Wednesday, June 10, 2009

புதுச்சட்டை

என் வலைப்பதிவிற்கு புதுச்சட்டை ஒன்றை அணிவித்து பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் திட்டம். எழுதும் விஷயங்கள்தான் நன்றாக இல்லை, தளமாவது பார்க்க சுமாராக இருக்கட்டுமே.. சட்டை வாங்குவதற்காக தி.நகரா போக முடியும்? இணையத்தில் தேட ஆரம்பித்ததில் நிறைய தளங்கள் கிடைத்தன. ஆனால் அதை எப்படி என் பதிவில் பொருத்துவது என்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.

இந்த கணினி நுட்ப விஷயத்தில் மாத்திரமல்ல, எந்தவொரு தொழில் நுட்ப விஷயத்திலும் என்னைப் போன்றதொரு 'மாக்கானை' பார்க்கவே முடியாது. நீண்ட வருடங்களுக்கு முன் 'கிராபிக் டிசைனிங்' கற்பதற்காக கணினி கல்வி நிலையத்திற்குச் சென்றிருந்தேன். மூன்று மாத கற்பித்தலுக்குப் பின் எனக்கு ஒழுங்காக தெரிந்தது, கணினியை எப்படி 'shut down' செய்வது என்பது மாத்திரம்தான்.

'Free Templates' என்று நிறைய தளங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நமக்குத்தான் இந்த 'free' என்கிற வார்த்தை ரொம்ப பிடிக்குமே. பல் கூட தேய்க்காமல் உட்கார்ந்து நிறைய தேடியதில், இந்த வடிவமைப்பு ரொம்ப பிடித்திருந்தது. எப்படியோ 'முதலிரவு புதுகணவன்' போல் தட்டுத் தடுமாறி, தடவித் தடவி இலக்கை நிறைவேற்றி விட்டதாக நினைப்பு. ஆனால் 48 சைஸ் சட்டை மாதிரி, என்னுடைய 14' மானிட்டரில் பெரிதாக தெரிகிறது.

எப்படி இருக்கிறதென்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த டெம்ப்ளேட்டின் குறைகள், பிரச்சினைகள் பற்றி 'தில்லாலங்கடி' நண்பர்கள் பின்னூட்டத்தில் அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன்.

suresh kannan

44 comments:

Anonymous said...

cool...

சென்ஷி said...

டெம்ப்ளேட் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குது. சைடுல இருக்கறது உங்க படமா?!

நட்புடன் ஜமால் said...

குளுமையாத்தானிருக்கு ...

சென்ஷி said...

டெம்ப்ளேட் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குது. சைடுல இருக்கறது உங்க படமா?!

Anonymous said...

தல... இதுக்கு முன்னாடி இருந்ததே பெட்டரா இருக்கறா மாதிரி தெரியுது. உங்களப் போலவே நானும் ஞானசூன்யம்தான். பொதுவா சொல்றேன்.

பைத்தியக்காரன் said...

உங்கள் பதிவுகளைப் போலவே சட்டையும் நன்றாக இருக்கிறது சுரேஷ் :-)

நானும் 'மாக்கான்'தான் என்பதால் பிடித்திருக்கிறது :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுரேஷ் கண்ணன் said...

அனானிஸ்,சென்ஷி,ஜமால்,பைத்தியக்காரன்,நன்றி.

//சைடுல இருக்கறது உங்க படமா?!//

சென்ஷி: ரொம்ப ஓவர். அதுசரி. எந்த நேரத்துல பதிவு போட்டாலும் உடனே உங்க பின்னூட்டம்தான் முதல்ல வருது. சாப்பிடறது,தூங்கறது, இன்ன பிற விஷயங்கள்.. எல்லாம் கம்ப்யூட்டருக்கு பக்கத்துலதானா? :-)

தமிழினி said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

வால்பையன் said...

ok

not bad

cool!

எவனோ ஒருவன் said...

அதிக பேக்ரவுண்டு படங்கள் இல்லை. சீக்கிரம் லோடு ஆகி விடுகிறது. தாங்கள் விட்ஜெட் ஏதும் உபயோகிக்காததும் இதற்கு ஒரு காரணம்.

தோற்றம் குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை.

அருமை.

Anonymous said...

