Friday, August 12, 2011

தெய்வத் திரு(ட்டு)மகன்


சரி. முதலில் நல்ல விஷயங்களைப் பேசி விடலாம்.

அதிகார அமைப்புகள் எந்தவொரு சட்ட,திட்டத்தையும் உருவாக்கும் போதும் பெரும்பாலும் அவை சமூகத்தின் மையத்தையே கவனத்தில் கொள்கின்றன. சிறுபான்மை, விளிம்புநிலை போன்ற சமூகங்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. மனித உரிமை அமைப்புகள், தன்னார்வல அமைப்புகள் போன்றவைதான் இவர்களுக்காக குரல் தரவேண்டியிருப்பது மாத்திரமல்ல, பாதிப்பை அடையும் சமூகமும் தனக்கான உரிமைகளுக்காக தானே போராட வேண்டிய அவலமும் ஏற்படுகிறது. இது இப்படியென்றால் பொதுச் சமூகமும் விளிம்புநிலைச் சமூகத்தை வெற்று அனுதாப பாவனையுடன் உள்ளூற வெறுத்து ஒதுக்குகிறது. எல்லாமே விளம்பரப் படங்களில் வரும் பளபளப்பான விஷயங்கள் போல இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. பக்கத்து இருக்கையில் ஒரு திருநங்கை அமர்வதை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. கட்டணம் செலுத்த தயாராயிருந்தும் கூட திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் பற்றின செய்தியை நாளிதழ்களில் வாசித்திருக்கலாம்.

விளிம்புநிலை மனிதர்களுக்கென்று ஒரு மனமிருக்கும், பிரத்யேகமான உலகிருக்கும், பாசமும் மகிழ்ச்சிகரமான தருணங்கள் அவர்களுக்கும் இருக்கும் என்பதை எவரும் யூகிக்கவோ கவனிக்கவோ விரும்புவதில்லை. அவர்கள் சமூகத்தின் ஓரத்தில் வாழ்ந்து அப்படியே மறைந்து தொலைய வேண்டுமென்றுதான் பொதுச்சமூகம் விரும்புகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை நம் தமி்ழ்சினிமா இதுவரை எப்படி சித்தரித்திருக்கிறது என்று பார்க்கும் போது ஏமாற்றமாகவே இருக்கிறது. மிகையுணர்ச்சியுடன், செயற்ர்கையாக் கட்டமைக்கப்பட்ட பரிதாபத்துடன், பார்வையாளர்களுக்கு அவர்களின் மீது அதீத பரிதாபம் அல்லது பயம் ஏற்படும்படியான அசட்டுத்தனத்துடன் காட்டியிருக்கிறதே ஒழிய, இயல்பாக சித்தரித்ததேயில்லை. சிப்பிக்குள் முத்து, அக்னிசாட்சி, குணா, அஞ்சலி, ஆளவந்தான், குடைக்குள் மழை, பிதாமகன் என்று சட்டென்று நினைவுக்கு வருகிற சில உதாரணங்களைச் சொல்லலாம். இதில் பாலச்சந்தரின் அக்னிசாட்சி மாத்திரம் சற்று சுமாரான முயற்சி. ஆனால் இவைகளை இந்திய இயக்குநர் அபர்ணா சென் இயக்கிய 15 பார்க் அவென்யூ - போன்ற உதாரணத்துடன் ஒப்பி்ட்டால் தமிழ் சினிமா எத்தனை பரிதாபகரமான நிலையில் நிற்கிறது என்பதை உணரலாம். உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்கிற கேள்வியும் இங்கு தோன்றுகிறது.

இயக்குநர் விஜய் இயக்கிய 'தெய்வத் திருமகளும்' இந்த வரிசையில் அச்சு பிறழாமல் இயங்குகிறது. இந்தத் திரைப்படத்தை மூன்று அடுத்தடுத்த நிலைகளில் இருந்து பார்க்கலாம்.

