Saturday, June 20, 2009
'பட்டர்மில்க்'ன்னா மோரா?
என் ஆங்கில அறிவு மிக மோசமாக இருந்த காலகட்டமது. இப்போதும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் பரவாயில்லை.
அப்போது நான் ஒரு மருந்து விற்பனையகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். வயது 20 இருக்கும். நான் பணியில் சேர்ந்த புதிதில் மருந்துச் சீட்டை யாரும் என்னிடம் கொடுக்க மாட்டார்கள். வயதில் இளையவனாக இருப்பதால் வந்த பயமா அல்லது காலனின் ஏஜெண்ட் மாதிரி தோற்றமளித்தேனோ, தெரியவில்லை. என்னை புறங்கையால் ஒதுக்கி விட்டு மூத்த விற்பனையாளரிடம் மட்டும்தான் கொடுப்பார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும். நாளடைவில் தேறி, நாள் தள்ளிப் போகணுமா? Primoulte-N என்று சொல்லுமளவுக்கு முன்னேறி விட்டேன்.
என் மார்வாடி முதலாளி ஒரு அலாதியான பேர்வழி. ரோட்டில் மாங்காய் துண்டுகள் விற்பனையானால் கூட பத்து பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவார். ஆனால் மறந்தும் எனக்கு எதுவும் வாங்கி கொடுக்க மாட்டார். காலையில் வங்கிக்கு போகும் பணி. பாஸ்புக், பாங்க் செலான்கள் இன்ன பிற லொட்டு, லொசுக்கு போன்றவை அடங்கிய ஒரு முக்கியமான மூட்டையை பாதுகாப்பாக (!) என்னிடம் கொடுத்து விட்டு, வெறும் பணப்பையை அவர் தூக்கிக் கொண்டு முன்னால் செல்வார். நானும் மந்தையாடு போல் பின்னாலே செல்வேன். அவர் பிளாட்பாரத்தில் ஏறினால் நானும், சைக்கிளை சுற்றிக் கொண்டு போனால் நானும், இப்படி.
அப்போதுதான் அந்த குளிர்பதனம் செய்யப்பட்ட ஒட்டல் வரும். அந்த காலத்தில் இந்த மாதிரி ஒட்டல்களை காண்பது அரிது. உள்ளே இருப்பவர் யாரும் வெளியே தெரியமாட்டார்கள். அவர் மட்டும் உள்ளே சென்று - என்ன சாப்பிடுவாரோ தெரியாது - வரும் போது வாயை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே வருவார். "என்னடா, பராக்கு பாத்துக்கினு, வாடா." வழக்கம் போல் என்னை அழைத்துச் சென்று ஐஸ் வாட்டர் கூட வாங்கிக் கொடுத்ததில்லை.
எனக்கும் ஒரு நாள் அந்த ஒட்டலில் சென்று சாப்பிட ஆசையாயிருக்கும். என் சம்பளத்தில் அதெல்லாம் கட்டுப்படியாகுமா என்று சந்தேகமாயும் இருக்கும். மேலும் அந்த மாதிரி ஒட்டலில் நுழைவதே சாத்தியமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது. ஆனால், அந்த நாளும் வந்தது. இதற்கென்றே காசு சேமித்துக் கொண்டு, நன்றாக உடை அணிந்து கொண்டு திட்டமிட்ட படி உள்ளே நுழைந்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சுதாரித்துக் கொண்டு ஒரு சீட்டை நுனியில் ஆக்கிரமித்தேன்.
