Thursday, October 14, 2010

இரண்டு எதிர்வினைகள்

ஏன் இணையததிற்கு எழுத வந்தோம் என்று யோசிக்கிற அளவிற்கு முன்னெப்போதுமில்லாத மனஉளைச்சலை சந்திக்கிற தருணததில் இதை எழுதுகிறேன். அன்றாட வாழ்வின் இயந்திரத்தனங்களும் அழுத்தங்களும் சலிப்பூட்டுவதுமான சமயங்களிலிருந்து இளைப்பாறுவதற்காகவும் நண்பர்களுடன் மகிழ்வாக உரையாடுவதற்காகவும்  என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும்  இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருந்தது. ஒத்த அலைவரிசை ரசனையுள்ள  நண்பர்களையும் இனிமையாகப் பழகக்கூடிய பல நண்பர்களையும் தந்ததே இணையத்தின் என் ஒரே சம்பாத்தியம். எஸ்.ராவின் பாதிப்பில் உலக சினிமா மீது ஆர்வமேற்பட்டு அதைக் குறித்து தொடர்ந்து எழுதி அது குறித்தானதொரு பிரத்யேக அடையாளம் என் மீது ஏற்பட்டதே நிறைவானதாக இருக்கிறது. இதற்கு உச்சமாக எழுத்தாளர் ஜெயமோகன் என் வலைப்பதிவையும் (என் வலைப்பதிவை மாத்திரம் அல்ல) அவர் கவனித்து வாசிக்கும் சினிமா பதிவுகளில் ஒன்றாக குறிப்பிட்ட போதுதான் நான் எழுதி வருவதின் சீரியஸ்னஸே எனக்கு அழுத்தமாகப் புரிந்தது. (ஆனால் இதுவே சிலருக்கு காண்டை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. ஜெயமோகனின் பிரம்மாண்ட ஆளுமையின் காரணமாகவே அவரை மூர்க்கமாக வெறுப்பவர்கள் அந்த பட்டியலில் என்னையும் இணைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.) இனியாவது இன்னும் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுத வேண்டுமென்கிற உந்துதலை ஜெயமோகனின் குறிப்பு ஏற்படுத்தியது.

ஆனால் கல்லெறிந்து விட்டு ஓடிப்போகும், காரணமேயின்றி காழ்ப்பை வெளிப்படுத்தும் ஆசாமிகளால் பல சமயங்களில் நான் காயப்பட்டிருக்கிறேன். கூடிக் கும்மியடிக்கும், யாரையாவது நோண்டிக் கொண்டேயிருக்கும் இந்த ஈனப்பிறவிகளிடமிருந்து விலகிப் போனாலும் துரத்திக் கடிக்கும் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாததாக இருக்கிறது. சரி. நம்முடைய உழைப்பைச் செலுத்தி மேற்குறிப்பிட்ட நற்பெயரை சம்பாதித்து விட்ட ஒரே காரணத்திற்காக இவர்களுடன் மல்லுக்கட்டாமலேயே ஒதுங்கியிருந்து பார்த்துவிட்டேன்.

 சரி. அதையெல்லாம் பார்த்தால் முடியாது. இணையத்தில் இல்லையெனினும் சமூகத்திலும் இவ்வாறான மனிதர்களையும் நிகழ்வுகளையும் எதிர்கொண்டாகத்தான் வேண்டும். என்னை நுண்ணுணர்வு உள்ளவனாகவும் சமூகம் கட்டியமைத்தபடியான நாகரிகமானவாக அடையாளம் காட்டிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும்தான்  விரும்புகிறேன் என்றாலும் எனினும் ஒருவன் வேண்டுமென்றே மூர்க்கமாக வந்து மோதும் போது ஒதுங்கிப் போவதற்கு நான் மகான் அல்ல.

சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை சில நண்பர்கள் அறியக்கூடும். அறியாதவர்களுக்காக சுருக்கமாக.

