டல் தொனி தென்பட்டாலும்,வாசிக்க தொந்தரவில்லாத நடை உங்களுடையது.
உங்களிடம் மிக மிக பிடித்தது மாற்றுகருத்துக்கும் நீங்கள் இடமளிப்பது.
முற்றாக முடித்துக்கொள்ள வேண்டாம்...சிறிய இடைவேளை எனக் கொண்டு மீண்டு(ம்) வாருங்கள்...
இதுநாள் வரை நேரம்,உழைப்பைக்கொட்டி பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி !
மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு முடிவு . . .
உங்கள் கட்டுரைகளில் காணக்கூடிய மெச்சூர்டான
ஒரு தன்மை உங்களுக்கு இல்லாமல் போனது
வருத்தத்திற்கு உரிய விஷயம்
recently i have gone through this blog because of my friend. even im strong believer of god, i would like to read your articles. its giving one sort of motivtion thank you.
Post a Comment