Monday, November 30, 2009

உலக சினிமாவின் அபத்த நகல்கள்

தமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.


என்று அமீரைப் பற்றி இந்தப் பதிவில் மிக நம்பிக்கையாக எழுதியிருந்தேன். ஏனெனில் என்னைப் பொருத்தவரை 'பருத்தி வீரன்' மிகுந்த நுண்ணுர்வான காட்சிகளுடன் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட படைப்பாக கருதுகிறேன். உயிர்மை நூல் வெளியீட்டில் அமீர், 'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' என்று பேசும் போது நல்ல சினிமாக்களை உருவாக்குவதற்கு இதுவே இவரின் முக்கியத் தகுதியாக இருக்கப் போகிறது என்று என்னுள் எண்ணிக் கொண்டேன். இதன் அடிப்படையில் அமீரின் 'யோகி' என்னுள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் வேறொருவராக இருந்தாலும் அமீரின் தயாரிப்பு மற்றும் நடிப்பு என்கிற காரணத்தினால் அமீர் தனக்குரிய தரத்தை தக்கவைத்திருப்பார் என்று நம்பினேன். தொலைக்காட்சி நேர்காணல்களில் மற்ற இயக்குநர்கள் வழக்கமாக தரும் "இது ஒரு வித்தியாசமான கதை" என்றெல்லாம் பில்டப் தராமல் 'ரொம்ப உழைச்சிருக்கோம். பாருங்க' என்று இயல்பாக கூறினதும் பிடித்திருந்தது.



யோகி சுடுகிறார் (?!)

ஆனால்.. பத்திரிகை மற்றும் இணைய விமர்சனங்கள் மூலம் 'யோகி', TSOTSI என்கிற தெற்கு ஆப்ரிக்க திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்பதை அறிய நேரும் போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் முற்றிலும் வடிந்து எரிச்சலும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. (TSOTSI படத்தைப் பற்றி முன்னர் நான் எழுதின பதிவு) ஹாலிவுட் படங்களையும் தமிழுக்குத் தோதாக மாற்ற முடிகிற இன்னபிற மொழிப்படங்களையும் அப்படியே உருவிவிடுவது தமிழ்ச்சினிமாவிற்கு புதிதல்ல. கமல் இதில் விற்பன்னர். அதற்கு ஒருவரி க்ரெடிட் தருவதோ அல்லது காப்பிரைட் பிரச்சினை காரணமாக நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவேனும் ஒப்புக் கொள்வதோ கூட இவர்கள் ஜாதகத்தில் கிடையாது. உலக சினிமா பற்றின பிரக்ஞை குறைவாயிருந்த காலகட்டத்திலாவது இவர்கள் செய்த திருட்டுத்தனங்களை சிறிய வட்டத்தால் மாத்திரமே உணர முடிந்தது. இந்த சிறுகூட்டத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அதையே இவர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இணையமும் நகல் குறுந்தகடுகளும் பிரத்யேக தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை வாரியிறைக்கிற, ஒரு பொதுவான சினிமா பார்வையாளன் கூட அகிரா குரோசாவையும் பெர்க்மனையும் அறிந்து வைத்திருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் வெளித்திரைப்படங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல் உருவுவது பாமரர்களின் மீது இவர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

'கதை பஞ்சம்' என்று இவர்கள் பாவனையாக சலித்துக் கொள்வதைக் கண்டால் சிரிப்பாக இருக்கிறது. அப்படிப்பபட்ட பஞ்சத்தையும் மீறி இவர்கள் என்ன காவியத்தைப் படைக்கிறார்கள் என்று பார்த்தால் அதை விட அதிகம் சிரிப்பு. தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சினையா? இவற்றை கலைப்படங்களாக எடுத்து தலையில் துண்டு போட்டு போகச் சொல்வது என் நோக்கமல்ல. இவற்றைக்கூட வணீகரீதியான வெற்றி பெறக்கூடிய தகுதியுடன் உருவாக்க முடியும். வழக்கமான கிளிஷேக்களை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை இன்றைய திரையரங்குகளில் மக்களின் வெளிப்பாட்டை வைத்து உணர முடிகிறது. (என்ன ஆனாலும் சரி, வெகுஜன சினிமாச் சகதியில்தான் புரள்வேன் என்கிற ஞானவான்களை ஒருபுறம் ஒதுக்கிவிடுவோம்)

