Friday, October 15, 2010

ஒரு நண்பரின் கடிதம்

சமீபத்திய சர்ச்சைகளின் மாய வியூகத்தில் எப்படியோ சிக்கி மனஉளைச்சலாக இருப்பதாக நேற்று வெளியிட்டிருந்த பதிவினைத் தொடர்ந்து எதிர்பாராத இடங்களிலிருந்து பல நண்பர்கள் தனிமடல்களில் தங்களின் கருத்தைத் தெரிவித்திருந்தனர். பலர் தங்களின் தார்மீக ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். பலருக்கும் இது குறித்த மனக்கொந்தளிப்பிருந்தாலும் அதே சமயத்தில் தங்களின் நேரமும் மனஆரோக்கியமும் முக்கியமானது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' என்பதுதான் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களின் மைய தொனியாக இருந்தது.. மேலதிக சர்ச்சைகளைத் தவிர்க்க சில பின்னூட்டங்களைத் தடுத்து விட்டேன்.

அனைவருக்கும் நன்றி.

வந்திருந்த கடிதங்களில் ஒன்று எனக்கு மிக முக்கியமானதாகப் படுவதால், என்னை சில நிமிடங்கள் சிந்திக்க வைத்ததால், பொது உபயோகம் கருதி, அவரது அனுமதியுடன் பெயர்களை நீக்கி விட்டு இங்கு பிரசுரித்துள்ளேன்.

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
 
தங்கள் சமீபத்திய பதிவுகளை வாசித்தேன். ஏன் வீணாக சண்டை போடுகிறீர்கள் என்றெல்லாம் அறிவுரை கூறப் போவதில்லை. ஆனால் ஒரு விஷயம். இது என்னையும் மிக நாட்களாக ஆட்கொண்ட ஒன்று. பரந்த வாசிப்பும்,  அறிவனுபவமும் உள்ள _______________________________- போன்றோரெல்லாம் ஏன் வெறுப்பைக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது எனக்கு பல நாட்களாக புரியாமலே இருந்தது. உளவியல் பிரச்சனையோ, பணிச்சுமையோ அல்லது வேறு ஏதாவது காரணமோ என்றெல்லாம் கூட தோணிற்று. ஆனால் விஷயம் அவ்வளவு சிக்கலானதெல்லாம் இல்லை. மிகவும் நேரடியானது. ஆற்றாமைதான் அவர்களது பிரச்சனை.   மேலே சொன்ன ஒவ்வொருவருக்கும் எழுத்தாளனாகும், ஒரு பெரும் சிந்தனையாளனாகும் கனவு இருந்தது. கனவு மட்டுமே இருந்தது (அந்த லிஸ்டில் ____________________________-- போன்ற பெயர்களயும் சேர்த்துக் கொள்ளலாம்). அதை நிறைவேற்றத் தேவையான உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை போன்றவை  இல்லை. முக்கியமாக பொறுமை இல்லை. இன்றே, இந்நிமிடமே மறுக்க முடியாத ஆளுமையாக ஆக வேண்டும் என்ற இளமைக்கே உரிய கனவு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அது தவறு என்றேல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் அந்தக் கனவைப் பின்தொடர்ந்து வரும் வலியை, புறக்கணிப்பை,   கோளாறுகளை, சறுக்கல்களை நேர்மையாக பரிசீலித்து பார்க்க அவர்களால் முடியவில்லை என்றே நினைக்கிறேன். அவர்களது எதிர்மறை ஆளுமை இவை அனைத்தையும் தலைகீழாக்கி, சித்தாந்த முலாம் பூசி, தங்களுக்கு எதிரான கூட்டுச் சதியாகவே புரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்வினை புரிவதிலேயே இவர்களது பாதி வய.து கழிந்திருக்கும்.  இவர்களை எதுவுமே செய்ய முடியாது.  பொறுமிக் கொண்டே தான் இருப்பார்கள். சீண்டிக் கொண்டே தான் இருப்பார்கள். தூர தூர ஓடினாலும். 

இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களை சீண்டிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு எதிர்வினை புரிந்து கொண்டே இருந்தால் நீங்களும் இந்த ஆற்றாமை உணர்வை அடைவீர்கள். ஒரு காலத்தில் அக்கப்போர் தவிர எதுவுமே உருப்படியாக எழுதவில்லையே என்ற உணர்வு அவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும் என்றே நான் ஊகிக்கிறேன். அந்த நிலைக்கு நீங்கள் ஒருநாளும் செல்லக் கூடாது என்ற ஆசையிலே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அடுத்ததாக நீங்கள் எழுதப்போகும் எதிர்வினையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து எதிர்வினைக்கு எதிர்வினை என்று எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் நீங்களும் அவர்கள் சென்று சேர்ந்த இடத்திற்கே சென்று சேர்வீர்கள்.  ஒரு நண்பனாக, வாசகனாக உரிமையுடன் சொல்கிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து தான் இருக்கும். ஆனாலும் பெல்ட்டிற்க்குக் கீழ் அடித்துவிட்டார்கள் என்பதால் நீங்களும் உள்ளுக்குள் தடுமாறிப் போயிருப்பீர்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். அவ்வளவு தான் நான் சொல்வது.

புறக்கணிப்பே நாம் இவர்களுக்கு தரக் கூடிய அதிகபட்ச தண்டனை.  

அன்புடன்,
_______________


suresh kannan

21 comments:

ILA (a) இளா said...

//புறக்கணிப்பே நாம் இவர்களுக்கு தரக் கூடிய அதிகபட்ச தண்டனை./

//இந்தக் கருமத்தையெல்லாம் புறக்கணித்து விட்டுச் செல்வதுதான் என்னுடைய முடிவாக இருந்தது.//

ராம்ஜி_யாஹூ said...

கடிதம் எழுதிய அன்பரின் எழுத்து நடை அற்புதம். எழுதி உள்ள விசயங்களில் சில இடங்களில் உடன்பாடு இல்லை. எதிர் தரப்பினர் புகழ் பெறுவதற்காக உழைப்பதே, வாசிப்பதே, களப் பனி செய்வதே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.
அவர் கூறியுள்ளது போலவே இந்தப் பிரச்சனயை இன்னும் நீட்டிக்க வேண்டாம்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Anonymous said...

Whenever people succeed in life, petty people will take cracks at them and try to pull them down. When you refuse to fight petty people, you win. In martial arts, they teachthat when someone takes a crack at you, instead of blocking you should step away.Why? Even to block you require energy. Why not use it more productively? Similarly, in order to fight petty people, you have to come down to their level. This is what they want,because now you are one of them. Don't let negative people drag you down.

Remember, a person's character is not only judged by the company he or she keeps but also by the company he or she avoids.
source - YOU CAN WIN BOOK

மாதவராஜ் said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்!

ஐந்தாறு நாட்களாக உடல்நலமின்றி இருந்தபடியால் சரியாக இணையப்பக்கம் வரமுடியவில்லை. நேற்றுதான் இந்த சர்ச்சை குறித்து அறிய முடிந்தது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து, உங்கள் எழுத்துக்களின் மீது மதிப்பு வைத்திருக்கிறவர்களில் நானும் ஒருவன். எனக்குப் படுகிற ஒரு விஷயத்தைச் சொல்லத் தோன்றுகிறது.

பெரும்பாலான பதிவுலகப் பிரச்சினைகள் சீண்டல்களாலும், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களாலும்/அரட்டைகளாலும், அதை ஊதிப் பெரிதாக்கும் மனோபாவங்களாலும் உருவானவையாய் இருக்கின்றன. இவைகளைக் கடப்பதில் அல்லது கையாள்வதில் அதிகபட்ச கவனமும், பொறுமையும் வேண்டியிருக்கிறது. இதனை எனக்கும் சேர்த்துத்தான், பொதுவாகச் சொல்கிறேன்.

தங்களுக்கான வெளி பரந்தது. வெளியே வாருங்கள்.

ப.கந்தசாமி said...

//புறக்கணிப்பே நாம் இவர்களுக்கு தரக் கூடிய அதிகபட்ச தண்டனை.//
மிகவும் பொருத்தமான, நடைமுறைக்கு ஒத்துப்போகக் கூடிய யதார்த்தமான கொள்கை.

