ஏன் இணையததிற்கு எழுத வந்தோம் என்று யோசிக்கிற அளவிற்கு முன்னெப்போதுமில்லாத மனஉளைச்சலை சந்திக்கிற தருணததில் இதை எழுதுகிறேன். அன்றாட வாழ்வின் இயந்திரத்தனங்களும் அழுத்தங்களும் சலிப்பூட்டுவதுமான சமயங்களிலிருந்து இளைப்பாறுவதற்காகவும் நண்பர்களுடன் மகிழ்வாக உரையாடுவதற்காகவும் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருந்தது. ஒத்த அலைவரிசை ரசனையுள்ள நண்பர்களையும் இனிமையாகப் பழகக்கூடிய பல நண்பர்களையும் தந்ததே இணையத்தின் என் ஒரே சம்பாத்தியம். எஸ்.ராவின் பாதிப்பில் உலக சினிமா மீது ஆர்வமேற்பட்டு அதைக் குறித்து தொடர்ந்து எழுதி அது குறித்தானதொரு பிரத்யேக அடையாளம் என் மீது ஏற்பட்டதே நிறைவானதாக இருக்கிறது. இதற்கு உச்சமாக எழுத்தாளர் ஜெயமோகன் என் வலைப்பதிவையும் (என் வலைப்பதிவை மாத்திரம் அல்ல) அவர் கவனித்து வாசிக்கும் சினிமா பதிவுகளில் ஒன்றாக குறிப்பிட்ட போதுதான் நான் எழுதி வருவதின் சீரியஸ்னஸே எனக்கு அழுத்தமாகப் புரிந்தது.
(ஆனால் இதுவே சிலருக்கு காண்டை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. ஜெயமோகனின் பிரம்மாண்ட ஆளுமையின் காரணமாகவே அவரை மூர்க்கமாக வெறுப்பவர்கள் அந்த பட்டியலில் என்னையும் இணைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.) இனியாவது இன்னும் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுத வேண்டுமென்கிற உந்துதலை ஜெயமோகனின் குறிப்பு ஏற்படுத்தியது.
ஆனால் கல்லெறிந்து விட்டு ஓடிப்போகும், காரணமேயின்றி காழ்ப்பை வெளிப்படுத்தும் ஆசாமிகளால் பல சமயங்களில் நான் காயப்பட்டிருக்கிறேன். கூடிக் கும்மியடிக்கும், யாரையாவது நோண்டிக் கொண்டேயிருக்கும் இந்த ஈனப்பிறவிகளிடமிருந்து விலகிப் போனாலும் துரத்திக் கடிக்கும் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாததாக இருக்கிறது. சரி. நம்முடைய உழைப்பைச் செலுத்தி மேற்குறிப்பிட்ட நற்பெயரை சம்பாதித்து விட்ட ஒரே காரணத்திற்காக இவர்களுடன் மல்லுக்கட்டாமலேயே ஒதுங்கியிருந்து பார்த்துவிட்டேன்.
சரி. அதையெல்லாம் பார்த்தால் முடியாது. இணையத்தில் இல்லையெனினும் சமூகத்திலும் இவ்வாறான மனிதர்களையும் நிகழ்வுகளையும் எதிர்கொண்டாகத்தான் வேண்டும். என்னை நுண்ணுணர்வு உள்ளவனாகவும் சமூகம் கட்டியமைத்தபடியான நாகரிகமானவாக அடையாளம் காட்டிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும்தான் விரும்புகிறேன் என்றாலும் எனினும் ஒருவன் வேண்டுமென்றே மூர்க்கமாக வந்து மோதும் போது ஒதுங்கிப் போவதற்கு நான் மகான் அல்ல.
சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை சில நண்பர்கள் அறியக்கூடும். அறியாதவர்களுக்காக சுருக்கமாக.
ரோசா வசந்த் என்கிற 'மல' ஆராய்ச்சியாளரும் (அதாவது தன்னைப் பற்றி ஆராய்கிறவர்) சிந்தனையாளரும் என்னுடைய இணையப் பயணத்தின் ஆரம்பம் முதலே பதிவுகளிலும் சமீபத்தில் டிவிட்டரிலும் என்னைச் சீண்டிக் கொண்டிருந்தனின் விளைவாக ஒரு மனநெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஆவேசமாகி
சிறுகுறிப்பொன்றை எழுதினேன்.
