Friday, December 11, 2009

தர்க்கத்திற்குள் அடங்காத ஆதவன்


ஆதவன் திரைப்படம் பார்த்தேன். எந்தவிதமான தர்க்கவிதிகளுக்குள்ளும் அடங்காத கதை/திரைக்கதை. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி அதன் கண்ணை மறைக்கும் போது அதைப் பிடித்துவிடலாம் என்ற பொருளில் ஒரு பழம்பாடல் உண்டு. இதன் திரைக்கதையும் அப்படித்தான் உள்ளது. இதனாலேயே இது ஒரு சிறந்த காமெடிப் படமாகிறது. வடிவேலுவின் காமெடி தனி. அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே பயணிப்பதை உணர வேண்டும். சீக்கிரம் போரடித்துவிடலாம். குழந்தைகள் அவரைக் கண்டவுடன் சிரிக்கும் வரை அவருக்கு பயமில்லை.

'ஜட்ஜை போட்டுத் தள்ளணும்' என்று படம் முழுக்க உரையாடிக் கொண்டிருந்த ராசியோ, என்னமோ ஜட்ஜ் பாத்திரத்தில் நடித்த முரளி படம் முடிந்தவுடன் நிஜமாகவே போய்ச் சேர்ந்து விட்டார். அற்புதமான ஒரு நடிகர்களை தமிழ்த் திரையுலகம் எப்படி பாழ்படுத்தி உபயோகிக்கிறது என்பதற்கு இந்தப்படம் இன்னும் ஒரு உதாரணம். இதே படத்திலேயே இன்னொரு பாழ் 'சாயாஜி ஷிண்டே'.

'கருப்பு வெள்ளை' காலத்திலேயே தான் போட்டிருக்கும் சிகப்பு லிப்ஸ்டிக் தெரியுமளவிற்கு திரையில் தோன்றும் சரோஜாதேவியின் குளோசப் காட்சிகளைக் கண்டு குழந்தைகள் 'வீல்'கிறார்கள். சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது.

பாரதியார் கேட்ட வரங்களில் ஒன்றினைப் போல 'விசையுறும் பந்தாக' மிக உற்சாகமாக இருக்கிறார் சூர்யா. வில்லாக வளைகிறார்; நெளிகிறார்; தாவுகிறார். 'விஜய்'யைத் தாண்டுவதுதான் அவரது பிரதான நோக்கு என்பது கண்களில் தெரிகிறது. இதையே தொடராமல் 'காக்க காக்க' பாணிப் படங்களிலும் நடிப்பது மார்க்கெட் சாஸ்வதமாக இருப்பதற்கு உகந்தது. ஹாரிஸின் பாடல்கள் உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் இவரும் அடுத்த படியில் ஏற வேண்டிய தருணம். குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மெட்ரோ வாட்டர் போல CG பல காட்சிகளில் விரயமாக்கப்பட்டிருக்கிறது.

அந்தரத்தில் தொங்குகிற காரின் மீது ராக்கெட் பாமை செலுத்துகிறான் வில்லன். அது உடனே வெடிக்காமல் அடையார் சிக்னல் போல வெடிப்பதற்கு எத்தனை நிமிடங்கள் ஆகும் என்று காட்டுகிறது. அதற்குள் மரண உறக்க நாயகன் முந்திக் கொள்கிறான். இப்படி ஒரு அசமஞ்ச வில்லன் இருந்தால் நான் கூட ஜெயித்துவிடுவேன். குழந்தைகள் கூட விழுந்து சிரிக்கும் இம்மாதிரி பல காட்சிகளை வைத்து லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று இயக்குநர் கேட்டாலும், கே.எஸ்.ரவிக்குமாரிடம் சுவாரசியமாக கதை சொல்லும் அடிப்படையான திறமை இருக்கிறது. அதை 'தசாவதாரம்' போல் ஒழுங்கான விதிகளுக்குள் அடைக்கத் தெரிந்தால் அவரால் இன்னும் சிறப்பான வெற்றிப் படங்களைத் தர முடியும்.

ஆனால் வணிகநோக்கு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு 'கிளிஷேக்களின்' தொகுப்பாக வெளிவரும் அவரது தொடர்ச்சியான திரைப்படங்களைக் காணும் போது, தமிழ்த் திரையின் தரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டுச் செல்ல இவர் ஒருவரே போதும் என்று தோன்றுகிறது.

suresh kannan

14 comments:

அத்திரி said...

//சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது. //

-->)))))))))))))

குப்பன்.யாஹூ said...

The above sentence could be avoided

dheepan said...

no that was outstanding line i like it

வால்பையன் said...

//சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது. //

ஆட்டக்காரரை விட்டுட்டிங்களே!?

சரவணகுமரன் said...

//ஒரு நடிகர்களை //

!

Anonymous said...

//சிம்பு உறிஞ்சனது போக//

what about P.Diddy?

ILA (a) இளா said...

//சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது/

ஏன் இப்படி?

Toto said...

இந்த‌ப் ப‌ட‌த்திற்கு உங்க‌ள் ப‌திவை வீண‌டித்திற்க‌ வேண்டாம்னு நினைக்கிறேன்.. த‌மிழ்ல‌ வ‌ந்த‌ சிற‌ந்த‌ 10 திரைக்க‌தைக‌ளை சொல்லுங்க‌ ஸார்.. இது அப்ப‌டியே ப‌ர‌வி தொட‌ர்ப‌திவாக‌வும் வாய்ப்பிருக்கு :)

-Toto
www.pixmonk.com

வந்தியத்தேவன் said...

அருமையான விமர்சனம். வடிவேல் இல்லையென்றால் படம் பரிதாபம்.

//சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது. //

இந்த வரிகள் கலக்கல். நயன் பேசாமல் ஓய்வெடுக்கலாம்.

செ.சரவணக்குமார் said...

//குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மெட்ரோ வாட்டர் போல CG பல காட்சிகளில் விரயமாக்கப்பட்டிருக்கிறது.//

அருமை.

கலையரசன் said...

என்னாது? இந்திராகாந்திய சுட்டுடாங்களா????

சென்ஷி said...

//சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது.
//

கேவலமான வார்த்தையமைப்பு :-(.

உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை சுரேஷ் கண்ணன்.

Anonymous said...

//சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது. //

ஒரு நல்ல விமர்சகருக்கு இந்த வரிகள் அழகல்ல.

Swami said...

indha kuppai padathukku vimarsanama? Sooryavin uzhaippu atthanaiyum waste!!