Sunday, August 01, 2010

எந்திரன் இ(ம்)சை



When in Rome, do as the Romans do  என்பதற்கேற்ப தற்போதைய பரபரப்பான 'எந்திரன்' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் இந்தப் பதிவு.

மெல்லக் கொல்லும் விஷம் போன்றது ரஹ்மானின் இசை என்று வைரமுத்து ஏற்கெனவே சொல்லி விட்டார். சில உருவாக்கங்களைத் தவிர ரஹ்மானின் இசை முதல் கவனிப்பில் பொதுவாக அத்தனை கவர்வதில்லை. (வந்தே மாதரம்' முதல் கவனிப்பிலேயே ஆவேசமாக பிடித்திருந்தது). மற்ற பாடல்கள் தன்னுடைய மாய முடிச்சுகளிலிருந்து சிறிது சிறிதாக அவிழ்ந்து பெரும்பாலான இசையழகை நம்முன் காட்டின பின்புதான் நம்முடைய நிரந்தர விருப்பப் பட்டியலில் இணைகிறது.  'ரோஜா' திரைப்படப் பாடல்களை முதன்முறை கேட்கும் போது என்னை அதிகம் கவர்ந்தது 'காதல் ரோஜாவே'. பிறகு சுனாமி மாதிரி ஊரையே காலி செய்த 'சின்ன சின்ன ஆசை'யை அப்போது நான் கண்டுகொள்ளவேயில்லை.

ரஹ்மான் தன்னுடைய பாடல்கள் ஒவ்வொன்றிலும் பல லேயர்களை அடுக்கி அதில் பல ஆச்சரியங்களை ஒளித்து வைக்கிறார் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். குறிப்பாக நள்ளிரவு அமைதியில் கேட்கும் போது துரித நேரத்தில் ஒலித்து அடங்கும் ஓர் இசைத்துணுக்கை திடீரென கவனிக்கும் போது 'ஏன் இதை இத்தனை நாள் கவனிக்கவில்லை' என்ற ஆச்சரியத்தோடு ஏதோ நானே ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போல் பெருமிதமாயிருக்கும்.

எந்திரன் இசை ரஹ்மானின் தரத்தில் இல்லை. எதிர்பார்த்தது போலவே ஷங்கர் + ரஜினி தரத்தில்தான் இருக்கிறது. உலகத்தரமான நுட்பத்தைக் கொண்டு உள்ளூர் மூளையோடு சிந்திப்பவர் ஷங்கர். அவரின் படங்கள்  ஏதோ வித்தியாசமான பாவனையில் இருந்தாலும் அடிப்படையில் எம்.ஜி.ஆர் படங்களின் உள்ளடக்கத்தைத் தாண்டுவதில்லை. அவரின் இயக்க செயற்பாடுகள் முழுவதும் வெகுஜன ரசனையையும் வணிகத்தையும் வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்பது வெளிப்படை. எனவேதான் ஆஸ்கர் விருது தரததிலிருக்கும் ரஹ்மானிடமிருந்து கூட புதுமையான இசையை எதுவும் அவரால் கேட்டு வாங்க முடியவில்லை. கெளதம் மேனன் கூட தன்னுடைய சமீப படமான வி.தா.வில் சற்று மாறுபட்ட இசையை வாங்கியிருந்தார். 'ஆரோமலே' கூட ரஹ்மானே முன்வந்து விருப்பப்பட்டு அமைத்த பாடல் என்பது ஒரு trivia. இப்படியான ஒரு துளி மாற்றத்தைக் கூட எந்திரன் இசையில் காணமுடியவில்லை.

'அன்பு வழி வெறுப்பு வழி' என்று இரண்டு வழிகள் என் முன்னே இருந்தன. நான் அன்பு வழியை தேர்ந்தெடுத்தேன்' என்றார் ரஹ்மான் தனது ஆஸ்கர் விருது ஏற்புரையில். அந்த வழிமுறையையே தாம் இசையமைக்க ஒப்புக் கொள்ளும் படங்களுக்கும் ரஹ்மான் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வணிக மூளையைக் கொண்டே சிந்திக்கும் இயக்குநர்களை புறக்கணித்து விட்டு ஆரோக்கியமான சிந்தனைகளுடன் வரும் புதிய இயக்குநர்களை ஆதரிக்கலாம். என்ன அவ்வளவாக சில்லறை பெயராது.