சொந்தமான ஒரு கதைப்பின்னணியை உருவாக்குவது சிரமமென்றால் நல்லதொரு தமிழ் இலக்கியப் படைப்பாளியின் படைப்பை அனுமதியுடன் பெற்று அதை திரைவிரிவாக்கம் செய்யலாம். கதை விவாதம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அபத்தச் செலவுகளின் ஒரு பகுதியை மாத்திரம் கூட அவர்களுக்கு தந்தால் போதுமானதாயிருக்கும். அதை விட்டு ஏன் இவர்கள் குறுந்தகடுகளையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த வரிசையில் நான் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த அமீரும் சேர்ந்ததுதான் எனக்கு அதிர்ச்சி. மற்ற வகையான இயக்குநர்கள் என்றால் பழகிப் போன ஒன்றாக எடுத்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு சீக்கிரம் தமிழ் இயக்குநர் யார் மீதும் நம்பிக்கை வைக்காதே என்பதுதான் 'யோகி' எனக்குத் தந்த பாடம். (இதை மேற்சொன்ன பதிவின் பின்னூட்டத்திலேயே சிலர் சொல்லியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனத்தை வணங்கத் தோன்றுகிறது).

image courtesy: original uploader

suresh kannan

14 comments:

சுவாசிகா said...

கதை பஞ்சமா..சிரிப்புதான் வருகிறது..

நீங்கள் கூறியது போல் அமீரும் அந்த copy cat வட்டத்துள் சிக்கிக் கொண்டது வருத்தமளிக்கிறது

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Anonymous said...

//. உயிர்மை நூல் வெளியீட்டில் அமீர், 'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' என்று பேசும் போது...//

அவர்தான் உலக சினிமாக்களே பார்ப்பதில்லை என்று கூறுகிறாரே ?இந்தப்படத்தின் கதை இயக்கம் (சுப்ரமணிய சிவா) அமீர் கிடையாது. அவர் இந்த படத்தின் மூலத்தை தெரிந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

ரவி said...

எனக்கென்னவோ அமீரை தேவையில்லாமல் எல்லோரும் பிரித்து மேய்வது போலிருக்கிறது. அவர் அறியாமல் நடந்திருக்கலாம்.

குப்பன்.யாஹூ said...

what to say, its our bad luck, when we can not rely on Balau mahendra's product, whom else we can rely.

Ashok D said...

நேர்மையாக இருக்கு நல்லதோர் பதிவு

குசும்பன் said...

//'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' //

ஒருவேளை இதையே இயக்குநர் சாதகமாக்கிக்கொண்டு, பாஸ் சூப்பர் கதை நீங்க ஒரு ரவுடி, திருட போவும் பொழுது காரில் ஒரு குழந்தை வருது அதன்பிறகு உங்கள் வாழ்கையில் நடக்கும் மாற்றங்களே யோகின்னு. ஒன்லைனில் அவர் கதை சொல்லி இருந்தா?:))

அக்கடமிக் அவார்ட் வின்னிங் படம் என்று கூட தெரியாம ஆஹா சூப்பர் கதைன்னு இவரும் ஓக்கே சொல்லி இருக்கலாமே?:)))


இப்படிக்கு
ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்

Sampath said...

போங்க பாஸ் .... பாலுமகேந்திரா மட்டும் ஏதோ எல்லா படமும் சொந்தமா கதையெழுதி எடுத்தமாதிரி சொல்றீங்க ..... அவரும் பல ஹாலிவுட் படங்கள்ல இருந்து உருவி இருக்காரு ...

Anonymous said...

இல்லை என்று மறுப்பதற்கு இல்லை தான், அழியாத கோலங்கள் (), ஜூலிகணபதி(), மூண்றாம் பிறை() தழுவல் உச்சகட்ட காட்சி மட்டும் அல்ல முழு படமும். ஆனால் பாலுவின் படங்களில் ஒரு இந்திய தனம் இருக்கும். அப்படியே ஈ அடிச்சான் பிரதியாக இருக்காது. உதாரணம் மூண்றாம் பிறை சிட்டி லைட்டில் வரும் கதா பாத்திர கணக்குகளே இதிலும் இருக்கும், அங்கே பார்வை இல்லாத ஏழை பெண், இங்கே புத்தி இல்லா பெண்ணாக, அங்கே அந்த பெண்ணின் பாட்டி, இங்கே பக்கத்து வீட்டு பாட்டி. அங்கே ஓடி போன மனைவியின் கணவன் சார்லிக்கு உதவுவார், இங்கே பூர்ணத்தின் மனைவி பொன்மேனி உருகுதே பாடுவார். அங்கே கடைசியில் கோமாளியாக சார்லி அந்த காதலியின் கடை வாசலில் வந்து அவமானபடும் போது அவளும் பார்த்து சிரித்து மகிழ்வாள். போதா குறைக்கு பிச்சையிட வருவாள், அப்படி பிச்சையை கொடுக்கும் போது சார்லி காட்டும் முக வடிவங்கள் எல்லாம் மூண்றாம் பிறையில் கமலகாசன் காட்டுவது எல்லாம் சும்மா என்ற அளவில் இருக்கும். என்ன சிட்டி லைட்டில், கைகளை பிடித்த உடன் ஒரு முறை சார்லியை பார்வை இல்லாத போது தொட்டு பார்த்ததை போல தொட்டு பார்த்ததும் விளங்கிய வேளையில் சார்லி கேட்பார், இப்போ உன்னால் பார்க்க முடிகிறதா என்று. அவளும் சொல்வாள் இப்போது எனக்கு தெரிகிறது என்று. அது மட்டும் இந்த படத்தில் இல்லை...............இதை எல்லாம் உருவாக்க ஒரு கற்பனை வேண்டும், பாலுவின் செய்கைகளில் அது கட்டாயம் உண்டு.........இவர்களை போல் அல்ல அவர்...........

