Sunday, June 14, 2009

கேள்வி பதிலும் சுயபுராணமும்


நண்பர் ஸ்ரீதர் நாராயணன் அழைப்பிற்கிணங்க இந்தப் பதிவு.

நாம் பிறந்த புதிதில் நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தோம். ஆனால் வளர வளர மற்றவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற கற்பிதங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு மந்தையில் ஐக்கியமாகி விடுகிறோம். என் இரண்டரை வயது மகள் இதுவரை கேட்ட நூற்றுக் கணக்கான கேள்விகளில் ஒன்று - "சாம்பார் ஏன் மஞ்சள் கலரில் இருக்கிறது?". அதானே! பச்சை கலரில் சாம்பார் தயாரிக்கப்படக்கூடாதா என்ன?

தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருப்பது நம்முடைய வளர்ச்சிக்கு உதவவே செய்யும். ஆனால் சரியான நேரத்தில் சரியான கேள்வியாக இருக்க வேண்டும். துணையுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது 'ஸ்கூல் பீஸ் கட்டியாச்சா?" என அச்சுப்பிச்சென்று கேட்கக்கூடாது. "இன்னிக்கு வெயில் ரொம்ப அதிகமில்ல?" என்ற கேள்வியுடன் உரையாடலை ஆரம்பிக்க முயற்சிப்பவர்களை கேள்வியே கேட்காமல் மனித வதைச் சட்டத்தில் உள்ளே போடலாம்.

இதுவொரு இணைய விளையாட்டு. புத்தக மீமீ, திரைப்பட மீமீ .. என்று தொடர்ந்து இது. இதிலும் 'இப்போது என்ன உடை அணிந்திருக்கிறீர்கள்?" என்கிற மனித வாழ்க்கைக்கு மிக அவசியமான கேள்விகளும் இருக்கின்றதுதான். (தயாரித்தவர் யார் என்று தெரியவில்லை). நான் மஞ்சள் நிற ஜட்டியை அணிந்திருப்பதை அறிந்து கொள்வதில் அவருக்கு அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை.

சரி கேள்விகளுக்குள் நுழைவோம். பொதுவாக ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியான 'மிகச் சுருக்கமாக எழுதுவது' என்பது என்னிடம் அறவே கிடையாது. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் எங்கேயும் பயணிப்பேன். உங்கள் தலைவிதி. படியுங்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என்னுடைய இயற்பெயர் சுரேஷ். இப்படியொரு நாகரிகமான (?!) பெயரை எனக்கு வைத்த என்னுடைய பெற்றோரை சிறுவயதில் ரகசியமாக மனதிற்குள் பாராட்டிக் கொண்டேயிருப்பேன். கோவிந்த சாமி, (கோயிந்தா கோயிந்தா) சடகோபன், (டேய் சட) காஜா மொய்தீன். (டேய் காஜாப் பையா).. என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருந்த வகுப்புத் தோழர்கள் அவர்களின் பெயர்களினாலேயே கிண்டல் செய்யப்படும் போது அந்த ஒரு ஏரியாவில் இருந்தாவது நான் தப்பித்தேனே என்று ஆசுவாசமாக இருக்கும்.

இணையத்திற்கு வந்த புதிதில் 'சுரேஷ், சென்னை' என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். இந்த 'சுரேஷ்' என்கிற மாதிரியான அசட்டுத்தனமான பொதுப்பெயருக்கு பஞ்சமேயில்லை. ரொம்பவும் சாதாரண பெயர். லட்சக்கணக்கில் இருக்கும் 'சுரேஷ்'களுக்கு மத்தியில் வித்தியாசமே இருக்குமே என்னுடைய தந்தையின் பெயரை இணைத்து என்று 'சுரேஷ் கண்ணன்' என்று மாற்றியமைத்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிய வந்தது, 'சுரேஷ் கண்ணன்' பெயரில் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள் என்று. பெயர் என்பது ஊறுகாய் பாட்டிலின் மீது ஒட்டப்படும் லேபிள் போன்றதுதான் என்கிற பக்குவம் இப்போது வந்துவிட்டது. தேவைக்காக எந்தவொரு அடையாளத்தையும் வெளிப்படுத்தாத பெயரை வைத்துக் கொள்ள விருப்பமிருக்கிறது.

2) கடைசியா அழுதது எப்போது?

சில அந்தரங்கமான தருணங்களை எப்போதும் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்தரங்கம் புனிதமானது (சில சமயங்களில்).