ரோசா வசந்த் என்கிற 'மல' ஆராய்ச்சியாளரும் (அதாவது தன்னைப் பற்றி ஆராய்கிறவர்) சிந்தனையாளரும் என்னுடைய இணையப் பயணத்தின் ஆரம்பம் முதலே பதிவுகளிலும் சமீபத்தில்  டிவிட்டரிலும்  என்னைச் சீண்டிக் கொண்டிருந்தனின் விளைவாக ஒரு மனநெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஆவேசமாகி சிறுகுறிப்பொன்றை எழுதினேன். (நான் திமிர்த்தனமாக எழுதிய டிவிட்களுக்கான பதிலது  என்று ரோசாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமிருக்கு திமிரைத்தான் பதிலாக அளிக்க முடியும்). அப்படி எழுதியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 'அக்கப் போர் மனநிலையில் இல்லை. இரண்டொரு நாட்களில் எழுதுவேன்' என்றேன். உடனே டிவிட்டரில் நண்பர்களுடன் என்னுடைய உரையாடலைத் தொடர்ந்தேன். இவருக்கு பதிலளிக்கக்கூடிய உன்னதப் பணியில் ஈடுபடாமல் (உண்மையில் அது எனக்கு மனஉளைச்சலைத்தருகிற காரியம்) டிவிட்டரில் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இவருக்குக் கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. எது அக்கப்போர், எது இளைப்பாறுவதற்கான உரையாடல்  என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் பல ஆண்டுகள் தொடர்பான விஷயங்களை மீள்நினைவு செய்து எழுத வேண்டுமென்றால் அதற்கான அவகாசமும் தேவை.

இதற்கு சற்றும் வாய்ப்பே தராமல், நாராயணன் இதுகுறித்து பஞ்சாயத்து பதிவொன்றை எழுதினார். ஒரு சமயத்தில் இணையத்தில் நான் பொறாமைப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர் நாராயணன்தான் என்பதை அவரிடமே பொதுவில் முந்தைய சமயங்களில் தெரிவித்திருக்கிறேன். ஒரளவிற்கு நடுநிலைமையான நேர்மையான மனிதர் என்பது போல்தான் நாராயணன் குறித்த பிம்பம் என்னுள் இருந்தது. சுந்தர்-வசந்த் தாக்குதல் தொடர்பான சமயத்தில் இருபக்கமும் என்ன நடந்ததென்று தெரியாமல் அமைதி காத்ததாக சொன்னவர், என்னுடைய விஷயத்தில் மாத்திரம் உடனே எதிர்வினை பதிவு எழுதியது ஏன் என்பது புரியவில்லை.

'இத்தனை வருடங்களாக பெரும்பாலும் இலக்கியம், சினிமா குறித்து  மாத்திரமே எழுதி வருகிற ஒருவன், இணையத்தில் இதுவரை யாரையும் கடுமையாக எழுதாத ஒருவன், திடீரென்று ஏன் இப்படி ஒருவரைப் பற்றி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறான்' என்று நாராயணன் சிறிது நேரமாவது யோசித்திருக்கலாம். அல்லது என்னையே தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். ஆனால் 'சிந்தனையாளரின்' சகவாசமும் நட்பும்  கண்ணை மறைத்துவிட்டது போலிருக்கிறது.

சரி. அதுவும் ஒருவகையில் எனக்கு நன்மையே புரிந்தது. டிவிட்டர் சமூகத்தில் மாத்திரம் முணுமுணுக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் பிளாக்கர் பரப்பிற்கு வெளியே வந்து பலரும் அறியக் காரணமாயிற்று. ஆனால் ஒருவகையில் நாராயணனின்  ஒருதலைபட்சமான பார்வையும் ரோசாவை ஏதோ திருவுரு ஆக்குகிற முயற்சியில் எழுதினதும்  எனக்குள் ஆயாசத்தை ஏற்படுத்தியது. இப்போது இது எந்த திசையில் போகும் என்பதைக் கூட என்னால் யூகிக்க முடிந்தது. உண்மையில் ரோசாவுடனான பூசலை நான் விளக்கி எழுதுவதாகச் சொல்லியிருந்த பதிவின் மூலம் முடித்துக் கொள்வதுதான் என் நோக்கமாக இருந்தது. ஆனால் நாராயணன் பதிவு தந்த ஆயாசத்தில் என் தற்போதைய நிலையை சுருக்கமாக எழுதி முடித்துக் கொண்டேன்.

