Monday, October 04, 2010

அபத்தமான சமகாலம்


ஒரு திரைப்படம், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பெரும்பான்மையை பித்துப்பிடிக்க வைத்து மனப்பிறழ்வு மந்தைகளாக ஆக்க முடியும் என்பதைக் காணும் போது அந்த ஊடகத்தின் அசுர பலத்தை மீண்டும் வியப்பதா அல்லது நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதற்காக வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. 'எந்திரன்' திரைப்பட வெளியீடு குறித்து அதன் ரசிகர்கள் நடத்தின கோமாளித்தனங்களை தன்னுடைய வணிகத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியத்தோடு (இதுவே எதிர்மறையானதாகவும் மாற வாய்ப்பிருக்கிறது) சன் தொலைக்காட்சி ஒளிபரப்பின காட்சித் தொகுப்பினை நேற்று காணக் கொடுத்த வைத்த பரவசத்தோடு இதை எழுதுகிறேன்.

அலகு குத்தல்கள், பால் குடங்கள், மண்டி போட்டு மலையேறுதல்கள், படப்பெட்டிக்கு பூஜை புனஸ்காரங்கள், கட்அவுட்டிற்கு பாலாபிஷேகங்கள்.. இவ்வளவும் எதற்காக? தன்னுடைய பிரியமான நடிகரின் படம் வெற்றிகரமாக ஓடுவதற்காம். இத்தனையையும் கள்ள மெளனத்தோடு கவனிக்கிற அதன் மூலம் இந்தக் கோணங்கித்தனங்களை மறைமுகமாக  ஊக்குவிக்கிற ரஜினியின் இமயமலை சுற்றுலா 'ஆன்மீகம்' எத்தனை போலித்தனமானதோ, அதே அளவிற்கு இந்த நிகழ்வுகளும் அபத்தமானவை. எப்படி இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறதோ, அதே அளவிற்கு இதை ஆட்சேபிக்கிற உரிமை துரதிர்ஷ்டவசமாக அங்கு வாழ்கிறவர்களுக்கும் உண்டு. அதன் விளைவே இந்தப் பதிவு.

எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் பேரவைகள், தொணடர் படைகள், முதலியவை.

'நெரிசலில் சிக்கி அவதிப்படக்கூடாதென்பதற்காக' தன் ரசிகர்களை தன் மகள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று கரிசனத்துடன் அறிக்கை கொடுத்த ரஜினி, இப்படி முதல் காட்சிக்காக பெருங்கூட்டத்தில் சிக்கி அவதிப்படும் ரசிகர்களுக்காக "ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள். எப்படியும் ஒருவாரத்தில் இதன் கள்ள குறுந்தகடு வெளிவரப்போகிறது. அதை வாங்கி வீட்டிலேயே செளகரியமாக அமர்ந்து பாருங்கள்" என்று ஏன் அறிக்கை விடவில்லை இவர்களில் யாராவது யோசிப்பார்களா?  தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல் தம் தோளிலேயே சுமந்து கொண்டு  'வீட்டுத் திருமணத்திற்கு' அழைக்கவில்லையே என்று ரசிகன் வருத்தப்படுகிற கொடுமைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.

இவர்கள் செய்வது மகா அபத்தங்களென்று இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கே தெரியும். 'இரவல் அடையாள'த்தைத் தாண்டி ஏதாவது ஆதாயம் கருதியோ, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அல்லது படத்தயாரிப்பாளர்களின் 'ஏற்பாடுகள்' மூலமே இவை நிகழ்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து விலகக்கூடிய சாமர்த்தியக்காரர்களை விட்டுவிடலாம். ஆனால் தன்னுடைய அன்றாட உழைப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை அறியாமை காரணமாக வீணடிப்பவர்கள் குறி்த்தும் அதிகாரத்திற்கெதிராக திரையில் வீராவேசமாக முழங்கும் தன் தலைவன், யதார்த்த வாழ்க்கையிலும் அதே போல் இருப்பான் என்கிற கனவுடன் அவனை அரியணையில் அமர்த்தத் துடிக்கும் அப்பாவிகளைக் குறித்துத்தான் நம்முடைய கவலை.

இந்த நிகழ்ச்சியை கூடவே பார்த்துக் கொண்டிருந்த நண்பர், "பார்த்தீர்களா, உலகமெங்கிலும் எப்படி வரவேற்பு?'' என்றார் நமட்டுச் சிரிப்புடன். அதுசரி. 'இந்தப் பேனா எல்லா உலக மொழிகளிலும் எழுதும்' என்கிற தந்திரமான விளம்பர வாசகங்களின் மூலம் தம் பொருளை விற்கும் வணிகர்களின் சாமர்த்தியத்திற்கு இணையானதுதான் இந்த ஊதிப் பெருக்கல்கள். 'ஆங்கிலத்தில் பேசினாலே அவன் அறிவாளி' எனக் கருதும் பொதுப்புத்தியுடன் கூடிய முட்டாள்கள் உலகெங்கிலும் பரவியிருப்பது போல், தமிழர்களும் உலகெங்கிலும் பரவியிருப்பதும் அவர்கள் இந்தப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்பதிலும் அப்படியில்லாத இடங்களிலும் நான்கைந்து பேரை கேமரா முன் அடைசலாக நிற்க வைத்து அவர்களின் கூக்குரல்களின் மூலம் ஏதோ அந்த நகரமே இந்தப்படத்தைக் காண்பதற்காக காத்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஊடகத்தின் போலித்தந்திரங்களைக் கண்டு மந்தைகள் வேண்டுமானாலும் மயங்கலாம். மனச்சாட்சியுள்ளவர்கள் அல்ல.

"உங்களை மாதிரி ஒரு சில பேர்கள் மூலையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருக்கலாம். படம் எப்படி ஓடுகிறது பார்த்தீர்களா?" என்றார் அதே நண்பர். உண்மைதான். சென்னை நகரின் திரையரங்குகளில் 80 சதவீத அரங்குகளில் இந்தத் திரைப்படம்தான்.

தமக்குள்ள பலத்தின் மூலம் சக போட்டியாளர்களின் காலை உடைத்து அறையில் பூட்டி வைத்து விட்டு தான் மாத்திரமே ஓட்டப் பந்தயத்தில் ஓடி 'வெற்றி வெற்றி' என ஒருவன் முழங்குவானாயின் அவனை இந்த உலகம் 'வீரன்' என மாலையிட்டு கொண்டாடுமா? அல்லது அவனின் அயோக்கியத் தனத்தைக் கண்டு காறித் துப்புமா? சென்னையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான் என அறிகிறேன். இந்த அசுரத்தனமான போட்டியிலிருந்து தாமாக விலகிப் போனவர்கள் சொற்பமிருக்க, அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி விலக்கப்பட்டவர்களும் அடித்து ஒடுக்கப்பட்டவர்களும் எத்தனை பேரோ?

ஓரளவிற்கு மனச்சாட்சியுடன் நியாயமாகப் பேசுபவர்கள் என கருதக்கூடிய பிரகாஷ்ராஜ், சேரன் என்று திரையுலகில் உள்ளவர்களே மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தை விரும்பியோ விரும்பாமலோ கொண்டாடுவதைக் காண சற்று வேதனையாகவே இருக்கிறது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக அழைக்கப்பட்ட மாநில முதல்வர் சொல்கிறார். "இந்த தயாரிப்பு நிறுவனத்தைப் பாராட்டுவதென்பது என்னையே பாராட்டிக் கொள்வதாகும்". ஆக..இந்த கூட்டுக் களவாணித்தனத்திற்கு தானும் ஓர் உடந்தை என வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்த அவரின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தற்காக இதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதையும் முதல்வர் தெரிவிக்கிறார். 'திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளரும்' என்ற அரிய யோசனையை செயல்படுத்தும் முதல்வர், அது தரமான உள்ளடக்கத்துடன், தமிழ் கலாசாரத்தை உள்ளடக்கிய படங்களுக்கு மாத்திரமே' என்பதையும் இணைத்திருந்தால் எத்தனை ஆரோக்கியமானதொன்றாக இருந்திருக்கும்? சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர் பயன்பெற வேண்டிய இந்தச் சலுகையையும் பலநூறு கோடிக் கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்களும் உள்ளே புகுந்து பெற்றுக் கொள்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. அரசியல் காரணங்களுக்காக என்றாலும் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசியை பில்கேட்ஸூம் வரிசையில் நின்று வாங்கினால் 'அவருக்கும் இந்தச் சலுகை உண்டென்றால் அதைப் பெறுவதில் என்ன தவறு' என்போமா? அல்லது தார்மீக ரீதியான உணர்வுடன் இந்தச் சலுகையை அவர் மறுத்தால் அவரைப் பாராட்டாமல் இருப்போமா?

'ஹாலிவுட் தரத்திற்கு நிகரானதாக அதையும் தாண்டி  பெரும் பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்பது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுத் திரைப்படப் பார்வையாளர்களின் உற்சாக கூக்குரலாகவும் இருக்கிறது. வெறும் நுட்பம்தான் சினிமாவா? என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறேன். வைரம் பதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள பேனாவில் எழுதியதாலேயே ஒரு சிறுகதையோ, புதினமோ பாராட்டப்பட வேண்டுமென்பது எத்தனை பெரிய நகைச்சுவையாக இருக்கும்? பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்ட ஹாலிவுட் படங்களின் நுட்பங்களை, மக்களைச் சுரண்டி குவிக்கப்பட்ட பணத்தின் மூலம் நாம் சமகாலத்தில் அதே ஹாலிவுட் நுட்பவியலாளர்களைக் கொண்டே ஹாலிவுட்டின் அபத்த நகல்களாக உருவாக்கி விட்டு நாமே அதை சிலாகித்துக் கொண்டால் எப்படி? மேலும் எந்த ஹாலிவுட் படத்தில் பல நூறு கண்ணாடி பாட்டில்களை அடுக்கி விட்டு 'இரண்டு பெருசுகள்' டூயட் பாடும் அபத்தங்களெல்லாம் நடக்கிறது? 'யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தியிராத இடங்களை இதற்காக தேடிச் சென்றார்களாம்'. இதெல்லாம் ஒரு பெருமையா? இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத சேரிகளும் மூத்திரச் சந்துகளும் சென்னையிலேயே நிறைய இருக்கின்றனவே? ஷங்கர் இதை அறிய மாட்டாரா?

'கக்கா' போகக்கூட அதிகாலையில் எழுந்திருக்காதவன், ஒரு திரைப்படத்தைக் காண அரங்கில் அதிகாலை நான்கு மணிக்கே அமர்ந்திருக்கிறான் என்றால் சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மூளைச்சலவை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது என்பதுதானே பொருள். இதில் படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஹாரிபாட்டர் நாவலை முதன் முதலாக வாங்க விடியற்காலையிலேயே புத்தகக் கடைகளின் முன்பு நின்ற முன்னோடிகள் உலகமெங்கிலும்தானே இருக்கின்றனர்? மக்களிடம் 'விழிப்புணர்வு' ஏற்படுத்த வேண்டுமென்பதின் பொருள் இப்படி அதிகாலையில் எழுப்பி ஓட வைப்பதுதான் போலிருக்கிறது.

