நம்முடைய சாதாரண உப்புமா வாழ்க்கையைத் தாண்டி நம்மைச் சுற்றி பல நிழலான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடியாது. சர்வதேச குற்றத்தின் ஒரு சிறுஅசைவு நம் காலடியில் நடந்து கொண்டிருக்கலாம். கற்பனை செய்து கூட பார்க்க முடியாத குற்றங்களின் பனிக்கட்டி முனை. கோடிக்கணக்கான நிதி மோசடிகள், பின்னேயுள்ள பண முதலைகள், வெடிக்கும் துப்பாக்கிகள், செய்யப்படும் துரோகங்கள், கண்காணிக்கும் நிறுவனங்கள் என்று ஒரு வனத்தில் நிகழும் இரக்கமற்ற வேட்டைகள் மெளனமாக நிகழ்ந்து கொண்டிருக்கும்.
'அது சரிய்யா.. இதையெல்லாம் எங்ககிட்ட ஏன் சொல்றே.. நாங்க ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகப் போறோம்?' என்று நீீங்கள் முனகுவது கேட்கிறது. குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த பெரும்பணத்தை ஒரு ரஷ்ய மாஃபியா கும்பல், லண்டனுக்கு அனுப்பி வெள்ளையாக்கும் சதி நடவடிக்கையின் இடையே ஒரு சாதாரண குடும்பம் தற்செயலாக மாட்டினால் என்னவாகும்?
***
கவிதைப் பேராசிரியரான பெரி லண்டனில் வசிப்பவர். மனைவி ஒரு வழக்கறிஞர். தங்களுக்குள் ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தை களைவதற்காக இருவரும் மொராக்கோவிற்கு செல்கின்றனர். பணக்கார ஹோட்டலில் டிமா என்கிற நடுத்தர வயது ஆசாமியை தற்செயலாக சந்திக்கிறான் பெரி. இருவரும் நண்பர்களாகின்றனர். தன் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறார் டிமா. சற்று தயக்கம் இருந்தாலும் 'ஒரு பெரிய மனுஷன் இத்தனை மதிச்சு அழைக்கிறானே' என்று செல்கிறான். அங்குதான் ஏழரை நாட்டுச் சனி ஆவேசமான பிரியத்துடன் பெரியை தழுவிக் கொள்கிறது.
டிமா ரஷ்ய மாஃபியா ஆசாமி. பெரிய பணமுதலை ஒன்றின் கணக்குப் பிள்ளை. பாவத்தில் வந்த ரத்தப் பணத்தை வெள்ளையாக்குவது இவருடைய பணி. பெரிய முதலாளி இறந்தவுடன் சின்ன முதலாளி பதவிற்கு வருகிறார். ஈவு, இரக்கம் ஏதுமில்லாதவர். டிமாவைப் போன்ற இன்னொரு ஆசாமியிடமிருந்து எல்லாவற்றையும் கறந்தவுடன் குடும்பத்தைச் சுட்டுக் கொள்கிறாா். அந்தக் குடும்பத்தின் மிச்சமிருக்கும் மூன்று மகள்கள் இப்போது டிமாவின் பாதுகாப்பில்.
இப்போது டிமாவிற்கும் அதே ஆபத்து ஒரு கத்தி போல தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. அவரும் தன்னிடமுள்ள கணக்குகளை சின்ன முதலாளியிடம் ஒப்படைத்த பின்னர் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பப்படுவார். டிமாவைச் சுற்றி சின்ன முதலாளியின் ஆட்கள். ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றனர். அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு பெரியைச் சந்திக்கிறார் டிமா.
தன் ஆபத்தை விளக்கி 'இந்த மெமரி கார்டை' லண்டன் உளவுத்துறையிடம் தந்து விடு. அவர்களுக்கு புரியும். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையோடு என் குடும்பத்தின் கதியும் உன் கையில்தான் இருக்கிறது. இங்கு வேறு யாரையும் நான் நம்ப முடியாது' என்கிறார். பெரிக்கு இந்த ஆபத்தில் சிக்க விருப்பமில்லை என்றாலும் டிமாவின் நல்ல இயல்பிற்காக சம்மதிக்கிறார்.
பூனை எலி ஆட்டம் ஆரம்பிக்கிறது.