"என்ன சார் வேண்டும்?" என்றபடி வந்தான் என் முதலாளியை விட நன்றாக உடை உடுத்தியிருந்தவன். உள்ளே போய்விட்டேனே தவிர என்ன சாப்பிட வேண்டும் என்பதை முன்னரே தீர்மானிக்க வில்லை. சாப்பாடெல்லாம் சாப்பிட்டால் விலை என்னவாக இருக்குமோ என்று பயமாய் இருந்தது. ஏதாவது குளிர்பானம் மட்டும் சாப்பிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்தவன், "மெனு கார்டு?" என்றேன் எனக்கே கேட்காத குரலில் (சினிமாவில் பார்த்திருக்கிறேன்)
கார்டு வந்ததும் என்னென்ன அயிட்டங்கள் இருக்கிறது என்று நோட்டமிட்டேன். என்னென்னவோ புரியாத ஆங்கில பெயர்களிருக்க, ஒரு கிளாஸ் போட்டு வெளியே வியர்த்திருக்க மாதிரி படம் போட்டிருக்கிற ஏரியாவுக்கு வந்தேன். அதில் விலை எல்லாம் கன்னாபின்னாவென்றிருக்க, என் பட்ஜெட்டில் அடங்குகிற மாதிரி ஒரு அயிட்டம் இருந்தது. அதன் பெயர் BUTTERMILK என்றிருந்தது. எனக்கு அதன் பொருள் விளங்கவில்லை. ஆனால் அந்த பெயர் கவர்ச்சிகரமாக இருந்தது. என் மனதில் பாதாம், ஏலக்காய் எல்லாம் போட்டு ஒரு திரவம் மனக்கண்ணில் தோன்றியது. "ஒரு Buttermilk" என்றேன் அமர்த்தலாக.
"அது போதுமா சார்?" என்றான் அவன் திகைப்பாக. அதை அந்த ஒட்டல் வேலைக்காரர்கள் கூட குடிக்க மாட்டார்கள் போலிருந்தது அவன் பார்வை. நிறைய சாப்பிட்டு வயிறு சரியில்லாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு "போதும். கொண்டு வாங்க" என்றேன் சலிப்புடன். அவ்வப்போது ஏதோ ஒரு இடத்திற்கு அவசரமாய் செல்பவன் போல் கடிகாரத்தை பார்த்துக் கொண்டேன்.
கொண்டு வந்தானய்யா அந்த திரவத்தை அந்த கிராதகன். அட ஒக்க மக்கா, மோருல்ல இது? அடப்பாவிகளா, இதைத்தான்யா காலைல எங்க அம்மா உப்பெல்லாம் போட்டு குடுத்து விட்டாங்க. இங்கனயும் அதா, திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரியிருந்தது. நான் கேட்டதுதானா என்று சந்தேமாகவும் இருந்தது. வேறு வழியின்றி அதை குடித்து தொலைத்துவிட்டு வியர்க்க வியர்க்க வெளியே வந்தேன்.
பிறகு கடையில் மூத்த பணியாளரிடம் "அண்ணா buttermilkன்னா என்னன்னா? என்றேன் மெதுவாக. என்னடா விஷயம் என்றவா¢டம் எல்லாவற்றையும் விவரித்தவுடன், விழுந்து விழுந்து சிரித்தவர், "இங்கிலீஷ்ல மோருக்கு buttermilkன்னு தாண்டா பேரு" என்றார்.
இப்போது கூட ஹோட்டலில் தந்தூரி அயிட்டங்களை ஆர்டர் செய்யும் போது Gopi Manchurian என்றாலும் "காலிபிளவர்தானே?" என்று கேட்டே ஆர்டர் செய்கிறேன்.
(இது ஒரு மீள்பதிவு. Feb 26, 2004 அன்று மரத்தடி குழுமத்தில் பிரசுரமானது)
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
இப்பத்தான் படிக்கறேன்... சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு பைத்தியக்காரனா மாறிட்டேன் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ரசித்துப் படித்தேன்..
சார்... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல....!!!
ஹோட்டலில் உபயோகபடுத்தபடும் முக்கிய வார்த்தைகள்...
தண்ணி - வாட்டர்
மீல்ஸ் - மதிய உணவு.
எக்ஸ்ட்ரா ரைஸ் - கூடுதல் சாப்பாடு
வெரைட்டி ரைஸ் - புலி சோறு , தயிர் சோறு, எழுமிச்சை சோறு , தக்காளி சோறு .
பில் - உண்ட உணவின் மொத்த கணக்கு சிட்டை.
வாஷ் பேசின் - கை கழுவும் தொட்டி .
க்ளாஸ் , டம்ளார் - குவளை .....
எனக்கு தெருஞ்சது அவ்வளவுதா சார். மீதி எல்லாம் தமிழ்லதான் கேப்பாங்க .....
முடியல.....
ஹா ஹா ஹா!
சமூகத்துல இதெல்லாம் ஜகசமப்பா..
