Wednesday, October 13, 2010

காகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்

அன்புள்ள நாராயணன்,

உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி

ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட்டி பிளாக்கர் பரப்பில்  வெளியே வந்தது குறித்து மகிழ்ச்சி. இதைப் பொதுவில் கொண்டு வந்து அதற்கான உடனடி விளக்கத்தை பொதுவிலேயே நான் எழுதுவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தித் தந்ததற்கும் நன்றி.

நான் டிவிட்டரில் எழுதின அந்தக் குறிப்புக்கு ரோசா பதில் கேட்டதைத் தொடர்ந்து அதைக் குறித்து பதில் எழுதுவதாக அவரிடம் ஒப்புக் கொண்டிருந்தேன். இப்போது நான் அது தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கும் டிராஃப்டில் நான் கையாண்டிருந்த கடுமையான மொழி குறித்தான விளக்கமும் (தார்மீக அடிப்படையில் மன்னிப்பும் கூட) அடக்கம். ஆனால் அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அளிக்காதவாறு மனச்சாய்வுடன் நீங்கள் எழுதியிருக்கும் இந்தப் பதிவு ரோசா மீது நீங்கள் கொண்டுள்ள நட்பை எதிரொலிக்கிறதேயன்றி எவ்விதமான நடுநிலை நேர்மையையும் வெளிப்படுத்துகிறதா என்பதை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன். மேலும் 'கீழ்ப்பாக்த்தில் இருக்க வேண்டிய நபர்கள்' என்ற நீங்கள் எழுதிய வார்த்தையும் ரோசாவை 'சைக்கோ' என்று நான் சொன்ன வார்த்தையும் வேறுவேறு பொருள் கொண்டவை என்று நீங்கள் வாதிட மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். நண்பருக்காக எனக்கு உபதேசம் செய்யப் புறப்பட்ட நீங்களே இப்படி எழுதியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இணையத்தில் இதுவரை இத்தனை கடுமையான மொழியை நான் உபயோகித்திருப்பது சாருவைக்குறித்துதான். வாசகர்களை ஆபாசமான மொழியிலும் சக எழுத்தாளர்களை வன்மத்துடன் தொடர்ந்து எழுதும் சாருவின் முன்னால் வைக்கும் என்னுடைய எதிர்ப்பு அரசியல் அது. சாரு என்னைப் பொருட்படுத்தி வாசிக்கிறாரா என்பது குறித்தான கவலை எனக்கும் அவ்வாறு அவர் வாசிப்பதற்கான அவசியம் அவருக்கும்  கூட இருக்க முடியாது.

சாருவிற்குப் பிறகு நான் இத்தனை கடுமையாக எழுதியது ரோசாவைக் குறித்தான் இந்தக் குறிப்பு மாத்திரம்தான். சாருவையையாவது நான் பொருட்படுத்தி வாசிக்கும் எழுத்தாளர்களின் வரிசையில் வைத்துள்ளேன். ரோசாவின் பதிவுகளை நான் பொருட்படுத்தி வாசிப்பதோ பின்னூட்டம் இடுவதோ கிடையவே கிடையாது. என்றாலும் இணையத்தில் நான் பதிவு எழுதத் துவங்கியதிலிருந்தே  ரோசா, என் மீதுள்ள - இதுவரை என்னால் காரணமே அறிந்து கொள்ள முடியாத - காழ்ப்புடன் தொடர்ந்து என்னைச் சீண்டிக் கொண்டேயிருந்தார். நண்பர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர் குறிப்பிடட சிலரிடம் இவ்வாறுதான் நடந்து கொள்வதாகவும் கடுமையான ஆபாசமான மொழியில் திட்டி விட்டு சமயங்களில் அதை அழித்துவிடுவதாகவும் சொன்னார்கள். சக பதிவர்களைக் குறித்து இத்தனை கடுமையான மொழியில்  பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதுபவர் ரோசாவா அல்லது நானா என்பதை கடந்த வருடங்களில் தமிழ் இணையப்பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அவதானித்து வருபவர்கள் அறிவார்கள்.

