Wednesday, April 27, 2011

சாய்பாபா: மரித்துப் போன கடவுள்?



சமீபத்தில் இறந்து போன சாய்பாபாவின் மரணத்தை முன்னிட்டு கோர்வையற்று சில எண்ணங்களை எழுத உத்தேசம்.

'96 வயது வரை வாழ்வேன்' என்று தீர்க்க தரிசனத்துடன் சொல்லியிருந்த சாய்பாபா அதை பொய்யாக்கி விட்டு 'தானும் ரத்தமும் சதையும் நோயும் கொண்ட மனிதனே' என்ற பெளதீக உண்மையை வேறுவழியில்லாமல் தனது மரணத்தின் மூலம் அவரது பக்தர்களுக்கு தெரிவித்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டார். ஆனால் உலகமெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் இந்த 'திடீர் மறைவை' ஏற்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். பலருக்கு அற்புதங்களை வழங்கின பாபாவால் 'சுயசேவையாக' தனக்கே அந்த அற்புதத்தை வழங்கிக் கொள்ள இயலாதது ஒரு துரதிர்ஷ்டம்தான்.

தான் விஷேமானவன் என்பதை நிலைநிறுத்திக் கொள்ள பாபா செய்து வந்த 'மேஜிக்' தந்திரங்களின் மீது அறிவியலாளர்கள், பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய பல சந்தேகங்களுக்குப் பிறகு கூட எப்படி பல்லாயிரக்கணக்கானோரால் இவரை நம்ப முடிந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். இதே பணியை இன்னும் பிரம்மாண்டமாக செய்யும் பி.சி.சர்க்கார் போன்றவர்கள் நகரம் நகரமாகச் சென்று விளம்பரப்படுத்தியும் பல நாட்கள் உழைத்தும் கூட சில ஆயிரங்களைத்தான் சம்பாதிக்க முடிகிறது எனும் போது அந்த உழைப்பு கூட இல்லாமல் எளிய தந்திரங்களின் மூலம் இருந்த இடத்திலேயே ஒருவரால் பல லட்சம் கோடிகளைச் சம்பாதிக்க முடிகிறது என்பதை யோசிக்க வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரே காரியத்தைச் செய்பவர்களில், ஒருவரை 'மேஜிக்மேனாகவும்' இன்னொருவரை உலகம் போற்றும் 'ஆன்மீக குருவாகவும்' இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் முரணை எவ்வாறு அணுகுவது என்று புரியவில்லை.

எவ்வாறு ஒரு தனிநபரை பல்லாயிரக்கணக்கான மக்கள் குருட்டுத்தனமாக தீவிரமாக நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. இம்மாதிரியான கூட்டம் காந்திக்குப் பின்னாலும் நிற்கிறது், ஹிட்லருக்கு பின்னாலும் நிற்கிறது. தங்களின் லெளகீக வாழ்வில் பல வாழ்வியல் பிரச்சினைகளையும் விடைகாணா இருத்தலியல் கேள்விகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து அபத்திரமான சூழலிலேயே வாழும் பொதுஜனம், ஆதார நம்பிக்கையாக எதையாவது பற்றிக் கொண்டுதான் முன்னகர வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல மேய்ப்பன் கிடைக்க மாட்டானா என்கிற  ஆவலில் அலைந்து கொண்டிருக்கும் இந்த மந்தை, லேசான தலைமைப் பண்புகளுடன் கூடிய ஒருவரைக் கண்டு விட்டாலே அது பாவனையா, உண்மையா என்றெல்லாம் ஆராயாமல் அதற்காகவே காத்திருந்தது போல் அவர் பின் செல்ல ஆரம்பித்து விடுகிறது.

என்னுடைய சுய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு இதை  யோசித்துப் பார்க்க முயல்கிறேன்.

பொதுவாக எல்லோரையும் போலவே 'உம்மாச்சி கண்ணைக் குத்திடும்' என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன் நான். சிறுவயதுகளில் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது அங்கு கடவுளை வழிபட வந்தவர்கள், மாமிசமலை போன்ற பூசாரிகளின், குருக்களின் கால்களிலும் 'சாமி சாமி' என்று விழுந்து வணங்கியது தன்னிச்சையாக எரிச்சலை ஏற்படுத்தியது. பத்து ரூ-வை தட்டில் போடும் கனவான்களுக்கு கண்ணில் கனிவுடன் விபூதியையும் பூவையும் பிரசாதத்தையும் வழங்கும் அந்த மாமிச மலைகள், எளியவர்களுக்கு மிக அலட்சியத்துடன் விபூதியை தூக்கியெறியும் அலட்சியத்தைப் பார்க்க கொதிப்பும் இந்த ஆன்மீக (?!) இடைத்தரகர்களின் மீது அவநம்பிக்கையும் தோன்றின. எந்த கடவுளை தேடி மக்கள் வருகிறார்களோ, அதை பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்கள் இந்த பூசாரிகள். பங்காரு அடிகளார் என்றொரு ஆசாமி இருக்கிறார். முன்பு அவரின் ஆன்மீக நிறுவனம் வெளியிடும் படங்களில் அம்மன் படம் பெரிதாகவும் இவர் கீழே அமர்ந்திருக்கும் உருவம் சிறியதாகவும் இருக்கும். நாளடைவில் கீழே வளர்ந்திருப்பவர் பிரம்மாண்டமாக வளர்ந்து அவரே 'அம்மா'வாகி விட்டார். என்ன கொடுமை சரவணன் இது.
 
அதைத்தவிர இந்து மதத்திலுள்ள சில அர்த்தமில்லாத சடங்குகளும் சம்பிதாயங்களும் அவற்றை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மந்தைத்தனமும் இறைநம்பிக்கை உள்ள காரணத்தினாலேயே தன்னை ஆச்சார அனுபூதியாய் நினைத்துக் கொண்டு அது குறைந்துள்ள அல்லது இல்லாதவர்களை இகழ்ச்சியாய் நோக்கும்  ஆனால் தனிமனித வாழ்க்கையில் கடைந்தெடுத்த அயோக்கியர்களாக இருக்கும் இரட்டைத்தனமும் ஆகிய பல விஷயங்கள் என்னை இறைமறுப்பு கொள்கையை நோக்கி  நகர்த்தின.

இடையில் விடலைப்பருவத்திற்கே உரிய சில மனச்சிக்கல்கள் காரணமாக மூன்று முறை தற்கொலைக்கு முயன்றேன். என்னளவில் அவை மூன்றுமே முழு உறுதியுடன் எடுக்கப்பட்ட தீவிரமான முயற்சிகள்தான். ஆனால் அவை மூன்றிலுமே எப்படியோ நான் காப்பாற்றப்பட்டேன் அல்லது பிழைத்துக் கொண்டேன். ஒருமுறை என்னை காப்பாற்ற முன்வந்தவரை நோக்கி "என்னை எப்படியாவது பிழைக்க வெச்சுடுங்க' என்று அதீத போதையிலும் புலம்பியது எப்படியோ மங்கலாக நினைவிருக்கிறது. உயிர் வாழ்வதையே தீவிரமாக என் ஆழ்மனது விரும்பியிருக்கிறது என்பது அதற்குப் பிறகே எனக்குப் புரிந்தது.