உண்மையில் நான் கடுமையாக எழுதியதற்காக ரோசாவிடம் மன்னிப்பு கேட்கும் முடிவில் கூட இருந்தேன். இனியதற்கு வாய்ப்பேயில்லை. ரோசாவிற்கு டிவிட்டரில் எழுதிய குறிப்பில் கடுமையாக எழுதியதும் பஞ்ச் டயலாக் பேசியதும் அந்தச் சமயத்தின் தீவிரமான மனநிலையில், ரோசாவின் திமிரான பதிலுக்கு எதிர்வினையாக எழுதியது. அதற்கு பின்னணயில் ரோசா இத்தனை ஆண்டுகளாக என்னுள் ஏற்படுத்தியிருந்த மனஅழுத்த அடுக்குகளும் காரணம்.

ரோசாவிற்கு பதிலெழுவதாக நான் எழுதியிருந்ததை வாசித்த பல நண்பர்கள் அதைத் தொடராமலிருக்க என்னைக் கேட்டுக் கொண்டார்கள். 'ரோசா ஒரு வகையில் எதையும் தீவிரமான எல்லையில் குரோதத்துடன் அணுகுவார் என்றும் அவருக்கு ஒருவகையான உளப்பிரச்சினை உள்ளது என்றும் பொதுவெளியிலோ தனியான சந்தர்ப்பத்திலோ எவ்வித அவகாசமும் தராமல் தாக்கக்கூடியவர் என்றும் எச்சரித்தார்கள்.

இந்த மாதிரியான நிகழ்வுகளில் தொடர்புப்படுத்தி என் பெயர் இணையத்தில் அடையாளம் காட்டப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் - சற்று மிகையாக சவடால் அளித்தாலும் - என் வழக்கப்படி மீண்டும் ஒதுங்கிப் போகவே விரும்பினேன்.

ஆனால்...

ரோசா அவருடைய வழக்கமான குரோத மொழிகளுடன்  என்னைப் பற்றி இன்று எழுதியிருக்கிறார். என் வாயிலிருந்து இன்னும் மேலதிக வார்த்தைகளைப் பிடுங்கி அதை தனக்கு சாதகமானதாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழலுக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். இதனால்தான் என்னை 'ஆதாரம் ஆதாரம்' என்று துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.  (என்னுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ஒருவரை திட்டமிட்டு மூக்கில் குத்தி தாக்கி விட்டு அதற்கு தார்மீக ரீதியாக மன்னிப்பு கூட கேட்காமல் ஏதோ கிரிமினல் வக்கீல் போல் எதிர்வினையாற்றிய ரோசா ஒர்  அநாகரிக பேர்வழி என்று அதை இணையத்தில் அவதானித்த பலருக்கே தெரியும். இதுக்கு எதுக்கய்யா புண்ணாக்கு ஆதாரம்) அதிலிருந்து நான் தப்பித்துக் கொண்டவுடன். அவருக்கு கோபம் தலைக்கேறி விட்டிருக்கிறது. எனவே ஒரு குரோதமான பதிவின் மூலம் அதை  தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.

ரோசாவை சைக்கோ என உணாச்சி வேகத்தில் நான் திட்டியதற்கு பஞ்சாயத்து செய்தவர்களும் கேள்வி கேட்டவர்களும் நடுநிலையான நண்பர்களும் மனச்சாட்சியோடு ரோசாவின் பதிவிற்கு எதிர்வினை புரிவார்கள் என நம்புகிறேன /  எதிர்பார்க்கிறேன்.

இனி என் முறை.  ரோசாவின் தொடர்ந்து அழுத்தம் தந்து கேட்டுக் கொண்டிருந்த படி அதற்கான விளக்கத்தை எழுதப் போகிறேன். இந்த மனநெருக்கடிக்கு எப்படியோ என்னைத் தள்ளிய ரோசாவின் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன். இதில் அவருக்கு வெற்றிதான். வாழ்த்துகள். ரோசாவிற்கான விளக்கப்பதிவை எழுதுவதின் மூலம் எனக்கும் சற்று மனஅழுத்தம் குறையக்கூடும் என்பதையும் வெளிப்படையாகவே நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன்.  அந்தச் சூழலையும் சமத்காரமாக ஏற்படுத்தித் தந்ததற்காக அவருக்கு நன்றி.


அடுத்ததாக லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவின் பதிவு.

