Thursday, May 20, 2010

சாரு தவறவிட்ட சர்வதேச விருது

இலக்கியத்திற்காக வழங்கப்படும் சர்வதேச  விருதுகளில் மிகப் பெரியது International IMPAC Dublin Literary Award. 1 லட்சம் யூரோக்கள் பரிசு. உலகிலேயே ஒரு நாவலுக்காக இவ்வளவு மிகப் பெரிய தொகை பரிசாக கிடைப்பது இந்த விருதின் மூலம்தான். 

1996-ம் வருடம் முதல் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விருதை வழங்குவது யார் தெரியுமா? டப்ளின் நகராட்சியும் இம்பாக் என்ற நிறுவனமும் இணைந்து  இந்த விருதை வழங்குகின்றன. (நம் உள்ளூர் மாநகராட்சிகள் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் புரியும் போது அவற்றிடம் இது போன்ற அதிசயங்களை எல்லாம் எதிர்பார்ப்பது அதீதம்).

உலகின் எந்தவொரு மூலையிலும் மொழியிலும் எழுதப்படும் புதினமும் இதில் போட்டியிட தகுதியானது. அது ஆங்கிலமாகவோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவோ இருக்க வேண்டும். ஆனால் நேரடியாக இதில் கலந்து கொள்ள முடியாது. உலகெங்குமிலுள்ள மாநகர நூலகங்கள் இந்த நூலை பரிந்துரைக்க வேண்டும் என்பது முக்கியமானது.


2010 வருடத்திற்கான விருது  LONG LIST பட்டியல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் அர்விந்த் அடிகா (THE WHITE TIGER), அமிதவ் கோஷ் (SEA OF POPPIES) போன்ற இந்திய எழுத்தாளர்களின் பெயர்கள் காணப்பட்ட போது மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. ஏனெனில் துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்  உள்ளிட்டவர்கள் பெற்ற இந்த விருதை இந்திய நாவலாசிரியர்கள் எவரும் இதுவரை பெறவில்லை. 

ஆனால் கடந்த மாதம் இதன் SHORT LIST  வெளியான போது மேற்சொன்ன இந்திய எழுத்தாளர்கள் பட்டியலிலிருந்து  காணாமற் போனது ஏமாற்றத்தையளித்தது. ஜூன் 2010-ல் விருதை வென்றவர் பற்றிய முடிவு அறிவிக்கப்படும். 



இதில் சாரு எங்கேய்யா வருகிறார் என்று கேட்பவர்களுக்கு....

ஜனவரி 2009-ல் நடந்த சாரு நூல் வெளியீட்டு விழாவில் இந்த விருதிற்கு தொடர்புடன் அவர் மிக உணர்ச்சிகரமாக பேசியதை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.


"யாருக்கு வேண்டும் சாகித்ய அகாதமி. இப்ப ஏதோ மேலாண்மை பொன்னுச்சாமின்றவருக்கு கொடுத்திருக்காங்க. கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு வேளைக்கு சாப்பிடறதுக்கு ஆகிற செலவு. இந்த லிஸ்ட்ல போய் ஏன் எஸ்.ராமகிருஷ்ணணையும் சேத்திருக்கீங்க? ஜெயமோகனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் 'கலைமாமணி விருதோ' என்னவோ கொடுத்துப் போகட்டும். ஆனா நம்ம சில எழுத்தாளர்கள் நோபல் பரிசு வாங்குகிற அளவிற்கு தகுதியானவங்கன்னு நான் ரொம்ப வருஷமா சொல்லிட்டு வரேன். (அசோகமித்திரன், ஆதவன். இ.பா., ந.முத்துசாமி... என்று சில எழுத்தாளர்களை சொல்கிறார்). உலகத்துல இருக்கற அத்தனை சிறுகதைகளிலும் சிறந்ததாக 20 தேர்ந்தெடுத்தா அதுல எஸ்.ராவின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' சிறுகதையும் ந.முத்துசாமியுடைய 'நீர்மை'யும் வரும். அப்பேர்ப்பட்ட படைப்பாளிகளை சாகித்ய அகாடமி கொடுத்து கேவலப்படுத்த சொல்றீங்களா, வெக்கமாயில்லை. இம்பாக்-னு ஒரு விருது. ஒன்றரை கோடி ரூபா பரிசு. நோபல் பரிசுக்கும் மேல. அடுத்த வருஷம் அந்த விருதுப் பட்டியல்ல என்னோட பேர் இருக்கும்னு உறுதியா என்னால சொல்ல முடியும்.

