மூலப்படத்தில் காஃபி ஷாப்பில் சர்வராக பணிபுரியும் ஷான் பென், தனது அடுத்த நிலை பதவி உயர்விற்காக (காஃபி தயாரிப்பாளர்) போராடிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அது வெற்றிகரமாக தோற்றுப் போகும். ஏழு வயது உறைந்து போன மனநிலையில் இருந்து சூழ்நிலைகளின் மூலம் கற்றலில் அவர் முன்னேறத் துடிப்பதின் அடையாளமாக அது இருக்கும். ஆனால் தமிழில் அது விக்ரம் சாக்லேட் டப்பாவை துடைப்பதோடு நின்று விடுகிறது. அது மாத்திரமல்லாமல், ஷான்பென் பாத்திரம் நுண்ணுணர்வு கொண்ட பாத்திரம் என்பது அவர் தனது உணவு வகையை கறாராக தேர்வு செய்வதிலிருந்தும், பீட்டில்ஸ் இசை அறிந்து வைத்திருப்பதிலிருந்தும், தனக்காக வாதாடும் வக்கீலே தன்னை அவமதிப்பதாக உணரும் போது வெடிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். தமிழில் இப்படியாக எதுவுமில்லை. ஒரு பாத்திரத்தை மிக நுட்பமாக பிரத்யேகமாக வடிவமைப்பதற்கும் மொண்ணையாக காட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
ஷான் பென்னின் நண்பர்களாக வரும் மாற்றுத் திறனாளிகள் நால்வருமே பிரத்யேக தனி அடையாளங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தனது அன்றாட உரையாடலில் உலக சினிமாக் காட்சியை உதாரணம் காட்டிக் கொண்டேயிருப்பார். ஆனால் தமிழில் அந்த நால்வருமே மொண்ணையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். காலர் பட்டனை இறுக்கக் கட்டிவிட்டு குளறி குளறிப் பேசினால் அவர்கள் மனநலம் குன்றியவர்கள். அவ்வளவுதான். பழைய கால ஜெய்சங்கர் படங்களில் ஹீரோ, முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வில்லனின் இடத்திலேயே நடமாடுவான். யாருக்கும் அவனை அடையாளம் தெரியாது. சமகால தமிழ் சினிமாவும் பாத்திர வடிவமைப்பு விஷயத்தில் காலத்தால் உறைந்து போய் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.
ஆங்கிலப்படத்தில் குழந்தையின் தாய், அது பிறந்தவுடனே தந்தையிடம் கொடுத்து விட்டு போய்க் கொண்டேயிருப்பாள். ஆனால் தமிழில் அவ்வாறு வைத்து விட முடியுமா? தமிழ் இயக்குநர்கள், பண்பாடு, கலாசாரம் குறித்த கவலையுடன் இந்தக் காட்சியை மாற்றி அமைத்ததாக முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளக்கூடாது. 'லேடீஸ் ஆடியன்ஸ்'-ன் வருகை பாதிக்கப்படலாம், அவர்கள் சங்கடப்படலாம்; எதிர்ப்பு வரலாம் என்கிற வணிக நோக்கம் சார்ந்த சிந்தனையே அந்தப் பாத்திரத்தை இறந்து போவதாக சித்தரிக்கிறது. அவ்வப் போது போட்டோவை காட்டினால் சென்டிமென்ட்டுக்கும் ஆகுது பாருங்கள்.
படத்தின் மிக முக்கிய அம்சமே, மன வளர்ச்சி குன்றியவனால், அதாவது ஏழு வயதுக்குரிய மனநிலை கொண்டவனால் எப்படி ஆறு வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண் குழந்தையை பொதுச் சமூகம் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளுடனும் கற்றல்களுடனும் வளர்க்க முடியும் என்று அடிப்படை மனிதஉரிமை சார்ந்து நீதித்துறை தன் பார்வையை முன்வைப்பதுதான். சட்டத்தின் பார்வையில் நோக்கும் போது அது சரியானதொன்றுதான். குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு அதுதான் நல்லது. தந்தையின் பாசம் குறித்த மிகையுணர்ச்சியுடன் இயங்கினாலும் ஆங்கிலப்படம் இந்தப் புள்ளியையும் அடிநாதமாக கொண்டிருக்கும். ஆனால் தமிழிலோ சட்டத்தை ஏதோ மோசமான வில்லனைப் போல சித்தரித்திருப்பார்கள்.