(மீள்பதிவு போடறதை சொன்னேன்!) :)
//புலி சோறு//
என்னங்க இது. கோழி பிரியாணி. புலி பிரியாணியா? புலி இனம் அழிஞ்சுட்டு வர்ற
காரணம் இப்பத்தான் புரியது. எங்க இது கிடைக்கும்? சாப்பிட எப்படி இருக்கும்? :-))
//புலி சோறு//
என்னங்க இது. கோழி பிரியாணி. புலி பிரியாணியா? புலி இனம் அழிஞ்சுட்டு வர்ற
காரணம் இப்பத்தான் புரியது. எங்க இது கிடைக்கும்? சாப்பிட எப்படி இருக்கும்? :-))
//புலி சோறு , தயிர் சோறு, எழுமிச்சை சோறு , தக்காளி சோறு //
its புளி and எலுமிச்சை :D:D:D
btw, Totally LATCS (laughing at the computer screen) i know, i'm like super trendy. he he
பைத்தியக்காரன், நர்சிம், லவ்டேலமேடி,சென்ஷி, Triumph, அனானி'ஸ் நன்றி.
//இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல//
என்னுடைய வயதையும் அப்போதிருந்த அறியாமையுமான சூழ்நிலையில் இந்த அனுபவத்தைப் பொருத்திப் பாருங்கள். கணக்கு சரியா வரும்னு நெனக்கறேன். :-)
//ஒரு கிளாஸ் போட்டு வெளியே வியர்த்திருக்க மாதிரி படம் போட்டிருக்கிற ஏரியாவுக்கு வந்தேன்...//
கிளாஸ் :)
உலகம் ரொம்ப சிறுசுங்க தல.., அதனால இப்படித்தான் நம்மூரு ஐட்டத்துக்கு அவனுக பேர் வைக்கறது
வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக இருந்திருக்கும்..
வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக இருந்திருக்கும்..
வணக்கம் சுரேஷ்...இந்த அவஸ்தை எல்லாருக்குமே அநேகமாக இருந்திருக்கும்..
அறிவு என்பது மொழி சார்ந்தது அல்ல - யாரோ
ஆனாலும் அனுபவத்தை நல்லா தான் எழுதியிருக்கீங்க (finger bowl கொண்டு வந்தால் lemon juice என்று நினைத்து சர்க்கரை கேட்ட கதையை எப்போ எழுதிவீங்க) :)
ஹா ஹா ஹா :-)
//என்னுடைய வயதையும் அப்போதிருந்த அறியாமையுமான சூழ்நிலையில் இந்த அனுபவத்தைப் பொருத்திப் பாருங்கள். கணக்கு சரியா வரும்னு நெனக்கறேன். :-) //
கணக்கிட முடியவில்லை. ஆனால் வெளிப்படையாக நன்றாக சொல்லி இருக்கீர்கள்,..
பாசகி, sureஷ்,தமயந்தி,நந்தா,
சரவணகுமரன், ஜோதி,
நன்றி...நன்றி.
//finger bowl கொண்டு வந்தால் lemon juice//
மைகாட்! எப்படி ஒரு பதிவ படிச்சவுடனே என்னைப் பத்தி இவ்வளவு கரெக்டா யூகிச்சிருக்கீங்க...
ஒரு முறை இதே மாதிரி நடக்க இருந்தது. நல்லவேளையா மயிரிழைல தப்பிச்சு மானத்தை காப்பாத்திக்கிட்டேன்.
இப்பக்கூட சமீபத்துல இதே ஒரு மாதிரி காமெடி. ஒரு பெரிய ஓட்டல்ல சாத்துக்குடி ஆர்டர் செஞ்சுட்டு அவன், sir, sweet lime juice. your order-ன்னு அப்படின்னு கான்வென்ட்ல சொல்ல,"யோவ் நான் சாத்துக்குடி ஜீஸ்தானே கேட்டேன்"-ன்னு ஒரு சண்டை. என்னத்த சொல்றது..
)))))))
ஹி ஹி ஹி ஹி... ஜூப்பரு...
அது என்ன, முதலாளியை அவர் இவர் எனவும் ஓட்டல் தொழிலாளியை அவன் இவன் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்? வர்க்க பேதமா?
