Tuesday, June 01, 2010

ஜெயலலிதாவின் திகிலான நேர்காணல்

எச்சரிக்கை:  பழைய (மீள்) பதிவு 

கடந்த வாரம் பி.பி.சி. தொலைக்காட்சியில் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் நேர்காணல் (?!) ஒன்றை காண நேரிட்டது. இந்தியாவின் மோசமான முதல்வர்களில் ஜெ. முதலில் வந்தாலும், மோசமாக பேட்டி கொடுப்பவர் என்கிற சர்வே எடுத்தாலும் இவர்தான் முதலில் வருவார் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் தலைப்பான HARD TALK என்பதை ரொம்பவும் கடுமையாகத்தான் பேச வேண்டும் என்று தவறாய் புரிந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது. கிட்டத்தட்ட படையப்பா படத்தின் நீலாம்பரி கேரக்டரை இன்னொரு முறை பி.பி.சியில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. கேமராக்காரர் வேறு டைட் க்ளோசப்பில் கேமரா கோணத்தை வைத்து ஜெ. நறநறவென்று பல்லைக் கடிக்க நினைத்தாலும் தெளிவாக தொ¢யுமாறு  வைத்திருந்தார்.

இரண்டு முறையும் ஆரம்ப காட்சிகளை தவறவிட்டேன் என்றாலும் கரண் தாப்பருடன் கைகுலுக்க மறுத்துவிட்ட அந்த கண்ணியமான கிளைமாக்சை கண்டு ரசிக்க முடிந்தது.

பழைய தமிழ்ச் சினிமாப் படங்களில் இந்த மாதிரியான காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நாயகி தமிழ்ப் பண்பாட்டில் ஊறித்திளைத்தவள், கற்புமிக்கவள் என்பதற்கு இந்த காட்சிகளை உதாரணமாய் காட்டுவர். வெளிநாட்டில் இருந்து வந்த வில்லனோ, கதாநாயகனோ மேனாட்டு பாணியில் பேசிவிட்டு கைகுலுக்கப் போக, இந்த கலாசாரத்தின் அடையாளப் பெண்ணோ, அதை மறுத்து கை கூப்பி விடைகொடுப்பாள். ஜெ.வுக்கு இந்த பழைய சினிமா ஞாபகம் வந்து இந்த மாதிரி செய்தாரா என்று தெரியவில்லை.





ஜெ.வின் மிரட்டலான பார்வையை சட்டை செய்யாமல் கரண் தாப்பரும் அதற்கிணையான பார்வையில் கேள்விகளை அடுக்க, இவ்ளோ தில்லா ஒரு ஆளா என்று பிரமிக்க நோ¢ட்டது. அவருக்கு நம் ஊரின் ஆட்டோ அடியாட்களைப் பற்றியும், அதிமுக மகரணியின், பார்க்க கண்கோடி வேண்டிய கலைநிகழ்ச்சிகளைப் பற்றியும்  தெரியுமா என்று தெரியவில்லை.

ஓரு நிலையில், எங்கே முதல்வன் திரைப்படம் போல், 'நீ ஒரு நாள் முதல்வராக இருந்து பாரேன். அப்போ இந்த முள் கீரிடம் உனக்கு புரியும்' என்று ஜெ. கேட்டுவிடுவாரோ என்று எனக்கு பயமாக இருந்தது. அதே சமயம் நல்ல முதல்வராக தமிழ்நாட்டுக்கு கிடைக்கக் கூடாதா என்று ஏங்குகிற நம் நப்பாசையும் நனவாகுமோ என்று சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் நம் ஆட்கள் உஷாராக அரசாங்க விடுமுறை நாளைத்தான் முதல்ராக இருக்க வேண்டிய நாளை கொடுப்பார்கள் என்றும் தோன்றியது.