இப்படியாக, ஹாலிவுட்டிலிருந்து உருவப்பட்ட தெய்வத்திருமகள், தமிழ் சினிமாவின் சம்பிரதாயமான கச்சடாக்களால் பிசையப்பட்டு எத்தனை மோசமானதொரு பண்டமாக கெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கமாகவே நிறுவ முடியும். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி மூலப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு, தெய்வத்திருமகள் ஒரு கொடுமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தெய்வத்திருமகளையொட்டி, தமிழ் சினிமா சூழலில் இவ்வாறான முயற்சிகளுக்கு சராசரி பார்வையாளர்களின் பொதுப்பார்வையில் தோன்றும் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.
1) தமிழ் சினிமாவில் தொடர்ந்து வணிக மசாலாக்களை உள்ளடக்கிய மோசமான திரைப்படங்களே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தெய்வத்திருமகள் போன்று அபூர்வமாக வெளியாகும் நல்ல திரைப்படங்களை உங்கள் மேதமையை காட்டிக் கொள்வதற்காக இப்படி குதறியெடுக்கிறீர்களே, இது நியாயமா?
மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டிருப்பது இதுதான். குத்துப்பாடல், ஆபாச நகைச்சுவை, பஞ்ச் டயலாக் வெற்று வீராப்புகள் போன்ற வணிகநோக்கு சினிமாக்களின் வடிவமைப்புகளைத் தாண்டி அல்லது அதைத் தவிர்த்து ஒரு சினிமா வந்தாலே அது 'நல்ல சினிமா' என்கிற உணர்வு நமக்குள் தோன்றி விடுகிறது. ஊடகங்களும் சம்பந்தப்பட்ட இயக்குநர்களும் இதை இன்னும் ஊதிப் பெருக்கி 'உலக சினிமா' 'சர்வதேச தரம்' 'ஆங்கிலப்படங்களுக்கு நிகராக' என்றெல்லாம் தம்பட்டமடித்துக் கொள்கிறார்கள். (இவ்வாறான போலித்தனங்கள் அல்லாமல் 'வணிக நோக்கத்திற்காகத்தான் படமெடுக்கிறேன்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்ளும் பேரரசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி..போன்றவர்களை அந்த ஒரு காரணத்திற்காகவே பாராட்டித் தொலைக்கலாமோ என்கிற நிலைக்குத் தள்ளி விடுகிறது இவர்களின் போலித் தம்பட்டங்கள்).
சர்வதேச அளவில் வெளியாகும் சிறந்த படைப்பாளிகளை, சினிமாக்களை தொடர்ந்து அவதானிப்பதின் மூலம் 'நலல சினிமா' என அறியப்படும் இவ்வகையான போலிகளை உடனேயே அடையாளம் காண முடியும். போலிகள் என்றால் கூட பரவாயில்லை. மோசமாக நகலெடுக்கப்பட்ட போலி என்பதுதான் கொடுமை. மோனாலிசா படத்தை காப்பியடிக்கிறேன் பேர்வழி என்று கொல்லங்குடி கருப்பாயியின் படத்தை வரைந்து வைத்தால் எப்படி? (கருப்பாயியின் ரசிகர்கள் உடனே பாய வேண்டாம். ஓர் உதாரணத்திற்காகச் சொன்னது).
தமிழ் சினிமாக்களைப் பற்றி எழுதும் போது சற்று அதீத கோபமும் மேதமைத்தனத்தை பறைசாற்றிக் கொள்வதான பாவனையும் வெளிப்படுவதில் சற்று உண்மையிருக்கலாம். நல்ல கலையை நுகர்பவர்களுக்கு தன்னிச்சையாக வெளிப்படும் உணர்வுதான் அது. குட்டி குட்டி தேசங்களிலிருந்து கூட மகத்தான திரைப்படங்கள் வெளியாகும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும், பண்பாட்டு பின்புலமுள்ள தேசத்திலிருந்து பெரும்பாலும் குப்பைகளே வெளியாவது குறித்து ஆதங்கமும் கோபமும் கூட உபகாரணங்கள். அதனால்தான் பாலைவனத்தில் இரண்டு நாட்கள் நா வறண்டு நடந்தவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கிடைத்தைப் போன்று 'ஆரண்ய காண்டம்' போல அபூர்வமாக நல்ல முயற்சிகள் வந்து விடும் போது சற்று உயரமாகவே தூக்கிக் கொண்டாடும் உணர்வு தோன்றி விடுகிறது.
