Tuesday, October 26, 2010

கே எம் மீடியா பிளேயர்



சினிமா, திரையிசை உட்பட இணையத்தில் இலவசமாக எதையும் தரவிறக்கி உபயோகிப்பதேயில்லையென்று இரண்டு கால்களிலும் நின்று சாதிக்கும் யோக்கியவான்கள், இந்தப் பதிவை வாசிக்க வேண்டாமென்று சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

முன்னர் ஒரு பதிவில் கூறியிருந்தது போல் நுட்ப விஷயங்களை கையாள்வதில் நான் அத்தனை சமாத்தனில்லை. ஆனால் தேடித் தேடி சில விஷயங்களை நானே முயன்று கண்டுபிடித்து வெற்றிகரமாக கையாள முயலும் போது அந்த மென்பொருளை உருவாக்கினவருக்குக் கூட அத்தனை சந்தோஷம் கிடைத்திருக்காது.

கணினியில் சினிமா பார்ப்பதில் சில அசெளகரியங்களும் பல செளகரியங்களும் உள்ளன.  சீரியல்களுக்காகவும் சுட்டிடிவிகளுக்காகவும் வீட்டில் நிகழ்கிற மகாயுத்தத்தின் இடையில் வெற்றிகரமாக தோற்றுப் போய் நான் சரணடைவது கணினியிடம்தான். படம் சற்று போரடித்தால் = பட்டனை அழுத்தி விட்டு மின்னஞ்சல்களைப் பார்க்கலாம். இன்று நம்மை  அல்லது மற்றவர்களை யார் என்ன, எப்படி திட்டியிரு்ககிறார்கள் என்று வேடிக்கை பார்க்கலாம். பார்த்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றின மேலதிக விவரங்களைத் தேடலாம். கணினியை அதிக நேரம் உபயோகிப்பதினால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளை கண்முடி சற்று சிந்தித்து விட்டு படம் பார்ப்பதைத் தொடரலாம்.

என்றாலும் டிவிடி பிளேயரின் மூலம் தொலைக்காட்சியில் நள்ளிரவு அமைதியில்  எவ்வித இடையூறுமில்லாமல் பார்ப்பதே இதுவரை நல்ல அனுபவத்தைத் தந்திருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.

பெரும்பாலோனரைப் போல விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம்தான் முன்பு திரைப்படங்களைப்  பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் சப்-டைட்டில் எனும் சமாச்சாரத்தை திரைப்படத்துடன் இணைத்து பார்க்க முடியும் என்கிற ஆனந்தமான தகவல் தெரிய வந்த போது வி.மீ.பி. அதற்கு ஒத்துழைக்கவில்லை.

AVI வீடியோ பைலை DVDஆக மாற்ற உதவும் Total Video Player எனும் மென்பொருளை பிறகு கண்டடைந்தேன். சப்-டைட்டில் எழுத்துக்கள் அழுத்தமானதாக நன்றாக தெரிந்து கொண்டிருந்த இதை நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் சில சப்-டைட்டில்கள் இதில் வேலை செய்யவில்லை. (வசனங்களின் வரிகளுக்கு இடையில் அதிக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருக்கும் சப்-டைட்டில்கள்). அதற்காக தேடிப் பார்த்த போது கிடைத்தது VLC  Media Player.

சில சிக்கலான வீடியோ கோடக்குகளை கூட இந்த மென்பொருள் உள்ளடக்கியிருந்தது. ஆனால் இதிலுள்ள பிரச்சினை சப்-டைட்டில் மெலிதாக, தேசலான தோற்றத்தில் தெரிந்ததுதான். (செட்டிங்க்ஸில் இதை மாற்றிக் கொள்ள முடியும் என்பதைக் கூட பிறகுதான் தெரிந்து கொண்டேன்). சில வகை MKV வீடியோ கோப்புகளில் சப்-டைட்டில் தனியாக இல்லாமல் வீடியோவுடனே எம்பெட் செய்யப்பட்டிருக்கும். இதை VLC-யில்தான் காண முடிந்தது.

