"ஒரு படத்தின் விமர்சனம் என்பது எந்த ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டாலும் சரி, அது ஒரு தனிமனித எண்ணங்களின் வெளிப்பாடுதான். ஒரு படத்தயாரிப்பாளன் (film maker) அதை பொருட்படுத்த தேவையில்லை" என்கிறார் பிரெஞ்சு நாட்டு திரைப்பட இயக்குநர் ழான் பால் ஷீத்தர். "பொதுப்புத்தியின் ஒட்டு மொத்த கலவையான கூறுகளையும் தன்னகத்தே கொண்டதே ஒரு சிறந்த விமர்சனமாக அமைய முடியும்" என்கிறார் ஜெர்மன் நாட்டின் பிரபல திரைப்பட விமர்சகர் மோர்சன்பிரே. (நான் சொந்தமா யோசித்து சொன்னது அப்படின்னா நீங்க ஒத்துப்பீங்களா? அதனாலதான் இப்படி வெளிநாட்டு ஆசாமிங்களோட பேர்ல கூடு பாயறது).
மேற்கத்திய நாடுகளில் திரைப்படமோ, நாடகமோ விமர்சகர்களின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தனது படைப்பு அரங்கேறின இரவன்று படைப்பாளிகள் நகத்தைக் கடித்துக் கொண்டு மறுநாள் நாளிதழுக்காக காத்திருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். நமது உள்ளுர் ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஒரு மேம்போக்கான பார்வையில் பார்ப்போமே.
()
செய்திகளை முந்தித்தருவதாக சொல்லிக் கொள்ளும் 'தினத்தந்தி'யின் திரை விமர்சனம் ரொம்பவும் மொண்ணையானது. 'கிச்சா வயது 16' படமானாலும் சரி, 'ஹேராம்' படமானலும் சரி ஒரே மாதிரியான தொனிதான். "ரகசியாவின் நடனம் இளசுகளை கிளுகிளுப்பூட்டக்கூடியது' போன்ற வரிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 'மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம்" என்று வெண்ணைத்தனமாக முடிப்பார்கள். இந்த மாதிரி விமர்சனங்களைப் படிப்பதை விட 'ஷகீலா இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்.. அவைகளில் எத்தனை நூறுநாட்களை தாண்டி ஓடியது? போன்ற புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டிருந்தாலவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும். 'தினமலர்' எப்பவாவது அபூர்வமாக எழுதும் விமர்சனங்களும் 'வளவளவென்றுதான்' இருக்கும். (வாரமலரில் இப்படி தொடர்ந்து கிண்டலடிக்குமளவிற்கு தமிழ்ச்சினிமாவாசிகளுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன ஜென்மப் பகை என்று தெரியவில்லை).
'தி ஹிண்டு'வின் பழைய விமர்சனங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். ஆங்கிலப்படங்களுக்கும் இந்திப்படங்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இப்படி தமிழுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். (விளம்பரங்கள் செய்யும் வேலையா என்று தெரியவில்லை.) நடிகைகளின் clevage சர்வசாதாரணமாக ஆப்செட் பளபளப்பில் மின்னுகிறது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கொடுத்த ஒரு ஜவுளிக்கடை விளம்பர பெண்ணின் தொப்புள் தெரிகிறது என்று பிரசுரிக்க மறுத்து விட்டார்கள். (இத்தனைக்கும் அது line drawing).
ஆனந்தவிகடன் நீண்ட ஆண்டுகளாக மார்க் போட்டு (வாத்தியாரா இருந்த எவரோ விமர்சகரா ஆரம்பித்து வைத்த பழக்கமோ என்னமோ) தன்னுடைய சேவையை ஆற்றி வருகிறது. இது வரை அதிகபட்சமாக மதிப்பெண் பெற்ற எதுவென்று தெரியவில்லை. {பாரதிராஜாவின் படமொன்றை (16 வயதினிலே (?) மதன் சமீபத்தில் குறிப்பிட்ட ஞாபகம்} சமீப காலங்களில் அதன் மொழி மிகவும் மாறிவிட்டது. (இளமை கலாட்டா).
பெரியார் திரைப்பட விமர்சனத்திற்கு பயபக்தியும் மதிப்பெண் போடாமல் விட்டதை சாருநிவேதிதா சவட்டிக் களைந்ததில் எனக்கு முழு உடன்பாடே. வாழும் காலத்திலேயே தீவிர விமர்சனங்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட ஆளுமையை மதிப்பிட பயந்து தாழ்ந்து போனது விகடன். 'பாய்ஸ்' படத்திற்கு 'த்தூ'' என்று பத்தாம்பசலித்தனமாக காறித்துப்பியது போன்ற ஒரு அநியாயம் இருக்க முடியாது. தீமைகளை ஒழிக்கும் அவதார நாயகர்களிடமிருந்து விலகி ஒரு கூடுமானவரை பாசாங்கை விலக்கி யதார்த்தத்தைக் கையாண்டு எடுத்த ஒரே ஷங்கர் படம் என்பதே என் மதிப்பீடு.
