நேற்று 15.07.10 நள்ளிரவு. சாருவின் தளத்தில் இரண்டு அமர காவியங்கள் எழுதப்பட்டன.. மன்னிக்கவும் படைக்கப்பட்டன. அவற்றை வாசிக்கத் தவறியவர்கள் அபாக்கியவான்கள். அவ்வாறான, தங்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை தவறவிட்ட அஞ்ஞானிகள், ஞானத்தை அடைய நள்ளிரவில் எழுதப்பட்டு சில மணிநேரங்களில் நீக்கப்பட்ட அந்த இரு பதிவுகளை நகலிடுகிறேன்.
இடுகை 1
வா வா வா பார்த்துவிடலாம்...
திரு. சாரு,
உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து படித்துவருகிறேன். நீங்க எப்பப் பார்த்தாலும் ஜெயமோகனை திட்டறீங்க. ஜெயமோகனும் தொடர்ந்து உங்களைத் திட்டறாரு. இது உங்களுக்கே கேவலமாக இல்லையா? எதற்காக இப்படி சின்னபுள்ள மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. அவன் கிள்ளிட்டான். அவன் நொள்ளிட்டான் என்று சொல்லி சண்டைபோட்டுக்கிட்டு இருக்கீங்க. உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. பெரிய எழத்தாளர் நீங்க. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. உடையறதவிட வளையறது மேலு.
இது உங்களுக்கு மட்டுமில்ல. ஜெயமோகனுக்கும் சேர்த்துதான்.
(பெயர் நீக்கப்பட்டுள்ளது)
திரு …க்கு
உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இந்த சமூகத்துக்கும் கலாச்சார சூழலுக்கும் விரோதிகள் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து. உண்மையில் நீங்கள் ஜெயமோகனையும் என்னையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறீர்கள். சரி, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் அவர் தன்னுடைய உயிரையும் ரத்தத்தையும் கொடுத்து எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? சத்தியமாகப் படித்திருக்க மாட்டீர்கள். அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் து்ணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும். உங்களைப் போன்ற மத்தியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அது தான். சரி, இது போன்ற மத்தியஸ்தர்களைப் பற்றித்தான் நான் 300 பக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். தாந்தேயின் சிறுத்தை என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். அதையும் நீர் படித்திருக்க மாட்டீர். இப்படி ஜெயமோகனையும் படிக்காமல், சாரு நிவேதிதாவையும் படிக்காமல் இருவருக்கும் அறிவுரை சொல்ல வந்த நீர் யார்? உமக்கு இந்த அறிவுரையைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம்…
15.7.2010.
11.27 p.m.
இடுகை 2
தெருநாய்களுக்கு ஒரு எச்சரிக்கை..
ஏய் அறிவுக் கொழுந்தே
எனக்கும் ஜெயமோகனுக்கும் என்ன பிரச்சினை என்று உனக்குத் தெரியுமா? எங்கள் எழுத்தை ஒரு பக்கமாவது நீ படித்திருக்கிறாயா? சுமார் 20 ஆண்டுக் காலமாக ஜெயமோகனை நான் விமர்சித்து வருகிறேன். அந்த வரலாறு உனக்குத் தெரியுமா? நீ யார்? 20 ஆண்டுக் கால விமர்சன பாரம்பரியம் தொகுக்கப் பட்டிருக்கும் தாந்தேயின் சிறுத்தை என்ற 300 பக்க நூலின் ஒரு பக்கத்தையாவது நீ படித்திருக்கிறாயா? இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா…
15.7.2010.
11.46 p.m.
விளிம்புநிலை மனிதர்களுக்காக எழுதுவதாக தொடர்ந்து சாரு செய்யும் அதீத பாவனை, தன்னுடைய வன்மத்தின் மூலமாகவே அம்பலப்பட்டுப் போனது துரதிர்ஷ்டம்தான். மற்ற நேரங்களில் நாகரிகக் கனவானாகவும், மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் தன்னை விந்து விற்றவன், ஜேப்படித்திருடன் என்று விளிம்புநிலை மனிதனாக சித்தரித்து தற்காத்துக் கொள்ளும் சாருவிற்கு சக விளிம்புநிலை மனித வேசியின் யோனி கேவலமான ஒன்றாக தெரிவதும் வசவாக அதை பயன்படுத்துவதும் நகைமுரண். தன்னுடைய வளர்ப்பு பிராணிகளைக் கூட பெயரிட்டு அழைக்கும் அவைகளை நாய் என்று சொல்லாத முதிர்ச்சியுடைய சாரு, ஒரு சகமனிதர்களை, வாசகர்களை, தன்னை விமர்சித்து கேள்வி கேட்கிறார்கள் என்கிற காரணத்திற்காக, 'தெருநாய்கள்' என்று விளிப்பதையும் என்ன சொல்வது?
இது நொட்டை, அது நொள்ளை என்று ஊரில் உள்ள அனைத்து விஷயங்களையும் நபர்களையும் சக எழுத்தாளர்களையும் இவர் திட்டிக் கொண்டேயிருப்பாராம். "ஏம்ப்பா இப்படி சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே" என்று யாராவது கேட்டால் அவர் மீது வன்மத்துடன் சைக்கோத்தனமாக பாய்வாராம்.இத்தனை வருட இலக்கியப் பயிற்சியும் சுழற்சிமுறை சாமியார்களிடம் கற்ற தியானமும் இவருக்கு இதைத்தான சொல்லித் தந்திருக்கிறது போலும்.