பார்க்க நன்றாக தான் உள்ளது. சட்டையை எப்படி மாற்றுவது என்று பதிவு செய்தால் இன்னும் உபயோகமாக இருக்கும் :)

கையேடு said...

புது சட்டை நல்லா இருக்குங்க..
ஆனா எழுத்துக்கள் மட்டும் சாம்பல் நிறமாகயில்லாமல் இன்னும் கொஞ்சம் செறிவான நிறமாகயிருந்தால் நல்லாருக்கும்னு எனக்கு தோணுது..

உங்களுக்கும் அப்படி தோணுனா வேற நிறம் முயன்று பாருங்களேன்..

அனுஜன்யா said...

நீலம் பிடித்தம் என்பதால் இந்த டெம்ப்ளேட் பிடிக்கிறது. நானும் உங்களைப் போலவே Technologically challenged தான்.

என்னுடைய புது சட்டை வடகரை வேலன் வாங்கி, இலவசமாகக் கொடுத்தார். 'புதுப் பதிவுகள் மட்டும் இதுல வருமா - இல்ல பழசும் அப்படியே இதுல வந்துடுமா' என்று கேட்ட என்னை, நீங்கள் சொன்னது போலவே, 'கணினியை இப்படி off செய்யணும். இப்போதைக்கு இது போதும்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

New Pinch.

அனுஜன்யா

ஷண்முகப்ரியன் said...

NICE AND COOL.

சென்ஷி said...

//சென்ஷி: ரொம்ப ஓவர். அதுசரி. எந்த நேரத்துல பதிவு போட்டாலும் உடனே உங்க பின்னூட்டம்தான் முதல்ல வருது. சாப்பிடறது,தூங்கறது, இன்ன பிற விஷயங்கள்.. எல்லாம் கம்ப்யூட்டருக்கு பக்கத்துலதானா? :-) //

நீங்க என்னோட ஃபேவரைட் ரைட்டராச்சே.. நீங்க எழுதுனதும் ரஜினி சினிமாவை மொதோ நா, மொதோ ஷோ பாக்குற கணக்கா வாசிச்சுப்புடுறோமுல்ல.. :))))

சுரேஷ் கண்ணன் said...

தமிழினி,வால்பையன்,எவனோ ஒருவன், அனுஜன்யா,ஷண்முகப் பிரியன்,

நன்றி.

//எப்படி மாற்றுவது என்று பதிவு செய்தால் //

கொடுமை.. கொடுமைன்னு கோயிலுக்குப் போனால்...

//இன்னும் கொஞ்சம் செறிவான நிறமாகயிருந்தால்//

கையேடு: எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் எழுத்துக்களின் நிறத்தை எப்படி மாற்றுவது என்று புரியவில்லை. யாராவது...

//ரஜினி சினிமாவை மொதோ நா,//

சென்ஷி: இதுல எதுவும் உள்குத்து இல்லையே? :-))

எவனோ ஒருவன் said...

//ஆனால் எழுத்துக்களின் நிறத்தை எப்படி மாற்றுவது என்று புரியவில்லை. யாராவது...//

http://www.yetho.com/2009/06/blog-post_10.html

☼ வெயிலான் said...

மிக நல்ல வார்ப்புரு. எவ்வித மாற்றமும் செய்ய வேண்டியதில்லை.

Anonymous said...

மொக்க தாங்கல. google readerல் இருந்து ஓடையை எடுத்துறலாம்னு இருக்கேன். முன்னாடி அப்பப்ப நீங்க எழுதுற பிற மொழித் திரைப்படங்களுக்கான அறிமுகங்கள் படிக்க வருவேன்.

சுரேஷ் கண்ணன் said...

எவனோ ஒருவன்,


சக்ஸஸ்! சக்ஸஸ்!!

(தேவர் படத்தோட ஆரம்ப டைட்டில் மாதிரி இருந்தாலும் என்னோட சந்தோஷத்த எப்படி சொல்றதுன்னு தெரியல)

நீங்க சொன்ன மாதிரியே கை நடுநடுங்க html என்கிற அந்த தேவபாஷைல பயந்துக்கிட்டே கை வெச்சேன். நம்பர மாத்திட்டு ப்ரிவியூ பாத்தவுடனே கலர் மாறிடுச்சு. உடனே ரொம்ப தைரியம் வந்து முந்திரிக்கொட்டை மாதிரி கமெண்ட் பாக்சலயும் அதே மாதிரி மாத்தினேன். சரியான்னு தெரியல.