மூன்று விபத்துக்களிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டிருப்பது குறித்து யோசிக்கும் போது 'எதற்காகவோ நான் கட்டாயமாக உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்' என்கிற அசட்டுத்தனமான தத்துவ எண்ணங்கள் தோன்றின. ஒரு தற்கொலையைக் கூட உருப்படியாக நிகழ்த்த முடியாதவனால் பிற்காலத்தில் எதைத்தான் சாதிக்க முடியும் என்று இன்னொரு மனமே என்னை நக்கலடித்தது. இந்த சிக்கலான சூழலில் ஏற்கெனவே இறைநம்பிக்கையை விட்டொழித்த மனது வேறு எதையாவது பற்றிக் கொள்ளத் துடித்தது. அந்தச் சமயத்தில் ஆறுதலான பற்றுக்கோலாக அமைந்தது. இயற்கை. ஆம். இயற்கையின் மூலம்தான் என் ஆன்மீக தேடுதல் பாதையை அமைத்துக் கொண்டேன். இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் துளியையும் குழந்தைக்குரிய ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் பார்க்க கற்றுக் கொண்டேன். 'ஆதியிலே எல்லாமும் இருந்தது' 'பெருவெடிப்பின் மூலம்தான் இந்த பூமி தோன்றியது' என்று யூகங்களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு பல தியரிகள் அமைந்திருந்தாலும், இதுவரை கண்டிராத கடவுளைவிட கண்ணெதிரேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கருணையான இயற்கையைப் போற்றுவது மேல் என்று தோன்றியது.

எந்தவொரு நம்பிக்கையையும் பின்பற்றாமல் உலகிலேயே மிக அதிக சுமையான இருத்தலியல் குறித்தான கேள்விக்குறிகளை சுமப்பது அசாத்தியம்.  சுயத்தைத் தவிர எதுவொன்றையும் நம்பாமலிருக்க எவ்வித பாசாங்குகளும் அற்ற அசாத்திய மனோபலம் தேவை. அவ்வாறானவனே உண்மையான நாத்திகனாக இருக்க முடியும். என் வாழ்க்கையில் இதுவரை அப்படியொரு நபரைச் சந்தித்ததேயில்லை.

ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் ஒவ்வொருவரும் முன்னகர வேண்டியிருக்கிறது என்பதற்காகவே என் சுயபுராணத்தை சற்று விஸ்தாரமாக சொல்ல வேண்டியிருந்தது. தனிமனிதனின் இந்த பலவீனத்தையே சாய்பாபாவைப் போன்ற ஆன்மீக வியாபாரிகள் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களிடமுள்ள கடவுள்தன்மையை (?!) புறவயமாக பாமரனுக்கு புரியவைக்க வாயிலிருந்து லிங்கம், மோதிரம் வரவழைப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது போன்ற எளிய தந்திரங்களை மேற்கொண்டு 'இவரால் எதையும் செய்ய முடியும்' என்கிற நம்பிக்கையை பிரம்மாண்டமான நம்பிக்கையை விதைக்க முயன்று சிலர் அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். இந்த வியாபாரத்தில் மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல கடைகள். எளியவனுக்கு பீர்சாமியார் என்றால் கார்ப்பரேட்வாதிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு சாய்பாபா வகையறாக்கள். அரசியல், வணிக பேரங்கள் முதற்கொண்டு தனிமனித வக்கிரங்களை சாதித்துக் கொள்வது வரை பல அட்டூழியங்கள் இந்த ஆன்மீக போர்வைகளுக்குள் நிகழ்கின்றன.

அப்படி ஏமாற்றினால்தான் என்ன? குடிநீர் திட்டம், மருத்துவமனை முதற்கொண்டு எத்தனை நல்ல காரியம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? என்பது சில அப்பாவிகளின் கேள்வியாக இருக்கிறது. சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அப்படிச் செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே, குடிநீர் திட்டத்திற்கு இந்த சாமியார்களின் காலில் விழுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். உருப்படியில்லாத இலவச தொலைக்காட்சி திட்டத்திற்காக பல கோடி ரூபாய்களை வீணடிக்கும் அரசினால், அந்தப் பணத்தைக் கொண்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாதா?

அறக்கட்டளைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய்களை, சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசு எந்த தலையீடும் செய்யக்கூடாது என்று ஒரு அமைச்சரே பகிரங்கமாக அறிவிக்கிறார். யார் இனி இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கப் போகிறார்கள் என்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் போர்டிற்கு நிகராக அதிகாரப் போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள், இன்னொரு பாபாவை நோக்கி ஓடுவார்கள், அல்லது இறந்து போன பாபாவை இன்னும் அழுத்தம் திருத்தமான திருவுருவாக ஆக்கி பல நூற்றாண்டுகளுக்கும் நீடிக்கப் போகிற கடவுளாக மாற்றி விடுவார்கள்.

ஆன்மீகம் என்ற சொல்லே அர்த்தமிழந்திருக்கும் சமகால சூழலில் ஆன்மீக் வியாபாரிகளின் மீதுள்ள மயக்கம் மக்களுக்கு தீரும்வரை இம்மாதிரியான பாபாக்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டுதானிருப்பார்கள்.

Image Courtesy: http://cartoonistsatish.blogspot.com/

suresh kannan

50 comments:

PRABHU RAJADURAI said...

மீண்டும் அப்ஜக்‌ஷன்...சாயிபாபாவை பி சி சர்க்காருடன் ஒப்பிட்டதற்கு...இயக்குஞர் சங்கருக்கும் ஸ்பீல்பெர்க்கும் உள்ள வித்தியாசம்தான் சாயிபாபாவுக்கும் சர்க்காருக்கும்.

சாயிபாபா மாஜிக் திறமை சாதாரண தெருமுனை பாம்பாட்டி அளவுக்கு கூட கிடையாது. விபூதி விழ வேண்டுமானால் கூட முக்கி முக்கி கையை ஆட்டித்தான் அவரால் வரவழைக்க முடிந்தது.

டிவியில் காட்டப்படும் ஸ்டிரீட் மாஜிக்கின் கால்தூசுக்கு பெறாது சாயிபாபாவின் மாஜிக்குகள்!

Anonymous said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. உங்களுடைய பதிவு எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது .
தொடருங்கள். எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள்.

Rettaival's Blog said...

சுரேஷ்!

எந்த ஒரு காலகட்டத்திலும் மிஷனரிகளுக்கும் , மதராசாக்களுக்கும் இணையாக ஒரு இந்து சாமியார் தோன்ற வேண்டியிருக்கிறது அல்லது உருவாக்கப்பட வேண்டியிருக்கிறது. அரசே அவர்களை மறைமுகமாக வளர்ப்பதாகவும் படுகிறது.

இந்துவோ முஸ்லிமோ க்றிஸ்தவரோ....டிரஸ்ட் வைத்து நடத்தும் யாரும் கடவுளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

Unknown said...

"சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான்."

சரியாகச்சொன்னீர்...இது எத்தனை பேருக்கு புரிகிறது?

தமிழ் திரு said...

உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. நன்றி !

rajan said...

