Wednesday, March 21, 2012

மீண்டு(ம்)...சற்று இடைவெளியாகி விட்டது. என்னை நான் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அதற்கு முற்றிலும் எதிர்பக்கமாக நானிருக்கிறேன் என்று எனக்கு என்னையே அடையாளங் காட்டிய தருணங்கள். அகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு வடிகால் எழுத்து. மாறாக எங்கோ அடைத்துக் கொண்டு விட்டது்; முடங்கிப் போயிற்று. அதைப் ப்ற்றி எழுதுவதன் மூலமே இதைக் கடந்து வரலாம் என்று சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். காய்ந்த எலும்பை கடித்து தன் குருதியை தானே ருசிக்கும் நாய் போல மஸோக்கிஸ மனம் பிரச்சினைகளிலிருந்து வரும் துன்பத்தில் ஆழந்து ருசிகண்டு விட்டது. விளைவாக வேறு எதைப் பறறியும் யோசிக்க முடியவில்லை. வரவேற்பறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த பாரதி வேறு ' தேடிச் சோறு நிதந் நின்று' என்று குற்றவுணர்வுள்ளாக்கிக் கொண்டிருந்தான். இளங்கலையில் எடுத்துப் படித்த உளவியல் என்னும் ஏட்டுச் சுரைக்காய் சுயபாகத்திற்கு சற்றும் உதவவில்லை.

சரி. இதைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

விதியின் கைகளில் என்னை ஒப்படைத்து விட்ட இந்த இடைவெளி காலத்தில், "சமீபமாக ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டு தினமும் ஓரிரண்டு மின்னஞ்சல்களாவது வந்துக் கொண்டேயிருந்தன. இப்போதும் தொடர்வதுதான் எனக்கே ஆச்சரியம். அந்த நட்புக் குரல்களின் கைகளைப் பிடித்தாவது சற்று சுதாரித்து எழுந்துக் கொண்டிருக்கலாம். மாறாக நான் பெரும்பாலும் எந்த ஒரு மடலுக்குமே பதிலளிக்கவிலலை. தாமாக புரிந்து கொண்டவர்கள் தவிர மற்ற ஒரு சிலர் 'தலைக்கனம்' என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். தவறில்லை. அதுவும் சற்று உண்டு.

அந்தக் கடிதங்களுக்கு பதிலளிக்க எனக்கு கூச்சமாயிருந்தது என்பதுதான் உண்மை. என் எழுத்தின் மீது நானே பெரும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் 'உங்கள் எழுத்தை ஏன் அச்சு வடிவில் கொண்டு வரக்கூடாது?' என்ற கேள்விகளெல்லாம் உள்ளூர பரிகாசம் உறைந்து போனவைகளோ என்கிற குறுகுறுப்பு எழுகிறது. (அச்சு வடிவில் வருபவைதான் சிறந்த எழுத்து என்கிற கற்பிதங்களையும் இங்கு தாண்டி வர வேண்டியிருக்கிறது).

சமீபமாக எதுவும் எழுதாத நிலையிலும் என் வலைப்பக்கத்தை தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் வாசிக்கிறார்கள் என்று வரும் புள்ளிவிவரங்கள் என்னை அற்ப மகிழ்ச்சியிலும் சங்டத்திலும் தொடர்ந்து எழுதாதது குறித்த குற்றவுணர்விலும் ஆழ்த்துகிறது. அபூர்வமாக நானே என் வலைப்பக்கத்திற்கு செல்லும் நள்ளிரவிலும் கூட  யாரோ ஒருவர் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும் தகவல் என் பொறுப்பை உணரச் செய்கிறது. (அந்த ஒருவர் யாரோ அல்ல, உன்னுடைய ஐடிதாண்டா முண்டம் என்று நண்பர் சொல்வது நிச்சயம் பொய்யாகத்தானிருக்க வேண்டும்).  

ஆகவே.. நண்பர்களே...சுமாரான இடைவெளியில் கூட ஒருவரை முழுமையாக மறந்து போகக்கூடிய சாத்தியமுள்ள இந்த பரபரப்பான வாழ்வியல் சூழலில் இன்னமும் நினைவு வைத்துக் கொண்டுள்ள அன்பு உள்ளங்களுக்கு மிகப் பணிவான வணக்கம். இந்த ஆதரவுடன் மீண்டும் எழுதிப் பார்க்கலாம் என்று உத்தேசம்.

இது போன்ற கண்ணீர் சற்று கசியும் கடிதங்களை நானே முன்னர் பரிகாசம் செய்திருப்பேன். இப்போது இதுவே ஆசுவாசம் தருகிறது என்பதுதான் விந்தை.  பொதுவாக நான் நட்பை புறவயமாக பேணுவதில் அத்தனை அக்கறை கொண்டவனில்லை. என்றாலும் இந்த சிக்கலான சூழலில் சில அந்தரங்கமான நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
 

suresh kannan

29 comments:

பாரதி மணி said...

