Friday, February 01, 2013

அம்மா நேர்காணல் - அனந்த கோடி அர்த்தங்கள்

இந்தப் பதிவு ஒரு திரைப்படத்தின் சர்ச்சை தொடர்பான எதிர்வினையாக ஓர் அரசியல் தலைவரின் சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் பற்றியது. தமிழ்நாட்டுடன் தொடர்புடையது என்று தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். வசதிக்காக கசகஸ்தான், பிலேரியா என்று கற்பனையான பிரசேத்தை கற்பனை செய்து கொளளவும். "துபாய் எங்க இருக்கு - அது தூத்துக்குடியிலோ, திருநெல்வேலி பக்கத்துலயோ' என்கிற ரீதியில் வாசிக்கவும். (ஏபிசிடி சட்டங்களின் கீழ் களி தின்ன எனக்கு விருப்பமும் எண்ணமும் இல்லை என்கிற காரணத்திற்காக).

()

முதல்வரின் நேர்காணல் திறமையான திரைக்கதையைக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் போல சுவாரசியமாக இருந்தது. ஒரு அம்மா குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே கதை சொல்வதைப் போன்ற கனிவுடனும் பொறுமையுடனும் தெளிவுடனும் இந்த நேர்காணல் அமைந்திருந்த போதும், ஒரு  கோயிஞ்சாமி நண்பர் சில விஷயங்கள் சரியாகப் புரியவில்லை என்னிடம் குறைபட்டுக் கொண்டார். 'அம்மாவின் பேச்சு புரியவில்லை' என்று கூறுகிற இந்த மாபாதகத்திற்கே அவரை 144-ல் எத்தியோப்பியாவிற்கு பார்சல் செய்து அனுப்ப சட்டத்தில் இடமுள்ளது என்றாலும் அம்மாவின் அதே கருணையுள்ளத்தோடு அந்த நேர்காணலை கட்டுடைத்து அவருக்கு சில விஷயங்களை விளக்க வேண்டியதாயிற்று.

()

'பிரச்சினை உருவான துவக்கத்திலேயே ஏன் அந்த நடிகர் அரசிடம் முறையிடவில்லை?'

"இப்ப நமக்கு அடிபட்டாலோ, கீழே விழுந்தாலோ உடனே என்ன செய்யறோம்?"  என்னய்யா செய்யறோம்? 'அம்மா -ன்னு கத்தறதில்லையா?. ஏன்யா அந்த நடிகர் மாத்திரம் 'ஐகோர்ட்டு' -ன்னு கத்தியிருக்காரு. சென்ஸ் வேணாம். 'உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் அம்மா' ன்னு திருவள்ளுவர் எவ்ளோ தெளிவா சொல்லியிருக்காரு. புரியவேணாம் அந்த ஆளுக்கு.

()


'சட்டம் ஒழுங்கு கெடும் என்கிற காரணத்தினால் படம் தடை செய்யப்பட்டது'

'அந்த படப் பிரச்சினையைத் தவிர மற்றபடி தமிழ்நாடு ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்கிற உண்மை கூடவா நமக்குத் தெரியாது. எங்க வீட்டு பாப்பா, பக்கத்து சீட் பொண்ணு கிள்ளினதுக்கு கூட  பதிலுக்கு சப் -னு அறையாம வீட்டுக்கு வந்து சாதுவா சொல்லுது. அந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் மிகத் தெளிவா இருக்கு -ன்றதுக்காக இதைச் சொல்றேன். இந்தச் சூழலை ஒரு திரைப்படம் கெடுக்குமென்றால் அதை தடை செய்வதில் என்னய்யா குற்றம்?'

()

'காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் பாதுகாப்பு தருவது சிரமம்'

இந்தளவிற்கு விவரமா புள்ளிவிவரம் சொல்றதை அந்த அம்மா திரைப்படத்துல நடிக்கற காலத்துலயே செஞ்சிருந்தாங்கன்னா..பசயகாந்த்தை எப்பவோ ஓட ஓட விரட்டியிருக்கலாம். போலீஸ்ல ஆள் பத்தாக்குறை -ன்றதைக் கேக்க கேக்க என் கண்ணுல இருந்து தண்ணியே வந்துடுச்சு.

அரசியல் மீட்டிங் நடக்கறப்ப வரிசையா டியூப்லைட் கட்டியிருப்பாங்கல்ல. அது போல சிஎம் ரூட்ல வரிசையா நிக்க வெச்சிருக்கற போலீஸ்கார் போக மீதமிருக்கிற கொஞ்ஞூண்டு போலீஸ்கார் வெச்சே இத்தனை திறமையா லா அண்ட் ஆர்ட்ரை மெயிண்ட்டெயிண் பண்றாங்கன்னா... எவ்ளோ டேலண்ட் லேடி.