(நான் திமிர்த்தனமாக எழுதிய டிவிட்களுக்கான பதிலது என்று ரோசாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமிருக்கு திமிரைத்தான் பதிலாக அளிக்க முடியும்). அப்படி எழுதியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
'அக்கப் போர் மனநிலையில் இல்லை. இரண்டொரு நாட்களில் எழுதுவேன்' என்றேன். உடனே டிவிட்டரில் நண்பர்களுடன் என்னுடைய உரையாடலைத் தொடர்ந்தேன். இவருக்கு பதிலளிக்கக்கூடிய உன்னதப் பணியில் ஈடுபடாமல் (உண்மையில் அது எனக்கு மனஉளைச்சலைத்தருகிற காரியம்) டிவிட்டரில் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இவருக்குக் கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. எது அக்கப்போர், எது இளைப்பாறுவதற்கான உரையாடல் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் பல ஆண்டுகள் தொடர்பான விஷயங்களை மீள்நினைவு செய்து எழுத வேண்டுமென்றால் அதற்கான அவகாசமும் தேவை.
இதற்கு சற்றும் வாய்ப்பே தராமல், நாராயணன் இதுகுறித்து
பஞ்சாயத்து பதிவொன்றை எழுதினார். ஒரு சமயத்தில்
இணையத்தில் நான் பொறாமைப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர் நாராயணன்தான் என்பதை அவரிடமே பொதுவில் முந்தைய சமயங்களில் தெரிவித்திருக்கிறேன். ஒரளவிற்கு நடுநிலைமையான நேர்மையான மனிதர் என்பது போல்தான் நாராயணன் குறித்த பிம்பம் என்னுள் இருந்தது. சுந்தர்-வசந்த் தாக்குதல் தொடர்பான சமயத்தில் இருபக்கமும் என்ன நடந்ததென்று தெரியாமல் அமைதி காத்ததாக சொன்னவர், என்னுடைய விஷயத்தில் மாத்திரம் உடனே எதிர்வினை பதிவு எழுதியது ஏன் என்பது புரியவில்லை.
'இத்தனை வருடங்களாக பெரும்பாலும் இலக்கியம், சினிமா குறித்து மாத்திரமே எழுதி வருகிற ஒருவன், இணையத்தில் இதுவரை யாரையும் கடுமையாக எழுதாத ஒருவன், திடீரென்று ஏன் இப்படி ஒருவரைப் பற்றி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறான்' என்று நாராயணன் சிறிது நேரமாவது யோசித்திருக்கலாம். அல்லது என்னையே தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். ஆனால் 'சிந்தனையாளரின்' சகவாசமும் நட்பும் கண்ணை மறைத்துவிட்டது போலிருக்கிறது.
சரி. அதுவும் ஒருவகையில் எனக்கு நன்மையே புரிந்தது. டிவிட்டர் சமூகத்தில் மாத்திரம் முணுமுணுக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் பிளாக்கர் பரப்பிற்கு வெளியே வந்து பலரும் அறியக் காரணமாயிற்று. ஆனால் ஒருவகையில் நாராயணனின் ஒருதலைபட்சமான பார்வையும் ரோசாவை ஏதோ திருவுரு ஆக்குகிற முயற்சியில் எழுதினதும் எனக்குள் ஆயாசத்தை ஏற்படுத்தியது. இப்போது இது எந்த திசையில் போகும் என்பதைக் கூட என்னால் யூகிக்க முடிந்தது. உண்மையில் ரோசாவுடனான பூசலை
நான் விளக்கி எழுதுவதாகச் சொல்லியிருந்த பதிவின் மூலம் முடித்துக் கொள்வதுதான் என் நோக்கமாக இருந்தது. ஆனால் நாராயணன் பதிவு தந்த ஆயாசத்தில் என் தற்போதைய நிலையை சுருக்கமாக எழுதி முடித்துக் கொண்டேன்.
உண்மையில் நான் கடுமையாக எழுதியதற்காக
ரோசாவிடம் மன்னிப்பு கேட்கும் முடிவில் கூட இருந்தேன். இனியதற்கு வாய்ப்பேயில்லை. ரோசாவிற்கு டிவிட்டரில் எழுதிய குறிப்பில் கடுமையாக எழுதியதும் பஞ்ச் டயலாக் பேசியதும் அந்தச் சமயத்தின் தீவிரமான மனநிலையில்,
ரோசாவின் திமிரான பதிலுக்கு எதிர்வினையாக எழுதியது. அதற்கு பின்னணயில் ரோசா இத்தனை ஆண்டுகளாக என்னுள் ஏற்படுத்தியிருந்த மனஅழுத்த அடுக்குகளும் காரணம்.