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை , நம் ஆழ்மனம் தான் கடவுள் என்பது என் தனிப்பட்ட கருத்து ,நாம் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று ஆழ்மனதில் தினமும் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் , அதை போல அது நடத்து முடித்தது போல காட்சிகளாக மனகணில் பதிவு செய்தால் அது கண்டிப்பாக நடக்கும் , ஆனால் இந்த கலை எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது , ஆகையால் கடவுள் விழிபாடு வந்து இருக்கலாம் , சாமி கும்பிடுபோது அனைவரும் கண்களை முடிகொண்டு தனக்கு நடக்கவேண்டிய விஷியத்தை மனதுக்குள் வேண்டிகொள்வார்கள் , அது அழ்மனிதில் பதியும் , முயற்சி இருதால் நிச்சியம் அது நடக்கும் .அதைப்போல பிரச்சனை உள்ள ஒரு மனிதன் தன் பிரச்சனைகளை யாரிடமாவது பகிர்த்து கொண்டால் அவனுக்கு மன அறுதல் கிடைக்கும் , சிலர் யாரிடம் பகிர்த்து கொள்ள மாட்டார்கள் , அது போல உள்ளவர்கள் மனதுக்குள கடவுள் முன்பு பகிர்த்து கொள்ளும் போது மன அழுத்தம் குறையும் .
இது ஒரு உளவியல் சார்த்த விஷியம் . தஞ்சை பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு ஆகிவிட்டது ஆனால் இன்னும் நம்மால் அது அப்படி கட்டப்பட்டது என்று நிச்சியமாக சொல்ல முடியவில்லை , நம்மை விட அறிவில் சிறதவர்கள் நம் முனோர்கள் ஆகையால் கோயில் கட்ட கடவுள் விழிப்பட நிச்சியம் காரணம் இருக்கும் , அது இதுவாக இருக்கலாம் என்பது என் கருத்து. [ இது என் சொந்த கருத்து ]


நன்றி
ராஜன் .சென்னை .

Jegan said...

"உருப்படியில்லாத இலவச தொலைக்காட்சி திட்டத்திற்காக பல கோடி ரூபாய்களை வீணடிக்கும் அரசினால், அந்தப் பணத்தைக் கொண்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாதா?"

நச்ச்... :)

நாகராஜ் said...

தெளிவான நடை ,ஆணித்தரமான கருத்துக்கள் ,புரிந்துகொள்ள வேண்டியோர் நாம் தான்
நல்ல பதிவு .

Ashok D said...

கண்ண புராணம் மட்டும் கொஞ்சம் சுமார்...

மத்ததெல்லாம் நல்லாவேயிருந்தது :)

VELU.G said...

சிந்திக்க வைக்கக்கூடிய பதிவு அருமை

கோவி.கண்ணன் said...

நச் நச் !
:)

// ஒரே காரியத்தைச் செய்பவர்களில், ஒருவரை 'மேஜிக்மேனாகவும்' இன்னொருவரை உலகம் போற்றும் 'ஆன்மீக குருவாகவும்' இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் //

ம், பிறரை ரத்த வாந்தி எடுக்க வைத்தால் மோடி மஸ்தான், தனக்குத் தானே லிங்க வாந்தி எடுத்தால் மகா அவதார்.

kalpana said...

ungal ennengal arumai.valthukkal

kalpana said...

neengal sonnadhu sarithan.aanaal avar irukkumpodhe solliyirukkalam

சாணக்கியன் said...

/* நாளடைவில் கீழே வளர்ந்திருப்பவர் பிரம்மாண்டமாக வளர்ந்து அவரே 'அம்மா'வாகி விட்டார். என்ன கொடுமை சரவணன் இது. */

நல்ல நகைச்சுவை.

எனினும் உங்கள் கட்டுரை பொதுவான நோக்கிலும் சாய்பாபா குறித்த ஆழ்ந்த அவதானிப்பிலும் எழுதப்பட்டதில்லை. மேஜிக் போன்ற சித்து விளையாட்டுக்களில் எனக்கும் நம்பிக்கையில்லை. அதே நேரம் அவை எளிய மக்களைக் கவர்வதற்காக வேறுவழியில்லாத சமயங்களில் தவறில்லை என்றொரு எண்ணமும் எழுகிறது...

அப்படிக்கவர்ந்த பின் அவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்தார் என்பதும் மேலோட்டமான தகவலே... அவர் தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை... ஆடம்பர செலவுகள் செய்தார் என்றும் சொல்லமுடியாதல்லவா? நன்கொடைகளைப்பெற்று மக்களுக்கு உதவி செய்தார் என்பதைத்தவிர அவரது நிதி குறித்து ஏதேனும் தகவல்கள்/பிரச்சனைகள் எப்போதுமே எழவில்லை!

அவர்பின்னால் சென்றவர்களுக்கு என்னகிடைத்தது?
1) எல்லா ஆன்மீகத்தேடல்களுக்கும் அடிப்படையான அமைதி. அவரது வழிபாடுகளிலும் பஜன்(சாய் பஜன்) போன்ற பாரம்பரிய முறைகளிலும் அது கிடைத்திருக்ககூடும்.
2) ஒழுக்கம். இதை மிக முக்கியமாக போதித்தார். அவரது பக்தர்களில் வன்முறையாளர்களையோ மிகப்பெரிய ஏமாற்றுக்காரகளையோ காணமுடியாது. நடிகர்கள் பின்னாலும் அரசியல்வாதிகள் பின்னாலும் செல்லும் கூட்டம் நடந்துகொள்ளும் விதம் நமக்குத் தெரியும் (இந்த இருபிரிவினர்தான் ஆன்மீகவாதிகளைத் தவிர கூட்டத்தினரைக் கவரக்கூடியவர்கள் என்ற அனுமானத்தில்)
3. பிறருக்கு உதவும் மனப்பான்மை. சாய் சமிதியில் குழைந்தப் பருவத்திலிருந்தே இது பழக்கப்படுகிறது. இரத்ததியானம், மருத்துவ முகாம்கள், இலவசக்கண் அறுவைசிகிச்சைக்காண முகாம்கள் போன்றவற்றில் பாபாவின் பக்தர்கள் நேரடியாக ஈடுபட்டனர்
4. எம்மதமும் சம்மதம் என்பது அவரது மற்றுமொரு வழிகாட்டுதல். மதங்களை மறுக்கவில்லை.ஆனால் இயைந்து இணைந்துவாழ வழியுறுத்தினார்/வழிகாட்டினார்.
5.வேதங்கள்/பகவத்கீதை/யோகா போன்ற பண்டைய இந்தியாவின் ஆன்மீக வழிகளையே தன் பக்தர்களுக்கு கொண்டுசேர்த்தார்.

இன்னும் பலவற்றைச் சொல்லமுடியலாம். நானும் மூளையின் நுணியிலிருந்துதான் எழுதுகிறேன்.

இவற்றை எல்லாம் தாண்டியதுதான் அவர் பொதுமக்களுக்கு செய்த,
1) இலவச மருத்துவம்.இருதய/சிறு நீரக மாற்றுச் சிகிச்சைகள் உட்பட
2) பள்ளிகள்/கல்லூரிகள்
3) குடி நீர் வசதிகள்
போன்றவை.

சுருக்கமாகச் சொன்னால் அவர் மேஜிக் செய்திருக்கலாம். ஆனால் அவரால் யாரும் எதையும் இழக்கவில்லை. அடைந்திருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம். ஆன்மீகத்தின் மூலம் சில லட்சம் நல்ல குடிமகன்களை உருவாக்கினார்!

தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்மீது பிடிப்பு இல்லை. எனக்கு பக்தியைத் தாண்டிய யோகா/தியான குருதான் தேவை. சரியாகப்படிக்காத பையனுக்கும் பள்ளிக்கூடம் தேவை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பக்தியிலேயே நின்று விடும் எளியமக்களின் ஆன்மீகத்தேவை!

சாணக்கியன் said...

மேற்படி ஒரு பின்னுட்டத்தை நான் buzz-இல் போட்டவுடன் சில தர்கங்களற்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ‘காந்தி அஹிம்சையை அறிவுறுத்திய பின்னரும் உலகில் ஏன் போர்கள் நடக்கின்றன’ என்கிற ரீதியில் அவை இருந்தன. அவர்களுக்கு பதில் சொல்லி மாளாது. கொஞ்சம் அடுத்த நிலை சிந்தனையாளர்களுக்கு சில விளக்கங்களைத் தரலாம் என நினைக்கிறேன்.

சாய் பாபா கடவுள் அல்லர்; மகானும் அல்லர்; ஞானியும் அல்லர்; அற்புதங்கள் என்கிற பெயரில் மேஜிக் செய்தவர். நிற்க.

இத்தகைய சாமியார்களின் பின்னால் செல்லும் மந்தை மக்களுக்குப் பின்னால் ஓர் உளவியல் உள்ளது போலவே அவர்களை விமர்சித்துப் பேசுவதிலும் சில உளவியல்கள் உள்ளன. பொதுப்புத்தியில் உறைந்துள்ள அந்த உளவியல் சாய்பாபா போன்றோரின் மறு பக்கத்தை பார்க்கவிடாமல் செய்கிறது.

மேலோட்டமாக ‘அவர் போலிச்சாமியார், காசு சேர்க்கிறார்’ எனும் போது அதில் ஒலிக்கும் தொனி என்னவென்றால், ‘நான் ரொம்ப விவரமானவன், இவங்ககிட்ட எல்லாம் ஏமாற மாட்டேன்’ என்பதே!. அதனாலேயே பொது இடத்தில் இருவர் விவாதித்து கொண்டிருந்தால், ‘ஆமா ஆமாங்க எல்லாம் பிராடுதான்’ என்று எந்த விதமான தகவல் திரட்டுதலோ அலசல்கள்களோ இல்லாமல் ஒருவர் இணைந்துகொள்வார். ஏனெனில் அதுதான் அவருக்கு வேண்டிய இமேஜைக் கொடுக்கும். ‘ நானும் விவரமானவன், புத்திசாலி, ஏமாளி இல்லை’ என்ற இமேஜ், மற்றவர் முன்னும் தனக்குள்ளுமாக.

உதாரணத்திற்கு /* சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான் */
அவருக்கு எவ்வளவு கோடி வந்தது எவ்வளவு லட்சங்களை விட்டெறிந்தார் எவ்வளவை பதுக்கினார் என்று சு.க.வுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. ஆனால் அதைப் பற்றிய பிரக்ஜை இன்றி இவ்வாறு எழுதினால்தான் புத்திசாலி பட்டம் கிடைக்கும். அப்படி சொல்வதற்கான அடிப்படை என்ன என்று கூட சொல்லவேண்டாம்.

ஒருவன் நல்லவன் என்றால் நமக்கு அதில் சுவாரசியம் இல்லை. ‘அப்படி ஏமாற்றினான் இப்படி ஏமாற்றினான்’ என்றால் உடனே ஒரு பேச்சு சுவாரசியம் வந்து விடுகிறது. இப்படி வெறும் சுவாரசியத்துக்காகவே பது பலராலும் பேசப்பட்டு பரப்பப்பட்டு பொதுப் புத்தியில் நிலைகொள்கிறது.

என்னுடைய கேள்விகள் எளிமையானவை. சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்ற இளைஞர்களிடம் இன்று சர்வசாதாரணமாக இருக்ககூடிய மது-புகைத்தல் பழக்கங்கள் அற்றவர்களாக பெரிதும் இருக்கின்றனர் எனக்கொள்வோம். (இருக்கின்றனர் என்று நான் சொல்லிவிட்டால் ஆதாரம் கொடுக்கவேண்டும். நான் என்ன சர்வேயா எடுக்க முடியும். ஒரு சிலரிடம் பழகியதில் இருந்து extrapolate செய்துதான் சொல்ல முடியும்). அப்படி அந்த இளைஞர்கள் இருந்தால் அது சமுதாயத்துக்கு ஆகச்சிறந்த பங்களிப்பில்லையா?

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை வெறும் சொற்களாக இல்லாமல் 20-30 ஆண்டுகள் தொடர்ந்து பிறருக்கு சேவை செய்யும் ஜனத்திரளை உருவாக்கியிருப்பது முக்கிய பங்களிப்பில்லையா?

சாய்பாபாவின் மீது விமர்சனங்கள் செய்யும் போது இவற்றையும் கருத்தில் கொள்கிறோமா என்பதுதான் என்கேள்வி.

Jayadev Das said...

\\ (இருக்கின்றனர் என்று நான் சொல்லிவிட்டால் ஆதாரம் கொடுக்கவேண்டும். நான் என்ன சர்வேயா எடுக்க முடியும். ஒரு சிலரிடம் பழகியதில் இருந்து extrapolate செய்துதான் சொல்ல முடியும்). \\ அதே மாதிரி சாய்பாபா சொத்துக்களும் எவ்வளவு இருக்கும்னு extrapolate செய்து சொல்லக் கூடாதா? நீங்கள் சொன்னால் அது extrapolation மற்றவர்கள் சொன்னால் ஆதாரமில்லாமல் பேசுபவர்கள்!! ஹா.ஹா..ஹா..

\\‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ \\ இது நல்லாத்தான் இருக்குது, ஆனால், அந்த மகேசனே நான்தான்டா என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாய் பாபா மடத்துக்குச் செல்பவர்கள் எல்லோரும் அவரைக் கடவுள் என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார் என்று சொல்லும் நீங்கள், அவர் ஏன் தன்னைக் கடவுள் என்று யாரும் சொல்லக் கூடாது என்பதைச் சொல்லிக் கொடுக்கவில்லை? இதையெல்லாம் யோசிங்க சார். அப்படியே அவர் கடவுள்தான் என்றால், எதை வைத்து என்றும் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

Rettaival's Blog said...

சந்தனக் கடத்தல் வீரப்பனால் நமக்குத் தனிப்பட்ட நேரடி இழப்பு என்ன? பெரிதாக ஒன்றும் இல்லையே...காட்டுவாசி சிலருக்கு உதவி செய்தான் என்பதற்காக மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததா? இல்லை...கொள்ளையடித்தோ நன்கொடை பெற்றோ மக்களுக்கு நல்லது செய்ய பாபா என்ன ராபின் ஹுட் ஆ? மத துவேஷமும் மத மாற்றமும் அதிகளவில் நிகழாதிருக்க உருவாக்கப்பட்ட பிம்பமே பாபா போன்றோர்.
அரசாங்கம் கை கூப்பி இறைஞ்சி நின்று நிதி பெறுவதில் அரசியல் இல்லாமல் இருக்குமா சொல்லுங்கள்.
பாபா கடவுளும் அல்ல...மனிதனும் அல்ல...
பாபா ஒரு பிம்பம்!
பிம்பங்கள் மறையும்...தொடர்ந்து உருவாகும்!