இவரைப் பொருட்படுத்தி வாசிக்காத காரணத்தினாலும் வேலிக்குள் போகிற ஓணானை எதற்கு வேட்டிக்குள் விட்டுக் கொள்ள வேண்டும் என்கிற காரணத்தினாலும் இவருக்கு சில சமயங்களைத்தவிர நான் எந்தப்பதிலும் அளித்ததேயில்லை. என்றாலும் பதிவுலகத்தில் தொடர்ந்த இவரின் சீண்டல் டிவிட்டரிலும் தொடர்ந்தது.

என்னுடைய பதிவுகளை மொக்கை என்று விமர்சித்த காரணத்தினாலேயே அவரைப் பற்றி நான் கடுமையான மொழியில் எழுதியதாக அவர் எழுதியிருக்கிறார். அது மாத்திரமே காரணமல்ல  என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். என் பதிவை  விமர்சிக்க எவருக்குமே உரிமையுண்டு. இப்படிச் சொல்கிறவர்களின் மீதெல்லாம் நான் பாய வேண்டுமென்றால் ஒரு  நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரங்களையாவது இதற்கு  ஒதுக்குமளவிற்கு அனானி பின்னூட்டங்கள் என் பதிவில் தொடர்ந்து வருகின்றன.  அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவதேயில்லை.

ஆனால் ஒரளவு நீங்கள் அறிந்து வைத்திருக்கிற நபர், போகிற போக்கில் மேம்போக்காக உங்களை காயப்படுத்த வேண்டுமென்றே 'விமர்சனம்' என்ற  போர்வையில் தொடர்ந்து சீண்டிக் கொண்டிருந்தால் அவரை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? 'இலக்கிய சிந்தனையும் வீச்சும் பரப்பும் கொண்ட மனிதர்' என்று உங்களால் வர்ணிக்கப்பட்ட ரோசா இதைச் செய்வதற்கும் இதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிற ஒரு சாதாரண சில்லுண்டி பதிவர் செய்வதற்கும் வித்தியாசமுண்டா இல்லையா?. என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை.

இதுதான் அந்தக் கடுமையான மொழியுடன் கூடிய உடனடி எதிர்வினைக்கு உப காரணமென்றாலும் பிரதான காரணங்களுள் ஒனறு, மேற்சொன்னாறு ஆரம்பத்திலிருந்தே பதிவுகளில், பின்னூட்டங்களில் என்னைச் சீண்டி வந்துக் கொண்டிருந்ததும். இதற்கெல்லாம் இணையத்திலிருந்தே என்னால் பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் என்றாலும் இதற்காக பழைய பதிவுகளை - குறிப்பாக ரோசா பதிவுகளை- தேடி வாசிக்க நேர்வது  மிகுந்த அலுப்பையும் மனஉளைச்சலையும் தருவது.

சுந்தர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் எழுதின பதிவில் ரோசாவை, 'நேர்ச்சந்திப்புகளில் வன்மமும் அநாகரித்தனமும் கொண்டவர்' என்று நான் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது முழுக்க முழுக்க (நண்பர்கள் சந்திப்பில்) ரோசாவால் சப்ஜெக்டிவ்வாக காயப்பட நேர்ந்த (கருத்து அல்லது விவாத ரீதியானது அல்ல) அனுபவங்க்ளின் எதிரொலியாக எழுதினது. ஆனால் இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு 'சுரேஷ் கண்ணன் என்னைப் பற்றி அபாண்டமாக புளுகி விட்டார்' என்று ரோசா தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதை மறுப்பதற்கான ஆதாரங்களையும் தன்னால் தர முடியும் என்றும் சுந்தர் தாக்குதல் தொடர்பான விளக்கப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (இதை அவர் நீக்கி விட்டதால் இது குறித்தான சுட்டியை இங்கு தர முடியவில்லை. ரீடரில் ரோசாவின் பதிவை தொடர்பவர்கள் இதை வாசிக்க முடியும்).