முதல் நிலையில் பார்க்கும் போது, தமிழ் சினிமாவின் வழக்கமான ஆபாசங்களிலிருந்தும் அசட்டுத்தனங்களிலிருந்தும் பெரும்பாலும் விலகி நிற்கிற காரணத்திற்காகவே இந்தத் திரைப்படத்தையும் இயக்குநர் விஜய்யையும் பாராட்டலாம். 'பஞ்ச் டயலாக்' மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இன்னும் ஒருபடி மேலே ஏறுவதற்கான வாய்ப்பிருந்தும் இப்படியொரு மாற்று முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்காக விக்ரம் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அவரிடம் வெளிப்படும் செயற்கையான பாவனைகளைத் தவிர்த்து, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த்ப் பாத்திரத்திலிருந்து பெரிதும் விலகாமலிருந்தது ஓர் ஆறுதல். நாசர் மற்றும் சிறுமியின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

ஒளிப்பதிவாளர் நீரவ்-ஷாவின் பங்களிப்பு அபாரமானது. ஊட்டியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இத்திரைப்படத்தை தமிழ்ச்சினிமாவின் ஒரு சராசரி பார்வையாளன் கண்கலங்கி நெகிழ்ந்து விட்டு வெளிவரலாம். அந்த அளவில் கலலா கட்டும் முயற்சியில் படம் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டாவது நிலையில் ஒரு படைப்பை அடிப்படை தர்க்க நிலையில் நோக்கும் பார்வையாளனின் நிலையில் பார்க்கும் போது படத்தில் தனித்தன்மையுடன் வலிமையாக உருவாக்கப்பட்ட பாத்திரங்களோ, காட்சிகளில் எந்தவிதமான தர்க்க ஒழுங்கோ என்று எதுவுமில்லை. எல்லாமே மொண்ணைத் தனமான அசட்டுத்தனங்களுடன் இயங்குகிறது.

அமலாபாலின் பாத்திரம் ஒன்று போதும். குழந்தைகளிடம் அத்தனை கருணையுடன் பழகுவதாக அறிமுகப்படுத்தப்படும் இவர், பின்பு ஏன் அத்தனை குரூரமாக குழந்தையை தந்தையிடமிருந்து பிரித்து வைக்க ஒப்புகிறார் என்பது புரியவில்லை. அதே போல் அவரது தந்தையும் சொல்லி வைத்தாற் போல் கிளைமாக்சில் சட்டென்று திருந்தி விடுகிறார். வக்கீல்களை இத்தனை கீழ்த்தரமாக சித்தரித்த படமொன்றும் சமீபத்தில் வந்ததாய் நினைவில்லை. தனியார் பேருந்து நடத்துநர்கள் டிக்கெட்டிற்காக கூவுவது போன்று வக்கீல்கள் கேஸிற்காக அலைகிறார்கள். நாசர் பாத்திரம் பழைய கால நம்பியார் பாத்திரத்திற்கு சற்றும் குறையாத தோரணையிலிருக்கிறது. மனநல வளர்ச்சி குன்றிய கிருஷ்ணாவிற்கும் தனது மனைவிக்கும் முறைகேடான உறவிருக்குமோ என்று சந்தேகப்படுகிறார் கிருஷ்ணாவின் சகதொழிலாளி ஒருவர்.(எம்.எஸ்.பாஸ்கர்). இது தொடர்பான காட்சிகள் கீழ்த்தரமான நகைச்சுவை சிந்தனையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாறாக அவரின் சந்தேகத்தை, மனஉளைச்சலை subtle ஆக சொல்லியிருந்தால் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். பிறகு நீதிமன்றத்தில் கிருஷ்ணாவிற்கு எதிராக சாட்சி சொல்லும் இவர், அடுத்த காட்சியிலேயே கிருஷ்ணாவுடன் கண்ணீர் விட்டு கதறுவது என்ன காட்சித் தொடர்ச்சியோ?

ஒரு காட்சியில் கிருஷ்ணா மேல் தெரியாத்தனமாக மோதி விடுகிறார் பெண் வக்கீலான அனுஷ்கா. "என்னய்யா நீ.. இத்தனை செலவு செஞ்சு அனுஷ்காவைப் போட்டுட்டு கொஞ்சம் கூட கிளுகிளுப்பே இல்லாம" என்று தயாரிப்பாளர் இடையில் திட்டியிருப்பார் போலிருக்கிறது. அந்த இடத்தில் CG மாயமாலங்களோடு இயக்குநர் ஒரு பாட்டு போட்டிருக்கிறார் பாருங்கள். தமிழ்சினிமா திருந்த வாய்ப்பேயில்லை என்று நான் எரிச்சலுடன் மனதிற்குள் முனகிக் கொண்டேன்.