துளசி கோபால் said...

//அவரது பக்தர்களில் வன்முறையாளர்களையோ மிகப்பெரிய ஏமாற்றுக்காரகளையோ காணமுடியாது.//

நீங்கள் பாக்கியசாலி.

எனக்கு இந்த அளவு பாக்கியம் இல்லை:(

சாணக்கியன் said...

@Jayadev Das. மற்றவர்கள் அவரைக் கடவுள் எனச் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கலாம் அல்லவா என்ற உங்கள் கருத்தோடு நானும் உடன் படுகிறேன். தனிமனித துதியில் எனக்கும் உடன்பாடில்லை.

சாணக்கியன் said...

எப்படிப் பார்க்கினும்
பாபா தான் சொன்னதற்கு முன்னதாகவே மறைந்ததும் ஜீவ சமாதி அடையாததும் பின்னடைவே.

மற்றுமல்லாமல், தாங்கள் கடவுளாக வணங்கிய ஒருவர் உடல் நிலை தேற வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்ததும் அவர் இறப்பிற்கு அழுததும் அந்த மக்கள் எந்தவிதமான ஆன்மீக முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதையே காட்டுகிறது.

இவற்றை நான் மறுக்கவில்லை. என்னுடைய கருத்தும் இதுவே.

Rettaival's Blog said...

என்ன செய்வது...அவதாரங்களையும் மெசையாக்களையும் எதிர்நோக்கி இருப்பது நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது.அதே போல செத்த பிறகு ..அப்பாடா தன் தீர்க்கதரிசனத்தை பொய்யாக்கி விட்டு இவன் மரித்துவிட்டான்...இவன் கடவுள் இல்லை என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு சாணியைக் கரைத்து ஊற்றுவது என்ன வகையான மனச்சிக்கல் எனத் தெரியவில்லை.

சாணக்கியன் said...

துளசி கோபால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. அப்படிப்பட்ட பக்தர்களை உங்களால் காணமுடியவில்லை என்கிறீகளா? இல்லை நீங்கள் எந்த சாய் பக்தரோடும் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறீர்களா?

உங்களுக்கும் மற்ற சிலருக்குமான கேள்வி: உங்கள் உறவினர், நண்பர்கள், உடன்பணியாளர் என எங்காவது சாய் பக்தர்களுடன் பழகியுள்ளீர்களா? அப்படி பழகியிருந்தால் அவர்களிடம் எப்படிப்பட்ட பண்புகள் இருந்தன?

துளசி கோபால் said...

//உறவினர், நண்பர்கள், //

ரெண்டு வகையிலும் இருக்காங்க. அவுங்க நடத்தையை வெளியில் சொல்லிக்க முடியாது. அவ்வளவுதான் சொல்ல முடியும்:(

மனம் வெறுத்துப்போனது இதனால்தான்.

கல்வெட்டு said...

.

//சாணக்கியன் said...
உங்களுக்கும் மற்ற சிலருக்குமான கேள்வி: உங்கள் உறவினர், நண்பர்கள், உடன்பணியாளர் என எங்காவது சாய் பக்தர்களுடன் பழகியுள்ளீர்களா? அப்படி பழகியிருந்தால் அவர்களிடம் எப்படிப்பட்ட பண்புகள் இருந்தன? //


1.சாய் பக்தன் லஞ்சம் கொடுக்கிறான்
2.சாய் பக்தன் ரோட்டில் ஒன்னுக்குப் போகிறான்
3.சாய் பக்தன் வேலைக்கான resume பொய் சொல்கிறான்
4.சாய் பக்தன் வரதட்சணை வாங்குகிறான்
5.சாய் பக்தன் டிக்கட் எடுக்க வரிசையில் நிற்பது இல்லை
6.சாய் பக்தன் பிளாக்கில் சினிமா டிக்கெட் வாங்குகிறான்
7.சாய் பக்தன் ரோட்டில் குப்பஒ போடுகிறான்
8.சாய் பக்தன் ரோட்டில் ட்ராபிக்ஸ் ரூல்சை மதிப்பது இல்லை
9.சாய் பக்தனுக்கு பொறாமை கோபம் வன்மம் எல்லாம் உள்ளது
10.சாய் பக்தன் சாதி பார்க்கிறான்
11.சாய் பக்தன் மதம் பார்க்கிறான்


ஏன் இந்த ஆள் சாயே அவர் வாயில் இருந்து லிங்கம் மட்டுமே எடுத்ததாக வரலாறு சொல்கிறது.

Q1: அவர் வாயில் இருந்து சிலுவையோ அல்லது மினாரோ எடுத்ததாகச் சான்று உள்ளதா?

அதுபோல அவர் கைவிரல் இடுக்கில் இருந்து சாம்பல் மட்டுமே எடுத்ததாக வரலாறு சொல்கிறது.

Q2: பரிசுத்த ஆவியின் அப்பமோ அல்லது வடையோ அல்லது பிறையோ எடுத்ததாக சரித்திரம் இல்லை.

இது செத்துப்போன கடவுளின் இணையத்தளத்தில் இருந்து...

----------
http://www.sathyasai.org/

I have come to light the lamp of Love in your hearts........I have not come on behalf of any exclusive religion........... 4 July 1968, Baba



****************

ஒருவனிடம் மட்டுமல்ல ஒரு பெரு சாய்கூட்டமே சாதி/மதம்/ மற்றும் மேற்சொன்ன எல்லாப் பண்புகளையும் கொண்டு இயங்குவதை பலமுறை நேரில் பார்த்துள்ளேன் .

**

இந்தியாவில் நடுத்தரவர்க்கம் எல்லாம எதோ ஒரு சாய் அல்லது பேயுக்கு நேர்ந்துவிடப்படவர்களே. இவனுகள் எல்லாம் ஒழுக்கமாக இருந்தாலே மேற்சொன்னவைகள் நடக்காது.

**

ஒரு நல்லவன் நல்லவனாக இருக்க எந்த சாயும் பேயும் தேவை இல்லை. சாயுடனும் பேயுடனும் இருப்பவன் அங்கே இருக்கும் வரை நடிக்கிறான் . அதைவிட்டு வெளியே வந்தவுடன் சராசரி சாக்கடையாகவே இருக்கிறான்.

*

Jayadev Das said...

@கல்வெட்டு

அட அவ்வளவு ஏங்க, சாய்பாபாவுக்கு இறுதிச் சடங்குகளை அவரோட அண்ணன் மகன் தான் பண்ணினாராம். உலகத்தில் எல்லோருக்கும் பொது, சாதி மதம் சாராதவர் [ஏன் சிலரால் கடவுள் என்று கூட சொல்லப் பட்டவருக்கு] அவரோட பக்தர்களில் யாரவது ஒருத்தர் இறுதிச் சடங்கை செய்திருக்கலாமே? முற்றும் துறந்தவருக்கு அண்ணன் தம்பி உறவைக் கூட தரக்க முடியாதது துரதிர்ஷ்டமே!!

