Wednesday, December 08, 2004

ஜெயேந்திரரும் 'உண்மை'யும்

இப்போது ஜெயேந்திரர் கைது பற்றிய பரபரப்பு சற்றே அடங்கியிருக்கிறது. ஆனால் இது நீறுபூத்த நெருப்புதான். அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போதோ, வேறு யாராவது அவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தாலே இது மறுபடியும் பற்றிக் கொண்டுவிடும். வீரப்பன் என்கிற பெரிய சுறாமீனை இழந்துவிட்ட பத்திரிகைகாரர்களுக்கு ஜெயேந்திரர் என்கிற திமிங்கலம் அவர்களின் தீராப்பசியை தணிக்கக்கூடும்.

O

இந்த நிலையில் நண்பரொருவர் ஒருவர், திராவிட கழகத்தால் நடத்தப்படுகின்ற 'உண்மை' என்கிற இதழை படிக்கக் கொடுத்தார். நான் எப்போதுமே இந்த மாதிரியான சார்பு நிலைப் பத்திரிகைகளையும், புலனாய்வுப் பத்திரிகைகளையும் படிப்பதில்லை. செய்திகள் உண்மைக்கு மாறாகவும், மிகைப்படுத்தப்பட்டும், திரித்து எழுதப்பட்டுமிருக்கும் என்பது என் அனுமானம்.

என்றாலும் இந்த பரபரப்பான நிலையில், திராவிட கழகப்பத்திரிகையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆவலில் வாங்கிப் படித்தேன். இப்போதுதான் இந்தப் பத்திரிகையை பார்க்கிறேன். வழக்கமான பகுதிகள் எல்லாம் ஒரு அறிவிப்பின் மூலம் ஒத்திப் போடப்பட்டு, முழுக்க முழுக்க ஜெயேந்திரரைப் பற்றின செய்திகளும், காஞ்சி மடத்தைப் பற்றிய காரசாரமான விமர்சனங்களும் அடங்கியிருக்கிறது.

ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள்தான் என்றும் சிருங்கேரி மடத்தின் கிளையாக (?!) தோற்றுவிக்கப்பட்டதுதான் காஞ்சிமடம் என்றும் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் விட எனக்கு, கொலை செய்யப்பட்ட சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எழுதிய பல கடிதங்களில் ஒரு கடிதம் மறுபிரசுரம் செய்யப்பட்டிருப்பது, சுவாரசியமானதாக இருந்தது. ஜெயேந்திரர் போன இடமெல்லாம் எவ்வாறு பாழானது ஒரு பட்டியல் போடப்பட்டிருக்கிறது.

O

1) தாங்கள் தலைக்காவேரிக்கு தலைதெறிக்க ஓடீனீர்கள். காவேரி தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் வறண்டது.

2) ஒரே இந்து சாம்ராஜ்யம் நேபாளத்திற்கு சென்றீர்கள். இராஜ வம்சமே பூண்டற்றுப் போனது.

3) எல்லா நதிகளும் மகாமகத்து கும்பகோணம் வருவதாக ஐதீகம். தங்கள் இருவரின் திருப்பாதம் பட்ட விசேஷம் கும்பகோணத்தில் கோர தீ விபத்தில் ஒரு பாவமும் செய்யாத பக்தர்கள் மரணம்.

4) கொலைப்பாதகம், குரு துரோகம் புரிந்த சைவமட இளவரசுகளுக்கு ஆதரவு தந்து அடைக்கலம் கொடுத்தீர்கள். இன்றைக்கு ஒருவர் சிறையில். ஒருவர் நடுத்தெருவில்.

5) தங்களுடன் கைலாச யாத்திரை செய்த ராஜகோபால் காரக்`த்தில்

6) தற்போது துந்த கிணற்றில் தூர்வாரும் வேலையாக நஷ்டத்தில் இயங்கும் 'தமிழ்நாடு ஆஸ்பத்திரி' ஸ்வீகாரம் செய்துள்ளீர்கள். ஏற்கெனவே குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 'நல்ல' (அவ) பெயர்' நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடு.

7) வைஷ்ணவத் தல திருப்பதியில் தலையிட்டு குளறுபடி செய்து அவப்பெயர்.

