1) 'மலைமொழிவேந்தன்', 'சிறுநகைக்கொன்றோன்' என்று யாருக்கும் புரியாத பெயரில் ஒரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும். யாராவது பெயர் விளக்கம் கேட்டால் சீறாப்புராணத்திலோ திருக்கழுக்குன்றத்திலோ (?) உள்ள ஒரு கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரீல் விடலாம்.
2) கோணித்துணி பத்து மீட்டர் வாங்கி முழுக்கை சட்டை அணிந்து கொள்ள வேண்டும். ஒரம் கிழிந்த ஜோல்னாப்பை இருத்தல் நல்லது. அதனுள் கல்சிறுத்தை மண்பயணி தமிழ்க்கினி போன்ற பத்திரிகைகளை வைத்திருக்க வேண்டும்.
3) அரும்பாக்கம் சாத்தப்பன் தெருவில் உள்ள ஓரு வீட்டில் (மனைவி ஊருக்கு போயிருக்கும் நேரத்தில்)பின்நவீனத்துவமும் முரண்பாடுகளும் என்கிற தலைப்பில் நடக்கிற இலக்கிய கூட்டத்திற்கு செல்லலாம். (சீக்கிரம் சென்றால் 50 கிராம் காராபூந்தியும் டிஸ்போஸபில் கப்பில் கொஞ்ஞPண்டு காப்பியும் கிடைக்கலாம்) பேச்சாளர்கள் தன் சுயப்பிரதாபங்களை முடித்து விட்டு விஷயமே இல்லாத விஷயத்திற்கு வருவதற்குள் 5 பேர் அரக்கோணம் இரயிலை பிடிக்க கிளம்பிருப்பர்கள் (மொத்தமே 15 பேர்தான் கூட்டத்திற்கு வந்திருப்பார்கள்) கூட்டம் முடிந்த பின் உடனே கிளம்பி விடுவது நல்லது. இல்லையென்றால் விழா அமைப்பாளர் எழுதிய 'பிக்காசோவும் முட்டைகோசும்' என்கிற நவீனத்தை விலைகொடுத்து வாங்கவேண்டி வரும்.
4) மோட்டுவளையை பார்த்து யோசித்து கொண்டிருக்கிறாற் போன்று ஒரு போல் புகைப்படமும் கூடவே தான் எழுதி வைத்திருக்கிற மிராண்டாவுக்குள் ஒரு பனித்தலையன் என்கிற சர்ரியலிச நாவலின் பிரதியையும் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பத்திரிகை ஆசிரியரை கண்டவுடன் அதை கொடுத்து விட்டு உடனே அவர் பத்திரிகைக்கு ஒருவருட சந்தாவை கட்டிவிடுவது நல்லது.
5) "உணர்வுச்சூழலில் அரூப வெளிப்பாடு vortex என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து vorticism தோன்றியது. இந்த இயக்கம் சார்ந்த கலைஞர்கள் பெரும்பாலும் Futurism என்னும் இயக்கத்தின் பாதிப்பில் அதைப் பின்பற்றி உருவங்களின் சலனம் அசைவுகள் இவற்றை உத்வேகத்துடன் வெளிப்படுத்தினர் " என்பது மாதிரியான கட்டுரைகள் எழுத தெரிந்து கொண்டீருக்க வேண்டும்.
மீதி 5 வழிகள் உங்கள் எதிர்வினைகளை பார்த்த பிறகு.
சுரேஷ், சென்னை.
()
இது ஒரு மீள்பதிவு. ராயர் காப்பி கிளப் மடற்குழுவில் Oct 20, 2003 அன்று பிரசுரமானது. (தினமும் வரும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் மின்னஞ்சல்களின் வேண்டுக்கோளுக்கிணங்க இந்த இலக்கிய பொக்கிஷங்கள் இந்த வலைப்பக்கத்தில் மீள்பதிவு செய்யப்படுகின்றன).
நகைச்சுவை நோக்கில் மாத்திரமே எழுதப்பட்ட மேற்கண்ட மடலுக்கு இரா.முருகனின் கோபமான எதிர்வினை.
கொச்சைப் படுத்த வேண்டாம்.
அவரவர் இலக்கியத் தொண்டுக்காக எத்தனை இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள், ஏற்றுக் கொண்டிருக்கி றார்கள் என்று தெரிந்தால் இப்படிப் பொறுப்பில்லாமல் பேச மாட்டீர்கள்.
