நண்பர் ஒருவருக்காக சாலையில் ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அந்த ஐந்து நிமிடத்தை பொறுமையாக கடக்க என்னால் இயலவில்லை. முதல் நிமிடத்தில் இன்னொரு நண்பருக்கு தொலைபேசினேன். 'பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன். மன்னிக்கவும்" என்று பதில் வந்தது. பிறகு மொபைலில் இருக்கிற தேவையில்லாத மெசேஸ்களை அழித்தேன். சாலையைப் பார்த்தேன். நண்பர் வருவதாய் காணோம். மூன்றாவது நிமிடத்திலேயே என் பொறுமை தொலைய ஆரம்பித்தது. தாமதிக்கிற நண்பர் மீது எரிச்சலாய் வந்தது. வீட்டிற்கு தொலைபேச முயன்று தொடர்பு கிடைக்காததால் எரிச்சல் இன்னும் கூடியது. சற்று நேரம் சாலையின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்தேன். திரும்பவும் நண்பர் வருகிறாரா என்று ஒரு தொலைநோக்கு பார்வை பார்த்தேன். வருவதாய் காணோம்.
எரிச்சலின் உச்சக்கட்டத்தில் நண்பருக்கே தொலைபேசி, "என்னங்க, எவ்ளோ நேரம்" என்றேன் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன். என் குரலில் தெரிந்த குரூரம் எனக்கே பீதியூட்டியது.
()
பிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்துப் பேர்து ஏன் அவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. அலுவலகத்தில் கணினியில் வேலை முடிந்த பிறகும் தேவையேயில்லாமல் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறேன். சற்று நேரம் இணையத் தொடர்பிலோ அல்லது மின்தொடர்பிலோ துண்டிப்பு ஏற்பட்டால் கை நடுக்கத்துடன் எப்போது அது சரியாகும் என்ற பதட்டம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும் போது கூட ஒரு சானலில் சற்று நேரம் தொடர்ந்து தங்கவிடாமல் ரிமோட்டை மாற்றி மாற்றி அழுத்தத் தோன்றுகிறது. திரைப்பாடல்களின் ஒரு தொகுப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனம் சட்டென்று இன்னொரு தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை கேட்டு தாவச் சொல்கிறது.
"சும்மா இரு" என்று தத்துவார்த்த ரீதியில் சொல்லப்படும் வார்த்தையைக் கடைப்பிடிப்பது என்பது கேட்ட கணத்தில் எளிதாக தோன்றினாலும் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது புலனாகிறது.
(மீள்பதிவு. http://sureshkannan.posterous.com/-69-ல் பிரசுரமானது)
suresh kannan
About Me
- சுரேஷ் கண்ணன்
- Chennai, Tamil Nadu, India
- மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com
Blog Archive
-
▼
2009
(73)
-
▼
June
(25)
- சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்
- சாக்லேட்
- சிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...
- சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூறாவளி
- 'பட்டர்மில்க்'ன்னா மோரா?
- கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்
- தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே
- அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா
- கமல் தந்த அதிர்ச்சி
- கேள்வி பதிலும் சுயபுராணமும்
- சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...
- ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்
- புதுச்சட்டை
- லட்ச ரூபாய் நடிகை
- ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?
- கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..
- நான்தான் 'தருமி' நாகேஷ்
- விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்
- குழந்தைமையை மறுக்காதீர்கள்
- சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி
- வாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்
- "பசங்க" - இன்னுமா பார்க்கலை?
- கிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்?
