Sunday, December 27, 2009

தமிழ் சினிமா 2009


இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை தரஅடிப்படையில் நோக்கினால் பொதுவாக திருப்தியில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெரும்பாலான படைப்புகள் வணிகநோக்குத் திரைப்படங்களின் பிரத்யேக வார்ப்பினில் முடங்கியிருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் வெளியான 'பருத்தி வீரன்' 'சுப்ரமணியுபுரம்' ஆகிய படங்களைப் போல trendsetting படங்கள் எதுவும் இந்த ஆண்டில் வெளியாகாதது துரதிர்ஷ்டவசமானது. ரெட் ஒன் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் தமிழிற்கு அறிமுகமாகியிருந்தாலும் தொழில்நுட்பத்தை மாத்திரமே வைத்துக் கொண்டு ஒரு நல்ல திரைப்படத்தை தந்துவிட முடியாது என்கிற அடிப்படை புரிதல் இல்லாதது போல்தான் இருக்கிறது. பெரும்பாலான இயக்குநர்கள் பாதுகாப்பான பாதையிலேயே பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதும் வெளிப்படை.

வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற படங்களே பிரதானமாக பேசப்படுவதால் புதிய முயற்சிகளுக்கு இயல்பாக தடைக்கற்கள் உருவாகின்றன. பாண்டிராஜன், அறிவழகன், அருண் வைத்தியநாதன், நந்தினி, சுசீந்திரன் போன்ற அறிமுக இயக்குநர்கள் புதிய நம்பிக்கைளையும் அடையாளங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சர்வதேச திரைப்படச் சூழலோடு ஒப்பிடும் போது நம்முடைய சினிமா இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது என்பதை வேதனையுடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒரு நல்ல முயற்சி வெளிவந்தாலும் அது பற்றிப் படர்வதற்குள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற வணிகப்பட இயக்குநர்கள் பிரம்மாண்டங்களை வெளியிட்டு அதற்கு வெடிகுண்டு வைத்து விடுகின்றனர். இரான் போன்ற போன்ற அடக்குமுறை சூழல் கொண்ட சிறிய நாடுகளிலிருந்து கூட தரமான திரைப்படங்கள் வெளிவரும் போது ஜனநாயக சூழல் கொண்ட, அதிகத் திரைப்படங்கள் தயாரிக்கிற இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலிருந்து அதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படாமலிருக்கும் நிலை மாற்றப்பட வேண்டியது. பொழுது போக்குப் படங்களைக்கூட ஒரே மாதிரியான வார்ப்பில் தரும் திரைப்படங்களை ஒதுக்கி தரமான படங்களை வரவேற்கின்ற சூழல் ஏற்படுவது ரசிகர்களின் ரசனை மாற்றத்தில்தான் அடங்கியுள்ளது. "வேட்டைக்காரன்" போன்ற குப்பைகள் இவ்வளவு பரபரப்பாகவும் ஆவலுடனும் எதிர்பார்க்கப்படும் நிலையை கவனிக்கிற போது அம்மாதிரியான சூழல் ஏற்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகளாகும் என கருதுகிறேன்.

இந்நிலையில் என்னுடைய பார்வையில் 2009-ல் வெளிவந்ததில் (இலுப்பைப்பூ சர்க்கரை) சிறந்த மற்றும் குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களையும் படைப்பாளிகளையும் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு உருவானது.

சிறந்த திரைப்படங்கள்

வெண்ணிலா கபடிகுழு
பசங்க
அச்சமுண்டு அச்சமுண்டு
நான் கடவுள்


குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள்

சிவா மனசுல சக்தி
யாவரும் நலம்
குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
நாடோடிகள்
பொக்கிஷம்
ஈரம்
திறுதிறு துறுதுறு
பேராண்மை
ரேணிகுண்டா
லாடம்
காதல்கதை

குறிப்பிடத்தகுந்த மறுஉருவாக்க மற்றும் மொழிமாற்றத் திரைப்படங்கள்

உன்னைப் போல் ஒருவன்
கண்டேன் காதலை
பழசிராஜா
நினைத்தாலே இனிக்கும்

சிறந்த அறிமுக இயக்குநர்கள்

 சுசீந்திரன்(வெண்ணிலா கபடிகுழு)
பாண்டிராஜன் (பசங்க)
அருண் வைத்தியநாதன் (அச்சமுண்டு அச்சமுண்டு)
நந்தினி (திறுதிறு துறுதுறு)
அறிவழகன் (ஈரம்)