எந்திரன் இசையின் தற்போதைய கவனிப்பில் 'அரிமா அரிமா'வும் 'காதல் அணுக்கள்'-ம் ஒரளவு உடனே கவர்கின்றன. அதில் அரிமா கூட .. வன்னே வன்னே..முதல்வனே'யை நினைவுப்படுத்துகிறது என்றால் இரண்டாவது 'தெனாலி'யின் 'சுவாசமே..'யை நினைவுப்படுத்துகிறது. 'கிளிமாஞ்சாரோவை' உப விருப்பமாக இணைக்கலாம். ரஹ்மானின் பெரிய பலமான percussion திறமை இதில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

நவீன நுட்பத்தின் மூலமாக நாம் இழந்ததின் பட்டியலில் திரையிசைப் பாடல்களையும் இணைத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் பாடுவது எந்தப் பாடகர் என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம். பி.சுசிலா என்றால் நம் காதுகள் குதூகல தன்னிச்சையுடன் கூர்மையடையும். ஆனால் இப்போது அது அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை. இசையமைப்பாளர் பாடகரின் குரலை மிகஸியில் அடித்து நுட்ப ஜூஸாக தரும் போது பாடுவது சின்மயியா, மடோனாவா என்று சந்தேகம் வருகிறது. பாடகர்களின் தனித்தன்மையை அழித்தொழித்து விட்டது நுட்பமும் அதை பெரிதும் சார்ந்திருக்கும் இசையமைப்பும்.

பாடல் வரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முன்பெல்லாம் பாடலாசிரியர்கள் வருவதற்கு முன்னால் மெட்டுக்கேற்ற 'டம்மி' வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடலை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். கண்ணதாசன் போன்ற வித்தகர்கள் வந்தவுடன் அந்த இசையை தம்முடைய அற்புத தமிழ் வரிகளால் நிரப்புவார்கள். ஆனால் இன்றைய நிலைமை அந்த டம்மி வார்த்தைகளோடே முடிந்துவிடுகிறது. உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் எந்திரன் பாடல் வரிகளை வாசித்துப் பாருங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துண்டு துண்டான வரிகளாக மிக நகைச்சுவையாக இருக்கும். பாடலுக்கு துணையாக இருக்க வேண்டிய இசை முன்னால் நின்று இரைச்சலாக ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது. 'மீட்டருக்குள்' அடங்க வேண்டிய வார்த்தைகளுக்காக பாடலாசிரியர்கள் தமிழை மென்று அதில் துப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். எந்திரனுககு மாத்திரமல்ல ஏறக்குறைய இன்றைய அனைத்து திரையிசைப் பாடல்களுக்குமே இதே நிலைதான். அறிவியல் துணுக்குகளை கிழித்து ஆங்காங்கே ஒட்டி வைக்கும் செயற்கைத்தனத்தை வைரமுத்து 'காதலன்' திரைப்படத்திலேயே ஆரம்பித்து விட்ட ஞாபகம். இதிலும் அவ்வாறே கைக்குக் கிடைக்கும் விஞ்ஞான வார்த்தைகளை இறைத்துப் போட்டு தமிழ்த் தொண்டாற்றியிருகிறார். ஒரு காலத்தில் வானத்தை போதிமரமாகக் கொண்டவரின் நிலைமை இன்று இத்தனை பரிதாபகரமாக ஆகியிருப்பது காலத்தின் கட்டாயம்தான் போலிருக்கிறது.

எந்திரன் இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே.  தொடர்ந்த மீண்டும்  சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம். ரஹ்மானின் பலமும் பலவீனமும் இதுவே.

suresh kannan

47 comments:

ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள், அழகாக பகிர்ந்து உள்ளீர்கள்.