கல்வெட்டு said...

http://www.sathyasai.org/

I have not come on behalf of any exclusive religion........... 4 July 1968, Baba

என்று சொன்ன கடவுள் ஏன் லிங்க பிசினஸ் மற்றும் சாம்பல் (திருநீறு) பிசினஸ் மட்டும் செய்தார்?

கல்வெட்டு said...

.
இது உண்மைக்கதை உண்மையோ பொய்யோ சொல்வதனால் ஒரு எழவும் மாறப்போவது இல்லை. இருந்தாலும் வயித்தெரிச்சல் மர்றும் இந்த சாய் பேய் சாமி மத மடக் கூட்டங்களின் யோக்கியத்தன்ம் தாங்கமுடியாமல் புலம்பல்...

ஒரு கோவில்.
அதில் அதிகார பதவியில் இருப்பவன்கள் எல்லாம் கோடியில் சம்பாரிப்பவனுகள்.
அதற்கு நன்கொடை தருபவன் எல்லாம் பக்த கேடிகள். அந்தக் கோவில்லில் இருக்கும் கடவுளுக்குப் பூசை செய்பவன் ஒரு பெரிய பக்திமான்.

கொடுமை என்னவென்றால் பூசை செய்பனுக்கு சரியான சம்பளம் இல்லை. இருக்க சரியான இடம் இல்லை. அவனின் குழந்தையின் கல்விக்கு பணம் இல்லை.

கடவுளும் கைவிட்டார். பக்தகேடிகளும் கைவிட்டார்கள். இந்த அழகில் கடவுளுக்கு பல கோடியில் கோபுரம். :-(((

கடைசியில் சில பொறம்போக்குகளே "குழந்தைக்கு கல்வியா கவலைப்படாமல் எங்களிடம் கேளுங்கள் என்று சொல்லியவர்கள். இதனைக்கும் கோவிலும் சாமியும் யாரென்றே தெரியாதவர்கள். மனிதம் மட்டுமே தெரிந்தவர்கள்.

உதவியை சக மனிதனின் கடமையாய் நினைத்துச் செய்ய முன்வந்தவர்கள். கடமை அது . தொண்டு உதவி என்று சொல்வதுகூட அயோக்கியத்தனம்.

**

மனிதனாக இருக்க சாயும் பேயும் மதமும் தேவை இல்லை.
வலித்தால் அழுக என்ன மதம் வேண்டும்? அதுபோல அருகில் உள்ளவனுக்கு உதவ சாமியும் மடமும் ஏன் வேண்டும்?

மதம் அல்லது மடத்தில் இருந்தால் மட்டுமே நான் மனிதனாக இருக்க முடியும் என்றால் அது ஒரு நோயல்லவா?

.

kumar said...

எல்லோரும் உங்களைப்போலவே இயற்கை மதத்திற்கு மாறிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

சாணக்கியன் said...

/* உதவியை சக மனிதனின் கடமையாய் நினைத்துச் செய்ய முன்வந்தவர்கள். கடமை அது . தொண்டு உதவி என்று சொல்வதுகூட அயோக்கியத்தனம். */

ரொம்ப கரெக்டுங்க. உலகத்துல எல்லாரும் இப்படி இருந்துட்டா எந்தப்பிரச்சனையும் இல்லீங்களே? நீங்க ஒன்னு பண்ணுங்க. அப்படி மனிதம் இல்லாத கடமையைச் செய்யாத 10 பேரை உங்களைப்போல கடமையாக செய்யுமாறு மாற்றுங்கள். மாற்றுவதற்கு முயற்சி செய்து பாருங்கள்!!

Unknown said...

rompa nalla irrukku

rajasekar said...

உங்கள் கருத்துகளும் திரு .கோவி .கண்னன் கருத்துகளும் எப்போதும் என்னக்கும் பிடிக்கும்..

Anonymous said...

http://agayiyal.blogspot.com/

எழுதிப் பார்ப்போமே என தோன்றியது. என் பிளாகை பார்க்கவும். இதன் வடிவமைப்பை design செய்தது நானே...d...

Anonymous said...

//"உருப்படியில்லாத இலவச தொலைக்காட்சி திட்டத்திற்காக பல கோடி ரூபாய்களை வீணடிக்கும் அரசினால், அந்தப் பணத்தைக் கொண்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாதா?"//

நிச்சயமாக முடியும், இங்கே பணம் ஒரு பிரச்னை இல்லை. எம்.ஜி.யார்,எ.ன்.டி யார் தொடங்கி கருணாநிதி, ஜெயாவாலும் இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதே கசப்பான உண்மை, ஏனெனில் கால்வாய் வரும் வழியில் உள்ள ஊர் மக்களின் எதிர்ப்பு, மற்றும் ஆந்திர அதிகாரிகளின் அலட்சியப்போக்கு போன்ற முட்டுக்கட்டைகள்.

ஆனால் சாய்பாபாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இவர்கள் ஒத்துழைத்ததால்தான் சென்னைக்கு கிருஷ்ணா நீர் சாத்தியமாயிற்று. இங்கேதான் சாய்பாபாவின் ஆன்மிக முகமூடி தேவை இருந்தது.

param said...

நேற்று ஒரு பிரேமானந்தா ,இன்று ஒரு சாய்பாபா ,நாளை நித்யானந்தா, நாளை மறுநாள் யாரோ ?
கடவுள் மறு ஜென்மம் எடுகிறாரோ இல்லையோ இவனுக மறு ஜென்மம் எடுத்துகிட்டே இருப்பானுக
ஏமாறுறவங்க இருக்கும் வரை ஏமாத்துறவங்க இருந்து கொண்டே இருபாங்க...

Anonymous said...

இதே மாதிரி சாமியார்களின் பின்தொடர்பவர்கள் , ஒரு வேளை புகை / மது இல்லாமல் இருக்கலாம் . அதை விட கொடுமையான பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அதுதான் "ஷாட்கட் ல முன்னேறனும் / சுயநலம்" . இவுங்க சாமியார் பின்ன போகுறதுக்கு முக்கியமான காரணமே இதுதான் " எப்பிடியாவது நான் / என் குடும்பம் நல்லா இருக்கணும் ( இந்த எண்ணத்துல தப்பு இல்ல, எல்லாருக்கும் இந்த எண்ணம் இருக்கும்) யார் மூலமாவது ஏதாவது ஒரு "அதிசயம்" நடக்கணும் , அதுக்கு என்ன விலைன்னாலும் கொடுக்கலாம். பெரும்பாலான மாணவ நண்பர்கள் பரீட்சைக்கு முந்தின வாரம் மதம் மாறுவது / பூஜை ஸ்பான்சர் பண்றது. பெரிய மனுஷங்க லஞ்சம் / அன்பளிப்பு ன்னு செய்றாங்க.

Unknown said...

நல்ல கட்டுரை. ஆனால் ஒரேயடியாக சாய்பாபாவை விமரிசித்து எழுதியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு மனிதன் நல்லது செய்தாலும்,குற்றம் கண்டுபிடிப்பதே நம் பெரும்பாலோனோரின் பழக்க தோஷமாகப் போய்விட்டது. அரசியல் வாதிகள் பலகோடி சுருட்டிக்கொண்டு சுவிஸில் பதுக்கி வைத்துக்கொண்டால் கூட யாரும் கண்டு கொல்வது கிடையாது.சாய்பாபா மக்களிடம் சித்து வேலை காட்டி ஏமாற்றி கோடிகளை குவித்தார் என்றே வைத்துக் கொள்வோம்.அதில் சில கோடிகளை மக்களுக்குசெலவழித்ததை ஏன் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

நம் மனம் ஏற்றுக்கொண்டாலும் நாம் போலி வேஷத்தால் மறைத்து விட்டு சித்து வேலை அது இது என்று தூற்றிக்கொண்டிருப்பதையே பெருமையாக கொண்டிருக்கிறோம்.அதற்காக அவரை கொண்டாட வேண்டும் என்றுசொல்லவில்லை.

