Monday, December 12, 2011

சாருலதா ஊஞ்சல் ஷாட்சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா' திரைப்படத்தில் அற்புதமான ஒரு பாடல் காட்சி வருகிறது. மாதவி முகர்ஜி ஊஞ்சலில் ஆடிக் கொண்டே பாடும் அந்தப் பாடல் காட்சியி்ல் காமிரா ஊஞ்சலின் கூடவே எந்த வித ஜெர்க்கும் இல்லாமல் பயணிக்கும். திரை உருவாக்க நுட்பங்களில் அனுபவமில்லாவிட்டாலும் ஆர்வம் காரணமாக  அந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நிறைய முறை யோசி்த்திருக்கிறேன். (பாடலை மேற்கண்ட இணைப்பில் காணலாம்)

 இயக்குநர் சார்லஸின் வலைப்பதிவு இணையத்தில் அறிமுகமான பிறகு அங்கும் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அது தொடர்பான விவாதம் இங்கே.

நேற்றைய இந்து நாளிதழில்தான் இதற்கான விடை கிடைத்தது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் திரைப் பதிப்பில் குறிப்பிட்ட காமிரா கோணங்களை உதாரணங்களுடன் விளக்கும் தொடர் ஒன்று வெளிவருகிறது. அந்த வரிசையில் இந்தப் பாடலை உதாரணம் காட்டி இது SNORRICAM வகை நுட்ப உத்தி என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். 

suresh kannan

4 comments:

சுரேகா.. said...

Good Info.. !!

Kaarthik said...

//It is a purely visual representation of Charu's delicate situation: caught between dreams of heaven and the responsibilities of earth.// - Amazing :)

இயக்குனர் சார்லஸ் said...

சுரேஷ் கண்ணன்

ஹிந்து கட்டுரை பற்றி சுட்டிக்காட்டியதற்கு நன்றி. Snorricam தொழில்நுட்பத்தை விளக்குவதற்கு கட்டுரையாளர் சாருலதா காட்சியை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சாருலதா ஊஞ்சல் காட்சியை அந்த முறையில்தான் ரேவும் மித்ராவும் படம்பிடித்தார்கள் என்று உறுதியாகத் தெரிந்துகொண்டுதான் எழுதினாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரியில் //தற்காலத்தில் இதுபோன்ற காட்சிகளை எடுப்பது மிக எளிது, நடிகரின் உடலிலேயே கேமராவைப் பொறுத்திவிடக் கூடிய உபகரணங்கள் இருக்கின்றன.// என்று நான் குறிப்பிட்டிருப்பது Snorricam முறையைத்தான்.

அந்த உத்தி பிற்காலத்தில் வந்தது என்றே நான் நினைக்கிறேன். தி ஹிந்து கட்டுரையாளர் a prototype of SnorriCam-ஐ ரே பயன்படுத்தியதாகச் சொல்கிறார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்று விளக்கவில்லை. பழைய பேட்டிகளில் புத்தகங்களிலிருந்து அந்தத் தகவலை எடுத்திருந்தால் ரொம்ப நல்ல விஷயம். அது உண்மையென்றால் Snorricam முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட படம் சாருலதாவாகத்தான் இருக்க முடியும். இதுவொரு திரை வரலாற்றுத் தகவல்.

சார்லஸ்

இயக்குனர் சார்லஸ் said...

முன்பு நான் எழுதிய யூகங்களை மீண்டும் படிக்கும்போது என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் Snorricam உத்தி என்றும் நம்பமுடியவில்லை.

நடிகரின் உடலில் கேமரா இணைக்கப்பட்டிருக்குமானால், அவர் எவ்வளவு அசைந்தாலும் கோணம் (Angle) மாறாது. படச்சட்டத்துக்குள் நடிகர் தெரியும் அளவும் மாறாது. நடிகர் அப்படியே பொறுத்தப்பட்டதுபோல் நிலையாக இருக்க, பின்னணி உலகம் கன்னாபின்னாவென ஆடும். இதுதான் பொதுவாக Snorricam கொடுக்கும் எபெக்ட்.

சாருலதா ஊஞ்சல் காட்சியிலும் கிட்டத்தட்ட இந்த எஃபெக்ட் இருக்கிறது. ஆனால் கோணம் மாறுகிறது. நாயகி மேலே செல்லும்போது கேமரா அவளை லோ ஆங்கிளில் காட்டுகிறது, கீழே வரும்போது ஹை ஆங்கிளில் காட்டுகிறது. எளிமையாக சொல்வதானால், நாயகி கீழே இறங்கும்போது நாம் அவரது உச்சந்தலையைப் பார்க்கமுடிகிறது. நாயகி மேலே செல்லும்போது கீழ்க்கழுத்தைப் பார்க்கமுடிகிறது. Snorricam முறையில் நாயகியின் உடலில் கேமராவைப் பொறுத்தியிருந்தால் இப்படித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

நாயகியின் உடலில் கேமரா பொறுத்தப்படாமல், நாயகி மேலே செல்லும்போது கேமரா கீழேயும், நாயகி கீழே வரும்போது கேமரா மேலேயும் செல்வதுபோல்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. சீ ஸா போல. இதை என் பதிவில் பின்னூட்டத்திலும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.