"கடைசி வரியில் கவிழ்த்து விடும் குமுதம் கூட" என்று வைரமுத்து ஒரு பிரயோகத்தை தன்னுடைய நாவலொன்றில் உபயோகித்த நினைவு. குமுதம் விமர்சனங்களை அதிகம் படித்ததில்லையென்றாலும் மிகவும் குறும்புத்தனமான விமர்சனங்களை படித்த நினைவிருக்கிறது. ராமராஜன் படத்திற்கு படத்தின் ஸ்டில்லை (still) மட்டும் பிரசுரித்து 'இந்தப்படத்திற்கெல்லாம் விமர்சனம் தேவையா?" என்பதுதான் விமர்சனமே. நாயகியின் கவர்ச்சியோ கவர்ச்சியான படத்தை மட்டும் கவனமாக நடுப்பக்கத்தில் போட்டும் சமூகப் பொறுப்பான பத்திரிகையிது.
பொதுவாக அச்சு ஊடகக்காரர்கள் தயாரிப்பாளர் தரும் கவரின் எடையைப் பொறுத்தே எதிரொலிப்பார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
()
சிற்றிதழ்களின் வரலாறு வேறுவகையானது. ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவை ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரியே அணுகுவார்கள். (நன்றி: சுஜாதா). பின்பு பின்நவீனத்துவம் முன்வாசல் வழியாக வந்த பிறகும் பெர்க்மன், குரசோவா போன்றவர்களுக்கு மட்டுமே அனுமதி. ரே, ஷ்யாம் பெனகலும் எப்பவாவது தென்படுவார்கள். ஆனால் சமீப காலங்களில் இந்த நிலை மாறியுள்ளது. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் என்றால் கையில் கற்களுடன் குஷியாக காத்திருந்த நிலை பரிணாம வளர்ச்சியடைந்து பாலா, அமீர், பாலாஜி சக்திவேல் வகையறாக்களுக்கும் நீண்டுள்ளது. மிகவும் நுணுக்கமான மொழியில் பல்லைக்கடிக்கும் கட்டுடைத்தலில் கடுமையான கட்டுரை வாசகனை பல சமயங்களில் பழகாதவன் வெங்காயம் அரியச் சென்றவனைப் போல கலங்க வைப்பது. யமுனா ராஜேந்திரன் என்றொரு ஆசாமி இருக்கிறார். பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதக் குறிகளை உரைநடையிலும் கையாள முடியும் என்று தெரிய வைத்தவர். குறைந்தது 20 பக்கங்களாவது நீளும் இவரது விமர்சனங்களை முழுவதும் படித்து முடிப்பவர்கள், மனைவியின் ஜாக்கெட்டுக்கு ஊக்கு தைக்கும் உருப்படியான வேலை கூட இல்லாத வெட்டி ஆசாமிகளாகத்தானிருக்க முடியும்.
அ.ராமசாமி என்றொரு விமர்சகர், காதல் திரைப்படத்தில் மைக்ரோ செகண்டுகளில் காட்டப்பட்ட பெரியார் சிலையின் கோணத்தை வைத்துக் கொண்டு எழுதிய விமர்சனம் நகைச்சுவையின் உச்சம். படம் ஆரம்பிக்கும் முன்பே தங்களது ஆயுதங்களை தீட்டிக் கொண்டு தீர்மானமாக அமர்ந்திருப்பார்களாயிருக்கும். காலச்சுவடு இதழ் ஒன்றில், மணிரத்னத்தின் இருவர் படத்தின் ஒரு ஷாட்டுக்கு விமர்சகரின் 2 பக்க அரசியல் ரீதியான கோணத்தைப் படித்திருந்தால் இயக்குநரே அயர்ந்து போயிருப்பார்.
()
இது இப்படியென்றால் தொலைக்காட்சிகளின் வேலை இன்னும் காமெடி. கலாநிதி மாறனின் ஒன்று விட்ட மச்சான் மாதிரியான தோரணையும் ஒரு ஆசாமி கால் மேல் கால் போட்டு ஒற்றை வரியில் தன்னுடைய செளகரியத்துக்கேற்ப படங்களை கலாய்த்ததில் திரையுலகத்தினருக்கு ரொம்ப நாட்களாக வயிற்றெரிச்சல். தன்னுடைய சானலுக்கு விற்க சம்மதிக்கும் படங்களை தலைமேல் தூக்கும் இவர்களின் பாணி ரொம்பவுமே அநியாயம். பொதிகை சானலில் பத்தாவது அரியர்ஸ் வைத்திருக்கும் ஒரு சிறுமி, சொல்லிக் கொடுத்த ஸ்கிரிப்டை மனப்பாடமாக சொல்லி விட்டுப் போகும். (குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று பொதிகைக்கு யாராவது சொன்னால் தேவலை). கஅகாலத்தில் கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டவரைப் போல் அசெளகரியத்துடன் ஒரு நபர், நடிகர் சிவகுமார் மாடுலேஷனில் ஸ்கிரிப்டை வாசித்து விட்டு போவார் 'ராஜ்டிவி'காரர்.