உங்கள் எழுத்து நடை,மற்றும் சில சிந்திக்க வைக்கும் வரிகள் அனைத்தும் அருமை.படித்து முடிந்ததும் அமைதியாக கொஞ்ச நேரம் ஆழ்ந்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்.
நல்ல கட்டுரை. ஆனால் ஒரேயடியாக சாய்பாபாவை விமரிசித்து எழுதியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு மனிதன் நல்லது செய்தாலும்,குற்றம் கண்டுபிடிப்பதே நம் பெரும்பாலோனோரின் பழக்க தோஷமாகப் போய்விட்டது. அரசியல் வாதிகள் பலகோடி சுருட்டிக்கொண்டு சுவிஸில் பதுக்கி வைத்துக்கொண்டால் கூட யாரும் கண்டு கொல்வது கிடையாது.சாய்பாபா மக்களிடம் சித்து வேலை காட்டி ஏமாற்றி கோடிகளை குவித்தார் என்றே வைத்துக் கொள்வோம்.அதில் சில கோடிகளை மக்களுக்கு செலவழித்ததை ஏன் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? அவர் அத்தனை கோடிகளையும் தன் மனைவி மக்களுக்காக ஒன்றும் சேர்த்துக்கொள்ளவில்லையே .எத்தனை கோடி சுருட்டினால்தாக சொல்லப்பட்டாலும் போகும் போது அவரால் ஒன்றும் கொண்டு போக முடியவில்லை

நம் மனம் ஏற்றுக்கொண்டாலும் நாம் போலி வேஷத்தால் மறைத்து விட்டு சித்து வேலை அது இது என்று தூற்றிக்கொண்டிருப்பதையே பெருமையாக கொண்டிருக்கிறோம்.அதற்காக அவரை கொண்டாட வேண்டும் என்றுசொல்லவில்லை.

உங்கள் எழுத்து நடை,மற்றும் சில சிந்திக்க வைக்கும் வரிகள் அனைத்தும் அருமை.படித்து முடிந்ததும் அமைதியாக கொஞ்ச நேரம் ஆழ்ந்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்.அதேபோல் அம்மா பகவானையும். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர் என்று என் உறவினர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.அவருக்கு வந்த வாழ்வு.

அமைதி எனும் இயற்கை பேராற்றல் இந்த வேடிக்கையை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.

Anonymous said...

u may like these

http://tamilcomputerinfo.blogspot.com/2011/04/blog-post_7764.html

http://tamilcomputerinfo.blogspot.com/2011/01/blog-post.html


http://tamilcomputerinfo.blogspot.com/2010/05/microsoft-word-document-password-save.html



http://baleprabu.blogspot.com/2011/04/software-folder-lock.html


...d...

சாணக்கியன் said...

/* ஜெயதேவ் தாஸ்: அதே மாதிரி சாய்பாபா சொத்துக்களும் எவ்வளவு இருக்கும்னு extrapolate செய்து சொல்லக் கூடாதா? நீங்கள் சொன்னால் அது extrapolation மற்றவர்கள் சொன்னால் ஆதாரமில்லாமல் பேசுபவர்கள்!! ஹா.ஹா..ஹா..
*/

நல்ல கேள்வி. நான் எதனடிப்படையில் சொன்னேன் என்று சொல்கிறேன். சுரேஷ் கண்ணன் எதன் அடிப்படையில் பாபா கொள்ளையடித்ததாக சொன்னார் என்று அவர் சொல்லட்டும்.

/*
கல்வெட்டு: சாயுடனும் பேயுடனும் இருப்பவன் அங்கே இருக்கும் வரை நடிக்கிறான் . அதைவிட்டு வெளியே வந்தவுடன் சராசரி சாக்கடையாகவே இருக்கிறான்.
*/

கல்வெட்டு, நீங்கள் சொல்லுவது போல சாய்பக்தன் வெளியே மற்றவர்களைப்போலவே நடந்துகொள்கிறான் என்பது சராசரி ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் சாய்பக்தன் யாரிடமும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்வோமானால் நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ள முயல்கிறோம்.

நான் சந்தித்த சில உதாரணங்கள் சொல்கிறேன்.
1. என்னுடைய நாத்திக நண்பர் ஒருவர் சொன்னது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவில் விபத்தில் அடிபட்ட நண்பனுக்காக இரத்தம் தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்து எங்கும் கிடைக்காமல் நள்ளிரவில் புறநகரில் சாய்பக்தர் ஒருவர் வீட்டிற்கு சென்று கதவைத்தட்டி எழுப்பி செய்தி சொல்லியிருக்கிறார். எந்த முகச்சுழிப்பும் இன்றி கனிவோடு தங்கள் சேவை நெட்வொர்க் மூலமாக அந்த நேரத்தில் இரத்ததானம் கொடுப்பவரை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். நண்பர் சொன்ன வார்த்தைகள், “சும்மா சொல்லக்கூடாதுடா! நாம என்னதான் விமர்சனம் பண்ணாலும் அந்த நேரத்துல ஹெல்ப் பண்ணினாங்க. அருமையான நெட்வொர்க் வெச்சிருக்காங்க”.

2. நான் என்னுடைய சிறுவயதில் சாய் சமிதியில் மாணவனாக இருந்தேன். ஒரு பத்துவயதிலேயே ஆர்வம் குறைந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் அப்போது சந்தித்த ஆசிரியர்கள் முதல் மூத்த மாணவர்கள் வரை அனைவரும் மற்ற சராசரி மனிதர்களைவிட சற்றேனும் மேம்பட்டவர்களே.

3. இரண்டு மாதங்கள் முன்பு, “வார விடுமுறையை எப்படிக் கழித்தாய்” என சாப்ட்வேரில் பணிபுரியும் தோழியைக் கேட்டேன். 25 வயதுடைய அந்த இளைஞி ‘சர்வீஸ்கு போயிருந்தேன்’ என்பதைக்கேட்டபோது எனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இளைஞர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை, கண்டபடி செலவழிக்கிறார்கள், வார இறுதியில் குடியும் கொண்டாட்டமுமாக சீரழிகிறார்கள் என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் ஓய்வெடுப்பதிலும் டிவி/சினிமா பார்பதுமே செய்வதற்குரிய செயல்கள் என இருக்கும் நிலையில் இந்த இளைஞி இப்படி சேவை செய்யப்போய் வருகிறார் எனும் கேள்வியை நான் கேட்டுப்பார்க்கிறேன். எத்தனையோ சேவை அமைப்புகள் இருக்கின்றன. அதில பல இளைஞர்கள் இன்று ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு காரணமாக இருப்பதிலும் சாய்பாபாவின் அமைப்புக்கும் பங்குள்ளது என்படை நம்மால் மறுக்க முடியாது.