நியூயார்க் டைம்ஸில் நிருபராக எழுதி வந்த வருமானத்தை எல்லாம் கணையாழிக்குச் செலவழித்த கஸ்தூரிரங்கன் கையில் மிஞ்சியது ஒன்றுமில்லை. தீபத்தோடு திரியாக எரிந்த நா.பாவும், சதங்கை வனமாலியும், பொன்.விஜயனும், விஜயபாஸ்கரனும், சி.சு.செல்லப்பாவும், விருட்சம் அழகியசிங்கரும், கசடதபற கிருஷ்ணமூர்த்தியும், முன்றில் அரங்கநாதனும், ஞானரதம் ஜெ.கேயும், காலச்சுவடு சு.ராவும், சுந்தரசுகனும், கவிதாசரணும் இன்னும் முகம் தெரியாத எழுத்து மட்டும் தெரிந்த எத்தனையோ நபர்களெல்லாம் கைக்காசையும், நேரத்தையும், வாழ்க்கையில் இன்னும் எதை எதையோ இழந்து சிறுபத்திரிகை நடத்தி, எழுதி அளித்த கொடை இன்றைய நவீனத் தமிழ் இலக்கியம். பைசா வருமானத்தை எதிர்பாராமல், விளம்பரத்தை வேண்டாமல் சிறுபத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மரியாதைக்குரியவர்கள். 'இந்தியா'வில் பாரதி தொடங்கி வைத்த பரம்பரை இது. புதுமைப்பித்தனும், ஜி.நாகராஜனும், அசோகமித்திரனும், தஞ்சை பிரகாஷ¤ம் அவ்வழி வந்தவர்கள். இன்றைக்கு நாம் இணையத்தில் இலக்கியத்தை விவாதித்துக் கொண்டிருப்பது அவர்கள் போட்ட பிச்சையால் தான்.
இந்த மாதிரிக் கடிதங்களை இங்கே எந்த மட்டுறுத்துனரும் இனி இங்கே அனுமதிக்கக்கூடாது.
இரா.மு
குழுமத்தை விட்டு விலகுவதாக நான் எழுதியதும்,'நான் சொன்னதை பிற்காலத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்' என்று இரா.முருகன் என்னை ஆற்றுப்படுத்தியதும்... மலரும் நினைவுகள்.
suresh kannan
22 comments:
ஐந்தும் அருமை! எந்தக் காலத்துக்கும் பொருந்துகிறது. குறிப்பாக தற்காலத்துக்கு பொருந்தோ பொருந்துவென பொருந்துகிறது.
மீதி ஐந்தை இப்போது பதிப்பிக்கலாமே? :-)
இரா.மு. அப்போ ரொம்ப சீரியஸாக இருந்திருப்பார் போலிருக்கிறது.
//
குழுமத்தை விட்டு விலகுவதாக நான் எழுதியதும்,'நான் சொன்னதை பிற்காலத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்' என்று இரா.முருகன் என்னை ஆற்றுப்படுத்தியதும்... மலரும் நினைவுகள்.//
;)))
அடுத்த 5க்காக காத்திருக்கிறேன்.
ஹ்ம்ம். இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்களா அல்லது இரா.மு. அவ்வளவு சீரியஸாக இப்போது இல்லையா? ஆனால் சீரியசாகச் சொல்ல வேண்டுமென்றால், முருகன் சிறு பத்திரிகையாளர் பற்றிச் சொன்னவை நியாயமே.
எனக்கென்னவோ, நீங்கள் எழுதியது தவறாகத் தெரியவில்லை. பகடி என்பது எல்லாவற்றுக்கும் தானே. தனி மனிதத் தாக்குதல் இல்லாத வரையில், இவற்றை நான் ரசிக்கவே செய்கிறேன்.
In any case, awaiting the next five.
அனுஜன்யா
சுரேஷ் கண்ணன்,
உங்கள் எழுத்து எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்பப் பிடித்திருக்கிறது. பாரட்ட வார்த்தைகள் தேட அலுப்பாயிருக்கிறது! சூப்பர்ப்!!!
நீங்கள், திரு என். சொக்கனின் ஒரு இடுகையில் அவரைப் பாராட்டும் போது, தமிழில் நல்ல இயல்பான நகைச்சுவைக் கட்டுரை வருவதில்லைன்னு ஆதங்கப்பட்டிருந்தீங்க! ஆனா நீங்களே ரொம்ம்ம்ம்ப நல்லாவே, நிறையவே எழுதுறீங்களே! அடக்கமா?
இந்தக் கட்டுரையோட நீட்சி உங்களின் அந்த "முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்" கட்டுரையோ? நிற்க!, இரா. மு. முன்பு வேலை பார்த்த ஒரு கம்பெனியில் நானும் வேலை பார்த்தேன். அதிர்ந்து பேசாவதவர், மென்மையானவர். என் இயல்பான கூச்சத்தினால் அவரிடம் ’எ’லக்கியமெல்லாம் பேசியதில்லை. அவரைப் பார்த்துப் பெருமிதப்பட்டுக்கிட்டதோட சரி(இது 1998-ல்). லக்கி சொல்ற மாதிரி அவரின் எதிர்வினை கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தான்!!!