'விஜய்'யில் மதனின் விமர்சனம் கொஞ்சம் தேவலையாக இருக்கும் என்றாலும், மனிதர் அநியாயத்திற்கு நல்லவராக இருக்கிறார். கடுமையாக விமர்சிக்க மாட்டேன் பேர்வழி என்று விஷால் படத்தைக்கூட 'ரே'படத்தை சர்வஜாக்கிரதையாக விமர்சிப்பதைப் போல, இயக்குநருக்கு கை கொடுப்பார். ஆனால் இது Times Now சானலில் ராஜீவ் வழங்கும் நிகழ்ச்சியின் பிரதி சரியாக விழாத கார்பன் காப்பி என்பது அதையும் பார்ப்பவர்களுக்கு விளங்கும். (ஆனால் ராஜீவ் நீரிழவுக்காரர் கழிவறைக்கு விரைகிற அவசரத்திலேயே பேசுவதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்) இவரைப் போலவே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக ஒரு நல்ல திரைப்படத்தின் dvd-ஐ பரிந்துரை செய்வதை நான் ஆர்வத்துடன் கவனிப்பேன்.
சமீப காலமாக சுஹாசினியும் (ஜெயாடி.வி) களத்தில் குதித்திருக்கிறார். ஆனால் இவர் பேசி பேசி ஓய்ந்து போவதில், பார்ப்பது தொலைக்காட்சியா அல்லது வானொலியா என்று சந்தேகம் வந்துவிடும். காட்சி ஊடகத்தை இப்படி பேசியே விமர்சிப்பது மிகவும் அநியாயம். மணிரத்னம் மனைவி என்கிற பந்தாவில் இந்தியாவின் எந்த நடிகரானாலும் தொலைபேசியில் உரையாட முடிவது நிகழ்ச்சியின் பலம். (மணிரத்னம், நிகழ்ச்சயில் எந்தப்படத்தையும் காரசாரமாக விமர்சிக்காதே என்று சொல்லியிருக்கிறாமே).
()
எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் படத்தின் விமர்சனத்தை தருபவர்கள், முந்தைய காட்சியிலிருந்து வெளிவருபவர்கள் என்று பொதுவான நம்பிக்கையிருக்கிறது. ஆனால் இவர்களும் கேமராவின் வெளிச்சத்தில் நனையும் குதூகூலத்துடன் "சூப்பரு' என்று ஒரே மாதிரியாக சொல்வது நாடகத்தனமாயிருக்கிறது. இவர்களையும் தாண்டி நமது வலைப்பதிவர்களின் விமர்சனங்களைப் பற்றி சொல்லலாம் என்றால்...
சேம் சைடு கோல் போட நான் தயாராயில்லை. என்றாலும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் திரை விமர்சனங்களை இந்தப் பதிவில் வாசிக்க முடியும். :-)
Thursday, August 30, 2007
Tuesday, August 28, 2007
Reservoir Dogs (1992) திரைப்பார்வை
விநோதமான, நான்-லீனியர் திரைக்கதையமைப்பை கொண்டிருப்பதே இந்தப்படத்தின் தனித்தன்மை என்று நான் நினைக்கிறேன். ஹீரோவின் காலை முதலில் காட்டியவுடன் விசிலடிக்கும் நம்முர்காரர்களுக்கு இந்தப் படம் இதனாலேயே பிடிக்காமல் போகலாம். ஆறு பேர் அடங்கிய குழு ஒன்று வைரங்களை கொள்ளையடிக்க முயல்வதும் அது குழப்பமும், விவாதமும், சந்தேகமும், ரத்தசகதியோடும் முடிவதே இந்தப்படத்தின் ஒன்லைன்.
முன்பின் அறிமுகமில்லாத அந்தக் குழு ஜோ என்பவரின் தலைமையில் இணைந்து ஒரு ஹோட்டலில் அமர்ந்து மடோன்னாவின் பாடல்களைப் பற்றியும் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பது பற்றியும், 'fuck' என்கிற வார்த்தையை side-dish-ஆக கொண்டு விவாதிப்பதில் படம் ஆரம்பிக்கிறது.
ஒருவர் அடிவயிற்றில் குண்டடி பட்டு சிவப்பாக காரின் பின்சீட்டில் உயிருக்கு போராடுவதோடும் முன்சீட்டில் அவருக்கு நம்பிக்கையூட்டிய படியே காரை ஒட்டுவதாகவும் அடுத்த காட்சி தாவி ஓடுகிறது. இருவரும் பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் குண்டடி பட்டவர், தன்னை ஏதாவதொரு மருத்துவமனை வாசலில் போட்டுவிடும் படியும் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் கெஞ்சுகிறார். ஆனால் கார் ஓட்டி வந்தவரோ பின்னர் வருகிற இன்னொரு கொள்ளையருடன், திட்டத்தில் எவ்வாறு குழப்பம் நேர்ந்தது என்பது குறித்து நீண்ட விவாதத்துடன் கூடிய சண்டையிடுகிறார். flash back உத்தியில் அவர் காவலர்களிடமிருந்து தப்பி வந்து காட்சி காட்டப்படுகிறது. இருவரும் விவாதத்தின் உச்சத்தில் ஒருவரையொருவர் துப்பாக்கியை நீட்ட, காட்சியில் வந்து இணைகிற இன்னொருவர் இருவரையும் தடுத்து நிறுத்துகிறார். மூவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி சண்டையிடுகின்றனர். இவர் ஒரு காவலரை தன் காரில் கடத்தி வந்திருக்கிறார். மூவரும் சேர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளும் பொருட்டு காவலரை நையப் புடைக்கின்றனர். குண்டடி பட்டவர் ஒரு மூலையில் சுயநினைவின்றி படுத்துக் கிடக்கிறார்.