சாரு தன்னுடைய உரையில் ஜீரோ டிகிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்து மிக நம்பிக்கையாகவும் உறுதியுடனும் இதைச் சொல்லும் எனக்கும் கூட  சற்று பரவசமாகவே இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாருவின் கனவு நிறைவேறாதது மாத்திரமல்ல, லாங் லிஸ்ட்டிலும் அவரது புதினம் இடம் பெறவில்லை. சம்பந்தப்பட்ட பதிப்பகமும் எழுத்தாளரும் பொது நூலகங்களின் மூலம் நாவலை பரிந்துரைப்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றியடையாததுதான் காரணமாக இருக்கும் என நம்புகிறேன். 


சில விமர்சனங்களைத் தாண்டியும் சாரு என்னுடைய பிரியமான எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதால் வரும் ஆண்டுகளில் அவர் தனது வேறு புதினத்திற்காக இந்த விருதினை பெறுவார் என்றும் நம்புகிறேன். தனக்கு சில கோடிகள் பணம் கிடைத்தால் விக்ரமாதித்யன், சங்கர ராமசுப்பிரமணியன் போன்ற உற்சாக பான பிரிய நண்பர்களை மதுவிலேயே குளிப்பாட்டி கொண்டாடுவேன் என்று ஒருமுறை சாரு எழுதியிருந்த ஞாபகம். அது நிகழாமல் போனதும் கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


suresh kannan

15 comments:

Anonymous said...

அயர்லாந்து லேசுப்பட்ட பூமியில்லை.உலக கலை-இலக்கியத்திற்கு அயர்லாந்திலின் கொடை அதிகம்.அதையெல்லாம் ஒப்பிட்டால் சாருவெல்லாம் தூசு கூட கிடையாது.சாரு என்ன ஜேம்ஸ் ஜாய்ஸா இல்லை பெக்கட்டா இல்லை பெர்னாட் ஷாவா?.சாருவின் நாவல் பட்டியலில் இல்லை என்பது உண்மையானால் அதுவே கொண்டாடப்பட வேண்டிய நல்ல செய்தி.சாரு போன்றவர்களின் சுய மோகத்திற்கும்,சுய விளம்பரத்திற்கும் துணை போகாதீர்கள்.

Unknown said...

//சில விமர்சனங்களைத் தாண்டியும் சாரு என்னுடைய பிரியமான எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதால் வரும் ஆண்டுகளில் அவர் தனது வேறு புதினத்திற்காக இந்த விருதினை பெறுவார் என்றும் நம்புகிறேன். தனக்கு சில கோடிகள் பணம் கிடைத்தால் விக்ரமாதித்யன், சங்கர ராமசுப்பிரமணியன் போன்ற உற்சாக பான பிரிய நண்பர்களை மதுவிலேயே குளிப்பாட்டி கொண்டாடுவேன் என்று ஒருமுறை சாரு எழுதியிருந்த ஞாபகம். அது நிகழாமல் போனதும் கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.//

is there any ULKUTTHU in this?

Jegadeesh Kumar said...

anonymous சொன்னது சரிதான். அர்விந்த் அடிகாவின் நாவலை படித்தில் போட்டிருக்கலாம். அதுசரி நம்மூர் மாநகராட்சியை நக்கலடித்து இருக்கிறீர்கள். யாராவது அரசு ஊழியர்களுக்குக் கோபம் வந்து விடப்போகிறது.

Ashok D said...

//உலகெங்குமிலுள்ள மாநகர நூலகங்கள் இந்த நூலை பரிந்துரைக்க வேண்டும் என்பது முக்கியமானது//

சாருக்கு இது நிகழவில்லை.. அவருடைய உலக நண்பர்கள் ஒன்றிருவர் மட்டுமே நூலகங்களுக்கு அவருடைய புத்தகங்களை வாங்கிகொடுத்தார்கள்.. but too late

அடுத்தமுறை பார்த்துக்களாம்..