இந்த மாயையான பதிவுலகத்தில், எல்லோரும் முகமூடி அணிந்துள்ள நிலையில் யார் யாருடன் போரிடுகிறார்கள் என்று என்னைப் போன்றவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த மாதிரியான ஒரு முகமூடிப்போர் என்ன சாதிக்கப் போகின்றது?

Prathap Kumar S. said...

சரேஷ் ஜி, அந்த கடிதத்தில் மிகச்சரியான கருத்துக்கள் உள்ளது. இவர்களை புறக்கணிப்பதே நல்லது.

கோவி.கண்ணன் said...

//'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' //

வழிமொழிகிறேன்.

விஷாலி said...

அரசியல்ல இதல்லாம் சாதாரணம் - ஆனா இப்பதிவுலகம் எனும் மாயை யார் புரிந்து கொள்வர். இங்கே ஆளுமை காட்டும் பலர் கொஞ்ச காலம எதிர்வினை எழுதாமல் இருந்தாலே எல்லாம் சுபமே.

Kaarthik said...

நான் எண்ணியதையே தங்கள் நண்பரும் கூறியுள்ளார், சற்று அருமையான நடையில். தாங்கள் இதுபோன்ற வம்புச் சண்டைகளிலிருந்து விலகி தங்களுக்கே உரித்தான அற்புத பதிவுகளை என்னைபோன்ற விசிரிகளுக்காக மீண்டும் எழுதத் துவங்க வேண்டுகிறேன். Ignore them and pls come back to your form.

Ravi kumar Karunanithi said...

i'm apreciated...

வடகரை வேலன் said...

சுரேஷ் கண்ணன்,

சில மாதங்களுக்கு முன்பே இதை நான் தங்களுக்குத் தனி மடலில் எழுதி இருந்தேன். இது ஒரு மாயச் சுழல் மாட்டிக் கொண்டால் பாழாவது உங்கள் படைப்புத் திறன் என்று.

அதுவேதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

விரைவில் வெளியே வந்து விடுங்கள்.

a said...

//புறக்கணிப்பே நாம் இவர்களுக்கு தரக் கூடிய அதிகபட்ச தண்டனை.

//
rightly said....

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான நண்பர்களுக்கு,

இப்போதுதான் கவனித்தேன்.

மேற்கண்ட கடிதம் எழுதிய நண்பரையும் இங்கே பின்னூட்டமிட்டுள்ள நண்பர்களையும் அந்த 'சிந்தனையாளர்' நாகரிகமான மொழியில் தனது பதிவில் விமர்சித்துள்ளார். எனவே பின்னூட்டமிடுபவர்கள் அது குறித்து யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏன் எனக்கு பலரும் தனிமடலில் கடிதம் அனுப்பினார்கள், பின்னூட்டத்தில் கூட சொல்லியிருக்கலாமே என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். இப்போதுதான் புரிந்தது,அவர்கள் என்னை விட 'சிந்தனையாளரை' நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது.

மேலே கடிதம் எழுதிய நண்பர் கூட, நான் அனுமதி கேட்கும் போது இவ்வாறு எழுதினார்.

"உங்கள் இஷ்டம். எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் இதை நீங்கள் வெளியிட்டால் அவர்கள் மேலும் டெரர் ஆவார்கள். அப்பட்டமான உண்மையை ஏற்கக் கூடிய வயதில் அவர்கள் இல்லை. பாதி வயது கழிந்திவிட்டது இல்லையா?"

அந்த நண்பர் எத்தனை உண்மையாக 'சிந்தனையாளரின்' குணாதியசத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்? அவருடைய கடிதத்தை வெளியிட்டதின் மூலம் அவரையும் இந்த விஷவட்டத்தில் சிக்க வைத்துவிட்டேனோ என்று எனக்குத்தான் குற்றஉணர்வாக இருக்கிறது. மன்னித்துவிடும் படி மடல் அனுப்பியிருக்கிறேன்.