உணர்சசி வேகத்தில் எதையோ எழுதிவிட்டு, பின்னர் மனம் மாறியோ, கோழைத்தனத்துடனோ, திருந்தியோ சாரு நீக்கியதை, இப்படி அம்பலப்படுத்த வேண்டுமா என சிலருக்குத் தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இந்தப் பதிவுகளை வாசித்தவுடன் எனக்கு முதலில் சாருவின் மீது தோன்றியது அனுதாபம்தான். சாலையில் செல்வோரையெல்லாம் ஆபாசமாக திட்டும் மனநோயாளியின் மீது ஏற்படும் அனுதாபத்தைப் போன்றதுதான் அது. ஆனால் சாரு இவ்வாறு சைக்கோத்தனமாக எழுதுவதும் பிறகு அதை சாமர்த்தியமாக அழித்துவிடுவதும் முதன்முறையல்ல. சமீபத்தில் கூட சக எழுத்தாளரின் அப்பாவி குடும்ப உறுப்பினரை 'மனநோயாளி' என்று எழுதப்பட்ட பதிவை (இதை இவரோ அல்லது இவரது அல்லக்கைகளில் ஒருவரோ எழுதியிருக்க்க்கூடும்) தன்னுடைய தளத்தில் இட்டு அதை சிலாகித்து மகிழ்ந்தவர். சில நாட்களிலேயே அந்த இடுகைகளை நீக்கி விட்டது மட்டுமன்றி, அவ்வாறு எழுதப்பட்ட மூல வலைப்பதிவையே பிறகு காணோம்.
மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைப்பதும் மோசமான மொழியில் கடிந்து கொள்வதும் சகஜமான ஒன்றுதான். நான் கூட இதை விட ஆபாசமான வார்த்தைகளை நேர்ப்பேச்சுகளில் சண்டைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் டாஸ்மாக்கில் கட்டிங் விட்டு சாலையில் புரளுபவனுக்கும் தன்னை நோபல் பரிசு பெறும் தகுதியுள்ள ஒலக எழுத்தாளனாக பாவனை செய்பவருக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டல்லவா? பொதுவில் ஒன்றை எழுதும் போது அதற்கான பொறுப்புணர்ச்சியோ, முதிர்ச்சியோ ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படையான தேவையில்லையா? இந்த பிரகஸ்பதியெல்லாம் மனநோய், பாஸிஸம் என்று பதிவு எழுதுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.
தன்னுடைய இணைய எழுத்தின் பெரும்பகுதியை சக எழுத்தாளர்களின் மீதும் இணையப்பதிவர்களின் மீதும் வன்மத்தோடு பாய்வதிலேயே செலவழித்து விட்டு திடீரென்று 'நாங்கல்லாம் எழுத்தாளங்கடா' என்று பாசம் காட்டுவதும் வாசகரின் மீது பாய்வதும் .... பள்ளிக்கூடச் சிறுவர்களின் சண்டை கூட இவர்களை விட முதிர்ச்சியாக இருக்கும் போலும்.
இந்தப் பதிவை வாசித்துவிட்டு சாரு என் மீதும் இதை விட அதிக வன்மத்துடன் பாயலாம். பார்ப்போம். இதையெல்லாம் மீறி (பழைய) சாருவை அவருடைய பாசாங்கில்லாத இலக்கிய எழுத்துக்காகவும் சில பிரத்யேக நகைச்சுவைகளுக்காகவும் நேசிக்கிறேன் / வாசிக்கிறேன்.
சம்பந்தப்பட்ட பகுதிகள் சாருவால்தான் எழுதப்பட்டதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இந்த SCREEN SHOTS.
இடுகை 1 / இடுகை 2
suresh kannan
56 comments:
உங்க கடமை உணர்ச்சி ஒரு அளவே இல்லையா சு.க. என்னைப்போல சாருவின் எழுத்துகளை தொடர்ந்து படிப்பவர்கள் மிஸ் பண்ணினதாக நினைக்கும் இந்த இரண்டு பதிவுகளையும் இங்கே மீள்பதிவிட்டமைக்கு சாருவின்ட ரசிகர்கள் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிப்பார்கள்!
எனக்கென்னவோ இவருக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது (விமர்சிப்பதிலும், சிலாகிப்பதிலும்) என்றே நினைக்கிறேன்.
அவர் சில முக்கிய ஆக்கஙகளை செய்திருக்கிறார் என்றாலும் அவரே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவர் எழுதிய 50000 பக்கங்களுக்கும் மேலான படைப்புகளில் சிலாகித்து சொல்லக்கூடிய படைப்புகள் மிகக் குறைந்த சதவீதமே.
இன்றைய இணையப் பெருவெளியில் அவரை விட, அவரையும் தாண்டிய பல எழுத்துகளை படிக்க முடிகிறது.
அவரை தூக்கி நிறுத்துவதற்கு முக்கிய காரணம் அவரைவிட அவர் எடுக்கும் ‘எதிர்’ நிலைபாடுகள்தான் காரணமோ என்று நினைக்கிறேன். அவரும் அதற்கேற்றபடி தனது கலகத்தை ‘கால்குலேட்’ செய்து நடத்துகிறார்.
இந்தமாதிரி பதிவு போட்டு அம்பலபடுத்தும் அளவிற்கு அவர் ஒர்த் இல்லை. அவரைத் தாண்டி வந்துவிடுங்கள்.
