Saturday, December 24, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்


இன்று இரண்டு அழகான திரைப்படங்களைக் காண முடிந்தது. 

முதலில் LAS ACACIAS என்கிற அர்ஜென்டினா திரைப்படம். 85 நிமிடங்கள் ஓடினாலும் இதை குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். அதில் ஒன்று கைக்குழந்தை வேறு. படம் முழுக்க சலிப்பான வாகனப்பயணம். A Road Movie.

இருபது வருடங்களுக்கும் மேலாக டிரக் டிரைவராக இருக்கும் ரூபன் அதிகம் பேசாத ஒரு தனிமைவாதி. பராகுவேயிலி்ருந்து Buenos Aires-க்கு சரக்கு ஏற்றிச் செல்லும் போது ஒரு பெண்ணையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுடைய முதலாளியால் பணிக்கப்படுகிறான். அவள் ஒரு கைக்குழந்தையுடன் வருகிறாள். இந்தப் பயணக் காட்சிகளால் முழுத்திரைப்படமு்ம இயங்குகிறது.

படத்தின் நீளம் இன்னும் சற்று எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கும் படி வாகனத்தில் பயணிக்கும் காட்சிகள் நீண்டிருந்தாலும் பார்வையாளனும் அந்த பயணச் சலிப்பை அடைய வேண்டும் என்று இயக்குநர் செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன். முசுடான டிரைவருக்கும் அந்தப் பெண் மற்றும் குழந்தைக்கும் சிறிது சிறிதாக வளரும் நேசமும் அன்பும் மிக நுட்பமாகவும் அமைதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. டிரைவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து அந்த அழகான குழந்தையும் கொட்டாவி விடும் போன்றதான காட்சிகள் அற்புதமானவை. இருவரும் ஒருவரையொருவரைப் பற்றி மெலிதாக விசாரித்துக் கொண்டாலும் அவர்களுடைய இருவரின் பின்னணியும் மிகப் பூடகமாகவே பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது.

சற்று நிதானமாக நகர்ந்தாலும் மிக அழகானதொரு முடிவை நோக்கி நிறைந்திருக்கிறது இத்திரைப்படம். 




அடுத்தது HASTA LA VISTA என்கிற பெல்ஜியம் திரைப்படம். இப்படியொரு ஸ்கிரிப்ட்டை யோசித்தற்காகவே இயக்குநரின் கையில் முத்தமிட விரும்புகிறேன்.

மூன்று மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தாங்கள் இதுவரை அனுபவித்தறியாத பாலியல் இன்பத்தை துய்ப்பதற்காக அவர்களைப் போன்றவர்களுக்கென்று பிரத்யேகமாகவுள்ள 'பாலியல் விடுதி்க்கு'  பெற்றோர் அறியாமல் பயணம் மேற்கொள்ள நினைக்கிறார்கள். எதிர்பாராத விதமாக இவர்களுடன் ஒரு குண்டுப் பெண்ணும் டிரைவராக இணைகிறாள். மிக ஜாலியான பயணம்.

மாற்றுத்திறனாளிகளின் பிடிவாதமும் நிராசையும் இயலாமையும் நகைச்சுவையுடன் திறமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் காட்சியும். சமயங்களில் சினிக்கலாகவும். மூவரின் பாத்திரமு்ம் பிரத்யேக தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

மெல்லிய நகைச்சுவைத் திரைப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு. 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 


suresh kannan

8 comments:

rajamelaiyur said...

தகவலுக்கு நன்றி

Kumaran said...

தாங்கள் கண்டு ரசித்த படங்களை அருமையாக அறிமுகம் செய்து தந்துள்ளீர்கள்.நன்றிகள் பல..

நெல்லை கபே said...

இன்று என் வலையில்;
மாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ?
மாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி

KKPSK said...

"ராஜபாட்டை" விமர்சனம் எப்போது? நீங்க கண்டிப்பா பார்த்து...எழுதணும்

Anonymous said...

//"ராஜபாட்டை" விமர்சனம் எப்போது? நீங்க கண்டிப்பா பார்த்து...எழுதணும்// இதுல ஏதோ உள்குத்து இருக்கு. பாத்து செய்யுங்க...விக்ரமின் career ல் மிக மோசமான படம் என்கிறார்கள்.

என்னோட வலையில்;
மலையாளிகளின் airlines
திருவள்ளுவரின் Tweets

Anonymous said...

மாற்றுத்திறனாளிகளின் காமம். எனக்கு காதல் கொண்டேன் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் மாற்றுத்திறனாளி இல்லை என்றாலும் தொடர்புபடுத்த முடிகிறது...அது மனரீதியான மாற்றுத்திறன் என்று வேணா சொல்லிக்கலாம்...

என்னோட வலையில்;
மலையாளிகளின் airlines
திருவள்ளுவரின் Tweets

Anonymous said...

http://kanuvukalinkathalan.blogspot.com/2011/12/blog-post_10.html

Anonymous said...

sub: how to confirm hit or flop?

நான் பர்மா பசாரில் டிவிடி வாங்கி ஆங்கில படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவன். நான் பார்க்கும் ஆங்கிலப் படம் ஹிட்டாகிய ஒன்றா அல்லது ஃப்ளாப் ஆகியதா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? IMDBயில் உள்ள ரேட்டிங் படி அது ஹிட்டா இல்லையா என்பதை மிகச் சரியாக‌ அறிய முடியுமா? ஏன் கேட்கின்றேன் என்றால் நான் சமீபத்தில் பார்த்த ஒரு படம் பிடிக்கவில்லை. பிளாகர் ஒருவர் கூட அப்படம் அழுது வழிகின்ற படம் என்று எழுதியுள்ளார். ஆனால் IMDBயில் 7.4 ரேட்டிங் தரப்பட்டுள்ளது.

MY 2 questions:

1.எப்படி ரேட்டிங் போடுகின்றார்கள்?
2. எப்படி ஒரு ஆங்கிலப் படம் ஹிட்டா இல்லையா என்பதை நான் மிகச் சரியாக இணையம் மூலம் அறிவது?