2) ஆங்கிலம் தெரியாதவர்களும், உலக சினிமாக்களைப் பார்க்கும் ரசனையும் வாய்ப்பும் இல்லாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு - அது திருடப்பட்டால்தான் என்ன - அதைப் போன்ற கதைகளைக் கொண்ட படங்களை தமிழில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறதே? அதில் என்ன உங்களுக்கு பிரச்சினை?
சத்யராஜூம் கவுண்டமணியும் நடித்த நகைச்சுவைக் காட்சியொன்று. இரண்டு பேரையும் லாக்கப்பில் போட்டுவிடுவார்கள். கவுண்டமணி அவமானத்திலும் பயத்திலும் புலம்பிக் கொண்டிருக்க, சத்யராஜ், கொட்டாவியுடன் எழுந்து சொல்வார். 'இந்த லாக்கப்லதான் கொசுத் தொல்லையே கிடையாது'.
ஆக.. தமிழ் சினிமா ரசிகர்களின் நிலைமையும் இப்படித்தான் ஆகி விட்டது. எந்த சூழலுக்கும் ஊழலுக்கும் பழகி விடும் தன்மையும் எதையும் சகித்துக் கொண்டு வாழும் தன்மையும் சினிமாவிற்கும் பொருந்திப் போய் விட்டது போலும். எனவேதான் அரைவேக்கான படைப்போடு திருப்தியடைந்து விடுகிறான். ஒரு நல்ல எழுத்திலிருந்து, படைப்பிலிருந்து, சினிமாவிலிருந்து பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று இன்னொரு படைப்பை உருவாக்குவதில் தவறொன்றுமில்லை. இன்னொரு பண்பாட்டின், கலாச்சாரத்தின் பாதிப்புகளோடு மரபுத் தொடர்ச்சியுடன் பாதிப்புடன் உருவாவதுதான் (உருவுவது அல்ல) கலையின் வரலாறு.
ஒரு நல்ல படைப்பினால் பாதிப்படைந்து அதற்கு உரிய மரியாதையை அளித்து அதையும் தாண்டி ஒரு படி உயர்ந்து நிற்கிற கலைப்படைப்பாக உருவாக்குபவரை நாம் கலைஞன், படைப்பாளி என்லாம்.
ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக நிகழ்வது வேறு. எந்தவொரு சர்வதேச சினிமாவையும், சினிமா ஆர்வலர்களையும் தாண்டி மிக ஆவலாக எதிர்பார்ப்பவர்கள் அதன் இயக்குநர்கள்தான் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் சராசரி பார்வையாளனின் மனநிலைக்கு எது ஒத்துவருமோ, இதமாக இருக்குமோ அந்தப் படத்தின அவுட்லைனையும் சில காட்சிகளையும் மாத்திரம் சுட்டு அதற்குரிய மரியாதையையும அளிக்காமல் வணிக நோக்கத்திற்காக தமிழ் சினிமாவின் சம்பிதாயமான கச்சாடாக்களை அதில் பிசைந்து தந்து மூலத்தையும் அவமரியாதை செய்து விட்டு அதை 'சுய படைப்பாக' பிரகடனம் செய்வதும் எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.
இதை சம்பந்தப்பட்ட குழு மாத்திரம் செய்யாமல் பெரும்பாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையே இந்த களவாணித்தனத்திற்கு உடன்போகிறது. ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காத மாஃபியாத்தனமான கட்டுப்பாட்டோடு அமைதி காப்பது மட்டுமன்றி, இந்த போலிப் படைப்புகளை வாய்கூசாமல் புகழவும் செய்கின்றனர். தெய்வத்திருமகளின் பத்திரிகை விளம்பரங்களை கவனித்தால் தினந்தோறும் ஒரு இயக்குநர் அதைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகளை முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றனர். அந்த வரிசையில் ஓர் இயக்குநர் சொன்னது "இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களின் வரிசையில் தெய்வத்திருமகளை வைக்கலாம்". 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' என்று ஓவராக கூவும் நகைச்சுவைக்காட்சி நினைவிற்கு வருகிறதா? இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், இது போன்ற திருட்டுப் படைப்பு இயக்குநர்களும் நடிகர்களும் தொலைக்காட்சிகளில் 'திருட்டு விசிடிகளில் பார்க்காதீர்கள்' என்று வைக்கும் வேண்டுகோள்கள்தான்.