அன்பு சுரேஷ் கண்ணன்
எனக்கும் உங்களை போலவே அந்த இரண்டு பதிவுகளையும் படித்த உடன் அனுதாபம் வந்தது. அதுவும் அதில் உபயோகப் படுத்தி இருந்த வாத்திகள் , சைபர் குற்றம் மூலம் நடவடிக்கை எடுக்க கூடிய வார்த்தைகள். ஒரு வாசகரை, சக மனிதரை மதிக்க தெரியாத மனிதர்களை பற்றி நாம் விவாதிப்பதும், நேரம் செலவு செய்வதும் தப்பு தான்.
ஸ்ரீதர் நாராயணன் சொல்லி உள்ளது மாதிரி இவற்றை தாண்டி /தவிர்த்து வாழ நாம் பழகி கொள்வோம்.
I think all are for sake of publicity.... Be careful பிச்சைப்பாத்திரம்
காலம் காலமாக நடந்து வருவது தானே இது!
ஆனந்தவிகடன் படிக்கிறீர்களா!?
//இந்தமாதிரி பதிவு போட்டு அம்பலபடுத்தும் அளவிற்கு அவர் ஒர்த் இல்லை. அவரைத் தாண்டி வந்துவிடுங்கள்//
வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்
சுரேஷ் ...
அந்த உலக எழுத்தாளன் பண்றது எல்லாமே ஒரு 'Publicity stunt...' ஜீரோ டிக்ரி படிச்ச நான் சொன்னா மட்டும் கேட்டுக்குவாராமா???..கோபப்படுகிறவரெல்லாம் பாரதியாகிட முடியுமா??
ஆனா ஜெயமோகன அறிமுகப்படுத்திவச்ச ஒரே காரணத்துக்காக சாருவ பாராட்டலாம்....
மிக சரியான நேரத்தில் பதிவை எழுதியுள்ளீர்கள் சுரேஷ். விகடனில் அவரின் போலி முகம் மூலமாக அவர் தேடும் விளம்பரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்தில் ஒரு மதிப்பிற்குரிய இயக்குனரிடம் பேசிக் கொண்டிருந்த போது சாரு தங்கு நடிக்க வாய்ப்பு தருமாறு தந்த தொல்லையை சொல்லி வெளியே சொல்ல முடியலனு வருத்தப்பட்டார்.
ஆனால் அந்த ஆளைப் பற்றி யாராவது இந்த மாதிரி சொன்னால் 'மனநோய்' என்று அவரும் அவரது சொம்பு தூக்கிகளும் சொல்வார்கள். இப்போ இதற்கு அவர்களின் பதில் என்ன???
அட இன்னுமா அவர படிக்குறீங்க.... அவரு ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர்ல் எழுதுனத படிச்சு சிரிச்சுகிட்டு போறதை விட்டுட்டு.... அவரு ப்ளாக்கெல்லாம் போய் படிக்குறீங்களே...
:)
இந்த பதிவுக்காக நீங்கள் வாங்கப் போகும் வசவை நான் சேமித்து வைத்து, அவர் அதை நீக்கிய பின்பு, உங்களுக்குத் தருகிறேன் தோழர்.
(பழைய) சாருவை அவருடைய பாசாங்கில்லாத இலக்கிய எழுத்துக்காகவும் சில பிரத்யேக நகைச்சுவைகளுக்காகவும் நேசிக்கிறேன் / வாசிக்கிறேன்.
நூறு சதவிகிதம் சரி.
அந்தாளு ஒரு வெத்துங்க! மலையாளாத்தில இவருதான் மோகன்லால் மம்மூட்டிக்கு அப்புறம் பேமசுன்னு சீன் போட்டு திரியிறாரு. எனது சில மலையாள நண்பர்களிடம் கேட்கும்போது மலையாளத்தில் நல்ல கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார்கள். இங்கே சில பணக்காரர்களுக்கு சொம்பு தூக்கிய படி உயர்தர பார்களில் வெளிநாட்டு சரக்குகளுக்கு கொக்கோகோலாவை மிக்ஸ் செய்து கொடுக்கும்/குடிக்கும் இவர் கேரளாவில் கோக்குக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மாவீரன் என்று சொல்லி திரிவது சரியான காமெடி. இவருக்கு "எலக்கிய வடிவேலு" என்று பட்டமளிக்கிறேன். :)
திரிஷா.. சாரி... அதிஷாவை வழிமொழிகிறேன்
//சாருவை அவருடைய பாசாங்கில்லாத இலக்கிய எழுத்துக்காகவும் சில பிரத்யேக நகைச்சுவைகளுக்காகவும் நேசிக்கிறேன் / வாசிக்கிறேன்//
:-))))))))))))))))))))))))))))))
இதையெல்லாம் மீறி (பழைய) சாருவை அவருடைய பாசாங்கில்லாத இலக்கிய எழுத்துக்காகவும் சில பிரத்யேக நகைச்சுவைகளுக்காகவும் நேசிக்கிறேன் / வாசிக்கிறேன்.
இது போன்ற காரணத்துக்காக சிலர் சாருவின் சைக்கோ த்னங்களை ஏற்றுக்கொள்ள துணிந்துவிடுகிறார்கள். என்னை கேட்டால் சில எழுத்து, சில விமர்சனம் தவிற பல நேரம் சாரு முன் வைக்கும் எழுத்து சைக்கோவின் கிறுக்கள் அத்ற்க்கு யாரவது ஒருவர் சாருவை செருப்பால் அடிப்பதை (எழுத்தில்தான்) தொடர தான் வேண்டும்.