(குழு நபர்கள் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும் அவர்களின் சொந்த அடையாளத்தை இனங்காண முடியாமல் எப்படி நிறங்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன என்பதும் இடையிடையே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. Mr.Pink, Mr.Orange, Mr.White, Mr.Blonde, Mr.Blue, Mr.Brown)
குழுவின் தலைவனான ஜோவின் மகன் நுழைந்து அனைவரையும் அமைதிப்படுத்தி Mr.Blonde-ஐ காவல் வைத்து விட்டு வைரங்களை கைப்பற்றும் பொருட்டு வெளியே விரைகின்றனர். psychopath-ஆன Blonde கட்டிப் போடப்பட்டிருக்கின்ற காவலரின் காதை அறுத்து, பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைக்கும் வேளையில் அவர் மீது சரமாரியாக குண்டுகள் பாய்கின்றன. சுயநினைவின்றி படுத்திருந்தவரே இந்த காரியத்தைச் செய்து காவலரை காப்பாற்றியவர்.
அவர் யார் என்பதையும் அடுத்து என்ன நிகழ்கிறது என்பதையும் அருகிலிருக்கும் dvd ஸ்டோருக்குச் செல்வதின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
()
Quentin Tarantino இந்தப்படத்தை இயக்கி சிறுவேடத்தையும் ஏற்றிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் பிரபல படங்களின் (City of Fire) காட்சிகளின் inspiration-களோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிடும் இயக்குநர் "ஆமாய்யா.. மத்த படங்கள்ல இருந்து திருடித்தான் எடுத்தேன். இப்ப என்ன அதுக்கு? ஊர்ல எல்லாம் அப்படித்தாம்ப்பா இருக்காங்க. வேணுமின்னா நீங்க பார்க்காதீங்க" என்றிருக்கிறார் அதிரடியாக. Mr.Blonde-ஆக நடித்திருக்கிற Michael Madsen வின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.
முன்பே குறிப்பிட்ட மாதிரி, இந்தப்படத்தின் பலமே இதுவரை நான் சந்தித்திராத திரைக்கதையமைப்பு. fuck, fucking.. போன்ற வார்த்தைகள் எத்தனை முறை படத்தில் வருகிறது என்பதற்கு ஒரு போட்டியே வைக்கலாம். (254 முறை என்று விக்கிபீடியா மூலம் பின்னர் அறிந்து கொண்டேன்).
கொஞ்சம் sample
Mr. Brown: Let me tell you what 'Like a Virgin' is about. It's all about a girl who digs a guy with a big dick. The entire song. It's a metaphor for big dicks.
Mr. Blonde: No, no. It's about a girl who is very vulnerable. She's been fucked over a few times. Then she meets some guy who's really sensitive...
Mr. Brown: Whoa, whoa, whoa, whoa, whoa... Time out Greenbay. Tell that fucking bullshit to the tourists.
Joe: Toby... Who the fuck is Toby? Toby...
Mr. Brown: 'Like a Virgin' is not about this nice girl who meets a nice fella. That's what "True Blue" is about, now, granted, no argument about that.
Mr. Orange: Which one is 'True Blue'?
Nice Guy Eddie: 'True Blue' was a big ass hit for Madonna. I don't even follow this Tops In Pops shit, and I've at least heard of "True Blue".
Mr. Orange: Look, asshole, I didn't say I ain't heard of it. All I asked was how does it go? Excuse me for not being the world's biggest Madonna fan.
Mr. Orange: Personally, I can do without her.
Mr. Pink: I like her early stuff. You know, 'Lucky Star', 'Borderline' - but once she got into her 'Papa Don't Preach' phase, I don't know, I tuned out.
Mr. Brown: Hey, you guys are making me lose my... train of thought here. I was saying something, what was it?
Joe: Oh, Toby was this Chinese girl, what was her last name?
Mr. White: What's that?
Joe: I found this old address book in a jacket I ain't worn in a coon's age. What was that name?
Mr. Brown: What the fuck was I talking about?
Mr. Pink: You said 'True Blue' was about a nice girl, a sensitive girl who meets a nice guy, and that 'Like a Virgin' was a metaphor for big dicks.
Mr. Brown: Lemme tell you what 'Like a Virgin' is about. It's all about this cooze who's a regular fuck machine, I'm talking morning, day, night, afternoon, dick, dick, dick, dick, dick, dick, dick, dick, dick.
Mr. Blue: How many dicks is that?
Mr. White: A lot.
Mr. Brown: Then one day she meets this John Holmes motherfucker and it's like, whoa baby, I mean this cat is like Charles Bronson in the 'Great Escape', he's digging tunnels. Now, she's gettin' the serious dick action and she's feeling something she ain't felt since forever. Pain. Pain.
Joe: Chew? Toby Chew?
Mr. Brown: It hurts her. It shouldn't hurt her, you know, her pussy should be Bubble Yum by now, but when this cat fucks her it hurts. It hurts just like it did the first time. You see the pain is reminding a fuck machine what it once was like to be a virgin. Hence, 'Like a Virgin'.
Joe: Wong?
()
வித்தியாசமான திரைப்படங்களின் தேடல்களில் ஈடுபட்டிருப்போர் பார்க்கத் தவற விடக்கூ¡த திரைப்படம்.