நான் பொழுதுபோக்கு சினிமாவின் எதிரியல்ல. கலையின் அடிப்படையே பொழுதுபோக்குதல்தான். சினிமாவைக் கொண்டு பொழுதைப் போக்குவதல்ல. அரைத்த மாவையே அரைக்காமல், வணிகக் காரணங்களுக்காக நாயக பிம்பங்களையும் வன்முறையையும் ஆபாசங்களையும் ஊதிப் பெருக்காமல் சுயசிந்தனைகளுடன் ஆரோக்கியமான உள்ளடக்கங்களுடன் கூடிய பொழுதுபோக்கு சினிமாக்களை நான் ஆதரிக்கிறேன். சர்வதேச அரங்குகளில் விருதுகளை குவிக்கும் உயர்ந்த தரமுள்ள திரைப்படங்களைக் கூட நான் தமிழில் இப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாறான திசையில் தமிழ் சினிமா பயணிக்கத் துவங்கும் போது, அந்த நம்பிக்கை துளிர்க்கத்துவங்கும் போது அதில் பின்னடைவை ஏற்படுத்துகிற, கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிற, அலகு குத்திக் கொள்கிற மூடநம்பிக்கைகளுக்கு நம்மைத் தூண்டுகிற,  நம்மை அந்த ஆட்டு மந்தை நிலையிலேயே வைத்து அதன் மூலம் நம் பணத்தையும் சிந்தனையும் பிடுங்கிக் கொள்கிற வணிகத்தையே ஒட்டுமொத்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிற சூழலைத்தான் நான் வெறுக்கிறேன்.

ஹாலிவுட் நுட்பங்களைக் கொண்டு உள்ளூர் அபத்தங்களை நிரப்பி எடுப்பது நல்ல சினிமாவா? அல்லது நமது கலாசாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, சமூக அவலங்களை, நிகழ்வுகளை, நுண்ணுணர்வுகளை மீட்டெடுக்கக்கூடிய, ஆன்மாவை ஊடுருவிச் செல்லுமாறு  எடுப்பது நல்ல சினிமாவா? விவசாயிகளின் பிரச்சினைகளை ஊடகங்களின் நாய்ச்சண்டைகளை பார்வையாளர்களின் முன்வைப்பது நல்ல சினிமாவா? மனித இயந்திரம் உயிருள்ள பெண்ணைக் காதலிப்பதும் அதன் மூலமான நுட்ப பிரம்மாண்டங்களையும் அசட்டு நகைச்சுவைகளையும் கொண்டது நல்ல சினிமாவா? சினிமா ஆர்வலர்களின் முன்பு இதையெல்லாம் ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன்.

suresh kannan

84 comments:

சென்ஷி said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் :))))

ஆயில்யன் said...

//நமது கலாசாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, சமூக அவலங்களை, நிகழ்வுகளை, நுண்ணுணர்வுகளை மீட்டெடுக்கக்கூடிய, ஆன்மாவை ஊடுருவிச் செல்வது எடுப்பது நல்ல சினிமாவா?//

நல்லா இருக்கு !

காத்திருப்போம்!

Ashok D said...

அதே நேரத்தில... கலைஞர்ல மானாட மயிலாட போட்டார்கள் அத பார்த்துயிருக்கலாம். விஜய்லும் நம்ம வீட்டு கல்யானம் போட்டார்கள்.. அதெல்லாம் பார்த்துயிருக்கலாமே... அந்த போர் புரோக்கிராம் பார்த்துயிருக்கீங்க...

இது மொதொ பத்திக்கான எதிர்வினை... இனி படிச்சுட்டு வர்றேன்

Deepa said...

Brilliant post.
//ஒரு திரைப்படம், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பெரும்பான்மையை பித்துப்பிடிக்க வைத்து மனப்பிறழ்வு மந்தைகளாக ஆக்க முடியும் என்பதைக் காணும் போது அந்த ஊடகத்தின் அசுர பலத்தை மீண்டும் வியப்பதா அல்லது நாம் எவ்வளவு பலவீனமாவர்களாக இருக்கிறோம் என்பதற்காக வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. //

//இந்தக் கோணங்கித்தனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கிற ரஜினியின் இமயமலை சுற்றுலா 'ஆன்மீகம்' எத்தனை போலித்தனமானதோ, அதே அளவிற்கு இந்த நிகழ்வுகளும் அபத்தமானவை. //
very true.

பொன் மாலை பொழுது said...

நல்ல சிந்தனையின் தொகுப்புதான்.
தந்ததிற்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

ம்ஹும்.. நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் சரி.. எந்திரனை ஒரு மாசமாவது ஹவுஸ்புல்லா ஓட்ட வைச்சிட்டுத்தான் மறுவேலைன்னு சன் டிவி மும்முரத்துல இருக்கு..!

இனிமேல் வேடிக்கையா பார்ப்போம்.. சன் டிவியா? சுரேஷ்கண்ணனா..?

தணிகை செந்தில் said...

நண்பரே,
உங்கள் கருத்தை முழுதாய் வரவேற்கிறேன்.நானும் இதே நிகழ்ச்சியை சில நிமிடங்கள் பார்த்து நொந்து காமென்வெல்த் ஆரம்ப விழாவுக்கு தாவிவிட்டேன்.உங்களின் பதிவில் எனக்கு மிக பிடித்த வரிகள் கீழே::
//வைரம் பதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள பேனாவில் எழுதியதாலேயே ஒரு சிறுகதையோ, புதினமோ பாராட்டப்பட வேண்டுமென்பது எத்தனை பெரிய நகைச்சுவையாக இருக்கும்?//
'யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தியிராத இடங்களை இதற்காக தேடிச் சென்றார்களாம்'. இதெல்லாம் ஒரு பெருமையா? இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத சேரிகளும் மூத்திரச் சந்துகளும் சென்னையிலேயே நிறைய இருக்கின்றனவே? ஷங்கர் இதை அறிய மாட்டாரா?

// மனித இயந்திரம் உயிருள்ள பெண்ணைக் காதலிப்பதும் அதன் மூலமான நுட்ப பிரம்மாண்டங்களையும் அசட்டு நகைச்சுவைகளையும் கொண்டது நல்ல சினிமாவா?//நச்சுன்னு இருக்கு

எனது எந்திரன் என் பார்வையில்--பதிவு உங்கள் பார்வைக்கு..
http://thanigaisenthil.blogspot.com/

Ashok D said...

clean and neat, wonderfully narrated... இருந்தாலும் 1st half நல்லாவே இருந்தது..

//சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மூளைச்சலவை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது என்பதுதானே பொருள்//
இரண்டு தியேட்டர் டிக்கெட் கிடைத்தும் நான் தூங்கிட்டுதானே இருந்தேன்.. :))

haripotterக்கு wait பண்ணல
Charukku waiting till December

//கூட்டுக் களவாணித்தனத்திற்கு தானும் ஓர் உடந்தை என வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்த அவரின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்//
:))

//சிறப்பான உள்ளடக்கத்துடன், தமிழ் கலாசாரத்தை உள்ளடக்கிய படங்களுக்கு மாத்திரமே//
wat an Idea சேட்ஜி

Rithu`s Dad said...

ara நல்லா எழுதியிருக்கீங்க.. ஆனால் ஒன்று மற்றும் விட்டுவிட்டீர்களே..

இதுபோன்ற இலக்கனவாதிகளுக்கு.. எழுதுவதற்க்கும் மற்றவர்களுக்கு தங்கள் புலமையை காட்ட ஒரு வாய்ப்பும் அளித்திருகிறார்கள் என்று எழுதாமல் விட்டு விட்டீர்களே..

PRABHU RAJADURAI said...

"ம்ஹும்.. நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் சரி.. எந்திரனை ஒரு மாசமாவது ஹவுஸ்புல்லா ஓட்ட வைச்சிட்டுத்தான் மறுவேலைன்னு சன் டிவி மும்முரத்துல இருக்கு..!

இனிமேல் வேடிக்கையா பார்ப்போம்.. சன் டிவியா? சுரேஷ்கண்ணனா"

படம் ஓடினாத்தானே சுரேஷ் கண்ணன் சொல்ல வருவதற்கு வெற்றி?

'இந்தப் பேனா எல்லா உலக மொழிகளிலும் எழுதும்' ரசித்தேன். சொந்த சரக்கா? இரவலா?

Mohan said...

உங்களிடமிருந்து இன்னும் பதிவு வரவில்லேயே என்று காத்துக்கொண்டிருந்தேன்!

Anonymous said...

அன்புள்ள சுரேஷ்..
உங்களின் தார்மீக கோபம் புரிகிறது. நாம் இருவரும் இந்த விஷயத்தில் ஒரே அலை வரிசை உள்ளவர்கள் தான். ஒரு படத்தை எடுத்து விட்டு உலகையே பிடித்துவிட்டது போல் சன் குழுமம் அலட்டுவது நிச்சயம் 'பிச்சை எடுப்பதை' எடுப்பதை விடவும் கேவலமானது என்று தான் நானும் சொல்வேன். ஒரு சினிமாவாக பார்க்க வேண்டுமானால் , இந்த படத்தில் உழைத்த கலைஞர்களின் அசுர உழைப்பை பாராட்ட வேண்டும். என் பார்வையில் இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்பதை ஒரு சினிமா ரசிகனாக சொல்லி இருக்கிறேன். போன பதிவு வரை எந்திரன் கோஷ்டியை கிண்டல் செய்து விட்டு , இப்போ என்ன கரிசனம் என்று என் நண்பா கேட்டார். படம் பார்க்கும்போது என்ன உணர்வு ஏற்படுகிறதோ அதை அப்படியே எழுத வேண்டும் என்றே தீர்மானித்திருந்தேன். படம் தொழிநுட்ப ரீதியாக சிறப்பாகவே இருக்கிறது. எனவே அதை பதிவு செய்தேன்.
ஆனால் , கேவலமான முறையில் இதற்கு விளம்பரம் தேடும் சன் குழுமம் சினிமாவை சீரழிக்கும் என்றே நானும் சொல்வேன். உங்கள் கருத்தை பிரதிபலிக்கும் வடக்கு வாசல் ஆசிரியர் பென்னேஸ்வரனின் பதிவையும் பாருங்கள்.
http://www.kpenneswaran.com/index.php?option=com_content&view=article&id=111:2010-10-03-14-23-26&catid=51:2010-09-20-11-48-16&Itemid=76

Unknown said...

நல்ல பதிவு சுரேஷ்.முதலில் சினிமாவில் மக்களை மயக்கி, பிறகு டி.வி.யில் சினிமா காட்சிகளை போட்டு,சீரியல்களை காட்டி,இலவசங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் இவர்களிடம் இருந்து மக்களை,ரசிகர்களை காப்பா(மா)ற்ற முடியுமா?ப்ச்...என்னமோ ..போங்க...

chandru / RVC said...

well said!

Santhosh said...

ஏண்ணே எனக்கு ஒரு சந்தேகம்..பிடிக்கவில்லை என்றால் புறக்கணிக்க வேண்டியது தானே.. அந்த நேரத்தில் தானே காமென்வெல்த் போட்டிகளுக்கான துவக்க விழா நடந்தது.. ஏன் மற்ற சேனல்களில் நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது..ஏன் தொலைக்காட்சி பெட்டியை அணைக்கும் ஆப்ஷன் கூட இருக்கே..