'என்ன வகையில் அநாகரிமாக நடந்து கொண்டேன்' என்று என்னிடம் ரோசா விளக்கம் கேட்பது போல,  நான் அபாண்டமாக புளுகியதற்கு ஆதாரம் உண்டு என்று ரோசா எழுதியது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு எனக்கும்  உரிமையுண்டு. மேலும் என்னைக் குறித்தும் எழுதிய குறிப்புகள் அடங்கிய பதிவுகளை நீக்கி விட்ட ரோசாவிற்கு என்னிடம் விளக்கம் கேட்பதற்கு எந்த வகையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை.

ரோசா என்னைத் தொடர்ந்து சீண்டி வந்துக் கொண்டிருந்த மனநெருக்கடிகளின் போதே அவர் கேட்டிருந்த விளக்கப்பதிவை என்னால் எழுதியிருக்க முடியும். ஆனால் இதில் என்னையும் ரோசாவையும் தாண்டி சந்திப்பிற்கு அழைத்த பொதுவான நண்பர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டாமே என்று அமைதி காத்தேன்.

உண்மையில் சுந்தருக்கு அவர் பதிலளித்த தொடர் பதிவு நிறைவு பெறும் சமயத்தில் மேற்குறிப்பிட்ட காரணத்தையும் மீறி நான் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் இடையிலேயே அந்தப் பதிவுகளை அவர் நிறுத்திவிட்டதும் நீக்கிவிட்டதும் காரணமாக என்னால் எழுத முடியாமற் போய் விட்டது.

ரோசாவை கடுமையான எழுதினது தொடர்பாக பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு 'நீங்களா அதை எழுதினது' என்று ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் கேட்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டிரு்ப்பது போல இவ்வாறு எழுதுவது என்னுடைய இயல்பும் வழக்கமும் அல்ல என்பதை என் பதிவுகளை வாசிப்பவர்களே உணரக்கூடும். தவறு செய்தவனைக் காட்டிலும் அதைச் செய்யத் தூண்டியவனே பிரதான குற்றவாளி என்கிற முறையில் என்னை இந்த மனநெருக்கடிக்கு தள்ளின ரோசாவிற்கும் இந்த நிகழ்வில் பங்குண்டு என்பதையும் என் குறிப்பை வாசிப்பவர்கள் உணர வேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த நிலையில் ரோசாவிற்காக நான் தயார் செய்து கொண்டிருந்த விளக்கங்களை (இதிலேயே சிலது வந்துவிட்டது) எழுதுவதிலும் வெளியிடுவதிலும் எவ்விதப் பயனுள்ளது என்பதை (நாராயணின் பதிவை வாசித்த பிறகு)  யோசிக்க ஆயாசமாய் உள்ளது. இது எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதையும் யூகிக்க முடிகிறது. இவ்விதமான காகிதக் கத்திச் சண்டைகளிலும் சில்லுண்டித்தனமான பதிவுகளிலும் செயற்பாடுகளிலும் எனக்கு எப்போதுமே விருப்பமோ ஈடுபாடோ இருந்தது கிடையாது. இதிலிருந்து மீண்டு வருவதே இப்பொதைய பிரதான யோசனையாக உள்ளது என்கிற வகையில் இதைத் தொடரத்தான் வேண்டுமா என்றும் தோன்றுகிறது.

ரோசாவின் நண்பராக என்னுடைய விளக்கத்தை நீங்கள் எப்படி வாசித்துக் கொண்டாலும், பொதுவான நண்பர்களும் இதன் பின்னணியை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த உடனடி பதிவை வெளியிடுகிறேன். இனி நான் பதிலளிக்க வேண்டியது ரோசாவிற்கேயன்றி இதை ஊதிப் பெருக்க விரும்பும் நபர்களுக்கல்ல. ஆனால் அதைச் செய்வது என் அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. இனி ரோசா என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும் என்றும் இதை இப்படியே தலைமுழுகித் தொலைப்பது என்றும் இப்போதைக்குத் தோன்றுகிறது. அப்போது நீங்கள் உள்ளிட்ட இணைய நண்பர்கள் இவ்வாறான 'பஞ்சாயத்து மற்றும் உபதேசப்' பதிவுகளை எழுதுவீர்களா அல்லது கள்ள மெளனம் சாதிப்பீர்களா என்பதை காத்திருந்து பார்க்க விரும்புகிறேன்.