***
பிரிட்டிஷ் உளவுத்துறையுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. 'என்னுடைய குடும்பத்தை பாதுகாப்புடன் லண்டனுக்கு அழைத்து வருவதாக உத்தரவாதம் தந்தால் சில வங்கி எண்களைச் சொல்வேன்' என்கிறார் டிமா. உளவுத்துறை அதிகாரியான பெக்கர் யோசிக்கிறார். அவருடைய முன்னாள் பாஸூக்கும் கூட இந்த சதியில் பங்கிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் சீரழிவதைப் பற்றி கவலைப்படாத சுயநலமி ஆசாமி. இந்தக் கூட்டத்தை எப்படியாவது அம்பலப்படுத்த வேண்டும் என பெக்கருக்கு தோன்றுகிறது.
கணக்குகளை ஒப்படைப்பதற்காக டிமாவை அழைக்கிறார் சின்ன முதலாளி. அந்த விஷயம் முடிந்ததும் குடும்பத்தோடு காலி என டிமாவிற்கு தெரியும். ஆனால் உளவுத்துறை எப்படியோ அவர்களைக் காப்பாற்றி விடுகிறது. தனியான சாகசம் மூலமாக டிமாவை பெரி காப்பாற்றுகிறான். ஆனால் இவர்கள் ஊரை விட்டை தப்பிக்க முடியாதவாறு ஒரு முட்டுக்கட்டை வருகிறது. வேறு யார்? பெக்கரின் முன்னால் பாஸ். இப்போது அரசியல்வாதியாக இருப்பதால் தன் அதிகாரத்தை உபயோகிக்கிறார்.
எனவே டிமாவின் குடும்பத்தை ரகசிய இடத்திற்கு அனுப்புகிறார் பெக்கர். பெரியின் குடும்பமும் உடன் செல்கிறது. "நீ நம்பகத்தன்மையான ஆள்' என்று பெரியைப் பாராட்டுகிறார் டிமா. இருவருக்கும் உள்ள நெருக்கம் கூடுகிறது.
***
லண்டனுக்கு திரும்பும் பெக்கர் உயர்அதிகாரிகளிடம் கறுப்பு நிதியை வெள்ளையாக்கும் இந்த மகா சதியைப் பற்றி சொல்கிறார். இதனுடன் தொடர்புள்ள பண முதலைகளின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வாங்குகிறார். "ஆனால் இதற்கு ஆதாரம் தேவை. டிமா வங்கி எண்கள் பற்றிய விவரங்களைத் தருவாரா? தந்தால் அவருக்கு அடைக்கலம் தரலாம்" என்கிறாார்கள்.
பேச்சுவார்த்தைக்காக டிமாவை வரச் சொல்லி தகவல் வருகிறது. கூட பெரியும் வருவதாகச் சொல்கிறான். ஆனால் உள்ளுணர்வில் ஏதோ நெருட கடைசி நிமிடத்தில் அவனை வர வேண்டாம் என சொல்கிறார் டிமா. அவர் யூகித்தபடியே பயணிக்கும் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுகிறது.
எல்லாத்திட்டமும் ஃபணால் ஆகிறது. எதிரிகள் கொண்டாட்டமாகிறார்கள். பெக்கர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி டிமாவின் குடும்பத்தை லண்டனுக்கு வரவழைக்கிறார்.
பெரி கடைசி முறையாக பெக்கரை பார்க்க வருகிறான். 'டிமா இதை கொடுக்கச் சொனார்' என்று ஒரு பெட்டியைத் தருகிறான். உள்ளே ஒரு காலி துப்பாக்கி. பெக்கருக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் யோசித்து விட்டு துப்பாக்கியை அழுத்துகிறார். உள்ளே வங்கி எண்கள் வரிசையாக எழுதப்பட்டுள்ள ஒரு துண்டு பேப்பர் சுருளாக கிடக்கிறது.
***
புத்திசாலித்தனமான உரையாடல்களும் சாகசக் காட்சிகளும் நிறைந்துள்ள படம். பெரி, டிமா, பெக்கர் ஆகியவர்களின் நடிப்பு அபாரம். பெரி இந்தச் சிக்கலில் இறங்கும் போது நமக்கே அத்தனை பதட்டம் வருகிறது. ஒரு புத்திசாலித்தனமான திரில்லருக்கான இலக்கணத்துடன் இயக்கியிருக்கிறார் Susanna White.

(குமுதம் சினிமா
தொடரில் பிரசுரமானது)
suresh kannan
No comments:
Post a Comment