மீண்டும் மீண்டு வந்ததற்கு நன்றி. சுரேஷ்....நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

CS. Mohan Kumar said...

ஓகே. ஸ்டார்ட் தி மியூசிக்..

Anonymous said...

மீண்டு(ம்) வந்ததற்கு வரவேற்பு! அப்படியே ட்வீட்டருக்கும் வாங்களேன் :-)

ponsiva said...

welcome back

முரளி said...

அன்புள்ள நண்பர் அவர்களுக்கு நீங்கள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து மீண்டு பழைய வேகத்துடன் எழுதவேண்டும். அதுவரைக்கும் காத்திருப்போம்

Ravichandran Somu said...

Welcome Back !!!

Parames. said...

Welcome back, Suresh. Missed your writting for a while. Pleased that you have come back.

Anonymous said...

நன்றி சு.க. நான் தவறாமல் வாசிக்கும் வலைப்பூ உங்களுடையது. மூன்று மாதங்களாக தினமும் காலையில் எழுந்து இன்று எதாவது எழுதியிருக்கிறீர்களா என்று எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். இனி எழுதவே மாட்டீர்கள் என்றிருந்தேன். மீண்டும் வந்ததற்கு நன்றி!

Kaarthik said...

Welcome Back :-)

Anonymous said...

சிங்கம் கிளம்பிருச்சேயய்ய்ய்............ come on man... we are so happy.

Unknown said...

Welcome back thala :-)))

அருண் பாரத் said...

THALAIVAA NEENGAL UNGAL ELUTHU PAYANATHIL THODARA INTHA SAAMAANIYANIN VAALTHUKAL

அருண் பாரத் said...

NEENGAL UNGAL ELUTHU PAYANATHIL THODARA INTHA SAAMAANIYANIN VAALTHUKKAL

ரா.கிரிதரன் said...

வாங்க சுரேஷ்! ரொம்ப சந்தோஷம் :)
அந்த இன்னொரு ஐ.டி நான் தான் ;)

//இது போன்ற கண்ணீர் சற்று கசியும் கடிதங்களை நானே முன்னர் பரிகாசம் செய்திருப்பேன். இப்போது இதுவே ஆசுவாசம் தருகிறது என்பதுதான் விந்தை//

வயசானாலே இப்ப்டித்தான் பாஸ்..விடுங்க :))

komagan said...

o.k come soon.....

Jegadeesh Kumar said...

அன்புள்ள சுரேஷ்,

எழுத்து நம் அக விடுதலைக்கான கருவி.

மீண்டும் எழுத வந்ததற்கு நன்றி.

தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.

Sridhar Narayanan said...

அப்பப்ப இப்படி லீவ் போட்டுட்டு வந்தாத்தான் எத்தனை பேர் மிஸ் பண்றாங்கன்னு தெரியுது. தொடர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எழுதிட்டே இருக்கறது கஷ்டம்தான்.

வலைத்தளம் போரடிச்சா ஏதாவது நாவல் எழுத ஆரம்பிச்சிருங்க. :)

Welcome Back! :)

Anonymous said...

வாங்க ஸ்வஸ்திக்ஜி!

டைனோ

வால்பையன் said...

சமீபமாக ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டு தினமும் ஓரிரண்டு மின்னஞ்சல்களாவது வந்துக் கொண்டேயிருந்தன.//

எனக்கு எதுவும் வருவதில்லை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பின்ன மொக்கைக்கையெல்லாம் எழுத சொல்லி மெயில் வருமா என்ன?

:)

வெல்கம் பேக்

DHANS said...

welcome back to the Next innings

Anonymous said...

இரண்டு வருடமாக நான் உங்கள் எழுத்துக்களை படித்து வந்தாலும் இது என் முதல் பின்னூட்டம் உங்களுக்கு.
சிலசமயம் உங்கள் எண்ணங்களுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், படிக்க தவிர்க்க இயலாத எழுத்து வகை உங்களுடையது.
Welcome Back sir!! Rock on!!!

முரளிகண்ணன் said...

Welcome BAck

Divya Balachandran said...

Happy to see ur post after 3 months break.. keep going...


Welcome back..

Divya Balachandran said...

Happy to see ur post after 3 months break.. keep going...


Welcome back.

Anonymous said...

ரொம்ப மண்டைக்குடைச்சலா இருந்தா ஒரு த்ரில்லர் கதையைப் படிங்க.இல்ல த்ரில்லர் சிறுகதை எழுத முயற்சி பண்ணவும்.உடனே எழுதி முடிக்க முயற்சி செய்யாதீர்.plot ஐ எழுதி எழுதி மெறுகேற்றவும்.இந்த உத்தி நல்லா வேலை செய்யுது.

Peter John said...

welcome back Mr.Suresh Kannan. hope you will get into the old form.

Peter John said...

good to see you back in bolgs. thanks for coming.

butterfly Surya said...

Happy to see you again. Keep writing plz..

Anonymous said...

Luckily I was about to delete your site from favourites today because of no updates, but it was otherwise. keep writing