இவ்வாறான திருட்டுக்களை 'தமிழில் பார்க்க இயலும் ஒரேவாய்ப்பிற்காக' நாம் ஆதரிப்பதும் அதற்கு உடன்போவதும் எத்தனை பெரிய தவறு?
இன்னொன்று. உலக சினிமா என்று கருதப்படும் படைப்புகள், ஒரு சராசரி பார்வையாளனுக்கு புரியாது, ரசிக்க முடியாது என்று உலவும் கருத்துக்கள் எல்லாம் ஒரு மாயை. முயற்சி ஏதும் செய்யப்படாமல் தாழ்வு மனப்பான்மையின் முனையில் நின்று சொல்லப்படுபவை. இன்று உலக சினிமா பார்வையாளர்களாக இருக்கும் பெரும்பான்மையோர் அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து வந்தவர்கள்தான். நம்முடைய ரசனையை நாமே தாழ்த்தி மதிப்பிட்டுக் கொள்வதும் அதையே சொல்லி்த் திரிவதும் அறியாமையே அன்றி வேறில்லை.
3) ஊர்ல உலகத்துல எவனுமே திருடலையா? என்னமோ நீங்கதான் ரொம்ப யோக்கியம் போல சுவுண்டு வுடறீங்க? ஒலக சினிமா பார்த்துக் கிழிக்கிற நீங்களே நெட்லதானே இருந்துதானே அதையெல்லாம் டவுன்லோட் செய்யறீங்க?
என்னைப் பொறுத்தவரை இப்படியாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்ப்பது நிச்சயம் தவறுதான். அதை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். ஒரு படைப்பிற்கு தகுந்த சன்மானம் அளிக்காமல் நுகர முயல்வது நிச்சயம் அயோக்கியத்தனம்தான். (இம்மாதிரியான கட்டணங்களில் அதிகம் கொள்ளையடிப்பது இடைத்தரகர்கள்தான் என்பது வேறு விஷயம்). அதனால் தமிழில் நல்ல சினிமா முயற்சியாக அறியப்படுபவைகளை அரங்கில் சென்று பார்ப்பது என்பதை ஒரு தார்மீக நியாயமாக சுயக்கடடுப்பாடாக வைத்துள்ளேன்.
ஆனால் சினிமா மீது அதீத ஆர்வமுள்ளதைத் தவிர வேறெந்த நோக்கமும் அல்லாத தனிநபர் செய்வதற்கும் அதையே பல கோடிகள் சம்பாதிப்பதற்கான ஒரு சாதனமாக உபயோகித்துக் கொள்ள முயலும் வணிகர்களுக்கும் வித்தியாசமுள்ளதா இல்லையா? அது மாத்திரமல்ல. மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை 'தமிழின் உலக சினிமா' என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும்? இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல.
4) மூலப் படைப்பை acknowledge செய்யாதது அத்தனை பெரிய குற்றமா என்ன? சிலாகிக்கப்படும் அந்த மூலப்படைப்பே இன்னொரு பிரதியின் நகலாக இருக்கும் வாய்ப்பிருக்கிறதே?