ரஹ்மான், ஷங்கருக்கும் வணிகம் அல்லாத தரமான படைப்புக்கள் வழங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அனால் முதலில் வணிகப் படைப்புக்கள் தந்தால் தான் தங்களால் சந்தையில் நிலை நிறுத்தி கொள்ள முடியும். அதன் பின்பு தரமான படைப்புக்கள் தருவார்கள் என நம்புகிறேன்.

நடிகைகளின் பாலிசி தான் இதுவும்- முதலில் கவர்ச்சி உடை, வேடம் இட்டு நிலை நிறுத்தி கொண்ட பின்புதான் தரமான, குண சித்திர வேடம் இட முடியும் .

பாலகுமாரன் சொல்லி இருக்கிறார்- ஷங்கரால் தமிழ் சினிமாவிற்கு (for the story, screenplay, cinema)ஆஸ்கார் வாங்கி தர முடியும், அந்த மாதிரி கதைகள், திரைக்கதைகள் உள்ளே வைத்து இருக்கிறார் என்று. நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்.

கொழந்த said...

வணக்கம்..

சமீபத்ததுல தான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சிருக்கேன். உங்க "Follower"ஆ பதிஞ்சிருக்கேன்.

பாடல்களை இன்னும் கேட்கவில்லை. பின்னர் கருத்து கூறுகிறேன்

rajkumar said...

இலக்கிய விமர்சனங்களை போல சீரியசாக உங்களது இசை விமர்சனங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனாலும் ரஜினி சம்பந்தப்ப்ட்ட விடயங்களில் ஏதாவது எழுதி மேதன்மையை பிரபலப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும்தான் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள்.இவ்வாறான காழ்ப்புணர்ச்சியுடன் நீங்கள் இருப்பதற்கு ரஜினி என்ன தவறிழைத்தார் என்பது தெரியவில்லை.

உங்களது ரஜினி பற்றிய காழ்ப்புணர்ச்சியில் ரஹ்மானின் கடின உழைப்பை சாடியிருப்பதை ஏற்க இயலவில்லை.

நீங்களும் சாருவும் ஒரே ரகம். தலைப்பு வத்திருப்பதே அதிர்ச்சிக்காக வைத்திருக்கிறீர்கள். நேர்மையற்ற பதிவு.

Santhappanசாந்தப்பன் said...

//ஆஸ்கார் தரம்// அப்படியொன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விருதுகள் பெறுவதென்பது நமது பல்கலைகழக தேர்வுகள் போலத்தான். இதை படித்தால், இவ்வளவு மதிப்பெண் என்ற கணக்குதான். விருதுகளுக்கென்று சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான்.

ஷங்கர் உலகப் படஇயக்குனர் அல்ல. ஷங்கர்/ரஜினி இருவருமே கமெர்ஷியல் படங்களில் வல்லவர்கள். இது பக்கா கமர்ஷியல் படம்தான். இதில் எந்த மாதிரி இசை எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.


//வைர‌முத்து - ‍பாட‌ல் வ‌ரிக‌ள் // உங்கள் கருத்துக்களுக்கு முழுக்க‌ உட‌ன்ப‌டுகின்றேன்

ஜெ. ராம்கி said...

பாவம் ஷங்கர், ரஹ்மான், கலாநிதிமாறன். ரஜினி மேல உள்ள கோவத்தை இப்படி காட்டிட்டீங்க..ஆயிரம் ஆனாலும் சாருவாக முடியாது :-)

ஷங்கர் said...

ஆரம்பிச்சிட்டாங்க டோய் !!!!!:)

என்னை பொறுத்த வரை எந்திரன் பாடல்கள் ரஹ்மான் தன்னுடைய படைப்பூக்கத்தின் உச்சியிலிருந்து மெல்ல தளர்கிற நேரத்தில் உருவாக்கினதொரு மாஸ்டர்பீஸ்(நன்றி சுரேஷ் கண்ணன் ) :))

ஷங்கர் said...