Courtesy: IMDB, Wikipedia

Monday, August 27, 2007
சும்மா.... கொஞ்சம் வார்ம்-அப்
வேலை வெட்டி ஏதுமில்லாத ஒரு தருணத்தில் என்னுடைய வலைப்பதிவை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வருடத்தில் வெறும் ஏழே ஏழு பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்று தெரிய வந்தது. 'நல்ல விஷயம்தானே' என்று ஆனந்தப்படுபவர்கள் 'சிவாஜி' திரைப்படத்தை இரண்டாவது தடவையாக பா¡க்கக் கடவது! (முதன் முறையாக பார்த்த கொடு¨மான அந்த தண்டனையைப் பற்றி விரைவில் எழுத உத்தேசம்). நேரில் பார்க்கும் வலைப்பதிவு நண்பர்கள், "எங்கங்க இப்பல்லாம் blog-ல உங்க ஆளையே காண்றதில்ல" என்று கேட்கும் போது அவர்களின் குரலில் இருப்பது ஆனந்தமா, வருத்தமா என்று என்னால் இனம் காண முடிவதில்லை. எனவே...
இனி அடிக்கடி இந்தப்பக்கத்தில் உலாவுவது என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே கொஞ்சம் வார்ம்-அப் செய்து கொள்வதற்காக "புத்தகம் பேசுது" (செப்டம்பர் 2007) இதழில் பிரசுரமாகியிருக்கிற "புத்தகப் புதிர்" என்கிற பகுதியை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன். (சொந்தமாகவே தயாரிக்க சோம்பேறித்தனம் என்பதால்).
விடை தெரிபவர்கள், உங்கள் மொபைல் போனை எடுத்து.... ஸாரி, (ரேடியோ அதிகம் கேட்பதால் வந்த வினை) பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை என்னைத் தவிர மற்ற யாராவது படிக்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுவதால், பின்வரும் கேள்விகளுக்கு 'நமீதா' என்று பதிலளித்தாலும் பரவாயில்லை. பின்னூட்டமிடுங்கள். யாரும் 'ம்' கொட்டாமல் எழுதுவதற்கு என்னமோ போலிருக்கிறது.
இனி கேள்விகள்:
1) தமிழின் முதல் நாடகமான 'மனோன்மணியம்" ஆங்கிலத்தில் வந்த எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
2) விலங்குகள் கதைகளில் (கார்ட்டூனில்) பேசுவது இன்று சகஜமாகி விட்டது. மூட்டைப்பூச்சி பேசுவதாய் தமிழில் எதை எழுதியவர் யார்?
3) சாகுந்தலத்தை தமிழில் மொழியெர்த்தவர் யார்?
4) சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், பேய் ஓடிப் போச்சு எனும் பிரபல கதைகளுக்கு இடையிலான ஒற்றுமை என்ன?
5) முதல் நாவலை தமிழுக்குத் தந்த வேதநாயகம் பிள்ளை பார்த்த வேலை என்ன?
6) 'அக்பர் சாஸ்திரி' எனும் பிரபலமான பாத்திரத்திற்குச் சொந்தமானவர் யார்?
7) 'மோகானங்கி' என்பதுதான் தமிழின் முதல் வரலாற்று நாவலாக அறியப்படுகிறது. எழுதியவர்?
8) சேக்ஸ்பியரின் 'As you like it' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து, மேடையேற்றி நடித்தும் காட்டியவர்?
9) 'பாரதி காலமும் கருத்தும்' என்ற திறனாய்வு நூலுக்காக 1983-ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் யார்?
10) தமிழில் புரட்சிகர இலக்கியங்களின் தாய்வீடாகக் கருதப்படும் 'தாமரை' இதழைத் தொடங்கியவர் யார்? எந்த ஆண்டு?
(விடைகள் விரைவில்)

Friday, August 17, 2007
உயிர் எழுத்து - இதழ் அறிமுகம்
சி.சு.செல்லப்பா ஆரம்பித்த 'எழுத்து' முதல் கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் நிறுவிய 'கசடதபற' முதலான இதழ்கள் நவீன தமிழிலக்கிய பரப்பில் ஒரு இயக்கமாகவே தீவிரமாக இயங்கிய காலகட்டங்கள் நீ¡த்துப் போய், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் பொருளாதார நோக்கம் கொண்ட, வாசகனின் மூளையை கவர்ச்சியாலும் பரபரப்பாலும் மழுங்கடிக்கிற பத்திரிகைகளே அச்சு ஊடகத்தின் பிரதான சக்தியாக விளங்குகின்றன. இன்றைய தேதியில் 'வெற்றி' என்கிற சொல்லே முக்கியம். அதை அடைகிற பாதைகளைப் பற்றி சமூகத்திற்கு அக்கறையில்லை. வெற்றியின் படிக்கட்டுகள் பெரும்பாலும் பணக்கட்டுகளினாலேயே அமைந்துள்ளன.