இப்படியாக ஒரு படைப்பில் குறைந்த பட்ச அடிப்படையான தர்க்க ஒழுங்கைஎதிர்பார்ப்பவர்கள இதில் காணப்படும் பல பிழைகளை பெரிய பட்டியலாகவே போட முடியும்.

ஒளிப்பதிவு தமிழ்சினிமாவின் சம்பிரதாயமான தரத்தை தாண்டவில்லையென்றாலும் நான் கவனித்த வரையில் ஒரேயொரு இடத்தில் பாத்திரத்தின் அகவுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தி்ல் ஒளிப்பதிவு அமைந்திருப்பதாக உணர்ந்தேன். அமலாபால் தன் காதலனிடம், "குழந்தையை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம், திருமணம் கூட அத்தனை முக்கியமில்லை' என்று உரையாடும் காட்சியில் காமிரா அமலா பாலின் முகத்தை ஃபோகஸிலும் காதலனின் முகத்தை அவுட் ஆஃப் போகஸிலும் காட்டுகிறது. பொதுவாக இவ்வாறு காட்டும் போது, ஃபோகஸில் காட்டப்படும் பாத்திரம் பேசி முடித்தவுடன், அவுட் ஆஃப் போகஸ் பாத்திரம் ஃபோகஸிற்கு வரும். ஆனால் இந்தக் காட்சியில் கேமிரா இறுதிவரையில் முதல் நிலையிலேயே நீடிக்கிறது. காதலன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து மறையக்கூடிய முடிவைக் கூட அவள் எடுக்கத் தயாராயிருக்கிறாள் என்பதை இது சூசகமாக வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்கிறேன்.


மூன்றாம் நிலையில்தான் பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதாவது I AM SAM என்கிற ஹாலிவுட் படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தவர்கள், தெரியாமல் இதைப் பார்க்க வந்திருந்தால் தொலைக்காட்சி சீரியல் காண திணிக்கப்பட்டவர்கள் போல் மகா அவஸ்தைக்கு ஆளாகியிருப்பார்கள். ஆம், தெய்வத்திருமகள், குறிப்பிட்ட ஹாலிவுட் படத்திலிருந்து மிக மோசமாக நகலெடுக்கப்பட்ட ஒரு திருட்டுப் பிரதி. கதையின் அவுட்லைன் முதற்கொண்டு பிரதான பாத்திரத்தின் ஹேர்ஸ்டைல், உடை (அங்கே கோட் என்றால் இங்கே ஸ்வெட்டர்), உடல்மொழி, வசனங்கள் போன்றவை மிக அலங்கோலமாக காப்பியடிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஹாலிவுட் படத்தில் ஷான் பென், சிக்னலைக் கடந்து வரும் போது சிவப்பில் முறையாய் நின்று வருவார். படத்தில் போகிற போக்கில் இந்தக் காட்சி சில விநாடிகள் காட்டப்படும். ஏழு வயதுச் சிறுவனுக்குரிய மனவளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் முறையான குடிமை உணர்வையும் ஒழுங்குணர்வையும் அவன் கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளமது. படத்தின் துவக்கத்திலேயே இது பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாய் நிறுவப்பட்டு விடும்.

ஆனால் இதே காட்சி தமிழ்படத்தில் குதறி எடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணா மகளைக் காண சில நிமிடங்களே நேரமிருக்கும் போது கூட சிக்னல் சிவப்பில் பரபரப்பான பின்னணி இசையுடன் காத்திருப்பதாக இயக்குநர் இந்தக் காட்சியை 'தமிழ்ப்' படுத்தியிருக்கிறார். போக்குவரத்து விதிகளை ஒழுங்காக மதிப்பதென்பது பொதுவாக மேற்கத்தியர்களுக்கு ரத்தத்தில் ஊறிப்போனதொன்று. அதைக் கொண்டு வந்து இங்கு சென்டிமென்ட்டாக இணைப்பது எத்தனை அபத்தம்?. ஆனால் இதே கிருஷணாதான் நாசரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது அங்கிருந்து தப்பித்துப் போகிறான். ஏனாம்? நாசரின் மகனின் உயிரைக் காப்பாற்ற. விதிகளை மதிக்கும் ஒழுங்குணர்ச்சி இங்கு மீறப்படுகிறது. மருந்து வாங்கி வந்தவுடன் மீண்டும் வந்து தானே சிறையில் அடைபட்டுக் கொள்கிறான். ஏழு வயதிற்கான மனநிலையில் இயங்குபவனால் எத்தனை சென்டிமென்ட்டாக நடந்து கொள்ள முடிகிறது பாருங்கள்.