ரோசாவிற்கு பதிலெழுவதாக நான் எழுதியிருந்ததை வாசித்த பல நண்பர்கள் அதைத் தொடராமலிருக்க என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
'ரோசா ஒரு வகையில் எதையும் தீவிரமான எல்லையில் குரோதத்துடன் அணுகுவார் என்றும் அவருக்கு ஒருவகையான உளப்பிரச்சினை உள்ளது என்றும் பொதுவெளியிலோ தனியான சந்தர்ப்பத்திலோ எவ்வித அவகாசமும் தராமல் தாக்கக்கூடியவர் என்றும் எச்சரித்தார்கள்.
இந்த மாதிரியான நிகழ்வுகளில் தொடர்புப்படுத்தி என் பெயர் இணையத்தில் அடையாளம் காட்டப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் - சற்று மிகையாக சவடால் அளித்தாலும் - என் வழக்கப்படி மீண்டும் ஒதுங்கிப் போகவே விரும்பினேன்.
ஆனால்...
ரோசா அவருடைய வழக்கமான குரோத மொழிகளுடன் என்னைப் பற்றி இன்று
எழுதியிருக்கிறார். என் வாயிலிருந்து இன்னும் மேலதிக வார்த்தைகளைப் பிடுங்கி அதை தனக்கு சாதகமானதாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழலுக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். இதனால்தான் என்னை 'ஆதாரம் ஆதாரம்' என்று துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார். (என்னுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ஒருவரை திட்டமிட்டு மூக்கில் குத்தி தாக்கி விட்டு அதற்கு தார்மீக ரீதியாக மன்னிப்பு கூட கேட்காமல் ஏதோ கிரிமினல் வக்கீல் போல் எதிர்வினையாற்றிய ரோசா ஒர் அநாகரிக பேர்வழி என்று அதை இணையத்தில் அவதானித்த பலருக்கே தெரியும். இதுக்கு எதுக்கய்யா புண்ணாக்கு ஆதாரம்) அதிலிருந்து நான் தப்பித்துக் கொண்டவுடன். அவருக்கு கோபம் தலைக்கேறி விட்டிருக்கிறது. எனவே ஒரு குரோதமான பதிவின் மூலம் அதை தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.
ரோசாவை சைக்கோ என உணாச்சி வேகத்தில் நான் திட்டியதற்கு பஞ்சாயத்து செய்தவர்களும் கேள்வி கேட்டவர்களும் நடுநிலையான நண்பர்களும் மனச்சாட்சியோடு ரோசாவின் பதிவிற்கு எதிர்வினை புரிவார்கள் என நம்புகிறேன / எதிர்பார்க்கிறேன்.
இனி என் முறை. ரோசாவின் தொடர்ந்து அழுத்தம் தந்து கேட்டுக் கொண்டிருந்த படி அதற்கான விளக்கத்தை எழுதப் போகிறேன். இந்த மனநெருக்கடிக்கு எப்படியோ என்னைத் தள்ளிய ரோசாவின் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன். இதில் அவருக்கு வெற்றிதான். வாழ்த்துகள். ரோசாவிற்கான விளக்கப்பதிவை எழுதுவதின் மூலம் எனக்கும் சற்று மனஅழுத்தம் குறையக்கூடும் என்பதையும் வெளிப்படையாகவே நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன். அந்தச் சூழலையும் சமத்காரமாக ஏற்படுத்தித் தந்ததற்காக அவருக்கு நன்றி.
அடுத்ததாக லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவின்
பதிவு.
இந்தக் கருமத்தையெல்லாம் புறக்கணித்து விட்டுச் செல்வதுதான் என்னுடைய முடிவாக இருந்தது.
நான் ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றால் அவருக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச தகுதி கூட இந்த ஆசாமியிடமில்லை. என் மீது இத்தனை வெறுப்பை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு நேரில சந்திக்கும் சமயங்களில் எப்படி இந்த ஆசாமியால் ஹிஹி என இளிக்க முடிந்தது என தெரியவில்லை.
இதுதான் உண்மையில் இரட்டையான மனநிலை.