நண்பர் மாதவராஜிடமும் மற்ற நண்பர்களிடமும் கூட மன்னிப்பு கேட்கிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

இனி 'சிந்தனையாளரின்' கவனத்திற்கு:

ஐயன்மீர், நான் கொச்சையான மொழியில் உங்களைத் திட்டும் போது உங்களுக்கு கோபம் வருவது கூட நியாயம். ஆனால் ஒருவர் உளவியல் ரீதியாக அதுவும் பொதுவாக ஆய்ந்து ஒரு விஷயத்தை முன்வைக்கும் போது அதிலுள்ள சரி/தவறுகளை அதே நேர்மையான மொழியில் நாகரிகமாக எதிர்கொள்வதுதானே நியாயம்?

'வன்மம் / அநாகரிகம் என்று நான் எழுதியதாகக் குறிப்பிட்டு ஆதாரம் கேட்டு நச்சரிக்கும் நீங்கள், தனது செயல்களின் மூலமே அதைத் தொடர்ந்து நிரூபித்து இப்படி அம்பலப்பட்டு விடுகிறீர்களே ஐயா! இதைக் கொஞ்சம் கவனியுங்கள்.

நான்தான் சாவகாசமாக என் விளக்கப்பதிவை எழுதுகிறேன் என்று என் பதிவிலேயே தெரிவித்திருக்கிறேனே? அதற்கான போதுமான நெருக்கடியைத்தான் நீங்கள் தந்து விட்டீர்களே?

அப்புறம் ஏன் ஆதாரம் ஆதாரம் என்று நச்சரிக்கிறீர்? சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் ஐயா! நானும்தான் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். நாம்தான் எங்கே போய்விடப் போய்கிறோம், இணையம்தான் எங்கே போய்விடப் போகிறது?

நான் என்ன விளக்கம் எழுதினாலும், எப்படியும் உங்கள் வழக்கப்படி அந்த விட்டைகளை ஆராய்ந்து பிரித்து மேய்த்தெடுக்கத்தானே போகிறீர்கள்? அப்புறம் ஏன் இந்த அவசரம்? எப்படியும் அதற்கான வாய்ப்பை உங்களுக்குத் தரத்தான் போகிறேன். சற்று பொறுமை காக்கவும் நண்பரே.

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான நண்பர்களே!

சற்று முன்னால் 'சிந்தனையாள'ரிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்தது. இதில் பின்னூட்டமிட்ட பலரை அதில் திட்டியிருந்தார். என்னைத் திட்டியிருந்தாலும் பரவாயில்லை என் போட்டிருப்பேன். அதுவே எனக்கு பிற்காலத்தில் 'ஒரு ஆதாரமாக' ஆகியிருக்கும். மற்ற பதிவர்களைத் திட்டி வரும் பின்னூட்டங்களை நான் பிரசுரிப்பதில்லை.

எனவே அதை நிராகரித்து விட்டேன். அதை 'சிந்தனையாளர்' தம்முடைய பதிவிலும் இட்டிருக்கிறார்.

Radhakrishnan said...

நல்ல கடிதம். நல்ல ஆலோசனை.

எதற்காக மனிதர்கள் சுயமாக சிந்திக்க முடியாமல் திணறுகிறார்கள் என புரிவது கொஞ்சம் கஷ்டம்தான்.

எது நல்லது எது கெட்டது என்பது அவரவர் ஆய்ந்தறிந்து கொள்வதில் உள்ளது எனும் போது எப்போதும் பிரச்சினை தீராது.

இரு தரப்பு பிரச்சினைகள் எப்பொழுது பொது வெளிக்கு வருகிறதோ அப்பொழுதே பிரச்சினையின் முழு வடிவமும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் நடப்பு செயல்.

பார்க்கலாம்.

பிச்சைப்பாத்திரம் said...

கிண்டல்களை எல்லாம் கைவிட்டு ரோசா வசந்துக்கு நேரடியாகவே:

இதுதான் இப்போதைக்கு உங்களுடனான கடைசி உரையாடல். இனி நீங்கள் என்னைச் எப்படிச் சீண்டினாலும் என்னிடமிருந்து பதில் வராது. எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் அதன் மூலம் நீங்களே வெளிப்பட்டுப் போகிறீர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். 'நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்வதா' என்று நீங்கள் திட்டப்போவது தெரிந்தாலும் சொல்கிறேன்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு எழுதப் போகும் (நிச்சயமாக எழுதி விடுவேன், ஐயா நம்புங்கள்) விளக்கப்பதிவுதான் உங்களுடனான இறுதி மற்றும் கடைசி உரையாடலாக இருக்கும். அதற்குப் பிறகு உங்கள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டேன். அதுவரை சற்று பொறுமையாயிருங்கள்.