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

நிச்சயம் பிடித்திருந்தது. படிக்கும் காலங்களில் என்னுடைய கையெழுத்து மிக நன்றாக இருக்கும். பிறகு கணினி பயன்பாடு அதிகமாகிவிட்ட பிறகு கையால் எழுதுவது என்பது மறந்தேவிட்டது. மாத்திரமல்லாமல் வங்கிக் காசோலையில் போடும் கையெழுத்து கூட அடிக்கடி மாறிக் கொண்டே வருகிறது. ஒரு முறை வங்கியில் என்னை 'காஷ்மீர் தீவிரவாதி' ரேஞ்சிற்கு சந்தேகமாக பார்த்ததை இன்னமும் மறக்க இயலவில்லை.

4) பிடித்த மதிய உணவு?

இந்தப் பதிவை பார்க்கவும்.


5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

என்னிடம் நட்பு பாராட்டுவது கஷ்டம்தான். Introvert. பொதுவாக நட்பை பேணிக் காப்பதில் அவ்வளவு அக்கறை கொள்ளாதவன். நிறைய பாசாங்கான விஷயங்களை செய்துதான் நட்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதை தவிர்ப்பதே நல்லது என நினைக்கக்கூடியவன். உடனே ஒருவரிடம் பழகிவிடுவது என்னால் இயலாதது. அதையும் மீறி எனக்கு நண்பர்களாக உள்ளவர்களை வணங்குகிறேன். ஆனால் நெருங்கிப் பழகிவிட்டால் கூடுமானவரை உண்மையாக இருக்க முயற்சி செய்வேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

குளியல் அறையில்தான்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களென்றால் தொலைந்து போகிறதென்று முகத்தை. வாளிப்பான பெண்களென்றால்... ஹிஹி.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

இரண்டாவது கேள்விக்கான பதிலைப் பார்க்கவும்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

யாருமில்லை. நான் ஒரு தனிமை விரும்பி. தனிமையில்தான் 'நான் நானாக இருக்கிறேன்' என்பதால்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

வெறும் லுங்கி.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

டிரம்மர் சிவமணியின் 'மஹாலீலா' ஆல்பம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்.. நீலம்.. நீலம்... இந்த நிறத்தைத் தவிர வேறு எந்தவொரு நிறத்தையும் என்னால் யோசிக்கவே முடியாது. பல்துலக்கும் பிரஷ்ஷில் இருந்து உள்ளாடை சமாச்சாரம் வரை நீலத்தில்தான் தேர்ந்தெடுப்பேன். (படங்களிலும் நீலமா என்று கேட்கக்கூடாது). அதுவும்தான். ஹிஹி.

14) பிடித்த மணம்?

மல்லிகை, மழை, குழந்தை, வார்னிஷ், புதுப்புத்தகம், எலுமிச்சை, பிரியாணி, ரசம் தாளிப்பு மற்றும் சில.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

இடுகையின் இறுதியில் வருகிறது.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

எல்லாப் பதிவுகளுமே. (ரொம்பவும் ஓவர்தான் இல்லே ஸ்ரீதர்?) :-)

17) பிடித்த விளையாட்டு?

இயற்கை தன் சுழற்சிக்காக உருவாக்கியிருக்கும் 'ஆதாரமான' விளையாட்டு.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம். சமீப காலங்களில். வாசிப்பிற்காக. ஆனால் பெரும்பாலான நேரங்களில் உபயோகிக்காமல் குற்றஉணர்வு.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

'காட்சி ஊடகம்' என்ற அதீத பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்துத் திரைப்படங்களும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

The Sting

21) பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம். மழையை அதனுடைய பிரத்யேக காரணங்களுக்காக மிக அதிகமாக நேசிக்கிறேன்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

கொல்லிப்பாவை சிற்றிதழ் தொகுப்பு, 'கட்டுரையும் கட்டுக்கதையும்' - பிரேம் ரமேஷ், சார்த்தர் பற்றிய எஸ்.வி.ராஜதுரையின் நூல். தினமலர் வாரமலர்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

படம் எதுவும் இல்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்:
மெலிதாக ஒலிக்கும் இசை, சாவு மேளம், குழந்தையின் சிரிப்பு, சுப்ரபாதம், ரயிலின் தடதடா...