காவலர் பற்றாக்குறையைப் பற்றி அம்மா சொன்னப்ப, நான் கூட போலீசுக்கு அப்ளை செஞ்சிடலாமான்னு கூட ஒரு நிமிஷம் தோணி கண்ணு கலங்கிப் போச்சு. இன்னும் கொஞ்சம் தொப்பையை வளர்க்க வேண்டியிருக்குமேன்கிற ஒரே காரணத்திற்காக வேணாம்னு முடிவு செஞ்சேன்.

()


'பயா டிவி்க்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை'

இந்த வசனத்தை வேற எங்கயோ ஏற்கெனவே கேட்டிருக்கோமே -ன்னு ஒரு நெனப்பு வரலாம். அதை மறந்துடுங்க. மேட்டர் என்னன்னா...

'நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது...  -----------   டிவி -ன்னு கர்ணகடூரமா ஒரு குரலை நீங்க டெய்லி உங்க வீட்டு டிவில ஒருவாட்டியாவது கேட்டிருக்கலாம். "யோவ் அது ரூ.744 இஎம்ஐ -ல கட்டி நான் வாங்கின டிவிய்யா -ன்னு" டிவி முன்னாடி போய் கத்தவா செய்வீங்க? இல்லல்ல. அது போலத்தான் இதுவும். மேலும் இது தத்துவார்த்தமான ஒரு விஷயமும் கூட. எதைக் கொண்டு வந்தாய் எதை இழக்கப் போகிறாய், எது உன்னுடையதோ -ன்ற மாதிரியான விஷயம். உள்ளொளி, தேடல் மாதிரி மேட்டர் இருக்கறவங்களுக்குத்தான் புரியும்.

.. மைசூர் போண்டால மைசூரா இருக்கு?" புரிஞ்சுக்கோங்க..

()

'திரைப்பட ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு படத்தை முழுக்கவே தடை செய்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை.'

பாருங்கய்யா.. பாருங்கய்யா. அம்மாவோட கருணையை. ஒரு தப்பு செஞ்சா நம்ம அம்மா என்ன செய்வாங்க, லேசா ஒரு தட்டு தட்டி 'இனி இப்படி செய்யாதேன்னு' சொல்லுவாங்கள்ல. அதேதான்தான்யா நம்ம அம்மாவும் செஞ்சிருக்காங்க. கோழி மிதிச்சு குஞ்சு செத்திருக்கா..

()

"பிரதமரை பிமல் என்கிற தனிநபர் தீர்மானிக்க முடியாது"

பொலிட்டிக்கல் சயன்ஸ் வகுப்புல பத்து வருஷம் உக்காந்து படிச்சாக்கூட இத்தனை தெளிவா புரிய வெக்க முடியாது. வாக்காளனோட கடமை வாக்களிக்கறது மட்டும்தான். அதோட போயிடணும். யாரு முதல்வர், யாரு பிரதமர் -னு தேவையி்ல்லாததையெல்லாம் நோண்டி நோண்டி பார்க்கக்கூடாது. இப்ப ஒருத்தரு பிரதமரா இருக்காரு. நாம விரும்பியா அவரு வந்தாரு. க்ளாஸல எந்தப் பிள்ள நல்லாப் படிச்சு சாதுவா இருக்கோ அதை லீடரா போடுவாங்களல. அந்த மாதிரிதான்.

அது மாத்திரமல்ல. அடுத்து வேட்டி கட்டியவர்தான் அடுத்த பிரதமரா வரணும்னு அந்த நடிகர் ஒரு மீட்டிங்ல சொல்லியிருக்கார். அப்பட்டமான ஆணாதிக்கம். ஏன் பெண்கள் வேட்டிக்கட்டக்கூடாதா? அல்லது பிரதமரா வரக்கூடாதா, இப்ப (மறைமுகமா) பிரதமரா இருக்கறவரும் ஒரு பெண்தானே? (மாட்டிக்கறா மாதிரி ரொம்ப உளர்றனோ).

()

ஐநூறு திரையரங்களுக்கும் பாதுகாப்பு செய்து தர முடியாது'

இதன் மூலமா அம்மா பல விஷயங்களை புரிய வெச்சிருக்காங்க. அதாவது அத்தனை திரையரங்குகளிலும் நிச்சயம் கலவரம் நடைபெறும். ஏன்னா... பாருங்க... அவங்க ரொம்ப மோசமானவங்க..தெரியாம காலை மிதிச்சிட்டாக்கூட பாமை எடுத்து மேல போட்டுறுவாங்க...ஒண்ணு..

அப்படியே சில ஏரியாவுல அவங்க தூங்கிட்டாக்கூட தலைல குல்லா போட்டுட்டு எங்க கட்சியாளுங்க கலவரத்தை செஞ்சே தீருவாங்க. பின்ன நாங்க சொன்னது உண்மையாகனும்ல.."

