Tuesday, December 25, 2007

உலக சினிமா ஒன்றை காண வேண்டுமா?

உங்களில் பெரும்பாலோரைப் போல எனக்கும் கலைப்படம் என்றழைக்கப்படும் artfilm மீது ஒவ்வாமை இருந்ததுண்டு. 'ஒரு ஆள் பீடி பிடித்துக் கொண்டிருப்பதை அரை மணி நேரமும் ஒண்ணுக்கு போவதை கால் மணி நேரமும் காட்டிக் கொண்டிருப்பார்கள்' என்று நானும் நண்பர்களுடன் பேசிச் சிரித்திருக்கிறேன், சத்யஜித்ரேவின் படங்களை தொலைக்காட்சியில் - என்னுடைய இருபதாவது வயதில் - காணும்வரை. அதில் 'பதேர் பாஞ்சாலி 'சாருலதா' 'ஜனசத்ரு' போன்ற வங்காளிப் படங்கள் என்னுடைய திரைப்பட ரசனையையே மாற்றியமைத்து விட்டன. இத்தனை நாள் யதார்த்தமேயில்லாத, மக்களின் வாழ்வனுபவங்களை பிரதிபலிக்காத, வெறும் குப்பைத்தனமான பொழுதுபோக்கு படங்களை பார்த்துக் கொண்டிருந்தோம் என்று தோன்றியது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இயந்திர வாழ்க்கையோடு போட்டி போட்டுக் கொண்டிருந்ததினால் அதிகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் சிற்றிதழ்களின் மூலமாக உலகத் திரைப்படங்களின் இயக்குநர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. சில திரைப்படங்களை குறித்த கட்டுரைகளை வாசிக்கும் போது அந்தப்படங்களை உடனே காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். ஆனால் அந்தத் திரைப்படங்களின் திரையிடல் குறித்த தகவலின்மையால் அது நிறைவேறாத ஆசையாகவே போய்விடும். இந்தத் தொலைக்காட்சிகள் வணிக நோக்கமுள்ள நிகழ்ச்சிகளின் நடுவே ஒரு இரண்டு மணிநேரத்தையாவது ஒதுக்கி ஏன் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்பி தங்கள் பாவங்களை ஒரளவிற்காவது கழுவிக் கொள்ளலாமே என்று தோன்றும். ஒரு முறை சத்யஜித்ரேவின் 'அகாந்துக்' (agantuk) திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டு உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு காணச் சென்றேன். அவரோ படம் துவங்கின ஐந்தே நிமிடத்திலேயே "என்னப்பா படமிது" என்று வேறு சானலுக்கு மாற்றியதில் அவமானமாக திரும்பினேன்.

Photobucket

எதையோ சொல்லப் போய் என்னுடைய சொந்தக்கதையை விவரித்ததற்கு மன்னிக்கவும். உலகத் திரைப்படங்களின் பரிச்சயம் இல்லாதவர்கள் அல்லது பரிச்சயம் இல்லாமலேயே அதன் மீது ஒவ்வாமை கொண்டிருப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள். இந்திய நேரப்படி, இன்றிரவு (25.12.2007) 08.00 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் 'Baran' என்கிற இரானியத் திரைப்படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. சர்வதேச அரங்கில் அந்த குட்டி தேசத்திலிருந்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. Majid Majidi என்கிற சிறந்த இரானியத் திரைப்பட இயக்குநரின் உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட படமிது.

ஒன்றரை மணி நேரத்தை தியாகம் செய்து இந்தத் திரைப்படத்தை பாருங்கள். தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நச்சுச்சூழலில் - அது தெரியாமலே - நாம் உழன்று கொண்டிருக்கிறோம் என்று தெரியும்.

Baran பற்றிய விக்கிமீடியாவின் அறிமுகம் | Baran பற்றிய ஹரன்பிரசன்னாவின் பதிவு

3 comments:

ஹரன்பிரசன்னா said...

நானும் இந்தப் படம் பார்க்கச் சொல்லி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். நிச்சயம் மக்கள் தொலைக்காட்சி இதை ஒளிபரப்பிவிடவேண்டும் என்று எல்லா கடவுளையும் வேண்டிக்கொள்கிறென். :P

SurveySan said...

Baran pathirukken. arumayana padam.

Iranian movies rule!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//அதிகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் சிற்றிதழ்களின் மூலமாக உலகத் திரைப்படங்களின் இயக்குநர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. சில திரைப்படங்களை குறித்த கட்டுரைகளை வாசிக்கும் போது அந்தப்படங்களை உடனே காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். ஆனால் அந்தத் திரைப்படங்களின் திரையிடல் குறித்த தகவலின்மையால் அது நிறைவேறாத ஆசையாகவே போய்விடும்.//

110% true!

My journey towards Iranian movies started with 'Baran' a few years ago.

just watched taare zameen par. aamir khan seems to have been inspired by majid majidi

-0-

Suresh, do keep you eyes peeled for 'persepolis'. an animated movie (french original). it recvd an award in this year's cannes film festival.

it's a cartoon book and i read the tamil translation a few days ago (brought out by vidiyal). thanks to podichchi. am waiting for her to write about it. have requested the french and english versions in my library.