இவை அனைத்தும் இருக்கும் பொழுது அதை ஏன் பார்ப்பானே நொந்து போவானே..

பிடிக்கிறவங்க பாக்குறதை விட அந்த நிக்ழவை பிடிக்காதவங்க முக்கியமா எலக்கியவாதிங்க தான் அதை உண்ணிப்பா பாக்குறாங்க..

சுரேந்தர், துபாய் said...

ட்ரெயிலர், பாடல்கள் வெளியீட்டு விழாக்களில், படத்தில் சம்பந்தப்படாதவர்கள் கூட படம் வெளியிடும் முன்பே, ஆஹோ, ஓஹோ, படம் சூப்பர் என்று ஜால்ரா போட்டனர்.

Anonymous said...

hey you just stop writing about super star....

Anonymous said...

There are many points in this article. But what is the main issue?

Do you really expect that Rajini should invite fans to his family funtions also? do you feel he should treat his family function same as a cinema function?

This matter was raised by some media. but you also think on the same line?

குரங்குபெடல் said...

சன் டி.வி யின் அந்த நிகழ்ச்சியில்
ரஜினியின் மகள் ஏதோ டாடி என்று சொல்ல
பதிலுக்கு அந்த தொகுப்பாளர் நிறைய டாடி என்கிறார்


என்ன பேசுகிறோம் எனறு கூட தெரியாமல்
சஞ்சரிக்கினறனர் அந்த மமதை கூட்டத்தினர். . .

தியேட்டரில் கூடுதல் பணத்தை அழுதுவிட்டு
சிடி விற்றவரை அடிக்கின்றனர் . . .ரஜினி ரசிகர்கள் . . .

ஒரே ஆறுதல் . . . உங்கள் பதிவு . . . நன்றி

priyamudanprabu said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் :))))

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ரைட் சுரேஷ் சார் ...,எல்லாத்தையும் படிச்சாச்சு ..,இது எந்திரன் விமர்சனமா ? அல்லது சன் பிக்சர்சின் மீது வைத்துள்ள விமர்சனமா ? இதை பார்த்தா என்னக்கு சினிமா விமர்சனம் மாதிரியே தெரியலை ...,

geeyar said...

தங்களது இந்த எந்திரனுக்கு எதிரான எதிர்ப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சுரேஷ், ஆனால் உங்களது நோக்கம் பற்றிய கவலையேதும் இன்றி, திமுக, கலைஞர், சன் போன்றவற்றிற்கு எதிரான குழு ஒன்று உங்கள் நிழலில் காய்கின்றது. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. ஆனால் உங்கள் நோக்கம் எதிவினையாவதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

Rajan said...

I liked your article. But why you spend almost two hours by watching the program yesterday. I have not seen that program not only that but also all other program relate to endhiran by SUN TV.

rajkumar said...

சரியான காமெடியன் நீங்க.உங்களது பிரச்சனை சன் டிவியா?சங்கரா? ரஜினியா? என்பதை தெளிவு படுத்தி கொள்ளுங்கள். இது எல்லாமே என்பதெல்லாம் வேஸ்ட்.

சினிமா முதலில் பொழுது போக்கு சாதனம். அடிப்படை தேவையல்ல. அடிபடை தேவைகளான உணவு, வீடு , இருப்பிடம் ஆகியவற்றிலேயே அராஜகம் பண்ணும் பல மனிதர்கள், நிறுவனங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களை பற்றி ஏதாவது எதிர்ப்பு குரம் எழுப்பியுள்ளீர்களா? மாலன் வழக்குப் போடுவேன் என்றவுடன் எவ்வளவு அதிர்ந்தீர்கள் நீங்கள்?

இன்று பர்மா பஜாரில் நாலு டிவிடிகளை பார்த்து விமர்ச்னம் எழுதி, ஜெயமோகன் பாராட்டி விட்டார் என்பதனால் தமிழ் சினிமாவை பாதுகாக்க வந்த அறிவு ஜீவியாக உங்களை கற்பனை செய்து கொண்டால் உங்களை பார்த்து சிரிப்பதை காட்டிலும் வேறு வழியில்லை.

உங்களது அந்நியன் மற்றும் தசாவதரம் படத்தின் விமர்சனங்களை படித்துப் பாருங்கள். அப்படங்களுடன் உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் எந்திரனின் கதையுடனும் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது.

இதே படத்தில் கமல் நடித்திருந்தால் உங்களுக்கு பிரச்ச்னை இல்லை. சினிமாவின் இன்றைய ஆதார பிரச்சனை கள்ளக் குறுந்தகடு. ஆனால் அதைப் பற்றி நீங்கள் உண்மையான சினிமா ஆர்வலராய் இருந்தால் கவலை பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் பார்க்கும் உலகப் ப்டங்கள் எல்லாம் பர்மா பஜார் சப்ளைதானே. அதைப்பற்றி நீங்கள் எப்படி கவலைப்ப்ட முடியும்.

ஆதார பிரச்சனைகளை விடுத்து ரஜினி, சன் டிவி என்றெல்லாம் ஆதங்கப்படாதிர்கள். தமிழ் சினிமா ரசிகர்களே சுயநலக்காரர்கள்தான். நல்ல படங்களை கள்ளக் குறுந்தகடுகளில் பார்த்து மயங்கும் கயவர்கள்.

மக்களிடம் இருக்கும் இந்த கயமையை மாற்ற குரல் கொடுங்கள்.அதற்கு முதலில் உலக படங்களை பர்மா பஜாரில் வாங்கி பார்க்காதீர்கள்.

இதை கண்டிப்பாக பிரசுரிக்க மாட்டீர்கள். என்னுடைய நோக்கம் உங்களூக்கு தெரிவிப்பதே தவிர, உங்களைப் போல ரஜினியை திட்டி பேர் வாங்கிக் கொள்ளும் ஆர்வத்தாலல்ல.

தோமா said...

இந்த செக்குமாடு சிந்தனை என்றைக்கு மாறுமோ தெரியல, யாரைபார்த்தாலும் நீ பார்திட்டியானு ஒரு கேள்வி, நாறாசமா திட்ட தான் தோணுது. :((((

நல்ல பதிவு சு.க.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மந்தைகள் வேண்டுமானாலும் மயங்கலாம். மனச்சாட்சியுள்ளவர்கள் அல்ல.

திரையில் வீராவேசமாக முழங்கும் தன் தலைவன், யதார்த்த வாழ்க்கையிலும் அதே போல் இருப்பான் என்கிற கனவுடன் அவனை அரியணையில் அமர்த்தத் துடிக்கும் அப்பாவிகளைக் குறித்துத்தான் நம்முடைய கவலை.



'கக்கா' போகக்கூட அதிகாலையில் எழுந்திருக்காதவன், ஒரு திரைப்படத்தைக் காண அரங்கில் அதிகாலை நான்கு மணிக்கே அமர்ந்திருக்கிறான் என்றால் சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மூளைச்சலவை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது என்பதுதானே பொருள்.

---------------


நிஜமான வரிகள்..

manjoorraja said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது.

Unknown said...

நல்ல பதிவு சுரேஷ் கண்ணன்.

Anonymous said...

Suresh,

அருமையான பதிவு.

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. உங்கள் ஆதங்கம் நியாயமானது. நல்ல கேள்விகள் ஆனால் பதில்கள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

ரஜினி பணிஓய்வு பெற்றாலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்காக ரசிகர்கள் தங்கள் கடமையை (!) தவறாமல் செய்வார்கள்.

இந்த ஆட்டம் இன்னும் முடியவில்லை...

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட பதிவை வாசித்த நண்பர்களுக்கு நன்றி.

அது மேலதிக சர்ச்சைகளை நோக்கி நகர்கிறது என்பதால் நான் பொதுவாக பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பதிலலை.
ஆனால் சில கேள்விகள் வேறு வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப வீசப்படுவதால் சிலவற்றை தெளிவாக்கி விடலாம். அதற்கு முன்னால்:

//இந்தப் பேனா எல்லா உலக மொழிகளிலும் எழுதும்' ரசித்தேன். சொந்த சரக்கா? இரவலா?//

அன்பான பிரபுராஜதுரை: இது ரொம்பவும் பழைய ஜோக்காயிற்றே. வக்கீல் சார் அறியாததா? :)

//http://www.kpenneswaran.com/index.php?option=com//

அன்பான சந்திரமோகன்: பென்னேஸ்வரனின் சுட்டிக்கு நன்றி.

//ஏன் தொலைக்காட்சி பெட்டியை அணைக்கும் ஆப்ஷன் கூட இருக்கே..//

அன்பான சந்தோஷ்:

அதைவிடவும் இன்னொன்றும் செய்யலாம். கண்ணை மூடிக் கொண்டும் அமர்ந்திருக்கலாம். பூனை மாதிரி பூலோகமே இருண்டு விட்டது என நினைத்துக் கொள்ளலாம். அல்லது எறும்புதின்னி போல் தலையை மணலில் புதைத்துக் கொள்ளலாம். வெளியில் நிகழ்வது எதுவும் தெரியாது.

அப்படியெல்லாம் எப்படி இருக்க முடியும் நண்பரே? நமக்கு அருகிலேயே நடக்கும் அவலங்களை கண்டும் காணாமலும் போய்த்தானே இந்த நிலையில் இருக்கிறோம்.

அன்பான பனங்காட்டு நரி: இது எந்திரன் திரைப்படம் குறித்தான விமர்சனமிலலை. நான் இப்போதைக்கு அதைப் பார்ப்பதாயில்லை. அப்படியே இருந்தாலும் திரையரங்கில் பார்ப்பதாயில்லை. :)

Karthik said...

//நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது//
நீங்களும் இந்த வழியை தான் கடைபிடிக்கிறீர்கள்!! எந்திரனை புறக்கணிப்போம் என்று எழுதிய நீங்கள் மறுபடியும் எந்திரன் பற்றியே எழுதி இருக்குறீர்கள். You just can't stop writing about Enthiran, can you? when you could've easily changed your tv channel, all you did was watch the program in sun tv for more than an hour and write this stupid article for another hour! I can tell one thing for sure.. even though you keep projecting yourself as a person with utmost social care, you will watch Enthiran shortly (maybe you watched it already). Also you will not have the guts to post the review. ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க தெரியாத நீங்கள் உலக சினிமா பற்றி பேசவே அருகதை அற்றவர். மக்களை திருத்த தான் சினிமா என்றால், எம்.ஜி.ஆர் சொல்லாத அறிவுரையா? அதையெல்லாம் கேட்டு மக்கள் திருந்தி விட்டார்களா?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை - உங்களுக்கு blog எழுத ஆசை, அதில் ரஜினியை திட்ட ஆசை. மற்றவர்களுக்கு ரஜினி படம் பார்க்க ஆசை, புது படம் வந்தால் அதை "அவர்கள் விருப்பம் போல்" கொண்டாட ஆசை, மற்றும் சிலருக்கு அதை படம் பிடித்து எல்லோருக்கும் காட்ட ஆசை, இன்னும் சிலருக்கு அதை பார்த்துவிட்டு அதை தங்கள் ப்ளாக்-ல் திட்டி எழுத ஆசை (அட மறுபடியும் முதல்ல சொன்னதே வந்துடுச்சே!) நீங்களும் கக்கா போக காலை மூன்று மணிக்கு எழுந்திருக்க மாட்டீர்கள். ஆனால் காலை மூன்று மணி ரயிலில் செல்ல வேண்டும் என்றால் எழுந்து கொள்வீர்கள் தானே? உங்களுக்கு ரயில் முக்கியம், சிலருக்கு (ரஜினி) படம் பார்ப்பது முக்கியம். முன்பே சொன்னது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, ஒவ்வொரு விஷயம் முக்கியம். தீவிரவாதிகளுக்கு மற்றவர்களை சுட ஆசை, அவர்களை விட்டு விடலாமா என்று நீங்கள் கேட்டால், எதையும் வித்தியாசமாய் செய்ய நினைக்கும் ஒருவனிடம், இடது கையால் சாப்பிடு, வலது கையால் கழுவு என்று சொல்லுவதை போல் ஆகும். ஒரு திரைப்படத்தை கூட சுதந்திரமாக கொண்டாட கூடாது என்கிற உங்கள் வாதம் அர்த்தமற்றதாக உள்ளது.
எந்திரனை பாராட்டி எழுத கூடாது, அதே சமயம் எழுதாமல் விட்டு விடவும் கூடாது (அப்புறம் எப்படி நிறைய பின்னூட்டங்கள் வரும்) என்கிற உங்கள் தவிப்பு தான் இந்த பதிவும், இதற்க்கு முன்பு போட்ட இரண்டு பதிவுகளும். இதற்க்காக நீங்கள் ஒப்பாரி வைக்க செலவிட்ட நேரத்தை வேறு எதிலாவது செய்திருக்கலாம் atleast எந்திரன் திரைப்படத்திற்கு உங்கள் குடும்பத்தை அழைத்து சென்றிருக்கலாம் - உங்கள் குழந்தை நிச்சயம் சந்தோஷ பட்டிருப்பார்கள்! எந்திரனை புறக்கணிப்போம் என்று எழுதிய நீங்கள், உங்கள் வாரிசு கேட்டால் கூட படத்திற்கு கூட்டி கொண்டு போகமாட்டீர்கள் என்று சொல்லுவீர்களா? உங்களின் மகள் (மகன்?) சந்தோஷத்திற்காக நீங்கள் கண்டிப்பாக இந்த தியாகத்தை(?!) செய்வீர்கள். அது போல் தனக்கு பிடித்த நடிகரின் படம் பார்க்க சிலர் தங்கள் தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளக்கூடாதா? இதற்க்கு மேல் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.

Aranga said...

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கிறது சுரேஷ்

வெற்றி said...

Mr.SK,

நீங்கள் பல் விளக்க ஆலும் வேலும் பயன்படுத்தினால்,உறங்க கோரைப் பாயை பயன்படுத்தினால்,கேழ்வரகும், சாமை மட்டும் உங்கள் உணவானால், நல்ல நிலத்தடி நீரைத்தவிர வேறெதுவும் குடிக்காதவராக நீங்கள் இருந்தால், உங்கள் உடை என்றுமே சாதாரண பருத்தி ஆடை மட்டுமே என்றிருந்தால்,

நீங்கள் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் தகுதியானவர் நீங்கள்.

இல்லையென்றால் நீங்களும் வெத்து புரட்சி செய்யும் வீரரே.

நீங்கள் வெத்துவேட்டா? இல்ல வெடிக்கும்வேட்டா?

பிச்சைப்பாத்திரம் said...

//இதை கண்டிப்பாக பிரசுரிக்க மாட்டீர்கள். //

அன்பான ராஜ்குமார்:

உங்கள் பின்னூட்டம்: இதை எப்படி பிரசுரிக்க மாட்டேன் என்று உங்களால் எண்ண முடிந்தது என்பதே எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. என்னை ஆபாசமாய் திட்டி வரும் பின்னூட்டங்களைக் கூட பிரசுரிக்கும் நான் (மற்ற பதிவர்களை மிதமாக திட்டியிருந்தால் கூட நீக்கி விடுவேன்) மிக நாகரிமாக மறுமொழியளித்திருக்கும் உங்கள் பின்னூட்டத்தை எப்படி நீக்குவேன்?

//சரியான காமெடியன் நீங்க.உங்களது பிரச்சனை சன் டிவியா?சங்கரா? ரஜினியா? என்பதை தெளிவு படுத்தி கொள்ளுங்கள். //

நிழலில் ஹீரோவாகவும் நிஜத்தில் காமெடியனாகவும் இரட்டைவேடமிடுவதை விட காமெடியனாகவே இருப்பது சிறந்ததுதானே நண்பரே? இந்தப்பதிவு சினிமாத்துறையில் கொள்ளையடிக்கும், அதற்குத் துணை போகும் அனைவரையும் பற்றித்தான். ரஜினியைப் பற்றி திட்டியதுதான் உங்களுக்கு பிரதானமாய்த் தெரிந்திருக்கும் எனும் போது மற்றவைகளை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?

//அடிபடை தேவைகளான உணவு, வீடு , இருப்பிடம் ஆகியவற்றிலேயே அராஜகம் பண்ணும் பல மனிதர்கள், நிறுவனங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களை பற்றி ஏதாவது எதிர்ப்பு குரம் எழுப்பியுள்ளீர்களா?
என்னைப் பாதிக்கும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் தனிமனித அனுபவங்களையும் பதிவு செய்து கொண்டுதானிருக்கிறேன். சமயங்களில் நான் எழுதுவதை விடவும் சிறந்த பதிவுகளைக் காணும் போது எழுதாமலும் போவதுண்டு. சினிமா மீது அதிக ஆர்வமுள்ளவன் என்கிற வகையில் அது குறித்த பதிவுகள் அதிகமிருக்கலாம். நீங்கள் கூட ரஜினியை விமர்சிக்கும் பதிவுகளில்தான் டாண் என்று ஆஜராகி விடுகிறீர்கள். மற்ற பதிவுகளில் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள் என்று நானும் கேட்கலாம்தானே?


மாலன் வழக்குப் போடுவேன் என்றவுடன் எவ்வளவு அதிர்ந்தீர்கள் நீங்கள்? //

சமீபத்திய முந்தைய பதிவொன்றிலேயே தெளிவுப்படுத்தி விட்டேன், நான் ஒரு நடுத்தரவர்க்க்க கோழை என்று. இப்பொது கூட இந்தப்பதிவுகளை வாசித்து விட்டு அதிகார மையத்திலிருந்து ஒரு மிரட்டல் குரல் வந்ததென்றால் அப்படியே பொத்திக் கொண்டு போக வேண்டியதுதான். நான் சினிமா ஹீரோ அல்ல சார், பத்து பேர் அடிக்க வந்தால் சண்டையிடுவதற்கு. சாதாரண நடுத்தர வர்க்கத்தினன். ஏதோ ஜனநாயக அமைப்பு தருகிற கொஞ்சம் நஞ்சம் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எனக்குக் கிடைத்த இந்த இணைய வசதியைக் கொண்டு எழுதியிருக்கிறேன். நான் எழுதுவதில் எந்தளவு உண்மையிருக்கிறது என்பதை மாத்திரம் மனச்சாட்சியோடு சிந்தித்திப் பார்த்தாலே போதும்.

பிச்சைப்பாத்திரம் said...

//இன்று பர்மா பஜாரில் நாலு டிவிடிகளை பார்த்து விமர்ச்னம் எழுதி, ஜெயமோகன் பாராட்டி விட்டார் என்பதனால் தமிழ் சினிமாவை பாதுகாக்க வந்த அறிவு ஜீவியாக உங்களை கற்பனை செய்து கொண்டால் உங்களை பார்த்து சிரிப்பதை காட்டிலும் வேறு வழியில்லை//

நான் என்னைப் பற்றி வைத்திருப்பதைக் காட்டிலும் அதிக மதிப்பீட்டை நீங்கள் என் மீது வைத்திருப்பதற்கு நன்றி. ஜெயமோகன் பாராட்டியதற்கு முன்னாலும் இப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதும் அப்படியே. அதிலும் ஜெயமோகன் பெருந்தன்மையாக என் வலைப்பதிவை குறிப்பிட்டு எழுதியதற்காக மகிழ்ந்து ஆடவில்லை.

..மகிழ்ச்சியோடு சங்கடமாகவும் இருக்கிறது. அதற்கான தகுதியுண்டோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை நோக்கி பயணிக்கும் முயற்சியையாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலை உங்களின் சுட்டிக் காட்டல் நிகழ்த்தியிருக்கிறது. இணையத்தில் (தமிழில்) உலக சினிமா குறித்தான பதிவுகள் எழுதபபடும் விதம் குறித்து நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் பெரும்பாலும் எனக்கும் பொருந்துபவையே எனும் குற்றவுணர்வோடு இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன். மீண்டும் நன்றி...

என்றுதான் அவர் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

தமிழ்சினிமாவை பாதுகாக்க நான் யார்? கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளனா? அல்லது சினிமாவில் சம்பாதித்தையெலலாம் ஜாக்கிரதையாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதைப் பாதுகாப்பதற்காக அதிகாரத்திற்கு வால்பிடிக்கும் நடிகனா? சாதாரண பார்வையாளன். நான் புழங்கும் மொழியில் நல்ல சினிமா இல்லையே என்கிற ஆதங்கமும் தமிழ்சினிமாவின் மசாலாத்தனங்கள் ஏற்படுத்துகிற எரிச்சலுமே என்னை எழுத வைக்கின்றன.

ஃஃஉங்களது அந்நியன் மற்றும் தசாவதரம் படத்தின் விமர்சனங்களை படித்துப் பாருங்கள். அப்படங்களுடன் உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் எந்திரனின் கதையுடனும் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது.//

எந்தத் திரைப்படமாயிருந்தாலும் அப்போதைக்கு தோன்றின எண்ணங்களை மிக யோக்கியமாய் பதிவு செய்திருக்கிற மனத்திருப்தி எனக்குண்டு. இந்த நடிகருக்கு இந்த மாதிரி எழுத வேண்டும் என்கிற முன்திட்டம் எதுவும் என்னிடமில்லை. இதை என் மனச்சாட்சியிடம் நான் நிரூபித்துக் கொண்டால் போதும் என நம்புகிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

//இதே படத்தில் கமல் நடித்திருந்தால் உங்களுக்கு பிரச்ச்னை இல்லை. //

அய்யோ! இப்படி எல்லாவற்றையும் ரஜனி-கமல் மனோபாவத்திலிருந்து வெளிவராமலேயே அதிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும் விவாதங்களைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. இந்த விடலைப்பருவத்திலிருந்து வெளியே வாருங்கள் நண்பரே. தசாவதாரம் குறித்தும் 'இதுவா உலக சினிமா' என்றும் கமல்ஹாசனின் வித்தியாச வேடம் குறித்தான வியாதி பற்றியும் எழுதியிருக்கிறேன். நீங்களே திறந்த மனத்துடன் மறுபடியும் படித்துப் பாருங்கள்.