சாணக்கியன் said...

/* சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான்.
*/
சுரேஷ், அப்படி நடிப்பவரால் 400 கோடியில் ஒரு இலவச மருத்துவமனை கட்டமுடியும் என்றா உங்கள் பகுத்தறிவு சொல்கிறது? எனக்கென்னவோ கருணாநிதியைப்போல் இறந்த பிறகு எனது வீடு மருத்துவமனையாகும் என்றுதான் சொல்ல முடியும் எனத்தோன்றுகிறது.

ஔவை சொல்லியிருக்கிறாள்... “நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் என்று”. நடிப்பவர்களால் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க மனம் வராது.

சாணக்கியன் said...

பாபாவின் உடலைப் பார்க்கவந்த கூட்டத்தை நினைத்துபாருங்கள்! லட்சங்களில் வந்தார்கள் என்று சொல்கிறார்கள். அனைவரும் வரிசையில் அமைதியாக நின்று அமளிதுமளி இன்றி கூட்ட நெரிசல்கள் இன்றி பார்த்து சென்றிருக்கிறார்கள். நம் நாட்டில் வேறு ஏதெனும் கோயிலில் இப்படி நடக்குமா? கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமாரும் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியும் இறந்தபோது நடந்த கலவரங்கள் நினைவிருக்கிறதா?

Anonymous said...

use windows live writer. if u use it u can insert photos in essays as like photos in essays in tis blog

http://cablesankar.blogspot.com/

download it

http://explore.live.com/windows-live-writer-xp

to know about it use

http://www.bloggersentral.com/2010/05/5-reasons-why-you-should-switch-to.html

Anonymous said...

http://www.imdb.com/title/tt1334102/

The Resident(2011)

watch this movie

பக்கத்து வீட்டில் ஒழிந்திருந்து அவ்வப்போது இரவு நேரத்தில் தன் பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டில் ரகசியமாய் நுழைகிறான் ஒரு பெண் பித்தன். அருமையான திரில்லர்.

Anonymous said...

சாணக்கியன்.... அண்ணாதுரையின் உடலைப் பார்க்கக்கூடத்தான் கூட்டம் கூடியது . அங்கும் ஒரு பிரச்சனையும் வரவில்லை. ஒரு காகம் இறந்தால் பிற காகங்கள் கரைவது இறந்த காகத்தை தெய்வமாக்கி விடாது. மந்தை மனோ நிலையைப் பார்த்துப் புல்லரிக்காதீர்கள்.

உண்ணும், உறங்கும், சுவாசிக்கும், மலங்கழிக்கும், மரிக்கும் சக மனிதனை வணங்குவதில் தெரிவது தோல்வி மனப்பான்மை மட்டுமல்ல. எப்படியாவது எனக்கு நல்லது நடக்காதா என்ற பேராசையும்தான். சாமியார்களைப் பார்க்க கூடும் லட்சோப லட்ச முட்டாள்கள் மனிதன் சுய நலம் பொங்கும் மிருகம் என்பதன் உதாரணங்கள்

Anonymous said...

எல்லாமே சரியாக நடப்பது போல் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்க தவறி விட்டீர்கள் என்றே அர்த்தம்...one of the laws of murphy...


to download 1000 murphy laws in tamil click this

http://marancollects-tamilebooks.blogspot.com/2010/05/1000.html

...d...

Anonymous said...

மக்கள் உண்மையை அறிந்து கொண்டால் இப்போதிருக்கும் சமூக அமைதி கூட இல்லாமல் போய் விடும். இன்றைய சமூக அமைதிக்கு அட்சாரம் ஆக இருப்பது பொய்தான். Lie only can maintain peace. இதனால்தான் ஞானிகள் கூட சில உண்மைகளை எல்லோருக்கும் சொல்லி விட்டு போகவில்லை. பல உண்மைகளை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி விட்டு போகவில்லை.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

Anonymous said...

இணையத்தில் எக்கசக்க நிர்வாண தளங்கள் உண்டு. எனக்கு பிடித்தமானது milestone.tumblr.com என்ற பிளாக். இதன் சிறப்பு என்னவெனில் வெறும் நிர்வாண விலைமாதர்கள் இதில் இல்லை. இதில் உள்ள பெண்கள் யாவரும் பேரழகிகள். இவர்களின் முகத்திற்காகவே இந்த சைட்டிற்கு நான் செல்வதுண்டு. இதன் archiveவ்விற்கு இதன் ஹோம் பேஜில் லிங்க் தரவில்லை. நாமாகவே milestone.tumblr.com என்பதன் முடிவில் ஒரு backslash போட்டுக் கொண்டு archive என்று தட்ட வேண்டும்.

milestone.tumblr.com/archive

in this archive i like a girl very much. she is present in august 2010. u have to jump to that month. she wears some yellow colored balls in her neck.அவளை எல்லாம் பார்த்த பின் நம்மூரில் ஏன் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

Anonymous said...

***Washington universityயில் psychology departmentட்டைச் சேர்ந்த‌ simine vazire மற்றும் Erika N. Carlson ஆகிய இருவரும் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது இது:உங்களைப் பற்றி நீங்கள் நன்றாய் தெரியும் என்று நம்புகின்றீர்கள். ஆனால் உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் மற்றவர்களுக்கு நன்றாய் தெரியும். அதாவது உங்களின் தவறுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அது மற்றவர்களால் முடியும். அதே போல் மற்றவர்களின் தவறுகளை அவர்களாலேயே கண்டு பிடிக்க முடியாது. அது உங்களால் முடியும்.

ஏன் இப்படி ஆகின்றது என்பதைப் பற்றி அவ்விருவரும் சொல்லியிருக்கலாம். அதை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சொல்லும் இந்த உண்மையை இதை படிக்கும் முன்பே நான் உணர்ந்திருக்கிறேன்.

Only 2 reasons:

1. உங்கள் மனதிற்கு இயல்பிலேயே தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள விருப்பம் இல்லை. தன்னைத் தானே நல்லவனாய் நம்பிக் கொள்ளவே உங்கள் மனம் விரும்பும். அதனால்தான் அடுத்தவன் எப்படிப்பட்டவன் என்று நோண்டி நோண்டி மோப்பம் பிடிக்கும் நீங்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று ஒரு நாளும் யோசித்து உங்களை நீங்களே கேள்விகள் கேட்டுக் கொள்வதில்லை.

2. உங்களின் தவறுகளை கண்டுபிடிக்க நீங்கள் விரும்பினாலும் கூட அது மிகவும் கஷ்டம். காரணம் உங்களை நீங்களே விலகி நின்று உங்களையே உங்களால் காண முடியாது. ஆனால் அடுத்தவனை உங்களால் அவனிடமிருந்து விலகி இருந்து அவனை காண முடியும்.

...d...

Anonymous said...

http://google.com/transliterate/indic/Tamil


copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...

சாணக்கியன் said...

சாய்பாபாவின் அறைகளில் கண்டறியப்பட்ட செல்வங்கள் குறிப்பாக ரொக்கங்களால் நானும் தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதத் துவங்கினேன். இங்கே நல்லதொரு விவாதம் நடந்துள்ளது.. காணொளி http://www.ndtv.com/video/player/we-the-people/has-spirituality-turned-into-a-profit-industry/206047?sp