(தொடரும்)

31 comments:

கேரளாக்காரன் said...

Right view...... Good article

முரளிகண்ணன் said...

அடுத்த இரண்டு பாகங்களுக்கு வெயிட்டிங்

இராஜ ப்ரியன் said...

நன்றி..... அடுத்த பாகங்களுக்காகவும் காத்திருக்கிறேன்.

Katz said...

உங்கள் வலைப்பூவில் நான் அதிகம் கமெண்டியது இல்லை.

வெகு நாட்களுக்கு பிறகு வருகிறேன். எங்கேயோ பார்த்த முகமாய் தோன்றியது.

ஆனால் உங்கள் ஏப்ரல் பூல் பதிவும் அதற்கு அடுத்த விளக்க பதிவும் அய்யோ! அம்மா! முடியல

இந்த பதிவு ஒரு நல்ல விமர்சனம் தான் ஆனால்?

Raja said...

Good view about the film in a better angle. I don't believe my friend's verdict abt this movie. Nobody wants to go into the copycat part of this movie, Even in music. I think this movie is downgrading the efforts of the (original) creator. Waiting for the upcoming posts :)

வடக்குபட்டி ராமசாமி said...

வழக்கம் போல உங்க பதிவு நெத்தியடி!!யோகன் படம் ஆங்கில படத்தின் காப்பி வேலாயுதம் அசாசின்ஸ் வீடியோ கேமின் காப்பி(ஸ்டில்கள்) இரண்டையும் அந்தந்த வெளிநாட்டு தயாரிப்பு நிருவனகளிடம் புகார் செய்தாகிவிட்டது!!சீக்கிரம் சம்மன் வரும்!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

teenmoon5 said...

வக்கீலுங்க கேசுக்கு கூவுறத நீங்க இது வரைக்கும் பாத்ததே இல்லையா. போயா யோவ்

Unknown said...

முதலிரண்டு பத்திகள் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது...

Gunasekaran said...

Nice review :)

Rajendran said...

தெய்வத் திருமகன் illai .........Thirumakal........

மணிஜி said...

டிபிக்கல் சுரேஷ்..ஐ லைக் திஸ்..

Indian said...

நல்ல ஆய்வு.
இன்னுமோர் பகுதி வருதோ?

குடிமை உணர்வு; அருமையான சொல்லை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

படம் காப்பி என்பது வெகுஜனங்களுக்கு தெரியாது.. படத்தை ரசிப்பார்கள்தான். காப்பி அடிப்பதில் தவறில்லை.. உரிய நன்றி + மரியாதையை உரியவருக்கு செலுத்தும்பட்சத்தில்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

மொத்தத்தில் இத்திரைப்படத்தை தமிழ்ச்சினிமாவின் ஒரு சராசரி பார்வையாளன் கண்கலங்கி நெகிழ்ந்து விட்டு வெளிவரலாம். //

சரியே..

ஹாய் அரும்பாவூர் said...

நல்ல திறனாய்வு
இவர்கள் திருந்துவார்களா ?

Anonymous said...

http://hollywoodbalas.blogspot.com/

i saw tis blog 3 weeks ago only...what happened to hollywood bala? is he in some hospital? one person says he was dead...i dont know anybody to ask about him...

plz u tell me...d

Anonymous said...

Nice review

Anonymous said...

ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவுக்கு கட்டப்பட்ட பாடை!!
*********************************
http://writerviki.blogspot.com/2011/08/blog-post_15.html

டீலக்ஸ் காண்டம் said...

கோஹினூர் காண்டம் சாரி!! ஆரண்ய காண்டம் மொக்கை படத்த விட இது தேவலை!!

Anonymous said...

though it is copy, we should give great applause for this tamil movie showing that original movie in tamil.
we should support directors to direct these kind of movies in tamil.. our (re)view should not make them to stop directing these kind of movies.

dtm is extremely great for acting performance,music,sentiments,love.