சாருவின் சைக்கொ கிறுக்கள்கலாலும், மன்ம்பிறழ்ந்த கருத்துகளுக்காக்வும் அவரை ஒதுக்குவது சரிப்டாது ஏனென்றால் மீண்டும் ஒரு முறை சாத்ரணா வேலை செய்யும் நம் மீது அந்த சைக்கொதனம் பாயும்.
ஒரே வழி ஒவ்வொரு சைக்கோ செயலுக்கும் இது மாதிரி பதிவுகளாக செருப்பால் அடிப்பதை தொடருவோம்...
சர்ரு ஒரு பர்பெக்ட் கெப்பல்ஸ்த்னம் மிக்கவர் , சைக்கொ என்ற கலவை இஅதை உடன் இருப்பவர்கள் ரசிப்பது வேறு விடயம் அந்த "கெப்பல்ஸ் + சைக்கொத்தனத்தை" பற்றியும் எழுத வேண்டும்.
சரி இன்னும் நெகடிவ் ஒட்டு விழல?
சார் ...அவர் விகடன் ல எழுத ஆரம்பித்த உடன், நான் விகடன் வாங்குவதையே நிறுத்தி விட்டேன் .....
அவரை (அவருடைய எழுத்துக்களை ) படிப்பதால் சில நேரங்களில் நமக்கு தான் மண்டை குடைச்சல் ...
அவரெல்லாம் வாயால வடை, பஜ்ஜி, பிரியாணி எல்லாம் போடுவாரு ....
கடிதம் அனுப்பி வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்ட அந்த அப்பாவி வாசகருக்காக வருத்தப்படுகிறேன்.
குரங்குக்கு புத்தி சொன்ன குருவி மாதிரி ஆகி விட்டார் அந்த வாசகர்.
நிற்க, அர்த்த ராத்திரியில் அரங்கேறிய இந்த அசிங்கங்களை ஸ்கிரீன் ஷாட்டோடு வெளிப்படுத்திய உங்களுக்கு என் நன்றிகள்.
நண்பர்களுக்கு,
1) எப்போதடா சாரு சர்ச்சையாக ஏதாவது எழுதுவார் என்று காத்திருந்து ஆதாரமெல்லாம் சேகரித்து பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசியமெல்லாம் எனக்குக் கிடையாது. நேற்றிரவு தற்செயலாக சாருவின் தளத்திற்குச் சென்ற போது இதைக் கண்டேன். காலையில் எப்படியும் இதை அழித்துவிடுவார் என்று யூகித்தேன். எனவேதான் ஒரு நினைவுச் சின்னத்திற்காக இதன் ஸ்கீரின் ஷாட்களை எடுத்து வைத்தேன். மற்றபடி துப்பறியும் பத்திரிகையாளராகவோ, கலாச்சாரக் காவலராகவோ ஆகும் எண்ணம் எனக்குக் கிடையாது.
2) ஒர் எழுத்தாளர் இப்படி வெட்கக்கேடாக நடந்து கொள்கிறாரே என்பதுதான் என் வருத்தமே ஒழிய, வேறு எந்த அடையாளமில்லாத தனிநபரும் இவ்வாறு பதிவிட்டால் அதை பொருட்படுத்தாமல்தான் செல்ல வேண்டியிருக்கும். இதைவிட ஆபாசமான மொழிகளையெல்லாம் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் காணலாம். இணையப் பெருவெளியில் இதையெல்லாம் தவிர்க்க முடியாது.
3) சாருவை சுட்டிக் காட்டுவதின் மூலம் என்னை யோக்கிய சிகாமணியாக நிறுவிக் கொள்ளும் நோக்கமும் எனக்கில்லை. நானும் எந்தவொரு மனிதனையும் போல கடவுள்+சாத்தானின் கலவைதான்.
4) சாருவின் இத்தகைய தொடர்ச்சியான அபத்தங்களில் சமயங்களில் பொறுக்க முடியாமல் சிலவற்றைப் பற்றி எழுதும் போதே எனக்கு சலிப்பாகவும் சில நண்பர்கள் சொல்வது போல் ஏன் இந்த சின்னத்தனமான அரசியலில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. எனவே இனி சாரு என்ன உளறினாலும் அதைப் பற்றி எழுதக்கூடாது என்று -தற்காலிகமாக - முடிவு செய்திரு்க்கிறேன். என் பதிவை வாசிப்பவர்களும் இதை விரும்பவி்ல்லை என்று பின்னூட்டங்களின் மூலமும் தனிமடல்களின் மூலமும் தெரியவருகிறது.
வால்பையன்: நான் ஆனந்தவிகடனை வாசிப்பதை நிறுத்தி பல வருடங்களாகிறது.
Just ignore those persons. He must be a psychopathy.
I wounder you are all still spending your time on his blog.
ஹி ஹி ஹி .. இந்த வேலை எல்லாம் நான் மார்ச் மாசமே செய்துட்டேன்.. இந்த லிங்க் போய் பாருங்க http://ennaduidu.blogspot.com/2010/03/blog-post.html
Thanks to Google reader, I was able to read those posts and wasn't surprised when he deleted them.
It didn't create any effects in me, as Sridhar Narayanan said, I have already crossed him and he is now in the level of adult's "Anbulla Alli" Q& A section.
கீழே உள்ள வரிகள் விகடனில் இவர் எழுதி வரும் தொடரில் ...
"சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த வரை யாருக்கும் என்னைத் தெரியவில்லை. இப்போது பார், பக்கத்து வீட்டுக்கெல்லாம் பரவிவிட்டது"
சாருவை எழுத்தாளர் என்று சொல்வது மற்ற தமிழ் எழுத்தாளர்களை
அவமதிப்பது ஆகும்.