ரொம்ப நன்றி எவனோ ஒருவன். இனிமே எந்த சந்தேகம் வந்தாலும் உங்களுக்குத்தான் முதல் மெயில். நீங்களா துரத்தற வரைக்கும் விடறதா இல்ல. :-))

சுரேஷ் கண்ணன் said...

வெயிலான்,

நன்றி.

//மொக்க தாங்கல. google readerல் இருந்து ஓடையை எடுத்துறலாம்னு இருக்கேன்//

அனானி: நான் நீங்களாக இருந்தாலும் அப்படித்தான் நினைப்பேன். எனக்கே தெரியுது. பாக்கலாம். கொஞ்ச நாள்ல குணமாயிடும்னு நெனக்கறேன். :-)

கையேடு said...

இப்போ நல்லா இருக்குங்க.

கார்த்திக் said...

திருவோடு இருக்கரமாதிரி ஒரு இமேஜ் மேல ஏத்தீருந்தீங்கன்னா இன்னும் நல்லாருக்கும்.

எவனோ ஒருவன் said...

சூப்பர்.
கமண்ட்க்கும் மாறியிருக்கிறதே! கலக்கிட்டீங்க.

//நீங்களா துரத்தற வரைக்கும் விடறதா இல்ல//
என்னால் முடிந்தவரை செய்வேன்.

ஒன்னு சொன்னா கப்புனு புடுச்சிகிறீங்களே... உங்களுக்கு தகவல் கொடுப்பது அவ்வளவு கஸ்டாமாக இருக்காது என நினைக்கிறேன். சில பேருக்கு போன் போட்டு விளக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டும். இருந்தாலும் ஒர்க்அவுட் பண்ணி ’ஓக்கே’ னு அவங்க சொல்றத கேக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

Always Welcome.

கார்த்திக் said...

நம்ம பத்திரி சார் வெச்சிருக்கமாதிரி கமண்டு போடமலையே கமண்ட்ட பாலோ பண்ணுரமாதிரியும் வெச்சிருக்கலாம்.

சுரேஷ் கண்ணன் said...

//திருவோடு இருக்கரமாதிரி//

ஆகா! கார்த்திக் சூப்பர் ஐடியா கொடுத்தீங்க. :-)

//நம்ம பத்திரி சார் வெச்சிருக்கமாதிரி//

மாத்திட்டேன்.

Anonymous said...

சுரேஷ்,

டெம்ப்ளேட் நன்றாகவே இருக்கிறது. கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு உங்கள் மவுசில் உள்ள ஸ்குரோல் பட்டனை மேலும் கீழும் நகர்த்த எழுத்துக்கள் பெரிதாகவும் சிறிதாகவும் மாறும்.

சுரேஷ் கண்ணன் said...

நன்றி. வடகரை வேலன். உபயோகமான தகவல். செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது.

தமிழ்ப்பறவை said...

அழகு...

ராஜ நடராஜன் said...

புதுச்சட்டை நல்லாத்தான் இருக்குது.ஆனா நீங்க யாரோ ஒருவன் கிட்ட HTML தேவபாசையெல்லாம் கத்துகிட்டு அசத்துறீங்கன்னு வீடு சுத்தமா இருக்கறதப் பார்த்தாலே தெரியுது!வாழ்த்துக்கள்.

எவனோ ஒருவன் said...

ராஜ நடராஜன்,
’யாரோ ஒருவன்’ இல்ல, எவனோ ஒருவன்.

ஏற்கனவே பேரு பற்றி நா எழுதுனத படிச்சீங்களா?

எவனோ ஒருவன் said...

//கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு உங்கள் மவுசில் உள்ள ஸ்குரோல் பட்டனை மேலும் கீழும் நகர்த்த எழுத்துக்கள் பெரிதாகவும் சிறிதாகவும் மாறும்.//

அப்புறம்.... மீண்டும் ஒரிஜினல் சைசுக்கு மாற ctrl+0 க்ளிக்கவும்.

சுரேஷ் கண்ணன் said...