ஏதோ ஒரு பதிலிற்கு குறிப்புகளை பார்த்து படித்த ஜெ.வை கரண் ஆட்சேபிக்க, 'நான் உங்கள் கண்கள் பார்த்துத்தான் பேசுகிறேன்' என்று ஆக்ரோஷித்த ஜெ, இன்னொரு முறை கரண் ஏதோவொரு குறிப்பை பார்த்து கேள்வி கேடக, 'நீங்கள் (நீ - ?!) மட்டும் குறிப்புகளை பார்த்து கேள்வி கேட்கலாமா என்று கேள்வி கேட்டு என்ன கிள்ளினியா, உன்னையும் நான் கிள்ளுவேன் என்கிற மாதிரி பழி தீர்த்துக் கொண்டார். ஒரு பள்ளிக்கூடச் சிறுமியின் மனப்பான்மை உள்ள ஒருவரா நமக்கு முதல்வர் என்று நமக்குத்தான் திகிலாக இருந்தது.

2006-ல் ஆட்சிக்கு வர முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு, பொதுமக்கள் என்று சிலபேர் இருக்கிறார்கள், அவர்கள் தேர்தலில் ஒட்டுப் போட்டால்தான் தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நினைப்பில் இல்லாதவர் போல், என்னமோ நீலாங்கரையில் அடுத்த வருடத்திற்குள் வீடு வாங்கி விடுவேன் என்பவர் போல் 'பொறுத்திருந்து பாருங்கள்.' என்று அழுத்தமான குரலில் சொன்னதைப் பார்த்தவுடன் தேர்தலின் போது 'எனக்கு எதிராக ஒட்டளிப்பவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள்' என்று நமக்கு மிரட்டல் அறிக்கை கொடுப்பாரோ என்று பயமாக இருந்தது.

மறந்தும் எம்.ஜி.ஆரைப்பற்றி பேசாதவர், தான் அரசியலில் சுயமுயற்சியில்தான் வெற்றி பெற்றதாக கூறினார். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்கிற அடிப்படை அறிவியல் உண்மை நல்லவேளையாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இல்லையென்றால் தான் வானத்திலிருந்து நேரடியாக பூமிக்கு குதித்திருப்பேன் என்று கூட சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.

தான் மூடநம்பிக்கை இல்லாதவர் என்றும் திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அண்ணாவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லியிருப்பதாக கூறியவர், 'அப்போது ஏன் ஒரு கோயில் விடாமல் எல்லா தெய்வங்களின் பின்னாலும் சுற்றுகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால், தான் தானமாக கொடுத்த யானையை விட்டு கரணின் தலையை மிதிக்க சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றியது.

பேட்டி எடுப்பது மாதிரி பேட்டி கொடுப்பதும் ஒரு கலை. இந்த கலை ஜெ.வுக்கு சுத்தமாக தெரியாது என்று தோன்றுகிறது. ஒரு சன் டி.வியில் ரபி பெர்னார்ட் வைரமுத்துவை, "ரஜினியை ஏதோ ஒரு நாட்டின் பேரரசர் போல் புகழ்ந்து எழுதுகிறீர்களே?" என்று காய்ச்சி எடுக்கிற கேள்வியை கேட்டார்.

வைரமுத்து கண்களை உருட்டி பார்க்கவில்லை. பற்களை நறநறவென்று கடிக்க வில்லை. சிரித்துக் கொண்டே "நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்? இந்த இளவயதில் இவ்வளவு புத்தியா?" என்கிற மாதிரி பேட்டி எடுத்தவருக்கே ஒரு ஜஸ்பாரை போட்டு அந்தக் கேள்வியை சாமர்த்தியமாக திசைதிருப்பி விட்டார்.

மொத்தத்தில் இந்த பி.பி.சி பேட்டி திகிலுடன் கூடிய காமெடிப் படத்தை பார்த்தது போலிருந்தது.

நேர்காணலை அசு்சு வடிவில் வாசிக்க

suresh kannan

13 comments:

பொன் மாலை பொழுது said...

டி.வி. நிகழ்சிகளை உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் போய் நீண்ட நாட்களாகிறது.
ஆனாலும் கரன் தப்பார் எடுக்கும் பேட்டி நிகழ்சிகளை விரும்பிபார்பதுண்டு.
கரனின் அச்ததலான, குடைந்தெடுக்கும் கேள்வி முறைகளும் வியக்க வைக்கும்.
அந்த நாட்களில் எல்லாம் மனம் எங்கும் "ஜெய லலிதா என்று மாட்டுவார் தரனிடம் ?"
அவர் மாட்டிகொண்டதை கண்டு என் ஜென்மம் சாபல்யம் அடைத்து விட்டது கண்ணன்.