பிடிக்காத சத்தம்:
பட்டாசு வெடி, குழந்தையின் கதறல், சத்தமான உரையாடல், மோசமாக இசைக்கப்பட்ட குத்துப்பாடல், ஒழுகும் நீர்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

சிறுவயதில் இரண்டு முறை வீட்டை விட்டு ஓடும் போதுதான் 'அதிக' தொலைவிற்கு சென்றுவிட்டதாக உணர்ந்தேன். மற்றபடி இதுவரை கும்மிடிப்பூண்டியைத் தாண்டியதில்லை. வெயிலைத் தவிர்க்க ஊட்டி, கொடைக்கானல் போனதையெல்லாம் கணக்கில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

சுமாராக எழுதுவேன். சமயோசிதமான நகைச்சுவையும் நுட்பமான ரசனையும் உண்டு என்று நம்புகிறேன்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மனிதன் மிக முர்க்கமாக இயற்கையை மீறிச் செல்ல அபத்தமாக முயல்வது.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம், சோம்பல், சுயபச்சாதாபம், சில சமயங்களில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

என்னுடைய வீடு.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

அடிப்படை நாகரிகங்களுடன் கூடிய பாசாங்கில்லாத ஆதிமனிதனாக.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

தன் கையே தனக்குதவி. அதாவது சமையல். :-)

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

மகா அபத்தங்களுடன் கூடிய வரம்.

()

நான் அழைக்கும் பதிவர்கள்:

யார் யார் இந்தத் தொடரை எழுதியிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் பின்வரும் பதிவர்களை இந்த தொடர் ஓட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

ப்ரதீப் - எழுத்தாளர் சுஜாதாவை சந்திப்பதற்கு தேசிகன் ஏற்பாடு செய்திருந்த போது நாடக நடிகர் போலிருந்த இவரை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். எழுதும் போது பத்திகளின் இடையில் தெறிக்கும் மிக யதார்த்தமான நகைச்சுவையை மிகவும் ரசிப்பேன்.

ஆசிப் மீரான் - மொக்கை பதிவுகள் போட்டே 'அண்ணாச்சி' பட்டம் வாங்கிவிட்டவர். அபூர்வமாக நல்ல பதிவுகளும் எழுதிவிடக்கூடியவர்.

ஹரன் பிரசன்னா- 'கிழக்கு' ஜோதியில் ஐக்கியமாகிவிட்ட பிறகு எழுதுவதைக் குறைத்துக் கொண்டவர். சீரியஸ் பதிவு போல எழுதுவார். அபூர்வமாக 'மொக்கை' பதிவுகளும் உண்டு. (கோபி கிருஷ்ணன் நூல் பற்றியது சமீபத்திய உதாரணம்).

நிர்மலா - சத்யஜித்ரே பிறந்த கொல்கத்தாவிற்கும் சென்னைக்கும் சீசன்டிக்கெட் எடுத்து வைத்திருப்பவர். எழுதுவதை வைத்து இவர் ஒரு பெண் பதிவர் என்று யூகிக்கவே முடியாது. 'பெண்ணியம்' என்று சில பெண் பதிவர்களிடம் காணப்படும் அபத்தங்களை இவரிடம் காண முடியாது.

எவனோ ஒருவன் - சமீபத்திய நண்பர். வலைப்பதிவிற்கு சட்டை மாற்றும் போது எழுந்த நுட்ப சந்தேகத்தை தானாக முன்வந்து தீர்த்து வைத்தவர். இரவு 12.00 மணிக்கு சந்தேகம் எழுப்பினாலும் உடனே பதிலளிப்பார். இவரும் எழுதுவார் என நம்புகிறேன்.

update: நிர்மலா எழுதின பதிவு

ப்ரதீப் எழுதின பதிவு

ப்ரதாப்பின் பதிவு

suresh kannan

21 comments:

சரவணகுமரன் said...

ம்ம்ம்....

Anonymous said...

//சில அந்தரங்கமான தருணங்களை எப்போதும் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்தரங்கம் புனிதமானது (சில சமயங்களில்). //
சரியான பதில் ...
விஜய்

ஹரன்பிரசன்னா said...

//கோபி கிருஷ்ணன் நூல் பற்றியது சமீபத்திய உதாரணம்). //

அடப்பாவிங்களா :))

ஆனால் அந்தப் புத்தகத்துக்கு அப்படித்தான் எழுத முடிந்தது. வேறு மாதிரியாக எழுத முடியும். ஆனால் அது அதிகம் நடிப்பும் பாவனையும் கொண்டதாக அமைந்துவிடும் என்று நினைத்தேன்.

--பிரசன்னா

சென்ஷி said...

//பொதுவாக ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியான 'மிகச் சுருக்கமாக எழுதுவது' என்பது என்னிடம் அறவே கிடையாது.//

:-)

அதெல்லாம் எழுத்தாளருங்களுக்குத்தானே தலைவா... நீங்க 3000 பக்கம் கதை எழுதத்தகுதியான எலக்கியவாதின்னு எங்களுக்குத் தெரியுமே!!!! :)

தென்றல் said...

நீங்க SJ சூர்யா ரசிகரா? ;)

/பிரியாணியும் பிரியாமணியும்/
நல்ல மணம்...!!