இருக்கலாம். ஆனால் அது நிறுவப்படாத வரை நாம் அறிந்திருப்பதுதான் மூலப்படைப்பாக இருக்க முடியும். வெளிநாட்டுத் திரைப்படங்களை நககெலடுப்பது என்பது சமீபத்தில் துவங்கினதொன்றோ அல்லது கமல்ஹாசன்தான் இதை நிறையச் செய்திருக்கிறார் என்பதோதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சினிமா என்கிற நுட்பம் இங்கு இறக்குமதியானவுடன் கூத்து, நாடக வடிவம்தான் அப்படியே திரைப்படச் சுருளுக்குள் புராணப்படங்களாக சென்றன. அது தீர்ந்தவுடன், மக்களின் மனநிலையும் மாறினவுடன் சமூகப்படங்கள் உருவாகத் துவங்கின. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் பிரதான நடிகர்களாக புழங்கின காலகட்டத்திலேயே வெளிநாட்டுத் திரைப்படங்களும் அயல்மாநிலத் திரைப்படங்களும் (வங்காளம்) அனுமதி ஏதும் பெறப்படாமல் தமிழில் அதன் பிரத்யேக மசாலா கலந்து உருமாறத் துவங்கின. திரைத்துறையினர் மாத்திரம் அறிந்திருந்த இந்த ரகசியங்களும் சர்ச்சைகளும் பார்வையாளர்களின் கவனத்திற்கு வராமலே போனதால் பெரிதும் எவ்வித சர்ச்சையும் உருவாகாமல் போனது. தமிழ் சினிமாவின் பிரம்மாக்களின் பெருமையும் அதுநாள் வரை காப்பாற்றப்பட்டு வந்தது.
ஆனால உலக சினிமா பற்றிய தேடலும் நுட்பம் காரணமாக அதை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் கூட பிரம்மாக்கள் அதையே தொடர்வது, சமூகத்தை முட்டாள்களின் கூட்டமாக, வணிகர்களின் பார்வையில் தங்கள் பொருட்களின் நுகர்வோர்களாக மாத்திரமே பார்ப்பது கொடுமை. என்றாலும் கெளதம் மேனன், சசி, வெற்றிமாறன் போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. புதுமைப்பித்தனின் படைப்பிற்கும் தாம் உருவாக்கிய திரைப்படத்திற்கும் வெளிப்படையான ஒற்றுமை ஏதுமில்லாமலேயே 'அதன் பாதிப்பில்தான் 'உதிரிப்பூக்களை' உருவாக்கியதாக அறிவித்து திரைப்படத்திலும் அத்ற்கான முறையான ஒப்புதலை அளிததார் மகேந்திரன். அதுதான் ஒரு கலைஞனின் அடிப்படை அறமாக, நேர்மையாக இருக்க முடியும்.
suresh kannan
35 comments:
'like' :)
சரியான பதிவு பாஸ்.. இத சொன்னா ரசனை இல்லாதவனு கிண்டல் பண்றானுங்க.. I am Sam ல் இருந்த நுட்பம் 10 சதவிகிதம் கூட DVM ல் இல்லை.. இந்த காபிகளை பற்றி நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன் இங்கே
கெளதம் மேனன்????
ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
இயக்குனர்கள் ஆங்கில படத்தை திருடி தமிழ் படம் எடுக்கலாம் ! ஆனால்அயல் நாட்டில் வாழும் நாங்கள் ஆன்லைனில் படம் பார்க்ககூடாத ?
ஒட்டுமொத்த தமிழ் சினிமா குறித்த தங்கள் பார்வையில் எனக்கு சில எதிர்கருத்துக்கள் இருப்பினும், காப்பி அடித்தல் குறித்து எழுதிய இப்பதிவுக்கு ஹாட்ஸ் ஆப். என்னைப்போன்ற சாமான்யர்களுக்கு சினிமா குறித்த பார்வையை விசாலமாக்கும் வண்ணம் இயங்கும் தங்கள் வலைப்பூவிற்கு வாழ்த்துகள்!!
I fully agree with your view point. sending you a detailed letter to your email id.
என்று தணியும் சுதந்திர தாகம்...
என்று மடியும் இந்த அடிமைகள் மோகம்?
கெளதம் மேனன் மட்டும் இடிக்குது ... மற்றபடி வழக்கம்போல் விமர்சனம் சூப்பர்.
கெளதம் மேனன் மட்டும் இடிக்குது ... மற்றபடி வழக்கம்போல் விமர்சனம் சூப்பர்.