இந்தக் கருமத்தையெல்லாம் புறக்கணித்து விட்டுச் செல்வதுதான் என்னுடைய முடிவாக இருந்தது.

நான் ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றால் அவருக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச தகுதி கூட இந்த ஆசாமியிடமில்லை. என் மீது இத்தனை வெறுப்பை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு நேரில சந்திக்கும் சமயங்களில் எப்படி இந்த ஆசாமியால் ஹிஹி என இளிக்க முடிந்தது  என தெரியவில்லை. இதுதான் உண்மையில் இரட்டையான மனநிலை.

ஒர் அநாகரிக ஆசாமியை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்குரிய இயல்பான முக வெளிப்பாட்டோடு அவரை மறுத்து ஒதுங்கி நடந்து கொள்வதுதான் முறையான, நோமையான செயல். அதைவிட்டு பல ஆதாயங்களுக்காக வெறுக்கும் நண்பர்களிடம் குழைவது, பிடிக்காத நபரோடு கலவி கொள்ள வேண்டியிருக்கிற பாலியல் தொழிலாளியின் நிலைக்கு ஒப்பானது. பாவம். அவர்களுக்காவது அதை மறுக்கக்கூடிய வாய்ப்பும் சந்தர்ப்பமும் இல்லை.

திராவிட மேடைகளில் பிரியாணிக்காகவும் காசுக்காகவும் மதுக்காகவும் ஆபாச மொழியில் எதை வேண்டுமானாலும் உளறக்கூடிய பேச்சாளர்களின் இணையவடிவம் இந்த ஆசாமி. ரோசாவி்ன் இன்னொரு வகையான குளோனிங் இவர். இந்த ஆசாமியிடமிருந்தும் நான் வெளிப்படையாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டாலும் அடிப்படை நாகரிகமேயின்றி தொடர்ந்து எதையோ உளறிக் கொண்டேயிருந்தார். இது போன்ற சில ஆசாமிகள் இதே வேலையாக உருப்படியாக எழுதுபவர்களையும் சீண்டி சீண்டி அவர்களின் சமநிலையைக் குலைப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நானும் இந்தப் பதிவுமே ஓர் உதாரணம். அந்த வகையில் அவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானதுதான்.

தமிழ் இணையம் / பதிவுகள் என்பது கீழ்த்தரமான வசவுகளால் பின்னூட்டங்களால் ஆனது என்பது போன்ற பொதுப் பிம்பத்திற்கு இம்மாதிரியான ஆசாமிகள்தான் காரணம். இணையத்தின் இந்த மோசமான அடையாளம் மாறுவதற்கு மற்ற பதிவர்களால் இவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்பதையும் மற்ற நண்பர்களுக்கும் பொதுவானவர்களுக்கும்  ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன். ஆனால் இம்மாதிரியான ஆசாமிகள்தான் இணையத்தின் பிரதிநிதிகள் என்பது மாதிரி தங்களின் செல்வாக்கைக் கொண்டு ஊடகங்களில் வெளிப்படும் போது அவமானமாக இருக்கிறது.