சார் ,
எந்த இசை நல்ல இசை ,அதுக்கு ஒரு அளவுகோல் இருக்கா சார் ?

Santhappanசாந்தப்பன் said...

CD யோடு தரப்பட்ட பாடல் புத்தகத்தில் ரகுமான் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

The movie redefines Tamil commercial cinema.
I hope it sows seeds to inspire people to take leadership in giving the original inventions from the East.

ஜெயக்குமார் said...

1 GP RAM robot. It is a comedy piece. Before make this file, he should have discussed with some technical people and scientists.
தமிழன் எத சொன்னாலும் நம்பிருவாண்ட , எனா அவன் ரொம்ப நல்லவன்டா என்கிற நினைப்பில எடுக்கப்பட்ட படம் மாதிரிதான் இருக்கு.
இத போய் உலக படவரிசையில் சேர்க்கலாம் என்பது முட்டாள் தனமானது.

பிச்சைப்பாத்திரம் said...

ஆபாச மொழியில் திட்டி இடப்படும் பின்னூட்டங்கள் ஏன் பெரும்பாலும் அநியாயத்திற்கு எழுத்துப் பிழைகளுடன் இருக்கின்றன என்பது மாத்திரம் புரியவில்லை. (நீண்டகால சந்தேகம்).திட்டறதையாவது சரியாக செய்யுங்கள் நண்பர்களே. :)

ஹரன்பிரசன்னா said...

உங்களுக்கு இசை தெரியாது என்பது ஒரு விஷயமே அல்ல. இசை தெரியாத சாதாரண ஒருவரின் ரசனையே திரையிசையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. எனவே இது முக்கியமான பதிவாகவே இருக்கிறது.

ஆனால், ஏ.ஆர்.ரகுமானின் பாடல் போகப் போகப் பிடிக்கலாம் என்னும் டிஸ்க்ளெய்மருடன் நீங்கள் எழுதுவதைப் பார்த்தால், ஏன் இப்படி அவசரப்படவேண்டும் என்ற எண்ணம்தான் எழுகிறது. நமக்கோ தெரியும் நம் பலவீனம் என்ன என்று. கொஞ்ச நாள் கேட்டால்தான் அந்தப் பாடலைப் பற்றிய சரியான முடிவுக்கு வரமுடியும் என்றால் அதுவரை பொறுத்திருந்துவிட்டு பதிவு எழுதியிருக்கலாம். :)

நான் கேட்டவரை, அரிமா அரிமா பாடலும், காதல் அணுக்கள் பாடலும் மிக நன்றாக உள்ளன. புதியவனே பாடல் ரஜினிக்கு ஏற்ற பாடல். மற்ற பாடல்களும் நன்றாகவே உள்ளன. :)

ரஜினி படத்துக்கு ரஜினிக்கு ஏற்றவாறு இசை அமைப்பது தவறு என்னும் எண்ணம் உங்களுக்குள்ளே உள்ளது. ஒரு இயக்குநருக்கு ஏற்றபடி இசையமைக்கவேண்டும் என்பதும் முக்கியமானதே. அப்படிப் பார்த்தாலும் இப்பாடல்கள் நன்றாக உள்ளன என்னும் முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. :)

எப்படியோ, முன்முடிவுகளால் ரஜினி படங்களை நீங்கள் புறக்கணிப்பது இது முதல் நேரமல்ல. ரஜினி படங்களை புறக்கணிப்பதன்மூலம் தங்களுக்கு ஒருவித கறார்தன்மை கிடைக்கிறது என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவர் நீங்கள். தொடரட்டும் உங்கள் பயணம்.

பாடல் வரிகளைப் பற்றி நீங்கள் எழுதியது உண்மை. அங்கங்கே நல்ல வரிகள் தனித்து நிற்கின்றன. அவற்றை இணைக்கும் அழகான வரிகளைக் காணவில்லை.

உடன்பிறப்பு said...