//ஆனால் நீங்கள் பார்க்கும் உலகப் ப்டங்கள் எல்லாம் பர்மா பஜார் சப்ளைதானே. //

இது குறித்து ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில் எழுதியாகிவி்ட்டது. ஆம். நான் உலக சினிமாக்களை பர்மா பஜார் குறுந்தகடுகளிலும் இணையததிலும் தரவிறக்கியும்தான் பார்க்கிறேன். இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். இதுவொரு அயோக்கியத்தனம்தான். வேண்டுமென்றால் 'சுரேஷ் கண்ணன் ஓர் அயோக்கியன்' என்றெழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். இப்படி நான் ஒப்புக் கொள்வதைப் போல் ரஜினி ரசிகர்களின் காவடி தூக்குதல்கள் முட்டாள்தனம்தான் என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள நீங்கள் தயாரா நண்பரே?

நிற்க. இருந்தாலும் சில விஷயங்களை மீண்டும் தெளிவுபடுத்தி விடுகிறேன். தினமும் ஒரு சினிமாவாவது பார்த்துவிடும் என்னால் அங்கீகரிக்கப்பட்ட உலக சினிமா குறுந்தகடுகளை வாங்குவதற்கான பொருளாதார வசதி கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன் நீண்ட வருடங்களாக பார்க்க நினைத்துக் கொண்டிருந்த சத்யஜித்ரே படமொன்றை விலையைப் பார்த்து அதிர்ந்து திருடி விடலாமா என்று கூட நினைத்தேன். துணிச்சல் இல்லாததால் அதைச் செய்யவில்லை. இதுதான் என் நிலை. சில திரைப்படங்களைக் காசுகொடுத்தால் கூட இங்கே பெற இயலாது. இணையம்தான் ஒரே வழி. வாழ்க இதை அப்லோட் செய்த புண்ணியவான்கள்.

அதே போல் நான் சிறந்த படம் என்று கருதும் சிறுமுதலீட்டுத் தமிழ்ப்படங்களை திரையரங்கிற்குச் சென்றுதான் பார்க்கிறேன். அங்காடி தெரு,களவாணி போன்றவைகள் அப்படி பார்த்ததுதான். என் பதிவை வாசிப்பவர்களுக்கும் இதையே பரிந்துரை செய்கிறேன். ஆனால் பல கோடி செலவு முதலீட்டில் இன்னும் மேலதிக கோடிகளை அள்ள நினைக்கும் 'எந்திரன்' போன்ற படங்களை நிச்சயம் கள்ள குறுந்தகட்டில் எவ்வித மனச்சாட்சி உறுத்தலுமின்றி பார்க்க நினைப்பேன். கொள்ளையடிக்கும் வணிக சக்திகளுக்கு என் பதில் இதுவே. இதற்காக வேண்டுமானாலும் என்னை நீங்கள் தாராளமாக விமர்சித்துக் கொள்ளலாம்.

இவை உங்களை முன்னிட்டு பொதுவான மற்ற பார்வையாளர்களுக்கும் ரஜினி அபிமானிகளுக்கும் நான் சொல்ல விரும்பினது. அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த உங்களுக்கு நன்றி.

Nondhalala said...

Producers will do everything in their power to promote the movie they produced, and the reasons are obvious.

Enthiran producers have more power than you like them to have. Remember 'Aatookara alamelu' goat made rounds to theaters to promote the film. And then there was comedy movie from AVM where an old car was shown around the state again to rack in more money. Your problem seems something else, all these slander and hyper reactions are directed towards Sun, Rajini and not against the film.

The funny thing is you call yourself neutral when you don't have the guts to accept the mistake you made in the past three posts.

It is time you do some soul searching and come out clean.

மகுடேசுவரன் said...

அன்பிற்கினிய சுரேஷ் கண்ணன்,

உங்கள் வார்த்தைகளிலுள்ள சத்திய ஆவேசத்தை நான் மதிக்கிறேன். அவற்றின் காத்திரத்தை நான் மனமுவந்து பாராட்டுகிறேன் !

rajkumar said...

காமெடியை தொடர்ந்து செய்வது என்று முடிவு செய்துவிட்ட உங்களை வரவேற்கிறேன்.ரஜினி ரசிகர்களின் காவடியை, கட் அவுட்டிற்கு பாலூற்றுவதை நான் வரவேற்கவில்லை- இதை பகிரங்கமாக தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு நன்றி.

சினிமா மேல் அக்கறை கொண்டவன் என்ற பிம்பத்தை நிறுவும் சாக்கில் ரஜினி மேல் தனி மனித தாக்குதல் நடத்துவதையும், அதையும் மீறி தமிழ் சினிமா வரலாற்றை உங்கள் சௌகரியத்திற்கு திரிப்பதையும் தாங்கிக் கொள்ள முடியாது.

நீங்கள் முந்தைய பதிவுகளில் கூறியிருக்கும் தமிழ் சினிமாவின் பொற்காலமாகிய 70களின் இறுதியிலும், 80 களின் துவக்கத்திலும் ரஜினி என்ற கமர்சியல் நடிகர் நடித்துக் கொண்டுதானிருந்தார். ஏன் சூப்பர் ஸ்டாரக உருவானதே இக்காலக் கட்டத்தில்தான்.

சினிமாவில் ஜானர் என்ற அம்சத்தை மறந்து விட்டு நீங்கள் விவாதிக்கிறீர்கள். ரஜினியின் படங்கள் ஒரே குறிப்பிட்ட மசாலாவில் முடங்கியது அதை மக்கள் தொடர்ந்து ரசித்ததால்தான். இதற்க்காக ரஜினி தொடர்ந்து மசாலா படங்களை தந்ததால்தான் மக்கள் ரசனை மழுங்கி விட்டது என்று கூறினால் அது பொருத்தமல்ல.

மக்களின் ரசனை வாழும் சமூக, பொருளாதார நிலையை சார்ந்த அம்சம். தன்னுடைய சூழ்நிலை சிக்கல்களிலிருந்து சில மணிநேரங்கள் தப்பிக்க உதவும் கேளிக்கை பொருளாக சினிமா இந்திய சமூகத்தில் இருந்தது/இருக்கிறது. இத்தகைய சூழலில் சினிமா மன மகிழவை தருகிறதா என்பதுதான் பிரதானப் படுகிறதே தவிர, லாஜிக்கை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. இதனால்தாம் மசாலாப் படங்கள் வெற்றி பெறுகின்றன. இதற்காக அதீத உணர்ச்சி வசப்பட வேண்டிய தேவையில்லை.பாஸ்ட் புட்டும் ,ஹெல்த் புட்டும் ஒன்றாக விற்கப்படும் கடைகள்தான் நம் சமூகம். மக்களின் சாய்சை தவறென்றோ/சரியென்றோ விமர்சிக்க முடியாது.

ஆதர்சன ஹீரோக்களின் மேலான தனி மனித துதி பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூடத்தான் இருக்கிறது. தமிழகத்தில் இதை வளர்த்ததே திராவிட கட்சிகள்தான். அரசியல் கட்சிகள் காசு கொடுத்து செய்ய வைக்கும் இந்த காரியங்கள், ரஜினிக்கு இலவசமாக நடக்கின்றன.இதற்காக ரஜினியை குறை சொல்வது முடியாது.
அதே சமயத்தில் இந்த செயல்களை காட்டி படத்தை பிரமோட் செய்யும் சன் டிவியின் செயல்கள் கண்டிக்கப் பட வேண்டியது.

மீண்டும் சொல்கிறேன் - சினிமாத் துறையின் ஆதாரப் பிரச்சனைகள் என்ன என்பதை நேர்மையாக அலசுங்கள். அதற்கான விடை ரஜினி என்ற மூன்றெழுத்து என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று முயன்றால் அதில் படுதோல்வி அடைவீர்கள்.

கள்ளக் குறுந்தகடில் எந்தப்படமும் பார்க்கக் கூடாது என்ற மன நிலை ஏற்பட்டால்தான் சினிமா பிழைக்கும். அதை விடுத்து , எந்திரனை பார்ப்பேன், மற்ற் படங்களை பார்க்க மாட்டேன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால், மற்றவர்களும் நீங்கள் “நல்ல படங்கள்” என்று வரையறுக்கும் படங்களை கள்ளக் குறுந்தகடில் பார்க்கும் தார்மீக உரிமையை உருவாக்கி விடுகிறீர்கள்.

சினிமாவின் ஆதாரப் பிரச்சனைகளை புறக்கணித்து பதிவுகள் எழுதும் வரை உங்களது பாசாங்கு செயல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுதானிருப்பேன்.

Vee said...

//ஊடகத்தின் போலித்தந்திரங்களைக் கண்டு மந்தைகள் வேண்டுமானாலும் மயங்கலாம். மனச்சாட்சியுள்ளவர்கள் அல்ல.//

என‌க்கு ம‌ன‌சாட்சி இருக்குங்க‌.

Vee said...

//தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தற்காக இதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதையும் முதல்வர் தெரிவிக்கிறார். //

என்னே ஒரு க‌ய‌வாளித்த‌ன‌ம்?

Vee said...

//உங்கள் வார்த்தைகளிலுள்ள சத்திய ஆவேசத்தை நான் மதிக்கிறேன். அவற்றின் காத்திரத்தை நான் மனமுவந்து பாராட்டுகிறேன் !//

வ‌ழி மொழிகிறேன்.

Vee said...

Ticket cost for Avatar with 237 million $ is 11$ (IMAX 3D) whereas it is 20$ - 30$ for this one. Why this looting? People are willing to see this movie paying 300- 1000 Rs in Tamilnadu. This is utter stupidity. Why can't they watch after 15-30 days? What are they going to loose if they did so?

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பார்க்காதவங்க பார்த்திருங்க. அப்பதான் திட்ட வசதியா இருக்கும்,

http://www.123tamiltv.com/endhiran-2010.html

charupenline said...

onnum puriyalayeee ..pudikathatha en parpaaneen .. neenga matum thaan ulagathula arivaliya ..

மணிஜி said...

கோபியின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்...

மற்றபடி...

எத்தனை பேர் ஓடினாங்க?
ரெண்டு

நன்றி...எம்.டி.ஆர் குளொப்ஜாமூன் மிக்ஸ்

Ibrahim A , said...

உலகில் எந்த ஒரு நாட்டிலும் உலகத் திரைபடங்களாகவோ அல்லது ஆஸ்காருக்கு அனுப்ப கூடிய படங்களாகவோ எடுத்து தள்ளுவதில்லை.மசாலாத்தனமான படங்கள் எல்லா நாட்டிலும் வெளி வருவதுண்டு.அப்படி ஒரு படமாக என் நீங்கள் நினைக்க கூடாது.உங்களுக்கு யார் மீது தான் கோபம். மூடச்சமூகத்தின் மீதா,பண முதலைகள் மீதா,என்ன தான் கூற விழைகிறீர்கள்?

நிறைய சொல்ல தோன்றுகிறது சரி விடுங்கள்.
உங்கள் கூற்றுகளில் சிலவற்றை தவிர நிறைய உடன்பாடு இல்லை.
ஆனாலும் உங்கள் சொல்லாடலை ரசித்தேன்.