- என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு
-
▼
June
(25)
Labels
- சினிமா (73)
- குறிப்புகள் (43)
- பொது (33)
- அனுபவம் (31)
- புத்தகம் (22)
- எழுத்தாளர்கள் (13)
- அயல்சினிமா (10)
- அயல் சினிமா (8)
- நகைச்சுவை (8)
- பொது (8)
- மொக்கை (7)
- பகடி (6)
- இந்திசினிமா (5)
- அரசியல் (4)
- சுஜாதா (4)
- பதிவர் வட்டம் (4)
- ரஜினி (4)
- உபயோகமற்ற குறிப்புகள் (3)
- சமூகம் (3)
- சாரு (3)
- ஜெயமோகன் (3)
- நிகழ்வு (3)
- வன்முறை (3)
- அஞ்சலி (2)
- இசை (2)
- இலக்கியம் (2)
- மீள்பதிவு (2)
- முற்போக்கு (2)
- வாசிப்பனுபவம் (2)
- Reservoir Dogs (1)
- அம்பை (1)
- அரசு ஊழியர்கள் (1)
- அருண் வைத்தியநாதன் (1)
- அறிவிப்பு (1)
- ஆட்டோகிராஃப் (1)
- ஆஸ்கர் விருது (1)
- இரானிய சினிமா (1)
- இலங்கை பிரச்சினை (1)
- இளையராஜா (1)
- உன்னைப் போல் ஒருவன் (1)
- உன்னைப் போல் ஒருவன் (1)
- எண்ணம் (1)
- எஸ்கொபெர் (1)
- ஏ.ஆர். ரஹ்மான் (1)
- ஏ.ஆர்.ரகுமான் (1)
- கன்னடம் (1)
- கற்பிதம் (1)
- காஞ்சிவரம் (1)
- கிரிஷ் காசரவள்ளி (1)
- குசேலன் (1)
- கே.பி.சுந்தராம்பாள் (1)
- கேள்விமீமீ (1)
- கோவிந்த் நிஹ்லானி (1)
- சசிகுமார் (1)
- சர்ச்சை (1)
- சாசனம் (1)
- சினிமா விமர்சனம் (1)
- சிறுகதை (1)
- சுப்ரமணியபுரம் (1)
- சூப்பர் சிங்கர் (1)
- சேரன் (1)
- ஜாக் நிக்கல்சன் (1)
- டென்சல் வாஷிங்டன் (1)
- தமிழ்மணம் (1)
- தேசிய விருதுகள் (1)
- தோப்பில் முஹம்மது மீரான் (1)
- நவீன தீண்டாமை (1)
- நாகேஷ் (1)
- நாடோடிகள் (1)
- நான் கடவுள் (1)
- நூலகம் (1)
- நேர்காணல் (1)
- பதிப்பகம் (1)
- பாடல் சர்வே (1)
- பியர் (1)
- பிரகாஷ்ராஜ் (1)
- பிரியாணி (1)
- பொக்கிஷம் (1)
- பொதுப்புத்தி (1)
- மகேந்திரன் (1)
- மஜித் மஜிதி (1)
- ரியாலிட்டி ஷோ (1)
- வடிவேலு (1)
- வார்த்தை (1)
- விமர்சனம் (1)
- விருது (1)
- விஷால் பரத்வாஜ் (1)
- ஷகிலா (1)
- ஸ்வர்ணலதா (1)
- ஹிட்ச்காக் (1)
6 comments:
- சென்ஷி said...
-
சும்மா இருக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு வடிவேலு ஒரு படத்துல நடிச்சுக் கூட காமிச்சுருப்பாரு.. ஆனா பாருங்க நம்ம மக்கள் வேலையில்லாம இருந்தா சும்மாவா இருக்கேன்னு நக்கலடிப்பானுங்க! :)
- குசும்பன் said...
-
சும்மா இருக்கமுடியாமல் மீள்பதிவு செய்யும் பொழுதே தெரிகிறது...சும்மா இருப்பதும் எம்புட்டு கஷ்டம் என்று:)))
- சுரேஷ் கண்ணன் said...
-
சென்ஷி: நன்றி.
குசும்பன்: உங்கள் கமெண்ட்டை ரசித்தேன். :-) - குப்பன்_யாஹூ said...
-
ஆமா இப்போ நாம் இனைய அடிமை ஆகி விட்டோம். இனைய இணைப்பு நின்று விட்டால் எதிர் படும் மனிதர்களிடம் அந்த கோபத்தை எரிச்சலை வெளி படுத்துகிறோம்.
இணையமும் கூகுளையும் நம் சிந்தனை போக்கை, மாற்றி விட்டன.
குப்பன்_யாஹூ - எவனோ ஒருவன் said...
-
இத படிச்சதுக்கு அப்புறமாதான் யோசிச்சுப் பாத்தேன். உண்மைலேயே சும்மா இருக்குறது கஷ்டம்தான். இந்த மாதிரி உண்மையெல்லாம் எப்படித்தான் உங்களுக்கெல்லாம் புரியுதோ தெரியல. மிக அருமை.
- ஷண்முகப்ரியன் said...
-
சும்மா என்ற சொல்லே வேறு மொழியில் இல்லை என்று நினைக்கிறேன்.