இந்த ஆசாமியைப் பொருட்படுத்தி இத்தனை எழுதியதே அதிகம். நண்பர் ஆசிஃப் பற்றி நான் கூகுள் பஸ்ஸில் எழுதியதையும் இந்த ஆசாமி குறிப்பிட்டிருக்கிறார். மரத்தடி குழும காலத்திலேயே ஆசிஃப் என் நண்பர் என்பதையும் அவருக்கும் எனக்குமான இந்த உரசல் வழக்கமானதுதான் என்பதையும் பஸ்ஸிலேயே விளக்கியிருக்கிறேன். ஆசிஃபும் இதை புரிந்து கொண்டு பெருந்தன்மையாக பதிலளித்திருந்தார். ஆனால் அதையும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த நபர் உளறியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. எனக்கு நண்பர்களே கிடையாதாம். அடக்கஷ்டமே. தன்னுடைய ரசனைக்கு அலைவரிசைக்கு ஈடாக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு சிறிய வட்டத்திற்குள் புழங்குவதும் ஆதாயங்களுக்காக எல்லோரிடம் பல்லை இளிப்பதும் ஒன்றா? நான் எழுதிய பதிவின்ஒட்டுமொத்த கான்டெக்ஸ்ட்டை புரிந்து கொள்ள முடியாமல் அல்லது புரிந்து கொள்ளாத பாவனையுடன்  இறுதிப் பகுதியில் தன் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டதின் காரணமாகவே நான் எழுதியதையெல்லாம் இம்மாதிரி வழக்கமாக எழுதுபவர்கள் போலவே திரி்த்து திரித்து எழுதுவதை என்னவென்பது. நான் விமாசனங்களை எதிர்கொள்வதேயில்லையாம். நேர்மையான விமர்சனமென்றால் உடனே அதை ஏற்றுக் கொண்டு பெரும்பாலான சமயங்களில் பதிலளித்திருக்கிறேன். இல்லையெனில் அது மேலதிக சர்ச்சையை வளர்க்குமென்றால் அதை அங்கேயே முறித்துவிட்டு ஒதுஙகிப் போவதுதான் என் வழக்கம்.இதனாலேயே என் பதிவின் பின்னூட்டங்களுக்கு கூட நான் பதிலளிப்பதில்லை. மெனக்கெட்டு என் பதிவை வாசிக்கும் நல்ல வாசகர்கள் கூட இதனால் வருத்தமடைந்திருக்கலாம்.

நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்.

'எதற்குங்க இதுக்கெல்லாம் நேரம் வேஸ்ட் செய்துக்கிட்டு' 'இவங்களையெல்லாம் புறக்கணிப்பதுதாங்க நல்லது" 'அவங்க இப்படித்தான்' 'எதற்கு வம்பு' என்றெல்லாம் தயவுசெய்து பின்னூட்டங்களில் எழுதாதீர்கள். நான் மேலே குறிப்பிட்ட சில ஆசாமிகள் மாத்திரமில்லை. இது போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் சீண்டும் போது இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதைக் கண்டியுங்கள். நாம் நாகரிகமாக ஒதுங்கி ஒதுங்கிப் போகத்தான் இவர்களுக்கு குஷி கிளம்பி விடுகிறது. துரத்தி துரத்திக் கடிக்கிறார்கள். நான் இப்படி அமைதியாக இருந்ததனால்தான் இன்று 'மலப்புழு'வாகியிருக்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். உடனேயே தக்க பதிலடி கொடுப்பவர்களிடம் இவர்கள் வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.

இனி ரோசாவிற்கான என் பதிலை போதுமான சாவகாசம் எடுத்துக் கொண்டு எழுதுவேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? வருகிறேன். இதன் மூலம் என் மீதும் சேறும் சகதியும் அவதூறும் வன்மமும் பட்டாலும் சரி.இதன் மூலம் இந்த நபருக்கு உளப்பிரச்சினைக்கு மேலதிக பாதிப்பேதும் ஏற்பட்டால் அதற்கு மூலக்காரணம் நானல்ல என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். குரோதமான மொழியில் எழுதப்பட்டவைகளுக்கு அவரே அதிகம் விரும்பியபடி பதிலளிப்பதுதான் என் நோக்கமேயன்றி வேறொன்றுமில்லை.

இப்படி எழுதுவதில் எனக்கே ஒப்புதலில்லை என்றாலும் ஒரு முன்ஜாக்கிரதைக்காக இதைப் பதிவு செய்கிறேன். பொதுவெளிகளில், பதிவர் சந்திப்புகளில், நூல் வெளியீட்டு விழாக்களில் எங்காவது ஒருவேளை நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது நேரடி அல்லது மறைமுகக் காரணமாகயிருக்க்கூடும் என்பதையும் அந்தச் சமயத்தில் அதை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வேன என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். இதையும் சொல்லித் தொலைத்து விடுகிறேன். இதை ஒரு வேளை தவறான முறையில் பயன்படுத்துவேனோ என்கிற சந்தேகமெல்லாம் எவருக்கும் எழத் தேவையில்லை. அது நிச்சயம் நேர்மையானதாகவே இருக்கும்.