நான் சாருவையும் படிப்பதில்லை. ஜெயமோகனையும் படிப்பதில்லை. இதைச் சொல்வதால் அவமானமும் எனக்கு இல்லை.
பந்திக்கு முந்துங்கிற மாத்தி ஸ்கிரீன் ஷாட்டுக்கு முந்திட்டீங்க.. :-) இன்னிக்கு நைட் ஏதாவது நடக்குதான்னு பார்க்கலாம்!
சாரு ஒரு சுவாரசியமான எழுத்தாளர்.
தனது வாழ்வின் முரண்பாடான பக்கங்களை பாசங்கில்லாமால் எழுத முயல்பவர். அந்த முயற்சியில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு புத்தி சாதுர்யமில்லாத மனிதர். மற்ற அனைவரையும் போல அவரும் ஒரு சாதாரண மனிதர். ஒவ்வொரு மனிதனின் மன ஆழத்திலும் தன்னைப் பற்றிய ஒரு உயர்ந்த சூப்பர் ஹீரோ பிம்பம் இருக்கும். [பதிவுலகில் பலப பல வண்ணங்களில் பெரும்பாலும் நிறைந்துள்ளது இது மட்டுமே] அதற்கான அன்கீகாரத்துக்கான போராட்டமே அடிப்படை தேவைகளுக்கினையான ஒரு போராட்டம். இருபது வருடங்களாக வாசிப்பதையும் எழுதுவதையும் மட்டுமின்றி வேறெதுவும் செய்யாத, அதற்காக எதிர்பார்க்கும் அங்கீகாரத்தில் நூறில் ஒரு சதவீதம் கூட கிடைக்காத ஒரு மனிதரின் மனப போராட்டங்களே அவர் எழுத்துக்கள். – அவரது பாஷையில் ‘உன்மத்த நிலை’ – என்னைப பொறுத்த வரை அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நல்ல மனிதர் அவரது மன உணர்வுகள் மதிக்கப் பட வேண்டியன. இப்படி அவர் வார்த்தைகளை குடைந்து ஆராய வேண்டிய அவசியமில்லை. தலைப்பு உங்கள் தரத்துக்கு தளத்துக்கு பொருத்தமாக இல்லை. தனிப்பட்ட முறையில் ஒரு விமரிசன மெயில் அனுப்பி அவரிடம் எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொண்டவன் நான். ஒரு மனிதன் இப்படி பைத்தியக்காரத்தனமாக எதற்கு கோபப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என சிந்தித்துப் பார்த்ததில் அவரின் மனநிலை ஓரளவு புரிந்தது. அவர் ஒரு உலக ரீதியான சாமர்த்தியமில்லாத, தெளிவில்லாத, குழப்பங்களால் நிறைந்த, தோல்வி மனப்பான்மையால் பீடிக்கப்பட்ட, நுண்ணிய மன நல கோளாறுகளால் பாதிப்பப்பட்ட ஒரு மிக நல்ல மனிதர் என்பது என் எண்ணம.
சார் ,
நேத்து இரவே பார்த்து அதிர்ச்சி ஆகிட்டேன் சார் ..,அப்புறம் கம்ப்யூட்டர ஆப் பண்ணி நேர போய் உட்கார்ந்து ௦ஜீரோ டிகிரி படிக்க உட்கார்ந்துட்டேன் ;)
எனக்கென்னமோ ரெண்டு பேரும் கூட்டுன்னு தெரியுது..
உள்ளதில் சிறந்த காமெடி, அவரது பக்தர் ஒருவர் இப்படி டுவீட்டி இருக்கிறார்.
"ஜெமோ அடிவருடிகள் நள்ளிரவில் கூட சாருஆன்லைனை ரெஃப்ரெஷிக்கொண்டே இருக்கிறார்கள்! :-)"
சாருவின் நாராச எழுத்துக்களுக்குள் எங்கே ஜெமோ வந்தார் எனத் தெரியவில்லை. ஜெமோ'வை ரசிக்காமலே கூட ஒருவரால் சாருவை முழுதுமாக வெறுக்க முடியும். அத்தனை தகுதிகளை அவர் கொண்டுள்ளார்.
இது குறித்து நான் எழுதிய பதிவு... http://bit.ly/dfK1Vr
@ செல்வகுமார்
தயாராக இருங்கள்.
ஒன்றா தாக்குங்கள், இல்லை தாங்குங்கள். இடைப்பட்ட நிலை நம்மவர்க்கும், அவர் சார்ந்தவர்களுக்கும் ஆகாது.
எதோ ஒரு வேகத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு,தவறை உணர்ந்து,அதே வேகத்தில் அதை நீக்கியும் விட்டார்.
அதை நீங்கள் இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது,சுரேஷ்! of course, legally you are right;but ethically?