பின்குறிப்பு: நாராயண், ஃபேஸ்புக்கில் இந்தக் குறிப்பை எழுதினவரை குறிப்பிட்டுள்ளீர்கள். (அவரை பின்தொடராத காரணத்தினால் அது என்னவேன்று எனக்குத் தெரியவில்லை). கொடுமை ஐயா. ரோசாவிற்காவாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருட்படுத்தி பதிலளிக்கலாம். ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் நபர் இணையச் சில்லுண்டிகளின் ராஜா. அவர் டிவிட்டர்களை சிலதை வாசித்தாலே இது புரிந்து போகும். இதை ஊதிப் பெருக்கி வேடிக்கை பார்ப்பதே இந்தச் சில்லுண்டிகளின் வேலையும் நோக்கமும். சாத்தானே வேதம் ஓதுவது போல, இந்தச் சில்லுண்டிகளே இணைய நீதிபதிகளாகவும் வேடம் ஏற்றிருக்கும் கருப்பு நகைச்சுவையின் அபத்தத்தைத் தாங்கவே முடியவில்லை. இயன்றால் இவர்களின் மேற்கோள்கள் இல்லாமல் நீங்களே நேரடியாக எழுதுங்கள் நாராயணன். இது என் வேண்டுகோள்.

suresh kannan

11 comments:

ILA (a) இளா said...

இவ்வளவு சீக்கிரம் பதிவு வரும்னு நினைக்கலீங்க. மெதுவா, பொறுமையா படிச்சுட்டு எஸ்ஸாகிடறேன்..

பாஸ்கர் said...

" மேலும் 'கீழ்ப்பாக்த்தில் இருக்க வேண்டிய நபர்கள்' என்ற நீங்கள் எழுதிய வார்த்தையும் ரோசாவை 'சைக்கோ' என்று நான் சொன்ன வார்த்தையும் வேறுவேறு பொருள் கொண்டவை என்று நீங்கள் வாதிட மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்."

அறிவுரை சொல்லவில்லை, தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எது எப்படி இருந்தாலும் மேற்கண்ட மாதிரி எழுதுவதைத் தவிர்த்து விடலாமே? நீங்கள் இருவரும் இப்படி எழுதுவது மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அபாண்டம் செய்வதாக இருக்கிறது.

தமிழகம் போலல்லாமல் இதுவே வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா போன்ற இடத்தில் இப்படி எல்லாம் எழுதினீர்கள் என்றால் நீங்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டி வரும்-
http://www.sane.org/stigmawatch - "StigmaWatch voices community feedback about representations within the media that stigmatise mental illness ..."

நீங்கள் ரோசா அவர்கள் குறித்தும் நாராயணன் உங்களைக் குறித்து இப்படி எழுதுவது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது எப்படிப்பட்ட முத்திரை குத்துகிறது என்பதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு கலைஞன் என்பவன் எவ்வளவு sensitiveஆக இருக்க வேண்டும் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. அதுவும் உலக சினிமா, தமிழ் இலக்கியம் போன்ற உன்னதங்களை ரசித்து விமரிசனம் செய்கிற நீங்கள் மற்றும் உங்களைப் போன்ற சிந்தனாவாதிகள் இந்த sensitivityயை முனைந்து வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்..

சித்த சுவாதீனம் இழந்தவர்கள் மீது போகிற போக்கில் சேற்றை வாரி இறைப்பது உங்களுக்குக் கொஞ்சம் கூட அழகில்லை. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.

ராம்ஜி_யாஹூ said...

நீங்களும் சரி, ரோசா வசனத், நாராயணனும் சரி- எழுதுவதற்கு, பகிர்வதற்கு எவ்வளவோ வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. அதை விடுத்தது சச்சரவுகளில் ஈடுபட்டு இது குறித்தே எழுதி கொண்டிருப்பதால் இழப்பு ஏற்படுவது என் போன்ற வாசகர்களுக்கு தான்.