Thamira said...

இந்தப் பதிவின் சில கருத்துகளை ஏற்கலாம்..

ஆனால்,
//ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள். எப்படியும் ஒருவாரத்தில் இதன் கள்ள குறுந்தகடு வெளிவரப்போகிறது. அதை வாங்கி வீட்டிலேயே செளகரியமாக அமர்ந்து பாருங்கள்" என்று ஏன் அறிக்கை விடவில்லை இவர்களில் யாராவது யோசிப்பார்களா? //

இது விஷம். விஷமம்.

இதற்கு நண்பர் ராஜ்குமார் அழகாக பதில் சொல்லிவிட்டார்.
//கள்ளக் குறுந்தகடில் எந்தப்படமும் பார்க்கக் கூடாது என்ற மன நிலை ஏற்பட்டால்தான் சினிமா பிழைக்கும். அதை விடுத்து , எந்திரனை பார்ப்பேன், மற்ற் படங்களை பார்க்க மாட்டேன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால், மற்றவர்களும் நீங்கள் “நல்ல படங்கள்” என்று வரையறுக்கும் படங்களை கள்ளக் குறுந்தகடில் பார்க்கும் தார்மீக உரிமையை உருவாக்கி விடுகிறீர்கள்.//

rajkumar said...

என் பின்னூட்டத்தை பிரசுரிக்க மறுப்பதற்கும், எனக்கு பதில் அளிக்க மறுப்பதற்கும் பெரிய வேறுபாடில்லை. முக்கியமான கேள்விகளை விடலை பருவ மனப்பான்மையுடன் கேட்டிருக்கிறேன் என்று புறக்கணிப்பதிலிருந்தே உங்கள் நேர்மை தெரிகிறது.

சத்யஜித்ரே படத்திற்காக குறுந்தகடை திருடத் தூண்டிய மனோபாவ்த்திற்கும், ரஜினி படத்திற்கு நான்கு மணிக்கு செல்லும் மனோபாவத்திற்கும் பெரிதாக வித்தியாசமில்லை.

அபிமானத்தின் அதீத வெளிப்பாடுகள்தான் இரண்டுமே.

என் பதில் வழக்காமானதல்ல. உங்கள் ஜகாதான் வழக்கமானது.

ஒரு ரஜினி ரசிகனாய் பதிலளிக்க வேண்டுமென்றால் பல பதிவுகளுக்கு போயிருக்க வேண்டும். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பதால்தான் உங்களுக்கு பதில் போடுகிறேன்.

என் பதிலை புறக்கணிப்பதால் யாருக்கும் நட்டமில்லை.

தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை.

பிச்சைப்பாத்திரம் said...

ராஜ்குமாருக்கு முன்னர் அளித்திருந்த பின்னூட்டம், சில திருத்தங்களுடன்:

அன்பான ராஜ்குமார்,
முன்னரே விளக்கியபடி சர்ச்சைகளின் காரணமாக பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காத என்னுடைய இயல்பிற்கு மாறாக நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கெல்லாம் , நேர்மையான விளக்கங்களை முன்வைத்தேன். ஆனால் நீங்கள் வசதியாக அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு 'ரஜினி ரசிகன்' என்கிற விடலை மனோபாவத்திலிருந்தும் அக்கம் பக்கம் பார்க்க விரும்பாத கடிவாள நிலையிலிருந்தும் 'வழக்கமான' பதிலை அளித்திருக்கிறீர்கள். நல்லது.

தமிழ் வணிக சினிமாவின் உச்சமான பிம்பம் ரஜினி என்பதனாலேயே ரஜினி குறித்தும் அதிகமும் மற்ற நடிகர்களை குறித்தும் விமர்சிக்கிறேன் என்கிற முந்தைய பதிவிலுள்ள விளக்கத்திற்குப் பின்னரும் ரஜினி ரசிகரான உங்களால் அதை திறந்த மனத்துடன் ஏற்க முடியவில்லை.
இனி உங்கள் பின்னூட்டங்களையும் வழக்கமான ரஜினி ரசிக மனோபாவ நகைச்சுவை பின்னூட்டங்களோடு இணைத்து விட்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான். யாருடைய பதில் பாசாங்குளாலும் காமெடியாலும் நிறைந்திருக்கிறது என்பதை வாசிப்பவர்களே உணர முடியும். நன்றி.

Prathap Kumar S. said...

//சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர் பயன்பெற வேண்டிய இந்தச் சலுகையையும் பலநூறு கோடிக் கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்களும் உள்ளே புகுந்து பெற்றுக் கொள்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. அரசியல் காரணங்களுக்காக என்றாலும் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசியை பில்கேட்ஸூம் வரிசையில் நின்று வாங்கினால் 'அவருக்கும் இந்தச் சலுகை உண்டென்றால் அதைப் பெறுவதில் என்ன தவறு' என்போமா//

செம பஞ்சு சுரேஷ் ஜி... நோக்கம் இல்லாமலே திட்டம்போடுகிறார்கள். இவர்கள் இதுபோன்ற திட்டங்கள்போடுவதே அவர்களுக்கு ஆதாயமாக இருப்பதால்தான். இத்தனை வருசமா கிடைக்கவேண்டிய கோடிக்கணக்கான வரி போச்சு... தமிழ் மட்டும் வளரட்டும நாடு நாசமாபோகட்டும்....

Anonymous said...

Dear Suresh Kannan,

I have been following your blog for couple years now, and have commented in a very few of your blogs in the past. I have watched movies based on your recommendations. I do like your honesty. I would humbly say I am a fan of your opinions. Regarding Pirated movies, I understand your position, it is a brutally honest stand.

Anbudan, Saravanan.

Jayadev Das said...

அப்பாடா, இப்பத்தான் ஒரு நல்ல பதிவரோட எழுத்துக்களை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. தங்களின் கட்டுரை அருமை. நியாயமானது. ஊரில் எல்லோரும் அயோக்கியப் பயல்கள் இல்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ரொம்ப தேட வேண்டியிருக்கிறது. கருணாநிதி தமிழை எப்படியெல்லாம் வளர்க்கிறார் என்பதை அவருடைய பேரப் பிள்ளைகள் ஆரம்பித்துள்ள தொலைகாட்சி சானல்களுக்கும், படக்கம்பனிகளுக்கும் வைத்துள்ள பெயர்களைப் பார்த்தாலே புரியும். ஊருக்குத்தான் உபதேசம் தனக்கல்ல. படத்தின் உள்ளே பார்த்தால் அதே கருமாந்திரம் தான், பெயரை மட்டும் தமிழில் வைத்தால் வரி விலக்கு, இது கொடுமை. எல்லோருக்குமே வரி விலக்கு கொடுக்க செய்யப்பட்ட நரித்தனமான தந்திரம் இது. ரஜினி ரொம்ப நன்றியுள்ளவரு. அவரோட ரசிகர்களை மகளின் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று சொன்னதனால் மட்டுமல்ல. ஜெயலலிதா, அன்புமணி ராமதாஸ் போன்றோரை வீடு தேடி சென்று அழைத்தவரால், தன் திரையுலக வாழ்விற்கு அடையாளம் காட்டிய பாரதிராஜாவையும், தன்னுடைய முக்கால் வாசிக்கும் மேலான படங்களின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த இளையராஜாவையும் அழைக்க மனமில்லை. இத்தனை இருந்தும் //கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிற, அலகு குத்திக் கொள்கிற// இளிச்சவாய் தமிழன் //தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல்// தன்னுடைய வாழ்க்கைக்கும் கொண்டு வரும்போது தான் பல கொடுமைகள் நடக்கின்றன. கல்லூரி மாணவன் ஆட்டோக்காரன் உடையில் கல்லூரிக்குச் செல்வதும், தலையில் முடி கொட்டி வழுக்கையாகிறதே என்ற கவலையில் பலர் வாட இவன் தலையை நெற்றியின் இரு புறமும் வழுக்கை விழுந்த மாதிரி முடியை நீக்குவதும், நடிகன் நடிப்பை நிறுத்திவிட்டு இமைய மலைக்குச் செல்கிறேன் என்றால் தீக்குளிப்பேன் [உடம்புக்கு தண்ணீரால் குளிப்பானோ இல்லையோ] என மிரட்டி அவனை அரசியலுக்கு வலுக்கட்டாயமாக இழுப்பதும் தமிழகத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் விடயங்கள். இதைச் சுட்டிக் காட்டினால், "ஏன் பணம், ஏன் உயிர், என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன், நீ யார் கேட்க?" என்ற எகத்தாளமாக பதில் கேள்வி தான் வரும். தமிழன் எப்போதுமே மற்றவர்களுக்கு தன் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வெறும் பல்லாக்கு தூக்குபவனாகத்தான் இருப்பானா? விடிவே கிடையாதா?

Anonymous said...

evvalavu mukkunalum onnum nadakkadhu !!!

Sridhar Narayanan said...

நல்ல கட்டுரை. பொறுமையா அலசி எழுதியிருக்கீங்க. தலைப்பில் இருக்கும் ‘அபத்த’த்தை கண்டிப்பாக ஒத்துக்கனும். ஆனா அது என்ன ‘சமகாலம்’? இந்த அபத்தங்கள் எப்பவும் நடக்கிறதுதானே. ரஜினியை முன்னிட்டு மட்டும்தான் செய்யப்படுகிறதா என்ன?

வரிக்கு வரி பதில் எழுதனும்னு தோன்றினாலும் இரண்டே இரண்டு பைசாக்களை மட்டும் என் சார்பாக...

முதல் பைசா:

//இத்தனையையும் கள்ள மெளனத்தோடு கவனிக்கிற அதன் மூலம் இந்தக் கோணங்கித்தனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கிற ரஜினியின் இமயமலை சுற்றுலா 'ஆன்மீகம்' எத்தனை போலித்தனமானதோ, அதே அளவிற்கு இந்த நிகழ்வுகளும் அபத்தமானவை.//

ரொம்பவும் காட்டமா ஆயிட்டீங்களோ? ரஜினி மேடையில் ‘உன் குடும்பம்தான் முக்கியம். அம்மா, அப்பாவை கவனிச்சுக்கோ’ என்று கூடத்தான் சொன்னார். நான் அவதானித்தவரையில் ரஜினி தனது ரசிகர்களை Exploit பண்ணுகிற கீழ்மையை இதுவரை செய்ததில்லை. அப்புறம் ஏன் இப்படி வெறித்தனமான ரசிகர்கள், அலட்டல்கள் என்றால் அதற்கு வேறு அரசியல் காரணங்கள் உண்டு. அதை நீங்களே உங்கள் இடுகையில் நுட்பமாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் இந்த ரசிகமன்ற கலாச்சாரத்தை நிச்சயம் ரஜினி திட்டமிட்டு உருவாக்கவில்லை. இந்த வெறித்தனமான ரசிக வெள்ளத்தை அவர் இயன்றமட்டும் நிதானமாக ‘தாங்கி’ பிடிக்கிறார்.