இன்னொன்று: இணையத்தின் பின்னூட்டங்களிலும் டிவிட்டர் சந்துகளிலும் என் பெயரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டு  எழுதப்படும் தனிமனித தாக்குதல்களுக்கும் அதீத அவதூறுகளுக்கும் சைபர் கிரைமின் உதவியையும் நான் நாடக்கூடும. ஒருவகையில் ரோசா, யுவகிருஷ்ணா போல நேரடியாக மோதுபவர்களைக் கூட நான் மதிக்கிறேன். அதை விட்டு கோழைகள் போல் மறைவாக முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்களின் அரசியல் அசிங்கமாக இருக்கிறது.அவர்கள் அதை நிறுத்தி விட்டு எதுவென்றாலும் என்னிடமே உரையாடலாம்.சில நண்பர்கள் நகைச்சுவைக்காக என் பதிவுகளை கலாய்ப்பதை அதே நகைச்சுவையுடன்தான் அணுகியிருக்கிறேன் என்பதை பல நண்பர்கள் அறிவார்கள். சீரியஸான கேள்விகளுக்கும் அதே தீவிரத்தனத்தோடு சமயங்களில் அதன் கடுமையைக் குறைக்கும் பொருட்டு நகைச்சுவையாகவும் எதிர்வினை புரிந்திருக்கிறேன். விமர்சனத்தையே எதிர்கொள்ள மாட்டேன் என்பதெல்லாம் திரிபுவாதம்.

என் மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com


தொடர்புடைய பதிவுகள்

வார்த்தைகளின் வன்புணர்ச்சி

கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!

காகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்


சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு

suresh kannan

20 comments:

வால்பையன் said...

//பொதுவெளிகளில் எங்காவது நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது காரணமாகயிருக்க்கூடும்//

இனி ஒருபொழுதும் அம்மாதிரி சம்பவம் நடக்காமலிருக்க நினைக்கிறேன்!

வால்பையன் said...

முன் ஒருமுறை ஒட்டுமொத்த வலையுலகும் பார்த்தது ரோசா வசந்தின் அதீத வன்மம் பற்றி, இம்முறை பார்த்து கொண்டு இருக்காது!, திரும்ப கொடுக்கும்.

Ashok D said...

dont worry sir, என்ன கூப்பிடுங்க.. கும்மாங்குத்து குத்திடலாம்...

அதுக்குன்னு நான் ரௌடியில்ல... ஆனா திருப்பி தாக்குவதுல... பிஸ்துதான் நாங்க :))

ராம்ஜி_யாஹூ said...

noted

-தோழன் மபா, தமிழன் வீதி said...

பொதுவாக பதிவுலகில் நிறைய தெரு நாய்கள் உள்ளன. முதலில் அதன் குரைப்பு நன்றாக இருந்தாலும், போக போக அது கூட்டமாக சேர்ந்துக் கொண்டு போகிறவர் வருபவரை குரைத்து, ஓட ஓட விரட்டும். ஒரு பின்னோட்டம், அதற்கு ஒரு பின்னோட்டம் என்று பெயரில், ஊசியை வைத்துக் கொண்டு பிறரை நோண்டிக் கொண்டு இருப்பார்கள். இதில் நல்ல பதிவர்கள் எல்லாம் பாதிக்கப் படுகிறார்கள்.

இதற்கெல்லாம் பதில் சொல்லுவது, எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிடும்.
அதனால், கவலைப்படாமல் உங்கள் பதிவை தொடருங்கள் சுரேஷ்.

Anonymous said...

இதை விட்டு வெளியில் வாருங்களேன் தொடர் பதிவுகள் கேலிகள் குரூரம்ன்னு அடிச்சிக்கிறதுக்கா இந்த இணையம்

Anonymous said...

//சீண்டும் போது இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதைக் கண்டியுங்கள். நாம் நாகரிகமாக ஒதுங்கி ஒதுங்கிப் போகத்தான் இவர்களுக்கு குஷி கிளம்பி விடுகிறது. துரத்தி துரத்திக் கடிக்கிறார்கள். நான் இப்படி அமைதியாக இருந்ததனால்தான் இன்று 'மலப்புழு'வாகியிருக்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். //

Yes

http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/10/blog-post_14.html

" சித் || sid " said...

அடடா உங்க கிட்ட ஒன்னு(முந்தைய பதிவை முன்னிட்டு) கேக்கலாம்னு வந்தேன் , அதுக்குள்ள சண்டை start ஆயிடுச்சு . சண்டை முடியட்டும் அப்புறம் வந்து கேக்றேன் .