பனிமலர்

Anonymous said...

மறந்தேன், அழியாத கோலங்கள் summer 80, ஜூலி கணபதி Misery (1990), மூண்றாம் பிறை city lights.

பனிமலர்.

கதிர் said...

மேற்கு ஆப்பிரிக்கா தூரம் ஏங்க போறீங்க? மலையாள முல்லன் படத்தோட தழுவல்தான் இந்த யோகி. நான் கூட என்னமோ உழைச்சிருக்காங்கனு போய் பார்த்தேன். சராசரி கதாநாயக பிம்பத்த தாண்டி வெளிவரவே இல்லை. சேரியின் உண்மையான பக்கத்தை இதுல காண்பிச்சிருக்கேன்னு பேட்டி வேற. அமீர் சொ.செ.சூ வெச்சுகிட்டாரு.

லிவிங்ஸ்டன் said...

//'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' //

ஒருவேளை இதையே இயக்குநர் சாதகமாக்கிக்கொண்டு, பாஸ் சூப்பர் கதை நீங்க ஒரு ரவுடி, திருட போவும் பொழுது காரில் ஒரு குழந்தை வருது அதன்பிறகு உங்கள் வாழ்கையில் நடக்கும் மாற்றங்களே யோகின்னு. ஒன்லைனில் அவர் கதை சொல்லி இருந்தா?:))

அக்கடமிக் அவார்ட் வின்னிங் படம் என்று கூட தெரியாம ஆஹா சூப்பர் கதைன்னு இவரும் ஓக்கே சொல்லி இருக்கலாமே?:)))



itha than nannum nenichan aamirai kutram solavthu mutrelum thavaru .atharku sastchi avarin muthaya padangalea

தமிழ் உதயம் said...

மகேந்திரன் எனும் மாபெரும் கலைஞனோடு, இவர்களை ஒப்பிட்டு அவர்களின் மேன்மைக்கு மாசு கற்பிக்க வேண்டாம்.

Anonymous said...

I just read wrote for some other Yogi review and just copying here.
even during Paruthiveeran I said to many people that the climax is a act of psycho it should have censored. A big nail has been inserted into a woman skull and she became semi conscious, then group of people raping her. This Psycho act you recently heard from the woman police murder in Tamilnadu recently. we Indian are very much used Different kind of Rape seen in our cinema which you can not see in any other world standard movies. Ameer too has (may be very little in his mind) psycho sense in all his movies. Its good that people criticized well this so that he will not continue this kind of psychotic violence in future. I say this just because we Indian getting used to this violence. even it happen in our real life we take it very easily. Nithy

கானகம் said...

//இது பால்கி கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி ;
A number of critics have drawn a parallel between ‘Paa’ and ‘The Curious Case of Benjamin Button’. Any comments?

It’s very simple. When you can get a DVD for Rs200, they must be foolish to think I will make Amitabh Bachchan go through 5 hours of make-up every day and spend Rs20 crore to remake a Rs200 crore film. You would rather put subtitles on Benjamin Button and sell it. Why would anyone spend two years remaking anything?

How can you say what the movie is without seeing it, first of all? Some people have told me it resembles Benjamin Button, some people have said Jack, someone told me Blade Runner. And I was like wow, that’s a new one! Why Jack? Because it’s got progeria. Why Benjamin Button? Because it’s got a bald head. Why Blade Runner? Because it’s got a character that’s got a progeria family. I have not discovered progeria. It’s like saying that every film with cancer is Love Story//

Could Amir tell like this confidently..that he didn't copy the movie???