Monday, December 21, 2009

கிழக்கு பதிப்பகத்தின் முக்கியமான நூல் - ஒரு டிரைய்லர்

ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவதற்கு டிரைய்லர் போட்ட முதல் பிரகஸ்பதி நானாகத்தான் இருப்பேன் என்று நம்புகிறேன்.



கிழக்குப் பதிப்பக வெளியீடுகளில் நான் வாசித்த வரை (மிகச் சொற்பமே) அபுனைவு வகைகளில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த வெளியீடாக இருக்கிறது என்பதை மிக நிச்சயமாகச் சொல்ல முடியும். நூல் கையில் கிடைத்தவுடனேயே சுவாரசியமாக வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் குறிப்புகளை எழுதிக் கொள்ள மறுபடியும் வாசிக்க வேண்டியதாயிற்று. என்றாலும் கூட என்ன எழுதுவது என்பது புகைமூட்டமாகவே இருக்கிறது. மொக்கையான புத்தகம் என்றால் பரபரவென்று ஒரு பத்து பக்கத்திற்கு திட்டி உடனே எழுதி விடலாம். ஆனால் இது மிகச் சிறந்த உள்ளடக்கத்துடன் வெளிவந்து தொலைத்திருக்கிறது. எனவேதான் இந்தக் குழப்பம். அதனாலேயே இதைப் பற்றி எழுதுவது தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தது.

எனவேதான் கார்ரேஸில் ஜெயிக்க தன் வண்டியிலேயே டைம்பாம் வைத்துக் கொள்ளும் 'காதல் மன்னன்' கரணைப் போல இந்த teaser trailer-ஐ வெளியிடுவதன் மூலம் எனக்கு நானே ஒரு நெருக்கடியையும் deadline-ஐயும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நூல் பற்றிய விவரம் ஒரு சிறிய சஸ்பென்ஸ்.

எனவே.. புத்தகப் பார்வை வெகு விரைவில்.

(ரொம்பத்தான் பில்டப் கொடுத்துட்டேன் போலிருக்கே.. ஆண்டவா..)

Image Courtesy: original uploader

suresh kannan

4 comments:

Unknown said...

//
எனவேதான் கார்ரேஸில் ஜெயிக்க தன் வண்டியிலேயே டைம்பாம் வைத்துக் கொள்ளும் 'காதல் மன்னன்' கரணைப் போல இந்த teaser trailer-ஐ வெளியிடுவதன் மூலம் எனக்கு நானே ஒரு நெருக்கடியையும் deadline-ஐயும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது//

சமீபத்தில் எதோ ஒரு தொலைகாட்சியில் 103வது தடவையாக போடப்பட்ட காதல்மன்னன் படம் பார்த்துட்டிங்கன்னு தெரியுது :-).

சிறந்த உள்ளடக்கம்ன்னு சொல்லி ஹைப் உண்டாக்கிட்டிங்க, சீக்கிரம் எழுதுங்க. வெயிட்டிங்....

Anonymous said...

Perhaps they are publishing a book by you this year.
If so you can be frank about it.Self-promotion is always excused :).But whether it is an important book or not is to be decided by readers, not by you :).

ராஷா said...

வெளியிட்டதும் சொல்லி அனுப்பஙு்க

PRABHU RAJADURAI said...

வாழ்த்துக்கள்!

புதிய வேலைக்கு:-)