பிச்சைப்பாத்திரம் said...

சில அனானி பின்னூட்டங்களை பிரசுரிக்க முடியாதத்ற்கு வருந்துகிறேன். வழக்கமாக மற்ற பதிவர்களை தாக்கி வரும் பின்னூட்டங்களை பிரசுரிக்க மாட்டேன். ஆனால் இம்முறை பிரசுரிக்க எனக்கே விருப்பமாய்த்தான் உள்ளது. ஆனால் அந்த நபர் ஏதோ இதை நானே எழுதியது என்று திரித்துக் கூறுவார். எதற்கு வம்பு?

அந்த நபர் பதிவின் பின்னூட்டங்களையும் வாசித்தேன். பாவம். தன் ஏமாற்றத்தை விழுங்க முடியாமல் அது சிரித்து சமாளிக்க முயல்வதைப் பார்க்க காமெடியாக உள்ளது.

ஆதாரம் ஆதாரம் என்று அவர் புலம்பிக் கொண்டே தலையைப் பிய்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாமா என்று இப்போது தோன்றுகிறது. ஹய்யோ ஹய்யோ

அவர் என்னை மலப்புழு என்னைக் குறிப்பிட்டதைக் கண்டு உடனே கடும் கோபம் வந்தது உண்மை. ஆனால் நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது டிபன்சிவ் மெக்கானிச மனசு சொல்கிறது. அதுவும் நம் உடலில் வாழும் பல நுண்ணுயிர்களில் ஒன்றுதான். நம்மிடமிருந்துதான் அது உருவாகி வெளிவருகிறது. மிக முக்கியமாக அது சக மலப்புழுவை திட்டமிட்டு மூக்கில் குத்தாது. அந்த வகையில் அவை நம்மை விட உயர்ந்தவையே. :)

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களின் தனிமடல்களுக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிடுபவையெல்லாம் எனக்கும புரியாமல் இல்லை. நிச்சயமாய் இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை. இப்படி நம்மை கோபப்பட வைப்பதில் வெற்றியடைவது நம்மை விட எதிரிகள்தான். மூளைக்கும் புரியத்தான் செய்கிறது. என்ன இருந்தாலும் மனித மூளைதானே!

சிருஷ்டிக்கும் சமயங்களில் இறைவனுக்கு அருகில் செல்லும் எழுத்தாளன் கூட மற்ற சமயங்களில் சாதாரண மனிதன்தானே? எழுத்தாளனே அப்படி எனும் புழுவாகிய நான் எம்மாத்திரம்? :)

பிச்சைப்பாத்திரம் said...

//மிக முக்கியமாக அது சக மலப்புழுவை திட்டமிட்டு மூக்கில் குத்தாது. //

இந்தப் பின்னூட்டத்தை அனுப்பி பத்து நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்த வரிகளை திரித்து ஒரு டிவிட். அடடே என்னவொரு வேகம்.

தன் இருப்பை நிறுவிக் கொள்ளவும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளவும் இந்த வேகமெல்லாம் இல்லா விட்டால் எப்படி?

பிச்சைப்பாத்திரம் said...

டிவிட்டர் சார்,

உங்க அனுபவத்திற்கு முன்னாடி நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன் சார். ஏன் சார் என் கூட மல்லுக் கட்றீங்க. சக புழுன்றது புழுக்களுக்கானது மட்டும்தான். திரிக்காதீ்ங்க. சுனா இதை சரியாக்த்தான் புரிந்து கொள்வார். நீங்கள் கவலைப்படாதீர்கள்.

Anonymous said...

Negative People will Always Criticize
Some people criticize no matter what. It does not matter which side you are on, they are
always on the other side. They have made a career out of criticizing. They are "career
critics." They criticize as if they will win a prize at a contest. They will find fault with every
person and every situation. You will find people like this in every home, family, office.
They go around finding fault and telling everybody how bad things are and blaming the
whole world for their problems. We have a name for these people. They are called
energy suckers. They will go to the cafeteria and drown themselves in 20 cups of tea and
coffee and smoke to their hearts' content with one excuse: they are trying to relax. All
that they are doing is causing more tension for themselves and for others around them.
They spread negative messages like a plague and create an environment conducive to
negative results.
Robert Fulton invented the steamboat. On the banks of the Hudson River he was
displaying his new invention. The pessimists and the skeptics were gathered around to
observe. They commented that it would never start. Lo and behold, it did. As it made its
way down the river, the pessimists who said it would never go, started shouting that it
would never stop. What an attitude!