நல்ல கட்டுரை. ஐயம் சாமில் கதாபாத்திரங்கள் நுணுக்கமாக படைக்கப்பட்டதை அருமையாக சுட்டிக்காட்டி இருக்குறீர்கள். அம்மாதிரி கதாபாத்திரங்களை நுணுக்கமாக படைப்பதற்கு கொஞ்சமாவது மனோதத்துவம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது அத்தகைய கதாபாத்திரங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து உருவாக்க வேண்டும். பாண்டி பஜாரில் திருட்டு டிவிடில் படத்தை பார்த்து காப்பியடிக்கும் நம் இயக்குனர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
உலக சினிமா சராசரி மனிதனுக்கு புரியாது என்பது மாயை என்று சொன்னது நச்சென்று இருந்தது. 'பைசக்கிள் தீஃப்' போன்ற உலகப் படங்கள் நம்மாளுங்களுக்கு எப்படி புரியாமல் போகும்? இந்தக் கருத்து கௌதம் மேனன் போன்ற மேதாவி இயக்குனர்களால் பரப்பப்படும் ஒன்று. இவனுக மக்களுக்கு ரசனை இல்லைன்னு சொல்லுவானுக. ஆனால் இவனுகளுக்குத் தான் ரசனையே கிடையாது.
நம்ம மக்களுக்கு அந்த மாதிரி உலகப் படங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை அவ்வளவு தான். நாம் உலகப் படங்களை போட்டு நம்ம மக்களை பார்க்கச் சொன்னால், அவர்கள் நம்மை விட நன்றாக ரசித்து பார்ப்பார்கள்.
//மூலப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு, தெய்வத்திருமகள் ஒரு கொடுமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. //
மூலப்படத்தைப் பார்க்காமலும் அதே அனுபவம்தான் அமைந்தது.
//
மூலப்படத்தைப் பார்க்காமலும் அதே அனுபவம்தான் அமைந்தது. // unmai
அருமையான பதிவு,கெளதம் மேனன்,வெற்றி மாறன்????ஏன்னு புரியல? இப்போ இருக்குற திருடங்க லிஸ்ட்-ல மொத வருவது கெளதம் மேனன்
very nice one....
nice.... Hats off to Mr. Mahendren Sir.....
இதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு?
தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை
தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு
சுதந்திரமாக டைட்டில் கூட வைக்க முடியாத சமூகம் இது. இவர்களுக்கெதற்கு (என்னையும் சேர்த்து தான் ) உலகத் தரமான படங்கள் எல்லாம்! நகலெடுப்பதையே மிகப் பெரும் உழைப்பாக சிலிர்த்துக் கொள்ளும் சூழல் தான் தற்போது உள்ளது...!
நம்மால் முடிந்தது...இந்தப் போலிகளைப் பற்றிப் பேசி விவாதிப்பதில் நேர விரையம் செய்வதை விட அந்தந்த ஒரிஜினல்களை பார்த்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான்... உங்கள் ரெகமண்டேஷனில் விட்னஸ் ஃபார் ப்ராசிகியூஷன் பார்த்தேன்!அற்புதமான கோர்ட் டிராமா! இப்படி மழை வராத ஆகாயத்தைப் பார்த்துக் கத்திக் கொண்டிருப்பதற்கு பதில் நல்ல விதைகளை விதையுங்கள்..புண்ணியமாக இருக்கும்!
நன்றி!
அட... இந்த இயக்குநர் லகான், கிரீடம் என்று ஒரேயொரு படத்தை மட்டுமே தழுவி எடுப்பதில் சமர்த்து.
‘நாளைய இயக்குநர்’ போன்ற நிகழ்ச்சிகளில் மதன் & பிரதாப் போன்றோர், ‘நிறைய படங்களைப் பாருங்க...’ என்று சொல்வதை ‘அதை அப்படியே எடுங்க!’ என்று புரிந்து கொள்வதன் ஆபத்து இது.
பட்டாசு கிளப்பிடிங்க. Once of your best post.
சுரேஷ் கண்ணன் மிக அருமையான சாட்டையடி கட்டுரை,இடையிடையே வந்த அந்த கவுண்டமணி சத்யராஜ் நகைச்சுவை,சூப்பர்.சேம் ப்ளட்.