ஜெயலலிதாவால் மட்டுமே இப்படி ஒரு பேட்டி தர இயலும். ஆனாலும் பத்திரிகை, மீடியாக்கள்
மீது அவருக்கு இருக்கும் கோபமும் வன்மமும் மாறவில்லை.அது மாறாது என்று மீடியா காரர்களுக்கும்
தெரியும். பாவம் அவர். அவர்மீது கொஞ்சம் பரிதாபப்படலாம் போல உள்ளது.

பார்க்க அளித்தமைக்கு நன்றி நண்பரே!

சரவணன் - சாரதி said...

//பேட்டி எடுப்பது மாதிரி பேட்டி கொடுப்பதும் ஒரு கலை.//
நக்கல், எதிர் நக்கல் என்பதும் கூடக் கலைதான்.
அளவு அவரவரைப் பொறுத்தது....... :)

மதி.இண்டியா said...

வணக்கம் அண்ணே

Baski.. said...

இந்த நேர்காணலை தனி புத்தகமாக படித்திருக்கிறேன். கடைசி வரை கை நீட்டாமல்(!!!) இருந்ததே "ஜெ" வின் பொறுமையை காட்டுகிறது.

Arun Nadesh said...

பகிர்வுக்கு நன்றி சுரேஷ்.. நல்ல வீடியோ நன்றி மம்மி..

ஜோ/Joe said...

இது போன்ற ஜெயலலிதாவின் திமிர் , ஈகோ ,ஆணவத்தையெல்லாம் உறுதி ,திறமை ,தைரியம் என பாராட்ட ஒரு கூட்டமே இருக்கிறது.

Robin said...

முடியல :)
ஓன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, ஜெயலலிதா இனி மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
அடுத்தமுறையும் தி.மு.க ஆட்சி தான்.

Robin said...

//கரனின் அச்ததலான, குடைந்தெடுக்கும் கேள்வி முறைகளும் வியக்க வைக்கும்.
அந்த நாட்களில் எல்லாம் மனம் எங்கும் "ஜெய லலிதா என்று மாட்டுவார் தரனிடம் ?"//
கரன் தாப்பர் நரேந்திர மோடியையே தண்ணி குடிக்க வைத்தவர் :)

thamilmagan said...

intha video 2005m aande bbc yil vanthu vittathu ...pona vaaram na konjam overah illa..........melum karunanithi polmoodi maraithu pesaamal ullathai sollukirare atharkku kattayam paraatalam.... indiavil ver oru thalaivarai ivvalavu thayiriyamaaga pesa sollungal parpom...........

Sudhar said...

Just watch Karan interview with P Chidhambaram interview. PC shows how to handle somebody like Karan Thapar when they keep firing question after question with lot of quotes.

Just see Karan's interview with PC if available in Youtube or ibnlive.com

JJ is not good at all.

பொன் மாலை பொழுது said...

Dear Mr Tamilmagan,

please, read Mr. Joe/ஜோ's comments and distinguish between courage and dogmatic.
She is not a brave but opinionated,dogmatic and rigid and shrewed character.A leader should not and can not have these type of qualities in a democratic country since She is totally depend up on the public.In this video, she herself exposed how narrow/adamant she was.Really pathetic.

Anonymous said...

Mr. Kakku - Manickam,

It is easy to comment on someone's interview without knowing the whole gamut of issues underneath the questions. I wonder to what extent you know of JJ and her actions. Do you really know of the way the govt machinery (the bureaucracy) functions? Your comments do not give any indication that you do. It's a pity that many of those who comment on political matters in tamilnadu have no idea of the way the administrative machinery functions. If they did, they would have seen through the shenanigans of MK. And please learn to write flawlessly in English before attempting to say what is dogmatic and opinionated behavoir is all about.

Anonymous said...

Search engines show relevant pages in top rankings and show them
one by one based on content quality and site popularity
criteria. Software supports Directory Submitter Wizard (off-page SEO).

With a little training you can learn to spot these phonies and pick up on the
best internet marketing strategies around.
Also visit my blog post GSA search engine ranker software