சமீபத்தில் கணினியில் வைரஸ் பிரச்சினை ஏற்பட்டு ஓ.எஸ்.ஐ ரீ- இன்ஸ்டால் செய்து விட்டு VLC  மீடியா பிளேயரின் லேட்டஸ்ட் வர்ஷனை இறக்கினேன். ஆனால் புல் ஸ்கீரினில் வைக்கும் வீடியோ உறைந்து திக்கித் திணறியது. டிவிட்டரில் க்ருபாவிடம் இதுபற்றி வினவினேன். 'என்ன கான்பிகிரேஷன்? என்றார்.  பெண்டியம் 3, 256 MB RAM.  'இந்த மாதிரி விண்டேஜ் கலெக்ஷனை வைத்துக் கொண்டு இன்னும் மாரடிப்பவர்களை சிறையில் தள்ள ஏன் ஒரு சட்டம் கொண்டு வரக்கூடாது?' என்றார் காட்டமாக. (பின்பு VLC - ன் பழைய வர்ஷனையே மீண்டும் நிறுவியதில் இந்தப் பிரச்சினை எழவில்லை என்பதையும் கண்டு கொண்டேன்).

'அப்ப எதுதாம்ப்பா நல்ல மீடியா பிளேயர்' என்று கூகுளிடம் மண்டியிட்டு கேட்ட போது கிடைத்ததுதான் KM PLAYER.

இந்த மென்பொருளை திறக்கும் போதே, ஏதோ ஹோம் தியேட்டருக்குள் நுழைகிற ஃபீலை தருகிறது. மாத்திரமல்ல, சப்டைட்டிலை எந்தவொரு அளவிலும், கிழக்கு மேற்கு.. என எந்தவொரு திசையிலும் நிறத்திலும் கூட அமைத்துக் கொள்ளலாம்.

இன்னொரு வசதியையும் கண்டேன். சில படங்களின் சப்-டைட்டில்கள் வசனங்களோடு பொருந்திப் போகாமல் முந்தியோ, தாமதித்தோ தெரிந்து அமெச்சூர் நடிகனைப் போல் எரிச்சலை ஏற்படுத்தும்.

சப்-டைட்டில் எடிட்டர் கொண்டு இதனை சரிசெய்வதெல்லாம், இரண்டே இரண்டு டூவீலர் மெக்கானிக்குகளை வைத்துக் கொண்டு ரோபோ தயாரிக்கும் மகான்களுக்கே சாத்தியம். இப்படி சப்டைட்டில் ஒத்துழைக்காத காரணத்தினாலேயே பல வீடியோக்களை எரிச்சலோடு ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அதற்கும் இந்த மென்பொருளில் ஒரு வசதியிருக்கிறது. இப்படி முரண்டு பிடிக்கும் சப்-டைட்டில்களை ஐந்து, ஐந்து விநாடிகளாக முன்னும் பின்னும் நகர்த்தியமைத்திக் கொள்ளலாம்.  வீடியோவின் அளவை பல்வேறு அளவுகளிலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

முன்னரே சொன்னது போல் நுட்ப விஷயங்களை கையாள்வதில் நானொரு பாமரன். 'யாம் பெற்ற இன்பம்' என்ற நோக்கில்தான் இதைப் பொதுவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த மென்பொருளை உயோகிக்க உத்தேசிப்போர் தத்தம் பொறுப்பில் அதன் சாதக பாதகங்களை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இப்படி.. கணினியில் திரைப்படம் பார்க்க உதவும் ஏனைய மீடியா பிளேயர்களையும் அதுசார்ந்த உபயோகிப்பு அனுபவங்களையும் பகிருமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.

suresh kannan

28 comments:

சென்ஷி said...

கேஎம்பிளேயர் - ரொம்ப நல்ல பிளேயர்.. நானும் கேரண்டி :)))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆமா நீங்க சொல்வதுபோல கேஎம் பிளேயர் ஒரு நல்ல வீடியோ ப்ளேயர். கணணியில் ஒரு தியேட்டர் எபெக்ட்டில் பார்க்க முடியும். அதுபோல மற்ற எல்லா ப்ளேயர்களில் ஃபுல் சவுண்ட் வச்சிருந்தாலும் சவுண்ட் கம்மியா இருக்கும். இதில் சவுண்ட் நல்ல தெளிவாகவும் நிறைய சவுண்ட் இருக்கும்.