இசையிலேயே குறை கண்டுபிடிக்கிறவங்க நீங்க உங்க கண்ணுக்கு எழுத்துப்பிழை தெரியாமல் போனால் தான் ஆச்சர்யம்

Ashok D said...

//ஒரு காலத்தில் வானத்தை போதிமரமாகக் கொண்டவரின் நிலைமை இன்று இத்தனை பரிதாபகரமாக ஆகியிருப்பது காலத்தின் கட்டாயம்தான் போலிருக்கிறது.//

எல்லோருக்கும் அப்படிதான்.. சூழல்தான் தீர்மானிக்கறது

// இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே. தொடர்ந்த மீண்டும் சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம். //

சோக்கா...அட்சிங்க பல்டி... இதுவும் எல்லார்க்கும் நடக்கறதுதாங்கோ ... :))

ஷங்கர் said...

////எந்திரன் இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே. தொடர்ந்த மீண்டும் சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம்./////

சார்
படத்தை கொஞ்சம் தாமதமாக விமர்சிக்கவும் ....., :)) ஒரு மாதம் கழித்து டிக்கெட் கிடைக்க வேண்டுகிறேன் :)))))

ஷங்கர் said...

ஹரன் பிரசன்னா அவர்களை ,
கன்னா பின்னா வென்று வழிமொழிகிறேன்

நல்லதந்தி said...

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இரஹ்மானின் இசையே சமீபத்தில் பிடிப்பதில்லை. அவருக்கு ஆஸ்கார் விருது தந்த போதுதான் ஆஸ்காரின் உண்மையான தரத்தை தெரிந்து கொண்டேன். எந்திரன் படப் பாடல்கள் அனைத்தும் படு கேவலமே!. அனைத்துப் பாடல்களும் ஆங்கிலப் பாப் பாடல்களைப் போலவே இருக்கின்றன. இரஜினி இரசிகன் என்கின்ற முறையில் எனக்கு மாபெரும் ஏமாற்றம். முத்து படத்தின் பாடல்களை முதன் முதலாகக் கேட்ட அந்தக் கால இரசிகனின் மனநிலையில் இருக்கின்றேன். இருந்தாலும் முத்துப் படப் பாடல்களைப் போல் வெற்றி பெறும் என்றே நினைக்கின்றேன்..... இரஜினி புண்ணியத்தில்.

பழூர் கார்த்தி said...

ஆமா, நீங்க சொல்வது போல் இந்த பாடல்களை கேட்க கேட்க பிடித்துப் போகலாம்.. எனக்கு மூன்று பாடல்கள் பிடித்திருக்கின்றன.. அரிமா அரிமா, காதல் அணுக்கள், புதியவனே :-)

Anonymous said...

Everything is for publicity , Endhiram and you too.

Kite said...

ரஹ்மான் இசை ஸ்காட்ச் விஸ்கி போன்றது. மூன்றாம் பெக்கில்தான் போதை ஏற ஆரம்பிக்கும். எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா மூன்றாம் முறை கேட்டபோதுதான் பிடித்தது.

கார்க்கிபவா said...

படைப்பாளி குறித்த முன்முடிவுகளை ஓரம் வைத்துவிட்டு படைப்பு குறித்த கருத்துகள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இருக்குமென நம்புகிறேன். ஆனால் இந்தப் பதிவு அதை தகர்த்துவிட்டது.

நிச்சயம் இந்த பாடல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்துதான் கேட்டிருப்பீர்கள் என என்னால் அடித்து சொல்ல முடியும். நல்ல படம் வந்தாலும் அதைத்தான் செய்வீர்கள். ஆனால் வணிக நோக்கமே இல்லாமல்,உஙக்ளுக்கு பிடிக்கும் வகையில் படமெடுத்து ஆண்டியாக வேண்டுமென்றும் எதிர்பார்க்கறீர்கள்.

அதுவும் கடைசி டிஸ்கி அநியாய காமெடி. ஒரு வேளை உங்களுக்கு பாடல் பிடித்து தொலைத்துவிட்டால் ரகுமான் மேதை ஆகிவிடுவார். அப்படித்தானே?