இரண்டாம் பைசா:

//'கக்கா' போகக்கூட அதிகாலையில் எழுந்திருக்காதவன், ஒரு திரைப்படத்தைக் காண அரங்கில் அதிகாலை நான்கு மணிக்கே அமர்ந்திருக்கிறான் என்றால் சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மூளைச்சலவை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது என்பதுதானே பொருள். இதில் படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஹாரிபாட்டர் நாவலை முதன் முதலாக வாங்க விடியற்காலையிலேயே புத்தகக் கடைகளின் முன்பு நின்ற முன்னோடிகள் உலகமெங்கிலும்தானே இருக்கின்றனர்? மக்களிடம் 'விழிப்புணர்வு' ஏற்படுத்த வேண்டுமென்பதின் பொருள் இப்படி அதிகாலையில் எழுப்பி ஓட வைப்பதுதான் போலிருக்கிறது.//

ஏன் எந்திரன் மட்டுமா பாக்கிறோம்? அதிகாலை 2 மணிக்கு எழுந்து ஈர உடையோட திருப்பதில அங்கபிரதட்சணம் பண்றோம். அறுபத்து மூவர் உற்சவம்னு மைலாப்பூர் முழுசா ட்ராபிக் ஆக்கி கசங்கி பிழிந்து சக்கையாறோம். அரசியல் தலைவர் பேச்சை கேக்க வண்டி கட்டிகிட்டு ஊர் ஊரா சுத்தறோம். கள்ள ஓட்டு குத்தி அரசியல் கட்சி அபிமானத்தை நிறுவறோம்... அபத்தங்களின் பட்டியல் ஒண்ணா ரெண்டா... எல்லாம் காலங்காலமா நடக்கிறதுதானே...

கங்கணம் கட்டிகிட்டு எதிர்க்கிற அளவுக்கு இந்தப் படம்லாம் ஒர்த் இல்லை பாஸு. :)

Anonymous said...

Really nice post, i am seeing little bit Rajini opposition here However i am accepting your thoughts...

முத்துகிருஷ்ணன் said...

சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எந்திரன் பற்றிய சமீபத்திய பதிவு மிகவும் யதார்த்தமாக இருந்தது. நீங்கள் சொல்வதை போல இது ஒரு தொலைகாட்சி சானலால் ஊதி பெருக்கப்பட்ட விஷயம் அல்ல. NDTV,IBN என பரவலாக எல்லா சானல்களும் இப்படத்திற்காக இதே வேலையை செய்கின்றன. இங்கு அமெரிக்காவில் முதல் வாரம் டிக்கெட் விலை 30 டாலர் (ஐமாக்ஸில் அவதார் 3டி விலை அதிகபட்சம் 15 டாலர்). இந்திய படம் வெளியிடப்படும் திரை அரங்குகள் ஒப்பு நோக்கையில் மிகவும் தரம் குறந்தது. இருந்தும் டிக்கெட் பதிவு ஆரம்பித்து அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டது. காரணம் 'துதி பாடும்' மனப்பான்மை, அவ்வளவே. நீங்கள் கூறியிருந்ததை போல இது ஹாரி போட்டர் புத்தகம் வாங்க பிள்ளைகள் காத்திருந்தது போல ஒரு சம்பவம். சன் தொலைகாட்சி அவர்கள் முதலீட்டிற்கு அதிகபட்சம் லாபம் கிடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள். இதை அவர்கள் முந்திய பல படங்களுக்கும் செய்திருக்கிறார்கள்.
ஆறுதலான விஷயம் என்று பார்த்தால், இவை எல்லாம் இந்த தலைமுறையின் மனதில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள். அடுத்த தலைமுறயும், அதை சார்ந்த நடிகர்களும் இதே அளவு சிந்தனையற்ற துதி பாடலில் பங்கேற்பார்களா என்பது ஒரு கேள்விக்குறியது. இது ஒருவகை inertia என்று வைத்துக் கொள்ளலாம். இந்த நடிகரை பற்றிய ஒருவித சிந்தனை, அதனால் தான் இங்கு உள்ள அத்தலமுறையை சேர்ந்தவர்களால், அப்படம் வெளிவரும் சமத்தில் பகுத்தறிய முடியாத ஒரு குழு மனப்பான்மையுடன் இப்படத்தை அணுகுகிறார்கள்.
மற்றபடி, தமிழ்நாட்டில் சொற்ப ஊதியத்தில் வாழும் இளைஞ்சர்களை பற்றி நீங்கள் சொன்னது உண்மை தான்.

முத்து கிருஷ்ணன்.

காலப் பறவை said...

Excellent Article Suresh

bandhu said...

I love your article!
I am not sure the distributors will be able to make much money as I am not sure how long every one will be able to keep up the hype! It could very well be a blockbuster movie making loss for the distributors!
The only point i do not agree with you is the justification to see the movies in pirated copies. I would really urge you to just ignore it if you do not like and see ONLY if you can afford to see!

அது சரி(18185106603874041862) said...

உங்கள் பதிவின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப் போவது இது தான் முதன் முறை.

+1 பாஸ்.

அது சரி(18185106603874041862) said...

//

எப்படி இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறதோ, அதே அளவிற்கு இதை ஆட்சேபிக்கிற உரிமை துரதிர்ஷ்டவசமாக அங்கு வாழ்கிறவர்களுக்கும் உண்டு. அதன் விளைவே இந்தப் பதிவு.
//

மிக நிச்சயமாக இருக்கிறது.

ஒரு சாக்கடை வழிந்து வீட்டுக்குள் மட்டும் ஓடினால் அது அந்த வீட்டின் பிரச்சினை. அதுவே தெருவில் ஓடினால் அது ஊர் பிரச்சினை.

ஸோ, நீங்கள் உங்கள் தரப்பை பதிவு செய்வதை யாரும் குறை சொல்ல முடியாது.

அது சரி(18185106603874041862) said...

//

எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் பேரவைகள், தொணடர் படைகள், முதலியவை.
//

இது தான் என் பிரச்சினையே.

நீங்கள் பார்த்த வீடியோ, அலகு குத்தி காவடி எடுக்கும் நபர்கள், கட் அவுட்டு பாலாபிஷேகம் செய்பவர்கள் எல்லாம் சுய விளம்பரம் தான். எம்ஜியாருடன் போட்டோ எடுத்து எனக்கு எம்ஜியாரை தெரியும் என்று அதை தொழிலுக்கு பயன்படுத்தும் சாமர்த்தியம் தான்.இதை நீங்களுமே ஒப்புக் கொள்கிறீர்கள்.

இதை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், எந்திரனில் சமூக பொறுப்பும், கலை உணர்வும் இல்லையென்று கவலைப்பட வேண்டியதில்லை.

அது சரி(18185106603874041862) said...

//

தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல் தம் தோளிலேயே சுமந்து கொண்டு 'வீட்டுத் திருமணத்திற்கு' அழைக்கவில்லையே என்று ரசிகன் வருத்தப்படுகிற கொடுமைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.
//

இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இன்றைக்கு நிலைமை எம்ஜியார் காலம் போலவோ இல்லை எண்பதுகள் போலவோ இல்லை.

எல்லாரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் யோசிப்பதையே இன்னும் பலரும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் சுரேஷ் கண்ணன்.

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் தன்னுடைய அன்றாட உழைப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை அறியாமை காரணமாக வீணடிப்பவர்கள் குறி்த்தும் அதிகாரத்திற்கெதிராக திரையில் வீராவேசமாக முழங்கும் தன் தலைவன், யதார்த்த வாழ்க்கையிலும் அதே போல் இருப்பான் என்கிற கனவுடன் அவனை அரியணையில் அமர்த்தத் துடிக்கும் அப்பாவிகளைக் குறித்துத்தான் நம்முடைய கவலை.
//

once again,

அறியாமை என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்று அவர்கள் நினைக்கலாம்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் டூர் போவது அவர்கள் வாழ்க்கை இன்பம். அதுவும் செலவு தான். இதுவும் செலவு தான்.

மற்றபடி, தலைவன் துதி, வாழ்க்கையில் அடிபட்டால் தானாக மறைந்து போகும். வினாயகரை கும்பிட்டால் பரீட்சையில் அதிக மார்க் வரும் என்று தினமும் கோவிலுக்கு போவது போல் தான் இதுவும்.

நாம் எல்லாருமே அதை கடந்து வந்தவர்கள் தானே சுரேஷ் கண்ணன்? நம்மால் கடந்து வர முடியும் என்றால் அவர்களாலும் முடியும். வாழ்க்கையின் பருவங்களில் இப்படி கண்மூடித் தனமாக ஆடுவதும் அந்த பருவத்திற்கே உரிய ஒரு இன்பம் தானே?

அது சரி(18185106603874041862) said...

//
'ஆங்கிலத்தில் பேசினாலே அவன் அறிவாளி' எனக் கருதும் பொதுப்புத்தியுடன் கூடிய முட்டாள்கள் உலகெங்கிலும் பரவியிருப்பது போல், தமிழர்களும் உலகெங்கிலும் பரவியிருப்பதும் அவர்கள் இந்தப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்பதிலும் அப்படியில்லாத இடங்களிலும் நான்கைந்து பேரை கேமரா முன் அடைசலாக நிற்க வைத்து அவர்களின் கூக்குரல்களின் மூலம் ஏதோ அந்த நகரமே இந்தப்படத்தைக் காண்பதற்காக காத்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஊடகத்தின் போலித்தந்திரங்களைக் கண்டு மந்தைகள் வேண்டுமானாலும் மயங்கலாம். மனச்சாட்சியுள்ளவர்கள் அல்ல.
//

சுரேஷ்,

வெளிநாட்டு தமிழர்கள் பற்றி நீங்கள் சொல்லியிருந்தால், இதில் வேறு சில உளவியல் காரணங்களும் உண்டு. முன்பே சொன்னது போல சிலருக்கு இது வெட்டி விளம்பரம். அய், என் மூஞ்சை டிவில காமிக்கிறாங்க என்பது போல. மற்றவர்களுக்கு இது ஒரு குழுவுடன் அடையாளப்படுத்தும் நிகழ்வு.

பெரும் மக்கள் தொகை, உறவினர், குடும்பம் என்று இருந்து விட்டு,இங்கே பெரும்பாலும் அத்தகைய குழு எதுவும் இல்லாது இருப்பவர்களுக்கு தாங்கள் இழந்து விட்டதை மீட்க இது ஒரு வாய்ப்பு. மதுரையிலும் திருச்சியிலும் திருனெல்வேலியிலும் விசிலடித்து படம் பார்த்து விட்டு லண்டனில் அதை மொத்தமாக இழந்து விட்டவர்களுக்கு அதில் ஒரு பகுதியை மீட்க ஒரு வாய்ப்பு.

அதற்காக அவர்கள் மந்தைகள் என்பதை மறுக்கிறேன். அவர்கள் விரும்புவது எந்திரன் அல்ல, அது ஏற்படுத்தும் சூழ்நிலையே.

அது சரி(18185106603874041862) said...