நான் இங்கே இதுதான் உபயோகிக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி சுரேஷ் கண்ணன்.

Unknown said...

எனக்கு இதுநாள் வரையில் VLCயே கண்கண்ட தெய்வம். கேஎம் முயற்சித்துப் பார்க்கிறேன்

பொன் மாலை பொழுது said...

// 'என்ன கான்பிகிரேஷன்? என்றார். பெண்டியம் 3, 256 MB RAM. 'இந்த மாதிரி விண்டேஜ் கலெக்ஷனை வைத்துக் கொண்டு இன்னும் மாரடிப்பவர்களை சிறையில் தள்ள ஏன் ஒரு சட்டம் கொண்டு வரக்கூடாது?' என்றார் காட்டமாக.//

உங்கள் நண்பரின் கிண்டல் மிக நேர்த்தியான ஒன்று. சத்தியமாக உங்களிடம் ''இந்த விண்டேஜ் கலெக்ஷனை '' எதிர்பார்க்கவில்லை.

GOM பிளேயர் கூட நன்றாக உள்ளது. முயன்று பார்க்கலாமே.

Anonymous said...

இது ரொம்ப பழசு

bogan said...

உங்கள் நண்பர் சொன்னது போல் நீங்கள் வைத்திருக்கும் கணினி கல் மண் தோன்றும்போதே உடன் தோன்றிய மூத்தக் குடிகள் உபயோகத்துக்கென கண்டுபிடிக்கப் பட்டது.நீங்கள் இதை வைத்துக் கொண்டுதான் உலகத் திரைப் படங்களெல்லாம் பார்த்து விமரிசனம் எழுதுகிறீர்கள் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது.வல்லவனுக்கு பெண்டியமும் ஆயுதம்.

Prathap Kumar S. said...

//சினிமா, திரையிசை உட்பட இணையத்தில் இலவசமாக எதையும் தரவிறக்கி உபயோகிப்பதேயில்லையென்று இரண்டு கால்களிலும் நின்று சாதிக்கும் யோக்கியவான்கள்//

அப்ப நான் சத்தியமா யோக்கியவானில்லை...

Prathap Kumar S. said...

//'என்ன கான்பிகிரேஷன்? என்றார். பெண்டியம் 3, 256 MB RAM. '//

ஹஹஹ.... இதுல டவுன்லோட் வேற பண்றிங்களாக்கும்...:))


KMPLYAER பற்றி கேள்விப்பட்டிருக்கேன்... நான் பயன்படுத்துவது VLC மட்டுமே...
எதற்கும் அடங்காத வீடியோக்களும் VLC க்கு அடங்கிவிடும்...:)

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

ஆல் டைம் பெஸ்ட் பிளேயர் V L C

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

http://www.foobar2000.org/

try this !!!

Anonymous said...

now a days some laptop's are coming with remote. KM Player & GOM also supports remote facility.
But VLC doesn't support this feature

andygarcia said...

"இரண்டே இரண்டு டூவீலர் மெக்கானிக்குகளை வைத்துக் கொண்டு ரோபோ தயாரிக்கும் மகான்களுக்கே சாத்தியம்"
lol

Random Thoughts said...

You can use SMPlayer as well. This has almost the same features as KMPlayer and works well on Linux with limited memory.

Basically both KMPlayer and SMPlayer are built on top of MPlayer which is the best command line windows player !

Anonymous said...

லினக்சில் உங்கள் கணினி வேகமாக வேலை செய்ய்யும்.

Anonymous said...