(கிழித்து எறிந்த கடிதத்தை,ஒட்டி வைத்து படிப்பது அவ்வளவு நாகரீகமான செயலும் அல்ல;)
என்ன பிச்சைப்பாத்திரம் இது, ஏதாவது ஒலக சினிமாவிற்கு விமர்சனம் எழுதுவீர்கள் என்று பார்த்தால் இப்படி சாருவின் வலைப்பதிவை திறந்து வைத்துக்கொண்டு அதை இரவெல்லாம் திரும்ப திரும்ப ரீலோட் பண்ணி அந்த பதிவை பார்த்தவுடன் கபாலென்று அதை காப்பி செய்து போதாக்குறைக்கு ஸ்க்ரீன்ஷாட்டும் எடுத்து அதை பதிவேற்றமும் பண்ணி விட்டீர்களே. எக்ஸ்ட்ரா ஒரு 300 ஹிட்ஸ் கிடைத்திருக்குமா? 32 பின்னூட்டங்களும் சம்பாதித்து விட்டீர்கள். சாரு ஒரு ஹிட்ஸ் சுரங்கம் போல் தெரிகிறதே. நானும் சாருவை பற்றி எழுதுகிறேன் எத்தனை ஹிட்ஸ் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்
என்னது பதிவ தூக்கிட்டாரா !!!!!!!!!!!!!!!!!!!!!
நித்யானந்தா மேட்டர்லையே தெரிஞ்சுடுட்சே அவரின் லட்சணங்கள்.....
It is looking more and more like Charu Nivedita is mentally unstable. Just like Selvakumar said, he seems to have a very high opinion of himself and feels that the world has not given him, his due.
He does not seem to have the mental strength to accept that he is a failure, because of which his repressed anger is exploding at inopportune moments.
In this age of non-stop TV and Internet, no writer can command the attention of lakhs of readers, like the writers of seventies and eighties did. In fact, I don't see any stellar successes amongst the contemporary tamil writers.
I'm afraid he is going to turn suicidal very soon.
சாரு எழுதுவது அவ்ரது உள்ளத்தில் தோன்றுவதையே :)) அவர் இடுகையை தூக்குவது அவரது சொம்புதூக்கிகள் சொன்னதைக்கேட்டுதான்.
அவரது நினைப்பெல்லாம் அவரது எழுத்துக்களுக்கெல்லாம் நாம் உயிரைவிட்டுக்கொண்டு அவரது காலடியில் விழுந்து கிடக்க வேண்டும், அதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர் அதில் ’சுகமாக’ இருக்க வேண்டும்.
இவரது முகமூடிகளை எழுத்தளவிலாவது கிழிக்கப்படவேண்டியதே., தனிப்பட்ட வாழ்வில் புகுந்து பார்த்தால் பலரது வாழ்க்கையை கெடுத்து கொண்டிருப்பவர். இது உண்மை
வாய்ப்பு கிடைக்கும்போது அபத்தங்களை எழுதுங்கள், விழிப்புள்ளவர்கள் பிழைத்துக்கொள்ளட்டும்.
-வெட்கத்துடன் சாருவின் முன்னாள் சொம்புதூக்கி
சுஜாதாவிற்கு இறந்ததிற்கு அப்புறம் நான்தான் நம்பர் 1 எழுத்தாளர் (!) என்று சாரு சொல்லும்போதே நாமெல்லாம் உஷாராயிருக்கனும், இவருக்கு ஏற்கனவே கழன்ற நட்டு மேலும் ரொம்பவே லூசாயிடுச்சு என்று.
இப்படியே போனால் எப்போது கழன்று எவர் மேல் விழுமோ தெரியவில்லை. எதற்கும் அவருடைய சொம்பு தூக்கிகள் சற்று விலகி நின்று கொள்வது நல்லது :)
//அவர் ஒரு உலக ரீதியான சாமர்த்தியமில்லாத, தெளிவில்லாத, குழப்பங்களால் நிறைந்த, தோல்வி மனப்பான்மையால் பீடிக்கப்பட்ட, நுண்ணிய மன நல கோளாறுகளால் பாதிப்பப்பட்ட ஒரு மிக நல்ல மனிதர் என்பது என் எண்ணம.//
இது பாராட்டா விமர்சனமா? புரியலயே ;)
saaruvai poy periya ezhuththaalarnnu solrathai naan vanmaiyaa kantikkiren. inthaalai yellaam ezhuththaalarnne sollakkootaathu... appatichchjonnaa, inthumathi, lakshmi, santilyan, kalki, vaasan, annaamalai, paalakumaaran, raajenthirakumaar, subha, sujaathaa, pattukkottaipirapaakar... innum palarai ennannu solrathaam?... akave saau enpavar oru mananoyaali enru ventumaanaal sollalaam. allathu nithyaananthaavin seetar enrum sollaam
when Sujatha was alive Charu was writing very bad about him in his blogs, he even wrote sujatha should be arrested for writing dialogues for Boys movie.
Recently I saw Charu presiding the function for Sujatha memorial and
he was showing his samudaya kobam on people for not recognizing
Sujatha during his time.
I thought it was good andar belti...
He always shows his poli samudaya kobam (sometimes he compares himself to bharathi)
Another joke is about his kerala agitations (naanum porali thaan)
Bharathi didn't projected that he is a porali, Others should say that he is a porali.
Thanks,
Venu
சாரு நிவேதிதா என்ன வேண்டுமானால் எழுதிவிட்டுப் போகட்டும். ஆனால் அவருடைய சுய இன்பத்துக்கு மற்றவர்களுடைய வாய்களைப் பயன்படுத்த நினைப்பதுதான் உறுத்துகிறது. இதை சரியான வார்த்தைகளில் சந்திக்கு இழுத்திருக்கிறார் csk.
தொடரட்டும்.
49 வது ஓட்டு என்னுது. இது வரைக்கும் ஒரு மைனஸ் கூட விழாதது குறிப்பிடத் தக்கது.
மன்னிக்கனும், முந்தைய பின்னூட்டத்தில் 49 என்பதை 29 என்று மாற்றி வாசிக்கவும்.