அன்புடன் சங்கா
இரா. முருகனின் எதிர்வினை திடுக்கிட வைக்கிறது. ஆனால் அத்தனையும் உண்மை. கிட்டத்தட்ட இதே மாதிரி, இணைய எழுத்தாளர்களை பகடி செய்து நானும் என் வலைப்பூவில் ஒரு இடுகையிட்டிருக்கிறேன். என்ன செய்ய? மனதுக்கு உவந்தவர்களிடம் தான் உரிமையை எடுத்துக் கொள்ள முடியும்!
லக்கி, சென்ஷி,அனுஜன்யா, சங்கர்,ஜெகநாதன்,..
நன்றி.
மீதி ஐந்தை எழுதச் சொல்லி கேட்டீருக்கிறீர்கள். அப்போது மடற்குழுமத்திலேயே பிரசன்னா,பிகே சிவகுமார் உட்பட பலரும் இதை கேட்டார்கள். அப்போதே எழுதத் தோன்றவில்லை.
இரா.முவின் கோபத்தில் உள்ள நியாயத்தை பின்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நகைச்சுவைதான் என்றாலும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் மிகுந்த சிரமத்தில் இயங்குகிற இலக்கியம் வளர்க்கிற நபர்களை விளையாட்டாகவேனும் கிண்டலடித்தால் கூட அது ஒரு பொறுப்புள்ள இலக்கியவாதிக்கு வலியை ஏற்படுத்திவிடும்.
ஜெயமோகன் 'எழுத்து' சி.சு.செல்லப்பாவை ஒரு நகைச்சுவைக் கட்டுரையில் கிண்டலடிக்க, நான் "என்ன சார், இப்படி எழுதீட்டீங்க" என்று கடிதம் எழுதினேன். ம்..
காலம் ஒரு சுற்று முடிக்கிற சத்தம் கேட்கிறது.
பகடி என்பதும் இலக்கியத்தின் ஒரு பக்கம்தான் என்று ஜெமோ விளக்கமளித்தார். அதுவும் எனக்கு ஒப்புதல்தான். எனவே நண்பர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க மீதி ஐந்து மொக்கையையும் விரைவில் எழுதப்பார்க்கிறேன்.
மற்றபடி இரா.முவின் சீரியஸ் எல்லாம் சும்மா. அவரின் பிரத்யேக நகைச்சுவை உணர்வை அவரின் படைப்புகளைப் படித்தால் விளங்கும். நேர் பேச்சிலும் மிக மென்மையானவர்.
கலக்கல் திரு சுரேஷ் கண்ணன்!
ஆங்கில ரசமான இசங்களையும், பின் நவீனத்துவத்தையும், மறக்காமல் சுட்டியது அல்லது குட்டியது நன்று!
இன்னும் நிறைய குறுக்கு வழிகளை எதிர் பார்க்கிறோம்! :P
ஊஹூம்.....நான் தேறமாட்டேன்.
நோ சான்ஸ்(-:
எக்ஸ்கியுஸ்மி...
அப்பாலிக்கா பெரும் பத்திரிக்கை (வெகுசன) எழுத்தாளனாகவும் இன்னா வேணும்னு சொல்ல முடியுமா???
//இந்த மாதிரிக் கடிதங்களை இங்கே எந்த மட்டுறுத்துனரும் இனி இங்கே அனுமதிக்கக்கூடாது.
இரா.மு
//
ஓ அவ்வளவு 'க'ன 'சு'னா அதாங்க கருத்து சொதந்திரம் இருந்திருக்கா? நல்லவேளை வலைப்பதிவுகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால்...
தல,
மீதமுள்ள ஐந்து வழிகளையும் சீக்கிரம் கூறவும்.
அய்யம் பேக் (பேக்கு இல்லைங்க, பேக் BACK).
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
இந்தியாவின் மானத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எப்படி காப்பாற்றினார்?
ஒண்ணும் புரியற மாதிரி தெரியலையே..
..??!!
என்னைய மாதிரி முன் பழமைத்துவ வாதிகள் பின்னூட்டமாவது இடலாமா?
உங்க அனுபவத்துக்கு, மீதி 5 இல்ல, ஐந்தாயிரம் கூட உங்களால எழுத முடியும் சுரேஷ் :-)
சிரிக்க காத்துகிட்டு இருக்கோம் :-)
பை தி வே, நானும் சிறுபத்திரிகை நடத்தியவன்தான். ஆனால், அச்சகத்திலிருந்து பிரதிகளை வாங்க முடியாமல், அது பிரசவத்துக்கு முன்பே அபார்ஷனாகிவிட்டது :-(
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பதிவு அருமை, நிறைய பேரை ஈர்க்கும்.
