Wednesday, March 17, 2010

கோவா மற்றும தமிழ்ப்படம்

வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் சினிமா வயதுக்கு வருவதின் அடையாளங்களையும் தடயங்களையும் இதில் காண முடிந்தது. ஓரினப் பாலுறவாளர்களைப் பற்றி இதற்கு முன் இலைமறை காயாக சில நகைச்சுவைக்காட்சிகளை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் ஆலிவுட்டின் 'AMERICAN PIE' போன்ற  அப்பட்டமான செக்ஸ் காமெடி தமிழுக்குப் புதிது. பண்ணைப்புரத்திலிருந்து உருவாகி வந்த ஒரு தலைமுறை இளைஞனிடமிருந்து இத்தனை நவீன திரைப்படத்தை எதிர்பார்க்கவில்லை. அவரின் முந்தைய படங்களில் சென்னை-28 ஒரளவிற்கு வசீகரி்த்தாலும் 'சரோஜா' வை சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை.

இந்தப் படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை. திரைக்கதையும் கூட சுமார்தான். ஆனால் திறமையாக உருவாக்கப்பட்ட காட்சிக் கோர்வைகள்தான் இப்படத்தின் பலம் என நினைக்கிறேன். உதாரணமாக அந்த நண்பர்கள் குழு கஞ்சா புகைத்து விட்டு சுவாதீனமேயில்லாமல் உரையாடு்ம் காட்சியைச் சொல்லலாம். அந்தக் காட்சியில் பிரேம்ஜியின் நடிப்பு  தரமானதாக இருந்தது. அப்படியொரு மினி-சைக்கோ பாத்திரத்தை ஏற்றதற்காக சிநேகாவை பாராட்ட வேண்டும். கிராமத்து பஞ்சாயத்து காட்சிகளிலும் தரமான ஒளிந்திருக்கும் கிண்டல். சீரியஸாக சென்று கொண்டிருக்கும் காட்சிகளிலுள்ள நகைச்சுவையை நாம் தான் கண்டுணர வேண்டியிருக்கும். அந்த மாதிரியான 'மேக்கிங்கில்'தான் இந்தப்படத்தின் தனித்தன்மையை உணர முடிகிறது.

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் மீதான ஆவலை 'கோவா' உருவாக்கியிருக்கிறது.

பரவலாக பாராட்டப் பட்ட  'தமிழ்ப்படம்' எனக்கு அவ்வளவு திருப்தியை அளிக்கவில்லை. மாறாக எரிச்சலையே ஏற்படுத்தியது. மற்ற படங்களின் கிளிஷேக்களை தொடர்ந்து கிண்டல் செய்த போது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும் அதுவே மொண்ணைத்தனமாக தொடரும் போது இந்தப்படமே ஒரு கிளிஷேவாக மாறிப் போன அபத்தம் நிகழ்ந்து விட்டது. இதையெல்லாம் பாலாஜி, சந்தானம், ஜீவா குழுவினர் இதை விட அற்புதமாக செய்துவிட்டதால் இந்தப்படமே 'லொள்ளு சபா' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்  ஹை-பட்ஜெட் வடிவம் போலாகி விட்டது. இன்னும் கொஞ்சம் சீரியஸாக உழைத்திருக்கலாம். 'இந்தப்பாடலை சிவா பாடிக் கொண்டிருக்கிறார் (என்று போட சொன்னார்), பாப் மயூசிக் குடும்பப் பாடல்,  தமிழ் சினிமாவின் அபத்தமான பாட்டு வரிகளை கிண்டலடிக்கும் .. ஓ.மகசீயா....போன்ற சிறந்த நக்கல்களால் இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிந்தது.

என்றாலும் தமிழ் சினிமாவின் உளுத்துப் போன கிளிஷேக்களையும்,  அதன் தரத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்தாதாமல் கல்லாப்பெட்டியிலேயே குறியாக இருந்த  இயக்குநர்களையும் சூப்பர் ஸ்டார்களையும், ஒழுங்காக மூத்திரம் போகத் தெரியாத பையன்கள் கூட  அரசியல் கனவுகளுடன் பஞ்ச் டயலாக் பேசும் அபத்தங்களையும் செருப்பால் அடித்த ஒரே காரணத்திற்காகவே இந்தப் படத்தை பாராட்ட வேண்டும். 

suresh kannan

11 comments:

ராம்ஜி_யாஹூ said...

Thanks for sharing, I have not seen both the movies, Your post gave me the feeling of seen.

D.R.Ashok said...

:)

ஸ்ரீதர் நாராயணன் said...

கோவா - முதல் 30 நிமிடங்களுக்கு நீங்கள் சொல்லும் ‘தரமான’ கிண்டல் தனியாக படம் பார்க்கும்போது எடுபடவில்லை. Hotshots போன்ற Spoofகளில் துருத்தி நிற்கும் நகைச்சுவையே அந்தப் படங்களின் பலம் என்று எனக்குத் தோன்றியது.

சம்பத்-ஆகாஷ் காட்சிபடுத்துதல் க்ளிஷேக்கள் இல்லாமல் Freshஆக இருந்த ஒரே காரணத்திற்காக இந்தப் படம் தமிழ்படங்களில் முக்கிய இடத்தில் இருக்கும்.