Joe said...

//
ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களென்றால் தொலைந்து போகிறதென்று முகத்தை. வாளிப்பான பெண்களென்றால்... ஹிஹி.
//
ஒரு பிரபல பதிவர் கூட இது போல பெண்களைக் கேவலமாக பார்ப்பது வேதனை தருகிறது-ன்னு விரைவில் ஒரு எதிர் பதிவு வரலாம்.
(பத்த வைச்சிட்டியே பரட்டை!)

Unknown said...

//தன் கையே தனக்குதவி. அதாவது சமையல். :-)//

:-)))))))))))))))))))

பிச்சைப்பாத்திரம் said...

சரவணகுமரன், விஜய்,ராஜா நன்றி.

பிரசன்னா: நீங்கள் வேறு மாதிரியே எழுதியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். :-)

//நீங்க 3000 பக்கம் கதை எழுதத்தகுதியான எலக்கியவாதின்னு//

சென்ஷி: ஜெயமோகனுக்கு அனுப்ப வேண்டியத எனக்கு தப்பா அனுப்பிச்சுட்டீங்க போலிருக்கே.. :-)

தென்றல்: //நீங்க SJ சூர்யா ரசிகரா?//

இயல்பா எழுதனும்னு நெனச்சேன். அது இப்படி வந்திருக்கு போலிருக்கு. மற்றபடி நீங்க நகைச்சுவையா சொல்லியிருந்தாலும் இயக்குநர்-ன்ற வகையில் S.J.சூர்யாவை ரொம்ப பிடிக்கும். 'இதுதான் கதை'ன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டு வெறும் திரைக்கதையை மாத்திரம் சுவாரசியமாக கொண்டு போய் 'குஷி'ன்ற படத்தை கொடுத்ததற்காக.

ஜோ: //ஒரு பிரபல பதிவர் கூட //

இதுல உள்குத்து எதுவும் இல்லையே. :-)

Anonymous said...

ithu eppdi

http://the-nutty-s.blogspot.com/2009/06/blog-post_15.html

பிச்சைப்பாத்திரம் said...

//ithu eppdi//

மொக்கை பதிவு எழுதறதுக்கு உங்க கிட்டதான் பாலபாடம் கத்துக்கணும் போலிருக்கே. :-)

Anonymous said...

//டிரம்மர் சிவமணியின் 'மஹாலீலா' ஆல்பம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
//

கொடுத்தாரா?

பிரதீப் said...

சுரேஷ்,

சாமர்த்தியமா ஒரு கேள்வியை தவிர்த்து விட்டீர்கள். ஆனால் 7க்கு அப்புறம் 9 வராதே...செக் பண்ணுங்க...

Anonymous said...

அப்ப இது என்னங்க?

http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_01.html

நான் கத்துக்குட்டி. எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த வழியில தான் போறேனாக்கும்... என்ன நான் சொல்லுறது சரி தானே. ha ha நான் ஐஞ்சாம் நம்பர் ஆக்கும்.

பிச்சைப்பாத்திரம் said...

//7க்கு அப்புறம் 9//

ப்ரதீப்,

ஸ்ரீதர் பதிவில் இருந்தை அப்படியே நகல் எடுத்து பதில் எழுதியிருந்தேன். 8வது கேள்வியை அவர் சாய்ஸில் விட்டு விட்டாரோ என்னவோ? ஒருவேளை 8-ம் நம்பர் அவருக்கு ராசியில்லையோ?

நானும் அப்படியே செய்துவிட்டேன. (இதெல்லாம் ஸ்கூல் பழக்கத்துலேயிருந்து அப்படியே வர்றது) :-)

Triumph: :-)))

Beski said...

இப்பத்தான் எழுதிப் பழகிட்டு இருக்கேன்... என்னையும் மதிச்சி.... அவ்வ்வ்வ்...

நீங்க ரொம்ம்ம்ப நல்லவரா....

Beski said...
This comment has been removed by the author.
Beski said...

http://www.yetho.com/2009/06/blog-post_16.html

மயிலாடுதுறை சிவா said...

சூப்பர் சுரேஷ் கண்ணன்

மயிலாடுதுறை சிவா...

பிச்சைப்பாத்திரம் said...

அழைப்பை ஏற்று எழுதிய ப்ரதீப், ப்ரதாப், நிர்மலா ஆகியோர்களுக்கு நன்றி.

சிவா நன்றி.

na.jothi said...

நன்றி சுரேஷ்கண்ணன் மகாலீலா
அறிமுகத்துக்கு
inifinity voice of osho தாலாட்டா இருக்கு

Anonymous said...

naattukku romba avasiyamm.............