சுரேஷ்கண்ணன்
இதில் இருந்து நான் கற்று கொள்ளும் ஒரே ஒரு பாடம்
இரவு பதினொன்று மணிக்கு மேல் வலைப்பதிவு பக்கம் வரக் கூடாது என்பதே (தூக்கம் மற்றும் இன்ன பிற தாக்கங்களால் நாமும் விரும்பத் தகாத பதிவுகளும், பின்னூட்டங்களும் இட நேரிடும்)
பதிவிற்கு பொருத்தமான தலைப்பு. சாருவின் அல்லக்கைகள் அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றால், இந்தளவிலாவது மீட்கலாம். இல்லையென்றால்..."அந்த கடவுளாள கூட காப்பாத்தமுடியாது" (எப்புடி யூஸ் ஆகுது பாருங்க).
ஒரு கருத்தில் முதிர்ந்த எழுத்தாளர் என்ற பெயருக்கு தகுதியே இல்லாத ஒரு நபர இந்த சாரு. இவரைப்பற்றி இவ்வளவு விமர்சனம் செய்வதே தேவை அற்றது எம்று நினைக்க தோன்றுகின்றது.
சாரு புறக்கணிக்கப்பட வேண்டியவரே. அப்படி ஒன்றும் படித்தே தீரவேண்டியது என்று எதையும் இவர் எழுதிவிட்டாரா என்ன? தெரிந்தால் சொல்லுங்கள். உதாரணத்திற்கு ஜெயமோகனின் ‘காடு’ நாவலை குறிப்பிடலாம். காடும் காடு சார்ந்த வாழ்க்கையும் பற்றி அறிந்துகொள்ள இதைப் படித்தே ஆக வேண்டும். கொஞ்சம் பொழுதுபோக்குக்காக மட்டுமே படிக்கக்கூடிய சாருவை அவரது குணம் காரணமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும்.. நீங்கள் எல்லாம் அவரைப் பற்றி எழுதி விளம்பரம் தேடித் தராதீர்கள்!
என்ன செய்வது படித்துவிட்டதனால் எழுதவேண்டியிருக்கிறது :P
http://vurathasindanai.blogspot.com/2010/07/blog-post.html
Mr. Suresh Kannan - Ungal kelvikkana bathil
http://parthichezhian.blogspot.com/2010/07/blog-post_3353.html
சுரேஷ்.. ஒன்னு கவனிச்சீங்களா... 'சாரு' என்கிற ஒற்றை வார்த்தை மந்திரத்தால் சுழலுகிறது ப்ளாக்கர் உலகம்... தமிழர் உலகம் என்றும் சொல்லலாம்... உண்மையில் எந்த மனிதன் கொண்டாடப்படவேண்டியவன்(ர்) தான்.. இதில் மாற்றுகருத்துயில்லை...
ரொம்ப சீரியஸான் பின்னுட்டமாகிடுச்சு... என்ன பண்ணலாம் ...Hurray.. I am the 50th
//'சாரு' என்கிற ஒற்றை வார்த்தை மந்திரத்தால் சுழலுகிறது ப்ளாக்கர் உலகம்.//
கொடுமை , கேனத்தனமாக ஏதாவது செய்தே உயிர்வாழும் நிர்பந்தத்தில் சாரு , அவர் எழுதிய எதையுமே படிக்காமல் ஜட்டி தாங்கும் அடிப்பொடிகள் .
//அவர் எழுதிய எதையுமே படிக்காமல் ஜட்டி தாங்கும் அடிப்பொடிகள் //
ஈசு தமிழ் profiloda வாருங்கள் உரையாடுவோம் ... அப்புறம் எவனுக்கும் ’ஜட்டியாக’ எப்பொழுதும் விரும்புவதில்லை...
http://vijaymahendran.blogspot.com/2010/07/blog-post_26.html
pls see this link....
போலிகளில் 4 வகை உண்டு:
1. அரிப்பு உள்ள போலிகள்: இவர்கள் ஒரு போலித்தனத்தை செய்யும் முன் திட்டமிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவர்கள். இந்த வகை போலிகள் ஒரு போலித்தனத்தை செய்யும் அரிப்பு ஏற்படும் போது அந்த அரிப்பிற்கு அடிமையாகி பின்விழைவுகளைப் பற்றி யோசிக்க முடியாமல் அப்போலித்தனத்தை செய்து மாட்டிக் கொள்வார்கள்.
2. திட்டமிட வக்கில்லாத போலிகள்: இவர்கள் ஒரு போலித்தனத்தை செய்யும் முன் திட்டமிட வேண்டும் என்பதை அறிந்தவர்கள். ஆனால் எப்படி திட்டமிட வேண்டுமோ அதை அறியாமல் மாட்டிக் கொள்கிறவர்கள்.
3. normal போலிகள்: ஊரில் உள்ள பெரும்பாலான போலிகள் இந்த வகைதான்.
4. grandmaster போலிகள்: இவர்கள் ஒரு போலித்தனத்தை திட்டமிட்டு செய்யும் போது பிரமாதமாய் திட்டமிட்டு செய்வார்கள். இவர்களை நாம் கண்டே பிடிக்க முடியாது. மாட்டிக் கொள்ளவே மாட்டார்கள். அதிர்ஷ்டக் குறைவினால் இவர்களாகவே மாட்டிக் கொண்டால்தான் உண்டு.