8) சைவத்தில் தங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

9) கெளமாரத்தில் பழனியில் நூதன பிரதிஷ்டை செய்த விக்ரகம் தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.

10) தங்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்ட மதமாற்றச் தடைச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? தங்களிடம் ஆன்ம பலம் அறவே இல்லை. ராவணன், அர்ச்சுனன் போல் காஷாயம் தங்களுக்கு ஓர் வேடம். தங்களின் தவறான செயல்பாடுகள் ஸ்தாபனத்தை பாதிக்கிறது. ஸ்தாபனத்தின் நன்மைக்காக தனிமனிதர்களைப் பலியிடுவதில் தவறில்லை.
.... என்று அந்தக்கடிதம் நீள்கிறது.

O

மேற்கண்ட பத்திரிகையை படிக்கக் கொடுத்த நண்பரே பேசத்துவங்கினார்.

"என்ன இருந்தாலும் ஜெயேந்திரர் மகான்தான். எவ்வளவு ஆச்சாரமாக இருந்திருக்கிறார்?..."

மனிதர் ஏதோ வில்லங்கமாக சொல்லப் போகிறார் என்பதால் ஏதும் பேசாமல் அமைதி காத்தேன்.

"அவர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிற மற்றும் சம்பந்தப்பட்டிருக்கிற பெண்மணிகளையும் பாருங்கள். மனிதர் அவருடைய இனத்தவர்களை சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார். என்ன ஆசாரம்... என்ன ஆசாரம்?"

நான் திகைப்புடன் அவரைப்பார்த்துக் கொண்டு நின்றேன்.

"ஆனாலும் சொல்ல முடியாது. சுவாமிகள் தலித் மக்களையும் மேம்படுத்துகிறேன் என்று அந்தப் பகுதி மக்கள் இருக்கும் பகுதிகளிலும் சென்றிருக்கிறார். இன்னும் அங்கிருந்து கூட பாலியல் புகார்கள் வரலாம்...

என்று அவர் தொடரவே, இதற்கு மேல் இங்கு இருந்தால் வம்பு என்று நான் நடையைக் கட்டினேன்.

suresh kannan

7 comments:

Anonymous said...

Nalla podunga. Ippa vittal dharma adi poda innoru vagaiyaana chance kidaikaamap pogalaam.

S.T.R

அபூ முஹை said...

//என்று அவர் தொடரவே, இதற்கு மேல் இங்கு இருந்தால் வம்பு என்று நான் நடையைக் கட்டினேன்.//

நல்லவேளை சீக்கிரமா நடையைக் கட்டினீங்க!

பிச்சைப்பாத்திரம் said...
This comment has been removed by a blog administrator.
பிச்சைப்பாத்திரம் said...

Dear Thirumalai,

பாரம்பரியம்மிக்க பழமையான, இத்தனை வருட காலத்தில் 68 மடாதிபதிகள் கட்டிக்காத்த காஞ்சிமடத்திற்கு ஒரே இரவில் மரணஅடி கொடுத்த ஜெயேந்திரரின் அடியை விட இது குறைவானது என்றே எண்ணுகிறேன்.

வானம்பாடி said...

என்ன பாரம்பரியம்? 19ம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் கிளையாக கும்பகோணத்தில் துவக்கப்பட்டு பின்னர் காஞ்சிக்கு இடம் மாறிய மடத்திற்கு என்ன பாரம்பரியம் இருக்கிறது? ஆதி சங்கரர் துவக்காத 'சங்கர' மடத்திற்கு ஏது 68 பீடாதிபதிகள்? 8,9ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆதி சங்கரர் எப்படி 2500 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சியில் மடம் நிறுவி இருக்க முடியும்? முந்தைய பீடாதிபதியான 'பரமாச்சாரியார்' என்றழைக்கப்பட்டவரின் புதிய வரலாறு அது. என்ன செய்வது, சில விஷயங்களை நாம் கண்களை மூடிக்கொண்டு நம்புகிறோம். ம்.

பிச்சைப்பாத்திரம் said...

Dear Sudarsan,

can you write a detailed article on this?

வானம்பாடி said...

கண்ணன்,

இங்கே இருக்கிறது விரிவான வலைப்பூ http://vanampadi.blogspot.com. என்னை எழுதத் தூண்டியதற்கு எனது நன்றிகள்!