தனசேகர் said...

If you feel you may like the music later,then why such a harsh negative tittle.If you are reviewing be bold,don't play such a safe game :)
--Dhanasekar S

ISR Selvakumar said...

அழகான ரோபோத்தனம் இல்லாத விமர்சனம்!

Anonymous said...

இனிமே பாட்டுக்கு விமர்சனம் எழுதறவங்கல்லாம் சிடி வாங்கின பில்ல ஸ்கேன் பண்ணி போட்டுட்டு அப்புறம் எழுதுங்கப்பா. அதான் கார்க்கி அண்ணன் சொல்லிட்டாருல்ல. இந்தப் பதிவுல ரகுமானை எங்க குறை சொல்லியிருக்காருன்னு தெரியலையே. சரியா பாட்டு வாங்காத டேரடக்கருங்களைத்தான் குறை சொல்லியிருக்காரு. அதுசரி சுரேஸ் கண்ணன் அண்ணாச்சி, நீங்க ஏன் எப்பவும் ரஜினிய குறி வெச்சு திட்டறீங்க? ஏன் படம் வர்றதுக்கு முன்னாலேயே இத்தனை காண்டு?

கார்க்கிபவா said...

//சரியா பாட்டு வாங்காத டேரடக்கருங்களைத்தான் குறை சொல்லியிருக்காரு.//

இனிமேல பாட்டு வாங்குற டேரட்டகக்ருகள் அது நல்ல பாட்டுன்னு இந்த அனானியிடமோ, அவர் கைகாட்டுபவரிடமோ சர்டிஃபிகேட் வாங்கிடுங்கப்பா..ஓக்க்கேவா அனானி?

// அதுசரி சுரேஸ் கண்ணன் அண்ணாச்சி, நீங்க ஏன் எப்பவும் ரஜினிய குறி வெச்சு திட்டறீங்க? ஏன் படம் வர்றதுக்கு முன்னாலேயே இத்தனை காண்டு//

அவர் பாட்டதானே சொல்லியிருக்காரு. பாட்டுதான் வெளிவந்துடுச்சு இல்ல?

Tamil said...

அட விடுங்கப்பா, அவருதான் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் இந்தப் பதிவை எழுதியதாக சொல்கிறாரே.
பாடல்களை "free download" செய்திருந்தால் நீங்கள் புத்திசாலி, இல்லையென்றால் ஒரு "Itch Gaurd" இல் முடியவேண்டிய வேலைக்கு Rs.125 செலவு செய்வது முட்டாள் தனம்.

geethappriyan said...

நல்ல நேர்மையான விமர்சனம்

Anonymous said...

கார்க்கி அண்ணே..

முன்முடிவுகளைப் பத்தி பேசற நீங்க,சுரேஷ் அண்ணாச்சி மாத்திரம் பாட்டை டவுன்லோடுதான் செஞ்சிருப்பாருன்னு எப்படி 'அடிச்சி' சொல்றீங்க? நீங்க ஒரிஜனில் சிடி கேட்டுத்தான் எழுதனீங்கன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்?

அப்புறம்...சன் டிவி கலாநிதி மாறன் ஆண்டியாடப் போறாரேன்னு கவலைப்படற ஒரே ஆளு நீங்களாத்தான் இருப்பீங்க.

Ganpat said...

எந்திரன்,விஜய் படம் என்று எண்ணி பாடல்களுக்கு விமர்சனம் எழுதுங்கள்
தயக்கம் இன்றி எழுதலாம்.

வருண் said...

***When in Rome, do as the Romans do என்பதற்கேற்ப தற்போதைய பரபரப்பான 'எந்திரன்' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் இந்தப் பதிவு.***

What a crappy justification? You can be honest that you need some action in your blog and so writing this crap about endhiran.

You really think you justified your reason? I feel sorry for you!

வருண் said...

***எந்திரன் இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே. தொடர்ந்த மீண்டும் சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம். ரஹ்மானின் பலமும் பலவீனமும் இதுவே. ***

Seems like you dont buy your own crap! LOL

You think everybody will buy that??

