சமீபத்திய பைத்தியக்காரனின் உலகசினிமா திரையிடல் குறித்த பதிவின் பின்னூட்டத்தில் சிலர் கிழக்கு பதிப்பகத்தின் உதவி குறித்து விமர்சித்திருந்தனர். அவர்களின் வியாபார உத்திகளில் இது ஒன்றாக இருக்குமோ அல்லது 'அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ' என்றும் சிலர் சந்தேகப்பட்டிருந்தனர். அபத்தம். "வாரான் வாரான் பூச்சாண்டி" என்று பயங்காட்டுவது போல் இருந்தது. தம்மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்குத்தான் இந்த மாதிரி பயங்கள் உள்ளூர எழும்.
கிழக்கு புத்தகங்கள் குறித்து எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. 'இந்தியப் பிரிவினை' குறித்த அவர்களின் சமீபத்திய புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். " ..as one of the 10 greatest tragedies in human history" என்று வர்ணிக்கப்படும் இந்தியப்பிரிவினை நிகழ்வு, அது குறித்த தீவிரம் கொஞ்சம் கூட இல்லாமல் ஏதோ அம்புலிமாமா கதை போல் எழுதப்பட்டிருந்தது. இது மாத்திரமல்ல, நான் வாசித்தவரை கிழக்கு புத்தகங்களின் எழுத்து நடைக்காக ஒரு பொதுவான டெம்ப்ளேட் இருக்கிறதென்று நினைக்கிறேன். எல்லாப் புத்தகங்களும் ஒருவரால் எழுதப்பட்டதோ என்று தோன்றுமளவிற்கு 'கிழக்கு' எழுத்தாளர்களின் தனிப்பட்ட எழுத்து திறமையை மழுப்பி தனக்கேற்றவாறு வளைத்துக் கொள்கிறதோ என்றும் தோன்றுகிறது. நிற்க.. இது போன்று அவர்களின் உருவாக்கங்கள் குறித்து விமர்சனம் இருந்தால் அதை நேரடியாகவே அவர்களிடம் முன்வைக்கலாம். தனிப்பட்ட முறையில் பத்ரியிடமும் ராகவனிடமும் பழகியவன் என்கிற முறையில் அவர்களுக்கு இதைப் பற்றி விவாதிப்பதற்கான சகிப்புத்தன்மையும் மாற்றுக் கருத்துக்களை கேட்டுக் கொள்கிற பக்குவமும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதிலும் ராகவனிடம் அவர் எழுத்து குறித்தே எந்தவிதமான எதிர்மறையான விமர்சனத்தையும் அவர் முன்பே உரையாடிக் கொண்டிருக்கலாம். புன்னகையுடன் கேட்டுக் கொள்வார்; மறுப்பார்; தெளிவுப்படுத்துவார்.
இதைத் தவிர அவர்களின் வியாபார யுக்தி குறித்து ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால் "பிரமிப்பு". எந்தவொரு வணிக நிறுவனத்தின் தாரக மந்திரமும் 'லாபம்' என்கிற ஒற்றைச் சொல்லாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். அதற்காக சில தார்மீகமான தர்மத்தையும் நியாயங்களையும் கூடுமானவரையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்னதான் வணிக நிறுவனமென்றாலும் உணவு தயாரிப்பு, குழந்தைகள் உணவு, மருந்துப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கும் வணிகர்கள் லாபத்தை ஒன்றே நோக்கமான எந்தவிதமான சமரசங்களையும் மேற்கொள்வார்கள் என்றால் அது ஆபத்தானதே. மனதை ஆரோக்கியப்படுத்தும் புத்தகங்களும் இநத வகையைச் சேர்ந்தவையே..
உங்களுக்கு கிழக்கு புத்தகங்கள் ஒருவேளை பிடிக்கவெல்லையென்றால் அவற்றைப் புறக்கணிக்கலாம். சமீபத்திய புத்தக கண்காட்சியில் பத்ரியைச் சந்தித்த போது என் ரசனையைப் பற்றி அறிந்திருந்த அவர், "என்ன, 'உங்க' புத்தகங்க எல்லாம் வாங்கிட்டீங்களா'?" என்றுதான் கேட்டாரே ஒழிய அவர் நிறுவனத்தின் புத்தகங்களைப் பற்றி நானே கேட்கும் வரை வாயைத்திறக்கவில்லை. மேலும் கிழக்கு புத்தகங்கள் ஒரு ஆரம்பநிலை வாசகனை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். ஆர்வமிருந்தால் அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்து அவன் தீவிரமான பயணத்திற்குள் செல்ல இவை உதவக்கூடும்.
