Thursday, September 06, 2007

சஞ்சய்தத், penis, உயிர்மை........

அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்தும், ஒன்றுக்கும் உதவாத செய்திகளை ஊதிப் பெருக்கி தலைப்புச் செய்தியாக்கி (நாம் வலைப்பதிவுகளில் செய்வதைப் போல)தம்முடைய விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் வியாபாரத் தந்திரங்கள் குறித்தும் நாம் பொதுவாக அறிந்தததுதான் என்றாலும் பல சமயங்களில் எரிச்சல் உச்சந்தலையை தொடுவதை தவிர்க்க முடிவதில்லை.

சஞ்சய்தத் என்றொரு பிரகஸ்பதி. ஏ.கே.47 துப்பாக்கிகள், குண்டுகள் வைத்திருந்ததாகவும், மும்பை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டிருப்பவர்களிடமிருந்து அதை வாங்கியுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக சஞ்சய்தத் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். (ஏகே 47 வைத்து காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரொம்பவும் பெரிய குடும்பம் போலிருக்கிறது.) இது ஒருபுறம் இருக்கட்டும். இதை ஊடகங்கள் கையாண்ட விதம்தான் என்னை ரொம்பவும் கடுப்பேற்றியது. அவர் கைதாகி சிறை செல்லும் வரை பின்னாலேயே வால்பிடித்துச் சென்றது முதல், சஞ்சய்தத் சிறையில் கூடை பின்னினார், காலையில் இட்லி சாப்பிட்டார், மாலையில் சப்பாத்தி சாப்பிட்டார், சிகரெட் பிடிக்க அனுமதியில்லாமல் அவதிப்பட்டார். காலையில் 07.00 மணிக்கு கக்கூஸ் போனார்........ என்கிற ரீதியில் தொடர்ச்சியாக செய்திகளை வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.

நடிக, நடிகையரைப் பற்றிய செய்தி போட்டால் பரபரப்பாக இருக்கும் என்கிற புராததத் தன்மை கொண்ட நிஜம், இன்றுவரை செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமை. முனியாண்டி விலாஸ், வேலு மிலிட்டரி ஹோட்டல் போன்றவற்றில் மெனுகார்டில் இல்லாத உயிரினத்தைத் தேடி, சல்மான்கான் என்கிற இன்னொரு பிரகஸ்பதி காட்டிற்குள் சென்று வேட்டையாட, அந்த நடிகரின் பின்னாலும் வீடியோ காமராக்கள் துரத்துகின்றன. பொதுநிறுவனமாக சிறைக்கூடத்திற்குள்ளும் இந்த ஊடகங்களின் கரங்கள் நீளுகின்றன. மோனிகா பேடி குளிப்பதைக் கூட படமெடுத்து ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்ப துணிகிறதென்றால், போட்டியில் ஜெயிக்க என்னவென்றாலும் செய்யத்துணிகிற வியாபார குதர்க்கம் வெளிப்படுவது ஒருபுறமென்றால், சிறைக்கூடங்களின் பாதுகாப்பு குறித்த வேள்வியும் கூடவே எழுகின்றது.

இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினல் கேஸாக கருதப்படும் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் முதல் நக்சலைட் தேடுதல் வேட்டை வரை சம்பந்தப்படுத்தப்பட்டு ஒரு குற்றமும் செய்யாமல் ஆண்டாண்டுகளாக சிறைச்சாலையில் அவதிப்படும் எத்தனையோ அப்பாவிகளைப் பற்றி இந்த ஊடகங்களுக்கு என்ன கவலை?

()

நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நோய்களைத் தாண்டி சில அசாதாரண, விநோதமாக நோய்களைப் பற்றி கேள்விப்படும் போது 'நல்ல வேளை' என்று பெருமூச்சு விடவே தோன்றுகிறது. ஆயிரத்தில் அல்லது லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்மாதிரியான நோய்க்கூறுகள் .. என்று வாயில் நுழையாத நோயின் பெயரோடு ஆரம்பிக்கும் மருத்துவரின் அறிக்கைகளை பத்திரிகைகளில் படிக்கும் போது இம்மாதிரி தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. சென்ற வாரத்தில் நாளிதழொன்றின் பக்கங்களில் விரல்கள் மாத்திரம் அசுரத்தனமாக வளர்ந்திருக்கின்ற நபரின் புகைப்படத்தை பார்த்த போது அதிசயமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

டெக்கான் கிரானிக்களில் பிரபல sexologist-ஆன நாராயண ரெட்டி கேள்வி-பதில் தொடரில் சமீபத்தில் பின்வரும் கேள்வியைப் படிக்கும் போது தோன்றியது மேற்சொன்ன பத்தி.


Question: My son is 11 years old. His penis, when erect, almost touches his lower abdomen and points directly to the sky. Sometimes he has a hard time keeping his penis from his face while urinating. What to do?

Answer: Get your son examined by an urologist. Some people may have an abnormal curvature of the penis and this needs to be corrected. Otherwise when he gets married, he may find intercourse difficult.

()

உயிர்மை இலக்கிய இதழ், நகுலன் மறைவு குறித்த வெளியிட்ட சிறப்பு பக்கங்களிலும், அட்டைப் படத்திலும் பிரசுரமான நகுலனின் புகைப்படங்கள் அனுமதியின்றி பிரசுரிக்கப்பட்டிருப்பதாக, புகைப்படங்களின் உரிமையாளர் சீனிவாசன் என்பவர், உயிர்மை மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். "Intellectual property" குறித்த அறிவும், விழிப்புணர்வும் நம்மிடமில்லை என்பதும் இந்த விஷயத்தை அறியாமையோடோ அல்லது அலட்சியத்துடனோதான் நாம் கையாளுகிறோம் என்பதுதான் இது வெளிப்படுத்துகிறது.

5 comments:

கோவி.கண்ணன் said...

3 பகுதியும் சும்மா 'நச்' னு இருக்கு ரவி.

கோவி.கண்ணன் said...

'ஆண்குறி' என்று போடாமல் 'penis' என்று தலைப்பில் ஏன் ?

இடக்கரடக்கலா ?

PRABHU RAJADURAI said...

"தலைப்புச் செய்தியாக்கி (நாம் வலைப்பதிவுகளில் செய்வதைப் போல)தம்முடைய விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் வியாபாரத் தந்திரங்கள்"

நீங்க மட்டும் என்னவாம்? தலைப்பை சொல்றேன்...:-))

Anonymous said...

சினிமாக்கூட்டத்தின் அட்டகாசங்கள் அடியோடு அழிக்கப்படவேண்டும். குஸ்பு போடும் அடவாடித்தனமே நாட்டைச் சீரழிக்கப் போதும்.

கூத்தாடிகள் ஆட்சியைப் பிடிக்கின்றன. எதிராகப் பிரச்சாரம் செய்யவேண்டும்.

புள்ளிராஜா

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

கோவி கண்ணன்:

அது யாரு ரவி? :-)

பிரபு ராஜதுரை:

அதுதான் நானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டேனே, யுவர் ஹானர்! :-)

புள்ளிராஜா, நன்றி.