இவ்ளொ பிரச்சினை தேவைதானா?

()

'நான் சில ஆண்டுகளாக திரைப்படங்களே பார்ப்பதில்லை'

தமிழக மக்களின் நலன்களுக்காக இரவும் பகலும் ஒரே சிந்தனையாக இருக்கிற அம்மா அவர்கள், திரைப்படம் பார்க்கிற நேரத்தைக் கூட தனக்காக வீண் செய்வதில்லை என்பதை அறியும் போது....

(கடந்த கால முதல்வர், பாராட்டு விழா, குத்துப்பாட்டு கண்காட்சி, ப்ரீமியர் ஷோ.. இன்னமும் வெளிவந்ததா இல்லையான்னு தெரியாத படங்களுக்கு வசனம் எழுதறது -ன்னு கொண்டாட்டமா இருந்ததை அம்மா எத்தனை சூசகமாக சொல்லியிருக்காங்க -ன்னு பாத்துக்கங்க)


()

கோயிஞ்சாமி நண்பரிடம் இந்த நேர்காணலைப் பற்றி இன்னும் கூட பல விஷயங்களை புரிய வைத்தேன். அம்மா அளவிற்கு எனக்கு பொறுமையில்லையென்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். அம்மாவின் நல்ல குணங்கள் பற்றி அறியாத அற்பப்பதர்களுக்காக இதை பொதுவிலும் பதிவு செய்திருக்கிறேன்.

அம்மா நாமம் வாழ்க.


suresh kannan

9 comments:

Kodees said...

எல்லம் சரி சுரேஷ், இவ்வளவு விபரமா பிமல், பசயகாந்த் னு எல்லாம் சொல்லி ரெண்டு எடத்துல மாட்டிக்கிட்டீங்களே!

//
'அந்த படப் பிரச்சினையைத் தவிர மற்றபடி தமிழ்நாடு ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்கிற உண்மை கூடவா நமக்குத் தெரியாது.

தமிழக மக்களின் நலன்களுக்காக இரவும் பகலும் ஒரே சிந்தனையாக இருக்கிற அம்மா அவர்கள், திரைப்படம் பார்க்கிற நேரத்தைக் கூட தனக்காக வீண் செய்வதில்லை என்பதை அறியும் போது....//

யாரைச் சொல்றீங்கனு தெரிஞ்சு போச்சு, என்ன வேணும் ஆட்டோவா? IPC யா :)))

மதுரைவீரன் said...

கோடீஸ்வரன் துரைசாமி, அதான் சுரேஷ் ஆரம்பத்திலேயே சொல்லீட்டாருல்ல? கற்பனை நாடுன்னு? கற்பனை நாட்ல தமிழ்நாடுன்னு ஒரு பிரதேசம் இருக்கப்பிடாதா? தமிழ்னு ஒரு மொழி பேசப்படப்பிடாதா? அங்கு வாழும் மக்களைத் தமிழ்மக்கள் என்று அழைக்கப்பிடாதா? கற்பனைல கூட தமிழும் தமிழனும் வளரக்கூடாதூன்னு நினைக்கிற நீங்க என்ன பைபர் போலன் குரூப்பா?

சிவ.சரவணக்குமார் said...

கசகஸ்தான் - னு நெஜமாவே ஒரு நடு இருக்கு சுரேஷ் .......களி [ அல்லது சிக்கன் ] கன்ஃபர்ம்......

RAMG75 said...

ரசித்து சிரிக்க முடிந்தது :)

எனினும்.. 5 நாட்களாக பேசி பேசி மாய்ந்த கூட்டம், இன்றைய ஒரு நாள் பேட்டியில் வாயடங்கிப் போனது. 1000 குறைகள் சொன்னாலும் ஒரு ஆளுமை இருக்கிறது அவரிடம்..

nsraman said...

Veetuku auto vara pogudhu :)

indrayavanam.blogspot.com said...

அனநத கோடி அல்ல.. ஆயிரம் அர்த்தம் இருக்கு....

ezhil said...

எதற்கும் தயாராயிட்டீங்கன்னு தெரியுது. பின்னூட்டத்தால் எந்த பாதிப்பும் வந்திராதில்லீங்களா...

Vadakkupatti Raamsami said...

கலக்கிட்டீங்க செமையா சிரித்தேன்...ஆமா இன்னும் நீங்க வெளியதான் இருக்கீங்க என்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துது...பாத்து எதுனா 123 செக்சனில் போட்டுட போறாங்க

Unknown said...

"பிரச்சினை உருவான துவக்கத்திலேயே ஏன் அந்த நடிகர் அரசிடம் முறையிடவில்லை?'

அரசிடம் என்று வருமா அரசியிடம் என்று வருமா ?

எழுத்து பிழை என்று நினைக்கின்றேன்