அ.முத்து பிரகாஷ் said...

ஓரான் பாமுக் பெற்ற விருது சாருவுக்கு ...
சுரேஷ் சார் ...
எதுவும் சொல்ல முடியல ...

Paleo God said...

நீங்க வ.பு அணி செய்யமாட்டீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையில் படித்து முடித்தேன்!! :))

ரா.கிரிதரன் said...

சுரேஷ் - சாருவின் ஜீரோ டிகிரி இம்பாக்கின் அடிப்படை தேர்வு விதிக்குள் வராது. 2010 விருது தகுதியான ஆங்கில நாவல் 2008இல் வெளியாகியிருக்கவேண்டும். வேற்று மொழி படைப்புகள் 2004-2008இல் வெளியாகி,ஆங்கில மொழியாக்கம் 2008 இல் வெளியாகியிருக்க வேண்டும்.

ஜீரோ டிகிரி 2000க்கு முன் வெளியானதால் முதல் கட்ட லாங்லிஸ்டில் இல்லை.லாங்க் லிஸ்டில் இந்த அடிப்படை விதிக்குள் வரும் எல்லா புத்தகங்களும் இருக்கும்.

வெள்ளைப் புலிக்கும் இம்பாக்குக்கும் ரொம்ப தூரம் பாஸ்! The Twin(முதல் நாவல்) அல்லது The Elegance of Hedgehog நாவலுக்கு நிறைய சான்ஸ் இருக்காம்.

மேவி... said...

நான் WHITE TIGER மற்றும் ஜீரோ டிகிரி ஆகிய இரண்டும் வாங்கி வைத்திருக்கேன் ,,இன்னும் படிக்கல. படித்த பின் தான் என்னால் எதையும் சொல்ல முடியும்

Anonymous said...

ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல நீங்கள் சாருவை மறைமுகமாக வாரியிருக்கிறீர்கள் என்பது கூட பலருக்குப் புரியவில்லை.

Anonymous said...

charuvidam alattal ulla alavu vizhayam illai. zero degree-yai yaravadhu mananala doctor padithal oru paithiyathin mana pidhatral endru solla koodum.adharku virudhu ondru than kuraiyudha?

Anonymous said...

நல்ல வேள விருது கொடுக்கல!

டிராகன் said...

ORHAN PAMUK VANGIYA VIRUDHU CHARU NIVEDITAVUKU ,WHAT HAPPEND TO YOU SURESH ??

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,இதை சொல்ல மறந்துட்டேன்.எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.இவை என் பிளாக்குகள்.அவசியம் வரவும். பலான சர்வதேச விருது எனக்கு கிடைக்குமா?நானும் காயகல்ப கதை எழுதுவேன் சார்.
TAMIL VASAM ,
hardybodywindymi… ,
இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
நிர்வாண உண்மைகள் ,
PAURUSHAM
INDIAN POLITICAL CLOSEUP
The Blog
వాణీ పుత్రుని వాణి
Woman voice
kamasuthra
The Tiger
kavithai365
C.K.THE TIGER
Focus on Tomorrows
Two Legends
அனுபவ ஜோதிடம்

மதி இண்டியா said...

அடுத்த வருட போட்டி சித்தூர் முருகேசனுக்கும் சாருவுக்கும்தானாமே ?

சு.க , முடியல , வாசகர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , சாநி எழுதுவதை நாவல் (1 லச்சம் யூரோ பெறும் தகுதியுள்ள) என்று சொல்லும் உங்கள் ,மன தைரியத்தை பாராட்டுகிறேன்.

Chittoor Murugesan said...

அய்யா ,
இது நான் எழுதிய கமெண்ட் அல்ல. எவனோ வெலை வெட்டி இல்லாத தண்டம் ,முண்டம் எழுதியது. முதலில் அதை இதை இரண்டையும் நீக்கித்தொலையுங்கள்