போகட்டும். 'சிற்றிதழ்' என்றாலே கெட்ட வார்த்தையாகி விட்ட இன்றைய இருண்மையான உலகில் எங்கோ சில நம்பிக்கைத் தெறிப்புகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எப்படி பொருளாதார நோக்கமின்றி, சமூகப் பொறுப்புடன் இயங்குகிற சில பைத்தியங்கள் இருக்கின்றனரோ, அதைப் போல. உயிர்மை, காலச்சுவடு போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு வரவாக மலர்ந்திருக்கிறது 'உயிர் எழுத்து'. (ஆசிரியர்: சுதீர் செந்தில்)
.. குரோதமும், அதிகார வேட்கையும், பொருளாசைகளும் நிரம்பி வழியும் ஒரு சூழலில் மக்களுக்கான இலக்கிய வெளியைச் செப்பனிடும் பணியில் படைப்பாளிளும் வாசகர்களும் இணைந்து கொள்ள அழைக்கும் தலையங்கத்தோடு முதல் இதழ், ஜூலை 2007-ல் ஆரம்பித்துள்ளது.
சிறுகதைகளின் வரிசையில், லதா ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆதவன் தீட்சண்யா என்று சிற்றிதழ்களில் சம்பிரதாயமாக காணப்படுகிற பெயர்களோடு சு.தமிழ்ச்செல்வி போன்ற புதிய பெயர்களும் காணப்படுகின்றன. (இந்த கிளிஷே உடைக்கப்பட்டு புதிய, திறமையான எழுத்தாளர்களை சிற்றிதழ்கள் அடையாளம் காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்).
நாட்டார் கதையொன்றின் இடைச் செருகலுடன், பச்சைக்கிளி என்கிற பேதையின் கதை இயல்பான மொழியால் சொல்லப்பட்டிருக்கிறது, சு.தமிழ்ச்செல்வியின் 'இருசி' சிறுகதை. 'அங்கும் இங்கும்' என்கிற யுவனின் சிறுகதை, வாசிப்பு சுவாரசியத்தோடு இருந்தாலும், பூடகமான விஷயத்தோடு கதையை நகர்த்தி எங்கோ ஒரு புள்ளியில் இணைக்கும் அவரின் வழக்கமான பாணியை கைவிட நேரம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைக்கிறது.
பிரபஞ்சனின் 'புனல்வழிப்படும்' என்கிற சிறுகதை சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய சாமர்த்தியமான லெளதீக வாழ்க்கையில் ஒரு கலைஞன் பிழைப்புக்காக படும் அல்லல் எள்ளலுடன் கதையில் இறைந்துள்ளது. எனக்குப் பிடித்தமான ஒரு பத்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
....வேலை என்கிற பேயை வசக்கித்தான் வாழ வேண்டி இருக்கிறது. ஏனெனில் வாழ்வதற்குப் பணம் என்ற பூதம் தேவைப்படுகிறது. உணவு, உறையுள், நாளாந்திரச் செலவுகளுக்குப் பணம் தேவை. அந்தப் பணம் அயோக்கியர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. அயோக்கியர்களிடம் அவர்களின் ஊழியர்கள் எனக் கையை ஏந்த வேண்டி இருக்கிறது. அவர்களைப் பிரபுகளாக்கி, நம்மை நாம் பிச்சைக்காரர்களாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது. எந்த அறமும் இல்லாத வீங்கிப் பொத்து சீழ்வடியும் பணக் கைகளில் இருந்து வழியும் பணத்தைச் சம்பளம் என்று பெறுகையில் உயிர் பதறுகிறது. வேலை என்பதுதான் என்ன. அழகிய காலையை இழப்பது; வைகறைக் குளிரை துறப்பது; குளிப்பது எனும் அழகிய அனுபவம் மறந்து அவசரத்தைப் பூசிக் கழுவுவது; படித்தே தீர வேண்டிய உலக உன்னதங்களைத் தன்னில் போடுவது; காலை நேரத்து உலகை, பத்து மணி உலகை, மதிய நேரத்துத் தெருவை, வெயில் வற்றி மாலை முளைக்கையைக் கண்கொண்டு பார்க்க இயலா மூட¨ம்; இரவு எனும் விருந்தைப் புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளாத மந்த புத்தியினராதல்; விஸ்வத்தின் பேரண்டத்தின் நாமே அச்சு என்கிற போதம் உணரா பேதமை. மெளடீகத்தின் மொத்தத் திருவுருவாக உன்னை நீ விற்றுக் கொள். முப்பது நாள்கள் முடியும் போது அதன் பலனை நீ பெறுவாய். .....
ஆதவன் தீட்சண்யாவின் 'காலத்தைத் தைப்பவனின் கிழிசில்' என்கிற சிறுகதை, நவீன வரலாற்று புனைவாளனை பகடி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. 'ஐந்து பாகங்களாய் எழுத வேண்டிய மனேகர்ராவ் வாழ்க்கைக்கான முன்குறிப்புகள்' என்கிற வரிகளுடன் ஆரம்பிக்கிற இந்தச் சிறுகதை, தையற்கலைஞன் பரம்பரையொன்றை நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.
()
குடிப்பழக்கம் சார்ந்த நாஞ்சில் நாடனின் மீள்பிரசுரமான கட்டுரையை வாசகர்கள் தவறவிடாமல் கட்டாயம் வாசிக்க வேண்டுமென்கிற பரிந்துரையை முன்வைக்கின்றேன். குடிப்பழக்கத்தை பொதுப்புத்தி சார்ந்த பார்வையிலிருந்து விலகி, முற்றிலும் கட்டுடைக்கிற பார்வையோடு யதார்த்தமான நடையில் எழுதியுள்ளார் நாஞ்சில்நாடன். (.... குடி என்பது அறம் சார்ந்த பிரச்சினையாகப் பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படுகிறது. அதன் அபத்தத்தை உணர்ந்து பேசுகிறேன். குடி, எனது பார்வையில் ஒரு அறம் சார்ந்த பிரச்சினை அல்ல....)