கணபதி அய்யர் said...

நன்னா சொன்னேள் போங்கோ!!

Anonymous said...

இவர் திருந்துவாரா!!

டிபிக்கல் சுரேஷ்

Suresh Cannon.

இளங்கன்று said...

your post is copied here..

http://tamilkadalanposts.blogspot.com/2011/07/dog-day-afternoon.html

Anonymous said...

your post is copied here..///..
.\
.
அண்ணா இது என்ன அரசியல் சாசனமா?

Anonymous said...

மொத்தத்தில் இத்திரைப்படத்தை தமிழ்ச்சினிமாவின் ஒரு சராசரி பார்வையாளன் கண்கலங்கி நெகிழ்ந்து விட்டு வெளிவரலாம்.

நீங்கள் தெரிவித்தது உண்மை..
கண்கலங்கி நெகிழ்ந்து அழுதேன்.

"தெய்வத் திரு(ட்டு)மகன்"

தலைப்பு மாற்றம் செய்யவும்...

மனம் வலிக்கிறது...

ஆங்கில படம் நகலெடுக்கப்பட்ட இருக்கலாம்,ஆனால் அனைத்து கதாபாத்திரங்கள் உண்மையில் இந்த படத்தில் வாழ்ந்தன..

நான் உங்கள் கருத்து ரசிகர், உங்கள் ஆரண்ய காண்டம் விமர்சனம் போற்றப்பட்டது..
உங்கள் தெய்வத் திருமகன்" விமர்சனம் பார்த்த பிறகு வருத்தமாக இருக்கிறது..

விக்ரம், சாரா நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் கைதட்டல் கொடுக்க வேண்டும்..

நகலெடுக்கப்பட்ட இருக்கலாம்,ஆனால் இங்கே அவர்கள் ஒரு சிறந்த வேலை மேற்கொண்டனர்.

உண்மை!!!!

Anonymous said...

விக்ரம், சாரா நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் கைதட்டல் கொடுக்க வேண்டும்.. ///..
.
.
ஆமா ஜி வி பிரகாஷ் எல்லாம் இசையமைபலரா ?ரெண்டு பாட்டு அட்ட காப்பி!!கதைதான் மூலம் இல்லை இசை கூடவா?இதெல்லாம் ஒரு பொழப்பா?தெலுங்கு ஹிந்தி படம்னா மட்டும் ரைட்ஸ் காசு கொடுத்து வாங்கி எடுக்குறீங்க!!ஆனா உலக சினிமாவை நைசா காப்பி எடுத்துட்டு அது தன படம்னு சொல்வது திருட்டு ஆகாதோ?

enRenRum-anbudan.BALA said...

ஒரு தேர்ந்த சினிமா விமர்சகரின் அலசல் என்பதில் சந்தேகமில்லை! அதே சமயம், சரியான ஒரு சுப்புடு நீங்கள் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :)
எ.அ.பாலா

Anonymous said...

சரியான ஒரு சுப்புடு நீங்கள் ////..
.
.
அய்யா கொஞ்சம் மேல உள்ள கமண்ட பாருங்க.நீங்க ஐ ஆம் சாம் படமும் பாருங்க.அதில் மன நலம் குன்றியவர்கள் எப்படி சித்தரிக்க படுகிறார்கள்.இந்த படத்தில் எப்படி காமெடி பீசுகளாக காட்டுகிரார்கல்னு புரியும்!சுரேஷ் கண்ணின் விமர்சனம் ஆரோக்யமானது!

Boston Bala said...

//இந்தக் காட்சியில் கேமிரா இறுதிவரையில் முதல் நிலையிலேயே நீடிக்கிறது. காதலன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து மறையக்கூடிய முடிவைக் கூட அவள் எடுக்கத் தயாராயிருக்கிறாள் என்பதை இது சூசகமாக வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்கிறேன். //

:))

இதெல்லாம் டூ மச்சு.

Anonymous said...

Dear brother, see this as a movie. you are not going to send this to moon. leave the logic n all. i think u have never enjoyed in your life. we are watching movies as time pass. lets have a fun. if you are so genius, brilliant show it in your work. u cannot impress by bringing down other people. sorry for hurting you. sakthi