Monday, October 04, 2010

ஜெமோ மீதான ம.பு.வின் பகடி

உயிர்மை இதழைப் பிரிக்கும் போதெல்லாம் நான் பெரும்பாலும் உடனே வாசித்துவிடுவது மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தை. நவீன தமிழிலக்கியத்தில் உரைநடையை சுவாரசியமாக கையாள்வதில் மபுவும் முக்கியமானவர் என்பது என் அவதானிப்பு. அவருடைய தலையங்கங்கள் விஜய்காந்த், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காலால் உதைக்கும் தீவிரத்தனத்துடனும் சிவாஜி கணேசன் நீண்ட வசனத்தை பேசும் நெகிழ்ச்சித்தனத்துடனும் இருக்குமென்றாலும் இறுக்கமான அவருடைய மொழிக்காகவே தலையங்கத்தை உடனே வாசித்துவிடுவேன்.

ஆனால் உயிர்மைஅக்டோபர் 2010 தலையங்கத்தோடு உள்பக்கங்களில் கூடவே இன்னும் அதிவேகமான துடிப்பான இன்னுமொரு விஜய்காந்த் காத்திருந்தார். வழக்கமான இறுக்கத்திற்கு மாறாக மபுவின் பகடியான மொழியை நான் முதன் முதலில் சந்தித்த அனுபவமிது. 'தேனீர் கோப்பையில் பெய்த மழை' எனும் அந்தக் கட்டுரையில் மபு வைத்திருக்கும் நுட்பமான கிண்டல்களும் விமர்சனங்களும் சட்டென்ற புன்னகையையும் சிரிப்பையும் ஏற்படுத்துபவை. குறிப்பாக ஜெயமோகன் குறித்த கிண்டல்கள் ஒருசில அதீதம் என்றாலும் பெருஞ்சிரிப்பை வரவழைப்பவை. ஜெமோ குறித்து தனது அடிப்பொடிகள் வாயிலாக மபு உயிரோசையில் வெளியிட்டு வந்த காழ்ப்புணர்ச்சியான கட்டுரைகளைத் தாண்டி வெளிப்படையாக நேரடியாக முன்வைக்கும் கிண்டல் இதுவே என நினைக்கிறேன். படைப்புகளைக் காட்டிலும் இம்மாதிரியான வம்புகளே அதிகம் முன்நிறுத்தப்படுகிறதென்றாலும் இலக்கியம் ஜவீத்திருக்க இவையும் மறைமுக காரணிகளே எனக் கருதுகிறேன்.

...கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறுவிதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி 'கவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக.. மனுஷ்யபு்த்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை என்று வாக்குறுதி அளித்துக் கொண்டிருந்தார். (அருண்மொழி நங்கைக்கு அடுத்தபடியாக எனக்கும் ஜெயமோகனின் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுர இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று....
மனுஷ்யபுத்திரனை புன்னகையுடன் கண்டிக்கிறேன். :)

suresh kannan

7 comments:

Ashok D said...

நானும் வன்மையுடன்.. சாரி... புன்னைகையுடன் கண்ணடிக்கிறேன் ;)

Unknown said...

அது பாட்டுக்கு ஒரு பக்கம் இப்படியும் போய்க்கிட்டுதான் இருக்கு.

Prasanna Rajan said...

"மனுஷ்யபுத்திரனை கண்டிப்பதோடு ஜெ.மோவுக்கும் ஜால்ரா அடிக்கிறேன்"

Anonymous said...

நானும் படித்தேன். ஒரு சின்ன புன்னகை கூட வரவில்லை. சாரு எழுதும் நகைச்சுவை போல இருக்கிறது.

santhanakrishnan said...

அவங்க எல்லாம் வேணுமுன்னா
சேந்துக்குவாங்க..வேண்டாமுன்னா
திட்டிக்குவாங்க... நாமதான் பாவம்
சாமீய்ய்ய்யோ...

Anonymous said...

//அவருடைய தலையங்கங்கள் விஜய்காந்த், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காலால் உதைக்கும் தீவிரத்தனத்துடனும்//

மாத்தி சொல்றீங்களே சார் , தீவிரவாதத்தின் இலக்கிய முகம் உயிர்மை.

charupenline said...

Onnum siripu varaliyee ..