'இலக்கிய உரையாடல்கள்' என்கிற நூலை தனக்கேயுரிய ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான மொழியில் விமர்சித்திருக்கிறார் பாவண்ணன்.
ந.முருகேச பாண்டியன் எழுதியுள்ள கட்டுரை, (புத்தக அரசியல்: பன்முகப் பார்வை), ஆசிரியர் பணித்ததிற்காக உல்லாசப் பயணக் கட்டுரை எழுதிய மாணவனின் நடையையொற்றி அமைந்திருப்பது துரதிர்ஷ்டமே. தெருக்கூத்து கலைஞர்களின் சினிமாவில் பங்கேற்பதில் உள்ள மோகத்தை உளவியல் பின்னணியுடன் விவரிக்கிறது, மு.ராமசாமியின் 'வானம் பார்க்கும் பூமியாய்' என்கிற கட்டுரை. ச.முருகபூபதியின் 'செம்மூதாய்' என்கிற நாடகத்துடன், என்னை அவசரமாய் பக்கங்களைப் புரட்ட வைக்கிற கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன.
()
அடுத்த இதழ் எப்போது வரும் என்று தோன்ற வைத்த 'உயிர் எழுத்து', அற்பாயுளில் மறைந்து போன பெரும்பான்மையான சிற்றிதழ்களைப் போலல்லாமல் தொடர்ந்து கனமான உள்ளடக்கங்களுடன் வெளிவர வேண்டுமென்கிற விருப்பம் என்னுள் எழுகிறது. தொடர்புக்கு: 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1. செல்: 99427 64229. மின்னஞ்சல்: uyirezhutthu@gmail.com தனி இதழின் விலை ரூ.20/-

Saturday, August 11, 2007
விநோதமான தேடல்கள்.......
ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு 07.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கோலிவுட் கோர்ட்' என்கிற நிகழ்ச்சியில் கடந்த வாரம் திரையிசைப் பாடல்கள் சேகரிப்பாளரான 'அலிகான்' என்பவரது நேர்காணல் ஒளிபரப்பாகியது. இவரைப் பற்றி ஏற்கெனவே அச்சு ஊடகங்களில் படித்தறிந்துள்ளேன்.
உலகத்தில் வெவ்வேறு விதமான தேடல்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சிலரின் தேடல்கள் மற்றவர்களின் பார்வையில் விநோதமாகவும் அநாவசியமாகவும் தோன்றக்கூடும். தபால்தலைகளை சேகரிப்பது பற்றி பள்ளிக்கூட பருவத்திலேயே அறிந்திருப்போம். விதவிதமான மதுபாட்டில்கள், பேனாக்கள், தொலைபேசிக் கருவிகள், காலணிகள் தேடுவோரும் உண்டு. பலவிதமாக வடிவமைக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை சேகரிக்கிற ஜெர்மனி தேசத்தவரைப் பற்றி எங்கோ படித்திருக்கிறேன். அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளவும் மற்றவர்களிடமிருந்து விலகி உயர்ந்து நிற்க விரும்புகிற, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாக அமைந்திருக்கிற குணாதிசயமே இவ்வாறான தேடல்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறேன்.
என்னுடைய பதின்ம வயதில், ஒரளவு சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில் ஏற்படுகிற பிரத்யேக திமிரோடு விதவிதமான T-shirts, குறும்பான எழுத்துக்கள் அச்சிட்டிருக்கிற பனியன்கள் சேகரிக்கத் தொடங்கினேன். இது தினமும் புதிதான ஒரு உடை அணிய வேண்டுமென்கிற அளவிற்கு வெறியில் கொண்டு விட்டது. இதிலிருந்து ஒருவாறாக வெளியில் வந்த பிறகு எங்கோ படித்த கிரைம் நாவலின் விளைவாக, இவ்வாறான புத்தகங்கள் சேரிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. சென்னையின் பெரும்பாலான நடைபாதை புத்தகக் கடைகளில் என்னுடைய தேடல் விரிவடைந்தது. இலக்கியத்தின் பால் திரும்புவதற்கு இது ஒரு நல்ல காரணமாக அமைந்தாலும் அதற்குள் பல குப்பைப் புத்தகங்கள் என் வீட்டை நிறைந்திருந்தன. இந்தத் தேடல் இன்னும் (ஆனால் நவீன இலக்கியம் தொடர்பாக) தொடர்கிறது என்றாலும் இடையில் என்னுடைய தேடல் திரைப்பாடல்கள் பக்கம் திரும்பியது.