//

தமக்குள்ள பலத்தின் மூலம் சக போட்டியாளர்களின் காலை உடைத்து அறையில் பூட்டி வைத்து விட்டு தான் மாத்திரமே ஓட்டப் பந்தயத்தில் ஓடி 'வெற்றி வெற்றி' என ஒருவன் முழங்குவானாயின் அவனை இந்த உலகம் 'வீரன்' என மாலையிட்டு கொண்டாடுமா? அல்லது அவனின் அயோக்கியத் தனத்தைக் கண்டு காறித் துப்புமா? சென்னையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான் என அறிகிறேன். இந்த அசுரத்தனமான போட்டியிலிருந்து தாமாக விலகிப் போனவர்கள் சொற்பமிருக்க, அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி விலக்கப்பட்டவர்களும் அடித்து ஒடுக்கப்பட்டவர்களும் எத்தனை பேரோ?
//

இது பாய்ண்ட்!

இது தான் பிரச்சினை. ஏன்னா, எந்திரன் மாதிரி படங்கள் எந்த சமூக பாதிப்பையும் ஏற்படுத்தாது( விட்டாலாச்சாரியா படம் என்னைக்கு சமுகத்தை மாத்திச்சு?) ஆனால், இந்த தியேட்டரை முடக்கிற பிஸினஸ், மாஃபியா பிஸினஸ்.

அது சரி(18185106603874041862) said...

//
"இந்த தயாரிப்பு நிறுவனத்தைப் பாராட்டுவதென்பது என்னையே பாராட்டிக் கொள்வதாகும்". ஆக..இந்த கூட்டுக் களவாணித்தனத்திற்கு தானும் ஓர் உடந்தை என வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்த அவரின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
//

எப்பனா இப்படி உளறினா தான் நேர்மையே வெளிய வருது. அதுக்காக சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் :(

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் அவ்வாறான திசையில் தமிழ் சினிமா பயணிக்கத் துவங்கும் போது, அந்த நம்பிக்கை துளிர்க்கத்துவங்கும் போது அதில் பின்னடைவை ஏற்படுத்துகிற, கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிற, அலகு குத்திக் கொள்கிற மூடநம்பிக்கைகளுக்கு நம்மைத் தூண்டுகிற, நம்மை அந்த ஆட்டு மந்தை நிலையிலேயே வைத்து அதன் மூலம் நம் பணத்தையும் சிந்தனையும் பிடுங்கிக் கொள்கிற வணிகத்தையே ஒட்டுமொத்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிற சூழலைத்தான் நான் வெறுக்கிறேன்.
//

உங்க கோபம் புரிஞ்சாலும், ரொம்ப டென்ஷனாகாதீங்க பாஸ். நீங்க நினைக்கிறதை விட, மக்கள் தெளிவா தான இருக்காங்க?

சிவாஜிக்கு அப்புறம் தான நாடோடிகள், பசங்க எல்லாம் ஹிட் ஆச்சு? அதுக்கப்புறம் கூட பிரம்மாண்டம் இல்லாத படம் எல்லாம் வந்து ஹிட் ஆச்சே? இது எல்லாத்தையும் நக்கல் பண்ணி "தமிழ்ப்படம்" கூட வந்து ஹிட் ஆச்சே?

எனக்கு தெரிஞ்சது என்னன்னா, மக்கள் இப்பல்லாம் ரொம்ப தெளிவா இருக்காங்க. பாலாபிஷேகம் பண்றதுக்கு கூட ரசிகர் ஷோ டிக்கட் வித்து அதுல தான் செய்றாங்க. காவடி தூக்கி அலகு குத்துறதுக்கு தனி ரேட்.

எனக்கு இந்த போஸ்ட் பிடிச்சிருக்கு. ஆனா, நீங்க எந்திரனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறதா தோணுது. அது அவ்ளோ ஒர்த் இல்லை பாஸ்.

(ஆனா, சன் டிவியோட ஆபாசம் காத்தாடி ராமமூர்த்தியை கூட பருத்தி வீரனாக்கிடும்கிறதை ஒத்துக்கிறேன். அது ரொம்ப டார்ச்சர் தான்)

அது சரி(18185106603874041862) said...

ஓ.கடைசியா ஒண்ணு. இந்த போஸ்ட்டை நான் பஸ்ல ரீஷேர் பண்ணிக்கிறேன் பாஸ்.

பிருந்தன் said...

இந்தியாவில் ஜந்து வருடங்கள் இருந்திருக்கிறேன், தொடர்ந்து டீவிகளையும், சினிமாக்களையும் பார்த்து அவற்றை தவிர்க்க நினைத்து தவிர்க முற்படும் போது எல்லாம் தவிர்க்க முடியாமல் அவதிபடும் போது எல்லாம், மனம் பித்து பிடித்து இந்தியாவை விட்டு ஓட வேணும் போல் இருக்கும், இப்போது சினிமாக்கள் பார்பதில்லை, தமிழ் டிவிகள் பார்ப்பது இல்லை நிம்மதியாக இருக்கிறேன், அனுபத்தவர்களுக்குத்தான் அதன் துன்பம் தெரியும், உங்கள் துன்பத்தை நான் உணர்ந்து கொள்கிறேன்.

somanathan said...

arumai ayya

தமிழ் திரு said...

உங்கள் பதிவில் சில முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் செய்த முட்டாள்தனமான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை தான் ! ....அதை பதிவு செய்ய எந்த சக்திகளுக்கும் துணிவு இல்லாதபொழுது நீங்கள் ஒருவராவது முன் வந்திருக்கிறீர்கள் !!! ...வாழ்த்துகள் !!!

raja said...

நான் படத்தை 200 ரூபாய் கொடுத்து..ஒரு குப்பைத்தொட்டியில் அமர்ந்து பார்த்தேன்(கும்பகோணம் காசி தியேட்டர்) ரஜினி முன்றுவேடங்களில் வில்லன் வேடத்தை மிக அமர்க்களமாக செய்திருக்கிறார்.. ஆனா இவங்க காட்டின பில்டப் இருக்க.. அது கொஞ்சம் ஒவர்தான்... ஹாலிவுட்ல ரோலண்ட் எமரிச் னு ஒரு இயக்குநர் இருக்கிறான் (UNIVERSAL SOLDIER,2012 அப்புறம் இன்னும் சில குப்பைகளை எடுத்திருக்கான்) தனது பூச்சாண்டித்தனமான காட்சிகள் மூலமா.. தன் புத்திசாலித்தனத்த காட்டி... இந்த டைரக்டரு பெரிய சூராதி சூரண்டா என்கிறமாதிரி படம் எடுப்பான் எனக்கு அதுபோலத்தான் இருந்தது எந்திரன். விட்டுத்தள்ளுங்க சுரேஷ் பதேர் பாஞ்சலி,உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும் போன்ற படங்கள் இன்னும் அன்று பூத்தது போல் தான் இருக்கிறது. யாரும் எப்பொழுது அவற்றை நுகரலாம்,ரசிக்கலாம், சூடிக்கலாம்,மாலைத்தொடுக்கவும் செய்யலாம்.. இதெல்லாம் அசைவ பிரியாணி மறுநாள் காலைல தின்றாலே வாந்தி பேதிதான் வரும்... யாரும் சாப்பிடமாட்டாங்க.. உ.ம்.சகலகாலவல்லவன்,பாயும்புலி,திரிசூலம்,குடியிருந்த கோயில்..உங்க மனதை போட்டு ரொம்பவும் படுத்திக்கொள்ளாதீர்கள்..

Unknown said...

சன் டிவியின் மாய்மாலங்கள் (இதைத்தானே அவர்களுடைய எல்லா படத்திற்கும் செய்து வருகிறார்கள்), பாலாபிஷேகம், மற்ற அபத்தங்கள் பற்றி உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

//பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்ட ஹாலிவுட் படங்களின் நுட்பங்களை, மக்களைச் சுரண்டி குவிக்கப்பட்ட பணத்தின் மூலம் நாம் சமகாலத்தில் அதே ஹாலிவுட் நுட்பவியலாளர்களைக் கொண்டே ஹாலிவுட்டின் அபத்த நகல்களாக உருவாக்கி விட்டு நாமே அதை சிலாகித்துக் கொண்டால் எப்படி? //

அமெரிக்கா கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு முன்பே கால் வைத்த சந்திர கிரகத்தை பல கோடி ரூபாய் செலவு செய்து சந்த்ராயன் மூலம் அதில் இறங்காமல் கூட சுற்றிப்பார்த்த 35 கோடி ஏழைகள் உள்ள ஏழ்மை நாடான நம் நாட்டைப் பற்றி என்ன உங்கள் நிலைப்பாடு ?
(சந்த்ராயன் வெற்றிபெறவில்லை என்பது வேறு விஷயம்)

நம்மாள் பாரு எப்படி வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலீஷ் பேசறான் என்று பெருமைப்பட்டால், இது என்ன பிரமாதம் லண்டனில் பிச்சைக்காரன்கூட இதைவிட நன்றாக இங்கிலீஷ் பேசுவான் என்பதைப் போல் சொல்கிறீர்கள் :)

Anonymous said...

EXCELLENT POST SIR. DO YOU THINK THESE TAMIL PEOPLE WILL CHANGE? PITY, TAMILIANS ARE NOT RESPECTED BY OTHER COUNTRYMEN, DUE TO CHEAP BEHAVIOUR. ACTORS & POLITICIANS NEED THESE TYPE OF PEOPLE FOR THEM, TO SURVIVE.

CONTINUE YOUR SERVICE - KEEP GOING!
(SIVA)

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு..

Anonymous said...

hahahaha one more comedian ;) what inspired you to say kalavani is a good movie? :D grow up dude

Rishi said...

SK
totally uncalled-for piece. all through this post, there's an undercurrent of hate-mongering. can't see a freaking difference between this and the 'exclusive' scoops that local rags publish whenever a rajni film releases. the name sells. and you prove that none is an exception when it comes to attention-seeking, standing on others' shoulders. good luck, continue.

கோவி.கண்ணன் said...

தமிழன் எல்லாவித அபத்தங்களையும் சுமப்பவன் அல்ல என்பதை பதிய வைத்துள்ள சமகாலப் பதிவு.

பாராட்டுக்கள் சுரேஷ் கண்ணன் சார்

nagoreismail said...

சார், நீங்கள் அமிதாப் நடித்த ‘மன்ஜில்’ எனும் படத்தை பற்றி எழுத வேண்டும் என்று ஆவல் எழுகிறது.(ரிம் ஜிம் கிரே சாவன் என தொடங்கும் பாடல் இடம் பெற்ற படம்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதற்காக வேதனைப்படுவதா//
இதை மாற்ற முயலவேண்டும்.

Rafeek said...

ஒரு கேள்வி, ஒரு வேளை ஷங்கர் வரி விலக்கு இவ்வளவு பெரிய படத்திற்கு தேவை இல்லை என்று ”ரோபோ” என்று பெயர் வைத்தால்.. பதிவர்கள்,விமர்சகர்கள் எப்படி எடுத்து கொள்விர்கள்?
ஒரு ரூபாய் அரிசியை பில்கெட்ஸ் வேணாம்னு சொல்லிட்டாருன்னு பாரட்டுவிங்களா இல்ல பில்கெட்ஸ்-ன் தவறான முன்னுதாரணம், பணதிமிர்ன்னு சொல்லுவிங்களா?

Ramprasad said...

Hi Suresh,
I have sent a mail reagrding this post... Please do read the same and respond.

Thanks,
Prasad

Jegan said...

எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் பேரவைகள், தொணடர் படைகள், முதலியவை.

Wonderful.