சிறந்த அறிமுக இசையமைப்பாளர்கள்

ஸ்ருதி கமல்ஹாசன் (உன்னைப் போல் ஒருவன்)
செல்வகணேஷ் (வெண்ணிலா கபடி குழு)
தமன் (ஈரம்)
கணேஷ் ராகவேந்திரா (ரேணி குண்டா)
ஹரிஹரன்-லெஸ்ஸி (மோதி விளையாடு)

சிறந்த ஒளிப்பதிவு கொண்ட திரைப்படங்கள்

 நான் கடவுள் (ஆர்தர் வில்சன்)
ஈரம் (மனோஜ்)
அச்சமுண்டு அச்சமுண்டு (கிரிஸ் பிரெய்லிச்)

சிறந்த இசையமைப்பாளர்

 ஹாரிஸ் ஜெயராஜ் (அயன், ஆதவன்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்கள்

இளையராஜா (நான் கடவுள்) ஸ்ருதி ஹாசன் (உன்னைப் போல் ஒருவன்)

சிறந்த கதை


நான் கடவுள்

சிறந்த திரைக்கதை


உன்னைப் போல் ஒருவன்

சிறந்த வசனம்

ஜெயமோகன் (நான் கடவுள்) பாஸ்கர் சக்தி (வெண்ணிலா கபடிகுழு)

சிறந்த இயக்குநர்

பாலா (நான் கடவுள்)

சிறந்த நடிகர்

மோகன்லால் (உன்னைப் போல் ஒருவன்), ஆர்யா (நான் கடவுள்)

சிறந்த நடிகை

பூஜா (நான் கடவுள்)

சிறந்த நிகழ்வு

ரஹ்மான் ஆஸ்கர்

பிரகாஷ்ராஜ் - தேசிய விருது (சிறந்த நடிகர்-காஞ்சிவரம்)

சிறந்த ஏமாற்றம்

யோகி

துரதிருஷ்டவசமான நிகழ்வு

நாகேஷ் மறைவு


suresh kannan

13 comments:

Athisha said...

நல்லாருக்கு உங்க தேர்வு

;-) ஆனா நினைத்தாலே இனிக்கும் , நான் கடவுள்,கொஞ்சம் டூ மச்

அறிமுகமான பாதி இசையமைப்பாளர்கள சிறந்தவர்களாக போட்டிருக்கீங்களோ!

அப்புறம் அந்த போட்டோ நிக்கற ஆளு யாரு ?

Athisha said...

அப்புறம் அந்த ஆதவன் வாரணம் ஆயிரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை!

பிச்சைப்பாத்திரம் said...

அதிஷா:

வாரணம் ஆயிரம் 2008-ல் வெளியானது.

//போட்டோ நிக்கற ஆளு // :-)

Ashok D said...

சிறந்த ஏமாற்றம்?

Ashok D said...

:)

gbalaji said...

I believe "Achchamundu Achchamundu" is brave attempt movie in Tamil. I am not supporting this movie since I worked as a DIT in the movie but a great attempt for audience who complain about movies to the calibre of Hollywood.

One more thing...

I dont believe in movies which will best only if a festival movie. Commercial movies pay way for producers like Shankar to experiment with small budget good movies like Eram and another one which is Pasanga, a brave attempt.

Unknown said...

தமிழ் திரையுலகம் - இந்த வருடம் சிறிது முன்னேற்றமே..

கணேஷ் said...

நினைத்தாலே இனிக்கும், காதல்கதை (சொல்ல வந்த விஷயத்தில் டெப்த் இல்லை. நேவல் ஷோ)---- என்னக் கொடுமை ஸார் இதெல்லாம்?

மற்றபடி, அனைத்து இடங்களிலும் உங்களுடன் ஒத்துப் போகிறேன்

செ.சரவணக்குமார் said...

உங்கள் தேர்வுகள் மிக அருமை

Bharathi said...

நினைத்தாலே இனிக்கும் படத்தை மறுஉருவாக்க / மொழிமாற்று வகையில் குறிப்பிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

அதன் orginal ஆனா classmates படம் ஏற்படுத்திய உணர்வில் 5 சதவிகிதம் கூட நினைத்தாலே இன்னிக்கும் ஏற்படுத்தவில்லை என்றே நினைக்கிறன்.

மற்ற தேர்வுகள் அருமை , சிறந்த ஏமாற்றம் உட்பட :)

Kalai said...

Laadam - Story & even scenes ripped-off from 'Lucky number Slevin" and some scenes lifted from french movie '13 Tzameti" & Korean movie "3 Iron".

Boston Bala said...

எ.பொ.அ.
1. நாடோடிகள்
2. பேராண்மை

லாடம் மொ.மா.தி.

butterfly Surya said...

தேர்வுகள் நன்று.

புத்தாண்டு வாழ்த்துகள்.