இலக்கியம், புத்தகம், சமூக விஷயங்கள் எல்லாம் பற்றி எழுதினால் அதிக பின்னூட்டங்கள், வாக்குகள், ஹிட்ஸ் வராது.
சண்டை, சச்சரவு குறித்து எழுதினால் மட்டுமே அதிக ஹிட்ஸ், கவனம் வரும் என்ற எண்ணத்தில் எழுதி இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

bogan said...

அன்புள்ள சுரேஷ்கண்ணன் அவர்களுக்கு உண்மையிலேயே ரொம்ப வருத்தமாய் இருக்கிறது.படைப்புத் திறனோ ஊக்கமோ இல்லாதவர்கள்தான் இது போன்ற சண்டைகள் மூலம் தம்மைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வார்கள்.பெண்களின் குழாயடிச் சண்டைகளுக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை.அவர்களாவது பரவாய் இல்லை.அதற்கு எந்தவித புத்திஜீவித அல்லது இலக்கிய அந்தஸ்தும் கோருவதில்லை.சர்ச்சைகளோ வசைகளோ கருத்துலகில் புதிதல்ல.ஜெமோ சொன்னது போல் வள்ளலாரின் அருட்பா மருட்பா பிரச்சினையில் இதைவிட மோசமான வசைகள் வீசப் பட்டன.ஆனால் தனிப்பட வசைகள் தாண்டி அதன் அடிப்படையில் எல்லாம் ஒரு கருத்து ,பார்வை மோதல் இருந்தது.இதில் என்ன இருக்கிறது?நீங்கள் எதைப் பற்றி கோபம் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் தரத்தை நிர்ணயிக்கிறது .இல்லையா.நான் எப்போதும் உங்களை பொருட்படுத்தி வாசிப்பேன்.ஆனால் சமீபகாலமாக நீங்கள் இணையத்தின் மொக்கை ஜோதியில் கலந்துவிட்டது போல் தோன்றுகிறது. சொல்லத் தோன்றியது.தோன்றியது பிழையெனில் பொறுத்தருள்க.

ராம்ஜி_யாஹூ said...

பாஸ்கரின் பின்னூட்டத்தில் உள்ள இந்த வரிகள் மிக அருமை
நீங்கள் இருவரும் இப்படி எழுதுவது மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அபாண்டம் செய்வதாக இருக்கிறது.
சித்த சுவாதீனம் இழந்தவர்கள் மீது போகிற போக்கில் சேற்றை வாரி இறைப்பது

பிச்சைப்பாத்திரம் said...

திரு.சுனந்தா,

உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து என்னைச் சீண்டுவதன் மூலம் என்னை மனநெருக்கடிக்கு உள்ளாக்கி வார்த்தைகளைப் பிடுங்கி அதை தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்வதற்கான சூழலுக்காக சிலர் காத்துக் கொண்டிருக்கும் போது நான் மிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய பின்னூட்டத்தையும் அவர்கள் இதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் தவிர்க்கிறேன். புரிதலுக்கு நன்றி.

Anonymous said...

In your blog when we move the mouse arrow(cursor) over a link an underline will appear below that link. apart from this underline effect you can also make one more change. You can change color of the link when mouse arrow mouse over it. go to edit html in layout. dont checkmark expand widget templates.

find this

a:hover {
color:$titlecolor;
text-decoration:underline;
}

In the above code change $titlecolor into css number of any color u like. for finding css number of any color go to layout.click template designer. click advanced. click any item associated with color. click any color. notice the css number appear in the box near to that color. use that css number in your template.

Ashok D said...

வழக்கமான taste இல்ல இந்த பதிவுல.. ரொம்ப கஷ்டப்பட்டு படித்தேன்...

அது சரி ரோசாவ பத்தி எழுதியிருக்கீங்க... செல்வமணி கோச்சிக்கமாட்டாரா? :)

அரவிந்தன் said...

சுரேஷ்,

நீங்கள் ஒரு தனிநபரை பொதுவெளியில் சைக்கோ என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்த இயலும்.?

அரவிந்தன் said...

எந்த சந்தர்ப்பங்களில் அல்லது சந்திப்புகளில் ரோசா அநாகரீக நடந்தார் என்று சொல்லாமல் புறம்பேசுவதில் நியாயமில்லை.

Anonymous said...

http://charupenline.blogspot.com/