()
இந்தப்பதிவின் மூலம் நான் சுருக்கமாக கூறவருவது என்னவென்றால் என்னதான் வணிக நிறுவனமென்றாலும் எப்போதும் அவர்களை சந்தேகத்தோடே அணுக வேண்டியதில்லை. அவர்களின் தயாரிப்புகள் பிடிக்கவெல்லையெனில் புறக்கணியுங்கள். வணிக நோக்கத்திற்கோ அல்லது எந்த நோக்கத்திற்கோ அவர்கள் ஏற்படுத்தி தரும் வசதிகளை விமர்சிக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து.
ரிலையன்ஸ் நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் என்பதற்காக ஏர்டெல் பயன்படுத்தும் நீங்கள் 'நம்மை இழுத்து விடுவார்களோ' என்று சந்தேகப்பட்டு கண்ணை மூடிக் கொள்வது எவ்வளவு அபத்தமோ....
(மொக்கை தொடரும்)
suresh kannan
10 comments:
அய்யய்யோ, சுரேஷ் கண்ணனுக்கு யாரோ செய்வினை வெச்சுட்டாங்க போலிருக்கே. யாராவது அவர காப்பாத்துங்களேன். :-))
சூடான இடுகையில் இடம்பெற வாழ்த்துகள்!
அவ்வப்போது இப்படியும் எழுதவும் :-)
அவன் செய்வான்., இவன் செய்வான்...என்று ஏமாந்தோம்!
யார் தேர் இழுப்பது?
நாம் இழுக்கவில்லை...கடமயை மறந்தோம்...தேரை வேறு எவனோ ஓட்டி சென்று விட்டான்
கொடுமைடா சாமி.
Suresh,
You are absolutely correct on Kizhakku critiques.
Anyone having opinions against Kizhakku can share the same as long as they can objectively criticize. If the only goal is to defame for some obvious reasons - we too have option to completely ignore it.
"As you age there are more wrinkles on your mind than your face"
ellam sari. ivarkalin laabanookil ivarkal thoouvum visa sediyen maram eppadi irukkum. ungaluku therinthavarkalai irukkalam. but manihtaneyam endu ondru irukkirathu. ivarkalin pana aasaiku oru chinna utharanam pirabakaran pathiya kadaisi puhtakam. kasuku manchal pathirikai eluthum pathirikaiyum ivarkalum ondre. ivarkal ahtaivida abayakaramaanavarkal.
அய்யய்யோ, சுரேஷ் கண்ணனுக்கு யாரோ செய்வினை வெச்சுட்டாங்க போலிருக்கே. யாராவது அவர காப்பாத்துங்களேன். :-))
haa..haa..haa..haa..
என்ன கொடும சுரேஷ் அண்ணாச்சி.இப்படி கிழக்குக்கு சொம்புதூக்கிவுட்ற அளவுக்கு வந்துவிட்டதா நிலைமை! அவிங்களே orifices மூடிகிட்டு இருக்கும்போது அல்லைக்கை மாதிரி உங்களுக்கு இது தேவையா? It will take time for you to realize மொக்கை doesn't mean you have to lose your self respect!
All I could say is ALAS!
//மேலும் கிழக்கு புத்தகங்கள் ஒரு ஆரம்பநிலை வாசகனை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். ஆர்வமிருந்தால் அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்து அவன் தீவிரமான பயணத்திற்குள் செல்ல இவை உதவக்கூடும். //
வெகு அழகாக அதே நேரம் ஆழமாக கூறிவிட்டீர்கள்
//ரிலையன்ஸ் நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் என்பதற்காக ஏர்டெல் பயன்படுத்தும் நீங்கள் 'நம்மை இழுத்து விடுவார்களோ' என்று சந்தேகப்பட்டு கண்ணை மூடிக் கொள்வது எவ்வளவு அபத்தமோ....//
சூப்பர் ... !!
Post a Comment