எழுத்தாளர் சாரு திட்டமிட வக்கில்லாத ஒரு போலி. மருதன், பிச்சைபாத்திரம் பிளாகின் ஆசிரியர் சுரேஷ்கண்ணன் போன்ற பலரும் சாருவின் போலித்தனத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். மருதனாலும், சுரேஷ் கண்ணன் போன்றவர்களாலும் கூட கண்டுபிடிக்க முடியாதபடி பிரமாதமாய் திட்டமிட்டு ஒரு போலித்தனத்தை செய்யும் திறமை சாருவுக்கு இல்லை. அப்படி செய்யும் திறம் இருக்கும் ஒருவரை மருதனாலோ அல்லது சுரேஷ்கண்ணன் போன்றவராலோ அல்லது வேறு யாரோலோ கூட இவ்வளவு எளிமையாக கண்டு பிடித்து விட முடியாது. இதனால் சாருவின் போலித்தனத்தை மிகத் திறமையாக கண்டுபிடித்து விட்டதாக மார்தட்டிக் கொள்ள யாருக்கும் தகுதி இல்லை என்றே சொல்வேன்.
...d...
நீங்கள் எதற்கு சாரு நிவேதிதாவின் பதிவை அவர் டெலிட் செய்யும் முன் காப்பி செய்து அவரை போட்டு விடுகின்றீர்கள்? இந்த சிறுமைத்தனத்தையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடும் பெருந்தன்மை உங்களிடம் ஏன் இல்லை? ஏன் போட்டு விடுகின்றீர்கள்? வேறு மாதிரி யோசியுங்கள்...
நீங்கள் தப்பித்தவறியோ அல்லது சாரு மாதிரி வேண்டுமென்றேவோ செய்யும் ஒரு தவறை செய்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வெளியே தெரிந்தால் நீங்கள் ஒளிந்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய அந்த தவறை d என்பவன் தெரிந்து கொண்டு விட்டான் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது உங்களை d போட்டு விட்டு உங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைப்பீர்களா? உங்களை d கண்டு கொள்ளாமல் பெருந்தன்மையோடு விட்டு விட வேண்டும் என்று நினைப்பீர்களா? உங்கள் பதில் என்ன? உங்களுடைய விருப்பம் d உங்களை மன்னித்து கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும் என்பதுதானே? அடுத்தவனிடம் நீங்கள் விரும்பும் பெருந்தன்மையை நீங்கள் சாரு போன்ற மற்றவருக்கு காட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை. அடுத்தவனிடம் எதை விரும்புகிறீர்களோ அதை நீங்கள் உங்களிடமே கடைபிடிப்பதில்லை என்று சொல்கிறேன். U live in a way which u really dislike. உங்களுக்கு பிடிக்காதபடி வாழ்ந்து கொண்டு செய்வதை எல்லாம் சரி என்று நம்பிக் கொண்டு உள்ளீர்கள். நீங்கள் ஏன் சாருவை போட்டு விட வேண்டும்? கண்டிப்பாக நீங்கள் விளம்பரம் தேடிக் கொள்ள அந்த வேலையை செய்யவில்லை. பின் ஏன்? நீங்கள் சாருவின் ஃப்ராடுத்தனங்களை personalஆக பார்க்கின்றீர்கள். உங்களை அவர் ஏமாற்றுவதாய் உணர்ந்து personalஆக பார்க்கின்றீர்கள். அதான் இந்த எரிச்சல் உங்களுக்கு. அது மட்டுமில்லை. வெளியே ஒரு மனிதன் மோசமானவனாய் இருந்தால் உங்களைப் பற்றிய உண்மை எதுவோ அதிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. நான் தத்துவத்தில் இப்போது நுழைகிறேன். இது பெரிய விஷயம். இருந்து சுருக்கமாய் இங்கு. வெளியே நீங்கள் மேன்மையானவரை தேடக் காரணம் உண்மையில் நீங்கள் எப்படிப்பட்டவரோ அந்த உண்மையில் இருந்து தப்பித்துக் கொள்ள...அதாவது உங்களை உங்களுக்கே அழகாய் காட்டும் கண்ணாடியாக வெளியே ஒரு மனிதரை நீங்கள் தேடுகின்றீர்களே அதற்கு எதிராக சாரு இருந்து விட நீங்கள் உங்களை அழகாய் உயர்வாய் உணர முடியாமல் போகின்றீர்கள்..So அந்த உண்மையை உங்களுக்கு உணர்த்திய சாருவை குத்துகின்றீர்கள்.
உள்ளார்ந்த நிலையில் மிகத் தீவிரமாய் உங்களை நீங்கள் புரிந்து கொள்ளாத தன்மையையே இது காட்டுகிறது. இப்படிப்பட்ட நீங்கள்தான் ஆழ்மனம் என்றெல்லாம் பேசுகின்றீர்கள். நான் தனிப்பட்ட முறையில் உங்களை குத்தவில்லை. உங்களைப் போல் தன் தகுதியே தெரியாமல் அடுத்தவனின் தகுதியை குத்தும் எல்லோர் சார்பாய் உங்களை குத்துகிறேன்...d...
^^உங்கள் பெயரை கூட போட வக்கில்லாமல் அனானி என்னும் முகமூடியில் ஒளிந்து கொண்டு பேசும் நீங்கள் எல்லாம் மனசாட்சியை விமர்சிப்பது செம காமெடி...சரி சரி வந்த வேலையை பாருங்கள்...நல்லா சத்தமா ஜால்ரா அடித்தால்தான் அய்யாவின் அருள் உங்களுக்கு கிடைக்கும் கமான் ஸ்டார்ட்
Post a Comment