Your start and end suck for big time!

Anonymous said...

http://timeforsomelove.blogspot.com/2010/08/blog-post.html

அட்ரா அட்ரா நாக்கு முக்கா நாக்கு முக்கா நாக்கு முக்கா

அட்ரா அட்ரா நாக்கு முக்கா நாக்கு முக்கா நாக்கு முக்கா

Anonymous said...

நாக்கு முக்கா (என்ன ஒருகொண்டாட்டம்)
காண்பித்த பதிவில் பார்த்தேன். 'எந்திரனை வைத்து பிழைப்பு நடத்துவதாக' சு.க.வை கிண்டலடித்தவர்,எந்திரனை வைத்தே நான்கைந்து பதிவுகள் எழுதியிருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது

பின்னோக்கி said...

முற்றிலும் உண்மை. சில காலம் முடிந்து பார்க்கும்/கேட்கும் போது, பாடல்கள் நன்றாக இருக்கும். ஷங்கர் படத்தில், பாடல்கள் படமாக்கப்பட்டவுடன், இசையை, மறக்கடித்து, காட்சிகளில் கவனம் கொள்ளச்செய்யும். அதனால், படம் வெளி வரும் முன், அதிக முறை பாடல்களைக் கேட்டு உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள் :). சன் டிவியை நினைச்சாலே பயமாக இருக்கிறது. இன்னும் 3 மாதத்திற்கு அந்த டிவி பக்கம் போகாமல் இருக்க வேண்டும். விளம்பரம் செய்து கொன்று விடுவார்கள். ரஜினியை அவர்களால் மற்ற நடிகர்கள் போல பேட்டி எடுக்க முடியுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளம்பர யுக்தியையும் கவனிக்க வேண்டும். பார்ப்போம்.

Prasanna Rajan said...

ரெம்ப சிம்பிள். பாட்டு ஓடுறப்ப காதை மூடிகிட்டா எல்லாம் சரியா போகும்.

சாருக்கு ஒரு பண்டல் பஞ்சு பார்சல்ல்ல்...

Ashok D said...

பாட்டு கேட்டேன்... சூப்பர் ... I think.. உங்களுக்கு வயசு(மனசு) கொஞ்ச ஜாஸ்தி ஆகிடுச்சுன்னு நெனக்கறன் :)

N.Parthiban said...

innoru isai imisaiyai patri ezhuthi irukkiraen paarungal mudinthaal

http://parthichezhian.blogspot.com/2010/08/blog-post.html

Anonymous said...

ஒருவர் ஒரு திரைப்பாடல் பிடிக்கவில்லை என்று சொன்னதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம். குற்றம் சொன்ன மகானுபாவர்கள் யாருமே இந்த ஆல்பத்தில் உள்ள சிறப்பை மறுத்து எழுதினதாய் தெரியவில்லையே? சாரு ஒரு முறை எழுதினதைப் போல இசை விரும்பிகள் இத்தனை வன்மமாய் இருப்பதைப் பார்த்தால் இவர்கள் இசை கேட்டு என்ன உபயோகமோ?

இதில் உடனே ஏன் எழுதினீர்கள் என்ற கேள்விகள் சில. அய்யா ஒரு திரைப்படமோ பாடலோ இரண்டு மூன்று வருடங்கள் கழித்துக் கூட பிடிக்கலாம். அல்லது பிடிக்காமலேயே கூட போகலாம். அதுவரை காத்திருந்தா எழுத முடியும். நல்ல வியாக்கியானம்

(சுரெஷ் பதிவில் சாரு பற்றி எழுதியதால் இதை வெளியிடுவாரொ இல்லையொ) :-))))))))

ரோமிங் ராமன் said...

