Tuesday, October 05, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

 தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

 படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

 ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

 வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

 நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

 மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

 ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

 சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

 இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

 படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

 தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

 "எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

தினமணி சுட்டி: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=313354&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D!

suresh kannan

19 comments:

Anonymous said...

தமிழ்நாட்டிலிருந்து ஒரு முனகல் சத்தம் கூட இது குறித்தெல்லாம் எழுப்பப்படாத போது, தினமணியின் தைரியமான எழுத்துக்கள் எனக்கு அவர்கள் மேல் மரியாதையைத் தருகிறது!!!

- நன்றி சுரேஷ் - அருண் வைத்யநாதன்

ஹரன்பிரசன்னா said...

முக்கியமான தலையங்கம். சந்திரலேகா தயாரிப்புச் செலவு குறித்த நம்பரில் எனக்கு சந்தேகம் உள்ளது.

தயாரிப்பாளர்கள் (சன் டிவி, கருணாநிதி குடும்பம் நீங்கலாக), எதிர்க்கட்சிகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

ஒரு நடிகரின் படம் ஒரு நாளில் ஒன்றுக்கு மேல் வரக்கூடாது என்று சொன்னவர்கள் இந்த ஊர்களில் இத்தனை தியேட்டர்களுக்கு மேல் வரக்கூடாது என்று நிர்ணயிக்காவிட்டால் சிக்கல்தான்.

இப்படி பெரிய படங்கள் மட்டுமே நிலை நிற்கும், மற்ற படங்கள் அடங்கிவிடும் என்பது சரியான நிலை அல்ல.

SRK said...

சமீபமாக நீங்கள் எழுதிய பல பதிவுகளின் வாயிலாக உங்களுக்குள் இருக்கும் நல்ல சினிமாவுக்கான ஏக்கம் அல்லது குறைந்த பட்சம் சமூகத்துக்கு உபத்திரவம் அளிக்காத திரைப்படங்கள் உருவாகக் கூடாதா என்னும் ஆதங்கம் புரிகிறது. அதற்கான உங்கள் குரல் (தினமணி கதிரின் குரல் உட்பட) நிச்சயமாய் சினிமாவை வியாபாரமாகக் கொண்ட எந்த நிறுவனத்தின் காதிலும் நிச்சயம் ஏறப் போவதில்லை.

சினிமாவை தொழிலாகக் கொள்ளாத நிறுவனங்கள் தன்னார்வத்தில் தயாரிக்கும் படங்கள் ஆங்கிலத்தில் அவ்வப்போது வெளிவருகின்றன. உதாரணமாக ஸ்டார் பக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த Akeelah and the Bee என்னும் திரைப்படம் கார்ப்போரேட் விளம்பர பலத்துடன் அநேக வெகுஜனத்தை சென்றடைந்தது. தமிழ் நாட்டிலும் புதிய சிந்தனையுள்ள இளைஞர்கள் அது போன்ற நிறுவனங்களை நோக்கி கல்லை எறிவதன் மூலம் இந்த ரசிகக் கனவுகள் ஓரளவு சாத்தியமாகலாம்.

தமிழ்க்காதலன் said...

நல்லதொரு அலசல். பணத்தாசையும்...., போட்டப் பணத்தை எடுக்க வேண்டுமே என்கிற கவலையும் அவர்களை இப்படி ஆட்டம் போட வைக்கிறது. தமிழகத்தில் சினிமா என்பது கேட்டதை தரும் "கற்பக தரு" என்கிற எண்ணம் பார்ப்பவனிடத்திலும், படம் எடுப்பவன், நடிப்பவனிடத்திலும் உண்டு. சினிமா வாழ்க்கை இல்லை என்பது புரியாத வரையில்....., அல்லது எது ரசிப்பு தன்மை..?, எது வெறி..? என்பது பாமரனுக்கு புரிகிற வரை..... இவர்களைப் போன்றோர் இப்படிதான் ஆடுவார்கள்.
"ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா.., ஆசை யெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா...தான் போங்கள்".
உங்கள் அளவில் நல்ல முயற்சி. பாராட்டுக்கள். வருகை தர....... ( ithayasaaral.blogspot.com )

Anonymous said...

Even Stunts were not done by Rajini. Robo Rajini stunts were performed by Hollywood Actor ALEX MARTIN, wearing mask. For proof, visit "youtube"

http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

Rajini fans doesn't know anything. They just believe everything blindly. Really Sad.

santosh said...

Boss ithula ella theatre karanum sambarichi irupan result eppadi irunthalum profit eduthudalam in a week eppo result sema super nane padam 4 vatti 1st vatti 500 retavathu vatti 300 satyam la enna pana solra i am happy to see rajini film and happy paying for it... nanga samuga sevaiyum seivom thalaivar padathai kasu koduthum parpom, DVD karan valurathuku munadi eppadi print pottu valthutu poranga cinema karanga ayya nallavare un sambaluthula ethunai nalathu sencha summa blog la mokkai podathaee

Anonymous said...

எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

வலைஞன் said...

The definition of democracy is "People get what they deserve"
சுயநலம்,ஜாதி,இன,மத வெறி,ஏழை,பணக்காரன் மிகுந்த வேறுபாடு,குறைந்த கல்வி அறிவு,மிகக்குறைந்த தேசப்பற்று
இவை அனைத்தும் மலிந்த மக்கள் மிகுந்த நாடு இந்தியா
ஒரு நல்ல தலைவன் வரும் வரை அனைத்து அக்கிரமங்களையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்

Anonymous said...

எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

Ethir katchikalin sathiyaka irukka vaoipu ullathu.

raviee said...

உங்களுடைய கருத்து 100 % சரி... பொய்யான விளம்பரங்களை கொடுத்து வருகிறது சன் டிவி மற்றும் தினகரன் பேப்பர்.. முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 1 வாரம் full என்று.. யார் காதில் பூ சுற்றுகிறார்கள்.. 30 .9 .2010 அன்று 1 .10 .2010 க்கான டிக்கெட் இருந்தது.. நான் ஆதாரத்துடன் நிருபிக்கமுடியும்.. மற்றும் வெள்ளி , சனி , ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களுக்கும் டிக்கெட் இருந்தது.. சும்மா ஓவரா கற்பனை பண்ணி கண்மூடி தனமாக விளம்பரத்தை கண்டிக்கவேண்டும் ... மக்கள் முட்டாள்கள் அல்ல... ஒரு வேளை எந்திரன் இன்னும் ஒரு வாரம் சுமாராக போனால்.. சொல்லமுடியாது.. தமிழக அரசாங்கம் .. எந்திரன் பார்பவர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு இலவசம் என்று கூறினால் கூட சொல்வதற்கில்லை... சிறிய மற்றும் நடுத்தர தயாரிப்பளர்களையும் , தியேட்டர் உரிமையாளர்களையும் நசுக்குகிறார்கள்.. இதற்க்கு காலம் பதில் சொல்லும்...

Anonymous said...

Endeeran eppadiyum FLOP. Naama yaen idhukku poi ivvalavu time waste pannanum?

Govindaraj said...

எதுவும் சிலகாலமே!! - சாக்கரடீஸ்

Govindaraj said...

எதுவும் சிலகாலமே!! - சாக்கரடீஸ்

Anonymous said...

பொதுவாக தமிழில் நமக்கு விவாதங்கள் நிகழ்த்திக்கொள்ள தெரிவதில்லை. ஒருவகையான தார்மீகக்கோபத்தை பாவலா செய்துவிட்டு வசைபாடுவதை மட்டுமே செய்தால்போதும் என நினைக்கிறோம்.

Please think about this lines from Jayamohan.

You are thinking too much about endhiran. please relax and think.

கல்வெட்டு said...

.

ஒரு பத்திரிக்கை இது போன்ற வழக்கைச் சந்திக்கலாம். அவர்களுக்கு அதற்கென்றே ஒரு துறையோ அல்லது ஒரு வழக்குரைஞரோ இருப்பார்கள். அல்லத்து குறைந்த பட்சம் இதைச் சமாளிக்கப்பணமும் நேரமும் இருக்கும்.

எதுவும் இல்லாவிட்டால் ஒரு நடை முதல்வர் வீட்டிற்குப்போய் சுயவிளக்கம் (அஜீத்) கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

தனி நபராக இருக்கும் நீங்கள் எதற்கும் சட்ட ஆலோசகர் "திரவிய நடராஜன்" போன்றோரிடம் ஒரு மனுப்போட்டு வைக்கவும்.

திரவிய நடராஜன்-சட்டம் நம் கையில்
http://lawforus.blogspot.com/

**

.

BalHanuman said...

தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!

தொடர்ந்து எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்சர்ஸ்.

எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்கு கூட்டமில்லை என்கிற ரீதியிலும் இந்த இரு பத்திரிகைகளும் எழுதின.

உண்மையில் சென்னை நகரில் 42 அரங்குகளில் திரையிடப்பட்டுள்ள எந்திரனைக் காண இப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சத்யம், அபிராமி, எஸ்கேப், ஐநாக்ஸ் போன்ற அரங்குகளில் இப்போதும் டிக்கெட் கிடைப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே (அதாவது ஞாயிறு!) கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது.

தினமணியோ, இன்னொரு படி மேலே போய் திரையுலகையே எந்திரன் ஆக்கிரமித்துவிட்டதாக கட்டுரை ஒன்றை ெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்சர்ஸ். குறிப்பிட்ட நாளிதழ்கள் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muthu said...

தலைவர் சுரேஷ் கண்ணா அவர்களே !

என்ன தான் இருந்தாலும் அந்த கெட்ட எண்ணம் கொண்ட தினமணி, படம் வலையில் வெளியான லிங்க் ஐ அப்பட்டமாக வெளியிட்டது எந்த வகையில் நியாயம் ? சொல்லுங்கள் பாப்போம். ?

என்னதான் சன் குடும்பத்தை பிடிக்காதவர்கள் ஆயினும், கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டாமா, இந்த படத்தில் எத்தனை பேரது உழைப்பு இருக்கிறது என்று ...

இப்படியா அவர்களது உழைப்பை நடு தெருவில் தோலுரித்து மான பங்கம் படுத்துவது.. மிகவும் மோசமான எண்ணம் உடையவர்கள் ... மிகவும் கேவலமான ஒரு வேலையே செய்திருகிறார்கள் ..

அதை ஆதரிக்கும் உங்கள் எண்ணத்திற்கும், நீங்கள் சுட்டி காட்டும் எந்திரன் ஏகாதிபத்தியமும் எந்த வகையிலும் வித்தியாசம் இல்லை.
வெறும் விளம்பரத்திற்காக எதையும் எழுதலாம் என்ற கீழ் மனப்பான்மையை விடுங்கள்.

ராஜகோபால் said...

150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை

சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

Anonymous said...

Not all the 3000 theatres would have sold at an average price of 250 rupees on the first day. It would have been less than 100 rupees. I am damn sure that the collection would not have touched 200 crores even today. It is a strategy to bring out all the black as white.