ஆனால் எல்லா எழுத்தாளர்களுக்கும் பொத்தாம் பொதுவாக பொருந்தாது.
இதில் விதி விலக்காய் எனக்கு தெரிந்த எழுத்தாளர்கள்- எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, மனுஷ்யபுத்திரன், கனிமொழி அக்கா, வண்ண நிலவன், அய்யனார், jyovraam sundar.
//'பிக்காசோவும் முட்டைகோசும்' 'மிராண்டாவுக்குள் ஒரு பனித்தலையன்'//
இது போன்ற உதாரணம் எல்லாம் உங்ககிட்ட இருந்து சகஜமா வருது.நல்ல நகைச்சுவை.மற்ற ஐந்தும் சீக்கிரம் போடுங்க.
லேட்டஸ்ட் இலக்கியவாதி:
நான் அவரின் முதல் கதையான
”தண்ணீரில் ஆடும் பிம்பங்கள்” படித்தேன்.காலில் தெரியாமல் ஒட்டிக்கொள்ளும் சூயிங் கம் மாதிரி மனசில் ஒட்டிக்கொண்டு விட்டார்.அவரைப் பார்ப்பதற்காக அவரின்
சொந்தா ஊரான முச்சிப்பாத்திக்கு சென்றேன்.அவர் வெளியே வருகிறரா என்று ஆர்வத்துடன் ஐந்து நாட்கள் எதிர் பால் பூத்தில் படுத்துகிடப்பேன்.
இலக்கிய ஆர்வத்தில எதுவும் சாப்பிடாமல் இருந்து ஆறாவது நாள்
அவரைப் பார்த்து பரவசமடைந்தேன்.
அவரும் நானும் நடந்தே முச்சிப்பாத்தியிலிருந்து காஷ்மீர் வரை
நடந்தே போனோம்.வழியெல்லாம் இலக்கியம் இலக்கியம்தான்.
அவர் யாரோ அல்ல.ஒரு சக மனிதன்.
என்னை இப்படி நடக்கச்செய்தது அவரது மரபான கதை சொல்லும் முறைதான்.மண் புழு நடை.
அத்திவெட்டி ஜோதிபாரதி,துளசி கோபால், மதிபாலா, குழலி, வெடிகுண்டு வெங்கட் (என்னா பேரு), பட்டிக்காட்டான்,குடுகுடுப்பை, பைத்தியக்காரன்,குப்பன்_யாஹூ,சிங்கை கண்ணன், கே.ரவிஷங்கர்,நன்றி
(அப்பாடி! ரேடியாவுல நேயர் விருப்பம் லிஸ்ட் படிச்ச ஒரு பீலிங்)
//அதாங்க கருத்து சொதந்திரம் இருந்திருக்கா?//
இப்பவும் மடற்குழுக்கள்ல கருத்து சொதந்தரம் இல்லன்னுதான் தோணுது. :-)
//நானும் சிறுபத்திரிகை நடத்தியவன்தான்//
பைத்தியக்காரன், அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே.
தல,
//வெடிகுண்டு வெங்கட் (என்னா பேரு)//
அது நம்ம பேருதான். எப்படி, பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல?
அய்யையோ! கடைசி பாரா என் பின்னூட்டத்தில் விட்டுப் போய்விட்டது
சார்!
இந்த கடைசிவரிதான் ஹைலைட்.
“லிங்காய் டாங் என்னும் இமயமலை அடிவார எழுத்தாளர் வீட்டில் இருவரும் இருக்கும் போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.அது:
“எழு வருடத்திற்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது.விவரம் சொல்லவும்.இல்லாவிட்டால் சட்டத்தின் முன் “அவர் இல்லை” என்று ஆகிவிடும்.”
இப்படித்தான் குழந்தைகள் போல் இலக்கியவாதிகளுக்கும் நேரம் காலம் இடம் தெரிவதில்லை.
லக்கி சொன்னதைப் போல ஐந்தும் அருமை!
பொதுவாக பிரபல பதிவர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களின் பதிவுகளில் பின்னூட்டக்கூடாது என்பது என் சமீபத்திய கொள்கைகளில் ஒன்று..
ஆனால் 'சிறப்பு குறுக்கு வழிகள்' கொள்கையை குப்புறத் தள்ளி விட்டது!
இரா.மு.அவ்வளவு serious ஆசாமி என்று என்னாலும் நம்ப இயலவில்லை;சும்மா ஒரு ஹாய் சொன்னால் கூட பொறுப்பாக மின்மடலிடும் மென் நண்பர் அவர்!
ஒரு வேளை அப்போது சிறுபத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்திருப்பாரோ?!
Post a Comment