//கைக்குக் கிடைக்கும் விஞ்ஞான வார்த்தைகளை இறைத்துப் போட்டு தமிழ்த் தொண்டாற்றியிருகிறார்//

நிர்பந்தங்கள் எல்லாருக்கும் உள்ளதே!!
நீங்கள் கூட வயதாகி விட்டதாகி விட்டது என்று சொல்லுவார்கள் என்று நிர்பந்தத்தின் காரணம் சொல்லவில்லையா?? பாடலை கேட்டது மட்டுமன்றி பார்த்த பிறகே சொல்லமுடியும் என்பது சிவாஜி பாடல்களின் அனுபவம் (என் நிர்ப்பந்தம்!!) ரோமிங் ராமன்

கிரி said...

சுரேஷ் கண்ணன் வழக்கம் போல ரஜினி மீதான் உங்க காண்டை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ஆச்சர்யம் இல்லை :-)

என்ன பாவம் இதில் ரகுமான் மாட்டிக்கிட்டார்.. ரஜினியால். உங்களோட உன்னைப்போல் ஒருவன் பாடல் விமர்சனம் ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறது :-) (http://pitchaipathiram.blogspot.com/2009/09/blog-post.html) நீங்க என்னதான் குட்டிகரணம் அடித்தாலும் கண்டபடி விமர்சித்து எழுதினாலும் பாடல் ஹிட் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெலுசில் வாங்கி சாப்பிடுங்க பாஸ் ;-)

iTunes ல் US UK இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.. என்ன பண்ணுவது உங்களைப்போல யோசிக்க அவர்களுக்கு தெரியவில்லை முட்டாள்கள் :-) இதை சன் டிவி டாப்டென் மாதிரி சொல்லிடாதீங்க ... LOL

KKPSK said...

மிக அருமையான விமர்சனம்..வார்த்தை ஜாலம் இன்னும் அழகு.ARRன் இசை பற்றி மிக ஆழமான வரிகள் (பொதுவில் சொன்ன, முதல் இரண்டு பத்திகள்).

we can discover a lot with sony/sennheiser head phones.

VTV பாடல்கள் படம் பார்த்த பிறகுதான், பிடித்து போயின.

என்ன இருந்தாலும் no body can resist prejudice..

ராம்ஜி_யாஹூ மற்றும் HPன் பின்னுட்ட்டங்களும் நன்று.

நீங்க கலக்குங்க அண்ணே.;)

ivanoruvan said...

'ஆரோமலே' பாடல் சுடப்பட்டதன்றோ? உங்கள் பதிவு நேர்மையாக இருந்ததாக தெரிகிறது....நன்றி

elangovan said...

I agree with rajkumar. this music one of the best from Rahman

Muthu said...

"ஆபாச மொழியில் திட்டி இடப்படும் பின்னூட்டங்கள் ஏன் பெரும்பாலும் அநியாயத்திற்கு எழுத்துப் பிழைகளுடன் இருக்கின்றன என்பது மாத்திரம் புரியவில்லை. (நீண்டகால சந்தேகம்).திட்டறதையாவது சரியாக செய்யுங்கள் நண்பர்களே. :)"

நல்ல நகைச்சுவை. ஒருவேளை இப்போதுதான் ல/ள, ர/ற பயன்பாடு கற்றுக்கொள்பவர்களாக இருக்கும். அவரவர் தரத்துக்கேற்ற வெளிப்பாடுதானே சாத்தியம் !

வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

அன்புடன்
முத்து

Anonymous said...

Sorry to use this space to reply
JeyaKumar....

Please do check before u make any comments ...

In Enthiran the memory size is 1 Zetabyte i.e equal to 1 billion Tbyte. ie equal to approx. all the digital data avail in this universe!

--Aadithya

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

கேரளாக்காரன் said...

not so good review neenga kamal fan aa?

தமிழ் பையன் said...

அதுதான் ரஹ்மான் பாட்டு எல்லாம் பிடிக்காது, அப்புறம் பிடிக்கும்னு சொல்லிப்பிட்டு எதுக்கு முதலில் விமர்சனம் எழுதினீர்? இந்தப் பதிவை எல்லாம் இன்னும் ஒரு முறை திரும்ப திருத்தி எழுதும் எண்ணம உண்டா?