நீங்கள் விளக்கம் கேட்ட சமயத்திலெல்லாம் சில தயக்கங்களின் காரணமாக (அதைப் பதவில் சொல்லியிருக்கிறேன்) அமைதி காத்தது உண்மைதான். அதற்கான இறுதி எல்லையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எப்படி என்னை காயப்படுத்தி விட்டதாக நான் உணர்கிறேனோ (அல்லது அப்படி கருதிக் கொண்டிருக்கிறேனோ) அப்படியே நானும் உங்களை எங்கேயாவது காயப்படுத்தியிருக்கிறேனா என்று தெரியவில்லை. (சுந்தர் பதிவு பின்னூட்டத்தை விடுங்கள். அதற்கு முன்பிருந்தே அதாவது நான் இணையத்திற்கு வந்த ஆரம்பத்திலிருந்தே என்னை நோக்கின உரையாடல்களில் உங்களிடம் ஒரு குத்தலும் சீண்டலையும் உணர்ந்ததால் நான் இதைச் சொல்கிறேன். அல்லது அவைதான் உங்களுடைய இயல்பான மொழியா என அறியேன்)என் விளக்கப்பதிவில் அவைகளை எவ்வித வசவு மொழியுமின்றி (சற்று கிண்டல் கலந்திருக்கலாம்) மிக நேர்மையாக மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எழுதப் போகிறேன். பிறகு உங்கள் பதிலை எப்படி வேண்டுமானாலும் முன் வையுங்கள். அதற்குப் பிறகு இதை விட்டுவிடுங்கள் என்பதை ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்.

இனி உங்களிடம் மாத்திரமல்ல, என்னைச் சீண்டி எழுதும் நபர்களுக்கு புறக்கணிப்பும் மெளனமுமே என் பதில் ஆயுதம்.

இனி மற்ற நண்பர்களுக்கு:

வணிகச்சினிமாவைப் பற்றியும் ரஜினி மற்றும் ரசிகர்களைப் பற்றி நான் எழுதுவது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சமூகத்தின் ஒரு பகுதியை நோக்கி பொதுவான என்னுடைய உரையாடல் அது என்பதை நினைவில் வையுங்கள். அதைக் கூட செய்ய முடியவில்லையெனில் என்ன மாதிரி கருத்துச் சுதந்திரம் நம்மிடம் அதுவும் இணையத்தில் உள்ளது? சில வார்த்தைகள் அதீதமாக இருப்பதாக சில நண்பர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவைகளை இனி கவனத்தில் கொள்வேன்.

உலக சினிமாக்களைப் பற்றியும் அதன் பார்வையாளர்களைப் பற்றியும் உங்களுக்கும் மாறுபட்ட காத்திரமான கருத்துக்கள் இருக்கலாம். அவைகளை எழுதுவதற்கான எல்லா சுதந்திரமும் உங்களுக்கு உண்டுதானே?

தயவு செய்து இந்த உரையாடல்களை தனிநபர் தாக்குதல்களாக மாற்றாதீர்கள். அங்குதான் பிரச்சினை துவங்குகிறது. இருந்தாலும் அதை சிலர் செய்து கொண்டுதான் இருப்பார்கள் போலிருக்கிறது. அப்படி இன்னொருவர் மனம் புண்படி நடந்து கொள்வதில் எழுதுவதி்ல் அவர்களுக்கு அப்படி என்ன இன்பம் கிடைக்குமோ என தெரியவில்லை.அவர்கள் இதற்காக வருங்காலத்தில் வருந்த நேரலாம்.

புரிதலுக்கு நன்றி நண்பர்களே.

Aranga said...

உறுதியான இறுதி பதிவுக்கு நன்றி , போன வாரம் பக்கத்து வீட்டிகாரருக்கும் ஒரு ”குடிமகனுக்கும்” சண்டை , மறுநாள் ஊரெல்லாம் பேச்சு , நேற்று இரண்டு குடிகாரர்களுக்கிடயே சண்டை.