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க!!!,அதே தான் எனக்கும் இங்கே தினத்தந்தி படிக்கையில் தோன்றியது,கூட்டுக்களவாணிகள் என்றால் சரியாக இருக்கும்.
if u want to create hypertext link in buzz for a google profile use this way
if u want to create hypertext link for marudhan profile
just type @marudhan@gmail.com
within the buzz and click post....
u must know a person email id for doing this way of creating html link...
how to find email id of a person to whose google profile u r going to create html link in buzz?
u and that person must mutually follow each other in google plus...if u both follow each other type @ within buzz...then email id of tha person will be shown in drop down format....use it...d
நி நில் நிலா எங்க ?இப்படி சொல்லித்தான் அனுஷ்காவ கரக்ட் பண்ண முடியும்!!
I am Samல் வரும் Michelle Pfeiffer என்ற வக்கில் அப்படத்தில் அழகாய் இருந்தாள். ஆகவே 1983 ஆம் ஆண்டு அவள் நடித்து வெளிவந்த scarface என்ற படத்தை பார்த்தேன். இளமையில் அவளிடம் எந்த அழகுமே தெரியவில்லை. சில மனிதர்கள் வயது ஏற ஏறத்தான்(மரங்களைப் போல்)அழகாகவும் கவர்ச்சியாகவும் ஆவார்கள் போல் உள்ளது. d
எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.
u know about buzz..google documents...but u dont know about google form with 100% width...see it here
https://docs.google.com/spreadsheet/embeddedform?formkey=dDgwazVPTEVmc1lHbC12OVNra3k2Y3c6MQ
....d...
//மூலப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு, தெய்வத்திருமகள் ஒரு கொடுமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை//
சுரேஷ்,
இப்படத்தைப் பற்றி ஊடகங்களில் வந்த விமர்சனங்களில் ஆகச் சிறந்ததாக இதைச் சொல்வேன்.இதுவரை இப்படம் ஒரு அப்பட்டமான மலினமான நகல் என்பதை அறியாமலோ அல்லது மறைத்துவிட்டோ அளிக்கப்பட்ட வானளாவிய புகழுரைகள் பெரும் மனச்சோர்வை அளிப்பதாக இருந்தது.சார்பின்மையின் தராசில் வைத்து அதன் உண்மையான தரம் என்று காட்டி விட்டீர்கள்.
this is the correct url regrading google form creation
https://docs.google.com/spreadsheet/embeddedform?formkey=dDgwazVPTEVmc1lHbC12OVNra3k2Y3c6MQ
i pasted the correct url only...but the url pasted in ur comment was not wat i pasted...some of the words present at the end didnt apperaed here fully...
சின்ன புத்தி - a correction
சல்லித்தனமாகவோ சிறுமையாகவோ ஒன்றை யோசிப்பதையும் செய்வதையும் சின்ன புத்தி என்கிறார்கள்.
I think it is not the accurate definition for the narrow mind. So, I'm making a correction.
சல்லித்தனமாகவும் சிறுமையாகவும் ஒன்றை யோசிப்பதோடும் செய்வதோடும் மட்டும் அல்லாமல் அடுத்தவனையும் தன்னைப் போல் தான் யோசிப்பான்/செய்வான் என்று நம்புவதே சின்ன புத்தி. d
சுரேஷ்ji,
நலந்தானே?
அன்புடன்,
Ganpat
சன் டிவியில் என்ன தரமான நிகழ்ச்சி வருகின்றது? அதனுடைய ஓனர் எல்லாம் கோடீஸ்வரர்களாய் இருக்கின்றார்களே... அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது?
காஞ்சனா 100 நாள் ஓடுகின்றது. ராகவா லாரன்ஸ் கோடீச்வரன் ஆகின்றான்.. அந்த படத்தின் தகுதி என்ன? லாரன்ஸ் எப்படி கோடீஸ்வரன் ஆனான்? அவன் தகுதி என்ன?
நீங்கள் வாழ்நாள் எல்லாம் எழுதினாலும் இதனால் ஒரு புண்ணாக்கு பயனும் வரப் போவதில்லை. என்ன பணம் கிடைத்து விடும்? ரோட்டில் அடிபட்டு கிடந்தீர்கள் என்றால் கூட ஒருவனும் உதவப் போவதில்லை. writer சுஜாதா இறந்த போது சன் டிவி செய்தியில் அரை நிமிஷம் கூட அவர் பிணத்தை காட்ட வில்லை...
Why so much delay in between posts?dont do it man
என்ன தோழரே ஆளே காணோம்?
http://www.oldindianphotos.in/view/flipcard
Post a Comment