Monday, June 01, 2009

எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு


'மாதவிக்குட்டி' என்கிற பெயரில் மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த கமலாதாஸ் ஒரு மூத்த பெண் படைப்பாளியாவார். பாலுறவு குறித்த விஷயங்களை தம்முடைய படைப்புகளில் எழுதி அதிகம் சர்ச்சைக்குள்ளானவர். தம்முடைய 65-வது வயதில் இசுலாமிய மதத்திற்கு மாறி, 'கமலா சுரைய்யா' என்று பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்ற இவரின் கவிதை நூலான 'The Sirens' 'ஆசிய கவிதை விருது' பெற்றது. 15-வது வயதில் மிகுந்த வயது வித்தியாசமுள்ளவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட கமலாதாஸ், 1973-ல் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை 'My Story' என்று எழுதி நூலாக வெளியிட்டார். அந்தச் சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அந்த நூலில் இந்தியப் பெண்களுக்கு ஆணாகதிக்க சமூகம் செய்யும் துரோகத்தையும் தமது திருமண உறவில் ஏற்பட்டிருந்த கசப்புகளையும் அதில் விரிவாக எழுதியிருப்பார்.

நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த கமலாதாஸ் புனே மருத்துவமனையில் நேற்று தம்முடைய 75வது வயதில் இறந்து போனார். அவருக்கு என் அஞ்சலி. 'பாலச்சந்திரன் சுள்ளிக்காடு' தம்முடைய அனுபவங்களை தொகுத்து எழுதின நூலில் (சிதம்பர நினைவுகள்) கமலாதாஸைப் பற்றியும் அவருடைய தாயன்பைப் பற்றியும் ஒரு அத்தியாயத்தில் மிக நெகிழ்வாக எழுதியிருப்பார்.

suresh kannan

3 comments:

Anonymous said...

வெளிப்படையான எழுத்தாளர். என்னுடைய அஞ்சலி.

- பார்த்தி

லக்கிலுக் said...

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி :-(

ராஜ நடராஜன் said...

நேற்று கமலாதாஸின் முன்பு பதிவு செய்யப்பட்ட நேர்காணல் காண நேர்ந்தது.பேச்சில் எழுத்தின் முதிர்ச்சி தெரிந்தது.இன்னும் இரண்டு வருடம் கிடைத்தால் ஒரு அழகான நாவலை எழுதியிருப்பேன் என்றார்.கமலாதாஸ் என்ற கவிதாயினிக்கு எனது அஞ்சலி.