தமிழ்ப்பறவை, ராஜநடராஜன் நன்றி.

//மீண்டும் ஒரிஜினல் சைசுக்கு மாற ctrl+0 க்ளிக்கவும்.//

நேற்று இதுதெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் நன்றி.

Boston Bala said...

ஒவ்வொரு பதிவின் அடியிலும் மூன்று பொருத்தமில்லாத புகைப்படங்கள் வருதே... என்ன சாஸ்திரம் :)

சுரேஷ் கண்ணன் said...

//என்ன சாஸ்திரம் :)//

பாலா: :-))

இப்போதுதான் குசும்பனுக்கு அதைப் பற்றி பின்னூட்டமிட்டேன். related posts என்றொரு blogger widget-ஐ இணைத்ததினால் இந்தப்பிரச்சினை என நினைக்கிறேன். இப்போது நீக்கிவிட்டேன்.

தமிழ்ப்பறவை said...

சுரேஷ் சார்... related post widget ஐ ஏன் எடுத்தீர்கள்... அது பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே.. அது ரிலேட்டட் காண்பிக்கிறதோ இல்லையோ, உங்களது பழைய பதிவுகளைக் காட்டுமல்லவா..?! அது புதியவர்களுக்கு ,தங்களின் பழைய பதிவுகளுக்குச் செல்ல வழிகாட்டுமே...
சப்போஸ் இப்போ நீங்க மொக்கைப் பதிவு போடுறீங்கன்னு வச்சுக்குங்க, தலைப்பைப் பார்த்துட்டு,ஆர்வமா வர்ர பயலுக,ரிலேட்டட் போஸ்ட்ல இருக்க உங்க பழைய நல்ல பதிவுகளைப் பார்க்கலாம்ல...
ஹி..ஹி...

சுரேஷ் கண்ணன் said...

//related post widget ஐ ஏன் எடுத்தீர்கள்...//

தமிழ்ப்பறவை: நீங்கள் சொல்லும் காரணம் சரிதான். அந்த நோக்கத்தில்தான் அதை வைத்தேன். ஆனால் அந்த widget-னினால் page load ஆவதற்கு நேரம் எடுக்கிறது என்பது ஒரு காரணம்.

அந்த widget-ல் உள்ள எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதால் வாசிக்க முடியவில்லை என்பது இன்னொரு காரணம். html-ல் திருத்தம் செய்ய முடியாத அளவிற்கு வடிவமைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம்.

தமிழ்ப்பறவை said...

ஓ.கே சார்...புரிந்து கொண்டேன்...

Boston Bala said...

புகைப்படங்களுக்கு பதில், பதிவின் தலைப்பு மட்டும் தெரியுமாறு அமையுங்களேன்... (related posts)

சுரேஷ் கண்ணன் said...

//பதிவின் தலைப்பு மட்டும் தெரியுமாறு//

இணையத்தில் இதற்காக தேடிப் பார்த்ததில் ஏறக்குறைய அனைத்து தளங்களுமே html-ல் உள்ளே ஆப்ரேஷன் செய்யும் வழிமுறைகளையே தந்திருக்கின்றனர்.
கார் மெக்கானிக் போல வண்டியின் கீழே படுத்து செய்யும் வேலை எனக்கு
சரிப்பட்டுவராது. links within தளம் மாத்திரமே எளிதாக பொருத்துமாறு அமைக்கப்பட்டுள்ளது.

'எவனோ ஒருவனிடம்' கேட்டுப் பார்க்கிறேன்.

எவனோ ஒருவன் said...

widget ஐ மெயில் பண்ணுங்கள்... பார்த்துவிடலாம்...

Boston Bala said...

'எவளோ ஒருத்தி'யிடம் கேட்காத உம் male chauvinist நுகபிநி :)

சுரேஷ் கண்ணன் said...

//male chauvinist நுகபிநி :) //

html-ஏ புரிந்து விடும் போலிருக்கிறதே. :-)

எவனோ ஒருவன் said...

சக்சஸ்.... சக்சஸ்....
விட்ஜெட் அருமையாக இருக்கிறது...

ஹோம் பேஜ் ல் படங்களுடனும், ஒரு பதிவை தனியே பார்க்கும்போது எழுத்துக்கள் மட்டும் தெரிகிறதே! அருமை.