தமிழ்படம் முழுவதும் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் சரியாகவே இருந்தது என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் பார்த்த சில ஆங்கில டிவி தொடர்களில் கூட சிறந்த ஒரிஜினல் நகைச்சுவை காட்சிகளை பார்க்க முடிந்தது. ஏனோ தமிழ்ப்படங்களில் ஒரிஜினலான அங்கதம் அதிகம் தென்படுவதில்லை.

ரா.கிரிதரன் said...

கோவா - இன்னும் பார்க்கவில்லை. ஓரினப் பாலுரவாளர் தொடர்பான நகைச்சுவையை இந்தி திரைப்படமான Dostana நன்றாக கையாண்டிருந்தார்கள்.

தமிழ்படம் - ஆரம்பம் நன்றாக இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு சலிச்சுப் போச்சு. தொடர்ந்து இப்படிப்பட்ட ஸ்டார்களை வாழ்த்திப் பாடும் நம்மையும் சேர்த்தே நையாண்டி செய்திருக்கிறார்கள் ;) சோவின் சரஸ்வதியில் செல்வன் ஞாபகத்துக்கு வந்தது - அந்த நாடகமே தேவலாம்!

லேகா said...

சுரேஷ்,

தமிழ் படம் பிடிக்கவில்லையா?!! ஆஹா....தமிழில் வெளிவந்திருக்கும் முதல் Spoof அட்டெம்ப்ட்..எதையும் ஆராயாமல்
2 :30 மணிநேரம் சிரித்து விட்டு வராலாம்.ம்ம்ம்ம்..."Scary Movies ","Super Hero Movie " படங்களை போல தானே...!!
இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு!!

Divya Balachandran said...

Yes as u said, GOA is full time entertainer which makes people happy at any cost. Even though there was no story background, It wont make boring..

Pakka colorful movie which I felt that, I have seen a Hindi Movie..

Great attempt by Mr. Venkat Prabhu and his crew and I'm wondering, how easily this man coomunicates well with his audiences. He just shared simply the color ful side of the life with this colorful Goa..

In this movie, Premji got a good role who tries to impress his girl by learning english words.. The romantic scenes between this couple is so lovable..

Yuvan's Music is another positive for Goa.. The intro song, then Ethu varai song are very good..

After a long time, this Yezhu yezhu thalamuraikkum song matches with village songs..It gives a pleasure to feel like we are in our home town..

Goa parties, beaches..etc etc..are well shotted and we must appreciate Soundarya Rajinikanth to took this project with Venkat Prabhu's Crew..


I haven't seen this TamilPadam yet..but your post makes me to book tickets for Tamil padam this weekend..
:-)

ஸ்ரீவி சிவா said...

'Spoof' படம் என முடிவெடுத்து களத்தில் இறங்கிய பின், இயக்குனர் அமுதன் நிறைவாய் செய்திருக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது.
இந்த வகையறா படங்களில் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இருக்கும்போது ரசிகர்கள் மிகவும் ஆராய தேவையில்லை.... சரியா?

லேகாவின் கருத்துதான் எனதும்!!
பகிர்வுக்கு நன்றி சுரேஷ்.

ஜோ/Joe said...

இரண்டு படங்கள் பற்றிய உங்கள் கருத்தோடு என் கருத்தும் ஒத்துப் போவது ஆச்சரியம் :)

சரவணன்-சாரதி said...

சுரேஷ்,
கோவா படம் சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. கதை, திரைக்கதை இரண்டும் இல்லாமல், பணம் இருக்கிறதே என்று படம் எடுத்திருக்கிறார்கள்.
படத்தில் வரும் சில spoof -கள் கூட எரிச்சலையே தந்தது. மற்றபடி gay செக்ஸ் கான்செப்ட்-ஐ வைத்து இன்னும் சிறப்பாக படத்தை எடுத்து தமிழ் சினிமாவை அடுத்த தளம் நோக்கி நகர்த்தும் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார்கள். இன்னொன்று, மூன்று படத்திலேயே formula , கிளிஷேக்களில் உழலும் வெங்கட் பிரபு அடுத்த தனது படத்தை எப்படி எடுப்பார் என்ற கேள்வியுடனே இந்தப் படத்தைப் பார்த்தேன்.
அப்புறம் தமிழ்ப்படம். தனித்தனியே கிளிப்பிங் பார்த்து ரசிக்க வேண்டிய படம். (collection of clipping ) மொத்தமாகப் பார்த்த பிறகு எனக்குத் தோன்றியது "மொக்கை தாங்கல".இன்னும் கலாய்க்கப் படவேண்டிய அபத்தங்கள் தமிழ் சினிமாவில் உள்ளதால் "டுமீல் படம்" என்று ஒன்றை யாராவது இன்னும் சிறப்பாக எடுக்கலாம்.

Swami said...

தமிழ்படம்
மாதிரி ஒரு மொக்கை படத்தை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை.நெட்டில்
விமர்சனம் பார்த்து ஏமாந்து
விட்டோம்.

KKPSK said...

தமிழ்படம் நல்ல ஆரம்பமே..மக்கள் வரவேற்பு நன்றாகவே உள்ளது. முதல் பாதி மிக அருமை..ரொம்ப நாள் கழித்து..நன்றாக சிரித்து படம் பார்த்தேன்.
லேகாவின் கருத்துதான் எனதும்!
probably prejudice could have spoiled you!
2nd half was bit boring..
thnx