ஒலிநாடாக்கள், ஆடியோ குறுந்தகடுகள், MP3 தகடுகள் தவிர நண்பர்களிடமிருந்து இரவல் பெற்று பதிவு செய்த பாடல்கள் என்று பைத்தியமாக அலைந்தேன். இதற்காக செலவு செய்த பணத்தில் விட்டுப்போன என்னுடைய உளவியல் படிப்பை முடித்திருக்கலாம் என்கிற அளவிற்கு ஆகியது. இது திரைப்பட குறுந்தகடுகளின் வடிவில் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
()
அலிகானில் ஆரம்பித்து சுயதம்பட்டத்திற்குள் புகுந்த என்னை மன்னியுங்கள். தமிழின் முதல் பேசும்படமான காளிதாசில் தொடங்கி (கிளிஷேவாக எல்லா சினிமா கட்டுரைகளிலும் சொல்லப்படுகிற இந்த தகவல் உண்மையில்லை என்றும் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் இதற்கு முன்னரே பேசும் படத்தை தயாரித்து விட்டார் என்பதையும் ஒரு 'புதிய பார்வை' இதழில் படித்த நினைவு வருகிறது) பல பழைய திரையிசைப் பாடல்களின் LP ரெக்கார்டுகள், குறுந்தகடுகளின் அபூர்வமான தொகுப்பு இவரிடமிருக்கிறது. கிட்டத்தட்ட 3000 திரைப்படங்களின் பாட்டுப்புத்தகங்கள் (கடந்த காலங்களில் புதிய படங்களின் திரையிடல்களின் அரங்கின் வாசலில் விற்பார்களே, நினைவிருக்கிறதா?) இவரிடம் உள்ளன.
இவரின் தேடல்களின் தொடர் பயணத்தின் போது நிகழ்நத சம்பவங்களில் ஒன்றை நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
'திகம்பர சாமியார்' என்கிற திரைப்படத்தின் (இதில் எம்.என்.நம்பியார் பத்து வேடங்களில் நடித்திருக்கிறாராம்) பாடல்களை அலிகான் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்திருக்கிறார். தென்காசியில் ஒரு திருமண மண்டபத்தில் இந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாக இவரின் நண்பரொருவர் தெரிவித்திருக்கிறார். உடனே தென்காசிக்கு பயணம். தென்காசியில் உள்ள எல்லா சவுண்டு சர்வீஸ் கடைகளிலுமான தேடல் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு மிராசுதாரரின் வீட்டில் அந்தப்படத்தின் ரெக்கார்டு இருப்பதான தகவல் கிடைத்திருக்கிறது. அங்கும் ஒடியிருக்கிறார் அலிகான். ஆனால் அந்த மிராசுதாரரோ இவரை வணிக நோக்கமுள்ள விற்பனையாளர் என்று கருதி பிடிகொடுக்காமல் திருப்பியனுப்பியுள்ளார். பின்பு உள்ளுர்காரர் ஒருவர், இவரின் சேகரிப்பு பழக்கத்தைப் பற்றி மிராசுதாரரிடம் எடுத்துச் சொல்லியதில், இவர் நிஜமாகவே சினிமாவில் ஆர்வமுள்ளரா என்பதை பல சோதனைகளுக்குப் பின்னர் (பாகவதரின் முதல்படம் எது? சொல்லுங்கள்) அறிந்து கொண்டு தன்னிடமிருந்த பல இசைத் தட்டுக்களை தந்துள்ளார்.
வருத்தப்பட வைத்த இன்னொரு சம்பவத்தையும் அலிகான் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். பிரபல திரைப்படமான 'பராசக்தி'யின் பொன்விழாவை கொண்டாட ஏவி.எம். முடிவு செய்தது. இது தொடர்பாக அந்தப்படத்தின் திரைப்பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் யார் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தை பிலிம்நியூஸ் ஆனந்தன், சென்னை தொலைக்காட்சி, இலங்கை வானொலி உட்பட யாராலும் தெளிவாக்க இயலவில்லை. விழா நெருக்கத்தில் தவித்துக் கொண்டிருந்த ஏவி.எம் நிறுவனத்தினருக்கு, கவிஞர் வைரமுத்து, அலிகானைப் பற்றி சொல்லி தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து ஒருவர் தொடர்பு கொண்டதில், அலிகான் தொலைபேசியிலேயே அனைத்துப் பாடலாசிரியர்களின் பெயரைச் சொல்லி உதவியிருக்கிறார். ஆனால் பொன்விழாவின் அழைப்பிதழ் தனக்கு அனுப்பப்படவேயில்லை என்பது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மிகுந்த சிரமத்திற்கிடையிலும் மிகுந்த பொருளாதார செலவில் சாத்தியமாகியிருக்கிற அலிகானின் சேமிப்பு பற்றி அவரின் குடும்பத்தாருக்கு பெருமைக்கு மாறாக அதிருப்தியே ஏற்பட்டிருக்கிறது. எனவே, தனக்குப் பிறகு தனது அபூர்வமான சேமிப்பின் நிலை குறித்து அவருக்கு கேள்வி எழுந்திருக்கிறது. பல தனிநபர்கள், நிறுவனங்கள் இவரின் சேமிப்பை பணம் செலுத்தி வாங்க முன்வந்தாலும், பலருக்கும் பயன்பட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தமிழக அரசை இது தொடர்பாக அணுகியிருக்கிறார் அலிகான். ஆனால் அரசிடமிருந்து நீண்ட நாட்களாகியும் பதில் வரவில்லை.
()
இந்த மாதிரியாக உங்களுக்கிருக்கும் ஏதேனுமான விநோதமான சேகரிப்புப் பழக்கத்தைப் பற்றி இங்கு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

Subscribe to:
Posts (Atom)