ஒர் அநாகரிக ஆசாமியை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்குரிய இயல்பான முக வெளிப்பாட்டோடு அவரை மறுத்து ஒதுங்கி நடந்து கொள்வதுதான் முறையான, நோமையான செயல். அதைவிட்டு பல ஆதாயங்களுக்காக வெறுக்கும் நண்பர்களிடம் குழைவது, பிடிக்காத நபரோடு கலவி கொள்ள வேண்டியிருக்கிற பாலியல் தொழிலாளியின் நிலைக்கு ஒப்பானது. பாவம். அவர்களுக்காவது அதை மறுக்கக்கூடிய வாய்ப்பும் சந்தர்ப்பமும் இல்லை.
திராவிட மேடைகளில் பிரியாணிக்காகவும் காசுக்காகவும் மதுக்காகவும் ஆபாச மொழியில் எதை வேண்டுமானாலும் உளறக்கூடிய பேச்சாளர்களின் இணையவடிவம் இந்த ஆசாமி. ரோசாவி்ன் இன்னொரு வகையான குளோனிங் இவர். இந்த ஆசாமியிடமிருந்தும் நான் வெளிப்படையாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டாலும் அடிப்படை நாகரிகமேயின்றி தொடர்ந்து எதையோ உளறிக் கொண்டேயிருந்தார். இது போன்ற சில ஆசாமிகள் இதே வேலையாக உருப்படியாக எழுதுபவர்களையும் சீண்டி சீண்டி அவர்களின் சமநிலையைக் குலைப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நானும் இந்தப் பதிவுமே ஓர் உதாரணம். அந்த வகையில் அவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானதுதான்.
தமிழ் இணையம் / பதிவுகள் என்பது கீழ்த்தரமான வசவுகளால் பின்னூட்டங்களால் ஆனது என்பது போன்ற பொதுப் பிம்பத்திற்கு இம்மாதிரியான ஆசாமிகள்தான் காரணம். இணையத்தின் இந்த மோசமான அடையாளம் மாறுவதற்கு மற்ற பதிவர்களால் இவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்பதையும் மற்ற நண்பர்களுக்கும் பொதுவானவர்களுக்கும் ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன். ஆனால் இம்மாதிரியான ஆசாமிகள்தான் இணையத்தின் பிரதிநிதிகள் என்பது மாதிரி தங்களின் செல்வாக்கைக் கொண்டு ஊடகங்களில் வெளிப்படும் போது அவமானமாக இருக்கிறது.
இந்த ஆசாமியைப் பொருட்படுத்தி இத்தனை எழுதியதே அதிகம். நண்பர் ஆசிஃப் பற்றி நான் கூகுள் பஸ்ஸில் எழுதியதையும் இந்த ஆசாமி குறிப்பிட்டிருக்கிறார். மரத்தடி குழும காலத்திலேயே ஆசிஃப் என் நண்பர் என்பதையும் அவருக்கும் எனக்குமான இந்த உரசல் வழக்கமானதுதான் என்பதையும் பஸ்ஸிலேயே விளக்கியிருக்கிறேன். ஆசிஃபும் இதை புரிந்து கொண்டு பெருந்தன்மையாக பதிலளித்திருந்தார். ஆனால் அதையும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த நபர் உளறியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. எனக்கு நண்பர்களே கிடையாதாம். அடக்கஷ்டமே. தன்னுடைய ரசனைக்கு அலைவரிசைக்கு ஈடாக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு சிறிய வட்டத்திற்குள் புழங்குவதும் ஆதாயங்களுக்காக எல்லோரிடம் பல்லை இளிப்பதும் ஒன்றா? நான் எழுதிய பதிவின்ஒட்டுமொத்த கான்டெக்ஸ்ட்டை புரிந்து கொள்ள முடியாமல் அல்லது புரிந்து கொள்ளாத பாவனையுடன் இறுதிப் பகுதியில் தன் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டதின் காரணமாகவே நான் எழுதியதையெல்லாம் இம்மாதிரி வழக்கமாக எழுதுபவர்கள் போலவே திரி்த்து திரித்து எழுதுவதை என்னவென்பது. நான் விமாசனங்களை எதிர்கொள்வதேயில்லையாம். நேர்மையான விமர்சனமென்றால் உடனே அதை ஏற்றுக் கொண்டு பெரும்பாலான சமயங்களில் பதிலளித்திருக்கிறேன். இல்லையெனில் அது மேலதிக சர்ச்சையை வளர்க்குமென்றால் அதை அங்கேயே முறித்துவிட்டு ஒதுஙகிப் போவதுதான் என் வழக்கம்.இதனாலேயே என் பதிவின் பின்னூட்டங்களுக்கு கூட நான் பதிலளிப்பதில்லை. மெனக்கெட்டு என் பதிவை வாசிக்கும் நல்ல வாசகர்கள் கூட இதனால் வருத்தமடைந்திருக்கலாம்.
நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்.
'எதற்குங்க இதுக்கெல்லாம் நேரம் வேஸ்ட் செய்துக்கிட்டு' 'இவங்களையெல்லாம் புறக்கணிப்பதுதாங்க நல்லது" 'அவங்க இப்படித்தான்' 'எதற்கு வம்பு' என்றெல்லாம் தயவுசெய்து பின்னூட்டங்களில் எழுதாதீர்கள். நான் மேலே குறிப்பிட்ட சில ஆசாமிகள் மாத்திரமில்லை. இது போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் சீண்டும் போது
இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதைக் கண்டியுங்கள். நாம் நாகரிகமாக ஒதுங்கி ஒதுங்கிப் போகத்தான் இவர்களுக்கு குஷி கிளம்பி விடுகிறது. துரத்தி துரத்திக் கடிக்கிறார்கள். நான் இப்படி அமைதியாக இருந்ததனால்தான் இன்று 'மலப்புழு'வாகியிருக்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். உடனேயே தக்க பதிலடி கொடுப்பவர்களிடம் இவர்கள் வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.
இனி ரோசாவிற்கான என் பதிலை போதுமான சாவகாசம் எடுத்துக் கொண்டு எழுதுவேன்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? வருகிறேன். இதன் மூலம் என் மீதும் சேறும் சகதியும் அவதூறும் வன்மமும் பட்டாலும் சரி.இதன் மூலம் இந்த நபருக்கு உளப்பிரச்சினைக்கு மேலதிக பாதிப்பேதும் ஏற்பட்டால் அதற்கு மூலக்காரணம் நானல்ல என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். குரோதமான மொழியில் எழுதப்பட்டவைகளுக்கு அவரே அதிகம் விரும்பியபடி பதிலளிப்பதுதான் என் நோக்கமேயன்றி வேறொன்றுமில்லை.
இப்படி எழுதுவதில் எனக்கே ஒப்புதலில்லை என்றாலும் ஒரு முன்ஜாக்கிரதைக்காக இதைப் பதிவு செய்கிறேன். பொதுவெளிகளில், பதிவர் சந்திப்புகளில், நூல் வெளியீட்டு விழாக்களில் எங்காவது ஒருவேளை நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது நேரடி அல்லது மறைமுகக் காரணமாகயிருக்க்கூடும் என்பதையும் அந்தச் சமயத்தில் அதை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வேன என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். இதையும் சொல்லித் தொலைத்து விடுகிறேன். இதை ஒரு வேளை தவறான முறையில் பயன்படுத்துவேனோ என்கிற சந்தேகமெல்லாம் எவருக்கும் எழத் தேவையில்லை. அது நிச்சயம் நேர்மையானதாகவே இருக்கும்.
இன்னொன்று: இணையத்தின் பின்னூட்டங்களிலும் டிவிட்டர் சந்துகளிலும் என் பெயரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டு எழுதப்படும் தனிமனித தாக்குதல்களுக்கும் அதீத அவதூறுகளுக்கும் சைபர் கிரைமின் உதவியையும் நான் நாடக்கூடும. ஒருவகையில் ரோசா, யுவகிருஷ்ணா போல நேரடியாக மோதுபவர்களைக் கூட நான் மதிக்கிறேன். அதை விட்டு கோழைகள் போல் மறைவாக முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்களின் அரசியல் அசிங்கமாக இருக்கிறது.அவர்கள் அதை நிறுத்தி விட்டு எதுவென்றாலும் என்னிடமே உரையாடலாம்.சில நண்பர்கள் நகைச்சுவைக்காக என் பதிவுகளை கலாய்ப்பதை அதே நகைச்சுவையுடன்தான் அணுகியிருக்கிறேன் என்பதை பல நண்பர்கள் அறிவார்கள். சீரியஸான கேள்விகளுக்கும் அதே தீவிரத்தனத்தோடு சமயங்களில் அதன் கடுமையைக் குறைக்கும் பொருட்டு நகைச்சுவையாகவும் எதிர்வினை புரிந்திருக்கிறேன். விமர்சனத்தையே எதிர்கொள்ள மாட்டேன் என்பதெல்லாம் திரிபுவாதம்.
என் மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
வார்த்தைகளின் வன்புணர்ச்சி
கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!
காகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்
சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு
suresh kannan