பட்டர் மில்க் ஜோக் பிரசித்தமாச்சே:)
அதில பட்டரும் இருக்காது,மில்க்கும் இருக்காதுன்னு எங்க தாத்தா சொல்வார்:)
வெள்ளைக்காரன் சொல்லி வச்சுட்டுப் போய் விட்டான். அவதிப் படறது அறியாத பசங்க.
நான் ரொம்ப நாளைக்கு மஞ்சூரியன் சாப்பிடாமல் இருந்தேன்.
ஏதோ சைனீஸ் ஐட்டம். காலு கையெல்லாம் இருக்கும்னு:)
இதுக்கு தான் நான் தனியா போறதே இல்ல..
//.. Nundhaa said...
ஆனாலும் அனுபவத்தை நல்லா தான் எழுதியிருக்கீங்க (finger bowl கொண்டு வந்தால் lemon juice என்று நினைத்து சர்க்கரை கேட்ட கதையை எப்போ எழுதிவீங்க) :) ..//
ஏன் நண்பன் ஒருவன் அதை குடித்துவிட்டதாக கேள்விப்பட்டுள்ளேன்..
சுவாரசியமான பதிவு
இந்தப் போஸ்ட்டும் சூப்பர்
மீள்பதிவென்றாலும், மிக சுவாரஸ்யமாயும், யதார்த்தமாயும் இருக்கிறது.
இப்போதைய உங்கள் பதிவுகள் முதிரறிவுப் பதிவுகளாகவே இருக்கிறது.
என் கணிப்பு இது. தவறாயுமிருக்கலாம்.
அத்திரி, எவனோ ஒருவன், வல்லிசிம்ின், பட்டிக்காட்டான், வெயிலான், அனானிஸ் நன்றி.
//முதலாளியை அவர் இவர் எனவும் ஓட்டல் தொழிலாளியை அவன் இவன் எனவும்//
இதை யார் அனுப்பியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது. :-) 2004-ல் முதிரா மனநிலையில் எழுதியது என்பதை கவனத்தில் கொள்க. மேலும் வயது வித்தியாசத்தை குறிப்பிடவும் எந்த நோக்கமுமில்லாமல் சில சமயங்களில் இப்படி குறிப்பிட வேண்டியதாகிறது. :-)
//ஏன் நண்பன் ஒருவன்//
தமக்கு நேர்ந்த அசெளகரியமான சம்பவத்தை எல்லாம் 'நண்பனுக்கு' என்று சொல்வதுதான் மரபு. :-)
//உங்கள் பதிவுகள் முதிரறிவுப் பதிவுகளாகவே //
விளங்கவில்லை. முதிராப் பதிவுகள் என்கிறீர்களா? இப்போது ஒரு சோதனை முயற்சியாக அதிக ிட்டுக்களை பெற வேண்டும் என்று விளையாட்டாக இதைச் செய்து கொண்டிருக்கிறேன். சில நாட்களில் இதை நிறுத்திவிடுவேன்.
பாலை தயிராக்கி அதை கடைஞ்சு அதிலேர்ந்து பட்டரை தனியா எடுத்தபின்னாடி மிஞ்சி வர்ரதுதானே மோர். அப்ப அதுக்கு BUTTERLESSMILKன்னு தானே பெரு வச்சுருக்கணும்? ஏன் BUTTERMILKன்னு பெரு வச்சாங்க? இங்கிலிஷ்காரனுக சரியான லூசுப்பயலுக.....
//.. தமக்கு நேர்ந்த அசெளகரியமான சம்பவத்தை எல்லாம் 'நண்பனுக்கு' என்று சொல்வதுதான் மரபு. :-) ..//
அது உண்மையிலேயே நண்பனுக்கு நடந்தது தான்..
நீங்க நம்பித்தான் ஆகணும்.. :-)
// விளங்கவில்லை. முதிராப் பதிவுகள் என்கிறீர்களா? //
பழைய பதிவுகளில் இருக்கும் யதார்த்தம் இப்போதைய பதிவுகளில் இல்லை என்பதை சொல்ல வந்தேன்.
கொஞ்சம் பின்நவீனத்துவ பின்னூட்டமாயிருச்சு. அவ்வளவு தான்! :)
Post a Comment