Radhakrishnan said...

இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

மூன்றாம் மனிதராக இவையெல்லாம் பார்க்கும்போது என்ன சொல்வது என தெரியவில்லை. எவர் மீது குற்றம் சுமத்துவது என்பதும் தெளிவில்லை.

எங்களை போன்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பதிவாகவே எடுத்து கொள்கிறேன்.

எனது புத்தகத்தில் நான் மிகவும் கவனமாக எல்லா விசயங்களையும் குறிப்பு எடுத்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். நன்றி.

வருண் said...

ஆமா நீங்க எல்லாம்தான் பதிவுலகில் காலங்காலமா பதிச்சு சாதிச்சுக்கிட்டு இருந்க்கிற சாதனையாளர்களா?

மொதல்ல தமிழ்மணம் இந்த கட்டைப்பஞ்சாயத்து சம்மந்தமான பதிவுகளை அக்ரெகேட் பண்ணுவதை நிறுத்தனும்!

இவன் என்ன அடிச்சுப்புட்டான், இவன் என்னைத் திட்டிப்புட்டான், இவன் என்ன மறைமுகமா திட்டுறான். இவன் பரவாயில்லை!இதுமாதிரி என்ன எழவையாவது எழுதுவதுதான் உங்க பதிவுலக சாதனையா? இல்லைனா இதுக்குத்தான் கூட்டம் சேறுதா? அதனாலதான் எழுதுறீங்களா?

Let me ask you this, Why are you allowing anonymous people respond in your blog if you are so much concerned about people attacking you anonymously?

Is that because, you can act as "anonymous" too?

You guys are full of garbage. All you do this, this kind of nonsense and think that you are all great!

Keep coming up with ethirviNai BS!

Prathap Kumar S. said...

சுரேஷ்ஜி, என்னைக்கேட்டால் பதிவுலகத்தில் உள்ள மிகச்சிறந்த பதிவர்களில் ஒருவர் நீங்கள். பலவருடங்களாக படிக்கிறேன்.
எனது வலைப்பதிவில் நான் எழுதிய டில்லி 6 படத்தின் விமர்சனத்திற்கு உங்கள் பின்னுட்டத்தை கண்டு பெருமையாக நினைத்தேன். நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெமோ உலகசினிமா பற்றிய தனது கட்டுரையில் உங்கள் பதிவையும் குறிப்பிட்டிருந்ததை கண்டு எனக்கும் பெருமையாக இருந்தது.
என்னைப்போன்ற பலர் இருக்கும்போது நீங்க மலப்புழுக்களை புறக்கணித்து வழக்கம்போல எழுதுங்கள்.

Anonymous said...

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்.. அவர்(கள்) போலிருக்கிறது! உங்கள் குழ்ந்தை பள்ளிக்கு போய்வாருங்கள் சு.கா.to just relax n gain more energy!

KKPSK

Anonymous said...

Suresh Kannan,

I am reading your blog for the last few years.

You have a good writing style.

I know it's difficult to ignore these kind of guys, but just ignore them and continue with your life.

Anyway quality is not determined by how many people read your blog, it's about the content of your writing.

Cheers,
Venu

வருண் said...

Suresh Kannan!

I am sorry if I had been rude to you in the first response. I am just tired of seeing this "blog-politics" . Should you get involved and respond to people to prove yourself? I am not sure. I am not going to judge you or anybody. I just went through your post and learned that you somehow got into the mess and "feel bad"!

I always have opinion difference with you and criticize your posts but it was never personal.

Anyway, all I can tell you is just ignore these attacks and move on!

All it matters is your conscience. Keep writing issue other than this blog politics nonsense! :-)))

வலைவாசி said...

"தமிழன் ஒரு காட்டுமிராண்டி" என த.பெ. சொன்னதை இணையத்திலும் தமிழன் நிரூபிக்கிறான். அந்தே நைனா...!!!