தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு, 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018
பத்திரிகைச்செய்தி 04-10-2010
சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
அருணன் ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

நன்றி: http://satamilselvan.blogspot.com/2010/10/blog-post.html
suresh kannan
6 comments:
மக்களின் மூடநம்பிக்கை காட்டும் நிஜம் நிகழ்ச்சியில் இது இடபெருமா ?
முன் குறிப்பு: நான் சினிமா ரசிகன் அல்ல.. கடைசியாக பார்த்த சினிமா "Baby's Day Out"...
உங்களுக்கும் RSS & VHP போன்ற கலாச்சார காவலர்களுக்கும் என்னால் வித்தியாசம் காணமுடியவில்லை...
உங்களுக்கு பிடித்தால் பாருங்கள் இல்லையேல் உலக சினிமா பாருங்கள்... எல்லோரும் உங்கள் ரசனைகளை உள்வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது...ம்ம்ம்ம் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை
உங்கள் பதிவிற்கு முதன்முறையாய் வருகிறேன். நல்லதொரு எண்ணத்தில் எழுதி இருக்கிறீர்கள். சமூக சிந்தனை உள்ள பலருடைய கருத்தும் இது போன்றுதான் இருக்கிறது. நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். வாய்ப்பிருந்தால் வாருங்கள்..... ( ithayasaaral.blogspot.com )
//முன் குறிப்பு: நான் சினிமா ரசிகன் அல்ல.. கடைசியாக பார்த்த சினிமா "Baby's Day Out"...
உங்களுக்கு பிடித்தால் பாருங்கள் இல்லையேல் உலக சினிமா பாருங்கள்... //
சரிதானே? தெருவில சின்ன பசங்களுக்கு கஞ்சா விக்கிறவனை பாத்து நாம ஏன் கோவப்படணும்? கஞ்சா பிடிக்காதுன்னா ஒதுங்கிப்போக வேண்டியதானே?
//உங்களுக்கு பிடித்தால் பாருங்கள் இல்லையேல் உலக சினிமா பாருங்கள்... எல்லோரும் உங்கள் ரசனைகளை உள்வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது...ம்ம்ம்ம் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை //
ரங்கா... இந்தப் பதிவின் கவலை ரசனை பற்றியது அல்ல. எந்திரன் படம் பற்றிய விமர்சனமும் அல்ல. எந்திரன் என்கிற சரக்கு விற்கப்படுவதற்காக முன்னெடுக்கப்படும் மட்டமான வியாபாரத் தந்திரங்களைப் பற்றியது.
நான் குடிப்பேன்... மானிட்டர் குடிப்பதும் மேன்ஷன் ஹவுஸ் குடிப்பதும் எனது தேர்வு என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு மக்கள் ஊடகத்தில் "மேன்ஷன் ஹவுஸ் குடியுங்கள்... அதுதான் சுவையாக இருக்கும்" என்று விளம்பரம் செய்வது சரியா என்பதே கேள்வி.
நிறைய பேர் இப்படித்தான் புரிந்து கொள்கிறார்கள்... நியாயமாக எந்திரன் குப்பை என்று விமர்சித்தால், மொத்த தமிழ்சினிமாவுமே (ஒரு சில தவிர்த்து) குப்பை என்றுதான் ஒதுக்க வேண்டும்... ஆனால்...
எந்திரன் மட்டுமே குறிவைக்கப் படுவதன் காரணம் அதை மார்க்கெட் செய்ய அவர்கள் எந்தவித சமூகப் பிரக்ஞையுமின்றி மட்டரக உத்திகளைக் கையில் எடுப்பதால்தான்!
But is this the first film Sun is doing marketing? i guess 80% of the films are from same family.
Lets raise our voice againt all the films. why single out this film alone?
Post a Comment