ALHABSHIEST said...

http://maniyinpakkam.blogspot.com/2010/10/blog-post_14.html
10/14/2010

கடும் பகை

பொன்னானையும் அம்மணியையும்
ஊருக்கு அனுப்பிவை!
காரி மாட்டை துங்காவிக்காரனுக்கு
புடிச்சுக்குடு!
இந்தா, கழுத்துல என்ன?
மாரப்பங்கிட்டக் கழ்ட்டிக்குடு!
மாடே இல்ல,
தவுட்டு மூட்டைக எதுக்கு?
ஆறானை வெச்சிக்கச்சொல்லிக் காச வாங்கு!
எல்லாமும் ஆச்சு,
விதைநெல்லுக்கு இன்னும் வேணும்
ஆயிரத்து முந்நூறு!

கெடை கொள்ளமுடியலடீ!
கெடை கொள்ளமுடியலடீ!!

மாமா, சொன்னாக் கோவிச்சிக்க
மாட்டீகளே?
நானுங்கூடா வர்றேன்
எதுத்தவாசக் கதவைத் தட்டுனா என்னோ?
காசுக்கு முடைன்னு சொன்னாத்
தராமலா போய்டுவாய்ங்க??

பன்னெண்டு ஆண்டுப் பகை
கட்டினவ மனசு மாறியிருக்கா
உடுவானா தங்கவேலூ??

தட்டினான்
பனிரெண்டு ஆண்டுகள்
தட்டாத தன் பங்காளி வீட்டுக் கதவை!

அருக்காணீ...
வாசல்லயே நிக்காட்டி என்னோ??
இந்தா....
தங்கான் வந்துருக்குறான்...
அந்தவெடக்கோழி ரெண்டையும்
அடிச்சுப் போட்டுச் சாறக் காச்சு!

காசுங்கிடைச்சது
மனமும் நெறஞ்சது
நடையா நடந்து வந்த
பன்னெண்டு வருசத்து
நீதிமன்றத்து வழக்கும் ஒழிஞ்சது!
வேற என்னத்த சொல்ல? ராத்திரி விளக்கை அணைத்து விட்டு தூக்கம் வராமல் (தூக்கம் வருவதற்க்கு முந்தைய கட்டம்)படுத்திருப்பீர்கள் அல்லவா அப்போது யோசித்து பாருங்கள்.

Anonymous said...

Suresh, R.Vasanth has made a career out of flaming people and thrives on it. You can't out flame him - for his experience is too vast and he is merely re-enacting another episode with you out of his playbook full of several such episodes.

It is really sad but one has to admire the man's longevity, despite his reputation for ugly and utterly unproductive confrontation and some very public spats. Anywhere else he would've been long relegated to the dustbins of history.

Just stay away from him. Just as I am going to with this anonymous post.

முகமூடி said...

// இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு எழுதப் போகும் (நிச்சயமாக எழுதி விடுவேன், ஐயா நம்புங்கள்) விளக்கப்பதிவுதான் //

அவரோ அவரது நண்பர்களோ உங்கள் தரப்பில் உள்ளதாக சொல்லப்படும் “நியாயத்தின்” இடையில் உள்ள ”அநியாயத்தை”த்தான் படிக்கப்போகிறார்கள்.. நீங்களோ உங்களது நண்பர்களோ உங்கள் தரப்பில் இருப்பதாக அவர்கள் சொல்லும் “அநியாயத்தின்” இடையில் உள்ள “நியாயத்தை”த்தான் பெரிதுபடுத்த போகிறீர்கள். ஒரு சில “சில்லுண்டிகளின்” வெட்டி அரட்டைக்கு வேண்டுமானால் உபயோகப்படலாம் என்பதை தவிர்த்து பார்த்தால் வரிகளுக்கு இடையில் மட்டுமே படிக்கப்படப்போகும் உங்கள் விளக்கம் யாருக்காக அல்லது எதை நிரூபிப்பதற்காக? (இதையெல்லாம் நான் சொல்வதுதான் காலத்தின் கோலம்)