ஸ்வஸ்திக்ஜி -

கொஞ்சம் கான்பிகரேஷன் கத்துக்கொண்டால் smplayer ஐ அடிக்க முடியாது! விடியோ பஃபர் முதற்கொண்டு ரெண்டரிங் வரை டிங்கரிங் செய்யலாம். smplayer ரில் கூடுதல் வசதி, படத்தை ஓடவிட்டு அதுவே ஓப்பன்சப்டைட்டில்.ஓர்க் கில் இருந்து சப்-டைட்டில் கண்டுபிடித்து இறக்கிக்கொள்ளும் வசதியும் உண்டு, ஒரு க்ளிக் போதும்!


-டைனோ

Unknown said...

I used lot of players like VLC,KM,GOM, REAL,WINDOWS MEDIA PLAYER, MPLAYER,APPLE I TUNES etc...

But VLC is out standing
KM player doesnot support sound and video quality

VLC will enhance the sound quality and video and volume enhancement

Subtitle adjustment can also be done by VLC like KM(except subtitle explorer)

audio and video synchronization can also be done by VLC

Kannan said...

உங்கள் நண்பர் 'நண்பராக' இருப்பதால் சிறையில் தள்ளுவதோடு நிறுத்தி கொண்டார். அவன் அவன் i5 - 4gb பத்த மாட்டேன்குதுன்னு முக்கிக்கிட்டு இருக்கான்...நான் சிரச்சேதமே செய்ய உத்தரவு இட்டு இருப்பேன்.

Tamil Fa said...

நண்பா. நான் பாவிப்பது k-lite codec pack. இதில் இல்லாத ஓரிரு வசதிகள் KM Playerல் உண்டு. ஆனால் KM Playerல் இல்லாத நிறைய வசதிகள் இதில் இருக்கின்றதே. பாவித்துப் பார்க்கவும்.

Tamil Fa said...

http://www.free-codecs.com/k_lite_codec_pack_download.htm

நான்தான் said...

I dont think you have the AVI to DVD file conversion in "Total Video Player".

பப்பரப்பா said...

//இப்படி முரண்டு பிடிக்கும் சப்-டைட்டில்களை ஐந்து, ஐந்து விநாடிகளாக முன்னும் பின்னும் நகர்த்தியமைத்திக் கொள்ளலாம். வீடியோவின் அளவை பல்வேறு அளவுகளிலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். //

VLC-ல கூட இதப் பண்ணலாம் சுனாகனா அண்ணா.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள பதிவு.

உங்கள் எல்லா இடுகைகளிலும் வரும் பொறுப்புத் துறப்புகள், தன்னடக்க உரைகள் சலிப்பூட்டுகின்றன.

KKPSK said...

you can rebuild subtitle file after adjusting/synchronizing with video and save it. thats fantastic.
its better than VLC/GOM/zoom player/powerDVD.

இதே போல் image viewerல், all rounder: irfanview! the best.

Best MP3 player is foobar2000 (open source). if u use for a week, u can never ignore! i bet

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

Anonymous said...

முக்கிய குறிப்பு:

http://ravidreams.net/forum/topic.php?id=104&replies=4#post-549


forward the above link to all of your contacts.

Mohamed Hijaz said...

//இப்படி முரண்டு பிடிக்கும் சப்-டைட்டில்களை ஐந்து, ஐந்து விநாடிகளாக முன்னும் பின்னும் நகர்த்தியமைத்திக் கொள்ளலாம். வீடியோவின் அளவை பல்வேறு அளவுகளிலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். //

இதனை எவ்வாறு செய்வதென்று சற்று விவரமாக விளக்கவும்.
நன்றி

Mohamed Hijaz said...

//இப்படி முரண்டு பிடிக்கும் சப்-டைட்டில்களை ஐந்து, ஐந்து விநாடிகளாக முன்னும் பின்னும் நகர்த்தியமைத்திக் கொள்ளலாம். வீடியோவின் அளவை பல்வேறு அளவுகளிலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். //

இதனை எவ்வாறு செய்வதென்று சற்று விவரமாக விளக்கவும்.
நன்றி

சிவா said...

Plz have a look at thisblog for all subtitle problems

http://emagics.blogspot.com/2009/02/view-movies-with-subtitle.html

check the comments section also